ஞாயிறு, 4 மார்ச், 2018

டிஸ்னியின் கனவுலகம் பகுதி -3


'கார் ' என்ற அனிமேஷன் படம் 2006-ல் வந்தது " ரேடியேட்டர் ஸ்பிரிங்க்ஸ்' என்ற திரைப்பட நகரை அதற்காக உருவாக்கினார்கள். அது போன்ற  மாடலில் ' ரேடியேட்டர் ஸ்பிரிங்க்ஸ்" என்ற இடத்தை இங்கு 
அமைத்துள்ளார்கள்.
கார் அழகாய்  கண்சிமிட்டிப் பேசுகிறது நம்மிடம்

மாலை நேரத்தில்
 மலை பொன் வண்ணத்தில் தக தக என்று ஜொலிக்கிறது.
Cars Land - இந்த இடத்தில்  கார்கள் எல்லாம் ரேஸ் கார்கள் போல வெகு வேகமாய் பாய்ந்து வருவதைப் பார்க்க பயம் கலந்த உணர்வு ஏற்படுகிறது. கலர் கலராக கார்கள் அழகாய் பளபளப்பாய் இருக்கிறது. செயற்கை மலைகள் அழகாய் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செயற்கை அருவி எல்லாம் இருக்கிறது.
இரண்டு கார் சமவேகத்தில் வந்தது. காரில் இருந்தவர்கள்
உற்சாகக் குரல் கொடுத்தார்கள் பார்வையாளர்களைப் பார்த்து .







சிவலிங்கம் கீழ் இருக்கும் ஆவுடையார் போல் இருக்கிறது அல்லவா?


கள்ளிச்செடிகள் அழகுபடுத்துகிறது

மாலை வானமும், ஸ்தூபியும் 
 மரங்களும் லைட் அலங்காரமும்  பார்க்க அழகு
எவ்வளவு  மக்கள் கூட்டம் கண்டு  களிக்கிறது!





சல சல சத்தத்துடன் செயற்கை அருவி.


ஓநாய் போன்ற தோற்றம் தரும் மலை
இரவு வண்ண விளக்கால் நீர் கலர் கலராக மாறும்
அழகிய பாலமும் ஜெயண்ட்வீலும் பார்க்க அழகு
இரவு வாணவேடிக்கை  வண்ணநீரூற்றில்  டிஸ்னியின் கதை தெரியும் இடம்.
மாலை விளக்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
இரவு விளக்கு ஓளியில்   டிஸ்னி உலகத்தை அடுத்த பதிவில் காணலாம்.
முந்திய பதிவுகளை   பார்க்கலாம்  டிஸ்னியின் கனவுலகம்
                                                               வாழ்க வளமுடன்.

30 கருத்துகள்:

  1. பதிவை படித்தேன் இணையம் குறைவு காரணமாக படங்கள் திறக்கவில்லை நாளை மீண்டும் வந்து பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் கண்டேன் மிகவும் அழகு மட்டுமல்ல... அற்புதமான தெளிவு.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    நாளை பார்ப்பேன் என்று சொன்னீர்கள்! இன்றே பார்த்து விட்டீர்கள் மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள். உங்கள் பதிவு வழி நாங்களும் டிஸ்னி உலகில் சுற்றி வருகிறோம். நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான் சிவலிங்கத் தோற்றம் ஹா ஹா ஹா.

    கள்ளிச் செடிகள் உண்மையானவையோ .. நல்ல பெரிசா வளர்ந்திருக்கே.

    மாலை விளக்குகள் நன்கு மிளிர்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் அத்தனை அழகு கோமதிக்கா...

    ஆவுடையார் போன்ற அந்த பாறை ரொம்ப கண்ணைக் கவரும் வகையில் இருக்கு...அது போல செயற்கை அருவி, கார் வேகமாக வரும் பகுதி, மலைகள், கடைசியில் சேர்ந்தார் போல் படங்கள் அந்தப் பாலம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.

    கார் சீறிவரும் பகுதியைப் பார்க்கும் போது இப்படித்தான் சில காட்சிகள் செட்டுக்குள்ளேயே எடுப்பார்கள் போலும்னு தோணிச்சு...அங்கு படம் எடுக்கும் விதம் கூடக் காட்டுவார்களாமே...

    அத்தனையும் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா..மிக்க நன்றி அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. மாலை நேரத்தில் பொன்னாய் தகதகக்கும் மலை செயற்கைத்தானே? அட, கீழே நீங்களே சொல்லி இருக்கிறீர்களே... எலலவற்றையும் செயற்கையாக உருவாக்கி விட்டார்கள். அந்த "ஆவுடையாருக்கு" அவர்கள் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்?!! உங்கள் உதவியில் நாங்களும் அங்கு சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் தொடர் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. athiraமியாவ் has left a new comment on your post "டிஸ்னியின் கனவுலகம் பகுதி -3":

    போன பதிவுகள் போல் அனைத்துப் படங்களும் அழகு. “கார்” நாங்களும் பார்த்தோம்.

    Publish
    Delete
    Mark as spam

    Moderate comments for this blog.

    Posted by athiraமியாவ் to திருமதி பக்கங்கள் at March 5, 2018 at 12:43 AM

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    நீங்கள் போட்ட இரண்டு பின்னூட்டங்கள்
    ஒன்று படித்து விட்டு வெளியிட நேரம் ஆகி விட்டதால்
    கோபித்து கொண்டது எடுத்து ஒட்டி இருக்கிறேன்.

    கார் படம் மகனுடன் பார்த்து இருப்பீர்கள் இல்லையா?
    அவைகள் கண்களை உருட்டி பேசுவதும் அவைகளுக்கு மனிதர்களைப் போல்
    ஆசாபாசங்க்களும் அருமையாக இருக்கும் இல்லையா?

    சிவலிங்க தோற்றத்தை ரசித்தீர்களா?
    கள்ளிச்செடிகள் உண்மையானது. இன்னும் பெரிதாக சில இடங்க்களில் இருக்கிறது வேறு பதிவுகளில் அந்த படம் போடுகிறேன்.

    மாலை விளக்குகள் பார்க்கவேண்டிய ஒன்று அதிரா.

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    //ஆவுடையார் போன்ற அந்த பாறை ரொம்ப கண்ணைக் கவரும் வகையில் இருக்கு...அது போல செயற்கை அருவி, கார் வேகமாக வரும் பகுதி, மலைகள், கடைசியில் சேர்ந்தார் போல் படங்கள் அந்தப் பாலம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. //

    ஆமாம் கீதா, ரசிப்பீர்கள் என்பதால் தான் இத்தனை பகுதிகளாய் வெளியிடுகிறேன்.

    //கார் சீறிவரும் பகுதியைப் பார்க்கும் போது இப்படித்தான் சில காட்சிகள் செட்டுக்குள்ளேயே எடுப்பார்கள் போலும்னு தோணிச்சு...அங்கு படம் எடுக்கும் விதம் கூடக் காட்டுவார்களாமே...//

    ஆமாம் கீதா, படம் எடுக்கும் ஹாலிவுட் ஸ்டுடியோ அங்கு இருக்கு .
    செயற்கை வானம். பெரிய பெரிய பொய்யான மாயத் தோற்றம் அளிக்கும் கட்டிடங்கள் உண்டு.

    ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.


    //மாலை நேரத்தில் பொன்னாய் தகதகக்கும் மலை செயற்கைத்தானே? அட, கீழே நீங்களே சொல்லி இருக்கிறீர்களே... எலலவற்றையும் செயற்கையாக உருவாக்கி விட்டார்கள். அந்த "ஆவுடையாருக்கு" அவர்கள் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்?//

    அவர்கள் பெயர் வைக்கவில்லை ஸ்ரீராம். கார் சுற்றி வர அப்படி ஒரு அமைப்பு வைத்து இருக்கிறார்கள். போக்குவரத்து காவலர் போல நிற்கிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  13. அற்புதப் படங்கள்
    மகிழ்ந்தேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  14. செயற்கை அருவியைப் பார்த்து மக்கள் மகிழும் இந்த காலகட்டத்தில் -
    இயற்கை அமைத்து வழங்கிய அழகையெல்லாம் அழித்துக் கொண்டல்லவா இருக்கின்றோம்..

    தங்களால் நானும் டிஸ்னியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

    தங்கள் பணி வாழ்க.. வளர்க..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.

    பாலைவன பகுதியில் இயற்கையை உண்டாக்கும் நாடு இருக்கே!
    இயற்கையை மதிக்கும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. உங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஐம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ///நீங்கள் போட்ட இரண்டு பின்னூட்டங்கள்
    ஒன்று படித்து விட்டு வெளியிட நேரம் ஆகி விட்டதால்
    கோபித்து கொண்டது எடுத்து ஒட்டி இருக்கிறேன்.///

    ஏன் கோமதி அக்கா.. படித்தவுடன் பப்ளிஸ் பண்ணோனும் என இல்லையே... பப்ளிஸ் ஓ டிலீட் பண்ணும் வரை அது அப்படியேதானே இருக்கும்.. மெயிலில் வைத்துப் படிக்கிறீங்களோ? இல்லை கொமெண்ட் மொடரேஷன் பகுதியில் வச்சுப் படிக்கிறீங்களோ?

    மெயிலில் எனில்.. கைமாறி டிலீட் செய்தாலும்.. அது புளொக்கில் கொமெண்ட் வெயிட்டிங் கில் போய் நிக்கும்.

    பதிலளிநீக்கு
  19. அதிரா மெயிலில் தான் படிப்பேன், அலைபேசியில் படித்தேன் ப்பளிஸ் செய்ய மறந்து விட்டேன் போல அதன் பின் பின்னூட்டம் போட போகும் போது பார்த்தேன்.
    அதிரா இரண்டு பின்னூட்டங்கள் போட்டார்களே என்று தேடி போட்டேன் ஆனால் போடமுடியவில்லை. . வெகு நேரம் ஆகி விட்டது என்றது.
    புளொக்கில் போய் பார்த்து விட்டேன் இல்லை
    அலைபளசியில் இருந்த பின்னூட்டத்தை காப்பி செய்து போட்டேன்.
    இனி கவனமாய் இருக்க வேண்டும். அதிரா.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் இந்தப் பதிவுகளில் வரும் படங்களும் செய்திகளும் டோக்யோவில் நான்பார்த்த டிஸ்னி லாண்ட் போல இல்லையே டோக்யோவில் அமைந்துள்ள டிஸ்னி லாண்ட் அமெரிக்க டிஸ்னி லாண்ட் போலவ்ந்ந் இருக்கும் என்று கேள்விப்பட்டேன் ஜப்பானில் நான் என்னும் ஒரு பது எழுதுஇ இருந்தேன் படங்கள் இல்லாவிட்டாலும் ஓரளவு எழுதி இருக்கிறேன் ஒரு வேளைநீங்கள் குறிப்பிடும் டிஸ்னி கனவுலகம் வேறோ
    http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  21. மாலை நேரத்தில் மலை-- நம் கற்பனைக்கெட்டாத கதைகளைச் சொல்கிறது.

    Cars land-- கண்கொள்ளாக் காட்சி. அதிவேக விரைவில் கார்கள் அணிவகுக்கும் பொழுது நினைத்துப் பார்க்கவே த்ரில்!

    சிவலிங்கத்து ஆவுடையார்-- எனக்கோ குழந்தைகளுக்கு பால் புகட்டும் அந்நாளைய பாலாடை போல.

    கள்ளிச் செடிகள் விண்முட்டும் அடுக்குமாடி கட்டிட அழகு!

    மாலை வானமும் ஸ்தூபியும் மயக்கும் அழகு!

    செயற்கை அருவியை ஓடவிட்ட கில்லாடிகள் நினைப்பதை நிகழ்த்திக் காட்டுகிற புத்திசாலிகள்.

    ஒநாய் போன்ற-- நம்மூரில் அதற்கும் ஒரு கதை ரெடியாக வைத்திருப்பார்கள்!..

    மொத்தத்தில் டிஸ்னிலேண்ட் மனத்தைக் கொள்ளை கொள்ளும் ஒரு டிஸ்கவரி லேண்ட் தான்!

    பதிலளிநீக்கு
  22. படங்கள் எல்லாம் அழகு பளிச் பளிச் .சிவலிங்க வடிவம் மற்றும் ஓநாய் வடிவம் அசத்தல் .

    நீங்களும் காரில் போனார்களா .எனக்கு பயம் :)

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி அமைத்து இருக்கிறார்கள்.
    உங்கள் பதிவை படிக்கிறேன்.



    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    மாலை நேரம் மலை கற்பனைக்கெட்டாத கதை சொல்லும் தான்.

    அதிவேக கார் அதிவேகமாய் வருவதைப் பார்ப்பதே திரில்தான்.

    நீங்கள் சொல்வது போல் பாலாடை மாதிரியும்

    இருக்கிறது. ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு ரசித்தமைக்கு நன்றி சார்.

    .

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    ஏஞ்சல் , நான் காரில் பயணம் போகவில்லை, ரசித்தேன் அவ்வளவுதான்.

    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. மிக அருமையான படங்களுடன் கூடிய பதிவு/ அதோடு இல்லாமல் இன்னிக்குப் படங்கள் நிறைய இருந்தும் பதிவு சீக்கிரமாய்த் திறந்து விட்டது. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. அவ்வளவு வேகமாய்க் காரில் போவதை நினைத்தாலே மயக்கம் வரும் போல் இருக்கு!

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
    வேகமாய் போகிற கார், எனக்கும் பயம் தான்.

    பதிலளிநீக்கு
  28. எல்லாமே அழகான படங்கள் அக்கா. மாலை நேரம் மலை படம் ரெம்ப அழகு. உண்மையிலேயே ஆவுடையார் சிவலிங்கம் மாதிரிதான் இருக்கு. எனக்கும் காரில் போக பயம். சுற்றும் ராட்டினமும் பயம்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
    கார், ராட்டினம் எல்லாம் தைரியசாலிகளுக்கு தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு