வியாழன், 5 ஜூலை, 2018

ஜன்னல் வழியே




புள்ளிச்சில்லை குருவி.

எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு வந்த புதுவரவு.



ஏற்கனவே  எங்கள் வளாகத்தில் இருக்கும்  சிட்டுக் குருவி மிக வேகமாய் சத்தம் கொடுத்தது. என்ன என்று எட்டிப் பார்த்தால் புதுவகையான சிட்டுக்குருவிகள் எதிர்வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து இருந்தது, அழகாய் இருந்தது,  அதைப்பார்த்து இந்த சிட்டுக்குருவி சத்தம் கொடுத்தது.



கூடு கட்ட  நூல் எடுக்கிறது



பனை, தென்னை மரங்களில் காய்ந்து தொங்கும் சல்லடை போன்ற நார்களை  வைத்துக் கூடு கட்டுமாம் அதனால் கட்டிலில் உள்ள பிளாஸ்டிக் நாரை எடுத்துக் செல்கிறது. அலகால் கொத்தி இழுக்கும் அழகே அழகு.
நான் அவசரமாய் எடுத்தேன், அது ஒரு இடத்தில் இருக்க மாட்டேன் என்கிறது, பறந்து கொண்டு இருந்தது. அதனால் ஓரளவுதான் எடுத்து இருக்கிறேன்.







புதுவரவுக் குருவிகளின் பெயர் என்ன என்று பார்ப்போம் என்று கூகுளில்  பார்த்தால்  நம் ராமலக்ஷ்மி அதைப் பற்றி எழுதிய தினமலர் கட்டுரை கிடைத்தது. அதைக் கீழே கொடுத்து இருக்கிறேன்.



புள்ளிச் சில்லை
ஆங்கிலப் பெயர்: 'ஸ்பாட்டட் முனியா' (Spotted Munia)
வேறு பெயர்கள்: சில்லை, திணைக்குருவி, ராட்டினக் குருவி
உயிரியல் பெயர்: 'லோன்சுரா பங்க்சுலடா' (Lonchura Punctulata)
திணைக்குருவி வகையைச் சார்ந்த, சிட்டுக்குருவி அளவிலான சிறு பறவை. 'எஸ்ட்ரில்டிடா' (Estrildidae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக, கூம்பு வடிவத்தில் இருக்கும். சில்வண்டு போன்று சத்தம் எழுப்பும். கூட்டமாக வாழும். சிறு புற்கள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணும். புற்களின் சிறு கிழங்குகளையும் கொத்தி உண்ணும். இதன் அலகு திணை உண்ண ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. இதனால் திணைக்குருவி என்றும் குறிப்பிடப்படுகிறது.
தோற்றத்தில் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஆண் பறவைகளுக்கு புள்ளிகள் அழுத்தமான வண்ணத்திலும், தொண்டைப் பாகம் ஆழ்ந்த பழுப்பிலுமாக இருக்கும். பனை, தென்னை மரங்களில் காய்ந்து தொங்கும் சல்லடை போன்ற நார்கள் சில்லாட்டை என்பர். மென்மையான இந்த சில்லாட்டைகளைக் கொண்டு கூடுகளைத் தயார் செய்வதால், இவற்றுக்குச் சில்லைகள்

என்றும் பெயர் உண்டு. புற்கள், வாழைநார்கள், இலைகள், பறவைகளின் இறகுகள் போன்றவற்றைக்கொண்டும் கூடு கட்டும். கூடு அமைக்கும் பொழுது, மிகவும் சுறுசுறுப்பாக ராட்டினம் போல் சுற்றிச் சுற்றி வரும். இருபாலினங்களும் இணைந்தே கூடு கட்டும். ஆறு முட்டைகள் வரை இடும்.

