ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

வேலும் மயிலும் துணை




அரிசோனா மகா கணபதி கோயில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன்



இந்த வருட தைப் பூசத் திருவிழாவிற்கு மகன்  உற்சவர் முருகபெருமான்   வள்ளி தெய்வானையோடு அமர  வேல் திருவாச்சியோடு மயில்பீடம் செய்து கொடுத்து இருக்கிறான்  .
 .
பால் குடங்கள் தயார் செய்து வைத்து இருக்கிறார்கள். அங்கு 
நாளை தைப்பூசத் திருவிழா




இருபக்கமும் காவடிகளும் நடுவில் பால்குடமும்  வைத்து எடுத்த படங்களை மகனுக்கு கோயில் குருக்கள் அனுப்பி வைத்து இருக்கிறார். அதை மகன் எனக்கு அனுப்பி வைத்தான்.

வீட்டில் தயார் செய்து கொண்டு இருந்த போது   மகன்  எனக்கு அனுப்பி வைத்த படங்கள்




படி படியாக உருவாகும் போது நான் பார்க்க அனுப்பி கொண்டு இருப்பான் மகன்


கோயிலுக்கு போக   தயார் ஆகி விட்டது  பேரன் நிற்கிறான்

இலங்கையை சேர்ந்த அன்பர்  வாகீசன் பாடிய "வண்ணமயில் ஏறும் முருகன்" பாடல் சின்ன காணொளிதான் பாருங்கள். மகன் செய்த  வேலை பாட்டை காட்டும்  காணொளி பின்னனியில் இந்த பாடல் நாலுவரிதான் வரும்.

இதில் முழுவதும் கேட்கலாம்


இப்போது இந்த பாடலை   எல்லோரும் ஆடி மகிழ்கிறார்கள்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடுகிறார்கள்.




தெய்வம் படத்தில் இடம் பெற்ற வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடல்.
பக்தர்கள் பால்குடங்களை எடுத்து கொண்டு போவதும், காவடிகளும்  இடம் பெறும்  தை பூசத்திருவிழாவை அப்படியே காட்டுவார்கள் இந்த பாடலில்.



//முருகா முருகா வேல்முருகா
முருகா முருகா வேல்முருகா

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச்
செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க
நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்(முருகா)

தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க
தென்பழநி வலம் வரும் தங்கரதமாம்
தங்கரத மீதமர்ந்து கொலுவிருக்கும்
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா(முருகா)

பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம்
பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
கொஞ்சு தமிழ் பாலனுக்குப் பழநியிலே
கோடிக்கண்கள் வேண்டுமய்யா காண்பதற்கே(முருகா)

காவடிகள் உன்னைத் தேடி ஆடிவரும்
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்
சேவடியே சரணமென வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருளும் கந்தவேளே(முருகா)
கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர
கோலமயில் நின்று நடமாடி வர
சுப்பையா நானடிமை பாடிவர
சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டுவர(முருகா)//

பாடல் வரிகள்  கூகுள்  நன்றி.


தைப்பூசத்திற்கு மக்கள் பக்தியோடு பாதயாத்திரை போகும் போது பாடி கொண்டு போவார்கள் இந்த பாடலை.

இந்த ஆண்டும் என் தம்பி பாதயாத்திரை போனான்.
பழனிமுருகனை தரிசனம் செய்து பஞ்சாமிர்தம் , விபூதி பிரசாதம் கொண்டு  வந்து கொடுத்தான்.
பழனி செல்லாமலே பிரசாதம் கிடைத்து விட்டது.




                                          வேலும் மயிலும் துணை   என்று நிற்கும் மகன்


தைபூச விழா   தைபூசம் 2023 ஆம் ஆண்டும் இது போல உற்சவருக்கு  செய்து கொடுத்தான்  மருமகள், நான், மருமகளின் அம்மா பால்குடம் எடுத்தோம். மகனும், பேரனும் காவடி எடுத்தார்கள்.



ஆறுபடை வீடு அழகா போற்றி!    
 

