அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன் இந்த பதிவில் பதிவு செய்யப்பட்ட படங்கள் பல வருடங்களாக நான் பாதுகாத்து வைத்து இருப்பது. நான் 10 வது படிக்கும் போது(1971)விருப்பபாடமாக வரலாற்றை தேர்ந்து எடுத்தேன். அப்போது தயார் செய்தது.
நம் சக பதிவர் நெல்லைதமிழன் அவர்கள் எங்கள் ப்ளாக்கில்
நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் என்று ஒவ்வொரு ஞாயிறும் பதிவு போட்டு வருகிறார். வரலாறு சொல்லி அவர் பார்த்த கோயில் படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த வார பதிவில் சோழர் வரலாறு சொல்கிறார். யாருக்கு பின் யார் என்று அவர்கள் ஆண்ட காலம் எல்லாம் வரிசை படுத்தி இருந்தார்.
உங்கள் பதிவை படித்தவுடன் (அவருக்கு கொடுத்த பின்னூட்டத்தில்) நான் 10ம் வகுப்பில் வரலாற்றை விருப்பபாடமாக எடுத்த போது இப்படி அரசர்கள் ஆண்ட காலத்தை இந்திய வரைபடத்தில் அவர்கள் ஆண்ட பகுதிகளை குறித்ததும், யாருக்கு பின் யார் என்று அட்டவணைபடுத்தியதும் நினைவுக்கு வந்து பகிர ஆசை என்றேன். நெல்லைத்தமிழன் அவர்கள்
//நீங்கள் ஆவணப்படுத்தி வைத்திருப்பீங்க , நிச்சியம் பகிருங்கள்'// என்றார். அதுதான் இந்த பதிவு பிறந்த கதை.