அம்மாவும் , நானும்
மே 10 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
மே மாதத்தின் இரண்டாவது ஞாபிற்றுக்கிழமை இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அம்மாவை நினைக்காத நாள் இல்லை.
//
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
சிணுங்கிய போது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக் கொடுத்தாய்
ஆவலோடு தான்
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்கு உள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு தான்
அம்மா என் முகவரி நீயம்மா
என் முதல் வரி நீயம்மா
என் உயிர் என்றும் நீயம்மா...
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே..
உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையிலே
என் வாழ்க்கை யினை
வரைந்து வைத்தாயே
ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே ..துலங்கிடுமே
எல்லாம் ..மாறுமே
விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாய்
இதற்கான காணிக்கையாய்.. நான் என்னதான் தருவதோ...ஓ...ஓ
அம்மா ஓ அம்மா
அம்மா ஆ...ஆ..ஆ
அம்மா என் முகவரி நீயம்மா
என் முதல் வரி நீயம்மா
என் உயிர் என்றும் நீயம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே....//
- பாடலை எழுதியவர் விக்னேஷ்சிவன்
எனக்கு இந்த புது பாடல் வரிகள் மிகவும் பிடித்து இருந்தது, அதை அன்னையர் தினம் பகிர வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
என் தம்பி பேத்தி அவள் படிக்கும் நடனபள்ளி முதலாம் ஆண்டு விழாவிற்கு மூன்று பாடலுக்கு ஆடி இருக்கிறாள் முதல் பாடல் இந்த பாடல். தம்பி அனுப்பி வைத்து இருந்தான். அன்னையர் தினத்திற்கு இந்த பாடல் பொருத்தமாக இருப்பதால் இதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
சிறு குழந்தையாக இருக்கும்போது குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தா? என்றால் - அம்மா. இவ்வளவு அழகாய் யார் தலைவாரி விட்டா? என்று கேட்டால் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க ’அம்மா’ எனும் குழந்தை. யார் இந்த டிரஸ் வாங்கித் தந்தா? அழகாய் இருக்கே! என்றால் ,’அம்மா’ என்று எதைக் கேட்டாலும் ’அம்மா’ என்று குழந்தை சொல்லும். திருமணத்திற்குப் பின்னும், ’எங்க அம்மாவீட்டில்’ என்று சொல்வதை விட முடியாது. இப்படி அம்மா பெருமை பாடுவது காலம் முழுவதும் தொடரும்! (நாம் பாட்டி ஆனாலும்)
இந்த குழந்தைகளை அருமையாக அம்மாவின் பெருமைகளை சொல்லும் பாடலுக்கு ஆட வைத்த ஆசிரியரை பாராட்ட வேண்டும். நேரில் பார்க்க போக முடியவில்லை உடல் நலக்குறைவால் . தம்பி அனுப்பி வைத்தான் காணொளிகளை . மூன்று பாடல்களுக்கு ஆடி இருந்தாள் அடுத்து அடுத்து குழந்தைகள் எல்லாம் நன்றாக ஆடினார்கள் எதையும் மறக்காமல்.
பொம்ம பொம்மதா தைய தையனக்கு
தின்னாக்குனக்குதின் பஜன்கரே
என்ற பிள்ளையார் பாடல், அடுத்து மயில் மீது வரும் முருகன் பாடலுக்கு ஆடினார்கள்.
நடுவில் நீலக்கலர் பாவாடை மஞ்சள் சட்டையில் ஆடும் குழந்தைதான் தம்பி பேத்தி.
அவளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த குருவுடன் சான்றிதழ், மற்றும் பரிசுடன்
நான் போட்ட அன்னையைர் தின பதிவுகளிலிருந்து சில துளிகள் கீழே:-
பேரன், பேத்தி வட நாட்டுச் சுற்றுலா அழைத்துச் சென்ற போது தாஜ்மஹாலை மகிழ்ச்சியுடன் ரசித்துப் பார்த்தார்கள்.
குடியிருந்த கோவில் என்று போட்ட பதிவில் இந்த படம் இடம்பெற்று இருக்கும். அம்மாவின் நினைவுநாள் பதிவு அது.
தாயின் குணநலன்களும் , அவர்களின் கை வேலைபாடுகளும் இடம் பெற்று இருக்கும்.
அம்மா கல்யாணத்திற்கு முன் பின்னியது கல்யாணம் செய்துவரும் போது கொண்டு வந்தது . . இப்போது தம்பி வீட்டில் இருக்கிறது அவனை அதைப் படம் எடுத்து அனுப்பச் சொன்னேன் அனுப்பினான். மேலும் இரண்டு பின்னல் படங்கள் இருக்கும் போய் பாருங்களேன்.
கீதாரெங்கன் என் அம்மாவைப் பற்றிச் சொல்லுங்கள் என்றார்கள். நிறைய பதிவில் அம்மாவை குறிப்பிடும் போதும் போனில் பேசும் போதும் அவ்வாறு சொல்வார்கள். அதனால் அம்மாவின் நினைவு நாளில் சொல்லி விட்டேன்.
அம்மா என்றால் அன்பு இந்த பதிவில் என் கணவரின் படம் இடம்பெற்று இருக்கும்.
நிலவை காட்டி சோறுட்டும் அன்னை
ஆண்களுக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும். பெண்களுக்கு ஓய்வே கிடைப்பது இல்லை (அவர்களே விருப்ப ஓய்வு பெற்றால்தான் உண்டு). அவர்கள் தன் குழந்தைகளுக்கு, தன் குழந்தைகளின் குழந்தைகளுக்கு, , மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள், அன்பு தரும் பலத்தால். அதை விகடனில் பகிர்ந்து இருப்பார்கள்.
அவற்றைக் கீழே பார்த்து மகிழுங்கள்.:---
அவற்றைக் கீழே பார்த்து மகிழுங்கள்.:---
தாயன்பும் இறையன்பும் ஒன்றுதான்.
பகவானின் பிரேமையைப்பற்றி சொல்லும் போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், ஒரு தாய்க்கு குழந்தையிடம் உள்ள பிரேமை போல் என்று.
//கன்றினுக்குச் சேதா
கனிந்திரங்கல் போலஎனக்கு
என்று இரங்கு வாய்கருணை
எந்தாய் பராபரமே!//
என்று தாயுமானவர் பாடுகிறார்.
//உலகனைத்தையும் ஈன்ற தாயே, என்னை நீ தாங்கிக் கொள்வாயாக, அறியாமையினால் கேடுகள் பலசெய்யும் என்னைக் கருணையோடு நீ காப்பாயாக!
தாயும் சேயும் என்னும் முறையில் கடவுளோடு இணக்கம் வைப்பது சாலச்சிறந்தது. குற்றங்கள் பல செய்தாலும் தாயினிடம் அவைகளைப் பற்றித் தாராளமாகப் பேசலாம், குழந்தையின் மீது படியும் அழுக்கைத் தாய் தானே துடைத்து வைக்கிறாள். பிள்ளையை பிரியத்தோடு பேணுதல் ஒன்றே அவள் புரியும் பணிவிடையாகும். கடவுள் நமக்கு அத்தகைய தாயாகிறார்.//
பகவானின் பிரேமையைப்பற்றி சொல்லும் போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், ஒரு தாய்க்கு குழந்தையிடம் உள்ள பிரேமை போல் என்று.
//கன்றினுக்குச் சேதா
கனிந்திரங்கல் போலஎனக்கு
என்று இரங்கு வாய்கருணை
எந்தாய் பராபரமே!//
என்று தாயுமானவர் பாடுகிறார்.
//உலகனைத்தையும் ஈன்ற தாயே, என்னை நீ தாங்கிக் கொள்வாயாக, அறியாமையினால் கேடுகள் பலசெய்யும் என்னைக் கருணையோடு நீ காப்பாயாக!
தாயும் சேயும் என்னும் முறையில் கடவுளோடு இணக்கம் வைப்பது சாலச்சிறந்தது. குற்றங்கள் பல செய்தாலும் தாயினிடம் அவைகளைப் பற்றித் தாராளமாகப் பேசலாம், குழந்தையின் மீது படியும் அழுக்கைத் தாய் தானே துடைத்து வைக்கிறாள். பிள்ளையை பிரியத்தோடு பேணுதல் ஒன்றே அவள் புரியும் பணிவிடையாகும். கடவுள் நமக்கு அத்தகைய தாயாகிறார்.//
என்று சுவாமி சித்பவானந்தர் சொல்லுகிறார்.
அன்பின் வழி :-
உலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும் தாயாக விளங்கும் இறைநிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
”உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்த பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.
ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கொண்டாடுவோம்.”வேதாத்திரி மகரிஷி
”உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்த பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.
ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கொண்டாடுவோம்.”வேதாத்திரி மகரிஷி
தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்!
அன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.
அன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.
என் அம்மா பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து இருந்த நிறைய பாடல்கள்,கடவுள் பாடல்,தேசபக்தி பாடல்கள் எல்லாம் அவர்கள் கைப்பட எழுதிய நோட்டு மூலம் கிடைத்தது.
தாயே
-------
என்னைப் பெற்ற என் தாயே
இனிய பண்டம் தருவாயே
சொன்ன தெல்லாம் கேட்பேனே
சோம்பலின்றிக் கற்பேனே
கற்றதெல்லாம் சொல்வேனே
கடவுள் பாதம் பணிவேனே
குற்றம் ஒன்றும் செய்யேனே
கொஞ்சி முத்தம் தருவாயே
-------
என்னைப் பெற்ற என் தாயே
இனிய பண்டம் தருவாயே
சொன்ன தெல்லாம் கேட்பேனே
சோம்பலின்றிக் கற்பேனே
கற்றதெல்லாம் சொல்வேனே
கடவுள் பாதம் பணிவேனே
குற்றம் ஒன்றும் செய்யேனே
கொஞ்சி முத்தம் தருவாயே
தாயைப்பற்றி குழந்தை பாடும் பாடலை கற்பனை செய்து பாருங்களேன்,அம்மாவை கொஞ்சி
அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கேட்கும் உங்கள் குழந்தையின் முகம் தெரியவில்லை!!
மேலும் நிறைய பாடல்கள் இருக்கிறது இந்த பொக்கிஷ பகிர்வில்.
என் பழைய பதிவுகளிலிருந்து கொஞ்சம் தொகுத்து கொடுத்து இருக்கிறேன். இந்த பதிவுகளை படிக்கவில்லை என்றால் படித்துப்பார்க்கலாம்.
மீனாட்சி அன்னையின் அன்னை :- இந்த பதிவிலிருந்து சில படங்கள்
செய்திகளை அங்கு போய் படிக்கலாம்.
வெண்கொற்றக் குடையின்கீழ் மலையத்துவசபாண்டியன், காஞ்சனமாலை
/ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானுந் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.//
யாதானுந் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.//
- மகா கவி பாரதியார்.
அகிலத்தைக் காக்கும் அன்னை, அனைவரையும் காப்பாள்.
அகிலத்தைக் காக்கும் அன்னை, அனைவரையும் காப்பாள்.
அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
குழந்தைகளுக்கு அம்மாவின் அன்பு, தந்தையின் பாசம், இரண்டையும் அள்ளித் தந்து, பார்த்துக் கொள்ளும் தாயுமானவர்களுக்கு (தந்தையர்களுக்கு) வாழ்த்துக்கள்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------------------




அன்னையர் தினத்துக்கு அருமையாக பதிவு எழுதியிருக்கிறீர்கள் நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கிறீர்கள், அழகான பாடல்கள்
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//அன்னையர் தினத்துக்கு அருமையாக பதிவு எழுதியிருக்கிறீர்கள் நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கிறீர்கள், அழகான பாடல்கள்//
நன்றி ஸ்ரீராம்.
அன்னைக்கான பாடல் இல்லை என்றாலும் எனக்கு நீங்கள் சொல்லியிருந்த சில வரிகளை படிக்கும் போது தலைவாரி பூச்சூட்டி உன்னை பாடல் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்கு//அன்னைக்கான பாடல் இல்லை என்றாலும் எனக்கு நீங்கள் சொல்லியிருந்த சில வரிகளை படிக்கும் போது தலைவாரி பூச்சூட்டி உன்னை பாடல் நினைவுக்கு வந்தது.//
நீக்குஉங்களுக்கு நினைவுக்கு வந்த பாரதிதாசன் பாடல் மிக அருமையானது, முதல் குரு அம்மா தானே !பாடசாலைக்கு போக சொன்னது நல்ல பொருத்தமான பாடல்தான் ஸ்ரீராம்.
தாஜ்மஹால் போன்ற இடங்களையெல்லாம் அன்னைக்கு காட்டி இருப்பது சிறப்பு அவர்களும் ரசித்து இருப்பார்கள்
பதிலளிநீக்கு//தாஜ்மஹால் போன்ற இடங்களையெல்லாம் அன்னைக்கு காட்டி இருப்பது சிறப்பு அவர்களும் ரசித்து இருப்பார்கள்//
நீக்குஎங்களுடன் தான் காசி, மற்றும் பல ஊர்கள் வந்தார்கள் பார்த்தார்கள். அப்போது சொல்வார்கள் உன் அப்பாவுக்கு இப்படி பேரன், பேத்திகளுடன் நிம்மதியாக ஊர் சுற்றிப்பார்க்க முடியவில்லையே! என்று அப்பாவை நினைத்து வருத்தப்படுவார்கள் சிறிது நேரம் , அடுத்த கணம் நாம் வருத்தப்பட கூடாது என்று வேறு பேச ஆரம்பித்து விடுவார்கள்.
அருமையான நிகழ்ச்சியை கொடுத்து சான்றிதழ் பெற்ற தம்பி பேத்திக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
பதிலளிநீக்கு//அருமையான நிகழ்ச்சியை கொடுத்து சான்றிதழ் பெற்ற தம்பி பேத்திக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்//
நீக்குதம்பி பேத்தியை [ பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னதற்கும் உங்கள் கருத்துக்களூக்கும் நன்றி ஸ்ரீராம். பத்திரிக்கை கொடுக்கும் வேலையில் பிஸியாக இருந்தாலும் வந்து கருத்துகள் சொன்னதற்கு நன்றி நன்றி.
காலை வணக்கம் சகோதரி.
பதிலளிநீக்குநலமா? அன்னையர் தின பதிவு அருமை. உங்களுக்கும், உங்கள் மகள், மற்றும் மருமகளுக்கும் என் அன்பான இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
நம் உயிரோடு ஒட்டியிருக்கும் நம் அன்னையை நம்மால் என்றேனும் மறக்க இயலுமா? இன்றைய நல்ல தினத்தில் நல்லதொரு பொருத்தமான நினைவுகளோடு அருமையாக பதிவை தொகுத்து தந்துள்ளீர்கள். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நீங்களும், உங்கள் அம்மாவுமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இரண்டும் நன்றாக உள்ளது. தங்களின் தம்பி பேத்திக்கு என் வாழ்த்துகள். இன்னமும் பதிவை விபரமாக படிக்கவில்லை. புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசித்தேன். எனக்கும் இங்கு வேலைகள் ஒவ்வொரு நாளின் நேரங்களை இறுகப் பிடித்துக் கொண்டுள்ளது. அதனால் வலையுலகிற்கு முறையாக வர இயலவில்லை. பதிவை முழுமையாக வாசித்து விட்டு பிறகு (எப்போது என்றுதான் தெரியவில்லை) வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//நலமா? அன்னையர் தின பதிவு அருமை. உங்களுக்கும், உங்கள் மகள், மற்றும் மருமகளுக்கும் என் அன்பான இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.//
காலை வணக்கம் , நலமாக இருக்கிறேன்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி. உங்கள் குடும்பத்தில் மருமகள்கள், மகள், மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் ஊரிலிருந்து வந்ததை விசாரித்தேன் எங்கள் ப்ளாக் தளத்தில்.
உங்களை இரண்டு மூன்று நாள் பார்க்க முடியவில்லை கவனித்தேன்.
//நம் உயிரோடு ஒட்டியிருக்கும் நம் அன்னையை நம்மால் என்றேனும் மறக்க இயலுமா? //
உண்மை ,நன்றாக சொன்னீர்கள்
//இன்றைய நல்ல தினத்தில் நல்லதொரு பொருத்தமான நினைவுகளோடு அருமையாக பதிவை தொகுத்து தந்துள்ளீர்கள். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//
பாராட்டுகளுக்கு நன்றி.
//நீங்களும், உங்கள் அம்மாவுமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இரண்டும் நன்றாக உள்ளது.//
நன்றி.
//தங்களின் தம்பி பேத்திக்கு என் வாழ்த்துகள். //
நன்றி.
//இன்னமும் பதிவை விபரமாக படிக்கவில்லை. புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசித்தேன். எனக்கும் இங்கு வேலைகள் ஒவ்வொரு நாளின் நேரங்களை இறுகப் பிடித்துக் கொண்டுள்ளது. அதனால் வலையுலகிற்கு முறையாக வர இயலவில்லை. பதிவை முழுமையாக வாசித்து விட்டு பிறகு (எப்போது என்றுதான் தெரியவில்லை) வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் கமலா. இவ்வளவு வேலைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதே மகிழ்ச்சி.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.