ஞாயிறு, 5 ஜூலை, 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் - நிறைவுப் பகுதி

அடுத்த பதிவில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும்  'குரு நிவாஸ்' . மிக அழகாய் பாக்குமரமும், அதைச் சுற்றி மிளகுக்கொடி  படர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டே  போகலாம்.   பல மரங்களும்  சூழ்ந்து இருக்கும் இடத்தில் அமைந்து இருக்கிறது "குருநிவாஸ்" என்ற பெயரில்  அழகிய பிரம்மாண்ட கட்டிடம். அங்கே ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதிதீர்த்தசுவாமிகளைப் பார்க்கப்  போகலாம் என்று சொன்னேன் .

இந்தக் கதவு திறந்தால்தான் அக்கரையில் இருக்கும் குருவைப்பார்க்கப் போக முடியும்.  மாலை திறக்கும் வரை காத்து இருந்தோம். மாலை 3.30க்கோ 4.30க்கோ திறந்தது.(சரியாக நினைவு இல்லை) கதவு திறந்து விட்டது, வாங்க! போகும் வழியின் அழகைப் பார்த்துக் கொண்டு செல்வோம்.


அழகிய பாலம் - பாலத்திலிருந்து  அக்கறையில் உள்ள கோவில் தெரியும் அழகிய காட்சி . 

                                            தங்கை பிரியசகிக்காக என்  படம் 

       இரு மருங்கிலும் பாக்கு மரங்களும் அதில் படர்ந்த மிளகுக் கொடியும் அழகு


                                                                 யானை வருகிறது


                                    யானையிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள் சிலர்

மிளகுக் காய்கள் -கொத்துக் கொத்தாக


பழுத்த மிளகு

மரத்தைத் தழுவிப்படரும் கொடிகள் பின்னிப் பிணைந்து விட்டது. இனி பிரிக்க முடியாது



'குருநிவாஸ்'  நேரே போய் எடுக்கலாம் என்றால் என் கணவர் இங்கு படம் எடுக்கவேண்டாம், காமிராவை உள்ளே வை என்று சொல்லி விட்டார்கள் அதனால் ஒரளவுதான் பிரம்மாண்டமான கட்டிடத்தை எடுத்து இருக்கிறேன்.

உள்ளே எல்லோரும் அமைதி காத்து அமர்ந்து இருந்தோம்.  வேதபாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,   எங்கள்குழு என்று நிறைய பேர்  இருந்தார்கள். எல்லோரும் சில பாடல்கள் பாடினார்கள் குருவை வாழ்த்தி.
பாரதி தீர்த்தசுவாமிகள் இயற்றிய 
விஷ்ணுதுதியின் முதல் பாடல்
  நன்றாக இருக்கும் இந்தப் பாடலைப்  பாடினார்கள். சங்கரா தொலைகாட்சியில் 'குருவந்தனம்' என்று இந்தப் பாடல் போடுவார்கள் . இந்த குழந்தை, பாடலுக்கு அபிநயம் செய்கிறாள் அழகாய்.

(இந்தப் பாடலை எனது பேரனுக்கு அவன் பாட்டு வாத்தியார்  சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் அவனும் பாடுவான் நன்றாக.)

பிறகு குரு பாரதிதீர்த்தசுவாமிகள்  வந்தார்கள் எல்லோரும் எழுந்துவணங்கினோம். எல்லோரையும் பார்த்துப் புன்னகையோடு ஆசீர்வாதம் செய்தார்.

நன்றி - கூகிள்.

பிறகு ஒருவர் பின் ஒருவராகப் பக்கத்தில் போய் வணங்கி ஆசிர்வாதம் பெற்று வெளியில் வந்தோம், அங்கு கற்கண்டு பிரசாதம் கொடுத்தார்கள்.

குருநிவாஸ் இருக்கும் இடத்தில் உள்ள துங்காநதிக்கரை படியில் இறங்ககூடாது என்று தடுப்பு வைத்து இருக்கிறார்கள்.

கோவில் பக்கம் உள்ள  கரை. படகையும் அக்கரைக்குச் செல்லப் பயன்படுத்துவார்கள் போலும்

எருமை மாட்டின் மேல் சவாரி செய்யும் காகங்கள்-  மாடுகள் வாலால்    விரட்டப் பார்ப்பதை இரண்டு காகங்கள் வேடிக்கை பார்க்கின்றன.
தாய் எருமையிடம் பால் அருந்தும் கன்றுக்குட்டி. பறந்து கொண்டும், அமர்ந்து கொண்டும் காகங்கள். 
மாலைச் சூரியன் -அவரையும் வணங்கி விடைபெற்றோம்

குருநிவாஸிலிருந்து வரும் வழி எல்லாம் கிடைத்த காட்சிகளை   ரசித்து கொண்டு கற்கண்டு பிரசாதத்தைச் சுவைத்துகொண்டு, குருதரிசனம் கிடைத்ததை எண்ணியும் , மீண்டும்   அன்னை சாரதையின் அருளாசியை வேண்டிக் கொண்டும்,  சிருங்கேரி தந்த       இனிமையான நினைவுகளை மனதில் தேக்கிக் கொண்டும் திரும்பினோம்.


வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

36 கருத்துகள்:

  1. குரு நிவாஸ் பற்றிய தகவல்கள் அருமை.
    படங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கிறது சகோ
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      பதிவு, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  2. அழகான காட்சிகள். உங்களுடன் நாங்களும் பயணித்தோம்.

    நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. குரு நிவாஸின் படங்கள், செல்லும் வழி படங்கள் அனைத்தும் அழகாக எடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு படங்களை பார்த்ததும் நாங்கள் சென்று வந்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் நாங்கள் சென்ற சமயம் சற்று இருட்டி விட்டது. மிளகு கொடி படங்கள் அழகாக இருக்கின்றன.

    அருமையான பயணத்தை மிகவும் அழகாக ரசித்து விவரமாக கூறியிருக்கிறீர்கள். உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து வந்ததில், சிருங்கேரிக்கு உங்களுடன் சென்று சராதாம்பிகையையும், ஸ்ரீ குருவையும் தரிசித்த திருப்தி எனக்கும் கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      உங்கள் நினைவுகள் மீட்டி விட்டதா பதிவு மகிழ்ச்சி.
      நானும் உங்களைப் போல் என் நினைவுகளை மீட்டிப் பார்த்து மகிழ்ந்தேன்.
      இருட்டும் போது நாங்கள் கோவிலை விட்டு வெளியே வந்து விட்டோம்.


      //சராதாம்பிகையையும், ஸ்ரீ குருவையும் தரிசித்த திருப்தி எனக்கும் கிடைத்தது.//

      உங்கள் அன்பான கருத்துக்கு மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  4. இரண்டு பக்கமும் உயர்ந்த மரங்கள், பழுத்த மிளகு என படங்கள் அனைத்தும் அழகு...

    மாலைச் சூரியன் ஆகா...!

    அருமையான நடனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      குழந்தை நன்றாக ஆடினாள்.
      படங்கள் அனைத்தையும் , மாலைச்சூரியனையும், நடனத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. அழகான படங்கள்..
    குரு தரிசனம் அருமை..

    குரு வந்தனம் பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன்...

    அதன் இனிமையே இனிமை...

    சிருங்கேரி தலத்துக்கு உங்களுடன் வந்தது போல் இருக்கிறது...

    மகிழ்ச்சி.. நன்றி..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      பாடல் கேட்டு இருப்பீர்கள் என்று தெரியும் அந்த பெண் நடனம் பார்த்தீர்களா?
      பாடல் நல்ல இனிமைதான்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. படங்கள் மிக அழகு.

    மிளகுக்கொடிகள் அருமை. பச்சை மிளகு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.

    சங்கராச்சாரியரை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லையா? எடுக்காமல் இருப்பது மரபா (சிருங்கேரியில்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      மிளகுக்கொடிகள் கேரளாவில் அதிகம் இருக்கும் என்பார்கள், கர்நாடகாவிலும் அதிகமாய் இருக்கிறது.

      //சங்கராச்சாரியரை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லையா? எடுக்காமல் இருப்பது மரபா (சிருங்கேரியில்?)//

      யாரும் எடுக்காதீர்கள் என்று சொல்லவில்லை, புகைப்படம் எடுக்காதீர்கள் என்ற அறிவிப்பு பலகையும் பார்க்கவில்லை. யாரும் படம் எடுக்கவில்லை.
      அதனால் சார் எடுக்கவேண்டாம் என்று சொன்னதால் எடுக்கவில்லை.

      நீக்கு
  7. குரு நிவாஸ் படங்கள் அழகு.  உங்களையும் ஸாரையும் கண்டு மகிழ்ந்தோம்.  வழியெங்கிலும் காட்சிகள் அழகு.  நிறைந்த நீருடன் துங்கா நதிப் படங்களும் அழகு.  சிறு கரை இருக்கும் இடத்தில காணப்படும் படகு விளையாட்டு பொம்மை போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      துங்கா நதி இருகரையை தொட்டு ஓடும் போலும் முன்பு. இப்போது கொஞ்ச இடங்களில் தண்ணிர் இல்லை.ஓடும் நதியும் சுத்தமாக அழகாய் இருப்பது அழகுதான்..

      //படகு விளையாட்டு பொம்மை போல இருக்கிறது!//

      பார்க்க விளையாட்டு பொம்மை போல்தான் இருக்கிறது.

      நீக்கு
  8. குழந்தையின் நடனம் தேர்ந்த கலைஞர் போல இருக்கிறது.  என்ன ஒரு பாவங்கள்...   

    அதே பாடலைக் கற்றுக்கொண்டிருக்கும் உங்கள் பேரனுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை நன்றாக ஆடினாள் அவள் முகபாவங்கள் நன்றாக இருந்தது என்பதால்தான் இங்கு பகிர்ந்தேன்.

      இன்று காலை சொன்னேன் பதிவில் நீ பாடும் குரு வந்தனம் பாட்டு போட்டு இருக்கிறேன் என்று. உடனே பாடி காட்டினான்.
      உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  9. கொடி ஆதரவுக்காக மரத்தைத் தழுவி இருந்தாலும், மரத்துக்கே அது பாதுகாப்பு அரண் போல இருக்கிறது பார்க்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்குக் கிளை பாரமா, கொடிக்கு காய் பாரமா பெற்ற குழந்தை தாய்க்கு பாரமா?

      நீக்கு
    2. ஸ்ரீராம், நீங்கள் சொல்வது சரிதான் ஆலம் விழுதுகள் ஒரு கட்டத்தில் மரத்திற்கு பாதுகாப்பாய் மாறி போகும். அது போல் இந்த மரத்திற்கு அந்த கொடிகள் பக்கபலமாக இருக்கும். வயதான பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பாதுகாப்பு அரணாக மாறுவதைப்போல்!

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    3. //மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்குக் கிளை பாரமா, கொடிக்கு காய் பாரமா பெற்ற குழந்தை தாய்க்கு பாரமா?//

      தாய்க்கு பாரம் இல்லை.மரத்தை சுற்றி படர்ந்து இருக்கும் கொடிக்கு இந்த பின்னூட்டமா?

      தாயை பின்னி பிணைந்து இருக்கும் குழந்தையின் கைகளா? அதை பிரிக்க வேண்டாம்.
      தாய்மரத்திற்கு கொடி பாரமில்லை.

      இன்று காலை முரசு டி.வியில் இந்த பாடல் போட்டார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. படங்கள் மிக அழகாக இருக்கின்றன. விவரணங்களும். ஸ்வாமிகளைக் கண்டு அவர் ஆசிர்வாதம் கிடைத்தது மகிழ்ச்சி. அப்பெண் குழந்தை என்ன கலைநயத்துடன் நடனமாடுகிறாள். ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      அடுத்து அடுத்து கோவில் திட்டங்கள் வகுத்து இருந்தார்கள். அவரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க வசதியாக பயணத்திட்டம் வகுத்து இருந்தது மகிழ்ச்சி.
      ஆமாம், குழந்தை அழகாய் ஆடுகிறாள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
  12. கோமதிக்கா படங்கள் அசத்தல். குருநிவாஸ் செல்லும் வழி செமையா இருக்கு. பச்சை பச்சையாக!. இடமே அழகாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      குருநிவாஸ் செல்லும் வழி அழகுதான் கீதா, இடமும் அழகுதான்.

      நீக்கு
  13. துங்கபத்திரா நதி பார்க்கவே அழகுதான். இறங்க அனுமதியில்லாதது ஒருவிதத்தில் நல்லதே.

    எருமை மாட்டின் மீது காகங்கள் சவாரி செய்வது நிறைய பார்த்து ரசித்ததுண்டு. இங்கும்..

    குட்டிப் பெண்ணின் காணொளி பல முறை கண்டிருக்கிறேன் கோமதிக்கா யுட்யூபில். பார்த்து பார்த்து ரசித்ததுண்டு. என்னமா ஆடுது குழந்தை. என்ன ஒரு BHAவம் முகத்தில் அத்தனை எக்ஸ்ப்ரெஷன்ஸ் அது போல உடம்பும் டக் டக்குன்னு வளையுது முத்திரை பிடித்து ஆடுதல் எல்லாமே நளினம். நல்ல நடனக்கலைஞராக வர வாய்ப்பு அதிகம்.

    படகு இருக்கும் படம் செம!!

    ரசித்தே அனைத்தையும் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. நதியின் அழகை, மாடுகள், காகம், படகு, மற்றும் குழந்தையின் நடன காணொளி எல்லாம் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
    நீங்கள் சொல்வது போல் நல்ல நடனக்கலைஞராக வர வாய்ப்பு இருக்கிறது தான்.
    குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. குரு நிவாஸ் பக்தியைத் தூண்டுகிறது. ஓங்க் நிற்கும் மரங்களும்
    மேலே படர்ந்து இருக்கும் கொடிகளும்
    மிளகுச் செடிகளும் பரிபூரண அழகு.
    ஸ்வாமிகள் மான் களுக்கு பழங்கள் கொடுப்பது போல்
    முன்பு ஜயா தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.

    என்ன ஒரு பசுமை. துங்க பத்ரா அழகும் உங்கள் இருவரின்
    படமும் ,பாலமும்,
    ஸ்ரீவித்யா தாயாரின் படமும் மிக அருமை.
    நீங்கள் பதிவிட்டிருக்கும் காணொளியில்
    அந்தக் குழந்தை மிக அழகாக ஆடுகிறது.
    பேரனும் இந்தப் பாடலைப் பாடுவதில்
    மிக மகிழ்ச்சி.வாழ்க வளமுடன் கோமதி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

    //ஸ்வாமிகள் மான் களுக்கு பழங்கள் கொடுப்பது போல்
    முன்பு ஜயா தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.//

    ஆமாம் அக்கா, நானும் பார்த்து இருக்கிறேன்.
    காணொளி, படங்கள் , பதிவு எல்லாவற்றையும் ரசித்து
    அன்பாக கருத்து அழகாய் சொன்னதற்கு நன்றி அக்கா.
    பேரனுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு
  17. படங்களும் பகிர்வும் நன்று. அமைதியாய் ஓடும் துங்கா நதிக்கு அருகே செல்ல முடியவில்லை போலும்.

    கேமரா இது போன்ற சில இடங்களில் பயன்படுத்துவது சிரமமே.

    சிறுமியின் நடனமும் முகபாவங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      பாலத்திலிருந்து எடுத்த படம், எல்லோருடன் வேகமாக நடக்கும் போது எடுத்த படம்.
      கேமாரவை பயன்படுத்தலாமா கூடாதா என்பதும் தெரியாமல் எடுத்த படங்கள்
      அதனால் அவசர படங்கள்.

      சிறுமியின் நடனம் , முகபாவங்கள் அருமைதான்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. முதல் படம் அழகா இருக்கு. இரு மருங்கும் பாக்குமரங்களும் அதில் மிளகு கொடி படர்ந்து இருப்பது பார்க்க அழகா இருக்கு. கடைசிதடவை ஊருக்கு போய் சுற்றுலா சென்றபோதுதான் நான் மிளகு கொடி நேர்டியாக பார்த்தேன்.
    சூப்பரா இருக்கீங்க அக்கா. கேட்டதற்கிணங்க படம் போட்டமைக்கு மிக்க நன்றி. நாந்தான் லேட்டாக வந்துவிட்டேன்.சாரி.
    சிறுமியின் நடனம் மிக அருமையாக இருக்கு. அழகான சிறுமியும் கூட.
    எருமைமட்டின் மேல் காகங்கள் பார்க்க பரவசமாக இருக்கு. அழகான இடம். இப்படியான காட்சிகள் ஊரில்தான் கிடைக்கும். சிலது சில நேரம் ச்லித்துவிடும். ஆனா சலிக்காமல் பார்க்க கூடியது இந்த இயற்கை ஒன்றுதான். வாழ்க்கை சுவாரஸ்யமாக்க உதவுகிறது.
    குருநிவாஸ் அமைதியான சூழல் கொண்ட இடமாக இருக்கிரது. அழகாகவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்
    இலங்கையில் மிளகு கொடி இருக்கும், மழை பெய்து கொண்டே இருக்கும் இடத்தில் செழித்து வளரும் என்பார்கள்.

    என் படம் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    சிறுமி மிக அழகாய் இருப்பதுடன் மிக அழகாய் ஆடவும் செய்கிறாள் இல்லையா!
    ஊரில் பார்த்த காட்சிகள் இந்த பதிவில் கிடைத்ததா மகிழ்ச்சி அம்மு.


    நீங்கள் சொல்வது போல் இயற்கை காட்சிகள் எப்போதும் அலுக்காது.

    உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அம்மு.

    பதிலளிநீக்கு
  20. தகவல்கள் அருமை. நாங்களும் அங்கே இருந்த நாட்களில் அநேகமாய்த் தினமும் போனோம். அந்தச் செல்லும் வழியில் உள்ள வனத்தை நரசிம்ம வனம் என்கின்றனர். ஆங்காங்கே மாணவர்கள் இயற்கைச் சூழலில் அமர்ந்து படிப்பதைப் பார்க்கப் பார்க்க நமக்கும் ஆவல் வரும். நாங்கள் அநேகமாய்க் காலை வேளையிலேயே சென்றதால் வாயில் திறந்தே இருந்தது. படங்கள் எல்லாம் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். உங்கள் இருவர் படமும் நன்றாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் , வாழ்க வளமுடன்
      ஆமாம், நீங்கள் தினம் போனீர்கள் என்று போன பதிவில் சொன்னீர்கள்.

      //மாணவர்கள் இயற்கைச் சூழலில் அமர்ந்து படிப்பதைப் பார்க்கப் பார்க்க நமக்கும் ஆவல் வரும்.//

      மகிழ்ச்சியான நேரங்கள் இல்லையா!

      //அந்தச் செல்லும் வழியில் உள்ள வனத்தை நரசிம்ம வனம் என்கின்றனர்.//
      ஆமாம், நரசிம்ம வனம் என்று சொல்கிறார்கள்.

      காலை 11 மணிக்கு குருவை பார்க்கலாம் என்றார்கள்.
      படங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி.

      வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு