திங்கள், 10 ஜூன், 2024

கார்னிவல் ரேடியன்ஸ் குரூஸ் (CARNIVAL RADIANCE CRUISE ) பொழுது போக்கு நிகழ்ச்சிகள்


மே மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்  வந்து கப்பலில் மெக்ஸிகோ வரை   பயணம் செய்தோம் . அது இங்கு தொடர் பதிவாக இடம்பெறுகிறது.

  முதல் பகுதி  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

இந்த பதிவில் கப்பலில் நடந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. நீங்கள் எல்லோரும் தொடர்ந்து வந்து படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அனைவருக்கும்.



கதை சொல்லும் முன் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வந்து குழந்தைகளை உற்சாகப் படுத்தினார்கள்.




சிறிது நேரம் விளையாட்டாக பேசி பின்  கதை சொல்லுதல் ஆரம்பித்தார்கள்.

"ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ"  டாக்டர் சியூஸ் தியோடர் சியூஸ் கீசல்  என்ற  புனைப்பெயரில்  எழுதிய   குழந்தைகள் புத்தகமாகும். 


சிறிய  நுண் உயிரை பாதுகாக்க போராடும் யானையின் கதை.

ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ!  இந்த குழந்தைகள் கதை விக்கிபீடியாவில் இருக்கிறது. படித்து பாருங்கள்.

கதையை அருமையாக சொல்கிறார் ஒருவர்.  யானை, கங்காரு, குரங்குகள் இரண்டு, கழுகு இவை கதை பாத்திரங்கள்.  அழகாய் நடித்தார்கள்.  இடை இடையே கதாபாத்திரகள் சத்தம் கொடுக்க சொன்னால் கதை கேட்கும் குழந்தைகள் அழகாய் சத்தம் கொடுத்தார்கள்.

யானை எப்படி நுண் உயிரை காப்பாற்றியது அவர் பேச்சை கேட்டு எல்லா விலங்குகளும் ஒத்து கொண்டது என்று பாருங்கள்.

கதையை வாசித்து விட்டு இந்த படங்களை பார்த்தால் நன்றாக இருக்கும்.




ஜனவரி 2018ம் வருடம் கப்பலில்  போட்ட நாடகம். கதை படிக்க நேரம் இல்லையென்றால் காணொளி கதை சொல்கிறது பார்க்கலாம்.

இது நான் எடுத்த  காணொளி

நானும் சின்ன  காணொளி எடுத்தேன் கேட்டுபாருங்கள்.




கழுகாய் நடித்தவர் ஓடும் போது குழந்தைகள் ஆரவாரம் செய்தார்கள்  குழந்தைகள் இருக்கை வரை ஓடி வந்தார்.






 புத்தகத்தின் முக்கிய கருப்பொருள், "ஒரு நபர் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் ஒரு நபர்" என்பது, தனிநபரின் முக்கியத்துவம் ஒரு அற்புதமாக கூறப்படுகிறது. கதையில் பல இடங்களில் இதையே கூறுகிறார்.


படங்கள் எடுக்க வேண்டும் கீழே இருந்தால் நிற்க முடியாது என்று மேலே இருந்து நாடகத்தைப்பார்த்து எடுத்தேன்
ரசித்துப்பார்க்கும் மகன் , மருமகள், பேரன். பேரன் பின்னால் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு குரல் கொடுத்தாள் ஒரு  சிறு பெண்.



மேலே இருந்து தூர பார்வையாக 




ஒரு அம்மா விளையாட்டில் ஜெயித்து கையை உயர்த்தி மகிழ்ச்சி அடைகிறார். உள்ளே போகாமல் வெளியிலிருந்து எடுத்த படம்.




மகிழ்ச்சியாக எல்லோரும் அட்டைகளில் குறித்து கொண்டு விளையாட்டில் கலந்து கொண்டார்கள்.  டீலா, நோ டீலா விளையாடுகிறார்கள்.



பிறந்த நாள் விழா  மேல் மாடியிலிருந்து கீழே எடுத்தேன்.


முதல் நாள் கேட்ட பாடல்  அனைவரும் ஆடினார்கள். '"நீங்களுமா என்று கேட்காதீர்கள்" நான் அமர்ந்து கைகளால் தாளம் போட்டேன்.


அடுத்த நாள் கேட்ட பாடல் ரசிக்கும் படியான இசை பாடி ஆடியவர் எல்லோரையும் ஆட சொன்னார், பக்கத்தில் யார் இருந்தாலும் தோளில் கை போட்டு ஆடுங்கள் என்றார்.




நாடகம் பார்த்து, இசை, கேட்டு மகிழ்ச்சியாக இருந்தனர், இப்படி மது அருந்தியும் மகிழ்ச்சி சில பேருக்கு


பீட்ஸா சாப்பிட்டுக் கொண்டே ஆடலை ரசிக்கும் குழந்தை


மாலை நேரம் மேல் தளத்தில் ஆட்டம் , சிறந்த ஆட்டத்திற்கு பரிசு உண்டு.


கடைசி நாள் உணவகத்தில் சமையல் செய்பவர்கள் பரிமாறும் பெண்கள், ஆண்கள் எல்லோரும் ஆடினார்கள்.

கேக்கிலிருந்து நெருப்பு வருவது போல எடுத்து போனார்கள்

 

கைபேசி  வெளிச்சத்தை காட்டி எல்லோரையும் ஆட வைத்தார்கள்.




மிகவும் திறமையானவர்களாக  இருக்கிறார்கள். சின்ன வட்ட மேஜையில் மிக அழகாய் ஆடினார்கள்.
நான் எடுத்த காணொளி சிறிய காணொளி அதில் மகன் காணொளி எடுப்பது தெரியும்




மகன் எடுத்தது ஆரம்பம் முதல் நிறைவு வரை  காணொளி  முழுவதும் எடுத்தார்.

இந்த காணொளியில் நான் காணொளி எடுப்பது தெரியும்.https://www.youtube.com/watch?v=jnPI9cV6YP4
எல்லோரும் கைதட்டி ஆராவரம்  செய்து ரசித்தனர்.

இரவு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது. ஞாயிறு இரவு. திங்கள் காலை  உணவுடன்  நாம் அங்கிருந்து கிளம்பி விடுவோம். கப்பலும் விரைவாக லாஸ் ஏஞ்சலை நோக்கி பயணம் செய்தது, அதனால் அனைவரும் ஆடும் போது கப்பல் ஆடியதை உணர முடிந்தது. அதற்கும் மகிழ்ச்சி போல ஆடுகிறது என்றேன் பேரனிடம்.

 
கடைசி நாளில் கப்பலிருந்து விடைபெற்று  வெளியே வரும் போது ஒரு காப்டன் இனிமையாக  பியோனோ இசைத்து கொண்டு இருந்தார்.

கப்பலில் நடந்த கேளிக்கைகள் நிறைவு பெற்றது . உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

 இன்னும் வரும் கப்பல் பயணம் தொடர்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

24 கருத்துகள்:

  1. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! எங்கெங்கும் கேளிக்கைகள். எல்லாவற்றையும் படம் பிடித்து கொடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! எங்கெங்கும் கேளிக்கைகள். எல்லாவற்றையும் படம் பிடித்து கொடுத்திருக்கிறீர்கள்.//

      மூன்று நாளும் நிறைய நடந்து கொண்டு இருந்தது.
      நாங்கள் பார்த்தவை மட்டும் தான் இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
  2. படங்களை ரசித்தேன். காணொளிகள் சுவாரஸ்யம். குறிப்பாக நடன காணொளி. உங்களையும், உங்கள் மகனையும் காண முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்களை ரசித்தேன். காணொளிகள் சுவாரஸ்யம். குறிப்பாக நடன காணொளி. உங்களையும், உங்கள் மகனையும் காண முடிந்தது.//

      நான் எடுத்த காணொளியில் மகனும், அவன் எடுத்த காணொளியில் நானும் இருப்போம்.
      படங்களை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. ஒவ்வொரு குழுவுக்கும் இப்படி ஆடி, பாடி அவர்கள் பியானோ வாசித்து விடைகொடுப்பது வழக்கமாகி இருக்கும்.  ஆனாலும் நேர்த்தியாக அலுப்பில்லாமல் செய்கிறார்கள் போல.  கப்பலே ஆடியபோது பயமாக இல்லையோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒவ்வொரு குழுவுக்கும் இப்படி ஆடி, பாடி அவர்கள் பியானோ வாசித்து விடைகொடுப்பது வழக்கமாகி இருக்கும். ஆனாலும் நேர்த்தியாக அலுப்பில்லாமல் செய்கிறார்கள் போல.///

      ஆமாம் . 9 மாதம் கப்பலில் இருக்க வேண்டும் ஊருக்கு போக முடியாது. ஒவ்வொரு பயணம் முடிந்தவுடன் ஒரு வாரம் தான் விடுமுறை என்றாலும் அடுத்த பயணத்திற்கு கப்பலை சரி செய்ய வேண்டும்.
      மூன்று மாத விடுமுறை கிடைக்கும் வரை அவர்களை அவர்கள் உற்சாக படுத்தி கொள்ள வேண்டும். கப்பலில் வரும் அன்பர்களை மகிழ்ச்சி படுத்தி அவர்களும் மகிழ்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      கப்பல் லேசாக ஆடியது. பயப்படும் படி ஆட வில்லை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      கப்பலே ஆடியபோது பயமாக இல்லையோ?!!

      நீக்கு
  4. சந்தோஷமான நிகழ்வுகள் என்றும் மனதில் நிற்கும்.

    படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி

      //சந்தோஷமான நிகழ்வுகள் என்றும் மனதில் நிற்கும்.

      படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.//

      ஆமாம், சந்தோஷமான நிகழ்வுகளை மனதில் நிற்கும், தேவை படும் போது பதிவை எடுத்து மீண்டும் நினைவு படுத்தி கொள்ளலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. கோமதிக்கா இந்தக் கதை வாசித்திருக்கிறேன். காணொளியும் கண்டேன். என்ன அழகாக நடிக்கிறார்கள். பயிற்சி எவ்வளவு செய்திருப்பார்கள்.

    கப்பலில் பணி புரிபவர்களுக்கு லீவு என்பதே சொற்பம் தான் 2 மாதமோ 3 மாதமோ கிடைக்கும் அப்ப தான் குடும்பத்தோடு இருக்க முடியும். அவர்களுக்கும் பொழுது போக வேண்டும் இப்படிச் செய்து கப்பலில் வரும் மக்களையும் குஷிப்படுத்திக் கொண்டு தங்களையும் உற்சாகமாக வைத்துக் கொள்வது நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா இந்தக் கதை வாசித்திருக்கிறேன். காணொளியும் கண்டேன். என்ன அழகாக நடிக்கிறார்கள். பயிற்சி எவ்வளவு செய்திருப்பார்கள்.//

      இந்த கதையை வாசித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      பயிற்சி இல்லாமல் எப்படி செய்ய முடியும் பயிற்சி எடுத்து இருப்பார்கள்.

      //கப்பலில் பணி புரிபவர்களுக்கு லீவு என்பதே சொற்பம் தான் 2 மாதமோ 3 மாதமோ கிடைக்கும் அப்ப தான் குடும்பத்தோடு இருக்க முடியும். அவர்களுக்கும் பொழுது போக வேண்டும் இப்படிச் செய்து கப்பலில் வரும் மக்களையும் குஷிப்படுத்திக் கொண்டு தங்களையும் உற்சாகமாக வைத்துக் கொள்வது நல்ல விஷயம்.//

      ஆமாம். சில கப்பல் பணியாளர்கள் பயணம் 6 மாதம் கடலில் இருப்பார்கள். 6 மாதம் விடுமுறை. இந்த மாதிரி பொழுது போக்கு கப்பலில் 9 மாதம் கப்பலில் இருக்க வேண்டும் என்று அங்கு பணிபுரிபவர் சொன்னார்.

      நீக்கு
  6. காணொளிகள் யுட்யூப் மற்றும் நீங்கள் எடுத்ததையும் கண்டேன்.

    புத்தகத்தின் முக்கிய கருப்பொருள், "ஒரு நபர் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் ஒரு நபர்" என்பது,//

    ஆமாம் எதுவும் சிறிதல்ல எதுவும் அற்பமானதல்ல.

    கப்பலிலும் காசினோ இருக்கு இல்லையா...

    எவ்வளவு நிகழ்ச்சிகள் விளையாட்டுகள்! என் மகனோடு பேசிய போது சொன்னேன், நகரும் நகரம். அவன் கேட்டான் கப்பலா?ன்னு கப்பல்ல எல்லாம் இருக்கும் என்று. அப்ப பதிவு பத்தி சொன்னேன்.

    '"நீங்களுமா என்று கேட்காதீர்கள்" நான் அமர்ந்து கைகளால் தாளம் போட்டேன்.//

    ஹாஹாஹா கோமதிக்கா அதனால என்ன கையை மட்டும் தூக்கி சும்மா அசைத்தாலே நடனம் தான்!!!! உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியுமாச்சு!.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் யுட்யூப் மற்றும் நீங்கள் எடுத்ததையும் கண்டேன்.//

      மகிழ்ச்சி.

      //ஆமாம் எதுவும் சிறிதல்ல எதுவும் அற்பமானதல்ல.//

      யாரையும் தூசி போல துச்சமாக நினைக்கதே! என்று பெரியவர்கள் சொல்வார்கள். தூசியும் அற்பம் இல்லை.

      //கப்பலிலும் காசினோ இருக்கு இல்லையா..//

      ஆமாம் கீதா, படம் போட்டு இருக்கிறேன்.

      //எவ்வளவு நிகழ்ச்சிகள் விளையாட்டுகள்! என் மகனோடு பேசிய போது சொன்னேன், நகரும் நகரம். அவன் கேட்டான் கப்பலா?ன்னு கப்பல்ல எல்லாம் இருக்கும் என்று. அப்ப பதிவு பத்தி சொன்னேன்.//

      மகனிடம் விடுகதை போல கேட்டீர்களா ! நல்லது.

      //ஹாஹாஹா கோமதிக்கா அதனால என்ன கையை மட்டும் தூக்கி சும்மா அசைத்தாலே நடனம் தான்!!!! உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியுமாச்சு!.//

      கையை மட்டும் தூக்கி காட்டினேன். சமையல் கலைஞர்கள் ஆடிய போது.
      இன்னொருவர் பாட்டு பாடி ஆடிய போது அமர்ந்து கை தட்டினேன்.
      அவைகளும் உடற்பயிற்சியில் அடங்கும் தானே கீதா.

      நீக்கு
  7. மகன் மருமகள் பேரன் கதை நிகழ்ச்சியைப் பார்ப்பதும், சமையல் கலைஞர்கள் ஆடுவதை உங்கள் மகன் காணொளி எடுப்பதும் தெரிந்தது நீங்களும் எடுப்பதும் தெரிந்தீர்கள். உங்கள் மகன் எடுத்த காணொளியில் என்று நினைக்கிறேன் மருமகள் மகிழ்ச்சியுடன் ஆடுவதும் தெரிந்தது.

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கேளிக்கை நிகழ்ச்சிகள் மிக அருமை. படங்கள் காணொளிகள் எல்லாமே ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. யுட்யூபிலும் கண்டேன்.

    மிகவும் இனிய சந்தோஷமான நிகழ்வுகள் தருணங்கள். மனதில் என்றும் இவை பசுமையான நினைவுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் மருமகள் பேரன் கதை நிகழ்ச்சியைப் பார்ப்பதும், சமையல் கலைஞர்கள் ஆடுவதை உங்கள் மகன் காணொளி எடுப்பதும் தெரிந்தது நீங்களும் எடுப்பதும் தெரிந்தீர்கள்.
      உங்கள் மகன் எடுத்த காணொளியில் என்று நினைக்கிறேன் மருமகள் மகிழ்ச்சியுடன் ஆடுவதும் தெரிந்தது.//

      ஆமாம் கீதா.

      //ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கேளிக்கை நிகழ்ச்சிகள் மிக அருமை. படங்கள் காணொளிகள் எல்லாமே ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. யுட்யூபிலும் கண்டேன்.//

      அனைத்தையும் பார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      //மிகவும் இனிய சந்தோஷமான நிகழ்வுகள் தருணங்கள். மனதில் என்றும் இவை பசுமையான நினைவுகள்!//

      ஆமாம் கீதா.

      நீக்கு
  8. கார்னிவல் என்ற கப்பலின் பெயருக்கு ஏற்ப கப்பலில் நடந்த ஆட்டம் பாட்டம், நடனம் ஆகியவை ஒரு கார்னிவல் தான். படங்களும் காணொளியும் நன்றாக உள்ளன. ஒரு டிக்கெட் 3000 டாலர் இருக்குமா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன். வாழ்க வளமுடன்

      //கார்னிவல் என்ற கப்பலின் பெயருக்கு ஏற்ப கப்பலில் நடந்த ஆட்டம் பாட்டம், நடனம் ஆகியவை ஒரு கார்னிவல் தான். படங்களும் காணொளியும் நன்றாக உள்ளன//

      நன்றி.

      . //ஒரு டிக்கெட் 3000 டாலர் இருக்குமா?//

      தெரியவில்லை. மகனிடம் கேட்டால் எதற்கு உங்களுக்கு என்று சொல்வார். நாம் செலவு செய்ய யோசிக்கும் தலைமுறையை சேர்ந்தவர்கள். அதனால் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.
      இணையத்தில் பார்க்க வேண்டும் டிக்கெட் விவரம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. கடல் - கப்பலில் யாத்திரையின் அழகான படங்களும் காணொளிகளும் கூடவே கப்பலில் யாத்திரை செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அத்தனையும் மிக் அருமை. கப்பல் பணியாளர்களுக்கும் பொழுது போக்கு வேண்டுமே இப்படி மக்கள் வரும் போது அவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்தான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //கடல் - கப்பலில் யாத்திரையின் அழகான படங்களும் காணொளிகளும் கூடவே கப்பலில் யாத்திரை செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.அத்தனையும் மிக் அருமை.

      நன்றி.


      //கப்பல் பணியாளர்களுக்கும் பொழுது போக்கு வேண்டுமே இப்படி மக்கள் வரும் போது அவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்தான்//

      ஆமாம், அத்தனை பேரும் மலர்ந்த முகத்தோடு இருப்பது பெரிய சிறப்பு. கப்பலில் பணியாளர்கள் எல்லோருமே நம்மை பார்த்து சிரிந்து இந்தியாவில் எந்த ஊர் என்று கேட்பார்கள்.
      சிலருக்கு தெரிகிறது தமிழ் நாடு, சென்னையா என்று கேட்டார்கள்.
      நம் புடவை நன்றாக இருப்பதாக சொல்வார்கள்.

      அவர்கள் நம்மை பார்த்து மகிழ்ச்சி அடைவது உண்மை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. இது போன்ற பயணங்கள் மனதுக்கு உற்சாகம் தருபவை. இப்படியான ஒன்றிரண்டு மணி நேர பயணங்கள் சென்ற நினைவு இன்னும் நினைவில் பசுமையாக!

    தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      நலமா? வெகு நாட்கள் ஆச்சே !

      //இது போன்ற பயணங்கள் மனதுக்கு உற்சாகம் தருபவை. இப்படியான ஒன்றிரண்டு மணி நேர பயணங்கள் சென்ற நினைவு இன்னும் நினைவில் பசுமையாக!//

      ஆமாம். மனதுக்கு இதம் தரும் கடல் பயணம் மனதில் , நினைவில் பசுமையாக இருக்கும்.

      //தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்.//

      உங்கள் தொடர்களும் தொடரட்டும்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.



      நீக்கு
    2. நலம் தானம்மா. இரண்டு மாதங்கள் திருச்சி வாசம். இந்த வாரம் தான் தில்லி திரும்பியிருக்கிறேன்.

      நீக்கு
    3. நல்லது வெங்கட், இரண்டு மாதங்கள் இருந்தது உங்கள் பெற்றோர் சகோதரி, ஆதி, ரோஷ்ணிக்கு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.
      வெயில் கடுமையாக இருக்கும் டெல்லியில். பார்த்து கொள்ளுங்கள்.
      நன்றி மீண்டும் வந்து பதில் சொன்னதற்கு வெங்கட்.

      நீக்கு
  11. காட்டூன் கதாபாத்திரங்கள் திறம்பட செய்திருக்கிறார்கள் குழந்தைகள் மிகவும் கவரப்பட்டு இருப்பார்கள்.

    ஆட்டம்,பாட்டம்,விருந்து, சமையல் கொண்டாட்டம் என சகலமும் அசத்தலாக இருக்கிறது .

    படங்கள,காணொளி என காணத் தந்துள்ளீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //காட்டூன் கதாபாத்திரங்கள் திறம்பட செய்திருக்கிறார்கள் குழந்தைகள் மிகவும் கவரப்பட்டு இருப்பார்கள்.//

      குழந்தைகள் மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்தார்கள். சிறந்த கதை சொல்லி கதை சொன்னவர், நடித்தவர்கள் அருமையாக நடித்தார்கள்.

      ஆட்டம்,பாட்டம்,விருந்து, சமையல் கொண்டாட்டம் என சகலமும் அசத்தலாக இருக்கிறது .

      //படங்கள,காணொளி என காணத் தந்துள்ளீர்கள் நன்றி.//

      படங்களை காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு