ஓவியர் மாருதி அவர்கள்
அற்புத ஓவியர் மாருதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(எனது 'கண்மணி' நாவலுக்கு அவர் வரைந்திருந்த அழகோவியம்!)
முகநூலில் கே.பி. ஜனார்த்தனன் அவர்கள் ஓவியர் மாருதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிஇருந்தார். அவர் கதைக்கு ஒவியர் மாருதி வரைந்த இந்தப் படத்தையும் போட்டு இருந்தார்.
இன்று அவரது பிறந்தநாள் சமயம் பதிவில் போட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
ஒரு நாட்டில் விழா நடப்பதை அப்படியே ஒரு ஓவியத்தில் கண் முன் கொண்டு வந்ததைக் குறிப்பிட்டார். கோவில் , மாட மாளிகைகள், யானைகள். கொடிகள். பெண்களின் தலை அலங்காரம் , ஆபரணங்கள், தோரணவாயில், விழாக் கடைகள் எல்லாவற்றையும் வரைந்தது பற்றி எல்லாம் பேசினார். மலர்க் கூடையுடன் படிகளில் இறங்கும் பெண்ணைத் துல்லியமாய் வரைந்த படத்தைக்காட்டினார். ஒரு நாட்டின் மகிழ்ச்சியை ,வளமையை இந்தப் படம் பறை சாற்றுகிறது என்றார்.

சோழர்களின் கடற்போர்
ராஜேஷ் வைத்தியா
சங்கரர்
ஜி.டி நாயுடு அவர்கள்.
நான் வீட்டில் தொகுத்து வைத்து இருக்கும், திருமதி. லட்சுமி, திருமதி. சிவசங்கரி ஆகியோரின் கதைளில் அவர் வரைந்த படங்கள் உள்ளன. அவர் ஆண் பாத்திரங்களுக்கு வரைந்த தலைமுடியைப் பார்க்கும்போது அது அவரது தலைமுடி போலவே இருக்கும்.
"காப்பி அடித்து வரைவது தப்பில்லை; முதலில் பார்த்து அப்படியே வரையப் பழகிக் கொள்ளுங்கள். நாளடைவில் உங்களுக்கு என்று தனி பாணி வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
நிறைய ஓவிய அனுபவங்களைச் சொன்னார். குறிப்பு எடுத்து வைத்த பேப்பரை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை.
ஆனால் அவர் தினமும் ஏதாவது படம் வரைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னது மட்டும் நினைவு இருக்கிறது.
நம் "எங்கள் ப்ளாக்" ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் மாருதி அவர்களின் ரசிகர்கள்!
"புதன் கிழமை புதிர்ப் போட்டி"யில் மாருதி அவர்கள் ஓவியத்தைப் போட்டு யார் என்று கேட்டு இருந்தார்கள்.
நானும் ஓவியர் மாருதி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------
மாருதி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்...
பதிலளிநீக்குபடங்கள் எவ்வளவு இயற்க்கையாக இருக்கிறது...
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குமகளின் திருமணம் சிறப்பாக நடந்து இருக்கும் இல்லையா?
மணமக்கள் விருந்துகளுக்கு (மறுவீடு) வந்து போய்விட்டார்களா?
ஆமாம், மாருதி அவர்களின் படம் இயற்கையாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியர் மாருதி அவர்கள். உங்கள் தளம் மூலமாக அவருக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்ததும் துரை செல்வராஜு சார் இடுகையா என்று யோசித்தேன்.
மாருதி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் (இருந்தாலும் பதின்ம வயதில் ஜெ. தான் என்னுடைய மிகுந்த ஃபேவரைட் ஓவியர்... ஹிஹிஹி)
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்களுக்கும் பிடித்த ஓவியர் இல்லையா மாருதி,
உங்கள் கதைக்கும் ஒரு முறை மாருதி அவர்கள் ஓவியம் போட்டீர்கள் அல்லவா?
இந்த தலைப்பில் துரைசெல்வராஜூ அவர்கள் இடுகை போட்டு இருக்கிறார்களா?
நான் சேமித்த தொலைக்காட்சி படங்களை போட இது தான் நேரம் என்று போட்டு இருக்கிறேன்.
ஜெ பதின்ம வயதில் பிடித்த ஓவியரா!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அன்பு கோமதி, மாருதி அழகாக அளவாக் வரையும் ஓவியர். நாங்கள் ஓவியம் கற்றபோது ,இவரையும்,சாரதியௌயும் பின்பற்றுவோம். மிக மிக அருமையான சித்திரங்களைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள்.
நீக்குதெரிந்தே இருக்காது நீங்கள் சொல்லாவிடில். பிறந்த நாள் வாழ்த்துகள் நல்லதொரு கவிஞருக்கு.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் ஓவியம் கற்று இருக்கிறீகளா? மகிழ்ச்சி.
எனக்கும் தெரியாது மாருதி அவர்களுக்கு பிறந்தநாள் என்று .
கே.பி. ஜனா சார் முகநூலில் அவர் கதைக்கு மாருதி வரைந்த விபரம் சொல்லி மாருதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். நானும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி அவர் ஓவியங்களை படம் பிடித்து வைத்து இருந்ததை போட்டுவிட்டேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உயிரோட்டமுள்ள ஓவியங்கள். தொலைக்காட்சியில் வந்த படங்களை படம் பிடித்துப் போட்டது சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் உயிரோட்டமுள்ள ஓவியங்கள்தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ரொம்ப இயல்பா படம் பிடிச்ச மாதரி ஓவியங்கள்...
பதிலளிநீக்குஅழகு மா
வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குபடம் பிடித்த மாதிரி தான் ஓவியங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஓவியர் மாருதி அவர்களுக்கு தங்கள் பதிவின் மூலம் நானும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓவியர் மாருதி அவர்கள் வரைந்தது எனக்கும் மிகவும் பிடிக்கும்.நீங்கள் பதிவில் போட்டதனைத்தும் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. ரசிக்க வைக்கும் ஓவியங்கள்.
பதிவு மிகவும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்குஆமாம் கமலா, அவர் ஓவியங்கள் தொலைக்காட்சியில் காட்டிய படங்கள் எல்லாம் தத்ரூபமாக இருந்தன அதனால்தான் அதை இங்கே பகிர்ந்தேன்.
நீங்கள் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஓவியர் திரு மாருதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை இங்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அவர் ஓவியம் வந்த கதை (மனதில் சட்டென்று நினைவுக்கு வருவது) ப்ரொபஸர் மித்ரா,
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குஎனக்கு ப்ரொபஸ்ர் மிதரா கதையும் படமும் நினைவுக்கு வரவில்லையே!
மாருதி எனக்கும் ஃபேவரைட் என்று சொல்ல முடியாது எனினும் பிடிக்கும் என்று சொல்லலாம். வர்ணம் அவர்களின் ஓவியம் யூஏதோ சுரத்தே இல்லாமல் இருப்பது போல இருக்கும். சாண்டில்யன் கதைகளுக்கு லதா ஓவியம் சிறப்பாக இருக்கும். சுஜாதா, பாலகுமாரன் போன்றோருக்கு சூப்பர்ஸ்டார் ஜெ.... மணியன் போன்றோருக்கு மாயா! புதிய எழுத்தாளர்களுக்கு (அப்போது) திலகா போன்ற ஓவியர்கள்....
பதிலளிநீக்குஸ்ரீராம் , பொதிகையில் காலை தென்றலில் சிறப்பு விருந்தினராய் வந்த அவர் பேட்டி கேட்டேன் அவரின் உழைப்பு, ஓவியர்களுக்கு அவர் சொன்ன அறிவுரைகள் வயதானலும் அவரின் விடாமுயற்சி "துறு துறு கைகள் தூரிகை கைகள்" என்று அவர் சொன்னது எல்லாம் பிடித்து இருந்தது.
நீக்குஅவர் பிரபலங்களை அப்படியே வரைந்து இருந்ததை தொலைக்காட்சியில் காட்டியவுடன் படம் எடுத்து வைத்தேன்.
இன்று ஜனா சார் முகநூலில் அவர் பிறந்த நாள் என்று போட்டதும் போட்டு விட்டேன்.
நீங்கள் சொன்னது போல் ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு ஓவியர்கள் சிறப்பாக்கினார்கள்.
ஜாவர் சீத்தாராமன் கதைகளுக்கு ராமுவும், மாருதியும் வரைந்து இருக்கிறார்கள்.
மின்னல், மழை, மோகனிக்கு மாருதி என்று நினைக்கிறேன்.
உங்கள் முதுகுவலி தேவலையா?
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
ஶ்ரீராம்... பாலகுமாரனுக்கு பெரும்பாலும் மணியம் செல்வன் வரைவார். அதுவே பொருத்தமா இருக்கும். சாண்டில்யனுக்கு லதா, சுஜாதாவுக்கு, பாக்கியம் ராமசாமிக்கு ஜெ... பொதுவா கதை தீம்தான்்ஓவியர்களுகைத் தீர்மானித்து ரசிக்க வைக்கிறது. இளமைக் கதைகளுக்கு ஜெ.. (சிவசங்கரியின் சில கதைகள்), பாலங்களுக்கு மூன்று பீரியட்டுக்கும் மூவர் என்பதுபோன்று...
நீக்குநெல்லைத் தமிழன் பாக்கியம்ராமசாமிக்கு ஜெ வரைந்த சீதாபாட்டி, அப்புசாமி தாத்தா, பீமா, ரசம் இவர்களை மறக்க முடியாது.
நீக்குசார் சீதாப்பாட்டி, அப்புசாமி படங்களை வரைந்து வைத்து இருந்தார்கள் அப்படியே ஜெ வரைவது போல ஒருவர் தன் மகனுக்கு காட்டிவிட்டு தருகிறேன் என்று வாங்கி போனார் தரவே இல்லை.
பாலகுமாரனுக்கு ஜெ அவர்களும் வரைந்து இருக்கிறார், தாயுமானவன், தரையில் இறங்க்கும் விமானங்கள் ஆகிய கதைகளுக்கு.
ஓவியருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
@ நெல்லைத்தமிழன்...
பதிலளிநீக்கு>>> மாருதி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்..
(இருந்தாலும் பதின்ம வயதில் ஜெ. தான் என்னுடைய மிகுந்த ஃபேவரைட் ஓவியர்... ஹிஹிஹி)...<<<
அதென்ன உங்களுக்கு மட்டும்!...
அந்தந்த வயதில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருந்தார்கள்...
அவர்களுள் நானும் ஒருவனாக்கும்!...
@ கோமதி அரசு ..
பதிலளிநீக்கு>>> இந்த தலைப்பில் துரைசெல்வராஜூ அவர்கள் இடுகை போட்டு இருக்கிறார்களா?..<<<
உண்மையில் இதனைக் கவனிக்கவே இல்லை...
நேற்று பக்கத்து அறையில் உடல் நலம் குன்றியிருந்த ஒருவருக்கு காலை உணவளித்து இருந்ததிலும் அதன் பின் மதியத்திற்கான சமையலிலும் நேரம் சரியாகி விட்டது..
இயல்பாகவே மதியம் ஒரு மணியளவில் உறக்கம் கொள்வேன்..
அசதி அதிகமாயிற்று.. உறக்கத்தின் நடுவில் விழிப்பு வந்தால் அதுவும் சிரமம்..
இணையமும் இழுவையாயிற்று...
இரவு 8.30 மணியளவில் எழுந்து வேலைக்கு ஓடி -
இப்போது காலையில் வந்து பதிவுகளைப் பார்க்கும்போது தான் தெரிகின்றது...
நேற்று மாருதி அவர்களுக்காக ஒரு பதிவினை வெளியிட இயலாமல் போனது...
இருப்பினும் இன்று சொல்லி விடுகின்றேன்...
அழகிய பதிவினுக்கு மகிழ்ச்சி...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
நீக்கு//நேற்று பக்கத்து அறையில் உடல் நலம் குன்றியிருந்த ஒருவருக்கு காலை உணவளித்து இருந்ததிலும் அதன் பின் மதியத்திற்கான சமையலிலும் நேரம் சரியாகி விட்டது..//
உடல் நலம் இல்லாதவர்களுக்கு உதவியது நல்லசெயல்.
அந்த அந்த சிறப்பு நாளில் உங்கள் பதிவுகளை எதிப்பார்க்கிறார் நெ.த.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணி உண்டு மாருதிக்கும் உண்டு படங்களைப்பார்த்தாலே அடையாளம் காட்டும் பதிவுலகில் நான்அறிந்தவரை ஒரிஜினல் ஓவியம் வரைபவர்களில்திரு வி என் எஸ் படம் வரைவதில் ஆர்வம்கொண்டவர் உங்கள்கணவர் அரசுவும் ஓவியங்கள் வரைபவராயிற்றே
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு ஒவியருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும்.
நாம் அவர்கள் ஓவியத்தை வைத்து இவர் ஓவியம், அவர் ஓவியம் என்று சொல்லி விடுவோம்.
மகன் பார்த்து வரைவான் அப்படியே.
என் கண்வர் மனதில் உள்ளதை வரைவார்கள்.
நீங்களும் ஓவியம் வரைவீர்கள்தானே!
உங்கள் கருத்துக்கு நன்றி.
நீங்கள் இப்பதிவை இட்ட அன்று கணிணியை திறந்துவுடன் உங்கள் இப்பதிவை (நீங்கள் பதிவிட்ட 36 நிமிடத்தில்) காண வந்தேன். படித்து விட்டு கருத்திட்டால் கருத்து வெளியாக வில்லை. முயன்று முயன்று பார்த்து விட்டு ஶ்ரீராம் தளம் சென்றேன். அவர்களுக்கு கருத்திட்டு விட்டு, உங்கள் கருத்திற்கு கீழே சென்று இங்கே சொல்லலாம் என்றால், ஶ்ரீராம் தளத்திலும் கருத்து வெளியிட முடியவில்லை. பின்னர் யார் தளத்திலும் இயலவில்லை. சரி நம் கணிணிக்கு ஏதோ சில காலங்களாக எப்போ இப்படி பண்ணுதுன்னு தெரியவில்லை.
பதிலளிநீக்குநல்ல வேலை இன்று அதற்கு என்ன வந்ததோ வெளியிடுகிறது....
ஓவியம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் திருவிழா ஓவியம் அழகு. பேட்டியின் ஊடே புகைப்படமாக எடுத்து அவரின் பிறந்த நாளுக்கு எங்களுக்கு பரிசு கொடுத்து விட்டீர்கள் நன்றி
வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
நீக்குமிகவும் கஷ்டபட்டு பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி
வணக்கம் kuthoosi வாழ்க வளமுடன்.
நீக்குபுதிதாக வலைத்தளம் ஆரம்பித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
ரசித்துக் கொண்டே இருக்கலாம்... ஒவியருக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நான் மாருதியின் ரசிகை என்று சொல்ல முடியாது. ஆனால் கொஞ்சம் உணர்வுபூர்வமாக, சோகமான கதைகளுக்கு அவர் ஓவியங்கள் பொருத்தமாக இருக்கும். நீங்கள் வெளியிட்டிருக்கும் ஓவியங்கள் மிகவும் சிறப்பாக உயிரோட்டத்தோடு இருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉணர்வுபூர்வமாக, சோகமான கதைகள் லட்சுமி அவர்களின் எழுத்துக்கள் , அது தான் நீங்கள் சொல்வது போல் மாருதி ஓவியம் போலும்.
தொலைக்காட்சியில் பகிர்ந்த படங்கள் எனக்கு பிடித்தது, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்பினேன், பகிர்ந்து கொண்டேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.