காவேரி அம்மன்
நேற்று கார்த்திகை முதல் சோமவார சங்காபிஷேகம்
அம்மா வீட்டுக்கு அருகில் இருக்கும் கோகர்ணேஸ்வர்ர் கோயிலில் நடந்த சங்காபிஷேகம் நிகழ்வை மதினி அனுப்பி வைத்தார்கள்.
வீட்டிலிருந்தே தரிசனம் செய்து விட்டேன்.
மதினி வீட்டு காவேரி அம்மன் படமும் இருக்கிறது . தங்கை மதினி வீட்டு பூஜையில் கலந்து கொண்டு காவேரி அம்மன் படம் அனுப்பி வைத்தாள்.
ஜப்பசி மாதம் முழுவதும் காவேரிஅம்மன் கொலு இருப்பாள் மதினி இல்லத்தில் , நிறைவு நாளில் எடுத்த படம் .
இந்த பதிவில் மதினி அனுப்பிய சங்காபிஷேக படங்கள் இடம்பெறுகிறது அவர்கள் வீட்டு காவேரி அம்மன் படங்களும் இடம் பெறுகிறது.
மதினி ( என் அண்ணன் மனைவி ) ஐப்பசி முப்பது நாளும் காவேரி அம்மன் வைத்து வழிபடுவார்கள், கடைசி நாள் அன்று உறவு, நட்புகளை அழைத்து உண்வு அளிப்பார்கள். அம்மன் கிளம்புவதால் கட்டுசாதங்கள் இருக்கும். அவை பிரசாதமாக வைத்து இருக்கிறார்கள்.
தினம் அபிஷேகம் செய்து வித விதமாக ஆடை அணிவிப்பார்கள்.
மேலே உள்ளது ஒரு நாள் எடுத்தது, அண்ணன் மகன் தினம் வாட்சப்பில் படம் அனுப்பி வைப்பான்.
மதினியிடம் கோயிலுக்கு போக முடியவில்லை முன்பு சங்காபிஷேகம் பார்க்காமல் இருக்க மாட்டேன், இப்போது எல்லா விழாக்களையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் கோயிலுக்கு போனால் படம் எடுத்து அனுப்புங்கள் என்றேன். அனுப்பி வைத்தார்கள் நேரில் தரிசனம் செய்தது போல இருந்தது.
அதன் பின் மயிலாடுதுறை வந்தபின் மயூரநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் , வாரம் ஒரு கோயில் பக்கத்தில் இருக்கும் திருவிடை மருதூர் , திருக்கடையூர், என்று அழைத்து சென்று காட்டினார்கள். அப்புறம் மயிlலாடுதுறை புனுகீஸ்வரார் கோயிலில் வாரா வாரம் சங்காபிஷேகம் பார்த்து விடுவோம்.
அதன் பின் மதுரை வந்த பின் பல கோயிலில் பார்த்தோம் இப்போது வீட்டில் தொலைகாட்சியில் , யூடியூப் மூலம் பார்த்து கொண்டு இருக்கிறேன். அண்ணி அனுப்பி வைத்த படங்கள் காணொளி மூலம் இந்த முறை நன்றாக தரிசனம் செய்து விட்டேன். கால் வலி குறைந்து விட்டால் ஏதாவது ஒரு வாரம் பக்கத்தில் இருக்கும் கோயில் போய் பார்க்க வேண்டும் . அவன் அருள் இருந்தால் நடக்கும்.
என் கணவரின் அண்ணா வீட்டில் அவர்கள் நாள் தோறும் சிவபூஜை செய்யும் சிவனுக்கு சங்காபிஷேகம்
நேற்று சோமாவார விரதம் இருந்து மாவிளக்கு பார்த்தது. மாவிளக்கு எரியும் போது போட்டோ எடுக்க மறந்து விட்டேன் பூஜை முடிந்ததும் எடுத்த படம்.
விரதங்களும், உடல்நலமும் :- பதிவில் என் அம்மாவும் விரதங்களும் என்று எழுதி இருப்பேன். விரதங்களும் அதன் பலன்களும் எழுதி இருப்பேன் படிக்கவில்லை என்றால் படிக்கலாம். கார்த்திகை மாதம் சோமாவார விரதம் பற்றி எழுதி இருப்பேன். என் அம்மாவும் விரதங்களும்: எப்படி விரதம் இருக்க வைத்தார்கள் எப்படி கடைபிடித்தோம் என்பதையும் விரதங்களால் ஏற்படு நன்மைகள் விரத பலன்கள் எல்லாம் எழுதி இருப்பேன் படிக்கவில்லை என்றால் நேரம் இருந்தால் படிக்கலாம்.
//கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)
வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைபிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.
பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை.அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று இருக்கும்.பூஜை முடிந்தபின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின் தான் எங்களுக்கு உணவு.
அப்பாதான் ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’ என்பார்கள். //
இந்த ஆண்டு தமிழ் சங்கத்தில் நடந்த தீபாவளி பண்டிகை விழா சரவெடி என்ற விழாவில் மகனின் தமிழ்ச்சங்க சேவைக்கு பரிசு அளித்து கெளவரவப் படுத்தி இருக்கிறார்கள்
சாக்லேட் கொடுத்து இருக்கிறார்கள் "இனிப்பு எடு கொண்டாடு" என்று.
சரவெடி விழாவில் பணி செய்த தன்னார்வலர்கள், தமிழ் சங்கத்தில் ஆசிரியர்கள்
தமிழ் பள்ளியில் ( உதவி ஆசிரியர்) ஆசிரியர்களுக்கு உதவியளாராக இருக்கிறான் கவின். மற்ற குழந்தைகளும் தாம்.
நவம்பர் மாதம் என் இரு பிள்ளைகளுக்கும் பிறந்த நாள் வரும். மகள் கார்த்திகை சூரசம்ஹாரம் அன்று பிறந்தாள். (தேதிப்படி நவம்பர் 19 இந்திராகாந்தி பிறந்த தேதியில் பிறந்தாள்.)
கண்ணே கண் உறங்கு
செல்ல பெண்ணே நீ கண் உறங்கு
பூவே கண் உறங்கு
பூவின் தேனே நீ கண் உறங்கு
பொண்ணே கண் உறங்கு
தங்க பொண்ணே நீ கண் உறங்கு
மானே கண் உறங்கு
மானின் விழியே நீ கண் உறங்கு
விழியே கண் உறங்கு
கயல்விழியே நீ கண் உறங்கு
செல்ல பெண்ணே நீ கண் உறங்கு
பூவே கண் உறங்கு
பூவின் தேனே நீ கண் உறங்கு
பொண்ணே கண் உறங்கு
தங்க பொண்ணே நீ கண் உறங்கு
மானே கண் உறங்கு
மானின் விழியே நீ கண் உறங்கு
விழியே கண் உறங்கு
கயல்விழியே நீ கண் உறங்கு
என்று மகளுக்கு நானே தாலாட்டு பாடல் எழுதி எல்லாம் வைத்துக் கொள்ளாமல் பாடினேன், வேறு சில சினிமா பாட்டுக்களும், கடவுள் பாட்டுக்களும் பாடியது இருக்கும். மகள் பிறந்தாள் சமயம் பதிவு போட்டேன்.
ஸ்ரீராம் //என் பாஸ் கூட நவம்பரில் பிறந்தவர்தான்! என் அம்மா பாடிய சில தாலாட்டுப் பாடல்கள் மங்கலாக நினைவில் இருக்கின்றன. எனக்குப் பாடியது என்னவென்று தெரியாது. என் தங்கைக்கு பாடும்போது கேட்டது! //
என்று பின்னூட்டம் போட்டு இருப்பார். எவ்வளவு பேர்கள் இந்த பதிவை படித்து பின்னூட்டம் போட்டு இருக்கிறார்கள்.
அந்தக்காலம் இனிமையானது.
பிறகு பேரனுக்கு(கவினுக்கு) தாலட்டு பாடியது எல்லாம் இருக்கும் படித்து இருக்க மாட்டீர்கள் படித்துப்பாருங்கள்.
இதே பாடல்களை அவர்கள் குழந்தைகளுக்கு பாடினேன்.
செல்ல தங்கமே செல்ல குட்டியே
செல்ல தங்கமே செல்லம் செல்லம்
வைர தங்கமே வைர குட்டியே
வைர தங்கமே வைரம் வைரம்
பொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே
பொண்ணு தங்கமே தங்கம் தங்கம்
செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
விழுந்து விழுந்து சிரிப்பான்.
செல்ல தங்கமே செல்லம் செல்லம்
வைர தங்கமே வைர குட்டியே
வைர தங்கமே வைரம் வைரம்
பொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே
பொண்ணு தங்கமே தங்கம் தங்கம்
செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
விழுந்து விழுந்து சிரிப்பான்.
மகன் தஞ்சை ராஜராஜசோழன் பிறந்த அன்று பிறந்தான்.
மகனுக்கு பிறந்த நாள் முடிந்து விட்டது, மகளுக்கு நாளை உங்கள் வாழ்த்துகளும் தேவை வாழ்த்துங்கள் நட்புகளே!
சதயத்திருநாள் என்ற பதிவில் ராஜராஜனைப்போல கோயில் கட்ட ஆசைப்பட்டு சாக்பீஸ் கோயில் கட்டினான் என்று பதிவு போட்டு இருப்பேன்.
இது மகன் பிறந்தநாள் சமயம் போட்ட பதிவு.
மேலும் படங்கள் அந்த பதிவு சுட்டியில் பார்க்கலாம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------




.jpg)
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக