என் மாமா, என் கணவர் மற்றும் கணவரின் அண்ணா சிவ பூஜை செய்த படங்கள் இருக்கும்.
இந்த வருடம் என் கணவரின் அண்ணாவீட்டில் நாலு கால பூஜை படங்கள்
திருக்கேதீச்சரம் திருக்கோயில்
கேதீச்சரநாதனை கெளரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர், தென்கயிலாயநாதர், மத்யசேதுநிவசர், நாகநாதர், இராஜராஜேவரர், நித்தியமணவாளர், பெருந்துறை ஈசன், எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறார் இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகிய பாலாவி ஆறு பற்றி சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் “மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே” என்றும், சுந்தரர் அருளிய திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ”பாலாவியின் கரைமேல்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. ”பன்வினை போக்கும் பாலாவி” என்றும், ”பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி”என்றும் திருக்கேதீச்சரப்புராணம் கூறுகிறது.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!
சிவராத்திரி சிறப்பு பதிவாக திருக்கச்சூர் பதிவு போட்டு இருந்தேன் அதிலிருந்து ஒரு சிறு பகுதி :-
சுந்தரர் திருக்கழுக்குன்றம் சென்று விட்டுக் காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார். நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும் பசியாலும் வாடினார். அவர் பசியைப் போக்க இறைவர் முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரிடம் 'இங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருங்கள்! இதோ உணவுடன் வருகிறேன்' என்று சொல்லி திருவோடு ஏந்தி வீட்டு வீடாகச் சென்று உணவு பெற்று சுந்தரருக்கும் அவருடன் வந்த அடியார்களுக்கும் அமுது படைத்தார்.
முழுதும் படித்து பாருங்கள்.
தண்டபாணி தேசிகர் பாடிய பாடல்.
இறைவன் அடியாருக்கு இறங்கி வருவான் தாயாய் என்பதற்கு சான்று.
இறைவன் நந்தனார் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்த காட்சியை கண்டு நந்தனார் பரவசபட்டு பாடிய பாடல்
என்னப்பன் அல்லவா எந்தாயும் அல்லவா !
முன்பு சிவன் ராத்திரிக்கு கோயில் போய் வணங்கி வந்து பதிவுகள் போடுவேன், இப்போது வீட்டிலிருந்து ஜோதி தொலைக்காட்சியில் பல கோயில்களை தரிசனம் செய்கிறேன். அதனால் பழைய பதிவை பகிர்ந்து இருக்கிறேன். .
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------






முதல் படமே மாமா வரைந்த படமே பதிவின் ஹைலைட்!
பதிலளிநீக்குகோமதிக்கா.. இறைவன் எளிமையான முறையைத்தான் விரும்புகிறார்.
இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லாமல் சிவராத்திரியாக விழித்து இருந்த என்னை சிவன் ராத்திரி அன்று நிம்மதியாக தூங்க வைத்து விட்டார் இறைவன்.//
இறைவனுக்குத் தெரியும் கோமதிக்கா. அவர் பார்த்துக் கொள்வார்!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//முதல் படமே மாமா வரைந்த படமே பதிவின் ஹைலைட்!//
நன்றி கீதா.
//கோமதிக்கா.. இறைவன் எளிமையான முறையைத்தான் விரும்புகிறார்.
இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லாமல் சிவராத்திரியாக விழித்து இருந்த என்னை சிவன் ராத்திரி அன்று நிம்மதியாக தூங்க வைத்து விட்டார் இறைவன்.
இறைவனுக்குத் தெரியும் கோமதிக்கா. அவர் பார்த்துக் கொள்வார்!//
இரண்டு நாட்களாக இரவு தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டேன் கீதா, புத்தகம் படித்தேன், பக்தி பாடல்,சினிமா பாடல் , என்று கேட்டேன் மணி தான் ஓடியதே தவிர தூக்கம் வரவில்லை . வழக்கம் போல 4 மணிக்கு எழுந்து விட்டேன். (பகலில் தூங்க மாட்டேன்.) அந்த அசதி போல சிவன் ராத்திரிக்கு விழித்து இருக்க வேண்டும் நினைத்தும் முடியாமல் தூங்கி விட்டேன்.
நீங்கள் சொல்வது போல பார்த்து கொண்டார் என்னை தூங்க வைத்து.
நன்றி கீதா
மகன் வீட்டு சிவராத்திரி பூஜை படங்கள் சிறப்பு, கோமதிக்கா.
பதிலளிநீக்குசிவன் மண்டபத்திலிருந்து பூ கீழே விழுந்ததை பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது. //
ஓ அப்படி விழுந்தால் ஆசிவழங்கியது போல அர்த்தமோ அக்கா? கவின் அசத்தல். நல்ல சூழலில் வளர்கிறார்.
மகன் செய்த மண்டபம் வாவ்! 3டி முறையில் செய்திருக்கிறார் இல்லையா? கணினியில்?
கீதா
//மகன் வீட்டு சிவராத்திரி பூஜை படங்கள் சிறப்பு, கோமதிக்கா.//
நீக்குநன்றி கீதா
//ஓ அப்படி விழுந்தால் ஆசிவழங்கியது போல அர்த்தமோ அக்கா? கவின் அசத்தல். நல்ல சூழலில் வளர்கிறார்.//
ஆமாம் கீதா , பூ விழுந்ததை பார்த்து மகன் , மருமகளிடம் கவினை இறைவன் ஆசீர்வாதம் செய்து விட்டார் என்று தான் சொன்னேன்.
//மகன் செய்த மண்டபம் வாவ்! 3டி முறையில் செய்திருக்கிறார் இல்லையா? கணினியில்?//
மகன் செய்த மண்டபம் சுழலும் நடராஜரை பாராட்டியதற்கு நன்றி.
திருக்கேதீச்சுரம், திருக்கச்சூருக்குச் செல்லும் சுந்தரருக்கு இறைவன் அமுது படைத்த புராணமும் தெரிந்தது கோமதிக்கா. திருக்கச்சூர் சென்னைக்கு அருகில்தான் இருக்கிறது போல. அறிந்ததில்லை இதுவரை.
பதிலளிநீக்குநந்தனார் படம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். இப்போதும் கேட்டுக் கொண்டேன்.
கீதா
//திருக்கேதீச்சுரம், திருக்கச்சூருக்குச் செல்லும் சுந்தரருக்கு இறைவன் அமுது படைத்த புராணமும் தெரிந்தது கோமதிக்கா. திருக்கச்சூர் சென்னைக்கு அருகில்தான் இருக்கிறது போல. அறிந்ததில்லை இதுவரை.//
நீக்குஆமாம் கீதா , அடுத்த முறை சென்னை போகும் போது போய் வாங்க நன்றாக இருக்கும்.
//நந்தனார் படம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். இப்போதும் கேட்டுக் கொண்டேன்.//
ஆமாம், இப்போது சின்ன குழந்தைகள் கூட பாடுகிறார்கள்.அவர்களுக்கும் பிடித்து இருக்கிறது.
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி கீதா.
சிவராத்திரி சிறப்பு பகிர்வு நன்று. நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//சிவராத்திரி சிறப்பு பகிர்வு நன்று. நல்லதே நடக்கட்டும்.//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.
ஸார் வரைந்த ஓவியம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதூக்கம் விழிக்காமல் இருந்தது நல்லதுதான் என்று தோன்றியது. ஏற்கனவே உடம்பு சரியில்லை என்று சொன்னீர்கள்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஸார் வரைந்த ஓவியம் நன்றாக இருக்கிறது. //
நன்றி ஸ்ரீராம்.
https://mathysblog.blogspot.com/2017/07/blog-post_23.html
அருள்மிகு சாந்தநாயகி உடனுறை அருள்மிகு புனுகீசுவரர் திருக்கோயில்
படத்தில் பகிர்ந்து இருக்கிறேன் ஸ்ரீராம்.
//பழைய பதிவில் திறமையான அந்தக் கைகள் வரைந்த படத்தையும் என் கமெண்ட்டையும் மறுபடி பார்த்து வந்தேன்!//
சாரை பாராட்டி இருக்கிறீர்கள்.
அந்த பதிவை முடிந்தால் பாருங்கள். கங்கை நீர் சொட்டும், விளக்கு தீபம் ஆடும் .
//தூக்கம் விழிக்காமல் இருந்தது நல்லதுதான் என்று தோன்றியது. ஏற்கனவே உடம்பு சரியில்லை என்று சொன்னீர்கள்.//
ஆமாம், இப்போது சரியாகி விட்டது, இருந்தாலும் தூக்கம் சரியாக இருக்க மாட்டேன் என்கிறது. இன்று மூன்று மணிக்கு எழுந்து விட்டேன் அவ்வளவுதான் தூக்கம். சில நாட்கள் இப்படித்தான்.
பழைய பதிவுகளை பார்த்து கருத்து அங்கு சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குநான் எப்போதுமே விழித்ததில்லை. ரொம்பப் பெருமையா சொல்லிக்கறேன்னு நினைக்க வேண்டாம்..! வருத்தமாதான் சொல்றேன்! இதெல்லாம் முதலிலிருந்தே வந்திருந்தால்தான் உண்டு!
பதிலளிநீக்கு//நான் எப்போதுமே விழித்ததில்லை. ரொம்பப் பெருமையா சொல்லிக்கறேன்னு நினைக்க வேண்டாம்..! வருத்தமாதான் சொல்றேன்! இதெல்லாம் முதலிலிருந்தே வந்திருந்தால்தான் உண்டு!//
நீக்குநான் சிறு வயதில் விழித்து இருக்கிறேன்.
சார் தான் விழித்து இருப்பார்கள். முதல் காலம் பூஜை வீட்டில் செய்வார்கள் இரண்டாம் கால பூஜைக்கு கோயிலுக்கு போவோம் அது முடிந்தவுடன் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டு அவர்கள் மீதி கால பூஜைகளை பார்த்தபின் காலையில் தான் வருவார்கள்.
என் மாமனார் நாலுகாலமும் வீட்டில் சிவபூஜை செய்வார்கள் அதற்கு கண்விழித்து பழக்கம் சாருக்கு.
காணொளியில் சட்டென பூ கீழே விழுந்ததும் ஒரு கணம் சிலிர்த்து விட்டது! மகன் செய்த மண்டபத்தில் சுழலும் நடராஜரை தரிசித்தேன், ரசித்தேன். ஸார் வரைந்த ஓவியமும் சட்டென வந்து சென்றது.
பதிலளிநீக்கு//காணொளியில் சட்டென பூ கீழே விழுந்ததும் ஒரு கணம் சிலிர்த்து விட்டது!//
நீக்குஆமாம். கோவிலில் சில நேரம் சுவாமியை பார்த்து கொண்டு அவருடன் மனதால் பேசி கொண்டு இருக்கும் போது பூ விழுந்தால் மனம் சிலிர்த்து போகும். மகன் , மருமகளிடம் சொன்னேன் கவினை ஆசீர்வாதம் செய்து விட்டார் என்று.
//மகன் செய்த மண்டபத்தில் சுழலும் நடராஜரை தரிசித்தேன், ரசித்தேன். ஸார் வரைந்த ஓவியமும் சட்டென வந்து சென்றது.//
நன்றி ஸ்ரீராம்.
பூஜைப் படங்களை அருமை.. என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பாடலை ரசித்தேன்.
பதிலளிநீக்கு//பூஜைப் படங்களை அருமை.. என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பாடலை ரசித்தேன். //
நீக்குஎனக்கும் இந்த பாடல் பிடிக்கும்
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.
சிவராத்திரி பதிவு நன்று.
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அப்பன் அல்லவா... நானும் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடல்.
ந்ந்தனார் படம் பலமுறை, பசங்களுடன் வீட்டில் பார்த்திருக்கிறோம்.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//சிவராத்திரி பதிவு நன்று.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அப்பன் அல்லவா... நானும் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடல்.
ந்ந்தனார் படம் பலமுறை, பசங்களுடன் வீட்டில் பார்த்திருக்கிறோம்.//
இந்த பாட்டு பிடிக்கும் என்று முன்பு ஒரு தடவை சொல்லி இருந்தீர்கள்.
நந்தனார் படம் பல ஆண்டுகள் ஆனாலும் நல்ல தெளிவாக இருக்கிறது பார்க்க .
உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத்தமிழன்
3 D படங்கள் அழகு. நானும் உங்களைப் போலத்தான். பல நாட்கள் இரவில் தூக்கம் வராமல் விழித்திருப்பேன், பகலில் தூங்குவேன். ஆனால் சிவராத்திரி அன்று நல்ல உறக்கம்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//3 D படங்கள் அழகு. //
நன்றி.
//நானும் உங்களைப் போலத்தான். பல நாட்கள் இரவில் தூக்கம் வராமல் விழித்திருப்பேன், பகலில் தூங்குவேன். ஆனால் சிவராத்திரி அன்று நல்ல உறக்கம்.//
நான் இரவு முழுவதும் விழித்து இருந்தாலும் பகலில் தூங்க மாட்டேன்.
காலை 4 அல்லது 4.30 மணிக்கு எழுந்து கொள்ளும் பழக்கம் எப்போதும்.
தூங்க கூடாது என்று சொல்லும் போது தூக்கம் வருவது இயல்பு.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Kamala Hariharan20 பிப்ரவரி, 2026 அன்று 7:37 PM
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிவு அருமை. சிவராத்திரி பதிவை அழகாக தொகுத்துள்ளீர்கள்.
உங்கள் வீட்டில், மாமனார், தங்கள் கணவர் அனைவரும் இரவு விழித்திருந்து நாலுகால பூஜைகள் செய்வது பார்க்க மனதிற்கு ஆனந்தமாக உள்ளது. முன்பு அம்மாவுடன் இருக்கும் போது, என் அப்பாவும் நாலு காலம் கண் விழித்து கோவிலில் பூஜைகள் செய்வார். அவர் வரும் வரை விழித்திருக்க வேண்டுமென நாங்கள், இறை நாமங்களுடன், பரமபதம் தாயகட்டம், பல்லாங்குழி என விளையாடி பேசிக் கொண்டிருப்போம். நான் பன்னிரண்டு, ஒன்றுக்கு என கண் சுழற்றி படுத்து விடுவேன். எங்கள் அம்மாவும், பாட்டியும் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். இப்போது அது கூட அன்று பார்த்து என்னால் விரதமாக இருக்க இயலவில்லை நீங்கள் ஒருகால் பூஜை செய்து சிவனை வழிபட்டு விரதமிருந்து மிக்க மகிழ்ச்சி. சிவபெருமான் அருள் உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மகன் செய்த பனி லிங்கங்கள் அழகாக இருக்கிறது. பேரன் செய்த தொன்மா மிருகமும் நன்றாக உள்ளது. உங்கள் மகன் வீட்டு சிவராத்திரி அலங்காரமும், உங்கள் வீட்டு சிவராத்திரி அலங்காரத்தையும் பார்த்து இறைவனை தரிசித்துக் கொண்டேன்.
தங்கள் மகன் செய்த சுழலும் நடராஜ, சிவபெருமானும், தங்கள் கணவர் வரைந்த கணினி ஓவியமும் மிக அழகாக இருக்கிறது. நானும் சிவராத்திரி க்காக ஒரு பதிவு எழுதி அதை முடிக்கவில்லை. நடுவில் எப்பவாவது முடித்து வெளியிட வேண்டியதுதான்..! உங்கள் பதிவுகளை படித்து மிகவும் ரசித்தேன் சகோதரி. உடனடியாக வரத்தான் இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோமதி அரசு21 பிப்ரவரி, 2026 அன்று 6:27 AM
நீக்குவணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//உங்கள் வீட்டில், மாமனார், தங்கள் கணவர் அனைவரும் இரவு விழித்திருந்து நாலுகால பூஜைகள் செய்வது பார்க்க மனதிற்கு ஆனந்தமாக உள்ளது. முன்பு அம்மாவுடன் இருக்கும் போது, என் அப்பாவும் நாலு காலம் கண் விழித்து கோவிலில் பூஜைகள் செய்வார். அவர் வரும் வரை விழித்திருக்க வேண்டுமென நாங்கள், இறை நாமங்களுடன், பரமபதம் தாயகட்டம், பல்லாங்குழி என விளையாடி பேசிக் கொண்டிருப்போம். நான் பன்னிரண்டு, ஒன்றுக்கு என கண் சுழற்றி படுத்து விடுவேன். எங்கள் அம்மாவும், பாட்டியும் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். இப்போது அது கூட அன்று பார்த்து என்னால் விரதமாக இருக்க இயலவில்லை நீங்கள் ஒருகால் பூஜை செய்து சிவனை வழிபட்டு விரதமிருந்து மிக்க மகிழ்ச்சி. சிவபெருமான் அருள் உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உண்டு. இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
நாங்களும் இப்படி கண் விழித்து விளையாடி இருக்கிறோம்.
ஏதோ என்னால் முடிந்த பிரசாதம் செய்து வழிபாடு செய்கிறேன்.
//உங்கள் மகன் செய்த பனி லிங்கங்கள் அழகாக இருக்கிறது. பேரன் செய்த தொன்மா மிருகமும் நன்றாக உள்ளது. உங்கள் மகன் வீட்டு சிவராத்திரி அலங்காரமும், உங்கள் வீட்டு சிவராத்திரி அலங்காரத்தையும் பார்த்து இறைவனை தரிசித்துக் கொண்டேன்.//
நன்றி .
//தங்கள் மகன் செய்த சுழலும் நடராஜ, சிவபெருமானும், தங்கள் கணவர் வரைந்த கணினி ஓவியமும் மிக அழகாக இருக்கிறது. நானும் சிவராத்திரி க்காக ஒரு பதிவு எழுதி அதை முடிக்கவில்லை. நடுவில் எப்பவாவது முடித்து வெளியிட வேண்டியதுதான்..! உங்கள் பதிவுகளை படித்து மிகவும் ரசித்தேன் சகோதரி. உடனடியாக வரத்தான் இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
பழைய பதிவை படித்து , புதுபதிவையும் படித்து இரன்டுக்கும் சேர்த்து கருத்து கொடுத்து விட்டீர்கள். மகிழ்ச்சி.
ரசித்து படித்து கருத்து சொல்லி வாழ்த்து, பிரார்த்தனைகள் செய்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி . உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் பதிவை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
சிவராத்திரி பூசை படங்கள் அத்தனையும் அழகு கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குஉங்கள் கணவரின் கம்பியூட்டர் லிங்கம், பேரன்பாடல், மகனின் கைவண்ணம், என சிறப்பான படங்கள்.
எங்கள் நாட்டு மாதோட்ட பாலாவிக்கரையின் திருக்கேதீஸ்வர நாதரையும் பகிர்ந்துள்ளீர்கள் மகிழ்ச்சி.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குசிவராத்திரி பூசை படங்கள் அத்தனையும் அழகு கண்டு வணங்கினோம்.
//உங்கள் கணவரின் கம்பியூட்டர் லிங்கம், பேரன்பாடல், மகனின் கைவண்ணம், என சிறப்பான படங்கள்.//
நன்றி மாதேவி
//எங்கள் நாட்டு மாதோட்ட பாலாவிக்கரையின் திருக்கேதீஸ்வர நாதரையும் பகிர்ந்துள்ளீர்கள் மகிழ்ச்சி.//
ஆமாம் , இலங்கைக்கு 5 நாட்கள் பயணமாக வந்தோம். 5 நாட்கள் எல்லாம் பத்தாது . அவ்வளவு இடங்கள் இருக்கிறது. பாடல் பெற்ற சிவ தலங்களை தரிசனம் செய்தோம்.கதிர்காமம் பார்த்தோம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.