செவ்வாய், 7 ஏப்ரல், 2026

புத்தன் பிறந்து போதனை செய்தான் அன்புக்கு அதுதான் சுபதினம்


தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.

இந்த பதிவில் தங்க புத்தர் இடம் பெறுகிறார்.

புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1



புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2


இதற்கு முன் போட்ட பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.



புத்தர் சயனக் கோலத்தில் இருக்கும் இடம்

ஒரு புத்த துறவி புத்தர் தலைமுடியை பற்றி சொல்லும் போது அவருக்கு நல்ல சுருள் முடி என்று சொன்னார்.


சுருள் முடி  


நீண்ட காது

தலையை தாங்கி நிற்கும் கை

பின் பக்கத்தலை











வெள்ளை எருக்கு பூவை கோர்த்து செயற்க்கை பூக்களுடன்  அழகாய் வைத்து இருக்கிறார்கள்.





புத்தர் உடல் ஒவ்வொரு பாகத்துக்கு நடுவிலும்  இப்படி  படுத்து இருக்கும் புத்தர், அமர்ந்து இருக்கும் புத்தர்  பூ அலங்காரம் இருக்கிறது.








 







 

சின்ன காணொளிதான் புத்தரின் தலை முதல் கால் வரை எடுத்தது.


புத்தரின் எதிரில் உலோக பாத்திரங்கள் வரிசையாக  வைத்து இருக்கிறார்கள்,  அதில் காசுகள் இருக்கிறது.


ஒரு கிண்ணம் காசு நாம் வாங்கி எல்லா கிண்ணத்திலும் போட வேண்டும்.

புத்தரின் விரல்களை பற்றி தன் அப்பாவிடம் பேசுகிறான் பேரன் கவின்


இறைவனின் பாதங்களை பிடித்துக் கொள்ள வேண்டும் அவன்தான் நமக்கு கதி வேறு யாரும் இல்லை.

அமைதியை போதித்த குருபிரான் கெளதம புத்தரின் போதனகள் அன்பு,அகிம்சை, அமைதியை வலியுறுத்துகிறது. உலக மக்கள் எல்லாம் அதை கடைபிடித்தால் போர் இருக்காது. எங்கும் அமைதியும் ஆனந்தமும் இருக்கும்.

சுபதினம் என்ற படத்தில் புத்தன் பிறந்து போதனை செய்தான் அன்புக்கு அதுதான் சுபதினம் என்று கவிஞர் வாலி எழுதிய பாடல்.  சீர்காழி கோவிந்த ராஜன் எழுதியது நினைவுக்கு வருகிறது.



  அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் .
உலக மக்கள் அனைவரும் நலமாக இருந்தால்  எல்லோருக்கும் எல்லா நாளும் சுபதினம் தான். உலக மக்கள் அனைவருக்க்காவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

நம் ஊர் மாதிரி விளக்கு வைக்க ஒரு இடம். மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து இருக்கிறார்கள். க்ண்ணாடி விளக்கு தூணில் விளக்கு இருக்கிறது.


தத்தாத்ரேயரும் பிள்ளையாரும்  இருக்கிறார்கள்.

புத்தர் போதனைகள் தாய் மொழியில் இருக்கிறது நமக்கு படிக்க முடியவில்லை.


அதானல் நம் தாய் மொழியில் உள்ள போதனைகள் பகிர்ந்து இருக்கிறேன்.
மிக சிறிய காணொளி தான். 


குருமார்கள் சிலைகள் இருக்கிறது அவர்கள் முன்னால் விரிப்பில் அமர்ந்து தியான செய்வார்கள் போலும். ஒவ்வொருவர் அருகிலும் உண்டியல் இருக்கிறது.


வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

------------------------------------------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

  1. எழுத்துரு அளவு பெரிதாக்கப்பட வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் , வாழ்க வளமுடன் ஸ்ரீராம்.

      //எழுத்துரு அளவு பெரிதாக்கப்பட வேண்டுமோ?//

      பெரிது செய்து விட்டேன். இது போதுமா அல்லது இன்னும் பெரிது செய்ய வேண்டுமா?

      நீக்கு
    2. போதும். சரியாக இருக்கிறது.

      நீக்கு
  2. புத்தரின் சுருள்முடி இரும்பினாலான சுருள் போல தெரிகிறது. இரும்பிடர்த்தலையார் நினைவுக்கு வருகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புத்தரின் சுருள்முடி இரும்பினாலான சுருள் போல தெரிகிறது. இரும்பிடர்த்தலையார் நினைவுக்கு வருகிறார்!//

      எனக்கு காந்தாரகலை நினைவுக்கு வந்தது .

      காந்தாரகலையில் தான் புத்தரின் சிலை தலைமுடி சுருள் சுருளாக வடிக்கப்பட்டு இருக்கும் .

      நீக்கு
  3. புத்தரின் காணொளி நீளவாக்கில் எடுக்கப்பட்டிருப்பதால் அல்லது அப்படி தெரிவதால் நின்று கொண்டு கையை பின் தலையில் வைத்துக் கொண்டிருப்பது போல தோற்றம் தருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புத்தரின் காணொளி நீளவாக்கில் எடுக்கப்பட்டிருப்பதால் அல்லது அப்படி தெரிவதால் நின்று கொண்டு கையை பின் தலையில் வைத்துக் கொண்டிருப்பது போல தோற்றம் தருகிறது!//

      ஆமாம்.

      நீக்கு
  4. காசையே காசு கொடுத்து வாங்க வேண்டும்..  ஹா ஹா ஹா..  ஒவ்வொரு மதத்திலும் என்னென்ன நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்,சில்லரை காசுகள் போட வேண்டும் என்றால் நம்மிடம் சில்லறை இருக்காதே அதனால் பணம் கொடுத்து வாங்கி அதில் போட வேன்டும் போடும் போது சத்தம் வர வேண்டும். குபேரேர் கோயிலில் காசை சத்தமாக போட சொல்கிறார்கள். சில நம்பிக்கைகள் , பழக்க பழக்க வழக்கங்கள் நாடுக்கு நாடு கடைபிடிக்கப்படுகிறது.

      நீக்கு
  5. காசு கொடுத்து வாங்கும் பழக்கத்தை சொல்லவில்லை.  ஒவ்வொரு பாத்திரத்திலும் காசை நிரப்புவதைச் சொன்னேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காசு கொடுத்து வாங்கும் பழக்கத்தை சொல்லவில்லை. ஒவ்வொரு பாத்திரத்திலும் காசை நிரப்புவதைச் சொன்னேன்!//

      காசு பாத்திரம் நிரம்பி விட்டால் மீண்டும் கிண்ணங்களில் போட்டு வைப்பார்கள் என்று நினைக்கிறேன். வரும் கூட்டம் முழுவதும் இப்படி போட்டால் கிண்ணம் நிரம்பி வழியும்.

      நீக்கு
  6. சுபதினம் பாடல் ஒப்புமை அருமை.  'புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக' பாடலும், 'புத்தன் வந்த திசையிலே போர்... புனித காந்தி மண்ணிலே போர்' பாடலும் என் நினைவுக்கு வருகின்றன!  வெங்கட், வடமொழி ஒன்றில் புத்தர் என்றால் மகன் என்று பொருள் என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுபதினம் பாடல் ஒப்புமை அருமை. 'புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக' பாடலும், 'புத்தன் வந்த திசையிலே போர்... புனித காந்தி மண்ணிலே போர்' பாடலும் என் நினைவுக்கு வருகின்றன! //

      எனக்கும் இந்த பாடல்கள் நினைவுக்கு வந்தன.
      "சந்திரோதயம்" பாடல் புத்தன் , இயேசு காந்தி பிறந்தது பாடல் எம் ஜி ஆர் மழையில் நனைந்து கொண்டு ஆட்டுக்குட்டியை தூக்கி கொண்டு பாடும் பாடல் மறக்கவே முடியாது. பழைய பாடல் நிகழ்ச்சியில் அடிக்கடி வைக்கும் பாடல்.
      அடுத்த பாடல் "இரத்ததிலகம் "பாடல் சிவாஜியின் உருக்கமான நடிப்பில்
      புனித காந்தி மண்ணிலே போர் பாடலும் அருமையான பாடல்.

      //வெங்கட், வடமொழி ஒன்றில் புத்தர் என்றால் மகன் என்று பொருள் என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.//

      வடமொழியில் புத்ர என்றால் மகன், புத்ரி என்றால் மகள் என்றுதான் சொல்வார்கள்.
      புத்திர சம்பத்து வரும் என்று சமஸ்கிருத ஸ்லோகம் சொல்வார்களே அர்ச்சனை செய்யும் போது.

      புத்தர் என்றால் "விழித்தெழுந்தவர்", "ஞானம் பெற்றவர்" அல்லது "அறிவொளி பெற்றவர்" என்று படித்து இருக்கிறேன்.

      நீக்கு
  7. அன்பைத்தேடி படத்தில் சிவாஜி புத்தராக வருவார் - புத்தர் என்று பெயர் சொல்லாமல் நடிப்பில் புரிய வைப்பார்.  அதில் தன் இறந்த குழந்தையை உயிர்ப்பித்து தரும்படி ஒரு தாய் - ஜெயலலிதா - வந்து இறைஞ்சும்போது 'சாவில்லா வீட்டில் பிடிசாம்பல் வாங்கிவா' என்பார்.  கடைசியில் புத்த தத்துவம் பொய்த்ததுமில்லை; போன குழந்தை வருவதுமில்லை' என்று சொல்லிக் கொண்டு வருகையிலேயே சிவாஜியின் கனவு கலைந்து, அவர் அக்கா மகள் கடத்தப்பட்டிருப்பாள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அன்பைத்தேடி படத்தில் சிவாஜி புத்தராக வருவார் - புத்தர் என்று பெயர் சொல்லாமல் நடிப்பில் புரிய வைப்பார். அதில் தன் இறந்த குழந்தையை உயிர்ப்பித்து தரும்படி ஒரு தாய் - ஜெயலலிதா - வந்து இறைஞ்சும்போது 'சாவில்லா வீட்டில் பிடிசாம்பல் வாங்கிவா' என்பார். கடைசியில் புத்த தத்துவம் பொய்த்ததுமில்லை; போன குழந்தை வருவதுமில்லை' என்று சொல்லிக் கொண்டு வருகையிலேயே சிவாஜியின் கனவு கலைந்து, அவர் அக்கா மகள் கடத்தப்பட்டிருப்பாள்!//

      புத்தரின் கதையில் இறந்த குழந்தையை உயிர்பித்து தர வேண்டும் தாயிடம் "இறப்பில்லா வீட்டில் பிடி கடுகு வாங்கி வா" உன் குழந்தையை உயிர்ப்பித்து தருகிறேன் என்பார்.
      இதை தான் மாற்றி சாம்பல் வாங்கி வா என கேட்பார்கள் சினிமாவில்.
      அன்பை தேடி படத்தில் கனவு உலகத்திலேயே வாழ்வார் சிவாஜி.
      கதை பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  8. போர் இல்லாமல் அமைதி திரும்ப முக்கியமாக ட்ரம்ப்பும் அப்புறம் மற்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். 

    புறா பார்த்ததும் நினைவுக்கு வரும் பாடலையும் சொல்லி விடுகிறேனே,. "அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை..  நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கிறேன் உன்னை..." 

    இதிலும் புத்தர் பெயரும், சமாதானம், போர் இல்லா நிலை வேண்டும் என்றும் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //போர் இல்லாமல் அமைதி திரும்ப முக்கியமாக ட்ரம்ப்பும் அப்புறம் மற்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.//

      எல்லோரும் மனம் திருந்தி போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டும் உலகில் அதற்கு பிரார்த்தனை செய்து கொள்வோம். இறைவன் சமாதான தூதுவரை அனுப்ப வேண்டும்.

      //புறா பார்த்ததும் நினைவுக்கு வரும் பாடலையும் சொல்லி விடுகிறேனே,. "அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை.. நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கிறேன் உன்னை..." //

      வெள்ளைப் புறாக்களை போட்டு , இந்த பாடலையும் போட்டு ஒரு பதிவு போட்டு விட்டேன் முன்பு ஸ்ரீராம்.

      //இதிலும் புத்தர் பெயரும், சமாதானம், போர் இல்லா நிலை வேண்டும் என்றும் வரும்.//

      ஆமாம், முன்பு எல்லாம் கருத்துள்ள பாடல்கள் வரும் தாயே உனக்காக படத்தில் வரும் பாடல் இதிலும் போரின் பாதிப்பால் எப்படி எல்லாம் மக்கள் கஷ்ட படுகிறார்கள் நாட்டுக்காக போர் வீரர்கள் எப்படி எல்லாம் துன்ப படுகிறார்கள் என்ற கதைதான்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.


      நீக்கு
  9. தங்க புத்தர் முகமும் சிலையும் பல படங்களும் ரொம்பவே சூப்பர்

    தங்கத் தகடா இல்லை முழுவதும் தங்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //தங்க புத்தர் முகமும் சிலையும் பல படங்களும் ரொம்பவே சூப்பர்//

      நன்றி தமிழன்.


      //தங்கத் தகடா இல்லை முழுவதும் தங்கமா?//

      முழுவதும் தங்கமா என்று தெரியவில்லை. தகடாக தான் இருக்கும்.
      ஊர் முழுவதும் தங்க புத்தர் காணப்படுகிறார்.
      ஊர் பேரே சொர்ணபூமி தாம்.

      நீக்கு
  10. மற்ற படங்களும் நல்லாவே இருக்கின்றன.

    புத்தர் 10 விரல்களையும் தனிப்படங்களாகப் போட்டிருக்கிறீர்கள். ரொம்ப பெரியதாகத் தெரிகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்ற படங்களும் நல்லாவே இருக்கின்றன.//

      நன்றி.


      //புத்தர் 10 விரல்களையும் தனிப்படங்களாகப் போட்டிருக்கிறீர்கள். ரொம்ப பெரியதாகத் தெரிகின்றன//

      விரல்கள் மட்டும் அல்ல புத்தர் சிலையே பிரமாண்டம் தான்.

      பிரம்மாண்ட சயன புத்தர்: வாட் போ (Wat Pho) கோயிலில் உள்ள புகழ்பெற்ற சயன புத்தர் சிலை 46 மீட்டர் (150 அடி) நீளமும், 15 மீட்டர் உயரமும் உடையது. என்று கூகுள் சொல்கிறது.

      நீக்கு
  11. பதில்கள்
    1. //கவின் படங்களையும் பார்த்தேன்.//
      உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  12. பிரமாண்டமான புத்தர். சிறப்பாகச் செதுக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்தையும் அருமையாகப் படமாக்கி அளித்துள்ளீர்கள். சுருள் முடி, கால் விரல்கள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. காணொளி, பிற குருமார் சிலைகள் அருமை. தத்தேத்ராயர், பிள்ளையார் இருப்பது வியப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பிரமாண்டமான புத்தர். சிறப்பாகச் செதுக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்தையும் அருமையாகப் படமாக்கி அளித்துள்ளீர்கள்.//

      நன்றி ராமலக்ஷ்மி.

      // சுருள் முடி, கால் விரல்கள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. காணொளி, பிற குருமார் சிலைகள் அருமை. தத்தேத்ராயர், பிள்ளையார் இருப்பது வியப்பு.//

      ஆமாம். நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன.

      //தத்தேத்ராயர், பிள்ளையார் இருப்பது வியப்பு.//

      அங்கு நம் கடவுள்கள் நிறைய இடங்களில் இருக்கிறது ராமலக்ஷ்மி.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. Reading list பாக்காமல்போவதால் தவறவிடுகிறேன் பதிவுகளை, கோமதிக்கா.

    எபியிலும் சைடில் பார்க்கவில்லை. எங்கள் தளம் திறக்கவே இல்லை!...

    இப்பதான் ஓ கோமதிக்கா பதிவு வந்திருக்குமேன்னு நினைச்சுப் பார்த்தா வந்திருக்கிறது!

    இதோ முழுவதும் வாசித்து விட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //Reading list பாக்காமல்போவதால் தவறவிடுகிறேன் பதிவுகளை, கோமதிக்கா.//

      பரவாயில்லை கீதா, வேலைகள் அதிகம் என்று நினைத்தேன்.


      //எபியிலும் சைடில் பார்க்கவில்லை. எங்கள் தளம் திறக்கவே இல்லை!...

      இப்பதான் ஓ கோமதிக்கா பதிவு வந்திருக்குமேன்னு நினைச்சுப் பார்த்தா வந்திருக்கிறது!

      இதோ முழுவதும் வாசித்து விட்டு வருகிறேன்//

      பரவாயில்லை கீதா, எப்போது வேண்டுமென்றாலும் படித்து கருத்து சொல்லுங்கள் போதும்.

      நீக்கு
  14. ஒரு புத்த துறவி புத்தர் தலைமுடியை பற்றி சொல்லும் போது அவருக்கு நல்ல சுருள் முடி என்று சொன்னார்.//

    ஓ அப்படியா அதான் சில படங்களில் முடியை சுருள் போல வரைகிறார்கள் போலும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ அப்படியா அதான் சில படங்களில் முடியை சுருள் போல வரைகிறார்கள் போலும்//

      ஆமாம், சுருள் முடி, மற்றும் புத்தர் உயரமானவர் உயரம் ஏழரை அடி என்றார்.

      நீக்கு
  15. காது நீண்டதாக இருக்கும் என்பதும் தெரிந்தது. அதுக்கும் ஒன்னு சொல்வாங்களே காது நீண்டிருந்தால் அவங்க மிகவும் அறிவாளியாக ஞானியாக இருப்பாங்க என்று!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காது நீண்டதாக இருக்கும் என்பதும் தெரிந்தது. அதுக்கும் ஒன்னு சொல்வாங்களே காது நீண்டிருந்தால் அவங்க மிகவும் அறிவாளியாக ஞானியாக இருப்பாங்க என்று!!//

      காது நீண்டு இருப்பது காது வளர்த்து இருக்கிறார். காதும் பெரிய காதுதான்.
      ஆமாம், அவர் அறிவாளி, ஞானிதானே!

      நீக்கு
  16. ஒவ்வொரு பாகமாக எடுத்திருக்கீங்கக்கா கை, பின் பக்கம் என்று. படங்கள் நல்லாருக்கு

    நீண்ட சயனக் கோலம்....இதிலிருந்து சில விஷயங்களை தொடர்புபடுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒவ்வொரு பாகமாக எடுத்திருக்கீங்கக்கா கை, பின் பக்கம் என்று. படங்கள் நல்லாருக்கு//

      அவரை முழுமையாக எடுப்பது மிகவும் கஷ்டம் ஒவ்வொரு பாகமாக எடுத்தால் பிரமாண்டம் தெரியும் கீதா.


      //நீண்ட சயனக் கோலம்....இதிலிருந்து சில விஷயங்களை தொடர்புபடுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.//

      எதனுடன் தொடர்பு படுத்தி பார்க்க தோன்றுகிறது. அதையும் சொல்லி இருக்கலாம். திருமாலின் பத்து அவதாரங்களில் புத்தரையும் சேர்த்து இருக்கிறார்கள். சில இடங்களில்.

      நீக்கு
  17. மலர்கள் கோர்த்து வைத்திருக்கும் படம், சிரிக்கும் புத்தர் - இதை மட்டும் ஏன் இப்படி வடிவமைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீண்ட பாதம்....பெரிய உருவச் சிலை...எல்லாமே அழகாக இருக்கின்றன.

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலர்கள் கோர்த்து வைத்திருக்கும் படம், சிரிக்கும் புத்தர் - இதை மட்டும் ஏன் இப்படி வடிவமைக்கிறார்கள் என்று தெரியவில்லை.//
      அவர் வயிற்றை தடவி விட்டால் பணம் வரும் என்று சொல்வார்கள் சென்னையில் இருக்கும் ஒரு குபேர கோயிலில் அது போல அங்கும் வயிற்றை தடவி இருப்பார்கள் போல அதனால் அந்த இடத்தில் கலர் மாறி இருக்கிறது.

      //நீண்ட பாதம்....பெரிய உருவச் சிலை...எல்லாமே அழகாக இருக்கின்றன.

      ஆமாம் கீதா.

      நீக்கு
  18. காணொளி முழு புத்தர் ரொம்ப நல்லாருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி முழு புத்தர் ரொம்ப நல்லாருக்கு...//

      நன்றி கீதா.

      நீக்கு
  19. புத்தரின் விரல்களை பற்றி தன் அப்பாவிடம் பேசுகிறான் பேரன் கவின்//

    பேரன் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

    புத்தன் பாடல் நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

      புத்தன் பாடல் நன்றாக இருக்கிறது.//

      நன்றி கீதா.

      நீக்கு
  20. தத்தாத்ரேயரும் பிள்ளையாரும் இருக்கிறார்கள்.//

    ஆச்சரியம். அது போன்று விளக்கு ஏற்றுவதம்

    படங்கள் விவரங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. //தத்தாத்ரேயரும் பிள்ளையாரும் இருக்கிறார்கள்.//

    ஆச்சரியம். அது போன்று விளக்கு ஏற்றுவதம்

    படங்கள் விவரங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.//

    நம் ஊர் மாதிரி கடை வாசலில்,தெருக்கு தெரு கடவுளர் சிலைகள், சிவன் பார்வதி, பிள்ளையார், புத்தர் இருக்கிறார்கள் , பூ அலங்காரம் மிக அழகாய் செய்கிறார்கள் , விளக்கு ஏற்றி வைத்து இருக்கிறார்கள். எல்லா சாமி முன்னும் அரிசி, பருப்பு வைத்து இருக்கிறார்கள்.

    உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றிகள் கீதா.

    பதிலளிநீக்கு