ஜன்னலில் குடித்தனம் நடத்தும் புறா பறவைகள்
குடியிருப்பில் புறாக்கள் அதிகமாகி விட்டது அவற்றை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஜன்னல் திறந்தால் அங்கும் இருக்க முடியாது என்று பாத்ரூம் ஜன்னலில் குடித்தனம் செய்ய ஆரம்பித்தன.
இதில் சண்டை வேறு நான் இருக்கும் ஜன்னலில் நீ வரக்கூடாது என்று ஒன்றை ஒன்று விரட்டின. குழாயில் இருக்கும் கம்பியில் ஒண்டி கொண்டு இருக்கிறது.
கூடு வைக்க முயற்சி
என் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வீட்டு பாத்ரூம் ஜன்னலில் கூடு வைத்து முட்டைகள் உடைந்து போயிற்று . மிகவும் சின்ன இடம் சாய்வாக வேறு இருக்கிறது.
புறாக்களின் தவிப்பு என்று முன்பு பதிவு போட்டேன் அப்போது இருந்ததை விட இப்போது மேலும் புறாக்களுக்கு கஷ்டம் வந்து விட்டது. அவை தரும் தொந்தரவால் எல்லோரும் வலை அடித்தும் கண்ணாடி கதவுகள் போட்டும் அதன் வரவை தடுத்து கொண்டனர்.
நானும் இரண்டு பால்கனியில் வலையும் ஒரு பால்கனியில் கண்ணாடி கதவும் போட்டு விட்டேன்.
துணி காய வைக்கவேண்டும், தினம் பறவைகளுக்கு உணவு வைக்க வேண்டும். அதனால் ஒரு பால்கனி மட்டும் கண்ணாடி தடுப்பு.
ஒருநாள் திறந்து வைத்து விட்டேன் வீட்டுக்குள் வந்து விட்டது. அப்புறம் அதை விரட்டுவதற்குள் கஷ்டபட்டு விட்டேன். அவை குடியிருக்க இடம் தேடி அலைகிறது.
இந்த பின்னால் வீட்டில் வலை அடிக்கவில்லை அதனால் அந்த வீட்டில் சாய்த்து வைத்து இருக்கும் ஏணியில் குடித்தனம் நடத்துகிறது.
குடியிருப்பு நிர்வாகத்தார் மற்ற இடங்களில் வலை போட்டு விட்டார்கள்.
புறாக்கள் பெருக காரணங்களில் ஒன்று AC அவுட் டோர் யூனிட். புறாக்கள் அதன் மேல் கூடு கட்டும்.
எங்கள் பிளாக்கில் நெல்லைத்தமிழன் பகிர்ந்த புறாக்கள் படத்துக்கு ஜெயக்குமார் சார் சொன்னது.
இங்கு எங்கள் வளாகத்திலும் அப்படித்தான்.
//அங்கெல்லாம் மூணு ரோடு சந்திப்புல இந்த மாதிரி இடம் இருக்கும். அங்கு புறாக்களுக்கு உணவிடுவாங்க. நானும் இதற்காக, மாதம் ஒரு தடவை 20 கிலோ தானிய மூட்டை வாங்கிவருவேன். தினமும் ஜிம்முக்கோ இல்லை நடைப்பயிற்சிக்கோ காலையில் செல்லும்போது ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் தானியம் கொண்டுபோய் இந்த மாதிரி இடங்களில் போடுவேன். என்னவோ அன்று இருந்த மனது, இன்று எங்கள் வளாகத்தில் வரவில்லை. புறாக்களால் உடலுக்குக் கெடுதி என்றெல்லாம் பல செய்திகளைப் படித்ததனாலேயோ என்னவோ! //
நெல்லைத்தமிழன் சொன்னது போல இப்போது புறாக்கள் உடலுக்கு கெடுதி என்ற செய்திகளை படித்ததால் எல்லோருக்கும் பயம் தடுப்பு செய்து கொண்டார்கள் ஆனால் இந்த ஒருபக்க பாத்ரூம் ஜன்னலை ஒன்றும் செய்யமுடியவில்லை.
மேல் வழியாக வரமுடியாது முன்பே போட்ட கூடாரம், இப்போது மேலே இருந்து வலை தொங்கவிடப் பட்டு இருக்கிறது.
எங்கள் வீட்டு ஜன்னலில் முட்டையிட்டு அடை காக்க ஆரம்பித்து விட்டது
நாம் பார்த்து விட்டால் குஞ்சை தன் அலகால் அடியில் தள்ளிக் கொண்டு மேலே அமர்ந்து மறைத்து கொள்கிறது. அப்படி குஞ்சை பொத்தி பாதுகாக்கிறது .
பின்னால் வீட்டு ஜன்னலில் கூடு வைத்து முட்டை உடைந்து விட்டது என்று வருத்தப்பட்டேன். என் வருத்தம் அதற்கு தெரிந்து விட்டது போலும், "அப்போ உன் வீட்டில் கூடு வைக்கிறேன்" என்று எங்கள் வீட்டு ஜன்னலில் வைத்து விட்டது. அதை விரட்டவும் பாவமாக இருந்தது, அந்த பாத்ரூம் பயன்படுத்துவது இல்லை அதனால் பாவம் இருந்து விட்டு போகட்டும் முட்டை உடையாமல் இருக்கவேண்டுமே! என்று பிரார்த்தனை வேறு செய்ய ஆரம்பித்து விட்டேன் பிரார்த்தனை பலித்து விட்டது முட்டையிட்டு குஞ்சு பொரித்து விட்டது.
இனி பத்திரமாக பறந்து போக வேண்டும்.
இரண்டு புறாக்களும் கூடு கட்ட குச்சி கொண்டு வைப்பதும் அவை கீழே விழுவதும் அவை படும் பாட்டை பார்த்து இருக்கிறேன். அவசரமாக் பேறுகால நேரம் வந்தவுடன் கிடைத்த இடத்தில் கொஞ்ச குச்சியில் கூடு கட்டி முட்டையிட்டு அவை விழுந்து உடைவதும் வாடிக்கையாகி விட்டது. அப்படி தப்பி பிழைத்தால் வேறு பறவைகள் அந்த குஞ்சை தூக்கி போவதும் உண்டு. இறைன் அருளால் தப்பி பிழைத்தவை வளாகம் முழுவதும் சுற்றி திரிகிறது.
என் ஜன்னல் வழியே 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போட்ட பதிவு. ஜனவரி , பிப்ரவரிதான் புறாக்களின் பேறுகால பருவம் போலும்.
இந்த பதிவில் குஞ்சுக்கு உணவு ஊட்டும் படங்கள், வீடியோ எல்லாம் காமிராவில் எடுத்தது நன்றாக இருக்கும்.
புறாக்கள் இரண்டு கூடு கட்ட தினம் குச்சிகளை கொண்டு வந்து எதிர்வீட்டு பாத்ரூம் ஜன்னலில் வைத்தது, அவை எல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது. (கூடு கட்ட இடம் வசதி இல்லை) சரி விழுந்த இடத்திலேயே முட்டையிட்டு அடைகாப்போம் என்று அடைகாத்து வந்தது தாய் பறவை .
பழைய பதிவில் உள்ள படங்கள் இந்த இரண்டும்.
இன்று காலை தனியாக குஞ்சு மட்டும் இருக்கிறது தாய் பறவை இரை தேட போய் இருக்கிறது போல நல்லபடியாக குஞ்சு பறந்து போக வேண்டும் இறைவா!ஏன்று வாய் தன்னையறியாமல் முனுமுனுக்க ஆரம்பித்து விட்டது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------











படங்களிலேயே கதை சொல்லி விட்ட்டீர்கள். மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ என்று அதன் பேச்சுகள், கவலைகள் உங்களுக்கு புரிந்து விட்டன. தாயுள்ளத்தோடு உதவி விட்டீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களிலேயே கதை சொல்லி விட்டீர்கள். மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ என்று அதன் பேச்சுகள், கவலைகள் உங்களுக்கு புரிந்து விட்டன. தாயுள்ளத்தோடு உதவி விட்டீர்கள்.//
நான் என்ன உதவி செய்தேன் ?,அதை விரட்டவில்லை அவ்வளவுதான்.
தினம் சாதம் ஒரு கைபிடி . என்னை பால்கனியில் கண்டாலே பறந்து வந்து விடும்.
// அதை விரட்டவில்லை அவ்வளவுதான். //
நீக்குஅதுதானே அக்கா பெரிய உதவி...
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஎன்னதான் அவைகளால் மனிதனுக்கு வியாதிகள் வரும் என்று பயமுறுத்தினாலும், அவைகளும் இந்த உலகில் ஒரு உயிர்தானே என்று பாவமாகத்தான் இருக்கிறது. அவைக்களும் நம்மை நம்பிதான் நம்மைச் சுற்றி வருகின்றன. நமக்கும் ஆபத்தில்லாமல் அவைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று உதவி இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்கு//என்னதான் அவைகளால் மனிதனுக்கு வியாதிகள் வரும் என்று பயமுறுத்தினாலும், அவைகளும் இந்த உலகில் ஒரு உயிர்தானே என்று பாவமாகத்தான் இருக்கிறது. அவைக்களும் நம்மை நம்பிதான் நம்மைச் சுற்றி வருகின்றன. நமக்கும் ஆபத்தில்லாமல் அவைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று உதவி இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.//
நீக்குஆமாம், முடிந்தவரை நமக்கு ஆபத்து இல்லாமல் பிற உயிர்களுக்கு உதவி செய்வோம் நீங்கள் சொன்னது போல.
இவைகள் கோயிலில் மசூதிகளில், தேவாலயங்களில்குடியிருந்தது முன்பு.
அவைதான் உயர்ந்து இருந்தது. இப்போது அடுக்கு மாடி குடியிருப்புகள் அவற்றை விட உயரமாக இருக்கிறது. சிலஅடுக்குமாடி வீடுகளை "புறாகூடு" என்று மனிதன் சொல்கிறான். "நம் வீடு என்று அவனே சொல்கிறான்" என்று வந்து தங்க ஆரம்பித்து விட்டன.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
// சிலஅடுக்குமாடி வீடுகளை "புறாகூடு" என்று மனிதன் சொல்கிறான். "நம் வீடு என்று அவனே சொல்கிறான்" என்று வந்து தங்க ஆரம்பித்து விட்டன. //
நீக்குஹா.. ஹா.. ஹா... சரியா சொன்னீங்க...
வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஹா.. ஹா.. ஹா... சரியா சொன்னீங்க...//
மீண்டும் பதிலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அக்கா முதல் படமே ஈர்க்கிறது.
பதிலளிநீக்குஅக்கா இங்கு புறாக்கள் அதிகம். அதுவும் பழைய வீட்டருகில் நிறைய புறாக்க
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அக்கா முதல் படமே ஈர்க்கிறது//.
நன்றி கீதா
//அக்கா இங்கு புறாக்கள் அதிகம். அதுவும் பழைய வீட்டருகில் நிறைய புறாக்க//
ஓ ! இப்போது உள்ள வீட்டில் புறாக்கள் இல்லையா?
நிறைய புறாக்கள். இங்கும் புறாக்கள் இருக்கின்றன. அங்கு போல் அதிகம் இல்லைனாலும்.....இது அடிக்கும் முன்னரே கருத்து பப்ளிஷ் ஆகிவிட்டது கர்சர் கரெக்டா வெளியிடுவில் இருக்க குதித்துவிடுகிறது.
பதிலளிநீக்குகீதா
//நிறைய புறாக்கள். இங்கும் புறாக்கள் இருக்கின்றன. அங்கு போல் அதிகம் இல்லைனாலும்.....இது அடிக்கும் முன்னரே கருத்து பப்ளிஷ் ஆகிவிட்டது கர்சர் கரெக்டா வெளியிடுவில் இருக்க குதித்துவிடுகிறது.//
நீக்குஇங்கு குறைவாக இருக்கிறதா? புரிந்து கொண்டேன்.
பாவம் இருப்பிடம் இல்லாமல் அதுங்களுக்குள்ளும் சண்டை...
பதிலளிநீக்குபழைய வீட்டருகில் ஒரு மரத்தில் கும்பலாக இருக்கும் திடீரென்று அனைத்தும் ஒருசேரப் பறந்து தரைக்கு வந்து தானியங்களோ மிக்சரோ தின்றுவிட்டு மீண்டும் கும்பலாகப் பறந்து மரத்ஹில் சென்று வரிசையாக உட்காரும்...இப்படி மீண்டும் மீண்டும்...படனள் காணொளி எடுத்திருக்கிறேன்...
அது போல பழைய வீட்டருகில் இருந்த ஏரியிலும் இப்படிக் கூட்டமாகப்பறந்து பறந்து ஒரு கல்லிலிருந்து மற்றொரு கல்லில் போய் அமரும் மீண்டும்....இப்படிப் பறந்து கொண்டே இருக்கும்
கீதா
//பாவம் இருப்பிடம் இல்லாமல் அதுங்களுக்குள்ளும் சண்டை...//
நீக்குஆமாம்.
//பழைய வீட்டருகில் ஒரு மரத்தில் கும்பலாக இருக்கும் திடீரென்று அனைத்தும் ஒருசேரப் பறந்து தரைக்கு வந்து தானியங்களோ மிக்சரோ தின்றுவிட்டு மீண்டும் கும்பலாகப் பறந்து மரத்ஹில் சென்று வரிசையாக உட்காரும்...இப்படி மீண்டும் மீண்டும்...படனள் காணொளி எடுத்திருக்கிறேன்...//
இங்கு உள்ள புறாக்கள் மரத்திலே அமரவே அமராது. வீட்டின் மதில் மேல், ஜன்னல் என்று தான் அமரும்.
கும்பலாக அமரவதும், கும்பலாக பறப்பதும் பார்க்க அருமையாக இருக்கும்.
//அது போல பழைய வீட்டருகில் இருந்த ஏரியிலும் இப்படிக் கூட்டமாகப்பறந்து பறந்து ஒரு கல்லிலிருந்து மற்றொரு கல்லில் போய் அமரும் மீண்டும்....இப்படிப் பறந்து கொண்டே இருக்கும்//
பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும், சிறகடிக்கும் ஒலியும் நன்றாக இருக்கும்.
அந்த ஜன்னல்லில் இருக்கும் இரண்டும் ரொம்ப அழகா பாவமா இருக்கு. பாவமில்லையா முட்டைகள் உடைந்து போவது என்று...அதுங்களுக்கும் எத்தனையோ பிரச்சனைகள்..
பதிலளிநீக்குபுறாக்களின் தவிப்பு நினைவிருக்கிறது கோமதிக்கா.
சாய்த்து வைத்திருக்கும் ஏணியில் குடியிருக்கும் புறாக்கள் ....கண்கள் என்ன ஒரு அழகு சிவப்பு பட்டன் போன்று...
பழைய வீட்டருகில் எல்லோரும் புறாக்களுக்கு உணவு கொடுப்பாங்க....கடைக்காரர்களும்.
ஆனால் வீட்டில் பால்கனியில் சட்டம் போட்டிருக்காங்க. புறாக்களினால் வியாதி வரும் என்று சொல்லப்பட்டாலும் இங்கும் மக்கள் அவைகளுக்கு உணவு கொடுக்கிறார்கள் அப்படித்தான் அந்த மரத்தில் அத்தனை புறாக்கள். கடைகளில் இருந்தும் கொடுக்கறாங்க.
நமக்கு ஆபத்தில்லாமல் உதவலாமே அவையும் இயற்கையால் படைக்கப்பட்டவைதானே. நமக்கு எப்படி உரிமை இருக்கோ அது போல அவற்றிற்கும் உரிமை இருக்குதானே இல்லையா...நீங்களும் இவற்றிற்கு உதவுவது மனதிற்கு மகிழ்ச்சி, நிறைவாகவும் இருக்கு கோமதிக்கா.
கீதா
//அந்த ஜன்னல்லில் இருக்கும் இரண்டும் ரொம்ப அழகா பாவமா இருக்கு. பாவமில்லையா முட்டைகள் உடைந்து போவது என்று...அதுங்களுக்கும் எத்தனையோ பிரச்சனைகள்..//
நீக்குஎல்லா உயிர்களுக்கும் பிழைத்தல் என்பது பிரச்சனைதான்.
//புறாக்களின் தவிப்பு நினைவிருக்கிறது கோமதிக்கா.//
பதிவு நினைவில் இருப்பது மகிழ்ச்சி.
//சாய்த்து வைத்திருக்கும் ஏணியில் குடியிருக்கும் புறாக்கள் ....கண்கள் என்ன ஒரு அழகு சிவப்பு பட்டன் போன்று...//
இன்று அந்த வீட்டில் ஏணியை எடுத்து விட்டார்கள் பால்கனியை சுத்தம் செய்து விட்டார்கள். அவை குடியிருக்க வேறு வீடு பார்க்க வேண்டும்.
கண்கள் அழகாய் இருக்கும் புறாக்களுக்கு.
//பழைய வீட்டருகில் எல்லோரும் புறாக்களுக்கு உணவு கொடுப்பாங்க....கடைக்காரர்களும்.
ஆனால் வீட்டில் பால்கனியில் சட்டம் போட்டிருக்காங்க. புறாக்களினால் வியாதி வரும் என்று சொல்லப்பட்டாலும் இங்கும் மக்கள் அவைகளுக்கு உணவு கொடுக்கிறார்கள் அப்படித்தான் அந்த மரத்தில் அத்தனை புறாக்கள். கடைகளில் இருந்தும் கொடுக்கறாங்க.//
முன்பு மசூதிகளுக்கு போய் புறாக்களுக்கு கம்பு, சோளம் போன்ற தானியங்களை கொடுத்து வருவார்கள் அங்குதான் நிறைய இருக்கும்.
சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவு கொடுப்பதை தடை செய்து இருக்கிறார்கள் மீறி கொடுத்தால் அபராத பணம் நிறைய கட்ட வேண்டும்.
//நமக்கு ஆபத்தில்லாமல் உதவலாமே அவையும் இயற்கையால் படைக்கப்பட்டவைதானே. நமக்கு எப்படி உரிமை இருக்கோ அது போல அவற்றிற்கும் உரிமை இருக்குதானே இல்லையா...நீங்களும் இவற்றிற்கு உதவுவது மனதிற்கு மகிழ்ச்சி, நிறைவாகவும் இருக்கு கோமதிக்கா.//
நம்மால் முடிந்தது செய்வோம். அப்புறம் படைத்தவன் பார்த்து கொள்வான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
நாம் பார்த்து விட்டால் குஞ்சை தன் அலகால் அடியில் தள்ளிக் கொண்டு மேலே அமர்ந்து மறைத்து கொள்கிறது. அப்படி குஞ்சை பொத்தி பாதுகாக்கிறது .//
பதிலளிநீக்குஎன்ன ஒரு பாதுகாப்பு இல்லையா? தாய்மை...
என்று பிரார்த்தனை வேறு செய்ய ஆரம்பித்து விட்டேன் பிரார்த்தனை பலித்து விட்டது முட்டையிட்டு குஞ்சு பொரித்து விட்டது.
இனி பத்திரமாக பறந்து போக வேண்டும்.//
சூப்பர் கோமதிக்கா...மகிழ்ச்சியாக நெகிழ்ச்சியாக இருக்கிறது கோமதிக்கா, உங்கள் உணர்வும்....
புறா பாவம்.
குஞ்சுக்கு உணவு ஊட்டும் அந்தப் பழைய படம் பார்க்கும் போதே மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தாய் பறவை இரை தேட போய் இருக்கிறது போல நல்லபடியாக குஞ்சு பறந்து போக வேண்டும் இறைவா!ஏன்று வாய் தன்னையறியாமல் முனுமுனுக்க ஆரம்பித்து விட்டது.//
கண்டிப்பாக உங்க பிரார்த்தனை நிறைவேறும் கோமதிக்கா.... க்ளைமாக்ஸ் போல முடிச்சிருக்கீங்க. வெளியே போன தாய்ப்பறவை வந்ததா....குஞ்சு அப்புறம் என்னாகும் என்று பார்ட் 2 விற்கு இடம் வகுத்து முடிச்சிருக்கீங்க!!!!
கீதா
என்ன ஒரு பாதுகாப்பு இல்லையா? தாய்மை.//
நீக்குஆமாம்.
//சூப்பர் கோமதிக்கா...மகிழ்ச்சியாக நெகிழ்ச்சியாக இருக்கிறது கோமதிக்கா, உங்கள் உணர்வும்...//
மகன் வீட்டில் மரத்தில் மணிப்புறா கூடு கட்டி முட்டை வைக்கும், முட்டை கீழே விழுந்து உடையும் அல்லது ஏதாவது பறவை தூக்கி போய் விடும்.
//குஞ்சுக்கு உணவு ஊட்டும் அந்தப் பழைய படம் பார்க்கும் போதே மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது.//
இப்போதும் வீடியோ எடுத்தேன் கண்ணாடி தடுப்பு வழியாக அவ்வளவு தெளிவாக இருக்காது அதை வலையேற்றினேன் ஏறவில்லை.
//கண்டிப்பாக உங்க பிரார்த்தனை நிறைவேறும் கோமதிக்கா.... //
நன்றி கீதா.
//க்ளைமாக்ஸ் போல முடிச்சிருக்கீங்க. வெளியே போன தாய்ப்பறவை வந்ததா....குஞ்சு அப்புறம் என்னாகும் என்று பார்ட் 2 விற்கு இடம் வகுத்து முடிச்சிருக்கீங்க!!!!//
வந்து விட்டது தாய்பறவை தனக்குள் அடக்கி கொண்டு அமர்ந்து இருக்கு.இன்னும் எத்தனை நாள் ஆகும் பறந்து போக என்று தெரியவில்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.