1 ஆம் தேதி மதுரை "இம்மையிலும் நன்மை தருவார்" திருக்கோயிலுக்கு போய் இருந்தேன். அன்று 3 வது சோமவாரம் . காலையே சங்குகள் தரிசனம் கிடைத்தது, மாலை அபிஷேகம் நடக்க ஹோமம் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.
கோயிலுக்குள் கூட்டம் இருந்தது ஆனால் இறைவன் அருளால்
விரைவில் தரிசனம் செய்து வந்து விட்டேன்.
10 ரூபாய் டிக்கட் வாங்கி வரிசையில் நிற்க வேண்டுமே! என்னால் நிற்க முடியாதே ! என்று நினைத்து கொண்டே டிக்கட் தருபவரிடம் என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது உள்ளே அனுமதிக்க முடியுமா என்று கேட்டேன், " சிறிது நேரம் இருங்கள், உள்ளே கட்டளைக்காரர்கள் தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் வந்த வுடன் உங்களை முதலில் அனுப்புகிறேன்" என்றார் சில வினாடிகளில் உள்ளே அனுமதித்து விட்டார். அவருக்கு நன்றி சொல்லி உள்ளே இறைவனை நன்கு தரிசனம் செய்து வந்தேன்.
என் கண்வரின் நினைவு நாள் அதனால் அன்னதானத்திற்கு பணம் கொடுத்து விட்டு மாலையில் நடக்கவிருக்கும் சங்காபிஷேகத்திற்கு ஹோம பொருட்கள் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.
பெரிய கார்த்திகை அன்று எங்கள் வளாகத்தில் உள்ள விநாயகரை வணங்கி அவருக்கு பின்னால் தெரியும் முழு நிலவையும் வணங்கி வந்தேன்.
முழு நிலவு அரிசோனாவில் நன்றாக இருக்கும் அங்கு நான் எடுத்த நிலவு படங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்று மகனிடம் சொன்னேன் . மகன் மறு நாள் நடைப்பயிற் சிக்கு போய் விட்டு அங்கு எடுத்த நிலவு படங்களை அனுப்பினான்.

------------------------------------------------------------------------------------------------------
ஹோமத்திற்கு வேண்டிய திரவியங்களை நாம் வாங்கி கொடுத்தால் அதை பிரித்து தனி தனி மூங்கில் தட்டுகளில் பிரித்து வைக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள்.
என் அண்ணி கோகர்ணேஸ்வரர் கோயிலில் நடந்த நான்காவது சோமவார அபிஷேகத்தை அனுப்பி வைத்தார்கள்
இன்னொரு கோயிலில்(காசி விஸ்வநாதர் கோயில்) நடந்த கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் அனுப்பினார்கள் நன்கு துல்லியமாக தெரிகிறது அபிஷேகம் , "ஓம் நமச்சிவாய" மந்திரம் ஒலிக்க அபிஷேகம் செய்வது அருமையாக இருக்கிறது சின்ன காணொளிதான் பாருங்கள்.
எங்கள் வீட்டு கார்த்திகை தீப விழா படம்.
விளக்குகள் இந்த வருடம் கொஞ்சம் தான் வைத்தேன்.. பூஜை முடிந்ததும் வெளியே கொண்டு வைத்த தீபங்களை படம் எடுக்க மறந்து விட்டேன். இப்போது எல்லாம் பண்டிகை கொண்டாடுவது மலைப்பாக இருக்கிறது, நிறைவு செய்தால் ஏதோ சாதித்த நினைப்பும், நிம்மதி பெருமூச்சு ஏற்படுகிறது.
எப்போதும் கார்த்திகை வீட்டில் ஏற்றி விட்டு பக்கத்தில் உள்ள அய்யனார் கோயிலில் போய் சொக்கப்பனை பார்த்து வருவேன் இந்த ஆண்டு போகவில்லை என்று என் உடன்பிறவா தங்கை லட்சுமியிடம் சொன்னேன், தேவகோட்டை அய்யனார் கோயில் சொக்கபனை அனுப்பி விட்டாள்.
கார்த்திகை அன்று அய்யனார் தரிசனமும் சொக்கப்பனை தரிசனமும் கிடைத்து விட்டது.
நிலவு வரும் நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில் அழகாய் தெரியும்.
நான் அங்கு இருந்த போது நிறைய நிலவு படங்கள் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன். நிலவை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
அரிசோனாவில் உள்ள மகா கணபதி ஆலயத்தில் சிவன், பார்வதி திருமணம் அதற்கு மகன் குடும்பத்துடன் சென்று இருந்தான்
அங்கு கார்த்திகை தீபங்கள் அழகாய் ஏற்றி இருந்ததை அனுப்பி வைத்தான்
மகா கணபதி ஆலயத்தில் சர்வீஸ் செய்ததற்கு மகனை பாராட்டி பரிசு அளித்தார்களாம் அதை என்னுடன் பகிர்ந்து கொண்டான். மகிழ்ச்சியாக இருந்தது.

பேரன் அங்கு தீபங்களை ஏற்றினான்
வீட்டிலும் அம்மாவுக்கு உதவியாக தீபங்களை திரிகள் போட்டு தயார் செய்து கொடுத்து ஏற்றினான்.
நாளை மார்கழி பிறந்து விடும் அதிகாலை கோலங்கள் போட்டு, பரங்கி பூ வைத்து விளக்கு ஏற்றி திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குவோம்.
பதிவு போட்டு நாள் ஆகி விட்டது, சங்காபிஷேகம், மற்றும் கார்த்திகை தீபாங்களுக்காக இந்த பதிவு.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------


















கார்த்திகை தீபம் படங்கள் மற்றும் காணொளிகள் நன்று. தகவல்களும் நன்று.
பதிலளிநீக்குஇங்கே பண்டிகைகள் கிடையாது என்பதால் ஒன்றும் செய்யவில்லை.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//கார்த்திகை தீபம் படங்கள் மற்றும் காணொளிகள் நன்று. தகவல்களும் நன்று.//
நன்றி.
//இங்கே பண்டிகைகள் கிடையாது என்பதால் ஒன்றும் செய்யவில்லை.//
ஆமாம், அம்மாவின் நினைவுகள் வந்து போனது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.
சென்ற முறை மதுரை பயணத்தின் போது ‘இம்மையிலும் நன்மை தருவார் கோயில்’ செல்ல நினைத்து நேரமின்மையால் முடியாது போயிற்று. தற்போது தங்கள் படங்கள், காணொளிகள் மூலமாகவும் தரிசனம் கிடைத்தது. சிவலிங்க வடிவ சங்குகள்.. சிறப்பான, சிரத்தையுடனான அலங்காலரங்கள். திருக்கார்த்திகை தீபங்கள் அழகு. ஆம், பண்டிகைகள் மலைப்பைத் தந்தாலும் செய்து முடிந்ததும் கிடைக்கிறது மன நிறைவு. அரிசோனா கோயில் படங்களும் பகிர்வும் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//சென்ற முறை மதுரை பயணத்தின் போது ‘இம்மையிலும் நன்மை தருவார் கோயில்’ செல்ல நினைத்து நேரமின்மையால் முடியாது போயிற்று. தற்போது தங்கள் படங்கள், காணொளிகள் மூலமாகவும் தரிசனம் கிடைத்தது. //
நீங்கள் அடுத்த முறை வரும் போது கும்பாபிஷேகம் நடந்து புது பொலிவுடன் இருக்கும் கோயில் . திருப்பணி வேலைகள் நடக்கிறது.
முன்பு பதிவு செய்து இருக்கிறேன் இந்த கோயிலை அதனால் படங்கள் நிறைய போடவில்லை இப்போது.
//சிவலிங்க வடிவ சங்குகள்.. சிறப்பான, சிரத்தையுடனான அலங்காலரங்கள்.//
ஆமாம், ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு முறையில் சங்குகளை அடுக்குவார்கள். பெரும்பாலும் சிவலிங்க வடிவம்.
இன்னொரு கோயில் ஸ்வஸ்திக் சின்னத்தில் சங்குகளை அடுக்கி இருக்கிறார்கள் பாருங்கள்.
//திருக்கார்த்திகை தீபங்கள் அழகு. //
அரிசோனன் அவர்கள் முகநூலில் பகிர்ந்து இருப்பதை பார்த்தீர்கள் அல்லவா?
//ஆம், பண்டிகைகள் மலைப்பைத் தந்தாலும் செய்து முடிந்ததும் கிடைக்கிறது மன நிறைவு. அரிசோனா கோயில் படங்களும் பகிர்வும் அருமை.//
நீங்கள் சொல்வது சரிதான் மனநிறைவு தான் இயங்க வைக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//சென்ற முறை மதுரை பயணத்தின் போது ‘இம்மையிலும் நன்மை தருவார் கோயில்’ செல்ல நினைத்து நேரமின்மையால் முடியாது போயிற்று. தற்போது தங்கள் படங்கள், காணொளிகள் மூலமாகவும் தரிசனம் கிடைத்தது. //
நீங்கள் அடுத்த முறை வரும் போது கும்பாபிஷேகம் நடந்து புது பொலிவுடன் இருக்கும் கோயில் . திருப்பணி வேலைகள் நடக்கிறது.
முன்பு பதிவு செய்து இருக்கிறேன் இந்த கோயிலை அதனால் படங்கள் நிறைய போடவில்லை இப்போது.
//சிவலிங்க வடிவ சங்குகள்.. சிறப்பான, சிரத்தையுடனான அலங்காலரங்கள்.//
ஆமாம், ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு முறையில் சங்குகளை அடுக்குவார்கள். பெரும்பாலும் சிவலிங்க வடிவம்.
இன்னொரு கோயில் ஸ்வஸ்திக் சின்னத்தில் சங்குகளை அடுக்கி இருக்கிறார்கள் பாருங்கள்.
//திருக்கார்த்திகை தீபங்கள் அழகு. //
அரிசோனன் அவர்கள் முகநூலில் பகிர்ந்து இருப்பதை பார்த்தீர்கள் அல்லவா?
//ஆம், பண்டிகைகள் மலைப்பைத் தந்தாலும் செய்து முடிந்ததும் கிடைக்கிறது மன நிறைவு. அரிசோனா கோயில் படங்களும் பகிர்வும் அருமை.//
நீங்கள் சொல்வது சரிதான் மனநிறைவு தான் இயங்க வைக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
ஸ்வஸ்திக் வடிவ அலங்காரமும் கவனித்தேன். அழகு. அரிசோனன் அவர்களது பதிவும் பார்த்தேன்.
நீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குமீண்டும் வந்து பதில் அளித்தமைக்கு நன்றி.
எனக்கும் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, காணொளிகள் உள் கண்டேன்.
பதிலளிநீக்குதேவகோட்டையில் நானும் சொக்கப்பனை கண்டு இருக்கிறேன்.
சிறு அகவையில் இதம்பாடலில் சொக்கப்பன் விஷேசங்கள் நினைவில் வந்து விட்டது.
பெயரன் கவின் பெரிய ஆளாகி விட்டார் மகிழ்ச்சி.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//எனக்கும் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, காணொளிகள் உள் கண்டேன்.
தேவகோட்டையில் நானும் சொக்கப்பனை கண்டு இருக்கிறேன்.
சிறு அகவையில் இதம்பாடலில் சொக்கப்பன் விஷேசங்கள் நினைவில் வந்து விட்டது.//
ஆமாம் , நம் ஊரில் சிறு வயதில் பார்த்தது எல்லாம் நினைவுக்கு வரும்.
பெரிய பெரிய சொக்கபனை(பனைமரம் உயரம்) சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். இப்போது சின்னதாகதான் வைக்கிறார்கள்.
//பெயரன் கவின் பெரிய ஆளாகி விட்டார் மகிழ்ச்சி.//
ஆமாம்
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
இம்மையில் நன்மை தருவார் கோவில் இருக்கும் இடம் அருகே, நடை தூரத்தில் இருந்தது அப்பாவும் அண்ணனும் இருந்த வீடு. மதுரை செல்லும்போது இங்கெல்லாம் செல்வது வழக்கம். நீண்ட நாட்களாக மதுரை போகாத குறை இன்று கொஞ்சம் நீங்கியது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//இம்மையில் நன்மை தருவார் கோவில் இருக்கும் இடம் அருகே, நடை தூரத்தில் இருந்தது அப்பாவும் அண்ணனும் இருந்த வீடு. மதுரை செல்லும்போது இங்கெல்லாம் செல்வது வழக்கம்.//
அடிக்கடி போய் இருப்பீர்கள் அமைதியான கோயில், எனக்கு பிடித்த கோயில்.
// நீண்ட நாட்களாக மதுரை போகாத குறை இன்று கொஞ்சம் நீங்கியது.//
வாய்ப்பு கிடைக்கும் போது வாருங்கள் மதுரை .
பரவாயில்லை, டிக்கெட் கவுண்ட்டரில் இருந்தவர் வழக்கமான கறார் மனிதர்கள் போல இல்லாமல் உதவி இருக்கிறார். உள்ளே எடுத்த படங்கள் அழகு. அவர்கள் செய்யும் சேவைகளையும் காட்டுகின்றன.
பதிலளிநீக்கு//பரவாயில்லை, டிக்கெட் கவுண்ட்டரில் இருந்தவர் வழக்கமான கறார் மனிதர்கள் போல இல்லாமல் உதவி இருக்கிறார். உள்ளே எடுத்த படங்கள் அழகு. அவர்கள் செய்யும் சேவைகளையும் காட்டுகின்றன.//
நீக்குஇவர் சுவாமி சன்னதி முன்பு டிக்கட் கொடுக்கிறார். என்னைப்பார்த்தார் கையில் கைத்தடி , இடுப்பில் பெல்ட் என்று இருக்கிறார்கள் என்று அனுமதி அளித்து விட்டார், வரிசையில் நின்றவர்களும் நல்லவர்கள் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .அதனால் நன்கு தரிசனம் விரைவில் செய்யமுடிந்தது.
விழா காலங்களில் இப்படி சேவை செய்ய இப்போது மகளிர் குழு இருக்கிறார்கள் ஸ்ரீராம். ஒரே மாதிரி உடை அணிந்து கோயில் முழுவதும் இருக்கிறார்கள். சேவை செய்யும் மனபான்மையில் இருக்கும் அவர்களை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.
நிலவு எப்போதுமே அழகுதான். முழுநிலவின் அழகு என்றும் மாறாதது. அழகான படங்கள். அதுவும் அரிஸோனாவில் எடுத்த படங்கள் இன்னும் அழகு. சாதாரணமாக வல்லிம்மா தவறாது நிலவு படங்கள் எடுத்துக் பகிர்வார். அங்கு பனிமழை போல.. அதனால் அவர் படம் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு//நிலவு எப்போதுமே அழகுதான். முழுநிலவின் அழகு என்றும் மாறாதது. //
நீக்குஆமாம்.
//அழகான படங்கள். அதுவும் அரிஸோனாவில் எடுத்த படங்கள் இன்னும் அழகு.//
ஆமாம்.
//சாதாரணமாக வல்லிம்மா தவறாது நிலவு படங்கள் எடுத்துக் பகிர்வார். அங்கு பனிமழை போல.. அதனால் அவர் படம் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.//
நானும் அக்காவும் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் முழு நிலவு படங்களை பகிர்ந்து கொள்வோம்.
பதிவும் போட்டு விடுவோம். இருவருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்து போகும்.
இப்போது அங்கு அதிகமாக பனி இருக்கிறது.
மகனின் ஆன்மீக நாட்டமும், சேவையும் அறிந்ததே... அதை பாராட்டி பத்திரம் வழங்கியது மகிழ்ச்சி. மகன், மருமகள், பேரன் எல்லோருமே வெளிநாட்டு நாகரீகத்தில் மூழ்காது இங்கத்திய பழக்க வழக்கங்களை விடாமல் கைக்கொள்வது சிறப்பு.
பதிலளிநீக்கு//மகனின் ஆன்மீக நாட்டமும், சேவையும் அறிந்ததே... அதை பாராட்டி பத்திரம் வழங்கியது மகிழ்ச்சி. மகன், மருமகள், பேரன் எல்லோருமே வெளிநாட்டு நாகரீகத்தில் மூழ்காது இங்கத்திய பழக்க வழக்கங்களை விடாமல் கைக்கொள்வது சிறப்பு.//
நீக்குமகா கண்பதி கோயில் வெகு தூரத்தில் இருக்கிறது, என்றாலும் மகனின் நண்பர் அவனை விடாமல் சேவையில் ஈடுபட வைத்து விடுவார்.
கவின் ஒரு அற்புதம். இந்த வயதுப் பிள்ளைகள் அம்மா ஏதாவது உதவிக்கு கூப்பிட்டால் கூட செல்லில் மூழ்கியோ, வேறு ஏதாவது விளையாட்டிலோ கவனம் செலுத்தி 'போம்மா.. வேற வேலையில்ல... போர்' என்பார்கள். கவின் உண்மையான ஈடுபாட்டுடன் இவற்றைச் செய்வது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//கவின் ஒரு அற்புதம். இந்த வயதுப் பிள்ளைகள் அம்மா ஏதாவது உதவிக்கு கூப்பிட்டால் கூட செல்லில் மூழ்கியோ, வேறு ஏதாவது விளையாட்டிலோ கவனம் செலுத்தி 'போம்மா.. வேற வேலையில்ல... போர்' என்பார்கள். கவின் உண்மையான ஈடுபாட்டுடன் இவற்றைச் செய்வது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.//
நீக்குசார், மகன், மகள் எல்லோரும் பண்டிகை சமயம் ஆளுக்கு ஒரு வேலை எடுத்து கொண்டு எனக்கு உதவுவார்கள்.
அது போல கவினும் ,மகனும் சேர்ந்து விளக்குக்கு திரி இட்டு, எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி உதவி செய்தார்கள். மருமகள் பொரி, அப்பம், கொழுக்கட்டை எல்லாம் செய்தாள் .
உங்கள் பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்.
உங்கள் வீட்டு தீபம் படங்களும், அழகு. காணொளிகள் பார்த்து இறைவனை தரிசித்தேன்.
பதிலளிநீக்கு//உங்கள் வீட்டு தீபம் படங்களும், அழகு. காணொளிகள் பார்த்து இறைவனை தரிசித்தேன். //
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
அக்கா, சங்குகளால் சிவலிங்க வடிவமா அக்கா?
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அக்கா, சங்குகளால் சிவலிங்க வடிவமா அக்கா?//
ஆமாம் , கீதா
உங்கள் வரியையும் பார்த்துவிட்டேன்.
பதிலளிநீக்குஇறைவன் அருளால்
விரைவில் தரிசனம் செய்து வந்து விட்டேன்.//
பாவம் அக்காவுக்குக் கால் முடியவில்லை இடுப்பும் வலிக்கும்... என்று நினைத்திருப்பார் இறைவன்.
சிறிது நேரம் இருங்கள், உள்ளே கட்டளைக்காரர்கள் தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் வந்த வுடன் உங்களை முதலில் அனுப்புகிறேன்" //
அதான் பாத்தீங்களா அங்கேயே சொல்லிவிட்டார் சீக்கிரம் விட்டுடப்பா அவங்களை என்று.
கோகர்ணேஸ்வரர் கோவில் அபிஷேக வீடியோ பார்த்தேன் இறைவனைக் கண்ணாரக் கண்டு கொண்டேன்! நன்றி உங்கள் அண்ணிக்கும்.
கீதா
//பாவம் அக்காவுக்குக் கால் முடியவில்லை இடுப்பும் வலிக்கும்... என்று நினைத்திருப்பார் இறைவன்.
நீக்குஅதான் பாத்தீங்களா அங்கேயே சொல்லிவிட்டார் சீக்கிரம் விட்டுடப்பா அவங்களை என்று.
கோகர்ணேஸ்வரர் கோவில் அபிஷேக வீடியோ பார்த்தேன் இறைவனைக் கண்ணாரக் கண்டு கொண்டேன்! நன்றி உங்கள் அண்ணிக்கும்.//
ஆமாம், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வந்தேன் கீதா.
அண்ணிக்கு நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன் அவர்கள் போகும் கோயில்களில் என்ன விழா நடந்தாலும் அந்த படம் எனக்கு அனுப்பி விடுவார்கள்.
ஓம் நமசிவாய சிவாய நமஹ சொல்வதையும் கேட்டேன்! ஆமாம் இங்கு நன்றாகத் தெரிகிறது. முந்தைய கோகர்ணேஸ்வரர் அதுவும் நன்றாகத் தெரிந்தது கோமதிக்கா. வீடியோவைப் பெரிசு செய்து பார்த்தேன் கணினியில்
பதிலளிநீக்குகீதா
//ஓம் நமசிவாய சிவாய நமஹ சொல்வதையும் கேட்டேன்! ஆமாம் இங்கு நன்றாகத் தெரிகிறது. முந்தைய கோகர்ணேஸ்வரர் அதுவும் நன்றாகத் தெரிந்தது கோமதிக்கா. வீடியோவைப் பெரிசு செய்து பார்த்தேன் கணினியில்//
நீக்குஇரண்டு வீடியோக்களையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா
உங்கள் வீட்டுக் கார்த்திகை தீபம் அழகு.
பதிலளிநீக்குநான் இந்த வருடம், வீட்டில் துக்கம் நிகழ்ந்ததால் பெரிதாக வைக்கவில்லை. வேண்டாம் என்று குடும்பத்தினர் சொன்னதால்.
இப்போது எல்லாம் பண்டிகை கொண்டாடுவது மலைப்பாக இருக்கிறது, நிறைவு செய்தால் ஏதோ சாதித்த நினைப்பும், நிம்மதி பெருமூச்சு ஏற்படுகிறது.//
அக்கா எனக்குமே இப்போதே வந்துவிட்டது. வீட்டில் யாரும் இல்லையே. குழந்தைகள், உறவினர்கள் இருந்தால் அது தனி. யாரும் இல்லாததால் அந்த உற்சாகம் இல்லைக்கா எனக்கு.
நீங்கள் இப்பவும் எல்லாம் கடைப்பிடிப்பது சந்தோஷமான விஷயம். கற்க வேண்டிய ஒன்று. நீங்கள், கீதாக்கா, பானுக்கா, கமலாக்கா எல்லாரும்....உதாரணங்கள்.
கீதா
//உங்கள் வீட்டுக் கார்த்திகை தீபம் அழகு.//
நீக்குநன்றி கீதா
//நான் இந்த வருடம், வீட்டில் துக்கம் நிகழ்ந்ததால் பெரிதாக வைக்கவில்லை. வேண்டாம் என்று குடும்பத்தினர் சொன்னதால்.//
ஆமாம் , வைக்க கூடாது அல்லவா சரி.
//அக்கா எனக்குமே இப்போதே வந்துவிட்டது. வீட்டில் யாரும் இல்லையே. குழந்தைகள், உறவினர்கள் இருந்தால் அது தனி. யாரும் இல்லாததால் அந்த உற்சாகம் இல்லைக்கா எனக்கு.//
எனக்கும் பிள்ளைகள் வெளியூர் போனதுமே வந்து விட்டது, இப்போது அதைவிட கஷ்டமாய் இருக்கிறது.
//நீங்கள் இப்பவும் எல்லாம் கடைப்பிடிப்பது சந்தோஷமான விஷயம். கற்க வேண்டிய ஒன்று. நீங்கள், கீதாக்கா, பானுக்கா, கமலாக்கா எல்லாரும்....உதாரணங்கள்.//
பழக்கத்தை விட முடியவில்லை கீதா.
சொக்கப்பானை எல்லாம் ஊரிலும், திருவனந்தபுரத்திலும் பார்த்ததோடு சரி. அதன் பின் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குவளாகப் பிள்ளையாரின் பின்னால் முழுநிலவா?!!!! அட! வெற்று வெளியா? நான் ஏதோ விளக்கு என்று நினைத்தேன். அழகான க்ளிக்ஸ்!
கீதா
//சொக்கப்பானை எல்லாம் ஊரிலும், திருவனந்தபுரத்திலும் பார்த்ததோடு சரி. அதன் பின் பார்த்ததில்லை.//
நீக்குபெங்களூரில் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் வைக்க மாட்டார்களா?
//வளாகப் பிள்ளையாரின் பின்னால் முழுநிலவா?!!!! அட! வெற்று வெளியா? நான் ஏதோ விளக்கு என்று நினைத்தேன். அழகான க்ளிக்ஸ்!//
மேகம் மறைத்து இருக்கிறது, அதும் கைபேசியில் எடுத்த படம், காமிரா என்றால் ஜூம் செய்து எடுக்கலாம்.
அரிசோனா நிலவின் படங்கள் சூப்பராக இருக்கின்றன கோமதிக்கா.
பதிலளிநீக்குகள்ளிச் செடியின் பின்னால் நிலவு அழகான கோணங்கள்.
கள்ளிச் செடியின் பின் புறம் பெரிதாக, கொஞ்சம் இருட்டில் வாவ் படங்கள்!
ஆமாம் நிலவு பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். படங்கள் எல்லாம் செமையா எடுத்திருக்கார் உங்க மகன்.
வல்லிம்மாவுக்கும் நிலவு ரொம்பப் பிடிக்கும். அவ்வப்போது படங்கள் எடுத்து அனுப்புவாங்க. இதைப் பார்த்தால் ரொம்ப மகிழ்வாங்க.
கள்ளிச் செடி மலை மேலே நிலவு அப்படம் நிலவு ரொம்பத் தெளிவாக இருக்கிறது அத்ன் மலைகள் நன்றாகத் தெரிகின்றன. படம் சூப்பர்
கீதா
//அரிசோனா நிலவின் படங்கள் சூப்பராக இருக்கின்றன கோமதிக்கா.
நீக்குகள்ளிச் செடியின் பின்னால் நிலவு அழகான கோணங்கள்.
கள்ளிச் செடியின் பின் புறம் பெரிதாக, கொஞ்சம் இருட்டில் வாவ் படங்கள்!//
மகனும் காமிரா கொண்டு போகவில்லை, அலைபேசியில் தான் எடுத்து இருக்கிறான்.
//ஆமாம் நிலவு பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.//
ஆமாம் முழு நிலவு பார்க்க மகிழ்ச்சி தரும் எப்போதும்.
//படங்கள் எல்லாம் செமையா எடுத்திருக்கார் உங்க மகன்.//
நன்றாக எடுப்பான்.
//வல்லிம்மாவுக்கும் நிலவு ரொம்பப் பிடிக்கும். அவ்வப்போது படங்கள் எடுத்து அனுப்புவாங்க. இதைப் பார்த்தால் ரொம்ப மகிழ்வாங்க.//
ஆமாம் , அக்காவிற்கு நிலவு மிகவும் பிடிக்கும்.
//கள்ளிச் செடி மலை மேலே நிலவு அப்படம் நிலவு ரொம்பத் தெளிவாக இருக்கிறது அத்ன் மலைகள் நன்றாகத் தெரிகின்றன. படம் சூப்பர்//
அந்த இடத்துக்கு அடிக்கடி நடந்து போவோம், சூரியன் அஸ்தமனம் அங்கு நன்றாக இருக்கும்.
அரிசோனா படங்களில், விளக்கும் விளக்கைச் சுற்ரிலும் தீபங்கள் அட்டகாசமாக இருக்கு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ...
பதிலளிநீக்குஅதற்கு அடுத்த தீபங்களின் படமும் சூப்பர்.
மகனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
பேரன் கவின் உங்களைப் போலவே இருக்கிறார், கோமதிக்கா
//வீட்டிலும் அம்மாவுக்கு உதவியாக தீபங்களை திரிகள் போட்டு தயார் செய்து கொடுத்து ஏற்றினான்.//
மகிழ்ச்சியான விஷயம்.
கோலம் மிக அழகாக இருக்கிறது. இப்பவும் நீங்கள் எல்லாம் பின்பற்றுவது சிறப்பான விஷயம்.
மருமகளின் தீபங்கள் கோலமும் நேர்த்தியாக இருக்கிறது! அழகு!
கீதா
//அரிசோனா படங்களில், விளக்கும் விளக்கைச் சுற்ரிலும் தீபங்கள் அட்டகாசமாக இருக்கு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ...//
நீக்குஆமாம், நீங்களும் ரசிப்பீர்கள் என்றுதான் அந்த படத்தை பகிர்ந்தேன்.
//அதற்கு அடுத்த தீபங்களின் படமும் சூப்பர்.
மகனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!//
நன்றி மகனிடம் சொல்கிறேன்.
//பேரன் கவின் உங்களைப் போலவே இருக்கிறார், கோமதிக்கா//
ஆமாம், அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள்.
//மகிழ்ச்சியான விஷயம்.
கோலம் மிக அழகாக இருக்கிறது. இப்பவும் நீங்கள் எல்லாம் பின்பற்றுவது சிறப்பான விஷயம்.
மருமகளின் தீபங்கள் கோலமும் நேர்த்தியாக இருக்கிறது! அழகு!//
ஆமாம், மருமகளும் எந்த ஒரு செயலையும் நல்ல ஈடுபாட்டுடன் நேர்த்தியாக செய்வாள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேனா என்பது நினைவு இல்லை. என் இளைய மகன் மதுரை கல்லூரியில் படித்ததினால், மாலை நேரங்களில் அடிக்கடி கோவிலுக்கு சென்று விட்டு வருவார். எங்கள் வீடு திருமங்கலத்தில். குழந்தைகள், கணவர் என படிப்பு, வேலை மதுரையில். விடுமுறை நாட்களிலும் அவ்வளவு தூரம் அனைவரும் சேர்ந்து பயணிக்க இயலாது என்பதினால், மதுரைக்கு நான் செல்வது ரொம்பவே அரிதாகி விட்டது. இப்படியாக போனது மதுரை வாழ்க்கை.
இப்போது தங்கள் பகிர்வால் கோவிலை தரிசித்துக் கொண்டேன். சங்காபிஷேகம் படங்கள் நன்றாக உள்ளது. கோகர்ணேஷ்வரர் கோவில் படங்களிலும் இறைவனை ஓம் நமசிவாய மந்திர உச்சாடன ஒலியுடன் காணொளியில் தரிசித்து கொண்டேன்.
தங்கள் வீட்டு திருக்கார்த்திகை படங்களும் மிக அழகாக இருக்கிறது. ஒரு பண்டிகை என வரும் போது மனதில் உற்சாகம் வருகிறது. ஆனால், அதை முடித்த மன நிறைவுடன் உடனே எங்கிருந்தோ உடல் வலிகளும், அசதிகளும் சேர்ந்தே வந்து விடுகின்றன.
இப்போது கூட இங்குள்ள அதிகமான குளிர் காரணமாக "விடாது கருப்பாக" ஜலதோஷம் இரண்டு மாதங்களாக படுத்துகிறது. இரண்டு நாட்கள் நன்றாக இருந்தால், நான்கு நாட்கள் படுத்தி எடுக்கிறது. நேற்றிலிருந்து லேசான ஜுரம் வேறு. மார்கழி மாதம் இறுதி வரையில் இன்னமும் படுத்தும். என்ன செய்வது? கடமைகளும், காலை கட்டிப்போடுகிறது. தங்கள் இறை பதிவை படித்ததும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவு அருமை.//
நன்றி.
//இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேனா என்பது நினைவு இல்லை. என் இளைய மகன் மதுரை கல்லூரியில் படித்ததினால், மாலை நேரங்களில் அடிக்கடி கோவிலுக்கு சென்று விட்டு வருவார். எங்கள் வீடு திருமங்கலத்தில். குழந்தைகள், கணவர் என படிப்பு, வேலை மதுரையில். விடுமுறை நாட்களிலும் அவ்வளவு தூரம் அனைவரும் சேர்ந்து பயணிக்க இயலாது என்பதினால், மதுரைக்கு நான் செல்வது ரொம்பவே அரிதாகி விட்டது. இப்படியாக போனது மதுரை வாழ்க்கை.//
திருமங்கலத்தில் இருந்தது பற்றி பகிர்ந்து இருக்கிறீர்கள் முன்பு. இப்போது அனைவரும் சேர்ந்து மதுரைக்கு பயணிக்க முடியாததை சொல்லி விட்டீர்கள்.
//இப்போது தங்கள் பகிர்வால் கோவிலை தரிசித்துக் கொண்டேன். சங்காபிஷேகம் படங்கள் நன்றாக உள்ளது.//
இந்த கோயில் பற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன்.
அதனால் இந்த பதிவில் நிறைய படங்கள் போடவில்லை.
//கோகர்ணேஷ்வரர் கோவில் படங்களிலும் இறைவனை ஓம் நமசிவாய மந்திர உச்சாடன ஒலியுடன் காணொளியில் தரிசித்து கொண்டேன்//
காணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி.
//தங்கள் வீட்டு திருக்கார்த்திகை படங்களும் மிக அழகாக இருக்கிறது. ஒரு பண்டிகை என வரும் போது மனதில் உற்சாகம் வருகிறது. ஆனால், அதை முடித்த மன நிறைவுடன் உடனே எங்கிருந்தோ உடல் வலிகளும், அசதிகளும் சேர்ந்தே வந்து விடுகின்றன.//
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் பண்டிகை முடிந்தபின் உடல் அலுப்பு ஏற்பட்டுவிடும்.
//இப்போது கூட இங்குள்ள அதிகமான குளிர் காரணமாக "விடாது கருப்பாக" ஜலதோஷம் இரண்டு மாதங்களாக படுத்துகிறது. இரண்டு நாட்கள் நன்றாக இருந்தால், நான்கு நாட்கள் படுத்தி எடுக்கிறது. நேற்றிலிருந்து லேசான ஜுரம் வேறு. மார்கழி மாதம் இறுதி வரையில் இன்னமும் படுத்தும். என்ன செய்வது? கடமைகளும், காலை கட்டிப்போடுகிறது. தங்கள் இறை பதிவை படித்ததும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
குளிர் ஒத்துக் கொள்ளாது என்றால் அதற்கு ஏற்ற மாதிரி தகுந்த குளிர் ஆடைகள் அணிந்து உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
இங்கு இரண்டு நாளாக போர்வெல் வாட்டர் வராமல் நல்ல தண்ணீர் கொடுத்தார்கள் . தண்ணீர் மாறி குளித்தது ஒத்துக் கொள்ளாமல் ஜலதோஷம், இருமல் இருந்தது.
சுக்கு காப்பி குடித்து கொண்டு விக்ஸ் தடவி, இருமல் மருந்து குடித்து என்று இரண்டு மூன்று நாள் கஷ்டபட்டேன். இப்போது குணம்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகார்த்திகைக்கு தங்கள் மருமகள் போட்ட கோலங்களும், தீப அலங்காரங்களும் நன்றாக உள்ளது. தங்களின் மகனுக்கு அரிசோனாவில் விநாயகர் கோவிலிலிருந்து பரிசு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. பேரன் கவினும், கோவிலில் விளக்கேற்றி அலங்கரிப்பதுடன் வீட்டிலும், அம்மாவுக்கு உதவியாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அங்கு மூவரும் பண்டிகைகளை விடாமல் கொண்டாடுவது நல்ல பண்பான செயலும் கூட.
தாங்கள் எடுத்த நிலவு படங்கள், அரிசோனாவில் எடுத்த நிலவு படங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். எனக்கும் நிலவு, சூரியன் படங்கள் வானம் தெளிவாக இருந்தால் எடுக்க விருப்பம். என் கைப்பேசியிலும், இந்த மாதிரி படங்கள் நிறைய உள்ளன. பகிர வேண்டும். அனைத்தையும் ரசித்தேன். சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//கார்த்திகைக்கு தங்கள் மருமகள் போட்ட கோலங்களும், தீப அலங்காரங்களும் நன்றாக உள்ளது. தங்களின் மகனுக்கு அரிசோனாவில் விநாயகர் கோவிலிலிருந்து பரிசு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. பேரன் கவினும், கோவிலில் விளக்கேற்றி அலங்கரிப்பதுடன் வீட்டிலும், அம்மாவுக்கு உதவியாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அங்கு மூவரும் பண்டிகைகளை விடாமல் கொண்டாடுவது நல்ல பண்பான செயலும் கூட.
நீக்குதாங்கள் எடுத்த நிலவு படங்கள், அரிசோனாவில் எடுத்த நிலவு படங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். எனக்கும் நிலவு, சூரியன் படங்கள் வானம் தெளிவாக இருந்தால் எடுக்க விருப்பம். என் கைப்பேசியிலும், இந்த மாதிரி படங்கள் நிறைய உள்ளன. பகிர வேண்டும். அனைத்தையும் ரசித்தேன். சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//
பதிவில் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நீங்கள் எடுத்த படங்களையும் முடிந்த போது பதிவில் போடுங்கள்.
அரிசோனா கோயில் தீபவரிசை மிக அழகு
பதிலளிநீக்குஅப்பா மாதிரியே கவினும் உதவி செய்வதில் இறங்கிவிட்டான் போலிருக்கிறதே
அரிசோனா புகைப்படங்கள் மிக நன்றாக இருக்கின்றன. பின்னணியில் சந்திரன் நல்லா வந்திருக்கு
வணக்கம் வாழ்க வளமுடன்
நீக்கு//அரிசோனா கோயில் தீபவரிசை மிக அழகு//
ஆமாம், அழகாய் வைத்து இருக்கிறார்கள்
//அப்பா மாதிரியே கவினும் உதவி செய்வதில் இறங்கிவிட்டான் போலிருக்கிறதே//
ஆமாம்.
//அரிசோனா புகைப்படங்கள் மிக நன்றாக இருக்கின்றன. பின்னணியில் சந்திரன் நல்லா வந்திருக்கு//
நன்றி.
சங்கு அபிஷேகம் சொக்கப்பனை படங்களையும் ரசித்தேன்
பதிலளிநீக்குஇத்தகைய சொக்கப்பனையை சிறிய வயதில் பார்த்திருக்கிறேன். இதிலிருந்து குச்சியை எடுத்து நிலத்தில் ஊன்றினால் நல்லா விளையும் என நம்புவார்கள்
//சங்கு அபிஷேகம் சொக்கப்பனை படங்களையும் ரசித்தேன்//
நீக்குநன்றி.
//இத்தகைய சொக்கப்பனையை சிறிய வயதில் பார்த்திருக்கிறேன். இதிலிருந்து குச்சியை எடுத்து நிலத்தில் ஊன்றினால் நல்லா விளையும் என நம்புவார்கள்//
ஆமாம், நம்பிக்கை
நானும் எடுத்து வந்து தொட்டி செடிகளில் வைத்து இருக்கிறேன்.
அதன் சாம்பலை எடுத்து வந்து வயல்களில் போடுவார்கள் குச்சியை நட்டு வைப்பார்கள் கண் திருஷ்டி போகும், விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை .
திருமலைக்கு போய் வந்து விட்டீர்களா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மார்கழி மாத சாற்று முறைக்கு திருமலையில் இருக்கிறீர்களா? அங்கு இருந்து கருத்து கொடுத்தமைக்கு நன்றி நெல்லை.
பதிலளிநீக்குஎங்களுக்கும் பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
30 நிமிடம் இறைவன் முன் நிற்பீர்கள் நன்றாக தரிசனம் செய்யலாம். மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.