முட்டைகளை ஆண், பெண் பறவைகள் அடை காக்கும். பதினைந்து நாட்களில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியில் வரும். குஞ்சுகள் வெளிவரும் பருவ காலத்தைப் பொறுத்து 7 முதல் 18 மாதங்களில் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். இவை பல வண்ணங்களில் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படுகிறது. அழகிய தோற்றத்தால், இவை செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
வகைகள்
* சிவப்புச் சில்லை (Red Munia - ரெட் முனியா)
* வெண் தொண்டை சில்லை (White Throated Munia - ஒயிட் த்ரோட்டட் முனியா)
* கருந்தொண்டை சில்லை (Scaly Breasted Munia - ஸ்காலி பிரெஸ்ட்டட் முனியா)
* மூவண்ண சில்லை (Tricoloured Munia - டிரைகலர்டு முனியா)

நீளம்: 12 செ.மீ.
எடை: 16 கிராம்
ஆயுள்: 8 ஆண்டுகள்

-ராமலக்ஷ்மி

நன்றி ராமலக்ஷ்மி.


                                          வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. அட எல்லாமே அழகு..

    ரசித்து ரசித்து படம் எடுக்குறீர்கள்...


    வாழ்த்துக்கள் மா

    பதிலளிநீக்கு
  2. எத்தனை குருவிகள்? உங்கள் வளாகம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.

    அதில் ஒன்று கூடு கட்ட நூலை இழுத்துப் பார்க்கிறதே!

    பதிலளிநீக்கு
  3. //அது ஒரு இடத்தில் இருக்க மாட்டேன் என்கிறது, பறந்து கொண்டு இருந்தது.//

    சுறுசுறுப்பான பறவைகள். இவைகளுக்கு எல்லாம் தூக்கம் என்று ஒன்று இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது! நான் இரண்டு வாரங்களுக்குமுன் எங்கள் பதிவில் குறிப்பிட்ட இரண்டு பூனைக்குட்டிகளில் ஒன்று வீட்டில் தங்கி விட்டது என்றே சொல்லலாம். இரவில் நாங்கள் அதை வெளியில் விட்டு விட்டாலும், விடிகாலை கதவைத் திறந்து உடனே உள்ளே வந்து விடுவதோடு, என் மடியில் ஏறி அமர்ந்துகொண்டு என்னை டைப் அடிக்க முடியாமல் செய்யும்!

    பதிலளிநீக்கு
  4. ராமலக்ஷ்மியின் குறிப்புகளிலிருந்து அந்தக் குருவியை செல்லமாக "முனியா என்று அழைக்கலாம் என்று தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  5. அழகான குருவி அக்கா. இந்த பறவைகள் போல நாம் இருந்தா எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். என் வீட்டில் சிட்டுகள் அதிகம். அவர்களின் சேஷ்டைகளை ரசிப்பதால் படம் எடுக்க நினைவே வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //எத்தனை குருவிகள்? உங்கள் வளாகம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. //

    மகிழ்ச்சி.

    //ராமலக்ஷ்மியின் குறிப்புகளிலிருந்து அந்தக் குருவியை செல்லமாக "முனியா என்று அழைக்கலாம் என்று தெரிகிறது!//

    ஆமாம், அப்படியே கூப்பிடலாம்.




    பதிலளிநீக்கு
  8. //விடிகாலை கதவைத் திறந்து உடனே உள்ளே வந்து விடுவதோடு, என் மடியில் ஏறி அமர்ந்துகொண்டு என்னை டைப் அடிக்க முடியாமல் செய்யும்!//

    ஸ்ரீராம் , வீட்டில் தங்கி விட்டதா?
    அதற்கு உங்களை பிடித்து விட்டதா?
    பெயர் வைத்து விட்டீர்களா?குட்டிக்கு.

    பதிலளிநீக்கு
  9. வனக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.

    உங்கள் வீட்டிலும் இந்த சிட்டுகள் இருக்கிறார்களா?
    பொழுதுகள் இனிமையாக போகும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஆவ்வ்வ்வ் கோமதி அக்கா.. அவை சிட்டுக்குருவிகளா.. பெரிசா இருக்கே... எனக்கு இப்போதான் நினைப்பு வருது, சுட்டை விடப் பெரிய குருவியை ஊரில் “பிலாக்கொட்டைக்குருவி” எனச் சொல்லுவோம்ம்.. அது போலவே இருக்கே...

    பதிலளிநீக்கு
  11. வெயில் காலத்தில் குருவிகள் முட்டை இடாதே.. சரியாகத்தெரியவில்லை, ஆனா கூடு கட்டத்தானே அந்த கயிறை இழுக்கிறார் அவர்... என்னா தைரியம் பாருங்கோ.. ஆளின் உருவத்துக்கு பல்கனியில் இருக்கும் கயிற்றை இழுத்துப் போய்க் கூடு கட்டப்போறாராம் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  12. இது பிரவுண் கலர்க் குருவி ஆச்சே.. உடம்பில ஒரு பற்றனும் ஓடுது... எனவே சிட்டு அல்ல.

    ராமலக்‌ஷ்மி அக்காவின் பரா படிச்சேன்.. அதில் இருக்கும் பெயர்கள் எதுவும் புழக்கத்தில் இல்லாதவை என நினைக்கிறேன் காதில் கேட்டதாக இல்லை.

    எமக்கு இங்கு எப்பவும் மழை..குளிராகவே இருப்பதால், இப்படிப் பறவை இனங்கள் குறைவு. ஆனா இம்முறை கடந்த 2 மாதமாக வெயிலோ வெயில்... பயிர் எல்லாம் சூப்பரா வளருது.. நான் வெங்காயம் உருளை.கி.. நேற்று அறுவடைகூட முடிச்சிட்டேன்.. அஞ்சுவின் அட்வைஸ் உடன் இன்று கீரை விதை ஓன்லைனில் வாங்கி விதைக்கிறேன்.. சரி இந்தப் பெருமை ஏன் சொல்கிறேன் எனில்..

    அதனால இம்முறை பல பல வண்ணக்குருவிகள் கூட்டம் கூட்டமாக வந்து போகுது.. படமெடுக்க முடியவில்லை, வீட்டுக்குள் இருந்து பார்க்கலாம்., வெளியே போனால் பறந்திடுது..

    போனகிழமை கீயாக்கீயா...கீச்ச்..கூச்ச்ச் என கார்டினில் ஒரே சத்தம்[இப்போ வெக்கை என்பதால் ஜன்னல் திறந்து விட்டே படுப்போம்].. என்னடா எனப் பார்த்தால் ஒரு 25-30 குட்டிக் குருவீஸ்ஸ்ஸ்.. அவை ஸ்பரோ எனப்படுபவை.. எங்கட டெய்ஷியின் பேவரிட்... கூட்டமாக கார்டினில் இருந்து ஏதோ பேசிப் பேசிச் சாப்பிட்டார்கள்..

    எங்கள் டெய்ஷியோ என்னை விடு.. என் கையை விடு. இதோ போகிறேன்ன் மம்மிக்கு ரெண்டு பிடிச்சு வாறேன் என ஒரே அடம்.. நாங்க கதவைத் திறக்கவே இல்லை ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  13. பொறுமையாக எடுத்ததற்கு சபாஷ்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //அவை சிட்டுக்குருவிகளா.. பெரிசா இருக்கே//

    சின்னதாகதானே இருக்கு!


    //சுட்டை விடப் பெரிய குருவியை ஊரில் “பிலாக்கொட்டைக்குருவி” எனச் சொல்லுவோம்ம்.. அது போலவே இருக்கே..//

    நான் கேள்வி பட்டது இல்லை பிலாக்கொட்டைக்குருவி பெயரை.

    பதிலளிநீக்கு
  15. அதிரா , உற் குருவி(சிட்டுக்குருவி) முட்டையிட்டு இருக்கிரது. ஒருபக்கத்தில்.இன்னொரு பக்கத்தில் இந்த குருவி கூடு கட்டப் பார்க்குது.
    வீடு தொடைக்கும் மோப் நூலை இழுப்பது மட்டும் அல்ல.
    மேலே பிளாஸ்டிக் ஒயர் பின்னிய கட்டில் ஒயரை இழுத்து கொண்டு போவதை பார்க்கவில்லையா?

    ஆமாம் , கூடு கட்டப் போகிறார் கட்டி மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  16. எமக்கு இங்கு எப்பவும் மழை..குளிராகவே இருப்பதால், இப்படிப் பறவை இனங்கள் குறைவு. ஆனா இம்முறை கடந்த 2 மாதமாக வெயிலோ வெயில்... பயிர் எல்லாம் சூப்பரா வளருது.. நான் வெங்காயம் உருளை.கி.. நேற்று அறுவடைகூட முடிச்சிட்டேன்.. அஞ்சுவின் அட்வைஸ் உடன் இன்று கீரை விதை ஓன்லைனில் வாங்கி விதைக்கிறேன்.//

    ஓ ! நல்லது. இன்று சமையல் குறிப்பு கொடுத்த்து சீனி சம்பல் அறுவடை செய்த வெங்காயத்திலா?


    பலவண்ணக் குருவிகளை பார்த்து மகிழுங்கள்.

    //எங்கள் டெய்ஷியோ என்னை விடு.. என் கையை விடு. இதோ போகிறேன்ன் மம்மிக்கு ரெண்டு பிடிச்சு வாறேன் என ஒரே அடம்.. நாங்க கதவைத் திறக்கவே இல்லை ஹா ஹா ஹா..//

    டெய்ஷியை விட்டு விடாதீர்கள் பிழைத்து போகட்டும் குருவிகள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பல பறவைகளுக்கு சிக்னல் டவெர்ஸ் எதிரி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் உங்கள் பக்கம் டவர்ஸ் இல்லையா

    பதிலளிநீக்கு
  20. இன்று ஒரு நீல வண்ண மீன்கொத்தி மழைத் தண்ணீர் தேங்கிய இடத்தினருகே அமர்ந்திருந்தது - முதுகைக் காட்டிக் கொண்டு தூர அமர்ந்ததால் ஃஃபோட்டோ எடுக்க இயலவில்லை... நான் உங்களை நினைத்துக் கொண்டேன்.... இங்கு மஞ்சள் குருவி! அருமை!!

    பதிலளிநீக்கு
  21. அழகான சிட்டுக்குருவிங்க .பார்க்க பார்க்க அவங்க உற்சாகம் சுறுசுறுப்பு நம்மை தொற்றிக்கொள்ளுது :)
    இங்கே அதி காலை எலலா நிறத்திலும் இருக்கும் finches வராங்க :) எங்க ஜெசிக்கும் கொண்டாட்டம் தான் ஆனா பிடிப்பதற்கும் பறந்திடுவாங்க :) நிறைய மரங்கள் இருக்கு பின் பக்கம் எங்களுக்கு .

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    எங்கள் பக்கம் டவர்ஸ் இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    என்னை நினைத்து கொண்டீர்களா? மீன் கொத்தி பறவையை பார்த்ததும்.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
    குருவிகள் உங்களை அழைத்து வந்து விட்டதா? மகிழ்ச்சி.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    சிட்டுக்குருவியின் சுறு சுறுப்பு அதன் கீச் கீச் ஒலி மனதுக்கு உற்சாகம் தருகிறது.
    நீங்கள் சொல்வது போல் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்வது உண்மை.

    அதிகாலை வரும்finches யை பிடிக்க போவதும் அவை பறப்பதும் பார்க்க அழகுதான் இ ல்லே!
    அவை பாடுவது இனிமை தானே அதிகாலையில்.
    மரங்கள் நிறைய இருந்தாலே பறவைகள் நிறைய வரும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இந்தப் பறவையை இணையத்தில் பார்த்திருக்கிறேன்...

    மேல் விவரங்கள் தெரிந்து கொண்டேன்...

    தவமும் தவம் உடையார்க்கே ஆகும்...
    இப்படி பறவைகளின் நட்புறவு
    தங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்ரசாதம்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.


    //தவமும் தவம் உடையார்க்கே ஆகும்...
    இப்படி பறவைகளின் நட்புறவு
    தங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்ரசாதம்..//

    உங்கள் கருத்து மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    பறவைகளை காண்பது எனக்கு மன ஆறுதல், மகிழ்ச்சி. அதை கொடுத்த இறைவனுக்கு நாளும் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. படங்களும் பகிர்வும் அருமை. எனது கட்டுரையையும் இணைத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. இதன் கூடு மிக அழகாக இருக்கும். இங்கே தோட்டத்திற்கு இரைதேடி வரும். பறந்து விடும். பல வருடங்களுக்கு முன் தங்கை வீட்டில் இப்பறவை கட்டிய கூட்டினை ‘சிட்டுக்குருவிகள்’ தினத்தன்று பகிர்ந்திருந்தேன் இங்கு: http://tamilamudam.blogspot.com/2012/03/blog-post_20.html

    உங்கள் கட்டுரைக்கான இணைப்பும் அதில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல ‘முனியா’ அழைக்க அழகான பெயரே:).

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் பதிவு நினைவுக்கு வந்து விட்டது.
    நான் ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு விடுதியில் பாதம் மரத்தில் கட்டிய கூடு எந்த பறவை என்று தெரியவில்லை என்று போட்ட போது இந்த முனியாவைப் பற்றி சொன்னீர்கள்.

    ஸ்ரீராம் கொடுத்த பேரும் நன்றாக இருக்கிறது. தினம் முனியா கூடு கட்ட முயற்சிப்பதை அது படும் கஷ்டத்தைப் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. சிக்னல் கோபுரங்களுக்கும் குருவிகளுக்கும் ஆகாது என்பது ஒரு தவறான செய்தி! மற்றப்பறவைகள் அவற்றிலேயே கூடுகள் கட்டுவதையும் பார்க்கிறேன். ஆகவே சிட்டுக்குருவிகள் தங்குமிடம் மாறிப் போனதில் ஏற்பட்ட தடுமாற்றமே அவற்றின் எண்ணிக்கை குறைவானதுக்குக் காரணமாய் இருக்கலாம். இந்த மாதிரிக் குருவிகளை இங்கேயும் பார்க்கிறேன். ஆனால் அளவில் பெரிது. கொஞ்சம் செம்போத்துப் போல் இருக்கு. கூவுகிறது. கீச் கீச் எனச் சப்தம் இடவில்லை. சிட்டுக் குருவிகளை விடச் சின்னதாகத் தேன் சிட்டுக்கள் அதே மாதிரி நிறைய இருக்கின்றன. தேன்சிட்டுக்கள் 3 நிறத்தில் பார்க்கிறேன். பச்சை நிறமும், மஞ்சள் நிறமும் மிக அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    சிக்னல் கோபுரங்கள் சிட்டுக்குருவிகளுக்கு இடைஞ்சல் இல்லை.
    சிட்டுக்குருவிகள் கூடு கட்டவும், அவற்றிற்கு உணவு கிடைக்கும் இடங்களை பொறுத்தும் அவை வசிக்கிரது. எங்கள் குடியிருப்பில் மறுபடியும் சிட்டுக்குருவி முட்டியயிட்டு குஞ்சுபொறித்து இருக்கிறது.

    உங்கள் பக்கம் கூவும் குருவி இருக்கா ? மகிழ்ச்சி. பாடும் குருவி இருக்கு விசில் சத்தம் கொடுக்கும்.தேன் சிட்டுக்களும் இருக்கிறது. மஞ்சள் கலரில், பிரவுன், மஞ்சள் கலரிலும் இருக்கிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. தங்களால் ஒரு பறவை அறிமுகம் கிடைத்தது. நன்றி. அழகான குருவி! கலைநேர்த்தியுடன் படைத்தவனுக்கு நன்றி! நீங்களும் பறவை விரும்பியா! மகிழ்ச்சி! நானும்.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் நிலாமகள், வாழ்க வளமுடன்.


    //நீங்களும் பறவை விரும்பியா! மகிழ்ச்சி! நானும்.//
    பறவைகள் பிடிக்கும், இயற்கை பிடிக்கும்.
    அழகாய் படைத்த (கலைநேர்த்தியுடன் ) படைத்தவனுக்கு அதை காண கண் கொடுத்தவனை நாளும் வணங்கி நன்றி சொல்லவேண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. இது விடுதியா?! இல்ல இதுதான் விடுதியா?!

    வந்து போனதுக்கு அடையாளமாய் சுவத்தில் ஒரு பேர் இல்ல. பான்பராக் கறை இல்ல. பாதி எரிஞ்ச கொசுவத்தி இல்ல.... இப்படி இல்லாதது நிறைய இருக்கு

    பதிலளிநீக்கு
  36. துளசி: குருவிகள் எல்லாம் மிக மிக அழகு. எங்கள் வீடும் தோட்டம் மரங்கள் சூழ்ந்த மலைப்பகுதி ஆதலால் நிறைய பறவைகள் வரும்.

    கீதா: அழகோ அழகு கோமதிக்கா...நிஜமா உங்க ஏரியா சூப்பர் ஏரியா. எங்கள் எரியாவில் காக்கைகள்தான் அதையும் படம் எடுப்பேன். இப்ப எதிர்வீட்டில் உள்ள பவழமல்லிப் பூ மரத்தில் கூடு கட்டியிருக்கு. அந்தக் கூட்டிற்கு குச்சி பொறுக்கிய அழகைப் பார்க்கணும்..செமையா இருக்கும். அதை வைத்து கூட்டை அட்ஜஸ்ட் செய்தது....ஸ்ட்ராங்கா இருக்கானு டெஸ்ட் பண்ணி பார்த்தது எல்லாம் அழகு. முன்பே அதை வீடியோவாகவும், படங்களாகவும் எடுத்து காக்கா முட்டைனு பதிவு எழுதினேன். இப்ப காமேரா ரிப்பேர். எனவே படம் எடுக்க முடியலை என் மொபைலும் அத்தனை நன்றாக வருவதில்லை.

    குருவிகள் கூடு கட்டும் அழகு நான் கிராமத்தில் இருந்தவரை பார்த்திருக்கேன் அக்கா செமையா இருக்கும். பஞ்சு கூட கொண்டு போகும். தேங்காய் நார் மெலிதாக சுருண்டு இருந்தால் அதையும் எடுத்துப் போகும். நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் அந்த ஜன்னல் போல இருக்கும் தென்னை நாரையும் எடுத்துப் போகும் அதைப் பிய்க்கும் அழகு ஹையோ அந்த தலையை அப்படியும் இப்படியும் அசைத்து கண் கொள்ளாக் காட்சி கோமதிக்கா....நீங்கள் ரொம்பவே எஞ்சாய் செய்கிறீர்கள் செய்வது மட்டுமின்றி எங்களோடு பகிரவும் செய்கிறீர்கள். ரொம்ப நன்றிக்கா....

    அத்தனை படங்களும் அருமை....இந்தக் குருவியைப் பார்த்து சில வருடங்கள் ஆயிற்று. பாண்டிச்சேரியில் இருந்தப்ப வரும். தவிட்டுக் குருவி. இக்குருவியின் பெயர் அப்போ தெரியாது இப்ப தெரிந்து கொண்டேன். சன் பேர்ட் வரும்(கைக்குள் அடக்கி விடலாம்...)

    பதிலளிநீக்கு
  37. பறவைகளை அதுவும் குருவிகளைப் படம் பிடிப்பது ரொம்பவே கஷ்டம்தான்.....விர் விர்ரென்று பறந்து கொண்டே இருக்கும்...நீங்க ரொம்ப பொறுமையா படம் எடுத்துருக்கீங்க கோமதிக்கா....

    இயற்கையின் அற்புதங்கள் நிறைய! பிரமிப்பு ஒரு புறம் சந்தோசம் மறுபுறம்....அதற்கு தீங்கிழைத்தால் அது பொங்கவும் செய்யும்...ரசித்தேன் கோமதிக்கா படங்களையும் பதிவையும் ராமலக்ஷ்மி அவர்களின் தகவல்கள் அருமை தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு