
அகத்தியர் சிவபூஜை செய்வதற்காகக் கமண்டலத்தில் கொண்டு வந்த நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட, கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு. அக் கதையை விளக்கும் படம். (கூகுளுக்கு நன்றி.)
ஆடிப்பெருக்கு காவேரி அம்மனை வழிபடும் நாள்!
இந்த முறை ஆடிப்பெருக்கு மிக மகிழ்ச்சியாய் இருக்கும் அனைவருக்கும் என்று நினைக்கிறேன்.
தண்ணீர்ப் பஞ்சம் நீங்கி மழை வளம் சிறந்து விளங்க வேண்டும். பயிர் பச்சைகள் செழித்து விளங்க வேண்டும்.
அன்னை காவேரி எல்லோருக்கும் மனமகிழ்ச்சியைக் கொடுக்க ஓடி வந்து விட்டாள்.
அன்னையின் ஊஞ்சல் சேவை
வேப்பமரத்தில் ஊஞ்சலில் ஆடும் அம்மன்.
காணொளியை யூடியூப்பில் வெளியிட்டவர்க்கு நன்றி!
நீர் இன்றி இயங்காது இவ்வுலகு.
நீர்நிலைகளை வணங்கி, மதித்துப் போற்றி நன்றி தெரிவித்தால் அவை மகிழ்ந்து என்றும் நமக்கு நீர் தட்டுப்பாடு இல்லாமல் செய்வார்கள் என்பது வழி வழியாக வந்த நம்பிக்கை.
அன்னையை வணங்கி அனைவருக்கும் நல்வாழ்வு தர வேண்டிக் கொள்கிறேன்.
நினைத்துப்பார்க்கிறேன்:-
வல்லம்படுகையில் ஆடிப்பெருக்கு விழாப் பதிவில் வந்த அருமையான கருத்துரைகள்.
//வளங்குன்றாமல் காத்து காவேரி அன்னை - கருணை புரிய வேண்டும்!..//
ஆடிப்பெருக்கு போன வருடம் போட்ட பதிவுக்கு வந்த கருத்துரை.
எல்லாருடைய வேண்டுதல்களையும் கேட்டு இரக்கம் காட்ட மாட்டாளா - இயற்கை அன்னை!..
காவிரியும் அதன் கிளை நதிகளும் முற்றாக வறண்டு கிடக்கின்றன...
அதன் படங்களை வெளியிட மனமில்லை..
வானம் நிச்சயம் கண் திறக்கும்.. காவிரியும் பெருகி வருவாள்..
துரைசெல்வராஜூ அவர்கள். கருத்துரை.
அதற்கு என் பதில்.
கொஞ்சம் மக்களுக்கு உணர்த்த காலம் தாழ்த்துகிறாள்.
//வானம் நிச்சயம் கண் திறக்கும்.. காவிரியும் பெருகி வருவாள்..//
காவிரி பெருகி வருவதாய் இப்போதே நினைக்க ஆரம்பித்து விட்டேன்.
கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
எல்லோர் வேண்டுதலும் பலித்தது. இந்த ஆண்டு காவேரி ஓடி வந்து விட்டாள்.
ஆடிப் பெருக்குக்குத் தண்ணீர் குறைவாக இருந்தாலும் மக்கள் மனசில் ஈரம் நிறைய இருக்கிறது. அது வளரட்டும். அன்னை மகிழ்ந்து தண்ணீரை அள்ளி வழங்கட்டும்.
ஸ்ரீராம் கருத்துரை.
//பொதுவாகவே எல்லா ஆறுகளிலும் தண்ணீரின் அளவு குறைந்துதான் காணப் படுகிறது. மரங்களை வெட்டுவதும் மணலை அள்ளுவதும் மனிதன் இயற்கைத் தாய்க்குச் செய்யும் பெரும் துரோகம் மட்டுமல்லாது இதன் மூலம் தங்கள் சந்ததிகளின் எதிர்கால வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிக் கொள்கிறோம் என்றும் தெரிவதில்லை. வருத்தமான நிகழ்வுகள்.//
மக்கள் சிந்திக்க வேண்டிய கருத்து.
//இங்கே தினம் தினம் மாலையில் மழை வரும்போல் கருத்து இருண்டு கொண்டு பின்னர் வெளிச்சம் வந்து விடுகிறது. :( பொதுவாக நாங்க ஶ்ரீரங்கம் வந்த இந்த ஐந்து வருடங்களில் மழையை அதிகம் பார்க்கவில்லை. என்றாலும் 2012-13 ஆம் வருடங்களில் காவிரியில் வெள்ளம் வந்து 2013 ஆம் வருடம் ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போட்டுக் கிட்டே நெருங்க விடவில்லை. அதுக்கப்புறம் காவிரியில் நீரே இல்லை. ஆங்காங்கே மேடும், பள்ளமுமாகத் தூர்ந்து போய்க் கிடக்கிறது! திட்டுத் திட்டாகக் காட்சி அளிக்கிறது. கும்பகோணம் காவிரியும் சாக்கடை தான்! :(//
காவிரியில் நீர் வந்ததை ஆதி வெங்கட், கீதா சாம்பசிவம் இருவரும் படங்களுடன் பதிவு போட்டு மகிழ்வித்து விட்டார்கள்.
இந்த வருடம் காவேரி அன்னை மனம் கனிந்து வந்து விட்டாள் ஸ்ரீரங்கத்தில் அண்ணன் தரும் சீர்வரிசைகளை மகிழ்வுடன் பெற்றுகொள்ள, அடுத்த வருடமும் பெற்றுச் செல்ல வரவேண்டும்.
நீர்நிலைகள் நிரம்பட்டும். காவேரித்தாயை வணங்குவோம்
நீர்நிலைகள் நிரம்பி இருக்கிறது அனைவரின் பிரார்த்தனையில்.
அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.
மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டும் தஞ்சையில் சிலபகுதிகளில் தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறார்கள். கால்வாய்களைத் தூர் வாரி இருந்தால் வந்து இருக்கும்.
//இந்தியாவில், ஒரு புதிய சிந்தனை எழுந்திருக்கிறது. அந்த மூன்றாவது தீர்வை, 'தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை' என்று கூறலாம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் அனைத்தையும் மேற்கொண்ட பின், 'இந்தியாவுக்கான சரியான தீர்வு, தேசிய அதி-திறன் நீர்வழிச் சாலை திட்ட இயக்கம்' ஒன்றை துவங்குவதே' என, நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.இந்த அமைப்பு, நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இணைத்து, வெள்ளம் வரும்போது, நீரை அதில் ஏற்றி, பாய வைக்கும், வறட்சி காலங்களில், தேவையான மாநிலங்களுக்கு, அதிலிருந்து கொடுக்கும். நாட்டின் எந்த பகுதியில் நீர் பற்றாக்குறை இருந்தாலும், அவ்விடத்துக்கு இது செல்லும். இந்தியாவுக்கான அதி-திறன் நீர்வழிகள் குறித்த இந்த ஆய்வுக் கட்டுரை, இந்தியாவின் நீர் மேலாண்மை விவகாரத்தில், பல தலைமுறைகளுக்கு, எல்லா சூழல்களுக்கும், சாத்தியமான தீர்வு ஒன்றை முன்வைக்கிறது.//
டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
வெ.பொன்ராஜ்
வெ.பொன்ராஜ்
2014ல் தினமலரில் வந்த கட்டுரை.
பழமையைப் போற்றும் வகையில் "எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரி"யில் இன்றே ஆடிப்பெருக்கைக் கொண்டாடிவிட்டார்கள்.
பழமையைப் போற்றும் வகையில் "எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரி"யில் இன்றே ஆடிப்பெருக்கைக் கொண்டாடிவிட்டார்கள்.
அடுத்து நதிகள் இணைப்பு நடந்தால் எங்கள் வைகையிலும் தண்ணீர் வரும் .மதுரையில் தண்ணீர்க் கஷ்டம் தீரும். பிரார்த்தனை செய்வோம். காவிரி அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
இன்று மழை பெய்து கொண்டு இருக்கிறது மதுரையில்.
என் தளம் எப்படி இருக்கிறது? நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மாற்றி அமைத்துக் கொடுத்தார்கள் நேற்று.இன்று மழை பெய்து கொண்டு இருக்கிறது மதுரையில்.
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் உதவும் குணம் அவரிடம் இருப்பது பாராட்டப்பட வேண்டிய குணம். பாராட்டுவோம்.
வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதளம் சுறுக்கமாக, சிறப்பாக இருக்கிறது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநதிநீர் இணைப்பு நடந்தால் மக்களுக்கு பயனாக இருக்கும்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குதளம் சுறுக்கமாக சிறப்பாய் இருக்கா? திண்டுக்கல் தனபாலனுக்கே எல்லா புகழும்.
நதிநீர் இணைப்பு நடந்தால் மக்களுக்கு நன்மையே
உங்கள் கருத்துக்கு நன்றி.
விநாயக மூர்த்தியின் அழகான படத்துடன் அருமையான பதிவு...
பதிலளிநீக்குஅகத்திய மகரிஷி மற்றும் காவிரியாளுடன் கூடிய விநாயகரின் படத்தை நானும் எனது சேமிப்பில் வைத்துள்ளேன்..
பதிவில் எனது கருத்துரையைத் தந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க நலம்...
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ வாழ்க வளமுடன்.
நீக்கு//அகத்திய மகரிஷி மற்றும் காவிரியாளுடன் கூடிய விநாயகரின் படத்தை நானும் எனது சேமிப்பில் வைத்துள்ளேன்..//
ஆடிப்பெருக்கு பற்றிய பதிவுகள் நிறைய போட்டாச்சு. கதை சொல்லும் படம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
போன வருடம் எல்லோர் பிரார்த்தனையும் பலித்து விட்டது இல்லையா ? அதான் அதை பகிர்ந்து கொண்டேன்.
கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
இந்த முறை ஆடிப்பெருக்கு கோலாகலம். காவிரி மனமகிழ்ந்து வெள்ளமாய் ஓடிவருகிறாள். மக்களுக்குத்தான் அன்னையைக் காத்து வைத்துக் கொள்ளத் தெரியவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குஇந்த முறை ஆடிப்பெருக்கு கோலாகலம்தான். மாயவரத்தில் இருந்து இருந்தால் (எங்களுக்கு ஆடிபெருக்கு இல்லை) அங்கு அக்கம் பக்கத்தினருடன் நன்றாக கொண்டாடி இருப்பேன். அங்கு காவிரி அழகாய் ஓடி வந்து விட்டாள்.
வந்தவளை காத்து வைத்துக் கொள்ள அவள் தான் அருளவேண்டும்.
ஜெயலலிதா தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்வதாய்ச் சொல்லி இருந்தார். அவர் மறைந்துவிட்ட நிலையில் இப்போதைய ஆட்சியாளர்கள் அதை நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை.
பதிலளிநீக்குதடுப்பணைகள் கட்டி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
நீக்குஇப்போது அதற்கு நேரம் வரவில்லை போலும் ஸ்ரீராம்.
மறுபடி மாடரேஷன் வைத்து விட்டீர்களா?
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் .
நீக்குஇப்போதும் மணல் திருட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாகை போன்ற பகுதிகளில் கடைமடை விவசாயிகளுக்கு காவிரி இதுவரை காட்சி தரவில்லை என்று செய்தி படித்தேன்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், நிறைய இடங்களில் காவிரி வரவில்லை. தொலைக்காட்சியில் பார்த்தேன். மணலின் தேவை அதிகமாகி கொண்டே இருக்கிறதே!
நீக்குஉங்கள் தளத்தையும் மாற்றி வடிவமைத்துக் கொடுத்திருக்கும் டிடிக்கு பாராட்டுகள். வாழ்க டிடி.. வளர்க்க அவர் சேவை.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், நானும் உங்களுடன் மீண்டும் வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க அவர் சேவை என்று. பாராட்ட வேண்டும்.
நீக்குஆஹா அழகான காணொளி....
பதிலளிநீக்குசிறப்பான சிந்தனைகள். ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் மா...
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
காவேரி போற்றுவோம்
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குகாவேரியை போற்றுவோம்.
///எல்லோர் வேண்டுதலும் பலித்தது. இந்த ஆண்டு காவேரி ஓடி வந்து விட்டாள்///
பதிலளிநீக்குஅருள் பெருகி மழை பெய்து பெருகி வரும்போது அதை சேமிக்க வேண்டாமா? எப்போது முழித்துக் கொள்ளப்போகிறார்களோ !
வணக்கம் கபீர்ன்பன், வாழ்க வளமுடன்.
நீக்குஅருள் பெருகி மழை பெய்து வரும் போது சேமிக்க வேண்டும்தான்.
முழித்துக் கொள்ளவும் அவள் அருள் வேண்டும்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வல்லிசிம்ஹன் அம்மா அவர்களின் கருத்து மிகவும் சிறப்பு... அதுவே உண்மை... புகழ் அதிகாரத்தில் ஒரு குறளின் விளக்கத்திற்கு வரும்...
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குவல்லி அக்கா சொல்வது போல் மக்கள் மனசில் ஈரம் நிறைய இருக்கிறது. அது வளரட்டும். அன்னை மகிழ்ந்து தண்ணீரை அள்ளி வழங்கட்டும்.
கொடுத்தால் தான் கிடைக்கும். பூமிக்கு தண்ணீர் போக வழி செய்ய வேண்டும் நிலத்தடி நீர் இருந்தால்தானே நமக்கு கிடைக்கும். காலில் மண் ஒட்ட கூடாது என்று சிமெணட்லால் பூசி மெழுகி விடுகிறார்கள். மரம் மழையை கொண்டு வரும் அதையும் வெட்டி விடுகிறார்கள்.
மனம் வறண்டு போய் இருக்கிறது அடுத்தவருக்கு உதவும் எண்ணம் வந்தால் அருள் சுரக்கும் மழை கிடைக்கும்.
இல்லையா தனபாலன்?
ஈதல், இசைபட வாழ்தல்
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள். படங்கள் அருமை. ஆடிப்பெருக்கின் வரலாற்றைப் பற்றி பதிவுகளாக இட்டுப் பெருமை படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
அம்மன் அருள் அனைவருக்கும் குறைவின்றி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
அம்மன் ஊஞ்சலில் ஆடும் காணொளி மிகவும் அருமையாக இருந்தது.
இந்த தடவை நீர் நிரம்பி காணப்படும் காவிரி ஆறு மனதுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இந்நிலை ஆண்டுதோறும் நீடித்து நிலைக்க வருண பகவானை வேண்டிக் கொள்வோம். அனைவரும் சந்தோஸமாக இருக்க இந்த ஆடிப் பெருக்கில் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். அனைவருக்கும் என்றுமே உதவியாக இருக்கும் சகோதரர் தனபாலன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்குஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களுடன் நாங்களும் பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் செய்து கொள்கிறோம்.
//ஏரி, குளம், கிணறு , ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய் பெய்ய வாழ்க வளமுடன்// என்று வாழ்த்துவோம்.
காவிரியை பார்க்க மனது நிரைந்து போகிறது. இப்படியே சந்தோஷமாய் ஓடி கொண்டு இரு அம்மா எல்லோருக்கும் நன்மைதர .
உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி கமலா.
அன்பு கோமதி ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.
நீக்குஅன்னை அருள் நிலைக்கட்டும்.
அரசின் மனதில் இந்த ஈரம் நிறையட்டும்.
மகன் மகளிடம் அப்பா முதலிலேயே மழைத்தண்ணீர் சேகரிப்பு செய்த்தால் செடிகள் பிழைத்தன.
ஒரு அரசு நினைத்தால் தடுப்பணை கட்ட முடியாதா.
நீங்கள் மாயவரத்தை நினைக்கும் வேளையில் நான் உங்களை நினைத்தேன்.
நீங்கள் மதுரை வந்த வேளை வைகையும் நிறையட்டுமே.
திண்டுக்கல் தனபாலன் கட்டமைத்துக் கொடுத்திருப்பது மிக அழகாக இருக்கிறது.
அவர் புகழ் நன்று பெருகட்டும். அனைவருக்கும் நலம் பெருக வாழ்த்துகள்.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
உங்கள் வாழ்த்து படி வைகை நிறையட்டும் அக்கா.
என்னை நினைத்துக் கொண்டது மகிழ்ச்சி தருகிறது.
மருதாணி வைத்துக் கொண்டு, புதுபுடவை, புது வளையல் அணிந்து பக்கத்து வீட்டு நண்பர்களுடன் மாவிளக்கு, காப்பரிசி செய்து கொண்டு குதுகலமாய் பேசிக் கொண்டு போய்வந்த அனுபவங்கள் மறக்கவே முடியாது அக்கா.
திண்டுக்கல் தனபாலன் புகழ் பெருகட்டும்.
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.
என் தளம் எப்படி இருக்கிறது? நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மாற்றி அமைத்துக் கொடுத்தார்கள் நேற்று.
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் உதவும் குணம் அவரிடம் இருப்பது பாராட்டப்பட வேண்டிய குணம். பாராட்டுவோம்.
நன்று அம்மா...!
என் தளத்திலும் மாற்றங்கள் தனபாலன் அண்ணாதான்
மான்றிக்கொடுத்தாங்க அவருக்கு நன்றி..
வணக்கம் Ajai Sunilkar Joseph, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதனபாலன் அவர்கள் உதவும் குணம் வாழ்க!
ஆடிப் பெருக்கு வாழ்த்துகள். மற்றவர் கருத்துகளையும் தொகுத்து வழங்கியிருப்பது சிறப்பு.
பதிலளிநீக்குதள வடிவமைப்பு அருமை.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
கருத்துக்கு நன்றி.
தளம் அருமை மா...
பதிலளிநீக்குஆனால் என்ன எல்லாருமே உஜாலாவுக்கு மாறிக்கொண்டு இருக்குறீர்கள்..
உண்மையில் காவரியில் நீர் என்று நினைக்கும் போதே மனதில் குதூகலம் வருகிறது...மிக மகிழ்ச்சி..
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆமாம் அனு, எல்லோரும் உஜாலாவுக்கு மாறிவிட்டோம்.
காவிரி வந்து விட்டாள் என்றாலே மகிழ்ச்சிதான் எல்லோருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிவும் தொகுப்பும் சிறப்பு.
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/
வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
'அன்னை அருளே, வா, வா'... பொருள் மிகுந்த தலைப்பு. அந்த அருளுக்காகத் தான்
பதிலளிநீக்குஏங்கி நிற்கிறோம்..
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது சரிதான் அனைவரும் அன்னையின் அருளுக்கு ஏங்கி நிற்கிறோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தலைப்பும் அருமை, ஆடிப் பெருக்கிற்கு காவிரி அன்னை மகிழ்ச்சியுடன் துள்ளலுடன் ஓடுவது அழகு!
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் மணற்கொள்ளை இல்லாமல் இருந்தால் இன்னும் ஆறுகள் நன்றாக இருக்கும். அது போல ஆற்றங்கரையில் மக்கள் கழிவுகளைக் கொட்டுவது, ப்ளாஸ்டிக் போடுவது ஷாம்பூ போடுவது, தங்கள் கழிவுகளையும் வெளியேற்றுவது எல்லாம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஆற்றில், ஆற்றங்கரையில் பொதுவாக நமது இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூடாது என்பார்கள். அருமையான காவிரியின் பிறப்புக் கதையுடன் பதிவு அருமை சகோதரி/ கோமதிக்கா
வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆடிப் பெருக்கிற்கு ஓடி வந்தாள் இப்போது மீண்டும் வயல்களுக்கு தண்ணீர் வரவில்லை என்று விவசாயமக்கள் புலம்பும் நிலைதான் நீடிக்கிறது.
மழை நீரை சரியானபடி சேமிக்கவில்லை.
தூர்வாரவில்லை கண்மாய்களை, ஏரிகளை, குளங்களை.
நீங்கள் சொல்வது போல் ப்ளாஸ்டிக் கழிவு, மணல் அள்ளுவது, அசுத்தம் செயவது எல்லாம் தான் நீர்வரத்து இல்லாததற்கு காரணம்.
என்ன செய்வது ! காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் எல்லாம் தீரும் என்று நம்புவோம்.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.