வியாழன், 28 மார்ச், 2019

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

எங்கள் குலதெய்வம்

களக்கோடி சாஸ்தா- மனைவிகள் பூர்ணகலா, புஷ்கலாவுடன் இருக்கிறார். 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள 'மடவார் விளாகம்' என்ற ஊரில் இருக்கும்  களக்கோடி சாஸ்தா   எங்கள் குலதெய்வம். நிறைய பேருக்கு இந்தக் கோவில் குலதெய்வமாக இருக்கும்.

எங்கள் பக்கம் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள்.  பங்குனி உத்திரத்தன்று போனால் நிறைய கூட்டம் வரும்.
நாங்கள் பங்குனி உத்திரம் அன்று போக முடியவில்லை .

குலதெய்வ வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமை, திங்கள் கிழமை என்று என் மாமியார் சொல்வார்கள். அதன்படி சனிக்கிழமை சென்று வந்தோம்.

ஏரிக்கரையோரம் இந்தக் கோவிலின் அருகில் உள்ள ஏரியின் அழகைப்பற்றியும் அங்கு பார்த்த  பறவைகள், கறவைகள், பூக்கள் படங்கள் கொண்ட பதிவைப் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
                 
                                                  முன் பக்க வாசல்.

ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும் என்பார்கள் முன்னோர்கள்.   வீட்டில் என்ன  விசேஷம் நடந்தாலும் முதன் முதலில் குலதெய்வத்திற்கு  அந்த விழா சிறப்பாய்த் தடை இல்லாமல் நடைபெற ஒரு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துக் குலதெய்வத்தை வேண்டிக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு, அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலும், உடம்பு சரியாகவேண்டுமென்று  காசு முடிந்து வைத்துப்  பிரார்த்தனை செய்து கொள்வார்கள். 

 எங்கள் வீடுகளில்  கல்யாணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை, பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம்.  பின், குழந்தை பிறந்தால் போய் வருவோம்.. அது தான் இப்போது முடிகிறது.

அப்படிப் போகும்போது குடும்பத்தினர் மட்டும் போவதால் நின்று நிதானமாய் வழிபாடு செய்து குடும்பத்தினர் எல்லோரும் கலந்து பேசி , பொங்கல் வைத்து உறவோடு  சேர்ந்து உண்டு மகிழ ஒரு வாய்ப்பு.

குலதெய்வத்தைப்பற்றி மேலும் செய்திகளுடன் எங்கள் குலதெய்வம் என்ற பழைய பதிவைப் படிக்க இஷ்டப்பட்டால் படிக்கலாம்.

ஆண்டுக்கு ஒரு தடவையாவது குடும்பத்துடன் போய்ப் பொங்கல் வைக்க வேண்டும் என்பார்கள். இந்த முறை கணவரின் தம்பி குடும்பமும் வந்ததால் பொங்கல் வைக்கலாம் என்று நினைத்தோம். குருக்களிடம் போன் செய்து கேட்டால் தண்ணீர் இல்லை, அடிபம்பு வாஷர் போய் விட்டது, மோட்டார் ரிப்பேர் என்றார்.  இன்னும் இரண்டு நாள் கழித்து வாருங்களேன் என்றார். ஓர்ப்படி இன்னொரு விசேஷத்திற்குத் திருசெந்தூர் போக வேண்டும் அதனால் அடுத்த முறை பொங்கல் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கோவிலுக்கு அபிஷேக, அலங்கார , அர்ச்சனைப் பொருட்கள், ஆடைகள்  அபிசேஷகத்திற்கு தண்ணீர் - ஒரு கேன் நிறைய தண்ணீர் எடுத்துப் போனோம்.

நாங்கள் போனபோது அன்பர்கள் பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் எங்கு எடுத்தீர்கள் என்றால், அடிபம்பில் தண்ணீர் ஊற்றி அடித்து எடுத்தோம் என்றார்கள்.

'நீங்களும் வைக்கப் போகிறீர்களா ? பொங்கல்' என்று கேட்டார்கள். 'இறைவன் திருவுள்ளம் அடுத்த முறைதான் போலும்' என்றோம்.


பக்கவாட்டில் உள்ள ஏரிக்கரையிலிருந்து எடுத்த படம்

 பக்கவாட்டிலிருந்து எடுத்த படம்

உட் பிரகாரத்தில் எடுத்த படம்.

முன்பு  ஏரியில் குளித்து ஈர ஆடையுடன்  வந்து கிணற்றில் தண்ணீர் எடுத்து பொங்கல் வைப்பார்கள், கிணறு இப்போது மூடப்பட்டு அதில் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்க வசதி செய்து இருக்கிறார்கள்.



கோவையிலிருந்தும், பாண்டிச்சேரியிலிருந்தும் குடும்பத்துடன்  வந்து பொங்கல் வைக்கிறார்கள்.

இப்போது அடி பம்பில் தண்ணீர் எடுத்துப் பொங்கல் வைத்தார்களாம்.
பங்குனி உத்திரத்திற்கு வந்த அன்பர்கள் போட்டுவிட்டுப் போன குப்பைகள்
 'உத்திரவிழா வேலைகளில் களைத்துப் போச்சு உடம்பு, இன்னும் இரண்டு நாள் கழித்து ஆட்களை வைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்' என்றார் கோவில் மெய்க்காப்பாளர்.

சில இடங்களில் அறுவடை முடிந்து விட்டது, சில இடங்களில் நாற்று நட்டு இருக்கிறது.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்கள் தான்.


2012ல் போனபோது எடுத்த படம் 
மரத்தால் ஆன வீரபத்திர சாமி. இவருக்கு சந்தானாதி தைலம் வைத்து அபிஷேகம் செய்யப்படும். வெளிப்புறத்தில்  உள்ள தனிச் சன்னதியில் இருக்கிறார் வீர பத்திரர்

இவரைப் பலவேஷக்கார சாமி என்கிறார்கள்  இவர் வெளிப் புறத்தில் ஏரியை நோக்கி தனிச் சன்னதியில் இருக்கிறார்.


யானைக்கு அபிஷேகம் 
இவர் சாஸ்தாவின் வாகனம் - இவர் கனவில் வந்தால் குலதெய்வம் அழைக்கிறார் என்றும், குலதெய்வம் கனவில் வந்து இருக்கிறார் என்றும் சொல்வார்கள்.
அலங்காரம் 
பொங்கல் வைக்கும் பிரசாதங்களை இவர் முன்புதான் வைப்பார்கள்.

பேச்சியம்மன் அபிஷேகம்
அலங்காரத்தில் சின்னதாக இருக்கும்  பிரம்மராட்சசி எனும் அம்மன். .மாமனரின் அப்பா   ( என் கணவரின் தாத்தா) பிரதிஷ்டை செய்து வைத்த அம்மன்


என் கணவரின் தம்பி   அபிஷேகம் செய்ய பஞ்சாமிர்தம் தயார் செய்கிறார்கள். பாண்டிச்சேரியிலிருந்து வந்தவர்களும் அருமையான பஞ்சாமிர்தம் தயார் செய்தார்கள்.  கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின் இரண்டையும் கலந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள்.

அவர்கள் செய்த சர்க்கரைப் பொங்கல், பாசிப்பருப்பு பாயசம், இன்னொருவர் செய்த சர்க்கரைப் பொங்கல், பாயசம்,( அம்மனுக்கு பாசிப்பருப்பு பாயசம் செய்வார்கள்.) அவர்கள் வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்த எலுமிச்சை சாதம் எல்லாம் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  நீர்மோரும் கொடுத்தார்கள். மனம் நிறைந்தது போல் வயிறும் நிறைந்தது.

மாடசாமி

நாகர்கள்
சப்த கன்னியர்
கற்பூர ஆரத்தியில்  எனக்கு ஒரு காட்சி தெரியுது. உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா? எனக்கு ஆடவல்லான்  தெரிகிறார்.

பூஜை நிறைவு பெற்றது இனிதாக . குருக்கள் பொறுமையாக அபிஷேகம் செய்து அழகாய் அலங்காரம் செய்துவிட்டார். நிர்வாகக் குழுவினர் வந்து இருந்து அபிஷேகத்திற்குத் தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார்கள். குளிரக் குளிர அவருக்கு நிறைய தண்ணீர் , மற்றும் அபிஷேகப்பொருட்களால் நாங்கள் மற்றும் இரண்டு குடும்பமும் சேர்ந்து செய்து விட்டோம். குடும்பத்தினர் அனைவர் பேரும் சொல்லப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது.

 மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிய அவரை மனம் உருக கேட்டுக் கொண்டோம்  மக்கள், சுற்றம் , ஊர், உலகத்தை நல்லபடியாக காப்பாற்று காவல் தெய்வமே ! என்று.
நாங்கள் போன நேரம் நல்ல நேரம் . அடுத்த மாதம் என்றால் அபிஷேகம் ஆராதனை செய்து இருக்க முடியாது. பாலாலயம் நடைபெறப் போகிறது.
எல்லாம் அவன் அருள்.
சாஸ்தா எல்லோரையும் காத்து ரட்சிக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்.

=================================



70 கருத்துகள்:

  1. அழகான குலதெய்வ கோயில்... அருமை...

    2012ல் போனபோது எடுத்த படம் எனக்கு மிகவும் கவர்ந்தது அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      2012 ல் எடுத்த அபடம் மகன் காமிராவில் எடுத்த படம்.
      பழைய பதிவு சுட்டி கொடுத்து இருந்தேன் அங்கு போய் பார்தால் இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது பார்க்கலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. கோமதிக்கா படங்கள் எல்லாம் அழகு! சொல்ல வேண்டியதே இல்லை எங்கள் கோமதிக்கா படங்களைப் பற்றி!!!

    அது சரி அக்கா ஏரியில் தண்ணீர் இருக்கிறதே அதிலிருந்து நீர் எடுத்துப் பொங்கல் வைக்க முடியாதோ?!!! நல்ல தண்ணீர் இல்லை இல்லியா? பாசனத்திற்கானதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      இதற்கு முந்திய குன்றத்து குமரன் பதிவில் உங்களை பார்க்கவில்லையே!

      முன்பு போல் ஏரியில் தண்ணீர் இல்லை, அதனால் யாரும் எடுக்க மாட்டார்கள். கிணற்று நீர் எடுத்து தான் பொங்கல் வைப்பார்கள். குடிக்கவும் இனிமையாக இருக்கும் தண்ணீர்.
      ஏரி பாசனத்திற்கு உபயோகபடுகிறது.

      நீக்கு
  3. குலதெய்வம் கோவில் வா..வ் பார்க்க அழகா இருக்கு. எங்களுக்கும் குலத்தெய்வம் இருக்கார். அங்கு போவதென்றால் நாங்க எல்லோரும் குஷியாகிவிடுவோம். அது ஒரு அழகான இடம். இம்முறை போக கொடுத்து வைக்கல. அப்பா,அம்மா,உறவினர்களுடன் போகிறமாதிரி இப்ப இல்லை.
    பச்சை வயல் ஆஹா பார்க்க எவ்வளவு மகிழ்ச்சி. எங்க ஊர் கோவில் மாதிரியே இருக்கு. நானும் போய் வந்த உணர்வு. அக்கா உண்மையில் கற்பூர ஆரத்தியில் எனக்கும் அப்படித்தான் தெரிந்தது. அழகான வீரபத்திரர். ஊருக்கு ஒரு வீரபத்திரர் கோவில் இருக்கும். பஞ்சாமிர்தம் பிடித்தமான பிரச்சதம். என்னதான் சொல்லுங்க கோவிலில் இப்படி பொங்கலிட்டு சாமிக்கு படைத்து எல்லாரும் கூடி இருந்து சாப்பிடும் மகிழ்ச்சிக்கு அளவேது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.

      குலதெய்வம் இருக்கும் இடங்கள் எல்லாம் அழகான இடத்தில் தான் இருக்கும் அம்மு.

      நாங்கள் வீட்டிலிருந்து துவையல், நிறைய காய் போட்டு சாம்பார், அப்பளம் எடுத்து போய் விடுவோம். அங்கு போய் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், பாய்சம் எல்லாம் வைத்து அங்கு வரும் ஆட்களுக்கும் கொடுத்து உறவோடு உண்டு மகிழ்ந்து வாருவோம். இவர்கள் அத்தை தெங்காசியில் இருந்தார்கள், ஆழ்வார்குறிச்சியில் உறவினர் உண்டு அங்கிருந்து உணவுகள் சமைத்து கொண்டு போய் விடுவோம்.

      உங்கள் குலதெய்வ நினைவு வந்து விட்டதா?
      இலங்கையில் வீரபத்திரர் கோவில்களில் பார்த்ததும் அதை படம் எடுத்து பதிவுகளில் பகிர்ந்து கொண்டததும் நினைவு இருக்கிறது .
      பஞ்சாமிர்தம் பிடித்த பிரசாதமா கோவில் பஞ்சாமிர்தம் என்றால் இன்னும் ருசிக்கும் தானே!
      கற்பூர ஆரத்தியில் உங்களுக்கும் ஆடவல்லான் தெரிந்தானா? மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  4. பிரம்மராட்சசி அம்மன் உங்கள் மாமனார் பிரதிஷ்டை செய்தது அழகாக இருக்கிறது.

    அக்கா இனி எந்தக் கோயிலுக்கேனும் பொங்கல் வைக்க என்று நினைத்தால் அங்கு பூசாரி அப்படிச் சொன்னாலும் நீங்கள் கையில் எடுத்துச் சென்று விடுங்கள். அப்போது அங்கு நீர் இருந்தால் வைத்துவிடலாமே! சும்மா ஒரு யோசனைதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா , பிரம்மராட்சசி அம்மன் எங்கள் மாமனாரின் அப்பா பிரதிஷ்டை செய்தது .
      கொழுந்தனார் அப்படித்தான் சொன்னார்கள் எடுத்து போகலாம் என்று.

      ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கிறது கோவில், பொங்கல் வைப்பது என்றால் மிகவும் நேரம் ஆகும். தண்ணீர் இல்லையென்றால் அங்கு வெகு நேரம் இருக்க முடியாது.
      வீடுகள் கூட கிடையாது தண்ணீர் கேட்க முடியாது என்பதால் எங்கள் எண்ணம் கைவிட பட்டது.

      என் கணவருடன் உடன்பிறந்தவர்கள் எல்லோருடன் போய் பொங்கல் வைப்பதுதான் வழக்கம், இரண்டு பேர் மட்டும் வந்து வைக்க வேண்டாம் என்று இறைவன் முடிவு செய்து விட்டார் என்றே நினைக்கிறேன்.


      நீக்கு
  5. சப்த கன்னியர்களில் எங்களின் குலதெய்வமும் உண்டு... நாராயணி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாராயணி உங்கள் குலதெய்வமா நல்லது தனபாலன்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      நீக்கு
  6. அடுத்த மாதத்திற்குள் போய் வந்துவிட்டீர்கள்..நல்ல விஷயம்.

    வயல்கள் எல்லாம் என்ன அழகு இல்லைஆ? அறுவடிய, நாற்று என்று. இவை எல்லாம் எப்போதும் இருக்க வேண்டும் என்று மனம் நினைத்தது.

    பஞ்சாமிர்தம் ஆஹா!! சுவாமிக்குப் படைத்தது அருமையா இருக்கும்..

    அங்கு வந்திருந்தவர்கள் வழி உங்களுக்குப் பிரசாதம் கிடைத்ததே! அடுத்த முறை செல்லும் போது கோயிலில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் அக்கா அங்கு ஒரு பெரிய குப்பைத் தொட்டி வைத்துவிட. இப்படி கோயிலுக்கு வருபவர்கள் குப்பைகளைப் போட்டிருக்காங்க பாருங்க. ப்ளாஸ்டிக் தனியா பூ, இலை போன்ற மக்குவன தனியா கலெக்ட் செய்ய இரு தொட்டிகள் வைக்கச் சொல்லிட்டா நல்லதுதானே இல்லையா அக்கா. மக்குவனவற்றை அங்கு வயலோரத்தில் போடலாமே...இதுவும் சும்மா யோசனைதான்...அப்படியேனும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வராதோனு...

    படங்களும் விவரணங்களும் எல்லாமே சிறப்பு அக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த மாதம் பாலாலயத்திற்கு முன் போய் விட்டோம்.
      பழைய குலதெய்வ பதிவை படித்து பாருங்கள் வயல்கள் அவ்வளவு அழகாய் இருக்கும் அதில்.

      பங்குனி உத்திரம் அன்று நிறைய கடைகள், அன்னதானம் எல்லாம் நடக்கும்.
      கூட்டம் நிறைய இருக்கும். அதனால் குப்பைகள் நிறைய இருக்கும், ஒரளவு சுத்தம் செய்து இருந்தார்கள். குப்பை தொட்டி வைத்து இருக்கிறார்கள். நிர்வாக குழுவிடம் சொல்கிறேன். பணம் வசூல் செய்ய எங்கள் வீடுகளுக்கு வருவதாய் சொல்லி இருக்கிறார்கள்.
      யோசனைக்கு நன்றி.
      மக்கள் தன் இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் நாம் போகும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் பொது இடம் என்றால் என்னவென்றாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது . மாறும். நாங்கள் கவர் எடுத்து போய் விடுவோம் காரில் போகும் போது குப்பைகளை அதில் போட்டு எடுத்து வந்து குப்பை திட்டியில் போட மாட்டோம் வழியில் எல்லாம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. //களக்கோடி சாஸ்தா- மனைவிகள் பூர்ணகலா, புஷ்கலாவுடன் இருக்கிறார். //
    ஓ உங்கள் குலதெய்வம் ஆண் தெய்வமோ கோமதி அக்கா... இரு மனைவிகள் எனப் பார்த்தால் முருகனின் அல்லது கிருஸ்ணரின் அவதாரமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      குலதெய்வம் ஐய்யனார் அதிரா.

      //முருகனின் அல்லது கிருஸ்ணரின் அவதாரமோ..//
      இல்லை அதிரா இவர் தர்மத்தை நிலை நாட்ட எடுத்த அவதாரம்.
      ஆதி சாஸ்தா என்று அழைக்கபடுபவர். இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு.
      இவரை ஐய்யனார் என்று அழைப்போம். ஊரின் காவல் தெய்வம்.

      நீக்கு
    2. தமிழில் அது தெரியும் .. இது தெரியும் என்றெல்லாம் சொல்லுகின்ற அதிராவுக்கு
      ஸ்ரீ ஐயனாரைப் பற்றித் தெரியவில்லை என்பது வியப்பு...

      நீக்கு
  8. அழகிய சூழலில் அமைந்திருக்குது கோயில். பொதுவா இந்தியாவில் குலதெய்வக்கோயில் என்றாலே அது கிராமப்பகுதிகளிலும், சின்னதாகவும்தானே அமைஞ்சிருக்கு.. அதுக்கு ஏதும் காரணம் இருக்குமோ? குல தெய்வக் கோயில்களைப் பெருப்பிக்க மாட்டினமோ.. பெரிய கோபுரத்துடன் கூடிய குல தெய்வக் கோயில்களை யாரும் சொல்லி அறியவில்லை நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விருப்பபடி இந்த கோவிலை பெரிது செய்ய போகிறார்கள்.
      நிறைய இடங்களில் ஐயனார் கோவில் கோபுரத்துடன் பெரிதாக இருக்கும்.
      பெரிது படுத்தலாம்.ஐயன் மனது வைத்தால் அவருக்கு கோவில் பெரிதாக வரலாம்.
      ஊருக்குள் இருக்கும் ஐயனார் கோவில்கள் மிக பெரிதாக இருக்கிறது அதிரா.
      காட்டுக்குள் , இப்படி வயல்வெளிகளில் இருக்கும் கோவில்களும் உண்டு.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  9. அழகிய படங்களும், விளக்கிய விதமும் அருமை சகோ.

    நாங்களும் பங்குனி உத்திரத்துக்கு குலதெய்வம் கோவில் திருவிழா நடத்தி வந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

      நீங்களும் பங்குனி உத்திரத்திற்கு குலதெய்வம் கோவிலில் திருவிழா நடத்தி வந்தீர்களா?
      மகிழ்ச்சி.

      உங்கள் குலதெய்வ கோவில் பதிவு போடுங்கள்.

      போன பதிவுக்கு வரவில்லையே ! குன்றத்துக் குமரன் கோவில் பதிவு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அழகான கோயில். துரையின் பதிவிலும் ஐயனார் தரிசனம்.இங்கேயும்! உங்கள் இந்தக் குலதெய்வக் கோயிலை ஏற்கெனவே பார்த்த நினைவு வந்தது. பின்னால் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியின் மூலம் தெரிந்தது முன்னரும் வந்திருப்பது! நல்லவேளையா எங்க குலதெய்வக் கோயிலில் தண்ணீர்ப் பிரச்னை எல்லாம் இருக்காது! அதுவும் ஊரை விட்டுத் தள்ளி இருந்தாலும் தெரு தாண்டினால் ஊர் வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      நீங்கள் முகநூலில் ஒரு முறை பங்குனி உத்திரம் போன போது எடுத்த படம் போட்டு இருந்தேன் அப்போது பார்த்து இருப்பீர்கள்.எங்கள் குலதெய்வ பதிவு படிக்கவில்லை நீங்கள் நேரம் இருக்கும் போது பாருங்கள்.

      அந்த பக்கம் தன்ணீர் கஷ்டம் அவ்வளவாக கிடையாது. இவை வானம் பார்த்த பூமி மழை பெய்தால்தான் தண்ணீர் .
      ஏரியில் மழை பெய்த தண்ணீர் தான் இருக்கிறது. மூன்று கி,மீ தூரம் வீடுகள் கிடையாது.

      நீக்கு
  11. அது என்னமோ குலதெய்வக் கோயில்களுக்கு எனத் தனியானதொரு அழகு வந்துவிடுகிறது. படங்கள் அருமையாக எடுத்திருக்கிறீர்கள். கை தேர்ந்த புகைப்படக் கலைஞர்! இவ்வளவு துல்லியமாய் எனக்கு வரதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலதெய்வம் கோவில்கள் அமைதியாக இயற்கை சூழ்ந்த இடத்தில் இருப்பதால் அப்படி ஒரு அழகு வந்து விடுகிறது.

      ஐய்யனார் படம் மட்டும் குருக்கள் எடுத்து கொடுத்தார். கருவரைக்குள் அனுமதி கிடையாது. வெளியிலிருந்து எடுத்தால் ஒரு அம்மன் தெரியமாட்டார்.
      மிக அழகாய் எடுத்து கொடுத்தார்.ஏதோ எனக்கு தெரிந்தவரை எடுத்து வருகிறேன்.உங்கள் புகழ்ச்சி அதிகமோ என்று நினைக்க தோன்றுகிறது.
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. அதிகமாக எல்லாம் புகழவில்லை. சிலருக்கு சில விஷயங்கள் நன்றாக வரும். எங்க வீட்டிலேயே என் ஓர்ப்படி நன்றாகப் புகைப்படம் எடுப்பார். அவள் தந்தை ரயில்வேயின் மிகச் சிறந்த ஃபோட்டோகிராஃபர்! ஆகவே ரத்தம்! :)))))) என் அப்பா வீட்டில் இந்தக் கலை ஆர்வம் என்பது குறைவு. இதுக்காகப் பார்த்தால் எனக்குத் தான் கொஞ்சம் எல்லாவற்றிலேயும் ஆர்வம் அதிகம். அது அம்மா வழியில் வந்திருக்கலாம்! :)))))

      நீக்கு
    3. கீதா, என் அப்பா எப்போதும் காமிராவும் கையுமாய் இருப்பார்கள்.

      என் சித்தப்பா, பெரியப்பாக்கள் எல்லாம் காமிராவுடன் சுற்றுவார்கள் எந்த ஊருக்கு சென்றாலும் படம் இருக்கும்.
      அந்த ஆர்வம் என்னுள், என் குழந்தைகளிடம் வந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.
      காமிராவில் நுணுக்கம் எல்லாம் தெரியாது எடுத்துக் கொண்டு இருக்கிறேன் ஏதோ.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. குல தெயவ வழிபாடு கோடி புண்ணியம்.
    மடவார் விளாகம்... என்ன அழகிய தமிழ்!
    அம்பா சமுத்திரம்... பெயர்க் காரணம் என்ன கோமதிம்மா?
    படங்களைப் பார்த்ததில் கோயில் இடத்தில் இருந்த மாதிரியே இருந்தது.
    அதுவும் பொங்கலிடுகிற அந்த மரத்தடி சூழ்நிலை.. வெகு இயற்கையாய் ரம்யமாய் இருந்தது.
    தீப ஜோதியில் அந்த தரிசனமும் அற்புதம்.
    நன்றி சொல்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      முன்பு போட்ட எங்கள் குலதெய்வம் பதிவுக்கும் வந்து அருமையான பின்னூட்டம் கொடுத்தீர்கள்.

      மடவார் விளாகம் மிகவும் அருமையான பேர் தான்.

      //பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன. இங்கு அம்பா, அம்மா, அம்மை என்ற சொற்கள் தாய், காளி, உமாதேவி என்ற பொருளை உடையன.இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும்.//

      அம்பா சமுத்திரத்திற்கு முன்பு உள்ள பேர் வேறு. பிற்காலத்தில் இந்த பேர் வந்ததாய் சொல்கிறார்கள்.

      இங்கு என் சித்தி . பிறகு அண்ணன் இருந்தார்கள் விடுமுறைக்கு போவோம், கோவில் அழகு, குளம் அழகு. என் அண்ணி , அம்மா எல்லாம் நீச்சல் அடித்து குளிப்பார்கள். நான் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன். ஆறு குளங்களில் குளிக்க தெரியாது எனக்கு.
      இங்கு மரச்சாமான் நன்றாக கிடைக்கும், நடைவண்டி, செப்பு சாமான்கள் கலர் கலராக கிடைக்கும்.

      பங்குனி உத்திரத்தின் போது பொங்கல் வைக்க இடம் கிடைப்பது அரிது.
      அந்த ஆலமரத்தின் நிழலில் பொங்கல் வைப்பது அருமையாக இருக்கும் பார்க்க.
      தீபஜோதியின் தரிசனத்தை கண்டு கருத்து சொன்னது மகிழ்ச்சி.
      அருமையான கருத்துரை அளித்த உங்களுக்கு நன்றி சொல்கிறேன் சார்.

      நீக்கு
    2. விளக்கங்களால் தெளிவு பிறந்தது. நன்றி, கோமதிம்மா.

      நீக்கு
    3. மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

      நீக்கு
  13. ஆஆஆஆஆஆஆ எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈ...

    ஆலமரத்தடியில் பொங்கல் பார்க்க அழகாகவும் ஆசையாவும் இருக்கு. வயதான தாத்தா எவ்ளோ பொறுப்பா கீழே இருந்து உதவி செய்கிறார்.

    காண்ட் பம்ப் நன்றாக இருக்கு.. ஊரிலும் ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு காண்ட் பம்ப் இருந்தது.

    வயல்வெளியும், அனைத்துப் படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதிரா வயதான தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று அவர் உதவி செய்கிறார். அவர் மனைவி எதிரில் இருக்கிறார்கள் பாருங்கள்.

      எனக்கு திருமணம் ஆன புதிதில் மாடி வீட்டில் இருந்தோம் திருவெண்காட்டில் மாடியில் கிணற்றிலிருந்து அடி பம்ப் அடித்து தண்ணீர் எடுக்க வேண்டும். மோட்டார் போட்டு தருகிறேன் என்று சொல்லி (நாங்கள் 7 வருடம் இருந்தோம்) போட்டே தரவில்லை.

      வயல்வெளியும் சுற்றுபுறமும் மிக அழகாய் இருக்கும் எங்கள் ஊர் அதிரா.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. வயதானவர் அனைவருக்கு நீர் மோர் கரைத்து கொடுத்தார், குருக்கள் செய்து கொண்டு வந்த பொங்கல் பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்தார். எல்லோரிடமும் அன்பாய் பேசினார். அவர்களுடன் வந்தவர்களும் மிக அன்பானவர்களாக இருந்தார்கள்.

      கோவை வட வள்ளியிலிருந்து வந்த குடும்பத்தினர் வீட்டுக் குழந்தைகள் இறைவனுக்கு அபிஷேகத்திற்கு குடம் குடமாய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சிறு வயதில் இப்படி உபகாரம் செய்யும் குழந்தைகளை பார்ப்பது அரிது.

      நாங்கள் ரயிலை பிடிக்க வேண்டும், கொழுந்தனார் உடன் போகும் போது காரில் போய் விட்டு வரும் போது ரயிலில் வந்தோம். இல்லையென்றால் இன்னும் சிறிது நேரம் அந்த அன்பானவர்களுடன் உரையாடி இருக்கலாம். திருநெல்வேலி சொந்தங்களை பார்த்து இருக்கலாம். அடுத்த முறை தனியாக அவர்கள் வீடுகளுக்கு வந்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். மாமா.

      நீக்கு
  14. குலதெய்வக் கோவில் வழிபாடு அருமை. நல்ல படங்களுடன் கூடிய விளக்கம். ரசித்தேன்.

    கனவில் யானை வந்தால் குலதெய்வம் அழைக்கிறது என்று பொருளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன் , வாழ்க வளமுடன்.
      ஏரிக்கரை பதிவு பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் அந்த இயற்கை காட்சிகள்.
      ஆமாம், எங்கள் வீட்டில் சொல்வார்கள். சாஸ்தா கையில் யானையை அடக்கும் அங்குசத்துடன் இருப்பார். அவர் யானை மேல்தான் வருவார்.
      அதனால் அப்படி சொல்வார்கள்.

      நீக்கு
  15. அடிபம்பு பக்கம் இருந்த குப்பைகளைப் பார்த்து மனது சங்கடப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், மனது சங்கடப்படுது நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள் , கோவிலை சுத்தமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
      அடுத்த முறை போகும் போது அதை சொல்ல வேண்டும்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
      கோவிலுக்கு போய் விட்டேன். இப்போது தான் வந்தேன்.

      நீக்கு
  16. அருமையான தரிசன அனுபவம். பிரம்மராட்சசி அம்மன் இங்குதான் முதன்முறை பார்க்கிறேன். அடுத்த வருடம் எண்ணம் போல பொங்கலிட குல தெய்வம் அருள்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      பிரம்மராட்சசி அம்மன் நானும் முதன் முதலில் குலதெய்வம் கோவில் போன போது படித்து திகைத்தேன். அதைப்ப்ற்றி விசாரிக்க இப்போது பெரியவர்கள் இல்லை.
      அடுத்த முறை கோவிலுக்கு போகும் போது யாராவது பெரியவர்கள் வந்தால் விசாரிக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. நள்ளிரவு 1:35க்கு இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறேன்....

    நாளை காலையில் மீண்டும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.

      //நள்ளிரவு 1:35க்கு இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறேன்....//

      வேலை முடிந்து அப்போதுதான் திரும்பினீர்களா?
      ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.
      விடுமுறையில் ஓய்வு கிடைக்கும் போது பதிவை படித்து கருத்த்து சொன்னால் ஆச்சு!

      நீக்கு
  18. ஆஹா ஐய்யனார்...

    எங்களுக்கும் இவர் தான் குல தெய்வம் மா..


    எங்க அய்யனாரும் இப்படி தான் காலை வைத்து அமர்ந்து இருப்பார் ...
    அம்மா வீட்டிலும் அய்யனார் தான் ...

    இங்கயும் நம்ம சாமியை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ...

    இவராவது வயல்வெளியில் ..எங்க சாமி காட்டுகுள்ள இருக்கார், எப்பவும் வேன் வச்சு பங்காளிகள் எல்லாம் சேர்ந்து தான் போக முடியும் ...போன வருடம் சென்றுவந்தோம் ...இங்க படங்களை காணவும் எங்கள் கோவில் படங்களையும் பகிரும் ஆசை வருது ...


    அற்புதமான தரிசனம் ...நன்றி மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      உங்களுக்கும் அய்யனார் குலதெய்வம் என்பதை கேட்கும் போது மகிழ்ச்சி ஏற்படுது.
      காட்டுக்குள் அய்யனார் இன்னும் அழகாய் இருக்குமே!
      உங்கள் கோவிலையும் பகிருங்கள்.

      முன்பு ஒரு பத்திரிக்கையில் எங்கள் குலசாமி என்று அவர் அவர் குலதெய்வ கோவில்கள் வரும், தொலைக்காட்சியில் கிராம தெய்வங்கள், குலசாமிகள் என்று வந்தது தொடர் பதிவு. அருமையான கோவில்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
      உங்கள் கோவில் பகிர்வை எதிர்ப்பார்க்கிறேன் அனு.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  19. குலதெய்வம் வழிபாடு என்பது சனிக்கிழமை, திங்கள் கிழமைதான் செய்யவேண்டுமா? எனக்கு இதுவரை தெரியாது. ஆனால் யதேச்சையாக சனிக்கிழமைதான் எங்கள் குலதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      என் மாமியார் சொல்லி தான் எனக்கும் தெரியும்.

      எங்கள் குலதெய்வம் என்ற பழைய பதிவை படித்தீர்களா? அதில் உங்கள் கருத்து இருக்கு படித்து பாருங்கள்.

      //யதேச்சையாக சனிக்கிழமைதான் எங்கள் குலதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.//
      அதுதான் சொன்னேன் இறைவன் திருவுள்ளம் என்று.
      எப்போது எப்படி நடக்க வேண்டும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது.



      நீக்கு
  20. அதே போல எங்கள் குலதெய்வத்தை 97 ஆம் ஆண்டுக்குப் பின் சென்ற வருடம்தான் தரிசித்தோம். முன்னரே சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். மேலும் எங்கள் குலதெய்வமும் சாஸ்தாதான். மழுவச்சேரி சாஸ்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் , அவர் நினைத்தால் தான் நாம் அங்கு போக முடியும்.
      இந்த முறை பங்குனி உத்திரம் போகலாம் என்று நினைத்து இருந்தோம்.

      சாருக்கு மாயவரம் தருமபுர ஆதீனக் கலை கல்லூரியிலிருந்து பேச அழைத்து விட்டார்கள். அதற்கு போய் விட்டார்கள்.

      பங்குனி உத்திரம் அன்று பேச்சு போக முடியவில்லை. போக முடியவில்லையே என்று வருத்தப்பட்ட போது தெய்வத்தின் குரல் போல் சாரின் தம்பி பேசினார்கள் போனில்.

      நாங்கள் திருச்செந்தூருக்கு ஒரு விழாவிற்கு போகிறோம், முதலில் சாஸ்தா கோவில் போய் விட்டு திருச்செந்தூர் போக போகிறோம் நீங்கள் வருகிறீர்களா ?என்று .

      நான் அவர்கள் நாளை வருவார்கள் கேட்டு சொல்கிறேன் என்றேன், வந்தவுடன் சொன்னால் முதலில் எப்போதும் மறுப்பவர்கள் அன்று உடனே சரி என்று சொல்லி விட்டார்கள்.
      அதுதான் இறைவனின் திருவுள்ளம்.

      உங்களுக்கும் சாஸ்தாதான் குலதெய்வம் என்று சொன்னீர்கள் நினைவிருக்கிறது.

      நீக்கு
  21. குருக்கள் உங்களிடம் பொய் சொல்லி இருக்கிறாரோ, அடிபம்பு ரிப்பேர் என்று! அதையும் இறைவன் திருவுள்ளம் என்று சொல்லி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருக்கள் பொய் சொல்லவில்லை , வாசர் போனது உண்மைதான். மோட்டார் பழது அடைந்ததும் உண்மைதான்.

      சின்டெக்ஸ் டாங்கில் தண்ணீர் போதுமானது இருந்தது.
      குருக்கள் பங்குனி உத்திர வேலைகளால் மிகவும் களைத்து போய் இருக்கிறார். அவருக்கு ஓய்வு தேவைபட்டு இருக்கிறது. அத்துவான காட்டில் இருப்பது போன்ற இடத்திற்கு தண்ணிர் இல்லை என்றால் வர மாட்டார்கள் என்று நினைத்து இருக்கிறார்.

      அதனால் அப்படி சொல்லி இருக்கிறார்.

      நமக்கு இந்த நாளை விட்டால் அப்புறம் போக முடியாத காரணத்தால் போய் விட்டோம்.
      விடா கொண்டனும், கொடா கொண்டனும் கதை போல் ஆச்சு.
      இறைவன் அன்று நினைத்தார் வரவழைத்தார். அவரும் பங்குனி உத்திரம் சமயம் பொங்கல் நிறைய சாப்பிட்டு விட்டதால் வேண்டாம் அடுத்த தடவை நீ பொங்கல் கொடு என்று சொல்லி விட்டார்.

      நீக்கு
  22. யானை கனவில் வந்தால் குலதெய்வம் அழைக்கிறார் என்று அர்த்தமா? ஆ... கடந்த சில வருடங்களில் யானை துரத்துவது போல பலமுறை கனவு கண்டுள்ளேன். பதிவில் சொல்லியும் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை யானை விரட்டுவது போல் வந்தது என்று ஒரு முறை ஜீவி சார் போஸ்டில் போட்டு இருந்தீர்கள் . அப்போதே சொன்னேன் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று. சாஸ்தா என்றால் யானை வரும். அந்த அந்த தெய்வங்களின் வாகனம் கனவில் வரும் போல. என் அத்தை சொன்னது யானை கனவில் வந்தால் குலதெய்வம் வந்து இருக்கிறார் என்று.

      நீக்கு
  23. கற்பூர ஆராத்தியில் எனக்கு குழலூதும் கண்ணன் தெரிகிறார். பின்னால் வேல் போல வேறு தெரிகிறது. படங்கள் யாரும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்துட்டேன் நானும் கற்பூர ஆர்த்தி பற்றிச் சொல்ல! இடது பதம் தூக்கி ஆடும் தில்லை அரசன் தான் எனக்குத் தெரிந்தார்.

      நீக்கு
    2. எனக்கும் கண்ணன் தெரிந்தார் முதலில் ஏனென்றால் ஆடை பறப்பது போல் இருக்கிறது.

      அப்புறம் பார்த்தால் கால் தூக்கி இருக்கிறார். அதனால் தான் ஆடவல்லான் ஏற்றேன்.
      ஹரியும், சிவனும் பெற்ற பிள்ளைதானே! ஐயப்பன்.

      ஹரியும், ஹரனும் தெரிந்து இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. கீதா, உங்களுக்கும் ஆடும் தில்லை கூத்தன் தெரிந்தாரா? மகிழ்ச்சி.
      மீண்டும் வந்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  24. பணிக்கோடி இரைக்கோடி பரிதவிக்கும் இவ்வுலகில்
    துணைதேடி ஓடிவந்தோம் ஸ்வாமியே...

    உனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
    எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!..

    களக்கோடி நாயகனே.. கவலையெல்லாம் தீர்ப்பவனே..
    புகழ்க்கோடி பேர் சொல்லிப் போற்றினேன்...

    வளங்கோடி தந்தருளி நலங்கோடி காத்தருள
    பூக்கோடி தூவி தீபம் ஏற்றினேன்!...

    நீரோடி நிலம் செழிக்க காற்றோடி கதிர் கொழிக்க
    நாகோடி தமிழ் உரைக்க வேணுமே...

    உனைத்தேடி வருவோர்க்கு தருங்கோடி நலமெல்லாம்
    ஊர்கோடி கண்டு உணர வேணுமே..

    வரங்கோடி தந்தருளும் வடிவுடையாள் திருமகனே
    களக்கோடி கண்மணியே சரணமே!...

    மனைதேடி வருபவனே.. மனந்தேடி அமர்பவனே..
    களக்கோடி காவலனே சரணமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்.

      இந்த கவிதையை நகல் எடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுக்கலாம் என்றார்கள் சார்.

      மிக தரமான பாடல்.

      எங்கள் களக்கோடி சாஸ்தா உங்களை எங்களுக்கு கவிதை தரச்சொல்லி இருக்கிறார்.
      மிகவும் நெகிழ்ந்து விட்டேன் சகோ.
      நன்றி சொல்கிறோம் உங்களுக்கு நாங்கள்.

      மிகவும் மகிழ்ந்து போனோம் .

      கோவிலுக்குள் எழுதி வைக்க சொல்லலாம் என்று இருக்கிறேன்.
      வரும் பக்தர்கள் இந்த பாட்டைப் பாடி வளமும், நலமும் பெறட்டும்.
      நன்றி , நன்றி.
      வாழ்த்துக்கள்.

      களக்கோடி காவலனே சரணம் சரணம்.

      நீக்கு
    2. >>> இந்த கவிதையை நகல் எடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுக்கலாம் என்றார்கள் சார்...<<<<

      அன்பின் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்...

      நீக்கு
    3. உங்கள் வணக்கத்தை சாரிடம் சொல்லி விட்டேன்.

      நீக்கு
  25. சென்ற பதிவும் பார்த்துவிட்டேன். இப்பதிவும். சென்ற பதிவில் படங்கள் எல்லாம்மிக அழகாக இருக்கின்றன. இப்பதிவிலும் படங்களும் குலதெய்வ வழிபாடு மற்றும் கோயில் விவரணங்கள் எல்லாமே அருமை. குலதெய்வம் முதல்படம் அழகாக இருக்கிறார் !!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்.
      பழைய பதிவையும், இந்த பதிவையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      முதல் படம் குருக்கள் எடுத்து தந்தார்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  26. நேற்று நள்ளிரவிலேயே பாடலின் வரிகள் உதயமாகி விட்டன...

    காலை எழுந்து குளித்து விளக்கேற்றிய பின் சமையல் வேலையை முடித்து விட்டு
    பாடலைப் பதிவில் ஏற்றினேன்.....

    ஆலயத்தில் எழுதி வைக்கும் அளவுக்கு தங்களைக் கவர்ந்து விட்டதா?..
    எல்லாவற்றுக்கும் களக்கோடி காவலனே காரணம்..

    தங்கள் கோயிலில் உள்ள ஸ்ரீ மாடசாமி ஸ்ரீ அதிகார நந்தியாவார்...

    இவரே தஞ்சை வட்டாரத்தில் நந்தியம்பெருமானாகக் கொண்டாடப்படுபவர்...

    இவர் காளைமுகம் கொண்டவர்.. இரண்டு திருக்கரங்கள்... தண்டும் மழுவும் வேல்கம்பும் ஆயுதங்களாகின்றன... இவர் சாந்த மூர்த்தி.. இவருக்கு சைவ படையல் தான்..

    இவர் திருக்கயிலாயத்தின் காவல் நாயகன் ஆனாலும் ஐயனாருடைய சேனாதிபதிகளில் ஒருவர்.. ஐயன் யானையின் மீது வரும்போது அருகில் மெய்க்காவலாக வருபவர் இவரே...

    இவருடைய உக்ர கோலம் வேறு.. அந்த ரூபத்திற்கும் மாடசாமி என்றே திருப்பெயர்...
    அசைவப் படையலும் வெறியாட்டமும் உண்டு... கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி - அவர் தான்... அந்த உக்ர கோலத்திற்கு உகந்த இடம் அதுவே.. அபிராம பட்டர் கூறுவது போல - ஸ்ரீபத்ரகாளீஸ்வரிக்கு ஏற்ற நடு ஜாமத்தில் வைரவ கணங்களுடன் சுடலை மாடசாமி வருகிறார்...

    ஐயனார் கோயிலில் மாடசாமி, பேச்சியம்மன், பலவேசக்காரர் (முன்னோடியார்), இசக்கியம்மன் - இவர்களெல்லாம் பரிவார மூர்த்திகள்..

    ஐயனார் மாடசாமி இவர்களை வணங்கும் தலைக்கட்டுகள் எல்லாரும் உடன் பங்காளிகள்...

    ஆக, நானும் உங்களில் ஒருவனாகினேன்..

    களக்கோடி காவலனே போற்றி.. போற்றி...

    பதிலளிநீக்கு
  27. நள்ளிரவில் உதயம் ஆகி விட்டது பாட்டு இறைவன் அருளால்.

    எல்லாவற்றுக்கும் களக்கோடி காவலனே காரணம்..//

    உண்மை உங்களை பாட வைத்தவரும் அவரே !
    மாடசாமி பற்றிய விவரம் மிக அருமை.

    திருநெல்வேலி முழுவதும், இசக்கி அம்மனும், சுடலை மாட சாமியும் எல்லா இடங்களில் இருக்கும்.
    அச்சு வெல்லத்தை கவழ்த்தி வைத்தது போல் எல்லா இடங்களிலும் இருக்கும்.


    ஐயனார் மாடசாமி இவர்களை வணங்கும் தலைக்கட்டுகள் எல்லாரும் உடன் பங்காளிகள்...

    ஆக, நானும் உங்களில் ஒருவனாகினேன்..//

    நாம் எப்போதோ வலை குடும்பத்தில் ஒன்று பட்டு போய் விட்டோம்.
    இப்போதும் மேலும் உறவுகள் வலு பெற்றது களக்கோடி சாஸ்தாவால்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  28. மிக மிக அருமையான பதிவு. அய்யனார் அழைத்த விதம் அற்புதம்.
    பதிவும் படங்களும் அருமை என்றால் வந்த பின்னூட்டங்களும் மிக அருமை.
    அந்தப் பாட்டி எவ்வளவு களைத்துப் போய்க்காணப் படுகிறார்.
    தாத்தா ஈடு கட்டிவிட்டார்.
    கூடி இருந்து அபிஷேகம் செய்து, உணவு பகிர்ந்துண்டு
    எத்தனை அருமை.
    பிரும்மராட்சசி என்று இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.

    பரிவாரங்கள் பற்றி எல்லாம் நீங்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்.
    இசக்கி என்று பெயர் வைத்தவர்களை நிறையப் பார்த்திருக்கேன். அதே போல் மாடசாமியும்.

    குளுமை நிறைந்த காட்சிகள் அத்தனையும் அருமை அம்மா.
    என்றும் இனிமை நிறையட்டும்.
    ஆரத்தியில் எனக்கு முருகனே தென்படுகிறார்.
    நன்றி கோமதிமா. அம்மாவுக்குக் குலதெய்வம் சங்கரன் கோவில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
      ஆமாம் அக்கா, அவர் அழைத்தவிதம் அற்புதம்தான்.

      பதிவை படித்து பின்னூடங்கள் தருபவர்கள் கருத்து அருமையாக தான் இருக்கிறது
      அதுதான் மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

      அந்த அம்மாவுற்கு வெயில் தாங்கவில்லை. அதுதான் பெரியவர் உதவி செய்தார்.இந்த அன்பும், கனிவும் இப்போது உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அது போல் அவர் உபசரிப்பும் மிக அருமை.

      பரிவாரதெய்வங்களை ஒவ்வொருவரும் தனியாக சிறப்பு செய்வோர் உண்டு.

      உங்களுக்கு முருகனா ? மகிழ்ச்சி. காணுகின்ற கண்களுக்கு ஓடி வரும் தெய்வங்கள்.
      அம்மாவுக்கு சங்கரன் கோவில் என்று முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.



      நீக்கு
  29. அழகான கோவில்.

    குலதெய்வ வழிபாடு - அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்மா...

    படங்கள் சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
    கோவில் அமைந்து இருக்கும் இடம் மிக அழகாய் இருக்கும்.
    அனைவரைக்கும் நல்லது நடக்கவேண்டும் என்று வேண்டி வந்தோம் வெங்கட்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. கோயிலின் சூழ்நிலை அழகிற்கு மெருகூட்டுகிறது
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  32. வணக்கம் சகோதரி

    அருமையான படங்கள். அழகான கோவில். தங்கள் குலதெய்வ கோவில் மடவார் விளாகம் ஊரிலிருக்கும் களக்கோடி சாஸ்தா குலதெய்வத்தை நமஸ்கரித்துக் கொள்கிறேன். மிகவும் அழகாக ஊரைப் பற்றியும், தெய்வத்தைக் பற்றியும், அத் தெய்வத்தை வணங்கும் முறைகள் பற்றியும் அழகாக, மிக அழகாக விளக்கியிருக்கிறீரகள். நானும் தங்களுடன் வந்து தரிசித்த நிறைவை தந்தது பதிவு.

    கோவில் இருப்பிடம் கண்ணுக்கு குளுமையான இயற்கை வளம் நிறைந்த இடமாக உள்ளது.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் களக்கோடி சாஸ்தா பற்றி பாடிய பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது. பாடலை இயற்றிய சகோதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அம்பையில் எங்கள் உறவுகள் (ஒன்று விட்ட நாத்தனார்) இருக்கிறார்கள். களக்கோடி சாஸ்தா பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை சென்றதில்லை. எங்கள் அம்மா வீட்டு குலதெய்வமும் மாயமான் குறிச்சியிலிருக்கும் சாஸ்தாதான். அவர்களுடன் (என் அண்ணா, மன்னி) இரண்டு மூன்று முறை அங்கு சென்றிருக்கிறேன்.

    என்னுடைய நேரமின்மையாலும், நெட் தொந்தரவினாலும் தங்களுடைய பதிவுகள் படிக்க தாமதமாகி விட்டன. மன்னிக்கவும் முந்தைய பதிவுகளையும் விரைவில் வாசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
    அழகான கோவில்தான், ஆனால் அதிக மழை பெய்தால், ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடினால் கோவிலுக்கு போக முடியாது. அதுதான் கஷ்டமாய் இருக்கும்.

    கோவில் ஏரி, வயல், ஆறு என்று இயற்கை வளம் உள்ள இடம் தான்.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்ல வேண்டும். எங்கள் குலதெய்வத்திற்கு நான்கு வரி பாட்டுதான் இருக்கிறது.இப்போது சகோவால் நல்ல பாட்டு கிடைத்து இருக்கிறது. இதுவும் அவர் விருப்பம் தான் என்று நினைக்கிறேன்.

    மாயமான் கரடு கேள்வி பட்டு இருக்கிறேன், மாயமான் குறிச்சி கேள்வி பட்டது இல்லை.
    எங்கள் மாமானார் ஊர் ஆழ்வார்குறிச்சி.

    கமலா நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நமக்குள் மன்னிப்பு எல்லாம் வேண்டாம் தயவு செய்து.

    உங்கள் அருமையான விரிவான கருத்துக்கு நன்றி.




    பதிலளிநீக்கு