
எங்கள் வீட்டில் இன்று காலை வழிபாடு வரலக்ஷ்மிக்கு
கோதுமை ரவை பால் பாயாசம்.
1961 ல் வந்த பாக்கியலக்ஷ்மி திரைப்படத்தில் ராதா ஜயலக்ஷ்மி இருவரும் இனிமையான குரலில் பாடியது. ஒவ்வொரு வரலக்ஷ்மி பண்டிகை அன்றும் வானொலி, மற்றும் வீடுகளில் ஒலிக்கும் பாடல். பாடலை எழுதியவர் வி. சீதாராமன் அவர்கள்.
இந்தப் பாடல் மிக நன்றாக இருக்கும். அஷ்டலக்ஷ்மிகளையும் பற்றிப் பாடுவார்
வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து நலங்களையும் அஷ்டலக்ஷ்மி தருவாள் என்பார்கள். அப்படி அடியார்கள் கேட்கும் வரங்களை அள்ளித் தருபவள் வரலக்ஷ்மி.
எதிர் வீட்டில் வருடா வருடம் வரலக்ஷ்மி பண்டிகைக்கு வெற்றிலைப்பாக்கு , மஞ்சள் குங்குமம் எடுத்துக் கொள்ள கூப்பிடுவார்கள். அவர்கள் வீட்டு அம்மன்.
எல்லோருக்கும் எல்லா மங்களங்களையும் நிறைவான செல்வத்தையும் தந்தருள வேண்டும்.
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
==============================================================
வரலட்சுமி நோன்பு படங்கள் அருமை.
பதிலளிநீக்குகோதுமை ரவை பாயசம் - உடலுக்கும் மிக நல்லது.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குகோதுமை ரவை பாயசம் உடலுக்கு மிக நல்லதா மகிழ்ச்சி.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நல்லோர் அனைவருக்கும் அன்னை நல்லருள் பொழிவாளாக!..
பதிலளிநீக்குநலங்கொண்டு வாழ்க!...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
வரலட்சுமி எல்லாருக்கும் அருள் புரியட்டும்
பதிலளிநீக்குராதா ஜெயலட்சுமி பாட்டு இப்பத்தான் கேட்கிறேன் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா
கோதுமை ரவை பாயாசம் பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு. சுவையாவும் இருக்கும்.
பாடல்களையும் ரசித்தேன் கோமதிக்கா. இரண்டாவது பாட்டும்
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குவரலட்சுமி எல்லோருக்கும் அருள்புரியட்டும்
ராதா ஜெயலட்சுமி, சீர்காழி பாடலை ரசித்து கேட்டதது மகிழ்ச்சி.
//கோதுமை ரவை பாயாசம் பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு. சுவையாவும் இருக்கும்.//
நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
வரலட்சுமி உலகை இத்தொற்றிலிருந்து காத்திட வரம் கொடுத்து அருளட்டும்!
பதிலளிநீக்குதுளசிதரன்
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொன்ன மாதிரி தொற்றிலிருந்து உலகை காக்க வேண்டும்
பிரார்த்தனை செய்து கொள்வோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பு கோமதிமா.
பதிலளிநீக்குவரலக்ஷ்மி அனைத்து நல் வரங்களையும்
அள்ளித் தருவாள்.
பாடல்களும் பாயசமும் இனிமை.
நாளுக்குத் தக்க இசை மனதை நிரப்புகிறது.
கானமும் கவிதையும் தரும் செந்தாமரை மலராள்.
என்ன இனிமை அம்மா. நன்றி நன்றி,.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஇப்போது மக்களுக்கு பலவிதமான இன்னலகள் அனைத்தையும் அன்னை கடை கண் பார்வையால் சரி செய்ய வேண்டும் அதுதான் அழுத்தமான பிரார்த்தனை.
காலை இனிப்பு போடாமல் கோதுமை ரவை பால் கஞ்சி, இனிப்பு போட்டு அம்மனுக்கு பாயசம். நமக்கு ஒத்துக் கொள்வதை அம்மனுக்கு படைக்கும் காலம் ஆச்சு.
பாடல்கள் மனதுக்கு இதம் தருகிறது என்பது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஉங்கள் வீட்டு வரலக்ஷ்மி அம்மன் அலங்காரம் நன்றாக உள்ளது. லக்ஷ்மி பூஜை சிறப்பாக கழிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. கோதுமை ரவா பாயசம் நன்றாக உள்ளது. அம்மனும் தாங்கள் அன்புடன் அளித்த நிவேதனத்தை அமிர்தமாக புசித்து மகிழ்ந்திருப்பார். எல்லோரையும் அம்மன் சகல இடர்களிலிருந்து காத்து ரட்சித்து அருள வேண்டுமாய், நானும் தாங்கள் அழகாக அலங்கரித்த தங்கள் வீட்டு அம்மனை பக்தியுடன் நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
என் பேத்தி ஜுரம் குறைந்து நலம் பெற வேண்டுமென தாங்கள் மனதாற பிரார்த்தித்து கொண்ட தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குலக்ஷ்மி பூஜை இறைவன் அருளால் நல்லபடியாக காலை ஆச்சு.
//அம்மனும் தாங்கள் அன்புடன் அளித்த நிவேதனத்தை அமிர்தமாக புசித்து மகிழ்ந்திருப்பார்.//
அன்னைக்கு நிறைய வீடுகளில் மிக விமர்சையாக நிவேதனங்கள் இருந்து இருக்கும்.
இங்கு கொஞ்சம் பழங்களும் கோதுமை ரவை பாயசம் மட்டும் தான். அன்னை மகிழ்ந்து இருப்பாள் என்று நீங்கள் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அன்னை சகல இடர்களிலிருந்து காக்க வேண்டும் என்று பிரார்த்திக் கொள்வோம்.
உங்கள் பேத்தி விரைவில் உடல் பெற்றது மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லையென்றால் நம் மனம் என்ன பாடு படும்? இப்போது நலம் பெற்றதும் மகிழ்ச்சியாக இருக்கிறது தானே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
அம்மன் பூஜை கோதுமை ரவை பாயாசத்துடன் ஆரோக்ய பூஜை ஆயிற்று. படங்களும் பாடல்களும் அழகு. வரலக்ஷ்மி வருவாய் அம்மா என் சி வசந்தகோகிலம் பயாடிக் கேட்டிருக்கிறேனோ? நல்ல பாடல்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொன்னது போல் ஆரோக்ய பூஜைதான்.
படங்களையும், பாடல்களையும் ரசித்தமைக்கு நன்றி.
வசந்த கோகிலம் அவர்கள் பாட்டு கேட்டு இருக்கிறேன்.
தேனினும் இனியவளே சிந்தையில் உறைபவள் கேட்டு எத்தனை நாளாச்சு... செந்தாமரை மலராள்... ஆஹா...
பதிலளிநீக்குசீர்காழி அவர்களின் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி கேட்பேன்.
நீக்குபாடல்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் புது வீட்டில் வரலட்சுமி பூஜை சிறப்பாய் நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
வழிபாடும் படங்களும் அருமை. அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டுமாக.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆமாம், அனைவருக்கும் அன்னையின் அருள் வேண்டும் இப்போது கண்டிப்பாய், அன்னை அருள வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அனைத்தும் அருமையாக இருந்தது அம்மா...
பதிலளிநீக்குபாடல்கள் இரண்டும் சிறப்பு...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை, பாடல்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அன்னை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். பாயசம் அருமையாக இருக்கும் போல...
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம், அனைவருக்கும் அன்னை அருள் கிடைக்கட்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்னை வரலக்ஷ்மி அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.
பதிலளிநீக்குபாடல்களும் கேட்டு ரசித்தேன் மா.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
நீக்கு//அன்னை வரலக்ஷ்மி அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.//
ஆமாம், அதுதான் வேண்டும்.
பாடல்கள் கேட்டு ரசித்தமைக்கு நன்றி
உங்கள் கருத்துக்கு நன்றி.
ராதா ஜயலக்ஷ்மியின் இந்தப் பாடலும் சீர்காழியின் பாடலும் இப்போத் தான் கேட்டேன். அருமையான பாடல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. லக்ஷ்மி வழிபாட்டுப் படங்களும் நன்றாக உள்ளது. நானும் வரலக்ஷ்மி நோன்பு இல்லை என்றாலும் பழம், வெற்றிலை, பாக்கோடு ஏதேனும் பாயசம் வைத்து நிவேதனம் பண்ணிடுவேன். அன்னை அனைவருக்கும் தன் அருளால் மன ஆறுதலையும் நிம்மதியான இயல்பு வாழ்க்கையையும் கொடுக்கட்டும்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//ராதா ஜயலக்ஷ்மியின் இந்தப் பாடலும் சீர்காழியின் பாடலும் இப்போத் தான் கேட்டேன்.//
கேட்டதற்கு நன்றி.
எங்களுக்கு வரலட்சுமி நோன்பு செய்யும் வழக்கம் இல்லை என்றேன்.
//அன்னை அனைவருக்கும் தன் அருளால் மன ஆறுதலையும் நிம்மதியான இயல்பு வாழ்க்கையையும் கொடுக்கட்டும்.//
அதுதான் எல்லோரும் விரும்பும் பிரார்த்தனை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
எங்க மாமியார் வீட்டிலும் வரலக்ஷ்மி நோன்பு இல்லை. ஆனாலும் நான் முன்னெல்லாம் கொழுக்கட்டை, வடை, பாயசம் நிவேதனம் பண்ணுவேன். அண்ணா வீட்டில் நோன்புச் சரடு கட்டி விடுவாங்க. இப்போல்லாம் நோன்புச் சரடு கட்டிக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் பாயசம் மட்டுமாவது நிவேதனம் செய்வேன். நான் எழுதினதைச் சரியாக எழுதவில்லை. :)))))
நீக்குமாயவரத்தில் பக்கத்து வீடுகளில் கொழுக்கட்டை , வடை, பாயசம் எல்லாம் கொடுப்பார்கள்.
நீக்குநோன்பு சரடு கிடையாது. ஆடிப்பெருக்கு அன்று எல்லோரும் எல்லோருக்கும் மஞ்சள் சரடு கட்டி விடுவார்கள்.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.