Amaithi Purave Song- Sung By P. Susheela
செவ்வாய், 29 மே, 2018
ஞாயிறு, 27 மே, 2018
கிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா- பகுதி 2
"கால் வலிக்குது தூக்கிச் செல்" (நண்பர்கள்)
அமெரிக்கக் கட்டிடக் கலை நிபுணரும் வடிவமைப்பாளரும் ஆகிய மேரி கோல்ட்டர் என்னும் பெண்மணியால் உருவாக்கப்பட்ட காட்சிக் கோபுரம் இங்கு உள்ளது.இதன் உள்ளே படிவழியாக மேலே சென்று கிராண்ட் கென்யானையும் கொலொராடோ ஆற்றையும் காணலாம். இந்தக் கோபுரத்தின் ஒவ்வொரு கல்லும் பேசும் ஓவியங்களைக் கொண்டுள்ளது.முக்கோண வடிவிலும்,வைரத்தின் வடிவிலும் அமைந்த பாறைகளில் வண்ணப்பட்டைகள் அமைந்துள்ளன. T வடிவிலான கதவுகளும்,ஒடுங்கிச் செல்லும் சன்னல்களும் உள்ளன. கரடு முரடாக உள்ள கற்களின் புறப்பரப்புகள் வினோதமான நிழல்களை ஏற்படுத்துகின்றன.
இந்த அறிவிப்புப் பலகையில் இங்கு பருவநிலை திடீர் திடீர் என்று மாறும் அதனால் கவனமாய் இருக்க வேண்டும் என்றும், மழை, இடி, மின்னல், புயல் எல்லாம் திடீர் என்று ஏற்படும் அதனால் உள் பகுதிக்குள் நடந்து போவதை தவிர்க்க வேண்டும் என்றும் வளர்ப்புப் பிராணிகளைக் கவனமாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜிபிஎஸ் உதவி சில நேரம் இதற்குள் வழியைச் சரியாக காட்டாது, கவனமாய் இருக்க வேண்டும் என்றும் போட்டு இருக்கிறது.
காட்சிக் கோபுரம் போகும் வழியில் மண்ணுக்குள்ளிருந்து எலி போன்ற ஒன்று வலை தோண்டிக் கொண்டு இருந்தது.
அதன் முகம் அதன் மீசை சீல் விலங்கை நினைவுபடுத்தியது எனக்கு
அதன் நான்கு பல்லும் நல்ல பெரிதாக இருந்தது
பேரனும் மருமகளும்
கோபுரத்தின் உள் புறம் மேல் புறம்
மர ஆசனம் குளிர் காயும் இடம்
முதலில் ஏறும் இடம் மட்டும் கொஞ்சம் குறுகலாக இருக்கிறது.
அடுத்த தளம் செல்ல நல்ல தாராளமாய் ஏறுவதற்கு வசதியாக உள்ளது படிகள்.
ஏறும் போதே மேல் தளத்தில் வரைந்து இருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
மேல் விதானத்திலும் அழகிய ஓவியங்கள்- பழங்குடியினரின் ஓவியங்கள்
அவர்கள் வாழ்க்கை முறைகள் எல்லாம் ஓவியமாய் இருக்கிறது
மரத்தினால் செய்த ஆசனங்கள்
சோளக் கதிர் சாப்பிடும் பறவை
மேலிருந்து எடுத்தபடம்
மேல் பகுதியில் இருந்து அழகான காட்சிகளைக் காணலாம் சூரியனும் நம்மைப் பார்க்கிறார்
மேல்தளத்திலிருந்து கண்ட அழகிய பள்ளத்தாக்குக் காட்சிகள்.
கொலொராடோ ஆற்றின் அழகைக் காணலாம்
ஆறு வளைந்து வளைந்து போகும் காட்சி அழகு
ஜன்னல் வழியாகப் பார்த்த காட்சி.
மஞ்சள் புற்களும், கரும்பச்சை மரங்களும், நீண்ட தூரம் செல்லும் பாதையும் அழகு
பாதை நடுவில் கற்களால் அழகாய் ஒரு மலர் இதழ்கள்.
இதில் விளக்கு எரிகிறது
கம்பித் தடுப்பு வழியாகப் பள்ளதாக்கின் அழகைப் பார்க்கலாம் பாதுகாப்பாய்.
அமெரிக்கப் பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள், மற்றும் அவர்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கடை எல்லாம் அடுத்த பகுதியில்.
வாழ்க வளமுடன்.
திங்கள், 21 மே, 2018
கிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா
மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன்.
அமெரிக்காவில் 400 தேசிய பூங்கா உள்ளன. அதில் இதுவும் ஒன்று.

காலையில் தெரிந்த நிலா


நடுவில் இருக்கும் மலை கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.


விஷ்ணு பாதம் என்கிறார்கள்.

ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு அழகு.

மாலைச் சூரிய ஒளியில் தங்கம் போல் ஜொலிக்குது மலை

வெயில் படும் இடம் தங்கம் போலவும் மற்ற இடங்கள் சிவப்பாகவும் தெரிகிறது.

மாலை அழகு




கொலராடோ ஆற்றின் அழகு வெகு ஆழத்தில் போகிறது இந்த 446 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. பலவகையான மண் , கல், அடுக்குகளை அரித்துக் கொண்டு இப்போது கீழே ஓடிக் கொண்டு இருக்கிறது. இரண்டு பில்லியன்(2,000, 000 , 000)
ஆண்டுகள் பழைமையான பாறைப் பகுதிகள் கீழே அமைந்துள்ளன.


கம்பித்தடுப்பு இல்லா இடத்திற்குச் செல்லவேண்டாம் என்று அறிவிப்புகள் வைத்து இருந்தாலும் பயத்தை வென்ற மக்கள் நமக்கு அச்சத்தை வரவழைத்தனர்.

பாதுகாப்பான எங்கள் கண் பார்வையில் பேரனின் சாகச போஸ்


குளிர் காற்று நம்மைப் பயமுறுத்துகிறது, அதை மீறி ,படம் எடுப்பவர் சொல்படி சிரிப்பு

பள்ளத்தாக்கிலிருந்து நடந்து செல்ல ஏற்பாடு செய்து தருகிறார்கள்.


கிராண்ட் கேன்யானில் தங்கி இருந்த விடுதி அருகில் இருந்த மரத்தில் காலை நேரம் பள பள என்று மின்னிய காக்கா- பைன் மரத்தில்

அதன் சத்தமும் கொஞ்சம் வித்தியாசம்.
நல்ல உடல் வாகு.

போல் மின்னுகிறது. நல்ல உடல்வாகைப் பெற்று இருக்கிறது. கழுகு போல் மிக உயரத்தில் பறக்கிறது.
அமெரிக்காவில் 400 தேசிய பூங்கா உள்ளன. அதில் இதுவும் ஒன்று.
இந்த பள்ளத்தாக்கில் மாலைச் சூரியன் மறையும் போது ஒரு அழகு, காலை ஒரு அழகு. அங்கு இரண்டு நாள் தங்கிப் பார்த்தோம்.
நிறைய இடங்கள் கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.
சிவன் கோயில், விஷ்ணு பாதம், என்றெல்லாம் பெயர் கொடுத்து இருக்கிறார்கள்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தோன்றும் கற்பனைக்கு ஏற்ற மலை அழகு.
நிறைய இடங்களில் இருந்து மலையின் அழகையும் பள்ளத்தாக்கையும், ஓடும் கொலராடோ ஆற்றின் அழகையும் பார்க்கப் பாதுகாப்பான கம்பித் தடுப்புகள் உள்ளன.
பாதுகாப்பற்ற மலையின் விளிம்பில் நின்று பார்க்கும் பயத்தை வென்றவர்களும், விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களும் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்கள்.

காலையில் தெரிந்த நிலா


நடுவில் இருக்கும் மலை கைலாயம் போல் காட்சி அளிக்கிறது.


விஷ்ணு பாதம் என்கிறார்கள்.

ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு அழகு.

மாலைச் சூரிய ஒளியில் தங்கம் போல் ஜொலிக்குது மலை

வெயில் படும் இடம் தங்கம் போலவும் மற்ற இடங்கள் சிவப்பாகவும் தெரிகிறது.

மாலை அழகு



கொலராடோ ஆற்றின் அழகு வெகு ஆழத்தில் போகிறது இந்த 446 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. பலவகையான மண் , கல், அடுக்குகளை அரித்துக் கொண்டு இப்போது கீழே ஓடிக் கொண்டு இருக்கிறது. இரண்டு பில்லியன்(2,000, 000 , 000)
ஆண்டுகள் பழைமையான பாறைப் பகுதிகள் கீழே அமைந்துள்ளன.
ஆற்றின் அழகைக் கம்பித்தடுப்பு வழியாகப் பார்க்கலாம்.
பயமே இல்லாமல் கம்பித்தடுப்பு இல்லா இடத்தில் மக்கள்.

கம்பித்தடுப்பு இல்லா இடத்திற்குச் செல்லவேண்டாம் என்று அறிவிப்புகள் வைத்து இருந்தாலும் பயத்தை வென்ற மக்கள் நமக்கு அச்சத்தை வரவழைத்தனர்.
பாதுகாப்பான எங்கள் கண் பார்வையில் பேரனின் சாகச போஸ்

குளிர் காற்று நம்மைப் பயமுறுத்துகிறது, அதை மீறி ,படம் எடுப்பவர் சொல்படி சிரிப்பு
பள்ளத்தாக்கிலிருந்து நடந்து செல்ல ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

கிராண்ட் கேன்யானில் தண்ணீர் தேடித் தவிக்கும் சிட்டுக்குருவிகள்.
குடி தண்ணீர் இருக்கும் குழாய்க்குக் கீழ் சிந்திக்கிடக்கும் நீர்த் துளி தேடிப் பருகும் குருவிகள்.
கொடைக்கானலில் ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகளை மலையில் வைத்து இருப்பார்கள் பறவைகள் நீர் பருக. அது போல் அவைகளுக்குத் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து இருக்கலாம்.

கிராண்ட் கேன்யானில் தங்கி இருந்த விடுதி அருகில் இருந்த மரத்தில் காலை நேரம் பள பள என்று மின்னிய காக்கா- பைன் மரத்தில்

அதன் சத்தமும் கொஞ்சம் வித்தியாசம்.
நல்ல உடல் வாகு.

கிராண்ட் கேன்யானில் பார்த்த காகம்.
இங்கும் காகம் இருக்கிறது, ஆனால் அண்டங்காக்கை மட்டும் தான் இருக்கிறது.. அதன் உடல் இரட்டைவால் குருவியின் உடல் போல் நல்ல கருமையாய்ப் பட்டுப்
காக்கை மேல் விருப்பம் இல்லை இங்கு இருப்பவர்களுக்கு. அதற்கு உணவளித்து அதை பழக்கப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது அந்நியப் பறவையாம், மற்ற பறவைகளுக்கும் , உயிரினங்களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறதாம்.
இங்கு அரியவகை பறவைகளும், விலங்குகளும் இருக்கிறதாம்.
மகன் வீட்டில் (அரிசோனாவில்) வைக்கும் உணவுக்குப் பல பறவைகள் வந்து இருக்கிறது, காகம் மட்டும் நான் அங்கு இருக்கும் வரை வரவில்லை.
மகன் ஊரிலும் அண்டங்காக்கைகள் தான் இருக்கிறது.
மகன் ஊரிலும் அண்டங்காக்கைகள் தான் இருக்கிறது.
இன்னும் இருக்கிறது சில இடங்கள் கிராண்ட் கேன்யானில் அவை அடுத்த பதிவில்.
வாழ்க வளமுடன்.
--------------