2024 ஆம ஆண்டு தைப் பூசத் திருவிழா விளம்பரங்கள் செய்து கொடுத்தான் 

இந்த பதிவுகள் படித்து இருப்பீர்கள். படிக்காதவர்கள் படிக்கலாம்.

முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம். 

முருகா சரணம், கந்தா சரணம்.

தைப்பூசத் திருவிழா நல் வாழ்த்துக்கள்.


மேலே கைகளை கூப்பி கொண்டு இருப்பவள் மருமகள் நடுவில் இருப்பவர் ஆசிரியர். இரண்டு வருடமாக  பரத நாட்டியம் கற்றுக் கொண்டு வருகிறாள்.

இன்று நடந்த   குடியரசுதினவிழா  பேரன் அனுப்பி வைத்தான் படங்களை அதனால் சேர்த்து விட்டேன் இதில் .



குடியரசு தின விழாவில் மருகள் கலந்து கொண்டு ஆடினாள்.



வலது ஓரத்தில்   கைகளை தூக்கி  கொண்டு  சாய்ந்து இருக்கிறாள்


நடுவில் இருக்கிறாள் மருமகள்.

சின்ன பாடல் தான் மருமகள் நடனம் பாருங்கள்.




அம்மாவுடன் கவின்  வீட்டில் நடனம்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!



38 கருத்துகள்:

  1. உங்கள் மகன் செய்த மயில்பீட திருவாச்சி மிகவும் அழகாக இருக்கிறது.

    முருகன் பாடல் அருமை . அனைவரும் உற்சாகமாக ஆடி மகிழ்கிறார்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.

    அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள்.

    ஓம் முருகா சரணம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      நலமா? வெகு நாட்களாக உங்களை காணவில்லையே என்று தேடினேன்.

      //உங்கள் மகன் செய்த மயில்பீட திருவாச்சி மிகவும் அழகாக இருக்கிறது.

      முருகன் பாடல் அருமை . அனைவரும் உற்சாகமாக ஆடி மகிழ்கிறார்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.

      அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள்.//

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

      ஓம் முருகா சரணம்.

      நீக்கு
  2. இந்த வருட தைப் பூசத் திருவிழாவிற்கு மகன் உற்சவர் முருகபெருமான் வள்ளி தெய்வானையோடு அமர வேல் திருவாச்சியோடு மயில்பீடம் செய்து கொடுத்து இருக்கிறான் .//

    சூப்பராக இருக்கு கோமதிக்கா...ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறார்.

    மகனும், பேரனும் வேலும் மயிலுடனும் ...அவர்களுக்கு எப்போதும் துணையிருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //சூப்பராக இருக்கு கோமதிக்கா...ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறார்.

      மகனும், பேரனும் வேலும் மயிலுடனும் ...அவர்களுக்கு எப்போதும் துணையிருக்கும்.//

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதா

      நீக்கு
  3. இலங்கைத்தமிழர்கள் முருக பக்தர்கள் அம்பிகை பக்தர்களும்...

    பாடல் நன்றாக இருக்கிறது அக்கா.

    வேலும் மயிலும் திருவாச்சி வீடியோவும் ரசித்தேன்.

    தெய்வம் படப் பாடல் நல்ல பாடல். படமும் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இலங்கைத்தமிழர்கள் முருக பக்தர்கள் அம்பிகை பக்தர்களும்...//

      ஆமாம்.

      //பாடல் நன்றாக இருக்கிறது அக்கா.

      வேலும் மயிலும் திருவாச்சி வீடியோவும் ரசித்தேன்.//

      எல்லோருக்கும் இந்த பாடல் பிடித்து இருக்கு அதனால் தான் இந்த பகிர்வு.

      //தெய்வம் படப் பாடல் நல்ல பாடல். படமும் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்//

      ஆமாம், இந்த படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  4. இன்று தைப்பூசம் என்று இன்று காலையில்தான் தெரிந்தது. பதிவு நேற்று ஷெட்யூல் செய்தப்ப, முருகனுக்கு முன்னர் வரை சேர்த்துவிட்டு முடித்துவிட்டு அப்புறம் என்னவோ முருகனை போட்டிடுவோம் என்று கூவி அழைத்தால் பாடல் வரிகளையும் போட்டு சேர்த்துவிட்டேன் ஷெட்யூல் செய்தேன். இன்று தைப்பூசம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்று தைப்பூசம் என்று இன்று காலையில்தான் தெரிந்தது. பதிவு நேற்று ஷெட்யூல் செய்தப்ப, முருகனுக்கு முன்னர் வரை சேர்த்துவிட்டு முடித்துவிட்டு அப்புறம் என்னவோ முருகனை போட்டிடுவோம் என்று கூவி அழைத்தால் பாடல் வரிகளையும் போட்டு சேர்த்துவிட்டேன் ஷெட்யூல் செய்தேன். இன்று தைப்பூசம்!//

      நல்ல பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் .

      நீக்கு
  5. மருமகள் பரதநாட்டியம் கற்பது சிறப்பு. காணொளி பார்த்தேன் அக்கா. ஃபோட்டோக்களில் மருமகள் இருப்பது நன்றாகத் தெரிகிறது. பாராட்டுகள் வாழ்த்துகள் அவங்களுக்கு. நீங்க சொல்லிருந்தீங்க முன்பே அவங்க நடனம் கற்றுக் கொள்கிறார்கள் என்று.

    கவினும் அம்மாவும் போஸ் கொடுப்பது புன்னகைக்க வைத்தது!.

    கலைக்குடும்பம். இறைவன் எப்போதும் துணை இருக்கட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மருமகள் பரதநாட்டியம் கற்பது சிறப்பு. காணொளி பார்த்தேன் அக்கா. ஃபோட்டோக்களில் மருமகள் இருப்பது நன்றாகத் தெரிகிறது. பாராட்டுகள் வாழ்த்துகள் அவங்களுக்கு. நீங்க சொல்லிருந்தீங்க முன்பே அவங்க நடனம் கற்றுக் கொள்கிறார்கள் என்று.//

      காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா

      //கவினும் அம்மாவும் போஸ் கொடுப்பது புன்னகைக்க வைத்தது!.//

      அவர்கள் ஆடி குறு வீடியோ போட்டு இருந்தார்கள் அதை போட்டோ எடுத்து போட்டு இருக்கிறேன்.

      //கலைக்குடும்பம். இறைவன் எப்போதும் துணை இருக்கட்டும்!//

      உங்கள் கருத்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  6. ஓம், வேலும் மயிலும் துணை எனும் கருவினில் மகன் செய்தளித்த மயில்பீடம் மிகச் சிறப்பு, மிக நேர்த்தி!! படங்களும் காணொளிப் பகிர்வுகளும் நன்று. மருமகள் நடனம் கற்று வருவதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடியதும் அருமை. மருமகளும் கவினும் ஆடும் காணொளி இல்லையா? படம் நன்றாக உள்ளது. அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //ஓம், வேலும் மயிலும் துணை எனும் கருவினில் மகன் செய்தளித்த மயில்பீடம் மிகச் சிறப்பு, மிக நேர்த்தி!! படங்களும் காணொளிப் பகிர்வுகளும் நன்று//

      நன்றி ராமலக்ஷ்மி.

      //மருமகள் நடனம் கற்று வருவதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடியதும் அருமை.//

      நன்றி.

      //மருமகளும் கவினும் ஆடும் காணொளி இல்லையா? படம் நன்றாக உள்ளது. அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திடுங்கள்.//

      இருக்கிறது மகன் இன்னும் அனுப்பவில்லை , அதற்குள் நேற்று தைப்பூசத்திற்கு மகா கணபதி கோயிலுக்கு போய் விட்டான்.
      அவன் அனுப்பிய உடன் ஒரு முறை பகிர்கிறேன்.
      உங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சொல்லி விடுகிறேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தரிசனம். அழகாக அம்சமாக இருக்கிறது. மறுபடியும் உங்கள் மகன் குடும்பம் எங்கள் மனதை கொள்ளை அடிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தரிசனம். அழகாக அம்சமாக இருக்கிறது.மறுபடியும் உங்கள் மகன் குடும்பம் எங்கள் மனதை கொள்ளை அடிக்கிறார்கள்.//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. திருவாச்சி தனியாக வீட்டில் பார்க்கும்போது சிறிதாக தெரிகிறது.  சேர்த்துப் பார்க்கும்போது பெரிதாக இருக்கிறது.  எப்படியோ, தைப்பூசத்தை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருவாச்சி தனியாக வீட்டில் பார்க்கும்போது சிறிதாக தெரிகிறது. சேர்த்துப் பார்க்கும்போது பெரிதாக இருக்கிறது. எப்படியோ, தைப்பூசத்தை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்கள்.//

      தைப்பூசம் நேற்று ( நமக்கு இரவு) சிறப்பாக நடந்து இருக்கிறது, பால் குடம், காவடி என்று மகன் , மருமகள் எடுத்து வணங்கி வந்து இருக்கிறார்கள். மகன், பேரன் காவடி . மருமகள் பால் குடம் எடுத்து இருக்கிறார்கள்.
      மகனுக்கு கோயிலில் பொன்னாடை எல்லாம் போர்த்தி கெளரவ படுத்தி இருக்கிறார்கள்.

      நீக்கு
  9. படிப்படியாக திருவாச்சி உருவம் பெற்று வருவது அழகு.  ஓம் என்கிற எழுத்துகளின் கீழே சரவணபவ என்கிற எழுத்துகளும் இருக்குமோ என்று பார்த்தேன்.  அப்படிப் பார்த்தே பழக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படிப்படியாக திருவாச்சி உருவம் பெற்று வருவது அழகு. ஓம் என்கிற எழுத்துகளின் கீழே சரவணபவ என்கிற எழுத்துகளும் இருக்குமோ என்று பார்த்தேன். அப்படிப் பார்த்தே பழக்கம்!//

      2023 ஆம் ஆண்டு செய்த திருவாச்சியில் சரவணபவ போட்டு விட்டதால் இந்த முறை ஓம், பட்டை மட்டும் போட்டான்.அந்த படமும் பகிர்ந்து இருக்கிறேனே அந்த பதிவின் சுட்டியும் கொடுத்து இருக்கிறேன் பாருங்கள் முடிந்தால்.

      நீக்கு
  10. இலங்கைப் பாடகர் பாடிய பாடல் பின்னர்தான் கேட்கவேண்டும்.   காணொளிகளை ரசித்தேன்.  மருமகள் இந்த வயதிலும் பரதம் கற்று ஆடுவது வியப்பு.  ஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இலங்கைப் பாடகர் பாடிய பாடல் பின்னர்தான் கேட்கவேண்டும். காணொளிகளை ரசித்தேன். //
      அதிக எண்ணிக்கை பார்வையாளர்கள் கேட்ட பாட்டு அனைவரும் அந்த முதல் நாலு வரியை வைத்து ஆடி இருக்கிறார்கள் மெதுவாக கேளுங்கள்.

      //மருமகள் இந்த வயதிலும் பரதம் கற்று ஆடுவது வியப்பு. ஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.//

      மருமகளுக்கு நிறைய வயது ஆகவில்லை, எதையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம் உள்ளவள்.
      நீங்கள் சொல்வது போல ஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் தான்.

      நீக்கு
  11. குடியரசு தின கொண்டாட்டத்த்தில் கவின் அம்மாவுடன் நடனம் ஆடும் புகைப்படம் ரசிக்கத்தக்கது..  அந்தக் கொண்டாட்டங்கள் எனக்குள்ளும் புத்துணர்ச்சியை ஊட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  12. குடியரசு தின கொண்டாட்டத்த்தில் கவின் அம்மாவுடன் நடனம் ஆடும் புகைப்படம் ரசிக்கத்தக்கது..//

    வீட்டில் வந்து அம்மாவுடன் ஆடுகிறான்.

    //அந்தக் கொண்டாட்டங்கள் எனக்குள்ளும் புத்துணர்ச்சியை ஊட்டுகின்றன.//

    ஆமாம், பார்க்கும் நமக்கும் கலந்து கொண்ட அவர்க்ளுக்கும் புத்துணர்ச்சியை கொடுப்பது உண்மை.

    உங்கள் கருத்துக்களுக்கு என் நன்றிகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் மகன் செய்த திருவாசியும், வேலும் மிக அழகாக இருக்கின்றன. மருமகளின் நடன ஆர்வம் ஆச்சர்யமூட்டுகிறது. அதை ஊக்குவிக்கும் உங்கள் மகனை பாராட்ட வேண்டும்.
    கை வேலைகள் செய்யும் மகன், ஓவியம் வரையும் பேரன், நடனமாடும் மருமகள்,, நீங்கள் மட்டுமென்ன? எத்தனை நன்றாக எழுதுகிறீர்கள்? கலைக் குடும்பம்தான். God bless!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் , வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன் செய்த திருவாசியும், வேலும் மிக அழகாக இருக்கின்றன. மருமகளின் நடன ஆர்வம் ஆச்சர்யமூட்டுகிறது. அதை ஊக்குவிக்கும் உங்கள் மகனை பாராட்ட வேண்டும்.

      மகனை பாராட்டியதற்கு நன்றி.

      //கை வேலைகள் செய்யும் மகன், ஓவியம் வரையும் பேரன், நடனமாடும் மருமகள்,, நீங்கள் மட்டுமென்ன? எத்தனை நன்றாக எழுதுகிறீர்கள்? கலைக் குடும்பம்தான். God bless!//

      உங்கள் பாராட்டு மழையில் நனைத்தோம், பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் , பிரார்த்தனைக்கும் நன்றி பானு.

      நீக்கு
  14. அம்மாவோடு சேர்ந்து நடனமாடும் கவினின் ஆர்வமும், குறும்பும் ரசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மாவோடு சேர்ந்து நடனமாடும் கவினின் ஆர்வமும், குறும்பும் ரசிக்க வைக்கின்றன.//

      ஆமாம், அம்மா ஆடுகிறமாதிரி அவனும் ஆடுவான்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாமதமான தைப்பூச திருநாள் வாழ்த்துகள்.

    அரிசோனா கோவிலின் தைப்பூச திருவிழா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அழகான முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.

    அழகான முருகனுக்கு தங்கள் மகன் செய்து தந்த திருவாச்சி மிக அழகாக உள்ளது. பொறுமையாகவும் மிக அழகாகவும் வேலும் மயிலும் துணையாக இருந்து ஆசிர்வதிக்க அந்த திருவாச்சியை செய்திருக்கிறார்.

    அதிலும் உங்களுக்கு அவர் தயாரிக்கும் போது அதைப் படிப்படியாக அனுப்பி வைத்த அழகினையும் ரசித்தேன். என் பாராட்டுகளை அவரிடம் கூறுங்கள்.

    இலங்கை பாடகர் வாகீசன் பாடிய காணொளி முழுவதும் கேட்டு ரசித்தேன். நல்ல பாடல், இசையும் வரிகளும் மிகவும் கவர்கின்றன. நன்றாக பாடியுள்ளார். அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. தாமதமான தைப்பூச திருநாள் வாழ்த்துகள்.//

      நன்றி.

      //அரிசோனா கோவிலின் தைப்பூச திருவிழா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அழகான முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.//

      நானும் ஜோதி டி.வியிலும் மகன் காட்டிய கோயில் பூஜையிலும் முருகனை தரிசனம் செய்தேன்.

      //அழகான முருகனுக்கு தங்கள் மகன் செய்து தந்த திருவாச்சி மிக அழகாக உள்ளது. பொறுமையாகவும் மிக அழகாகவும் வேலும் மயிலும் துணையாக இருந்து ஆசிர்வதிக்க அந்த திருவாச்சியை செய்திருக்கிறார்.//

      அந்த முருகன் ஆசிர்வதிக்க வேண்டும்.மூவருக்கும் உடல் நலம் இல்லை மூன்று நாட்களாக நாள் மருத்துவரிடம் காட்ட போகிறார்கள்.
      குளிரில் நீண்ட தூரம் போய் முருகனை சேவித்து , காவடிகள் எடுத்து வந்தது ஜலதோஷம், மேல் கால்வலி.

      //அதிலும் உங்களுக்கு அவர் தயாரிக்கும் போது அதைப் படிப்படியாக அனுப்பி வைத்த அழகினையும் ரசித்தேன். என் பாராட்டுகளை அவரிடம் கூறுங்கள்.//

      கண்டிப்பாய் உங்கள் பாராட்டுக்களை சொல்கிறேன்.

      //இலங்கை பாடகர் வாகீசன் பாடிய காணொளி முழுவதும் கேட்டு ரசித்தேன். நல்ல பாடல், இசையும் வரிகளும் மிகவும் கவர்கின்றன. நன்றாக பாடியுள்ளார். அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      23 வயது வாகீசனுக்கு ஒரு முருகன் பாடலில் உலக புகழ் பெற்று விட்டார். இலங்கையில் பெரிய அளவில் பாராட்டு விழா நடந்து இருக்கிறது அவருக்கு.
      வாழ்த்துக்களூக்கு நன்றி.

      நீக்கு
    2. /அந்த முருகன் ஆசிர்வதிக்க வேண்டும்.மூவருக்கும் உடல் நலம் இல்லை மூன்று நாட்களாக நாள் மருத்துவரிடம் காட்ட போகிறார்கள்.
      குளிரில் நீண்ட தூரம் போய் முருகனை சேவித்து , காவடிகள் எடுத்து வந்தது ஜலதோஷம், மேல் கால்வலி./

      அடாடா.. இதைப்படிக்கவே மனது கஸ்டமாக உள்ளது. இந்த குளிர் தான் இப்படி படுத்துகிறது. எனக்கும் மூன்று மாதமாக இந்த ஜலதோஷம் போவேனா என்கிறது.

      விரைவில் சரியாகி விடும் கவலைப்படாதீர்கள். முருகனுக்கு பக்தியுடன் இவ்வளவையும் செய்தவர்களை முருகன் வருத்தி நோகடிப்பானா? சீக்கிரமே குணப்படுத்தி விடுவான். நானும் உங்கள் மகன், மருமகள், பேரனுக்கு ஜலதோஷம் சீக்கிரமே குணமாக வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. //அடாடா.. இதைப்படிக்கவே மனது கஸ்டமாக உள்ளது. இந்த குளிர் தான் இப்படி படுத்துகிறது. எனக்கும் மூன்று மாதமாக இந்த ஜலதோஷம் போவேனா என்கிறது.//

      எனக்கு ஒரு வாரமாக நாட்களாக ஜலதோஷம் , இருமல், தொண்டை வலி , தொண்டை கர கரப்பு.நீங்கள் மூன்று மாதமாக அவதி படுவது வருத்தமாக இருக்கிறது மருத்துவரிடம் போனீர்களா?

      //விரைவில் சரியாகி விடும் கவலைப்படாதீர்கள். முருகனுக்கு பக்தியுடன் இவ்வளவையும் செய்தவர்களை முருகன் வருத்தி நோகடிப்பானா? சீக்கிரமே குணப்படுத்தி விடுவான். நானும் உங்கள் மகன், மருமகள், பேரனுக்கு ஜலதோஷம் சீக்கிரமே குணமாக வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி சகோதரி.//

      முருகன் வருத்த படுத்த மாட்டார் சரி செய்து விடுவார். பொங்கல் விழா, குடியரசு விழா , தைப்பூசவிழா என்று தொடர்ந்து வேலைகள் அதனால் இந்த படுத்தல். ஓய்வு எடுத்து கொண்டால் சரியாகி விடும்.
      உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி கமலா.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு சிறக்பாக நடனமாடிய தங்கள் மருமகளுக்கு எனதன்பான வாழ்த்துகள்.

    நடன காணொளி கண்டேன். தங்கள் மருமகள் நன்றாக ஆடியிருக்கிறார்கள். கவினும் அம்மாவுடன் சேர்ந்து ஆடிய படம் நன்றாக உள்ளது. உங்கள் மகன் வீட்டில் அனைவருக்குமே நல்ல திறமைகள் உள்ளது. அதை அவர்கள் நன்றாக பயன்படுத்தியும் வருகிறார்கள். இறைவன் அருள் என்றுமே இதுபோல் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைத்திட நானும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

    இங்கு வருவதற்கு எனக்கும் இரண்டு நாட்கள் தாமதமாகி விட்டது. தைப்பூசம் அன்று மாலை அருகிலிருக்கும் , சிவன் கோவிலுக்கு நாங்களும்சென்று வந்தோம். .அதனால் வந்தவுடன் பதிவை படித்தும் கருத்திட இயலவில்லை. இன்று முழுமையான பதிவை படித்து உடனே கருத்து தருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வணக்கம் சகோதரி

      குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு சிறக்பாக நடனமாடிய தங்கள் மருமகளுக்கு எனதன்பான வாழ்த்துகள்.//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கமலா.

      //நடன காணொளி கண்டேன். தங்கள் மருமகள் நன்றாக ஆடியிருக்கிறார்கள். கவினும் அம்மாவுடன் சேர்ந்து ஆடிய படம் நன்றாக உள்ளது.//

      நன்றி.

      //உங்கள் மகன் வீட்டில் அனைவருக்குமே நல்ல திறமைகள் உள்ளது. அதை அவர்கள் நன்றாக பயன்படுத்தியும் வருகிறார்கள். இறைவன் அருள் என்றுமே இதுபோல் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைத்திட நானும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.//

      உங்களின் அன்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், பிரார்த்தனைகளுக்கு
      நன்றி மகிழ்ச்சி.


      //இங்கு வருவதற்கு எனக்கும் இரண்டு நாட்கள் தாமதமாகி விட்டது. தைப்பூசம் அன்று மாலை அருகிலிருக்கும் , சிவன் கோவிலுக்கு நாங்களும்சென்று வந்தோம். .அதனால் வந்தவுடன் பதிவை படித்தும் கருத்திட இயலவில்லை. இன்று முழுமையான பதிவை படித்து உடனே கருத்து தருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் ரசித்துப்பார்த்து அன்பான கருத்துக்களையும் வாழ்த்துகளையும் தருவது மகிழ்ச்சி. அதுவே அவர்களுக்கு மேலும் இது போன்ற செயல்களை செய்ய ஊக்கமும், புத்துணர்ச்சியும் கொடுக்கும். உடலை வருத்தி கொண்டாலும் அன்பான கருத்துக்கள் அவர்களை உற்சாகப்படுத்தும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி கமலா.

      நீக்கு
  17. திருவாச்சியுடன் கூடிய மயில் பீடம்... வெகு அழகு. தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் படங்கள் ரசிக்கும்படி இருந்தது.

    மகன் ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி ஏதேனும் தமிழ்ச்சங்கத்துக்கு உதவிகள் செய்துவருவது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      //திருவாச்சியுடன் கூடிய மயில் பீடம்... வெகு அழகு. தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் படங்கள் ரசிக்கும்படி இருந்தது.//

      நன்றி.

      //மகன் ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி ஏதேனும் தமிழ்ச்சங்கத்துக்கு உதவிகள் செய்துவருவது பாராட்டத்தக்கது.//

      மகா கணபதி தைப்பூச திருவிழாவுக்கு செய்து கொடுத்து இருக்கிறான்.
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  18. சிறிய காணொளி கண்டேன். திருவாச்சி மிக அழகு.

    முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கூடிய படங்கள் ரொம்பவே ரசித்தேன். அந்த ஆறுமுகன் நம்மையெல்லாம் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறிய காணொளி கண்டேன். திருவாச்சி மிக அழகு.//

      நன்றி.

      //முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கூடிய படங்கள் ரொம்பவே ரசித்தேன். அந்த ஆறுமுகன் நம்மையெல்லாம் காக்கட்டும்.//

      படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      ஆறுமுகன் நம்மை எல்லாம் காக்கட்டும்.

      நீக்கு
  19. சுதந்திர தினவிழாக் கொண்டாட்டங்களைக் கண்டேன்.

    நடனக் காணொளி நன்று.

    கவினின் போஸும் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சுதந்திர தினவிழாக் கொண்டாட்டங்களைக் கண்டேன்.//

      குடியரசு தின விழா .

      //நடனக் காணொளி நன்று.

      கவினின் போஸும் அழகு//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு