உந்தன் மலர்ந்த முகம் என்றும் என் மனதில்
அன்று காலை அவர்கள் கையால் தேதி தாள் கிழிக்கப்படவில்லை, அந்தநாளை கிழித்து நான் பத்திரப்படுத்தி வைக்கத்தான் போலும்
இன்று என் கணவர் இறைவனிடம் சென்ற நாள். (தேதிப்படி)
அன்று வளர்பிறை ஏகாதசி திதி. கைசிக ஏகாதசி, மிகவும் சிறப்பான ஏகாதசி. அடுத்த மாதம் 1 ஆம் தேதி நினைவு நாள் வருகிறது.
சைவ குடும்பத்தை சார்ந்தவர் அவர் மறைந்த நாள் ஏகாதசி.
ஒரு வருடம் ஆனி மாதம் பன்னிருதிருமுறை பாராயணம் செய்ய ஆரம்பித்தால் அடுத்த ஆனி முடிப்பார்கள்.
புரட்டாசி மாதம் முழுவதும் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்கள் பாராயணம் செய்து நிறைவு செய்வார்கள். சஷ்டி ஆறு நாளும் விரதம் இருந்து 36 தடவை சஷ்டி கவசம் தினம் படிப்பார்கள்.
அவர்கள் இஷ்ட தெய்வம் சுவாமிமலை முருகனும், பழனி மலை முருகனும். 6 மாதத்திற்கு ஒரு முறை சுவாமிமலை போவோம், ஒரு வருடத்திற்கு ஒரு முறை பழனி மலை போவோம்.
தமிழ் வருடப்பிறப்புக்கு திருவாடுதுறை, ஆங்கில வருடப்பிறப்புக்கு கங்கை கொண்ட சோழபுரம்.
இவை பல காலம் மதுரை வரும் வரை கடைபிடித்தார்கள்.
அன்று சுவாமிமலை ஸ்ரீ முருகபெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தவர் அழைத்து சென்று விட்டார் தன் பக்தரை என்று நினைத்துக் கொள்வேன்.
பத்ரிநாத் கோயிலையும், கைலையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்தோம். (சார் தம் யாத்திரை)
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை~//
//நீங்கள் எப்போதும் அவருடன் செல்வீர்களே. நீங்கள் எப்படி பள்ளிப்படை பார்க்காமல் விட்டீர்கள்?
நேரம் கிடைத்தால் அவர் கையேட்டை வைத்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி//
நெல்லை கேட்டு இருந்தார் அவர் பதிவில். அதனால் கணவரின் நினைவு நாளில் அவர்களின் கையேட்டை பதிவு செய்து விட்டேன்.
நெல்லைத்தமிழன் கேட்டுக் கொண்டதால் நானும் வெகு நாள் பதிய நினைத்து இருந்தேன் இன்று நினைவுகள் பகிர்வில் பகிர்ந்து விட்டேன். இன்னும் இருக்கிறது பின்னர் வரும்.
பழையாறை பற்றிய குறிப்பும் இருந்தது அதுவும் பார்த்து போடுகிறேன்.
நெல்லைத்தமிழனுக்கு நன்றிகள் பல.
என் கணவர் நான் அம்மா வீட்டுக்கு பேறுகாலத்திற்கு போய் இருக்கும் போது நிறைய கோயில்கள் போய் இருக்கிறார்கள். அப்புறம் குழந்தைகளை வைத்து கொண்டு பஸ்ஸில் பயணம் செய்ய முடியாத காலத்தில் அவர்கள் மட்டும் போய் வந்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் போக்குவரத்து அவ்வளவு வசதி இருக்காது . சில கோயில்கள் சைக்கிளில் போவார்கள், நண்பர்களுடன் போவார்கள். நிறைய தூரம் பஸ்சைவிட்டு இறங்கி நடக்க வேண்டும் உன்னால் முடியாது பிள்ளைகளை வைத்து கொண்டு என்று அவர்கள் மட்டுமே போய் இருக்கிறார்கள்.
பின்னால் காரில், ரயிலில், விமானத்தில் என்று வசதியாக பல கோயில்களுக்கு அவர்கள் என்னை அழைத்து போகும் வாய்ப்பை இறைவன் அளித்தார். இறைவனுக்கு நன்றி.
நான் அவர்களுடன் கோயிலுக்கு போன தை டி.ஜி
இந்த பட்டியலில் நான் பார்த்தது , பிள்ளைகள் பார்த்தது, அவர்கள் டி.கே என்று இருக்கும்.
ஆங்கிலத்திலும் எழுதி இருப்பார்கள்.
பாடல் இடம்பெற்ற 274 கோயில் வரலாறு, போகும் வழி தடங்கள் ஆகியவை சொல்லும் புத்தகம்.

அவர்களெ கோயிலின் தோற்றத்தை, மற்றும் கோயிலில் தெய்வங்கள் பற்றி குறிப்பு எழுதி வைத்து இருப்பர்கள்.

தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக