திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ஆடிப்பூரம்

ஆண்டாளின் வரலாறு சொல்லும் படம். (பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாகக் கோதை அவதரித்தாள்.

அன்னவயல்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல்பதியம் இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச்சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்லபல்வளையாய்!  - நாடி நீ
வேங்கடவற்குஎன்னைவிதியென்ற இம்மாற்றம்
நாம்கடவாவண்ணமேநல்கு.

- உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை



விகடனில் என் சேகரிப்பு.

துளசிவனம்
ஆண்டாள் அவதரித்த துளசி வனம் 
ஸ்ரீ வில்லிபுத்தூர்க் கோவில்  என்ற என் பழைய பதிவில் விரிவாக எழுதி இருக்கிறேன் படங்களும் நிறைய இருக்கிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.
                                                         வாழ்க வளமுடன்.

33 கருத்துகள்:

  1. கோபுரம் படம் வெகு அழகு. தமிழக அரசின் சின்னத்திலிருக்கும் கோபுரம்.

    விகடன் கட்டுரையில் உங்கள் வாட்டர் மார்க் பார்த்து நீங்கள் எழுதிய கட்டுரையோ என்று ஏமாந்து போனேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      ஆமாம் , தமிழக அரசின் சின்னத்திலிருக்கும் கோபுரம்.
      என் சேமிப்பு என்பதால் வாட்டர் மார்க்.

      நீக்கு
  2. பழைய பதிவில் ஆண்டாள் கோவில் யானை பெயர் தெரியவில்லை என்று எழுதி இருக்கிறீர்கள். அதன் பெயர் ஆண்டாளாகத்தான் இருக்கும். இல்லையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் ஆண்டாளாகத்தான் இருக்கும்.
      சங்கரன்கோவில் யானை கோமதி, ஸ்ரீரங்கம் யானை ஆண்டாள் . அது போல் ஸ்ரீவில்லிப்புத்தூர் யானை பெயரும் ஆண்டாளாக இருக்கலாம்.

      நீக்கு
  3. நான் 89 இல் அங்கு பணி புரிந்ததை அங்கேயே சொல்லி இருக்கிறேன்! அங்கு கோவிலின் படங்களை மீண்டும் ஒருமுறை கண்டுகளித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், நீங்கள் பணி புரிந்ததை சொல்லி இருக்கிறீர்கள்.

      கோவிலின் படங்களை மீண்டும் கண்டு களித்ததற்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      ஆண்டாள் பாடல்களை படித்தேன் அதனால் இந்த பகிர்வு.

      நீக்கு
  4. உங்கள் பெயரில் யாரோ எழுதுவதாக பதிவர் வருண் குறிப்பிட்டிருந்தார் அந்தச் சுட்டியைசொடுக்கினால் பொலம்பல் என்னும் தளம் திறக்கிறது ஒரு செய்திக்காக தமிழில் இருக்கும் இறை இலக்கியங்களாலேயே தமிழ் செழித்தது என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      நானும் கேள்வி பட்டேன்.
      என்னசெய்வது? இப்படியும் மனிதர்கள்.
      அது நான் இல்லை என்று நீங்கள் நம்புவது மகிழ்ச்சி.
      என்னுடைய பதிவுகள் படிப்பவர்களுக்கு அது நான் இல்லை என்று தெரிகிறது அது போதும்.

      //தமிழில் இருக்கும் இறை இலக்கியங்களாலேயே தமிழ் செழித்தது என்று நினைக்கிறேன்//

      ஆமாம் சார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    ஆடிப்பூரம் பக்தி பரவசமூட்டும் சிறப்பு பதிவு. ஆண்டாளின், கோதை நாச்சியாரின் சிறப்பை உணரும் நாளது. தினமுமே அவரின் பக்தி நம் நடக்கும் பாதையை செப்பனிட செய்யுமென்றால், அவரின் அவதார நாளான இன்று அவரை நினைத்து வழிபட்டால், அனைத்து பாவங்களும் களைய பெற்று செல்லும் திக்கெங்கிலும் நல்ல வழி கிடைக்குமல்லவா...

    ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுர தரிசனம் தங்களால் கிடைக்கப் பெற்றேன்.
    கிளியின் வரலாறு அருமை. படங்கள், தாங்களுடைய பழைய பதிவின் படங்கள் அனைத்தையும் கண்டு ரசித்தேன். பழைய பதிவில் தங்களுடன் கோவில் முழுவதையும் தரிசித்த திருப்தி அடைந்தேன். நானும் மதுரையில் உள்ள போது இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்றுள்ளேன். பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. தங்களின் இரு பதிவுகளும், என்னை மறுபடியும் கோவிலில் ஆண்டாள் தரிசிக்க வைத்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

      //ஆண்டாளின், கோதை நாச்சியாரின் சிறப்பை உணரும் நாளது. தினமுமே அவரின் பக்தி நம் நடக்கும் பாதையை செப்பனிட செய்யுமென்றால், அவரின் அவதார நாளான இன்று அவரை நினைத்து வழிபட்டால், அனைத்து பாவங்களும் களைய பெற்று செல்லும் திக்கெங்கிலும் நல்ல வழி கிடைக்குமல்லவா...//

      ஆமாம் சகோதரி.

      பழைய பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  6. பழைய பதிவை பார்த்துட்டு வரேன்ம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி வாழ்க வளமுடன்.
      பழைய பதிவை படிக்க போறீங்களா ?
      சரி சரி.

      நீக்கு
  7. புகைப்படங்களின் தெளிவு அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. வழக்கம் போல் படங்கள் தெளிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடஷேவரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. ஆண்டால் கிளி.. கதை சேகரிப்பு அருமை, மிகப் பழசாக இருக்கிறதே பேப்பர்.

    கோபுரம் மிக அழகு, புதிதாக புனரமைத்திருக்கிறார்கள்போலும்.

    ஓ நீங்களும் கொமெண்ட் பொக்ஸ் ஸ்டைல் மாத்தி விட்டீங்களோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்.
      நீங்கள் ந்லமா> நீங்கள் இல்லாமல் பதிவுலகம் கல கலப்பாய் இல்லை.
      ஆண்டாள் கிளி சேகரிப்பு பலவருடம் ஆச்சு.

      நான் போய் மூன்று வருடங்களுக்கு மேல் ஆச்சு நான் போய் இருந்த சமயம் கும்பாபிஷேக வேலைகள் ந்டந்து கொண்டு இருந்தது. பழைய பதிவுக்கு சுட்டி கொடுத்து இருந்தேனே !
      அதில் விவரங்கள் இருக்கிறது.

      நீக்கு
    2. //ஓ நீங்களும் கொமெண்ட் பொக்ஸ் ஸ்டைல் மாத்தி விட்டீங்களோ..//

      ஆமாம் நானும் மாத்திவிட்டேன், உதவியவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.

      நீக்கு
  11. உண்மையிலேயே இந்த ஆண்டால் சர்ச்சை எழுந்ததன் பின்பே எனக்கு ஆண்டாள் பற்றிய விபரம் கொஞ்சம் தெரிய வந்துது கோமதி அக்கா. ஆண்டாளுக்கும் கோயில் இருக்கிறதோ அங்கு? ஆண்டாள் என்பது அம்மனின் அவதாரமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியாழ்வாரின் துளசி தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரத்தில் பூமி தேவியின் அவதாரமாக கோதை அவதரித்தாள். கோதை தோன்றிய இடம் ஸ்ரீவில்லிப்புத்தூர். அங்கு கோயில் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  12. அழகிய படங்களுடன் அருமையான பதிவு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. ஆண்டாள் திருவடிகளே சரணம்....


    இன்னும் இந்த கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிட்டவில்லை அம்மா ...காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      அவர் அழைப்பார் போய் வந்து பதிவு போடுவீர்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. சிறப்பான பகிர்வு. ஆடிப்பூரம் - ஆண்டாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வணக்கம் ஜனா சார், வாழ்க வளமுடன்.
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு