வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

வரலாறு முக்கியம்


அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்  இந்த பதிவில் பதிவு செய்யப்பட்ட  படங்கள் பல வருடங்களாக நான் பாதுகாத்து வைத்து இருப்பது.  நான் 10 வது படிக்கும் போது(1971)விருப்பபாடமாக வரலாற்றை தேர்ந்து எடுத்தேன். அப்போது தயார் செய்தது.

நம் சக பதிவர் நெல்லைதமிழன் அவர்கள்  எங்கள் ப்ளாக்கில் 

நாங்கள் தரிசனம் செய்த  கோயில்கள் என்று ஒவ்வொரு ஞாயிறும்    பதிவு போட்டு வருகிறார்.   வரலாறு  சொல்லி அவர் பார்த்த கோயில் படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த வார பதிவில்  சோழர் வரலாறு சொல்கிறார்.  யாருக்கு பின் யார் என்று  அவர்கள் ஆண்ட காலம் எல்லாம்   வரிசை படுத்தி இருந்தார்.

உங்கள் பதிவை படித்தவுடன் (அவருக்கு கொடுத்த பின்னூட்டத்தில்)  நான் 10ம் வகுப்பில் வரலாற்றை விருப்பபாடமாக எடுத்த போது இப்படி அரசர்கள்  ஆண்ட காலத்தை  இந்திய வரைபடத்தில் அவர்கள் ஆண்ட பகுதிகளை குறித்ததும், யாருக்கு பின் யார் என்று அட்டவணைபடுத்தியதும் நினைவுக்கு வந்து பகிர ஆசை என்றேன்.  நெல்லைத்தமிழன் அவர்கள் 

//நீங்கள் ஆவணப்படுத்தி வைத்திருப்பீங்க , நிச்சியம் பகிருங்கள்'// என்றார். அதுதான்  இந்த  பதிவு பிறந்த கதை.


அக்கா வரைந்து தந்தது

வரலாற்றை அறிந்து கொள்ள உதவிய அடிப்படை சான்றுகள்

பழைய கற்கால மனிதர்கள், புதிய கற்கால மனிதர்கள் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க முடிகிறதா என் எழுத்து நன்றாக இருக்காது.

சிந்துவெளி நாகரீகம்



பழைய , புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்

இந்த படத்தையும் என் அக்கா வரைந்து தந்தார்கள்.


சிந்துவெளியில் 600க்கும் அதிகமான முத்திரைகள் கிடைத்தைப்பற்றி, அவை எப்படி இருந்தது, அவர்கள் முத்திரையில் எழுதிய சித்திர எழுத்துக்கள், குறிப்புகள் காணப்படுகின்றன. முதலில் இடமிருந்து வலமாகவும், பின்பு வலமிருந்து இடமாகவும்   எழுதினார்கள். பிராமி வகையை சார்ந்த எழுத்துக்கள் என்று பேராசிரியர் வாங்கடன் கருதுகிறார், இன்னும் விளக்கப்படவில்லை.

சமயம் :-

சிவனையும் சக்தியையும் வணங்கினர், முத்திரை ஒன்றில் சிவன் தவக்கோலமுறையில் அமர்ந்து இருப்பது போல காணப்படுகிறது.  மீதியை படித்து பாருங்கள்

படிக்க முடியும் என்று நினைக்கிறேன்.


கம்பிளி ஆடைக்கு அம்மா சின்னதாக உள்ளன் நூல் வைத்து பின்னி தந்தார்கள். நானும் அம்மாவிடம் கற்றுக் கொண்டு ஸ்வெட்டர், உள்ளன் ஸ்கார்ப் போன்றவை பின்னி இருக்கிறேன். முன்பு ஒரு பதிவில் படம் போட்டு இருக்கிறேன்.


வேதகாலம், இதிகாச காலம்

பழைய இந்து இராச்சியங்கள்.








இந்தக் காலத்தில் திட்டப்பணி என்று குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அவர்களுக்கு பெற்றோர்கள் உதவுகிறார்கள். அப்படி அந்தக்காலத்தில் எனக்கு என் அம்மா, அக்கா உதவினார்கள், அண்ணன் பழைய புத்தகத்தில் உள்ள படங்களை வெட்டி கொடுத்தார்கள். என் கணவர்  கூட படம் வரைந்து கொடுத்து  உதவி இருக்கிறார்.


இந்த படம் என் கணவர் வரைந்து தந்தது.  அப்போது அவர்கள் என் அக்காவின் கொழுந்தன். என் அக்கா கணவரின் தம்பி.
என் அக்காவிடம் சாஞ்சி ஸ்தூபி வரைந்து தர சொன்னேன், அக்கா தன் கொழுந்தன் நன்றாக படம் வரைவார் என்று அவர்களிடம் கேட்டு வரைந்து வந்து தந்தாள் அதை அப்படியே நோட்டில் ஒட்டி வைத்தேன்.


என் கணவர் வரைந்து தந்த அந்த படத்தினால் தான் 25க்கு 12 மார்க் கிடைத்தது. இல்லையென்றால் இன்னும் கூட மார்க் குறைவாக வந்து இருக்கும்.     என் எழுத்தை படிக்கவே ஆசிரியருக்கு  கஷ்டமாக இருந்து இருக்கும் நல்ல குண்டு குண்டாய் எழுதினால் என்ன என்று கேட்பார்கள்.  அப்படி எழுதவே வராது எனக்கு.

 
நெல்லை தமிழன் அவர்களிடம் பதிவு போட வேண்டும் என்று சொன்னேன், இங்கு இந்த பதிவில் அவர் சுட்டி கொடுத்தேன், அடுத்த பதிவு அவர் போடுவதற்குள் பதிவை போட்டு விட வேண்டும் என்று போட்டு விட்டேன்.

இன்று  எங்கள் திருமண நாள் அதனால் அவர்கள் நினைவுகளை தரும் இந்த பதிவை இங்கு பகிர்ந்து விட்டேன்.

வரலாறு முக்கியம் என்று என் வரலாற்றையும் இணைத்து விட்டேன்
திருமண நாள் 1973 ஆம்  ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி.

படிப்பு தடை பட்டு திருமணத்திற்கு பிறகு என் கணவர்  பள்ளியில் சேர்த்து படிக்க வைத்த கதைகள் பழைய பதிவுகளில் படித்து இருப்பீர்கள். பள்ளிவிழாக்களுக்கு எனக்காக சாட்பேப்பரில் படங்கள் வரைந்து தருவார்கள்.

  என் கணவர்  கல்லூரியில் சுற்றுலா போன போது எழுதி வைத்து இருந்ததை நான் பதிவாக்கியது நினைவு இருக்கலாம் உல்லாசபயணம் - 2 என்ற பதிவில்  சாஞ்சி ஸ்துபியை வரைந்து இருப்பார்கள்.


நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சாஞ்சியில் அமைந்துள்ள ஸ்தூபிகள் ,புத்தவிகாரம்  பற்றிய வரலாறு  பதிவில் இடம்பெறுகிறது











இந்த அட்டவணை பதிவுக்கு 10க்கு 6 மதிப்பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள்

யாருக்கு பின் யார் ஆண்டார்கள் என்று அட்டவணை படுத்தி எழுதி இருக்கிறேன் என்று நெல்லைத்தமிழன் அவர்களிடம் சொன்னதற்கு   சான்று . அவர் மாமல்லபுரம் பதிவு போட்ட பொழுதே நான்பதிவு  போட வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை. பல்லவர்கள் பற்றி எழுதி வைத்தது இன்னொரு பதிவில்.

 சிந்துவெளி நாகரீகத்திற்கு பின் பாடத்தில் பண்டைய தமிழக அரசுகள் தான். அதை அடுத்த பதிவில்.


அடுத்த பதிவில் பண்டைய தமிழக அரசுகளை பற்றிப்பார்ப்போம். 


//வணக்கம் அம்மா,
வலைப்பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
நீங்க ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுபுத்தகத்டிலே கிறுக்கிந்தை இனிமேல் வலைப்பதிவுகள் மூலமாக பதியுங்கள்.. இது கிழியாது,செதிலரிக்காது..எப்பவுமே பர்மனெண்ட்..

வாழ்த்துக்கள்
மேலும் மேலும் பதியுங்கள்
தீபா கோவிந்த்//


இப்படி என் முதல் பதிவில் கிளிகோலத்தில் தீபா வந்து சொன்னார். அது இப்போதுதான் நிறைவேறி உள்ளது படிச்ச காலத்தில் நோட்டுபுத்தகத்தில் கிறுக்கியதை பதிந்து விட்டேன். நோட்டுப்புத்தகம் கிழிய ஆரம்பித்து விட்டது. அட்டை எல்லாம் போய் விட்டது. பக்கங்களும் கிழிய ஆரம்பித்து விட்டது. 


வரலாறு தொடர்வதை படிக்க விருப்பமா என்று சொல்லுங்கள்.




வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

46 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. சகோதரர் நெல்லைத் தமிழருக்கு நீங்கள் தந்த கருத்தையும், பதிலுக்கு அவர் சொன்ன கருத்தையும் நானும், எ. பியில் படித்தேன்.

    நீங்கள் உங்கள் வேலைகளுக்கு நடுவில், ஒரு வார காலத்தில் உடனே இப்பதிவை தயார் செய்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களை உழைப்பை கண்டு பெருமிதமும் கொள்கிறேன்.

    /பழைய கற்கால மனிதர்கள், புதிய கற்கால மனிதர்கள் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க முடிகிறதா என் எழுத்து நன்றாக இருக்காது./

    ஏன் அப்படி சொல்கிறீர்கள்.? உங்கள் கையெழுத்து நன்றாகவே அதுவும் தெளிவாகவே உள்ளது. நானும் பள்ளியிறுதியில், விருப்ப பாடமாக சரித்திரந்தான் எடுத்திருந்தேன். மற்ற பாடங்களை விட அதற்கு நிறைய எழுத வேண்டும். அப்போது எழுதி கைகள் கூட சோர்வு கொள்ளும். ஆனால், சரித்திரங்கள் நம்மை வியக்க வைத்து மனதில் உற்சாகம் கொள்ள வைக்கும். இப்போதும் சகோதரர் நெல்லைத் தமிழரின் எழுத்து நடையில் வாரவாரம் சோழ சாம்ராஜ்யத்தை படிக்கும் போது மனது உற்சாகமடைகிறது.

    நீங்கள் தொகுத்த படங்கள் எழுதிய கோப்புகள் எல்லாமே நன்றாக உள்ளது. முதல் படத்தில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய நாணயங்களை படம் வரைந்து நன்றாக தெளிவு படுத்தியுள்ளீர்கள். நான் இந்தளவிற்கு இப்படியான தொகுப்பிற்கு ஆர்வங்கள் காட்டவில்லை என்பது உண்மை. இன்னமும் அத்தனை படங்களையும் பெரிதாக்கி படித்து விட்டு வருகிறேன் சகோதரி. உங்கள் உழைப்பிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //அருமையான பதிவு. சகோதரர் நெல்லைத் தமிழருக்கு நீங்கள் தந்த கருத்தையும், பதிலுக்கு அவர் சொன்ன கருத்தையும் நானும், எ. பியில் படித்தேன்.//

      ஆமாம், நெல்லைத்தமிழருக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

      /ஏன் அப்படி சொல்கிறீர்கள்.? உங்கள் கையெழுத்து நன்றாகவே அதுவும் தெளிவாகவே உள்ளது//

      ஆஹா! மகிழ்ச்சி என் எழுத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு.

      //நானும் பள்ளியிறுதியில், விருப்ப பாடமாக சரித்திரந்தான் எடுத்திருந்தேன். மற்ற பாடங்களை விட அதற்கு நிறைய எழுத வேண்டும். அப்போது எழுதி கைகள் கூட சோர்வு கொள்ளும்.//

      பள்ளி இருதியிலா? நான் படிக்கும் போது 10ம் வகுப்பில் தான் விருப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

      10 வகுப்பு ஆண்டு இறுதியில் இதை ஒப்படைக்க வேண்டும். வரலாற்றை விருப்பபாடமாக எடுத்த அத்தனை பேரும் செய்தாக வேண்டும். என் தோழி ஒருத்தி புத்தரை பற்றி சொல்ல பெரிய புத்தர் படத்தை நோட்டில் ஒட்டி அதன் உள்ளே அவரின் கொள்கைகளை எழுதி இருந்தாள். அது கூட என்னிடம் இருந்தது தேடி பார்க்க வேண்டும் கிடைத்தால் பகிர்கிறேன்.
      இதற்கு மார்க் இருக்கிறது அதையும் கணக்கில் சேர்த்து கொள்வார்கள்.

      //நீங்கள் உங்கள் வேலைகளுக்கு நடுவில், ஒரு வார காலத்தில் உடனே இப்பதிவை தயார் செய்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களை உழைப்பை கண்டு பெருமிதமும் கொள்கிறேன்.//

      தினம் கொஞ்சமாக வலை ஏற்றி இந்த பதிவை முடித்தேன்.

      //சரித்திரங்கள் நம்மை வியக்க வைத்து மனதில் உற்சாகம் கொள்ள வைக்கும். இப்போதும் சகோதரர் நெல்லைத் தமிழரின் எழுத்து நடையில் வாரவாரம் சோழ சாம்ராஜ்யத்தை படிக்கும் போது மனது உற்சாகமடைகிறது.//

      ஆமாம்.

      //நீங்கள் தொகுத்த படங்கள் எழுதிய கோப்புகள் எல்லாமே நன்றாக உள்ளது. முதல் படத்தில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய நாணயங்களை படம் வரைந்து நன்றாக தெளிவு படுத்தியுள்ளீர்கள்.//

      நன்றி.

      //நான் இந்தளவிற்கு இப்படியான தொகுப்பிற்கு ஆர்வங்கள் காட்டவில்லை என்பது உண்மை//

      கட்டாயமாக பள்ளியில் கேட்டு இருந்தால் நீங்களும் செய்து இருப்பீர்கள்.

      //இன்னமும் அத்தனை படங்களையும் பெரிதாக்கி படித்து விட்டு வருகிறேன் சகோதரி. உங்கள் உழைப்பிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நேஅரம் கிடைக்கும் போது படிக்கலாம் கமலா.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  2. அக்கா, முதல்ல இதெல்லாம் சேர்த்து பத்திரமாக வைத்திருப்பதே பெரிய விஷயம். வரலாறுமுக்கியமாச்சே!!!!!!! அதான் உங்க வரலாறும்!!

    நான் இப்படி வைத்தவை எல்லாம் வீடுகள் மாறி மாறி பல ஊர்கள் சென்றதில் போயே போச்! நான் செய்த கைவேலைகள், ஓவியங்கள், எடுத்து வைத்திருந்த பல கட்டுரைகள், நான் எழுதியவை, பள்ளி கல்லூரி விஷயங்கள் என்று அனைத்தும்...

    உங்கள் சேமிப்பைப் பார்த்ததும் ஆஹா என்று மனதில் சொல்லிக் கொண்டேன்! இங்கும் எழுத்தில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா, முதல்ல இதெல்லாம் சேர்த்து பத்திரமாக வைத்திருப்பதே பெரிய விஷயம். வரலாறுமுக்கியமாச்சே!!!!!!! அதான் உங்க வரலாறும்!!//

      ஆமாம், கீதா வரலாறு முக்கியமாச்சே!

      //நான் இப்படி வைத்தவை எல்லாம் வீடுகள் மாறி மாறி பல ஊர்கள் சென்றதில் போயே போச்! நான் செய்த கைவேலைகள், ஓவியங்கள், எடுத்து வைத்திருந்த பல கட்டுரைகள், நான் எழுதியவை, பள்ளி கல்லூரி விஷயங்கள் என்று அனைத்தும்...//

      நீங்கள் சொல்லி இருந்தீர்கள். உங்கள் நினைவில் உள்ளதை பகிருங்கள்.

      நானும் நாலு வீடு, மூன்று ஊர் மாறி வந்து இருக்கிறேன் கீதா , பத்திரபடுத்தி வைத்து இருப்பது அதிகம்.

      //உங்கள் சேமிப்பைப் பார்த்ததும் ஆஹா என்று மனதில் சொல்லிக் கொண்டேன்! இங்கும் எழுத்தில்!//

      நன்றி கீதா,

      நீக்கு
  3. எங்களுக்கும் இந்திய வரைபடம் அவுட் லைன் மட்டும் போட்டிருக்கும் மேப் தாள் / நோட்டு வாங்கி வரச் சொல்லி அதில் அரசர்கள் ஆண்டதை எல்லையைக் குறிப்பிட்டு வரைய வேண்டும். அதை வித்தியாசப்படுத்த வர்ணம் கொடுக்க வேண்டும் அதில் அரசர் யார் காலம் எல்லாம் எழுத வேண்டும்.

    கற்காலம் புதிய கற்கால மனிதர்கள் வாசிக்க முடிகிறது கோமதிக்கா. இதைப் பற்றி ஒரு புத்தகமும் வாசித்தேன் யார் எழுதியது என்பது நினைவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்களுக்கும் இந்திய வரைபடம் அவுட் லைன் மட்டும் போட்டிருக்கும் மேப் தாள் / நோட்டு வாங்கி வரச் சொல்லி அதில் அரசர்கள் ஆண்டதை எல்லையைக் குறிப்பிட்டு வரைய வேண்டும். அதை வித்தியாசப்படுத்த வர்ணம் கொடுக்க வேண்டும் அதில் அரசர் யார் காலம் எல்லாம் எழுத வேண்டும்.//

      ஆமாம், பரீட்சையில் மன்னர்கள் ஆண்ட பகுதி, ஊர் எல்லாம் குறிக்க சொல்வார்கள். அதில் நிறைய மார்க் வாங்கி விடுவேன்.

      கற்காலம் புதிய கற்கால மனிதர்கள் வாசிக்க முடிகிறது கோமதிக்கா.//

      நன்றி.

      //இதைப் பற்றி ஒரு புத்தகமும் வாசித்தேன் யார் எழுதியது என்பது நினைவில்லை.//

      நிறைய படிப்பதால் இப்படி மறந்து விடும் சில நேரம், நினைவு வரும் போது சொல்லுங்கள்.

      நீக்கு
  4. சிந்துசமவெளி நாகரிகம் -நீங்க கொடுத்திருக்காப்ல இப்படித்தான் அந்த மேப் இருக்கும் அதில் கடலுக்கு நீலம் மலைகளுக்கு பச்சை மக்கள் இருந்த பகுதிக்கு ப்ரௌன் என்று அவுட் லைனுக்கு நீங்க கொடுத்திருக்கால்ப இப்படி பென்சில் அல்லது ஸ்கெச் பென்னால் திக்காகக் கொடுப்பது....டிட்டோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிந்துசமவெளி நாகரிகம் -நீங்க கொடுத்திருக்காப்ல இப்படித்தான் அந்த மேப் இருக்கும் அதில் கடலுக்கு நீலம் மலைகளுக்கு பச்சை மக்கள் இருந்த பகுதிக்கு ப்ரௌன் என்று அவுட் லைனுக்கு நீங்க கொடுத்திருக்கால்ப இப்படி பென்சில் அல்லது ஸ்கெச் பென்னால் திக்காகக் கொடுப்பது....டிட்டோ!//

      எங்களுக்கு கலர் பென்சில் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும் கீதா.

      நீக்கு
  5. உங்கக் கையெழுத்து அழகா இருக்கு.

    உங்க அக்கா அழகா வரைஞ்சு கொடுத்திருக்காங்க, கோமதிக்கா.

    எங்கள் வீட்டில் நான் தான் எல்லாருக்கும் ரெக்கார்ட் வரைந்து கொடுப்பதாக இருந்தது.

    சிந்துவெளி நாகரிகம் பற்றிய குறிப்புகள் இதே தான். பசுபதி...அதற்கு முன்னர் கற்கால மனிதர்கள் சூரியனை இறைவனாக வழிபட்டனர் சூரியன் இல்லையேல் உலகமே இல்லை என்பதை உணர்ந்து. அதன் பின் லிங்க வழிபாடு...அதன் பின் சிவ உருவங்கள் சக்தி உருவங்கள் என்று....

    உங்கள் எழுத்து நன்றாகப் புரிகிறது கோமதிக்கா.

    இப்படியேதா ந் வெட்டி ஒட்டி அவை என்ன என்று எழுதி....

    ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கக் கையெழுத்து அழகா இருக்கு.

      உங்க அக்கா அழகா வரைஞ்சு கொடுத்திருக்காங்க, கோமதிக்கா.//

      நன்றி கீதா

      //எங்கள் வீட்டில் நான் தான் எல்லாருக்கும் ரெக்கார்ட் வரைந்து கொடுப்பதாக இருந்தது.//

      எங்கள் வீட்டில் என் அக்கா தான் எல்லோருக்கும் கணக்கு, மற்றும் ரெக்கார்ட் நோட் செய்து தருவது.

      //சிந்துவெளி நாகரிகம் பற்றிய குறிப்புகள் இதே தான். பசுபதி...அதற்கு முன்னர் கற்கால மனிதர்கள் சூரியனை இறைவனாக வழிபட்டனர் சூரியன் இல்லையேல் உலகமே இல்லை என்பதை உணர்ந்து. அதன் பின் லிங்க வழிபாடு...அதன் பின் சிவ உருவங்கள் சக்தி உருவங்கள் என்று....//

      ஆமாம்.

      //உங்கள் எழுத்து நன்றாகப் புரிகிறது கோமதிக்கா.

      இப்படியேதா ந் வெட்டி ஒட்டி அவை என்ன என்று எழுதி....

      ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க கோமதிக்கா.//

      நன்றி கீதா


      நீக்கு
  6. இதே வரிசைப்படிதான்...வேதகாலம் இதிகாச காலம்.....அசோகர் பிந்துசாரர்....இப்படித்தான் கோடுகள் போட்டும் வரைவதுண்டு.

    ஆமாம் இப்ப திட்டப்பணின்னு கொடுக்கறாங்க. நான் மகனுக்கும் உதவியிருக்க்றேன் ஆனால் எங்களுக்கு எந்தவித உதவியும் கிடைத்ததில்லை. நாங்களேதான் வான்கி வரைந்து படங்கள் சேகரித்து, அதை வாங்க பைசா கேட்டால் சட்டுனு தரமாட்டாங்க.....இத்தனைக்கும் 1 பைசா 5 பைசா சமாச்சாரங்கள் ஆனால் அது அப்ப வேல்யூ கூடுதல். அதனால் டக்குனு தரமாட்டாங்க. அதுவும் பத்துபைசா என்றால் அவ்வளவுதான்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதே வரிசைப்படிதான்...வேதகாலம் இதிகாச காலம்.....அசோகர் பிந்துசாரர்....இப்படித்தான் கோடுகள் போட்டும் வரைவதுண்டு.//

      ஓ சரி.

      //ஆமாம் இப்ப திட்டப்பணின்னு கொடுக்கறாங்க. நான் மகனுக்கும் உதவியிருக்க்றேன்//

      நல்லது கீதா

      மகன், மகள் எல்லாம் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள் அவர்களே செய்து கொண்டார்கள். என்னை எந்த தொந்திரவும் செய்தது இல்லை. கேட்பதை வாங்கி தருவதுடன் சரி எங்கள் வேலை முடிந்துவிடும்.


      //ஆனால் எங்களுக்கு எந்தவித உதவியும் கிடைத்ததில்லை. நாங்களேதான் வான்கி வரைந்து படங்கள் சேகரித்து, அதை வாங்க பைசா கேட்டால் சட்டுனு தரமாட்டாங்க.....இத்தனைக்கும் 1 பைசா 5 பைசா சமாச்சாரங்கள் ஆனால் அது அப்ப வேல்யூ கூடுதல். அதனால் டக்குனு தரமாட்டாங்க. அதுவும் பத்துபைசா என்றால் அவ்வளவுதான்!!!!!//

      கண்டிப்பான குடும்பம் தான்.

      நீக்கு
  7. ஆஹா!!!! அப்பவே மாமா வரைந்து கொடுத்து, உங்க மனசுல இடம் பிடிச்சுட்டார் இல்லையா!!!! ஹாஹஹஹஹ்ஹஹா...அதுவும்
    //என் கணவர் வரைந்து தந்த அந்த படத்தினால் தான் 25க்கு 12 மார்க் கிடைத்தது. இல்லையென்றால் இன்னும் கூட மார்க் குறைவாக வந்து இருக்கும். //

    .. அப்புறம் பாருங்க எப்படி வாழ்க்கை அமைந்து!!!

    //வரலாறு முக்கியம் என்று என் வரலாற்றையும் இணைத்து விட்டேன்
    திருமண நாள் 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி.//

    வரலாறு முக்கியம்னு உங்களுக்கும்னு மேலே சொல்லியிருக்கிறேன் அக்கா.

    இன்றைய பதிவு பொருத்தமான நாளில்!!!! இந்த வரலாற்றை மாமா பார்த்துக் கொண்டு உங்களுக்கு ஆசியும் வழங்குவார்...உங்களோடு தானே இருக்கிறார். மாபெரும் சக்தி அப்படித்தானே இருக்கிறது நம்ம கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய்னு சொல்றாப்ல தான் இதுவும்!!!

    புத்த வரலாறு சாஞ்சி சேர சோழ பாண்டியர் என்று. தீபா அவர்கள் சொன்னது போல இங்கு பதிந்தால் அழியாமல் இருக்கும்!!

    எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆஹா!!!! அப்பவே மாமா வரைந்து கொடுத்து, உங்க மனசுல இடம் பிடிச்சுட்டார் இல்லையா!!!! ஹாஹஹஹஹ்ஹஹா...அதுவும்//

      அப்போது எல்லாம் இந்த எண்ணமே இல்லை கீதா.

      என் அத்தை மூன்றாவது மகனுக்கு திருமணம் முடிந்த பின் தான் என் அப்பா, அம்மாவிடம் பேசினார்கள் என் நாலாவது பையனுக்கு கோமுதான் என்று.

      இன்றைய பதிவு பொருத்தமான நாளில்!!!! இந்த வரலாற்றை மாமா பார்த்துக் கொண்டு உங்களுக்கு ஆசியும் வழங்குவார்...உங்களோடு தானே இருக்கிறார். மாபெரும் சக்தி அப்படித்தானே இருக்கிறது நம்ம கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய்னு சொல்றாப்ல தான் இதுவும்!!!//

      ஆமாம், என் கணவர் எப்போதும் என்னுடன் இருப்பது போலவே நினைக்கிறேன். அவர்களிடம் காலை ஆசியும் வாங்கினேன்.

      //புத்த வரலாறு சாஞ்சி சேர சோழ பாண்டியர் என்று. தீபா அவர்கள் சொன்னது போல இங்கு பதிந்தால் அழியாமல் இருக்கும்!!//

      ஆமாம் கீதா

      //எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்து பின்னூட்டங்கள் அதிகமாக போட்டு உற்சாகபடுத்தியதற்கு நன்றி கீதா.


      நீக்கு
  8. வணக்கம் சகோ
    இவைகளை எல்லாம் இன்னும் பாதுகாத்து வைத்திருப்பதே பெரிய விடயம்.

    இனிய இவைகள் இணையத்தில் நிரந்தரமாக இருக்கும்.

    தங்களது வரலாற்றை பதிவு செய்து விட்டீர்கள்.

    பிறகு கணினியில் பெரிதாக்கி பார்க்க வேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //இவைகளை எல்லாம் இன்னும் பாதுகாத்து வைத்திருப்பதே பெரிய விடயம்.

      இனிய இவைகள் இணையத்தில் நிரந்தரமாக இருக்கும்.

      தங்களது வரலாற்றை பதிவு செய்து விட்டீர்கள்.//

      ஆமாம், நான் படித்த வரலாற்றையும் என் வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்து விட்டேன்.

      //பிறகு கணினியில் பெரிதாக்கி பார்க்க வேண்டும்.//
      நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சகோ.

      //பகிர்வுக்கு நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. ஓ 10 ஆம் வகுப்பில் விருப்பப் பாடம் உண்டா? 10 வகுப்பு வரை வரலாறு புவியியல் எல்லாம் உண்டே.

    எங்களுக்கு 11 ஆம் வகுப்பில்தான். விருப்பப் பாடம் எடுக்க வேண்டுமாக இருந்தது.
    நீங்கள் பியுஸி அந்த சிஸ்டம் இல்லையா? அதில்தானே விருப்பப் பாடம் உண்டு இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ 10 ஆம் வகுப்பில் விருப்பப் பாடம் உண்டா? 10 வகுப்பு வரை வரலாறு புவியியல் எல்லாம் உண்டே.//

      வரலாறு , புவியல் உண்டு. அதுபோக விருப்பபாடம் உண்டு.

      //எங்களுக்கு 11 ஆம் வகுப்பில்தான். விருப்பப் பாடம் எடுக்க வேண்டுமாக இருந்தது.//
      ஓ சரி

      //நீங்கள் பியுஸி அந்த சிஸ்டம் இல்லையா? அதில்தானே விருப்பப் பாடம் உண்டு இல்லையா?//

      ஆமாம்.

      நீக்கு
  10. ப்ப்பாஆ......செம கலெக்ஷன்....   

    நிஜமா பொக்கிஷம்.  எப்படி காப்பாத்தி வச்சிருந்தீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ப்ப்பாஆ......செம கலெக்ஷன்....

      நிஜமா பொக்கிஷம். எப்படி காப்பாத்தி வச்சிருந்தீங்க?//

      நீங்களே பொக்கிஷம் என்று சொல்லி விட்டீர்கள்.
      பொக்கிஷத்தை எப்படி காப்பாற்ற வேண்டுமோ அப்படி காப்பாற்றி வைத்து இருக்கிறேன்.

      நீக்கு
  11. என் அக்காவுக்கும் 1973 ல் தான் திருமணம் நடந்தது. ஆனால் செப்டம்பர் 9. சுவாமிமலையில் திருமணம் நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் அக்காவுக்கும் 1973 ல் தான் திருமணம் நடந்தது. ஆனால் செப்டம்பர் 9. சுவாமிமலையில் திருமணம் நடந்தது.//

      எங்களுக்கு திருப்பரங்குன்றத்தில் "குமரகம்" திருமண மண்டபத்தில்.
      மாப்பிள்ளை அழைப்பு குமரகம் முருகன் கோயிலில். அதை மதுரை வந்த பின் பதிவு செய்து இருக்கிறேன்.

      நீக்கு
  12. முதல் பேப்பரில் உண்டு இல்லை, அறிந்திருந்தனர் என்று திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள்.  கையெழுத்து அழகாகத்தான் இருக்கிறது.  நீட்டாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதல் பேப்பரில் உண்டு இல்லை, அறிந்திருந்தனர் என்று திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். கையெழுத்து அழகாகத்தான் இருக்கிறது. நீட்டாக எழுதி இருக்கிறீர்கள்.//

      என் கையெழுத்து அழகாகத்தான் இருக்கிறது , நீட்டாக எழுதி இருக்கிறீர்கள் என்றதற்கு நன்றி.

      பழைய கற்கால மனிதர்களும், புதிய கற்கால மனிதர்களும் வாழ்க்கை முறை, அவர்களுக்கு தெரிந்தவை, தெரியாதவை பற்றி எழுதி இருக்கிறேன். பெரிது படுத்தி பார்த்தால் தெரியும்.

      நீக்கு
  13. திருமணத்துக்கு முன்னரே ஸார் உங்களுக்கு படம் வரைந்து சிறப்பு.  அப்போதே திருமணப் பேச்சு வார்த்தை நடந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருமணத்துக்கு முன்னரே ஸார் உங்களுக்கு படம் வரைந்து சிறப்பு. அப்போதே திருமணப் பேச்சு வார்த்தை நடந்ததா?//

      இல்லை ஸ்ரீராம். சாரின் அண்ணா இருவருக்கு திருமணம் முடிந்தபின் தான் என் அத்தை என்னை எங்கள் வீட்டில் வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் எங்கள் வீட்டுக்கு என் நான்காவது மகனுக்கு என்று சொல்லி வைத்தார்கள். மூன்றாவது அண்ணன் திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து எங்களுக்கு திருமணம்.

      நீக்கு
  14. உங்கள் திருமண போட்டோவில் ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க..  ஸார் விபூதி எல்லாம் வச்சுக்கிட்டு அப்பவும் பக்தியாதான் இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் திருமண போட்டோவில் ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க.. ஸார் விபூதி எல்லாம் வச்சுக்கிட்டு அப்பவும் பக்தியாதான் இருக்கார்.//

      நன்றி.

      சிறு வயது முதலே நெற்றியில் திருநீறு பூசி பழக்கம்.
      பள்ளிக்கூட படத்தில் எல்லாம் பட்டையாக பூசி இருப்பார்கள்.
      இரவு படுக்க போகும் போது பட்டையாக பூசி கொண்டுதான் படுப்பார்கள்.
      மகன், பேரனும் இரவு படுக்க போகும் போது நெற்றி நிறைய பூசிக் கொள்வார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    உங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள் சகோதரி. முதல் கருத்தில் சொல்ல விட்டுப்போய் விட்டது. உங்கள் திருமண போட்டோ அழகாக உள்ளது. உங்களை திருமணத்திற்கு பின்பும் உங்கள் கணவர் படிக்கச் அனுமதித்தது, படிப்பிற்கு வேண்டிய படமெல்லாம் வரைந்து தந்து உதவி செய்ததும் மிகச்சிறப்பான விஷயம். படிக்கும் போதே மிக்க மகிழ்வாக உள்ளது சகோதரி. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள் சகோதரி. முதல் //கருத்தில் சொல்ல விட்டுப்போய் விட்டது. உங்கள் திருமண போட்டோ அழகாக உள்ளது.//

      நன்றி.

      //உங்களை திருமணத்திற்கு பின்பும் உங்கள் கணவர் படிக்கச் அனுமதித்தது, படிப்பிற்கு வேண்டிய படமெல்லாம் வரைந்து தந்து உதவி செய்ததும் மிகச்சிறப்பான விஷயம். படிக்கும் போதே மிக்க மகிழ்வாக உள்ளது சகோதரி.//

      படிக்க வைத்தார்கள். நான் தான் நல்ல வாய்ப்புகளை தவறவிட்டவள்.
      இப்போது நினைத்து வருத்தப்படுவேன். பள்ளி, கல்லூரி வாழ்வை அவர்களால் அனுபவித்தேன். தட்டச்சுகற்றுக் கொண்டோம் அது இருவரும் ஒரு சேர கற்க போவோம்., தையல் வகுப்புக்கு அனுப்பினார்கள்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு
  16. இனிய திருமண நாள் வாழ்த்துகள் அக்கா.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனிய திருமண நாள் வாழ்த்துகள் அக்கா.//

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. முதல்ல, இனிய திருமண நாள் வாழ்த்துகள். சாருக்குத்தான் என்னவோ அவசரம். சீக்கிரம் கிளம்பிவிட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //முதல்ல, இனிய திருமண நாள் வாழ்த்துகள்.//

      நன்றி.

      //சாருக்குத்தான் என்னவோ அவசரம். சீக்கிரம் கிளம்பிவிட்டார்கள்//

      ஆமாம், தினம் அதை தான் அவர்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  18. அருமையா எல்லாவற்றையும் பாதுகாத்துவைத்துள்ளீர்கள். நோட்டைப் பார்த்தாலே அந்த வயதுக்குச் சென்றுவிடுவீர்கள்.

    திருமணப் படமும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அருமையா எல்லாவற்றையும் பாதுகாத்துவைத்துள்ளீர்கள். நோட்டைப் பார்த்தாலே அந்த வயதுக்குச் சென்றுவிடுவீர்கள்.

      திருமணப் படமும் நன்று//

      உங்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும், வரலாறு எழுதி பதிவு போட்டதால் எனக்கும் என் சேமிப்பை பகிர ஆசை வந்தது.

      என் மகளிடம் அந்தக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டேன், அம்மா 10வது படிக்கும் மாணவி நிலைக்கு போய் விட்டீர்கள் .
      இன்னும் வரலாறு சொல்லுங்கள் என்றாள்.
      எங்கள் திருமண படத்தை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  19. மிக நன்றாகத் தொகுத்துள்ளீர்கள். ஆனா பாருங்க...டீச்சர் கஞ்சம்.. 6 மதிப்பெண்கள்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மிக நன்றாகத் தொகுத்துள்ளீர்கள். ஆனா பாருங்க...டீச்சர் கஞ்சம்.. 6 மதிப்பெண்கள்தானா?//

      என் சக தோழிகள் அவர்களை அப்படித்தான் சொல்வார்கள்.
      மதிப்பெண்கள் குறைவாக கொடுக்கிறார்களே என்று. ஆனால் மிகவும் அன்பானவர்கள். பள்ளிச்சுற்றுலா போன போது அவர்கள் சொந்த ஊர் நாகப்பட்டினத்திற்கும் போனோம், அப்போது அவர்கள் வீட்டுக்கு அழைத்து போனார்கள். ஒரு பஸ் நிறைய இருந்த எங்கள் எல்லோரையும் அவர்கள் வீட்டில் தங்க வைத்து உணவு அளித்தார்கள்.
      சிரித்தால் உடல் குலுங்க குழந்தை போல சிரிப்பார்கள். அவர்கள் பெயர் ஞானஒளி.
      அவர்கள் என் மாமனார் அவர்களுடன் வேலைப்பார்த்தவர்கள். என்னிடம் "மாமா எப்படி இருக்கிறார்கள் நலமா "என்று நலன் விசாரிப்பார்கள். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை, அவர்கள் என் அக்காவின் மாமனார் .
      சமஸ்கிருத வாத்தியாரும் மாமாவுடன் பணிபுரிந்தவர் அவரும் கேட்பார் "விருப்பபாடமாக சமஸ்கிருதம் எடு"என்று சொல்லுவார் நான் வரலாறுதான் எனக்கு பிடிக்கும் என்று சொல்வேன்.

      நீக்கு
  20. பாருங்க.... கணவர் ஆவதற்கு முன்னமே உங்களுக்கு உதவி செய்திருக்கிறார். அவர் வரைவதற்குக் கேட்கவா வேணும்?

    உங்கள் எழுத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. நான் பலவித கந்தர்கோள எழுத்துக்களைப் பார்த்திருக்கிறேன். (என் பெரியப்பா நுணுக்கி நுணுக்கி எழுதுவார். அவர் கடிதத்தைப் படிப்பதற்குள்-முழுமையாக நான் படிக்க முடிந்ததே கிடையாது, தாவு தீர்ந்துவிடும். ஆனால் பாருங்கள், M.Ed என்று நினைவு, அல்லது அதற்குச் சமமான வேறு படிப்பு இருக்கலாம், மாநிலத்தில் கோல்ட் மெடல் அந்தக்காலத்தில். )

    பதிலளிநீக்கு
  21. ஆஹா ஆஹா என்ன ஒரு பொக்கிஷங்கள்.. அதை பாதுகாத்த தங்களின் பொறுமையும் வியக்க வைக்கின்றன மா

    அனைத்து படங்களையும் ரசித்து படித்து பார்த்தேன், ஒவ்வொன்றும் மிக சிறப்பு .

    இது போல எனது மாமனார் அலமாரியை சுத்தம் செய்யும் பொழுது பல புத்தகங்களும் ஆவணங்களும் கிடைத்தன , அதில் 1970 ஆம் ஆண்டு பதிப்பு பாரதியார் கவிதைகளை மட்டும் நான் எடுத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      //ஆஹா ஆஹா என்ன ஒரு பொக்கிஷங்கள்.. அதை பாதுகாத்த தங்களின் பொறுமையும் வியக்க வைக்கின்றன மா

      அனைத்து படங்களையும் ரசித்து படித்து பார்த்தேன், ஒவ்வொன்றும் மிக சிறப்பு//

      நமக்கு பிடித்தமானதை நாம் சேமித்து வைத்து பாதுகாப்போம் தானே அனு.
      அனைத்தையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //இது போல எனது மாமனார் அலமாரியை சுத்தம் செய்யும் பொழுது பல புத்தகங்களும் ஆவணங்களும் கிடைத்தன , அதில் 1970 ஆம் ஆண்டு பதிப்பு பாரதியார் கவிதைகளை மட்டும் நான் எடுத்துக் கொண்டேன்.//

      உங்களுக்கு பிடித்த பாரதியார் கவிதைகள் கிடைத்து விட்டது அதை எடுத்து கொண்டது மகிழ்ச்சி.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அனு.

      நீக்கு
  22. பொக்கிஷங்கள் அம்மா... தொடர்ந்து பதிவு செய்யுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்
      //பொக்கிஷங்கள் அம்மா... தொடர்ந்து பதிவு செய்யுங்கள்...//

      வரலாறு தொடர்வதை படிக்க விருப்பமா என்று சொல்லுங்கள் என்று பதிவின் இறுதியில் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் கொடுத்து விட்டீர்கள்
      தொடர்ந்து பதிவு செய்ய சொல்லி விட்டீர்கள். செய்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரி

    தாங்கள் பகிர்ந்த படங்களை ஒவ்வொன்றாக பெரிதாக்கி பார்த்து மகிழ்ந்தேன் சகோதரி. நல்ல பொக்கிஷங்களை பத்திரமாக சேர்த்து வைத்துள்ளீர்கள். இப்போது பதிவில் அதை சேமித்ததும் நல்லதுதான். நினைவு பெட்டகங்களாக எப்போதுமே பத்திரமாக, பேப்பர்கள் உதிராமல் இருக்கும். தங்கள் அம்மா, அக்கா, தங்கள் கணவர் என அனைவரும் தங்களுக்கு உதவியிருப்பதும் நல்ல விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட..

    எனக்கும் உங்கள் பதிவை, பாதுகாத்த பொக்கிஷங்களை பார்த்ததுந்தான் நினைவுக்கு வருகிறது. நான் பக்கம் பக்கமாக எழுதிய என்னுடைய விருப்பப்பாட நோட்ஸ் அனைத்தையும், என் உறவுகளில் ஒருவருக்கு அடுத்த ஆண்டு வந்த அவரது தேர்வுக்கு படிக்க கேட்டதால் இரக்கப்பட்டு கொடுத்து விட்டேன். நானும் உங்களைப் போல 10, 11..ல்ஆக இரண்டு வருடங்கள் விருப்பபாடமாக சரித்திரம் எடுத்து பயின்றேன். தனியாக சரித்திரம், பூகோளம் என கிளாஸ்களும் உண்டு. ஆனால், உங்களைப் போல் தனியாக பேப்பர்களில், வரைதல் சரித்திர சம்பந்தப்பட்ட படங்களை வெட்டி ஒட்டுதல் என்ற சட்டங்கள் நான் படித்த பள்ளியில் இல்லை. மன்னர்களின் வரலாறுகள், அவர்களைப்பற்றிய தகவல்கள் வென்ற நாடுகள், போரிட்ட ஆண்டு, ஆட்சி செய்த ஆண்டுகள் இப்படி பட்டவை அப்போது அனைத்தும் எழுதி, படித்து மனப்பாடமாக இருந்தது. ஒவ்வொரு தேர்வின் போதும் மேப்பில் நாடுகளை குறிக்கச் சொல்வார்கள். எழுததுதான் பக்கம்பக்கமாக 1 குயர் நோட்டுக்களில் எழுத வைப்பார்கள். அந்த நோட்டுக்களும், மேப்பில் குறித்தவைகளும் அந்த உறவினரிடம் போயே போச்சு. மேற் கொண்டு படிக்க இயலாமல், திருமணம் என்று என் வாழ்வு திசை மாறி விட்டது.

    நீங்கள் அவைகளை சேமித்து வைத்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம். மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.. ஏதோ உங்களிடம் இவை அனைத்தையும் சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லி விட்டேன். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, வாழ்க வளமுடன்

      //தாங்கள் பகிர்ந்த படங்களை ஒவ்வொன்றாக பெரிதாக்கி பார்த்து மகிழ்ந்தேன் சகோதரி. நல்ல பொக்கிஷங்களை பத்திரமாக சேர்த்து வைத்துள்ளீர்கள். இப்போது பதிவில் அதை சேமித்ததும் நல்லதுதான். நினைவு பெட்டகங்களாக எப்போதுமே பத்திரமாக, பேப்பர்கள் உதிராமல் இருக்கும். தங்கள் அம்மா, அக்கா, தங்கள் கணவர் என அனைவரும் தங்களுக்கு உதவியிருப்பதும் நல்ல விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட..//

      இதை இன்னும் முன்பே பதிவு செய்து இருக்கலாம். ஆனால் பேப்பர்கள் உதிர ஆரம்பித்தபின் தான் பகிர ஆசை வந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நேரம் வர வேண்டும் என்பார்களே அது போல நேரம் இப்போதுதான் வந்து இருக்கிறது.

      அம்மா, அக்கா, அண்ணன், கணவர் உதவியதை பதிவு செய்து விட்டேன் இப்போது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது . அவர்கள் நினைவுகள் சேமிக்க பட்டு விட்டது.

      //எனக்கும் உங்கள் பதிவை, பாதுகாத்த பொக்கிஷங்களை பார்த்ததுந்தான் நினைவுக்கு வருகிறது. நான் பக்கம் பக்கமாக எழுதிய என்னுடைய விருப்பப்பாட நோட்ஸ் அனைத்தையும், என் உறவுகளில் ஒருவருக்கு அடுத்த ஆண்டு வந்த அவரது தேர்வுக்கு படிக்க கேட்டதால் இரக்கப்பட்டு கொடுத்து விட்டேன்.//

      படிக்க கேட்டவருக்கு கொடுத்தது நல்ல காரியம்.
      நான் என் புத்தகங்கள் எல்லாம் அப்படித்தான் கொடுத்து விடுவேன். என் குழந்தைகள் பாட புத்தகத்தை வருடா வருடம் யாருக்காவது ஏழை பிள்ளைக்கு கொடுத்து விடுவோம்.


      //10, 11..ல்ஆக இரண்டு வருடங்கள் விருப்பபாடமாக சரித்திரம் எடுத்து பயின்றேன். தனியாக சரித்திரம், பூகோளம் என கிளாஸ்களும் உண்டு. ஆனால், உங்களைப் போல் தனியாக பேப்பர்களில், வரைதல் சரித்திர சம்பந்தப்பட்ட படங்களை வெட்டி ஒட்டுதல் என்ற சட்டங்கள் நான் படித்த பள்ளியில் இல்லை.//

      ஒவ்வொரு பள்ளியில் ஓவ்வொரு மாதிரி இருக்கும் . அவர் அவர் திறமையை காட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்றார்கள் எங்கள் ஆசிரியர். ஒவ்வொருவரும் ஓவ்வொரு மாதிரி செய்தார்கள்.


      //மன்னர்களின் வரலாறுகள், அவர்களைப்பற்றிய தகவல்கள் வென்ற நாடுகள், போரிட்ட ஆண்டு, ஆட்சி செய்த ஆண்டுகள் இப்படி பட்டவை அப்போது அனைத்தும் எழுதி, படித்து மனப்பாடமாக இருந்தது. ஒவ்வொரு தேர்வின் போதும் மேப்பில் நாடுகளை குறிக்கச் சொல்வார்கள். எழுததுதான் பக்கம்பக்கமாக 1 குயர் நோட்டுக்களில் எழுத வைப்பார்கள். அந்த நோட்டுக்களும், மேப்பில் குறித்தவைகளும் அந்த உறவினரிடம் போயே போச்சு. மேற் கொண்டு படிக்க இயலாமல், திருமணம் என்று என் வாழ்வு திசை மாறி விட்டது.//

      அப்போது பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் செய்து விடுவார்கள். என் அக்காவுக்கு பியூசி படித்தவுடன் திருமணம். நல்ல வரன் வந்தால் பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

      //நீங்கள் அவைகளை சேமித்து வைத்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம். மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.. ஏதோ உங்களிடம் இவை அனைத்தையும் சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லி விட்டேன். உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகளுக்கு நன்றி.
      மனம் விட்டு என்னிடம் பேசியதும் மகிழ்ச்சி. எந்த வயதிலும் படிக்கலாம், படிக்க ஆர்வம் இருந்தால் இப்போது கூட நீங்கள் படிக்கலாம் கமலா. குடும்ப பொறுப்புகள் படிக்க நேரம் இல்லை என்று சொல்வீர்கள். என் மகன், உறவினர்கள் எல்லாம் ஏதாவது படிக்க சொல்கிறார்கள்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.




      நீக்கு