சனி, 22 ஜூன், 2024

கப்பல் பயணம் க்ரூஸில் சுற்றுலா


கப்பல் பயணத்தின்   மூன்றாம் நாள்.எங்கள் கப்பல் இந்த துறைமுகத்தில் நின்றது. 

மே 31 தேதி   (Cruise Trip  Aboard Carnival  ) கடற்பயண  சுற்றுலாவிற்கு  ஏற்பாடு செய்து இருந்தார் மகன். லாஸ் ஏஞ்சலஸ்  ஊரிலிருந்துகிளம்பி  மெக்சிகோ வரை பயணம்.

   CARNIAL RADIANCE  என்ற கப்பலில் பயணம் செய்த அனுபவங்கள்  தொடர் பதிவாக   வருகிறது. 





கடல் பார்க்க பார்க்க  ஆசையாக இருக்கும் . கடலில் போய்  கொண்டே இயற்கையை ரசிப்பது ஆனந்தம் தான்.

இந்த பதிவில் கப்பல் மேல் தளத்தில் விளையாடும் இடம், மற்றும்  நடைப்பயிற்சி செய்யும் இடங்களின்படங்கள் இடம்பெறுகிறது.





மேல் தளம்

நீர் சறுக்கு விளையாடும் இடம், மற்றும் நீந்தி களிக்கும் நீச்சல் குளங்கள், சூரிய குளியல் எடுக்க ஆசனங்கள்.

மகன் எடுத்த இந்த  படத்தில் நீர் சறுக்கு விளையாடும் இடம் நன்றாக தெரியும் மஞ்சள் கலரில் வளைவாக வருகிறதே அதுதான்

சதுரங்கம் விளையாடும் இடம்

அமர்ந்து  விளையாட்டை ரசிக்கும் ஆசனங்கள் பழுது பார்க்கப்படுகிறது

கயிற்று பாலத்தில் நடத்தல்

 நடைப்பயிற்சி செய்ய  பாதை. கப்பலை ஒரு முறை  சுற்றி வந்தால் ஒரு மைல்

கூடை பந்து விளையாட்டு
 
சிலர் விளையாடி கொண்டு இருந்தார்கள் 
குடை நிழலில் அமர்ந்து கொண்டு பறவைகளை விளையாட்டை ரசிக்கலாம்

கரும்பலகை துடைக்கும் டஸ்டர் (சிறு கற்கள் அடைக்கப்பட்டது)  போன்றதை பலகையில் உள்ள துவாரத்தில் சரியாக போட வேண்டும். அந்த விளையாட்டு.

நான் caravan   பயணத்தில் விளையாடினேன்,(நின்று கொண்டு இருக்கும் கேரவனில் தங்கி பல இடங்களை சுற்றிப்பார்த்தோம். அங்கு தான் விளையாட  இந்த பலகை இருந்தது)  இரண்டு வருடங்களுக்கு முன்   விளையாடிய காணொளி  இருக்கிறது அதை போடுகிறேன், இன்னொரு பதிவில்.




நிறைய விளையாட்டு கருவிகள் இருக்கிறது. நான் காலை  7 மணிக்கு போனேன் அதனால்  யாரும் விளையாடுவதை பார்க்க முடியவில்லை, ஒரு சிலர் நடைப்பயிற்சி மட்டும் செய்து கொண்டு இருந்தார்கள்.


மகனிடம் யாரும் விளையாடுவதை எடுக்க முடியவில்லை என்றவுடன் மகன் விளையாடினான் படம் எடுத்தேன்



இரண்டு தளங்கள் மட்டும் போய் பார்த்தேன்,  அதற்கும் மேல் ஒரு தளம் உள்ளது அதற்கு நான் போகவில்லை.
 

அடுத்து  துறைமுகத்திற்கு அருகில் உள்ள இடங்கள், கடைத்தெரு பார்க்கலாம்.

நாங்கள் இருந்த தளத்தின் மேலே உள்ள பால்கனி பகுதி . இதில் நின்று கடலை பார்ப்பது ஆனந்தம். கடலில்  இங்கு தான் இரண்டு  குட்டி டால்பின் துள்ளுவதை பார்த்தேன், படம் எடுக்கமுடியவில்லை, சிறிது நேரம் காத்து இருந்து பார்த்து விட்டு  வந்து விட்டோம்.

11 மணிக்கு எங்களை கடைத்தெருக்கு அழைத்து செல்ல  பஸ் வந்து விடும் அதனால் காலை ஆகாரத்தை முடித்து கிளம்ப வேண்டும்.

காலை ஆகாரம், ஆரஞ்சு ஜூஸ் , சீஸ் பாஸ்தா, பிரட் , waffles

கப்பலை விட்டு கீழே இறங்கும் போது பயங்கர பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு தான்  நம்மை  அனுப்புகிறார்கள்.

எனக்கு அங்கு ஒரு சோதனை காத்து இருந்தது. என் அடையாள அட்டையை கழுத்தில் தொங்க போட்டு கொண்டே இருந்தேன். அதை  மேல் தளம் சென்று விட்டு வந்து உடைமாற்றும் போது கைப்பையில் வைத்தேன்.  அது கொஞ்சம் பெரிய பை.

எங்கள் அறை கதவை அடைத்து விட்டு வெளியே வரும் போது மருமகள் "அத்தை சின்ன கைப்பை கொடுத்தேனே! கடைத்தெருவுக்கு, கப்பலில் உள்ளே எடுத்து போக என்று அதை  எடுத்து கொள்ளுங்கள்  உங்களுக்கு நடக்க எளிதாக இருக்கும் " என்றாள், மீண்டும் கதவை திறந்து  அதை எடுத்து கொண்டு  குளிருக்கு ஒரு அழகான ஸ்கார்ப்,  தண்ணீர் பாட்டில், காமிரவை மட்டும் எடுத்து இந்த பைக்கு மாற்றியவள் அடையாள அட்டையை எடுக்க மறந்து விட்டேன்.

அங்கு எனக்கு முன்னே எல்லோரும் அடையாள அட்டையை காட்டி முன்னே போய் விட்டார்கள், நான் கைப்பையில் எடுக்க தேடிய போது கிடைக்கவில்லை. என்னை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை, மகன் திரும்பி பார்த்தவன் "பதட்டப்பட வேண்டாம் நான் வருகிறேன்", என்று அங்கிருந்து சைகை செய்தான். வேறு வழியாக அவனை அனுமத்தித்தார்கள்

அதன் பின் மீண்டும் அறைக்கு வந்து என் அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு வந்தேன்.

  ஏன் இப்படி கடுமையான சோதனை என்று வரும் வழியில் மகனிடம் கேட்டேன்,  அமெரிக்காவுக்கு மெக்ஸிகோவில் இருந்து அனுமதி இன்று யாரும் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்பதற்குதான்.  கப்பலுக்கு மீண்டும் திரும்பி வரும் போது மேலும் அதிகபடியான சோதனை உண்டு என்றான். 

அந்த இடத்தில் என் அழகான ஸ்கார்ப் கீழே விழுந்து விட்டது எனக்கு தெரியவில்லை.  (மருமகள்  மலேஷியா பயணத்தில் வாங்கி கொடுத்தது. )அடையாள அட்டையை கைப்பையில் தேடும் போது   கையில் தொங்க விட்டு இருந்தேன், வழு வழு என்று இருந்த காரணத்தால் வழுகி கீழே விழுந்து இருக்கிறது.

மகன் "பதட்டப்பட வேண்டாம் "என்றாலும் பதட்டப் பட்டு இருக்கிறேன், அதுதான் அறைக்கு சென்று அடையாள அட்டையை எடுக்க போகும் அவசரத்தில் கீழே விழுந்ததை கவனிக்கவில்லை.

சோதனைகள் முடித்து வெளியே வந்தால்  நம்மை வரவேற்க மாறுவேடம் தரிந்தவர்கள்  மகிழ்ச்சியாக வரவேற்றார்கள்.அவர்களை பார்த்ததும் என் பதட்டம் காணாமல் போய் விட்டது.

மெக்சிகோ கிராமிய உடை

மெக்சிகோ நாட்டின் பாரம்பரிய உடை அணிந்தவர்கள் மலர்ந்த முகத்துடன்  நான் படம் எடுக்க போஸ் கொடுத்தார்கள்.


பேசும் கிளி வைத்து இருக்கிறார்

கப்பலின்  கீழ் இருந்து இரண்டு வரிசை  ஜன்னல்கள் தெரிகிறது அல்லவா?  அதில் கீழ் இருந்து மேலே தெரியும்    ஜன்னல்களில்      எங்கள் அறை ஜன்னல்களும் இருக்கிறது.. அதற்கு மேல் பால்கனி  அதற்கு மேல்  அவசர காலங்களில் மக்களை ஏற்றி கீழ் இறக்கப்படும்  உயிர் காக்கும்  படகுகள்.

அதற்கும் மேலூம்  தங்கும் அறைகள் உண்டு.

மேலே பால்கனியில் நிற்கும் படம் அங்கு எடுத்தது. அங்கு நின்றுதான் கடலை பார்த்து ரசித்தேன்.


நாம் பயணம் செய்யும் பஸ் வரும் போது அறிவிப்பு செய்வார்கள் அதுவரை அங்கு போட்டு இருக்கும் ஆசனங்களில் அமர்ந்து போகிற வருபவர்களை வேடிக்கைப்பார்த்து கொண்டு இருந்தோம்.

108 ம் நம்பர் பஸ் வந்தது, அதற்கு போகும் முன் மீண்டும் சோதனை , மோப்ப நாய் கூட நிற்கிறது , சோதனை செய்யும் இடத்தில் 

எங்களை அழைத்து செல்லும் வழிகாட்டி பெண் தன் பேர் அச்சடித்த சிறு சீட்டை நம் சட்டையில் ஒட்டிக் கொள்ள சொன்னார், என் புடவையில் ஒட்ட வில்லை அதனால் கைபையில் ஒட்டிக் கொண்டேன். 


பேரன் சட்டையில் ஒட்டி கொண்டான்.  தன் பேர் இசாபெல் என்றார் இசபெல் என்று சிலர் உச்சரித்தபோது இல்லை, என்பேர் இசாபெல் என்றார். அவர் பேச்சு சிரிப்பு எல்லாம் நன்றாக இருந்தது.  நல்ல சுறு சுறுப்பான பெண்.

என் சம்பந்தி மற்றும் என்னுடைய  புடவையை பாராட்டிக் கொண்டே இருந்தார்,  கலர் நன்றாக இருப்பதாக சொன்னார். கடைத்தெருவில் எங்களுடன் படம் எடுத்துக் கொண்டார். 

அடுத்த முறை வரும் போது அவருக்கு புடவை வாங்கி வரும் படி சொன்னார். அவரும் கட்டிக் கொள்ள வேண்டுமாம்.

அவருக்கு புடவை கட்ட  ஆசையாக இருப்பதாக சொன்னார்.


அவருடன் கடைத்தெருக்களை, மற்றும் சில வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப்பார்த்தது அடுத்த பதிவில் வரும். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

_----------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. எவ்வளவு விஸ்தாரமாக இருக்கிறது?  ஒருமுறை சுற்றி வந்தால் ஒரு மைல் என்பது வியப்பு.  விளையாடும் இடங்கள்...குளிக்க குளம்...  நிறைய ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //எவ்வளவு விஸ்தாரமாக இருக்கிறது? ஒருமுறை சுற்றி வந்தால் ஒரு மைல் என்பது வியப்பு. விளையாடும் இடங்கள்...குளிக்க குளம்... நிறைய ரசிக்கலாம்.//

      ஆமாம், நிறைய ரசிக்கலாம்.

      நீக்கு
  2. மேல் தளத்தில் நின்று கடல்நீரைத் பார்க்கவேண்டும் என்றால் எனக்கு பயமாக இருக்கும்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்தான் என்றால் மனதில் ஒரு பயம் வந்து விடுகிறது.  என்னைச் சுற்றிலும் நீர் இருந்து, அதன் மட்டம் உயர்ந்து கொண்டே போவது போல அடிக்கடி மனதுக்குள் நினைத்து பயப்படுவேன்.  என்றோ ஒருநாள் அப்படி அதில் மாட்டப்போகிறோம் என்று அடிக்கடி தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மேல் தளத்தில் நின்று கடல்நீரைத் பார்க்கவேண்டும் என்றால் எனக்கு பயமாக இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்தான் என்றால் மனதில் ஒரு பயம் வந்து விடுகிறது. //

      எனக்கு பயமில்லை ஆனால் அடிவானம், தொடுவானத்தை நம்மால் தொட முடியாது என்ற ஏக்கம் உண்டு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் கடைசியில் வானமும், கடலும் சேர்வது போல தோற்றம் வியக்க வைக்கும்

      //என்னைச் சுற்றிலும் நீர் இருந்து, அதன் மட்டம் உயர்ந்து கொண்டே போவது போல அடிக்கடி மனதுக்குள் நினைத்து பயப்படுவேன். என்றோ ஒருநாள் அப்படி அதில் மாட்டப்போகிறோம் என்று அடிக்கடி தோன்றும்!//

      கடலை மகிழ்ச்சியாக பாருங்கள், அந்த நினைப்பு மாறி விடும்.
      கதைகளில் இந்த பூமியை கடல் கொண்டு போகும் என்று படித்ததால் வந்த எண்ணமோ?
      கடல் கொண்டு போய் விட்டதே நகரங்களை. அதை படித்ததால் வந்த பயமோ!

      நீக்கு
  3. மகன் விளையாடுவது போன்ற நடைப்பயிற்சி யந்திரம் என் சின்னவன் வாங்கி வைத்திருந்தான்.  சாதாரணமாக நடப்பது போன்ற ட்ரெட்மில் போன்றதாக இருந்தால் எனக்கும் சௌகர்யமாக இருந்திருக்கும்.  இதில் மிக சிரமமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் விளையாடுவது போன்ற நடைப்பயிற்சி யந்திரம் என் சின்னவன் வாங்கி வைத்திருந்தான். //

      லிபட் உபயோக படுத்தாமல் மாடிபடி ஏறி இறங்க சொல்கிறார்கள் அது முடியாத போது இது உதவும்.

      // சாதாரணமாக நடப்பது போன்ற ட்ரெட்மில் போன்றதாக இருந்தால் எனக்கும் சௌகர்யமாக இருந்திருக்கும். இதில் மிக சிரமமாக இருந்தது.//

      ட்ரெட்மில் நடப்பதற்கு, ஓடுவதற்கு உதவும். மகன் வீட்டில் வைத்து இருக்கிறான்.

      இவை எல்லாம் வீட்டின் இடத்தை பிடித்துக் கொள்ளும். காலை , மாலை நடைபயிற்சியே போதுமானது.

      நான் உடற்பயிற்சி சொல்லி கொடுக்கும் போது இப்படித்தான் சொல்வேன். மனவளகலை மன்றத்தில் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளை தினம் செய்தால் வீட்டில் உடற்பயிற்சி கருவிகளை வாங்கும் செலவு மிச்சம் என்று சொல்வேன்.
      கைபயிற்சி, கால்பயிற்சி, மூச்சு பயிற்சி , காயகல்ப பயிற்சிகளை வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் கற்று கொள்ளுங்கள் விருப்பம் இருந்தால்.

      நீக்கு
  4. இசாபெல் அழகாக இருக்கிறார்.  ஆனால் பருமனாக இருக்கிறார்!!!  எனவே புடைவை அவருக்கு பொருந்தாது!  கப்பலில் இருக்கும் நடைப்பயிற்சி மெஷினில் நடக்கச் சொல்லலாம் - முழங்கால் வலி இல்லாமலிருந்தால்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இசாபெல் அழகாக இருக்கிறார். ஆனால் பருமனாக இருக்கிறார்!!! எனவே புடைவை அவருக்கு பொருந்தாது! கப்பலில் இருக்கும் நடைப்பயிற்சி மெஷினில் நடக்கச் சொல்லலாம் - முழங்கால் வலி இல்லாமலிருந்தால்!//

      என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் ? அவர் எவ்வளவு ஆசையாக கேட்கிறார் புடவை.

      உடல் பருமன் உள்ள பெண்கள் எவ்வளவு அழகாய் புடவை கட்டி கொள்கிறார்கள். நல்ல உயரமாக வேறு இருக்கிறார் நல்ல அகல கரை பார்டர் புடவை நன்றாக இருக்கும் அவருக்கு.

      நாங்கள் மறுபடியும் போனால் அல்லவா அவருக்கு புடவை அதற்குள் அவரை நடைபயிற்சி செய்து உடலை மெலிய வைக்க சொல்கிறீர்களே!

      அவருக்கு முழங்கால் வலி வர வேண்டாம்.
      அவர் தொழில் நின்று கொண்டு பேச வேண்டி இருக்கிறது, சுற்றி காட்ட வேண்டும்.

      வயதானால் இருக்கவே இருக்கு, கால்வலி, கைவலி, முட்டிவலி என்று.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்களையும் பயண விவரங்களையும் ரொம்பவே ரசித்தேன்.

    எல்லாப் படங்களும் மிக அழகு.

    நடைப்பயிற்சிக்கான பாதை நல்லா ருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்களையும் பயண விவரங்களையும் ரொம்பவே ரசித்தேன்.

      எல்லாப் படங்களும் மிக அழகு.

      நடைப்பயிற்சிக்கான பாதை நல்லா ருக்கு//

      படங்களை, பயணவிவரங்களை, மற்றும் நடைபாதையை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. படங்களும் விவரங்களும் சுவாரஸ்யமாக இருந்தது.

    எனக்கும் கப்பல் பயண ஆசை உண்டு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்களும் விவரங்களும் சுவாரஸ்யமாக இருந்தது.

      எனக்கும் கப்பல் பயண ஆசை உண்டு பார்க்கலாம்.//

      அப்பா, அண்ணனுடன் நடுகடலில் நிற்கும் வெளி நாட்டு கப்பல்கள், நம் நாட்டுக் கப்பல்களை போய் பார்த்த அனுபவம் இருக்கிறது.
      இப்படி ஒரு கப்பல் பயணம் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.

      நீங்களும் கப்பல் பயணம் போய் வாங்க மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  7. படங்களையும் உங்கள் விவரிப்புகளையும் பார்த்தாலே கப்பலில் பயணிக்கும் ஆசை எழுகிறதே. கப்பல் பயணம் என்றாலே ஏதோ உள்ளுக்குள் ஒரு பயம். கப்பல் இப்படியும் அப்படியுமாக அசையும் sea sickness -வரும் என்றெல்லாம் பயந்திருக்கிறேன். சதுரங்கக் காய்கள் இடத்தை விட்டுச் சரியாமல் விளையாட முடியும் என்றால் பெரிய அளவில் அசையாது என்றுதானே அர்த்தம். கப்பலைச் சுற்றி வர ஒரு மைல் என்றால் அதன் பிரமாண்டம் வியப்பளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்

      //படங்களையும் உங்கள் விவரிப்புகளையும் பார்த்தாலே கப்பலில் பயணிக்கும் ஆசை எழுகிறதே.//

      பார்க்கலாம் கீதமஞ்சரி. உங்களுக்கு பிடிக்கும், பறவைகள், இயற்கை எழில் எல்லாம் பார்க்க பார்க்க அழகு.
      அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது.

      //கப்பல் பயணம் என்றாலே ஏதோ உள்ளுக்குள் ஒரு பயம். கப்பல் இப்படியும் அப்படியுமாக அசையும் sea sickness -வரும் என்றெல்லாம் பயந்திருக்கிறேன்.//
      தொடர்ந்து போனால் அப்படி sea sickness வந்தாலும் வரலாம்.நாங்கள் மூன்று இரவுகள் ஒரு காலை அவ்வளவுதான்.

      //சதுரங்கக் காய்கள் இடத்தை விட்டுச் சரியாமல் விளையாட முடியும் என்றால் பெரிய அளவில் அசையாது என்றுதானே அர்த்தம்.//
      கடைசி நாள் மட்டும் வேகமாய் கப்பல் போனது அப்போது லேசாக ஆடியது. மற்றபடி ஆடவில்லை.

      // கப்பலைச் சுற்றி வர ஒரு மைல் என்றால் அதன் பிரமாண்டம் வியப்பளிக்கிறது.//

      ஆமாம். கப்பல் பெரிது தான் .

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. அக்கா கப்பல் நகரம் போல பிரம்மாண்டம். ஏதோ பெரிய கட்டிடம் போல! இருக்கு. வெளியிலிருந்து நீங்க எடுத்துப் போட்டிருக்கும் படங்கள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா கப்பல் நகரம் போல பிரம்மாண்டம். ஏதோ பெரிய கட்டிடம் போல! இருக்கு. வெளியிலிருந்து நீங்க எடுத்துப் போட்டிருக்கும் படங்கள்!!//

      1500 பயணிகள், வேலை பார்ப்பவர்கள் என்று அவ்வளவு பேர் வசிக்க வேண்டுமே!
      கரையில் நிற்கும் போது வெளியிலிருந்து முழுமையாக எடுக்க வேண்டுமென்றால் வெகு தூரத்தில் எடுக்க வேண்டும்.
      முதல் பதிவில் நடுக்கடலில் நிற்கும் படம் போட்டு இருந்தேன், இணையத்திலிருந்து.

      நீக்கு
  9. கடல் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும் . கடலில் போய் கொண்டே இயற்கையை ரசிப்பது ஆனந்தம் தான்.//

    அக்கா ஹைஃபைவ்!!! எனக்கும் அப்படித்தான் ரொம்பப் பிடிக்கும். கடலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!!! மனதுக்குள் என்னவெல்லாமோ எண்ணங்கள் எழும். இயற்கையின் பிரம்மாண்டம் நம் மனதை ஆழ்நிலை தியானத்திற்கும் அழைத்துச் செல்லும் பேரமைதிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா ஹைஃபைவ்!!! எனக்கும் அப்படித்தான் ரொம்பப் பிடிக்கும். கடலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!!! மனதுக்குள் என்னவெல்லாமோ எண்ணங்கள் எழும். இயற்கையின் பிரம்மாண்டம் நம் மனதை ஆழ்நிலை தியானத்திற்கும் அழைத்துச் செல்லும் பேரமைதிக்கும்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். கடல் மேல் தியானம் செய்வது சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் எங்கள் மன்றத்தில் அப்போது அதை நினைத்து கொண்டேன்.
      மனதில் எந்த வித எண்ணமும் தோன்றாது. எங்கும் அமைதிதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. கயிற்றுப் பாலத்தில் நடத்தல் படத்தில் பின் புறம் மலை தெரிகிறதே கோமதிக்கா, துறைமுகத்தில் நின்றிருந்த போது எடுத்தது இல்லையா?

    கப்பலை ஒரு முறை சுத்தினா ஒரு மைல்!! அப்ப நல்ல நடைப்பயிற்சி! ஒவ்வொரு தளமாகப் போய்ப் பார்த்து வந்தாலும் நடைப்பயிற்சி கிடைத்துவிடும்!

    பார்ப்பதற்கு சுவாரசியமானவை எவ்வளவு இருக்கு! எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது போலத் தெரிகிறது. அத்தனையும் ஒரு பயணத்தில் பார்த்துவிட முடியும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கயிற்றுப் பாலத்தில் நடத்தல் படத்தில் பின் புறம் மலை தெரிகிறதே கோமதிக்கா, துறைமுகத்தில் நின்றிருந்த போது எடுத்தது இல்லையா?//

      ஆமாம்.

      //கப்பலை ஒரு முறை சுத்தினா ஒரு மைல்!! அப்ப நல்ல நடைப்பயிற்சி! ஒவ்வொரு தளமாகப் போய்ப் பார்த்து வந்தாலும் நடைப்பயிற்சி கிடைத்துவிடும்!//

      ஒவ்வொரு தளத்தையும் பார்க்க லிப்ட் வசதி உள்ளது. படிகளில் ஏற பலம்படைத்த கால்கள் இருந்தால் ஏறி இறங்கி நடக்கலாம்.

      //பார்ப்பதற்கு சுவாரசியமானவை எவ்வளவு இருக்கு! எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது போலத் தெரிகிறது. அத்தனையும் ஒரு பயணத்தில் பார்த்துவிட முடியும் இல்லையா?//

      மூன்று நாள் முழுமையாக இருக்கிறது அதனால் பார்த்து விடலாம் கீதா.

      நீக்கு
  11. ஒவ்வொரு விளையாட்டு இடங்களும், நடக்கும் இடமும் எல்லாம் அழகா இருக்கு.

    பால்கனி ரொம்பப் பிடித்தது கடலைன் அழகை ரசித்துக் கொண்டே வரலாம். ஆஹா டால்ஃபின் துள்ளி விளையாடியதைக் கண்டது மகிழ்ச்சியா இருந்திருக்கும்.

    மகன் பயிற்சி செய்யும் இந்தக் கருவியில் தான் நான் இங்கு பார்க்கில் பயிற்சி செய்தப்ப அதில் ஏதோ கோளாறு இருந்திருக்கு போல இடது காலை கொஞ்சம் கூடுதலா அழுதிய போது தசை நார் பாதிப்படைந்து achilles tendinitis ஏற்பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒவ்வொரு விளையாட்டு இடங்களும், நடக்கும் இடமும் எல்லாம் அழகா இருக்கு.//

      ஆமாம், அழகாய் பராமரிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

      //பால்கனி ரொம்பப் பிடித்தது கடலைன் அழகை ரசித்துக் கொண்டே வரலாம். ஆஹா டால்ஃபின் துள்ளி விளையாடியதைக் கண்டது மகிழ்ச்சியா இருந்திருக்கும்.//

      குட்டி டால்ஃபின் துள்ளி விளையாடியதை பார்க்க அழகுதான்.
      நியூஜெர் சியில் இருக்கும் போது டால்ஃபின் ஷோ அழைத்து சென்றான் மகன் மிக அருமையாக இருந்தது.
      அவைகளை பதிவில் போட வேண்டும்.

      //மகன் பயிற்சி செய்யும் இந்தக் கருவியில் தான் நான் இங்கு பார்க்கில் பயிற்சி செய்தப்ப அதில் ஏதோ கோளாறு இருந்திருக்கு போல இடது காலை கொஞ்சம் கூடுதலா அழுதிய போது தசை நார் பாதிப்படைந்து achilles tendinitis ஏற்பட்டது.//

      பார்க்கில் அதை சரியாக பாராமரிக்கவில்லை போலும். தசை நார் பாதிப்படைந்தால் கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் கால் பிசகாமல், அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பார்கள்.

      நீக்கு
  12. நான் caravan பயணத்தில் விளையாடினேன்,(நின்று கொண்டு இருக்கும் கேரவனில் தங்கி பல இடங்களை சுற்றிப்பார்த்தோம். அங்கு தான் விளையாட இந்த பலகை இருந்தது) இரண்டு வருடங்களுக்கு முன் விளையாடிய காணொளி இருக்கிறது அதை போடுகிறேன், இன்னொரு பதிவில்.//

    பகிருங்க கோமதிக்கா இரண்டு வருடங்கள் முன் என்றால் நான் அந்தப் பதிவு பார்க்காமல் விட்டிருக்கேனோ? விட்டிருக்கேன் போல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பகிருங்க கோமதிக்கா இரண்டு வருடங்கள் முன் என்றால் நான் அந்தப் பதிவு பார்க்காமல் விட்டிருக்கேனோ? விட்டிருக்கேன் போல.//

      இல்லை கீதா போடவில்லை பதிவு. மகன் அழைத்து போன இடங்கள், மகள் அழைத்து போன இடங்கள், மாமா அழைத்து போன இடங்கள் எல்லாம் பகிர நிறைய இருக்கிறது. எல்லாம் தொடருவேன் என்பேன் தொடராமல் இருக்கிறது. படங்களை வலைஏற்றி இருப்பேன், அல்லது எழுதி இருப்பேன் படங்கள் ஏற்றாமல் என்று டிராப்டில் இருக்கிறது பார்த்து பகிர வேண்டும்.

      நீக்கு
  13. அமெரிக்கா மெக்ஸிக்கோ பாதுகாப்பு சோதனைகள் அதிகம் அங்கிருந்து பலரும் அமெரிக்காவுக்குள் பிழைப்பிற்காக நுழைந்துவிடுவதால். குறிப்பாகத் தொழிலாளிகள். இது காலம் காலமாக நடந்துவருகிறது.

    உங்க பதற்றம் புரிந்து கொள்ள முடிந்தது கோமதிக்கா. நம்மால் எல்லாருக்கும் பிரச்சனை ஆகிவடக் கூடாதே என்ற பதற்றம். அது மாறியதும் மகிழ்ச்சி! அந்த்ப் பெண்கள் மற்றும் ஆண் மெக்ஸிக்கோவின் பாரம்பரிய உடையில் அழகா இருக்காங்க. அவங்க பாரம்பரிய உடை கிட்டத்தட்ட பழங்குடி மக்களின் உடை போல இருக்கு. ஆனா கொஞ்சம் கிராண்டாக!

    இசாபெல் (இசபெல் னு சொன்னா அவங்க வருத்தப்பட்டுடுவாங்க!!!) அழகு!!! புடவை நன்றாக இருக்கும் அவங்களுக்கு.

    எல்லாமே மிகவும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. //அமெரிக்கா மெக்ஸிக்கோ பாதுகாப்பு சோதனைகள் அதிகம் அங்கிருந்து பலரும் அமெரிக்காவுக்குள் பிழைப்பிற்காக நுழைந்துவிடுவதால். குறிப்பாகத் தொழிலாளிகள். இது காலம் காலமாக நடந்துவருகிறது.//

    ஆமாம் கீதா

    //உங்க பதற்றம் புரிந்து கொள்ள முடிந்தது கோமதிக்கா. நம்மால் எல்லாருக்கும் பிரச்சனை ஆகிவடக் கூடாதே என்ற பதற்றம். அது மாறியதும் மகிழ்ச்சி!//

    ஆமாம் கீதா, புரிந்து கொண்டீர்கள் மகிழ்ச்சி.

    //அந்த்ப் பெண்கள் மற்றும் ஆண் மெக்ஸிக்கோவின் பாரம்பரிய உடையில் அழகா இருக்காங்க. அவங்க பாரம்பரிய உடை கிட்டத்தட்ட பழங்குடி மக்களின் உடை போல இருக்கு. ஆனா கொஞ்சம் கிராண்டாக!//

    ஆமாம்.

    //இசாபெல் (இசபெல் னு சொன்னா அவங்க வருத்தப்பட்டுடுவாங்க!!!) அழகு!!! புடவை நன்றாக இருக்கும் அவங்களுக்கு.//

    ஆமாம் , நன்றாக இருப்பார்கள் புடவையில்.

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    எல்லாமே மிகவும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா.

    பதிலளிநீக்கு
  15. படங்கள், தகவல்கள் என அனைத்துமே சிறப்பு தான்.

    புடவை கட்டிக்கொள்ள ஆசை - சிறப்பு.

    தொடரட்டும் கப்பல் பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள், தகவல்கள் என அனைத்துமே சிறப்பு தான்.

      புடவை கட்டிக்கொள்ள ஆசை - சிறப்பு.

      தொடரட்டும் கப்பல் பயணம்.//

      உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.

      நீக்கு
  16. இப்படியான கப்பல்களில் இவ்வளவு வசதிகளா! ஓ! ஒரு சின்ன நகரமே உள்ளடங்கி இருப்பது போன்று இருக்கிறது. சுற்றி நடந்தால் ஒரு மைல் என்றால் எவ்வளவு பெரியகப்பல். கப்பல் படங்கள் அதனுள் இருக்கும் விளையாட்டுகள் நடைப்பயிற்சிக்கான இடம் பால்கனி அங்கிருந்து கடலின் வியூ எல்லாமே மிகவும் சிறப்பு. வெளியிலிருந்து கப்பலைப் பார்க்கும் போது அடுக்குமாடிக் குடியிருப்பு போன்று இருக்கிறது.

    உங்கள் வழி இப்படியான கப்பலில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று பார்த்து தெரிந்து கொள்ள முடிகிற்து. எல்லாப்படங்களும் ரசித்துப் பார்த்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //இப்படியான கப்பல்களில் இவ்வளவு வசதிகளா! ஓ! ஒரு சின்ன நகரமே உள்ளடங்கி இருப்பது போன்று இருக்கிறது. சுற்றி நடந்தால் ஒரு மைல் என்றால் எவ்வளவு பெரியகப்பல். கப்பல் படங்கள் அதனுள் இருக்கும் விளையாட்டுகள் நடைப்பயிற்சிக்கான இடம் பால்கனி அங்கிருந்து கடலின் வியூ எல்லாமே மிகவும் சிறப்பு. வெளியிலிருந்து கப்பலைப் பார்க்கும் போது அடுக்குமாடிக் குடியிருப்பு போன்று இருக்கிறது.

      உங்கள் வழி இப்படியான கப்பலில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று பார்த்து தெரிந்து கொள்ள முடிகிற்து. எல்லாப்படங்களும் ரசித்துப் பார்த்தேன்.//

      ஆமாம், பெரிய கப்பலில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. நிறைய வேலைகளுக்கு இடையில் வந்து கப்பலை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  17. பிரமாண்டமான கப்பல். சுற்றிக் காட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பிரமாண்டமான கப்பல். சுற்றிக் காட்டியமைக்கு நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  18. விளையாட்டுகள்,கப்பலில் நடைப்பயிற்சி என மிகவும் நன்றாகஉள்ளது.

    மெக்சிக்கோநாட்டு பாரம்பரிய உடையுடன் வரவேற்பு அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஒளிந்து கொண்டு இருந்தது கருத்து இன்று தான் பார்த்தேன், மன்னிக்கவும்.

      //விளையாட்டுகள்,கப்பலில் நடைப்பயிற்சி என மிகவும் நன்றாகஉள்ளது.

      மெக்சிக்கோநாட்டு பாரம்பரிய உடையுடன் வரவேற்பு அழகாக இருக்கிறது.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு