வெள்ளி, 17 நவம்பர், 2017

அழகு ரதம் பொறக்கும்


எங்கள் பிளாக் ஸ்ரீராம் கதை கேட்ட போது  என்ன எழுதுவது என்று மிகவும் யோசித்தேன். ஒரே ஒரு கதைதான் எழுதி இருந்தேன்., அதுவும் குட்டிக் கதை.
அதுவும் எங்கள் ப்ளாக்கில் இடம்பெற்று இருக்கிறது.

அவர் தளத்தில்   எனக்கு முன்பு கதை எழுதியவர்கள் கதை எல்லாம் மிக அருமையாக இருந்தது. என்ன கதையை எழுதுவது என்ன எழுதுவது என்று யோசித்தபோது என் அன்பு மதினியின் நினைவு வந்தது அவர்களைப் பற்றிய கதையை எழுதி  அனுப்பினேன், முடிவை மாற்றி.

ஸ்ரீராம் அப்பா கேட்டுக் கொண்டபடி  சீதை ராமனை மன்னித்தாள் என்று முடித்து மகிழ்ச்சியாக வலம் வந்தாள் என் அன்பு மதினி.

'எங்கள் ப்ளாக்'  தளத்தில் கடந்த முப்பது நாட்களில்  அதிகம் படித்ததாக இடம்பெற்ற பதிவுகளில் என் கதையும் இடம் பெற்றது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

தமிழ்மண வாக்கும் அதிகம் கிடைத்தது மகிழ்ச்சி.
வாக்கு எங்கள் ப்ளாக்கில் எழுதியதால் கிடைத்தது.

 என் கதை 24 வது கதையாக இடம்பெற்றது.

என் எழுத்தைப் படித்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வலை  நட்புகளுக்கும் நன்றி.
கேட்டு வாங்கிப் போட்ட ஸ்ரீராமுக்கும் நன்றி.


எங்கள் ப்ளாக் தளத்தில் படித்து இருப்பீர்கள்.  இங்கு பகிர்ந்த கதையில் சின்ன மாற்றம் கதை முடிவில் - படித்துப் பாருங்கள்.

ஸ்ரீராம்! உங்கள் தளத்தில் கதை வந்ததால் நீங்கள்  கருத்து சொல்லவில்லை.
படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.



பத்மா, பழனி இருவரும் மிக  மகிழ்ச்சியாக தங்கள் மணநாளைக் கொண்டாடினர். பத்மாவின் மாமியார் ஆசிர்வாதம் செய்யும் போது சீக்கிரமாய்ப்  பேரனைப் பெற்றுக் கொடு பத்மா என்று ஆசீர்வாதம் செய்தார்கள்.


பழனிக்கும் பத்மாவிற்கும் அந்த ஆசை இருந்தது . திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.


ஒரு பெண் குழந்தை பிறந்து வளரும் போதே, எதிர்பார்ப்புகளும் சேர்ந்தே வளர்கின்றன.  குழந்தைப் பருவம் மாறி,  கன்னியாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அப்புறம் அவளை நல்ல வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தன் குலம் தழைக்க   அவர்களின் அன்பின் அடையாளமாய் ஒரு புது மலரை எதிர்ப்பார்ப்பது     என்று தொடரும் எதிர்பா ர்ப்புகள்  மனித இயல்பு. 


இப்படித்தான் பத்மாவிடம் எல்லோரும் எதிர்பார்த்தனர்.



பத்மாவின் பெற்றோர்  அவள் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள். பத்மா  தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்தாள்.  அத்தை வீட்டு மாமாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும்.   விடுமுறைக்கு அத்தை வீடு போவாள்,  மாமா அந்த ஊரில் உள்ள சிறப்பான இடங்களை அவளுக்குச் சுற்றிக் காட்டுவார்.  விடுமுறை நாட்களை அத்தை குழந்தைகளுடன் கழித்து வந்த அனுபவங்களைத் தாத்தா, பாட்டி, சித்தப்பாவிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து, அடுத்த விடுமுறையை எதிர்பார்த்துக்  காத்து இருப்பாள் , அத்தை குழந்தைகளும் பத்மா மதினி வரும் நாளை எதிர்பார்த்து இருப்பர்.



தாத்தாவும், பாட்டியும்  இறைவனிடம் சென்றுவிட்டார்கள், பத்மா பள்ளிப் படிப்பை முடித்த சமயம்.   அதன் பின் அத்தை வீட்டிலேயே இருந்து தட்டச்சு கற்றுக் கொண்டு அத்தைக்கு உதவியாக இருந்தாள்.
அத்தை வீட்டு மாமாவும் பத்மாவைத் தன் மூத்த மகளாகப் பாசத்தைக் காட்டி வளர்த்தார்.


 அத்தையும், மாமாவும் நல்ல வரன் பார்த்து  திருமணம் முடித்து வைத்தார்கள். பத்மாவின் சித்தப்பாவிற்கும், பத்மாவிற்கும்  ஒரே நாளில் திருமணம் நடந்தது. சித்தி கருவுற்றாள் பத்மா மாமியாரின்  எதிர்பார்ப்பும் வளர்ந்தது . இரண்டு பேருக்கும் ஒண்ணா திருமணம் ஆனது -உன் சித்திக்குக் குழந்தை பிறக்கப் போகிறது, உனக்கு ஒன்றும் காணோம்  என்று பேசினார்கள். , வீட்டுக்கு வரும் உறவினர்களும்  கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.


பத்மா தன் அத்தையிடம் சொல்லி வருந்தினாள் . அத்தை,  "உனக்கு   குழந்தை பிறக்கும்...  மகிழ்ச்சியாக இரு, மனதில் கவலையுடன் இருக்கக் கூடாது,  இறைவனுக்கு எப்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும் அப்போது கொடுப்பார்" என்று ஆறுதல் படுத்தினார்.


 அவள் அத்தைக்கு  அடுத்து அடுத்து குழந்தைகளைக் கொடுத்த ஆண்டவன் அவளுக்கு ஒன்றைத் தர மறுப்பது ஏன் என்றே தெரியவில்லை பத்மாவிற்கு.  வேண்டும் வேண்டும் என்பார்க்குக் கொடுக்காமல், வேண்டாம் என்பவர்களுக்குக் கொடுப்பது  இறைவனின் விளையாட்டு தானே!


ஆண்டுகள் சென்றது, யார் என்ன பிரார்த்தனை செய்யச் சொன்னாலும், செய்தாள்.  பக்கத்துவீட்டு  அனுபவம் மிக்க  பெண்மணி வாழைப்பழத்தில் பிள்ளைப் பூச்சியைப் பிடித்து உள்ளே விட்டு அது வெளி வந்தவுடன் அந்த பழத்தை உண்ணச் சொன்னார், முகம் சுளிக்காமல் அதையும் செய்தாள் பத்மா. சஷ்டி விரதம் இருந்தாள் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் " -இது பழமொழி ." சஷ்டி விரதம் இருந்தால்  கருப்பையில் கரு உருவாகும் என்பதை அப்படி முன்னோர் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.


 வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும், பலித்துக்   கருவுற்றாள் பத்மா உற்றார், உறவினர் அக்கம் பக்கம் எல்லோரும் மகிழ்ந்தனர் .
பதமாவிற்கும், பழனிக்கும்  ஒரு  சினிமாப் பாடல் பிடித்துப் போனது. அது;-
 'அழகு ரதம் பொறக்கும், அது அசைந்து அசைந்து நடக்கும் ' 
கற்பனையில், திளைத்தனர், ஆனந்தக் களிப்பில் மிதந்தனர்.


 தகுந்த காலத்தில் பெண் குழந்தை  பிறந்தது, தனக்குச் சாந்தி அளிக்கப் பெண் பிறந்தாள் என்று 'சாந்தி' என்று பெயர்  சூட்டினாள்.  குடும்பவழக்கப்படி மாமியார் பேர் வைத்தாள். அவள் பெரியவர்கள் பேர் சொல்லி அழைக்க முடியாதே(மரியாதைக் குறைவு ஆகிவிடும்) அதனால்   சாந்தி  என்று அழைத்து மகிழ்ந்தாள்.


 மலடி என்ற பேரை கொடுக்காமல்  குழந்தையைக் கொடுத்துப் பின் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சலையும்  கொடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையைத்  தன் பக்கம் எடுத்துக் கொண்டார் இறைவன். பத்மா, துடித்தாள்! துவண்டாள்!  'குழிப் பிள்ளை மடியில்' என்று  வந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.


அத்தை குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைந்து ஆறுதல் அடைந்தாள்.  இரண்டு மூன்று வருடங்களில்  மீண்டும் கருவுற்றாள்.  அவள் கணவர் பிரவசத்திற்குப் பத்மாவை  அத்தை வீட்டுக்கு அனுப்பும் போது, "பத்மா! இந்த முறை  மகன் பிறப்பான்.நான் பட்டுப்புடவையுடன் வருகிறேன்" என்று வழி அனுப்பினான்.


 அத்தை , மாமா, அவர்கள் குழந்தையிடம் தன் அத்தானின் எதிர்பார்ப்பைச்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.


 பிரசவ அறைக்குப் போகும்முன் "குழந்தை பிறந்தவுடன் அத்தானுக்குப்   போன் செய்து விடுங்கள்" என்று அத்தை மாமாவிடம்  சொல்லி மலர்ந்த முகத்துடன் சென்றாள்.


குழந்தை பிறந்தான் பழனியின் எதிர்பார்ப்புப்படி, ஆனந்த வெள்ளத்தில் அத்தை, மாமா, பத்மா அகம் மகிழ்ந்தனர். பழனிக்குச் செய்தியைச் சொல்லி விட்டு  அனைவருக்கும்   தனக்குப் பேரன் பிறந்து இருக்கிறான் என்று இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். பத்மாவை தன் மூத்த  குழந்தையாக நினைத்த மாமா.


பழனி பத்மாவையும்  குழந்தையையும் பார்க்கத் துடித்துக் கொண்டு இருந்ததில்  பத்மாவிற்கு கொடுத்த வாக்கை மறந்தான் , பட்டுப்புடவை வாங்கவில்லை. வெறுங்கையுடன்  வந்தான்.  


ஆனால் பத்மா  வருத்தப் படவில்லை, கோபப்படவில்லை,  அவளுக்கு  மகன் பிறந்த பூரிப்பில் முகம் மலர்ந்து இருந்தது.   தனக்குக் குழந்தை பிறந்த  மகிழ்ச்சியைவிட பட்டுப்புடவை ஒன்றும் பெரிதல்ல என்ற மன நிலையில் இருந்தாள்.  " சீதை ராமனை மன்னித்து விட்டாள்" .

--------------------------------------------------------------------------------------------------------------------------


ஸ்ரீராம் கேட்ட கதைக்கு மகிழ்ச்சியான முடிவாய் முடித்து கொடுத்து விட்டேன்.
இந்த கதையின் உண்மை கதாநாயகி  பிரசவ அறையில் ஜன்னி கண்டு இறந்து விட்டாள். 

அந்த விஷயம் கேட்டதும் தான் பத்மாவின் கணவர் பட்டுபுடவை வாங்காமல் ஓடி வந்தார்.


//அப்பாவி அதிரா:-

ஹா ஹா ஹா ரொம்ப சீரியஸ் ஆக்கிக்கொண்டு போய் முடிவில் ஒரு சேலையை வத்து டுவிஸ்ட் வைத்து ... ராமனை மன்னிக்கப் பண்ணிட்டீங்களே.... 

எனக்கு படிக்கப் படிக்க நெஞ்சு பக்குப் பக்கென்றது... பத்மாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என... நல்லவேளை நல்ல முடிவு... 

இருப்பினும் கோமதி அக்கா, பேச்சுப் பேச்சா இருக்கோணும்:) எனக்கு வாக்குக் கொடுத்திட்டால் அதை மீறுவது பிடிக்காது:)... அதனால பட்டுச்சேலையை வாங்கி வந்துவிட்டுக் குழந்தையைத் தூக்கச் சொல்லுங்கோ:).. அல்லது சேலை வாங்காததுக்கு நியாயமான காரணம் சொல்லும்படி கேட்கச் சொல்லிப் பத்மாவிடம் சொல்லி விடுங்கோ..:).//

என்று பின்னூட்டம் போட்ட அதிராவிற்கு நான் அளித்த பின்னூட்டம் கீழே :-

வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
கதையைப் படித்து அதன் முடிவையும் கண்டு பிடித்துவிட்டீர்கள் . அதி புத்திசாலி. குழந்தை மனம் கொண்ட அதிராவிற்குள் நடந்து இருப்பதை உணரும் தன்மையும் இருக்கிறது. 

ஶ்ரீராம் கேட்ட கதைக்கு இந்த முடிவு. ஶ்ரீராம் தளத்தில் மகிழ்ச்சியாக  இருக்கட்டும் பத்மா.

கருத்துக்கு நன்றி அதிரா.


என் தளத்தில் மீதியைப் போடுகிறேன் என்றேன். அந்த மீதி சோகக் கதை:-


அதிரா பத்மாவிற்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று   பயந்துவிட்டேன் நல்லவேளை நல்ல முடிவு என்றார். அப்படி நல்ல முடிவாய் இருந்து இருக்கலாம்.அப்படி இல்லாமல் போய் விட்டது.

தன் குழந்தையைப் பார்த்து  முகம் மலர்ந்து சிரித்த சிரிப்புடன்  அவள் கதையை முடித்து விட்டார் இறைவன் குழந்தையைக்  கொஞ்சக்கூட விடவில்லை.

எங்களை எல்லாம் சோகக் கடலில் மூழ்க வைத்து விட்டார் அன்பு மதினி பத்மா  .

பத்து நாட்களில்  பத்மா மதினி   குழந்தையும்  தன் தாயைத் தேடி போய்விட்டது. அங்கு தாயும் மகனும் மகிழ்ந்து இருப்பார்களோ!

                                                  வாழ்க வளமுடன்!







37 கருத்துகள்:

  1. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    சிறு வயதில் தாய், தந்தையரை இழந்த மதினியை சந்தோஷமாய் குழந்தைகளுடன் இருக்க வைத்து இருக்கலாம். இறைவனின் விளையாட்டை சில நேரம் புரிந்து கொள்ள முடியவில்லை. நல்ல மனம் உடையவர் என் மதினி அவருக்கு ஏன் இந்த முடிவை கொடுத்தார் என்று தெரியவில்லை.
    என் சிறு வயதில் மதினியின் பிரிவு என்னை மிகவும் பயத்தை கொடுத்தது, மகபேறு சமயத்தில் இப்படி இறப்பு நடக்கும் என்று இறப்புக்கு வந்தவர்கள் பேச பயத்தில் இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கோமதி அரசு மேடம்.

    எனது கணினி கீ போர்டில் ஆங்கில எழுத்து A வேலை செய்யாததால் கணினியில் தம வாக்களித்து, பனித்து, பின்னர் மொபைல் வழியாகப் பின்னூட்டம் இடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக எங்கள் தளத்தில் படைப்புகளை நண்பர்களிடமிருந்து கேட்டு வாங்கிப் போடும்போது அவர்களுக்கு கதை அனுப்பப்பட்ட மெயிலிலேயே என் அபிப்ராயங்களைச் சொல்லி விடுவது வழக்கம். தவிர்க்க முடியாத வேறு சில காரணங்களில் சில நேரம் சில படைப்புகளில் அங்கேயே பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

    ஆனால் இனி வரும் படைப்புகளிலாவது என் கருத்தும் அங்கே இடம்பெற வைக்க முயற்சிக்கிறேன்!

    :))

    பதிலளிநீக்கு
  4. சஷ்டி விரதத்துக்கு இந்த விளக்கம் எனக்குப் புதிது.

    உண்மைச் சம்பவத்தின் சோக முடிவு மனதைப் பாரமாக்குகிறது. தலைப்பாக நீங்கள் வைத்திருக்கும் வரிகளைக் கொண்ட பாடல்ஙெனக்கும் மிகவும் பிடிக்கும்.

    பத்மா மறைந்த சோகம் விலக அந்தக் குழந்தையாவது பழனிக்குத் தங்கி இருக்கலாம் என்பது ஒரு பார்வை. தாயில்லாமல் வளரும் குழந்தையின் சிரமம் அறிந்துதான் இறைவன் அதையும் வாங்கிக் கொண்டார் என்னும் எண்ணம் ஒரு பார்வை....

    பழனியும் உறுத்தலில்லாமல் மறுமணம் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நான்தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு.

    சிரமத்துடன் ஓட்டு அளித்தமைக்கு நன்றி.
    கதை முடிவை படித்தீர்களா?

    இங்கும் கருத்து சொல்லவில்லை நீங்கள்.


    மெயிலில் கருத்து இல்லை போய் பார்த்தேன்.
    உங்கள் வரவுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. உண்மைக் கதையில் சோக முடிவு. அடடா....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    அவசர குடுக்கையாக உங்களிடமிருந்து கருத்து இல்லை என்று கேட்டு விட்டேன். மன்னிக்கவும்.
    கதை அந்த பாடல் வந்த சமயம் தான் .1967 என்று நினைக்கிறேன். அதனால் தான் மதினி அந்த பாடலை பாடிக் கொண்டே இருப்பாள்.

    அந்த படத்திலும் கதாநாயகி இறந்து விடுவாள்.
    பாடலில் ஒரு வரி வரும் தெய்வம் எங்கே என்று கேட்கும் போது உன்னை காட்டுவேன் என்று.

    அது போல் தெய்வம் ஆகி விட்டாள் .

    //பத்மா மறைந்த சோகம் விலக அந்தக் குழந்தையாவது பழனிக்குத் தங்கி இருக்கலாம் என்பது ஒரு பார்வை. தாயில்லாமல் வளரும் குழந்தையின் சிரமம் அறிந்துதான் இறைவன் அதையும் வாங்கிக் கொண்டார் என்னும் எண்ணம் ஒரு பார்வை...//

    இறைவனின் கணக்கை யாரால் அறிந்து கொள்ள முடியும்?
    நீங்கள் சொல்வதும் உண்மைதான்.

    //பழனியும் உறுத்தலில்லாமல் மறுமணம் செய்யலாம்.//

    பழனி அண்ணன் மறுமணம் செய்து நிறைய குழந்தைகள் பெற்று இரண்டு குழந்தைகளுக்கு திருமணமும் ஆகி விட்டது.

    அண்ணனும் இறந்து விட்டார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கதை என்று நினைத்தது உண்மைச் சம்பவமாகி விட்டது..

    என்ன செய்வது . சில சமயங்களில் இப்படித்தான்..
    எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டியதாகின்றது..

    பதிலளிநீக்கு
  10. அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் சுபமான முடிவையே எதிர்பார்க்கிறார்கள் ஆனால் சுகமும் துக்கமும் கொண்டதுதானே வாழ்க்கை மேலும் கதைகள் கற்பனைதானே

    பதிலளிநீக்கு
  11. கோமதி அக்கா, நான் மாட்டு வண்டில் ஏறி, பஸ் ஏறி பின்பு ரெயின் எடுத்து இங்கு வர லேட்டாயிடுத்தூஊஊ:).. உங்கள் புளொக் எனக்கு திறந்த உடனேயே ஆடத் தொடங்கிடும்.. மேலே கீழே ஓடிக்கொண்டிருக்கும்.. ஒரு தடவை ஓபின் பண்ணி ஒரு பந்தி கடகடவெனப் படிச்சிட்டு திரும்ப மூடி, திரும்ப ஓபின் பண்ணி.. அடுத்த பந்தி படிப்பது... இப்பூடிக் கஸ்டப்பட்டுத்தான் இவ்ளோ நாளும் கொமெண்ட்ஸ் போட்டிருந்தேன்.. என் கஸ்டத்தை நீங்களும் அறிய வாணாமோ?:) அதனாலேயே சொன்னேன் இப்போ...

    ஆனாலும் பூஸோ கொக்கோ?:).. இன்று டக்கென ஒரு ஐடியா உதிச்சுது, புளொக்கை ஓபின் பண்ணிய உடனேயே பக்கெனப் பாய்ந்து மொத்தத்தையும் கொப்பி பண்ணிட்டு.. இனி ஆடினால் ஆடு என விட்டுப்போட்டு, என் கொம்பியூட்டரில் கொண்டு போய்ப் பேஸ்ட் பண்ணிப்போட்டு, காலாட்டிக் கொண்டே போஸ்ட் படிக்கிறேன்ன்.. ஓ லலலா:)).. ஹா ஹா ஹா.. சத்து இருங்கோ.. கருத்துக்கு வாறேன்:)..

    பதிலளிநீக்கு
  12. ///" சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் கரு உருவாகும் என்பதை அப்படி முன்னோர் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.///

    இதைத்தான் நானும் அறிந்திருக்கிறேன், எங்கள் பரம்பரையில் எல்லோரும் பால்பழத்தோடு விரதமிருப்பவர்கள்.. கோயிலிலும் லட்சம் செலவழிச்சு திருவிழாச் செய்வோம்.. மாமாதான் முன்னின்று கவனிப்பார்.. ஆனா அம் மமாவுக்கும் குழந்தை கிடைக்கவில்லை:(.. எல்லாம் விதி அன்றி வேறில்லை..

    பதிலளிநீக்கு
  13. ஓஓஓஓஒ கோமதி அக்கா என்ன இது????? முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. இப்படி ஆகிடுமோ என்றுதான் , அன்றே நான் பயந்து பயந்தே படித்தேன், எனக்கு சில சம்பவங்கள் கேள்விப்பட்டால் இரவில் கனவாக வந்து மிரட்டும்.. அதனால துன்பமானவை அறியப் பயப்படுவேன்.. ஆனா அதுக்காக என்ன பண்ணுவது... நடந்தவை யாவும் நடந்தவைதானே..

    இதுக்குத்தான் நம் ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள், சில விசயம் நமக்கு இல்லை எனில்.. அதை ஈசியாக எடுத்துக் கொண்டு போய் விட வேண்டுமாம்... அடம்பிடித்து வருந்தி.. விரதமிருந்து கேட்பது தவறாம்.. கடவுள் மறுப்புச் சொல்ல முடியாமல் , இப்படிக் கொடுத்துக் கெடுத்திடுவாராம்.. தெரியல்ல...

    ஆனா என்னைப்பொறுத்து, குழந்தையும் தாயுடன் போய் விட்டது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே..

    கோமதி அக்கா உங்களுக்கு வோட் பண்ண முடியல்லியே.. இணைக்கப்படவில்லை என்றே காட்டுதே.. இணைக்கவும் முடியல்ல..:(.

    பதிலளிநீக்கு
  14. இதையும் கொஞ்சம் பாருங்கோ கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று.....:(.

    http://gokisha.blogspot.com/2010/07/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    சிறு வயதில்மதினியின் இழப்பு தாங்க முடியவில்லைதான்.
    காலம் செல்ல செல்ல எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள்
    தாங்கி கொள்ளும் பக்குவத்தை கொடுத்து விட்டது.
    இவள் எவ்வளவு வேண்டும் என்றாலும் தாங்குவாள் என்று வருந்தங்களை கொடுக்கிறார்
    இறைவன்.

    பாலசுப்பிரமணியன் சார் சொன்னது போல் சுகமும், துக்கமும் கொண்டதுதானே வாழ்க்கை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான் எல்லோருக்கும் சுபமான முடிவை எதிர்பார்க்கிறார்கள்.
    சுகமும், துக்கமும் கொண்டது தான் வாழ்க்கை என்பதை நமக்கு வாழ்க்கை கற்று கொடுத்து விட்டது.

    குந்தி கண்ணனிடம் எனக்கு கஷ்டங்களை கொடு அப்போதுதான் உன்னை மறவாமல் இருப்பேன் என்றாளாம்.


    சினிமாவில் காதல் கல்யாணம் முடித்து விட்டால் சுபம் போட்டு விடுகிறார்கள் அதன் பின் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று காட்டுவது இல்லை.
    கஷ்ட நஷ்டங்க்களை சகித்து விட்டுக் கொடுத்து, தியாகம் செய்தால் தான் வாழ்க்கை சுகமாய் இருக்கும். இல்லையென்றால் வாழ்க்கை பாரம் தான்.

    உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //ஆனாலும் பூஸோ கொக்கோ?:).. இன்று டக்கென ஒரு ஐடியா உதிச்சுது, புளொக்கை ஓபின் பண்ணிய உடனேயே பக்கெனப் பாய்ந்து மொத்தத்தையும் கொப்பி பண்ணிட்டு.. இனி ஆடினால் ஆடு என விட்டுப்போட்டு, என் கொம்பியூட்டரில் கொண்டு போய்ப் பேஸ்ட் பண்ணிப்போட்டு, காலாட்டிக் கொண்டே போஸ்ட் படிக்கிறேன்ன்.. ஓ லலலா:)).. ஹா ஹா ஹா.. சத்து இருங்கோ.. கருத்துக்கு வாறேன்:)..//

    எவ்வளவு கஷ்டபட்டு காப்பி செய்து காலாட்டிக் கொண்டு போஸ்ட் படித்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    ///" சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் கரு உருவாகும் என்பதை அப்படி முன்னோர் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.///

    இதைத்தான் நானும் அறிந்திருக்கிறேன், எங்கள் பரம்பரையில் எல்லோரும் பால்பழத்தோடு விரதமிருப்பவர்கள்.. கோயிலிலும் லட்சம் செலவழிச்சு திருவிழாச் செய்வோம்.. மாமாதான் முன்னின்று கவனிப்பார்.. ஆனா அம் மமாவுக்கும் குழந்தை கிடைக்கவில்லை:(.. எல்லாம் விதி அன்றி வேறில்லை..//

    நீங்கள் சொல்வது உண்மை.
    விதி அன்றி வேறில்லைதான்.

    பதிலளிநீக்கு
  19. //ஓஓஓஓஒ கோமதி அக்கா என்ன இது????? முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. இப்படி ஆகிடுமோ என்றுதான் , அன்றே நான் பயந்து பயந்தே படித்தேன், எனக்கு சில சம்பவங்கள் கேள்விப்பட்டால் இரவில் கனவாக வந்து மிரட்டும்.. அதனால துன்பமானவை அறியப் பயப்படுவேன்.. ஆனா அதுக்காக என்ன பண்ணுவது... நடந்தவை யாவும் நடந்தவைதானே..//

    உங்களைப் போன்றவர்களை வருத்தப்படுத்தக் கூடாது பயப்படுத்தக் கூடாது என்று தான் சுப முடிவு கொடுத்தேன் ஸ்ரீராமுக்கு அனுப்பிய கதையில்.

    நீங்கள் பயந்துபயந்து படித்தது உண்மைதான். நானும் கதைகள் படிக்கும்போது அடுத்த சம்பவத்தை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு படிப்பேன் அது போலவே இருக்கும்.

    நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள்.
    அதனால் இந்த முடிவை வெளியிட்டேன்.
    நீங்கள் சொல்வது போல் நடந்தவை யாவும் நடந்தவைதான்.

    //ஆனா என்னைப்பொறுத்து, குழந்தையும் தாயுடன் போய் விட்டது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே..//

    ஆமாம் தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை அதற்கு இல்லைதான்.

    //இதுக்குத்தான் நம் ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள், சில விசயம் நமக்கு இல்லை எனில்.. அதை ஈசியாக எடுத்துக் கொண்டு போய் விட வேண்டுமாம்... அடம்பிடித்து வருந்தி.. விரதமிருந்து கேட்பது தவறாம்.. கடவுள் மறுப்புச் சொல்ல முடியாமல் , இப்படிக் கொடுத்துக் கெடுத்திடுவாராம்.. தெரியல்ல..//

    அதிரா, நீங்கள் மிகவும் பக்குவப் பட்டவர்கள் சிறிய வயதிலேயே!

    திருவாசகத்தில் ஒரு பாடல் உண்டு.

    வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ,
    வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்,
    வேண்டி நீயா தருள் செய்தால் அதுவே வேண்டின் அல்லால், வேண்டும் பரிசொன்றுண்டென்னில் அதுவும் உன் தன் விருப்பன்றே.

    இறைவனுக்கு தெரியும் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் எப்போது கொடுக்க வேண்டும் நாம் கேட்க வேண்டாம் என்று , ஆனால் பாழாய் போன மனது வேண்டிக் கொள்வது வேதனைக்குள்ளாவது என்று இருக்கிறது.


    "கிட்டாதாயின் வெட்டன மற" என்றும் சொல்லி இருக்கிறார்கள் தான்.
    குழந்தைகள் தனக்கு வேண்டியதை அடம் பிடித்து அம்மாவிடம் கேட்பது போல் சில வேண்டுதல்களை இறைவனிடம் கேட்டுப் பெற்று விட்டு அவதியும் பட வேண்டி இருக்கிறது.

    என் கணவர் அடிக்கடி சொல்வது 'நமக்கு என்று உள்ளது உண்டு, நமக்கு இல்லையென்றால் இல்லை'.

    ஏங்கி இளையாது இரு என்று இந்த வார்த்தையை அடிக்கடி சொல்வார்கள்.(சித்தராக பிறந்தவர் )


    //பரபரக்க வேண்டாம், பலகாலும் சொன்னேன்
    வர வரக் கண்டு ஆராய் மனமே – ஒருவருக்கும்
    தீங்கு நினையாதே, செய்ந்நன்றி குன்றாதே
    ஏங்கி இளையாது இரு.//

    -சிவபோக சாரம்

    என் செயல் ஆவது ஒன்றுமில்லை இனித் தெய்வமே
    உன் செயலே என்று உணரப் பெற்றேன்....''
    என்கிறார் பட்டினத்தார்.

    எல்லாம் அவன் செயல் என்று அமைதி அடைவோம்.

    இது போல் நீங்கள் சொன்னதையும் அடிக்கடி படித்து பார்க்க தோன்றுது மனம்.

    அருமையான கருத்துக்கு நன்றி அதிரா.







    பதிலளிநீக்கு
  20. உண்மையில் சோகமான முடிவா படிக்கும் போது ஐயோ என்று இருந்தது

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
    சோக முடிவை படித்தால் மனம் கனத்து தான் போகும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அங்கே சந்தோஷ முடிவை மகிழ்வோடு ஏற்ற மனசு உண்மையான முடிவை ஏத்துக்க கஷ்டமாயிருக்குக்கா .
    இறைவன் விளையாட்டு இதுதானோ :(

    எனக்கு தெரிஞ்ச ஒரு பெண்ணுக்கு மணமாகி 18 ஆண்டுகள் கழித்து கருவுற்று இறுதியில் இறந்தே பிறந்ததாம் குழந்தை :(
    அதுக்கு அந்த பெண் கன்ஸீவ் ஆகாமலேயே இருந்திருக்கலாமோ .

    இங்கே அம்மாவுடன் குழந்தையை இணைத்து வைத்து விட்டார் இறைவன் ..

    அதிரா பின்னூட்டத்தில் சொன்னதுஅவ்வளவும் உண்மை அக்கா :(
    // சில வேண்டுதல்களை இறைவனிடம் கேட்டுப் பெற்று விட்டு அவதியும் பட வேண்டி இருக்கிறது.//
    எனக்கு தெரிந்த ஒருவர் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டு அடம்பிடித்து சில மருந்துகளெடுக்கப்போக அது அவருக்கு உயிரையே எடுக்கும் அளவுக்கு போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

    //அங்கே சந்தோஷ முடிவை மகிழ்வோடு ஏற்ற மனசு உண்மையான முடிவை ஏத்துக்க கஷ்டமாயிருக்குக்கா .
    இறைவன் விளையாட்டு இதுதானோ :(//

    எனக்கும் சோக பகிர்தல் முடிவை ஏற்று கொள்ள முடியவில்லை அதிராவால் வெளி வந்து விட்டது.

    10 மாதம் சுமந்து அந்த குழந்தையை இழப்பது மிகவும் வேதனை.
    என் அம்மாவிற்கு மூன்று குழந்தைகளை ஏழு மாதம், 10 மாதம் வளர்த்து சாக கொடுத்து இருக்கிறார்கள்..
    வளர்த்த குழந்தை (என் அக்கா, என் அண்ணன்) இவர்களை பறி கொடுத்து இருக்கிறார்கள் இதெல்லாம் எவ்வளவு கொடுமை.

    நிறைய சோக கதைகள் இருக்கிறது என்னுள்.

    அந்த காலத்தில் தாயை சாமாதானம் படுத்த சொல்லும் வார்த்தை பிரியமானவர்களை இறைவன் அழைத்துக் கொள்வார் என்று.

    நமக்கு பிரியமானதை எடுத்து கொள்வரோ இறைவன் என்று கேட்க தோன்றும் அதிகபிரசிங்காய் எதும் பேச கூடாது பெரியவர்களிடம் என்று அடக்கி வளர்க்க பட்டதால் சாட்சியாக பார்ப்பது மட்டுமே ஆகி போனது வாழ்க்கை.

    இப்போது நல்ல மருத்துவ வசதிகள் வந்த பின்னும் பிரசவத்தில் தாய், சேய் இறந்து போவது, குழந்தைகளுக்கு நோய் வந்து மறைவது எல்லாம் பார்க்கும் போதும், கேட்கும் போதும்

    அதிரா சொல்வது போல் விதி வலியது என்று எண்ண தோன்றுகிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.




    பதிலளிநீக்கு
  24. ரொம்ப வருத்தமான முடிவு தான் கோமதி அம்மா...


    நீங்க சொன்ன மாதரி அதிரா ரொம்ப நகைசுவையா பேசினாலும்....மிக எளிதாக அனைத்தையும் ஊகித்து விடும் ..பக்குவசாலி..




    மிக சிறு வயதில் மனதில் பதிந்தது...நம் அப்பாவிடம் சென்று இது வேண்டும் என்று கேட்பதற்கு முன் நமக்கு என்ன செய்ய வேண்டும் என அவர்கள் நமக்காக யோசித்து இருப்பார்கள்....


    அதுபோலவே இறைவனும் நமக்கு எது....எப்போது தர வேண்டும் என்று அவனுக்கு தெரியாதா...அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும்....அதுதான் உண்மையில் சிறந்த பக்தி...


    சரியா அம்மா....

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

    அதிரா பக்குவசாலிதான்.
    அருமையான உதாரணம் சொன்னீர்கள் அனு.


    //அதுபோலவே இறைவனும் நமக்கு எது....எப்போது தர வேண்டும் என்று அவனுக்கு தெரியாதா...அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும்....அதுதான் உண்மையில் சிறந்த பக்தி...//

    சரியாக சொன்னீர்கள் அனு.
    இறைவனின் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.
    அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அனு.

    பதிலளிநீக்கு
  26. விதி வலியது அதன் தீர்ப்பை யாரும் அறிய இயலாது
    த.ம+1

    பதிலளிநீக்கு
  27. கோமதிக்கா முடிவு மிகவும் சோகம். உண்மைக் கதை...அப்போ பெரியவர்கள் உறவினர்கள் பத்மாவிடம் அன்பு செலுத்தியவர்கள் அனைவரும் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள்!!! எங்கள் ப்ளாக் தளத்தில் இந்தக் கதையை வாசித்ததும் மனதில் இது உண்மையாக இருக்குமோ என்றும் தோன்றியது..சிலவற்றை.வாசிக்கும் போது தேவையில்லாமல் முடிவுகள் மனதில் தோன்றும். அதுவும் நெகட்டிவாக.... ஆனால் நீங்கள் எப்போதுமே நேர்மறை எண்ணங்களைச் சொல்லுபவர்கள். எவ்வளவு மெச்சுராகச் காட்டாப்பட்ட கதாநாயகி ஒரு பட்டுப்புடவைக்காக அதுவும் குழந்தை இல்லாமல் முதல் குழந்தை இறந்து அடுத்த குழந்தை பிறந்த வேளையில் அதை நினைவு கொண்டு இல்லை ஏதோ மறைக்கப்படுகிறதோ என்றும் தோன்றியது. ஆனால் மீண்டும் வந்து கமென்ட் போட முடியாமல் போனது அங்கு. கணினி ரொம்ப முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதால். இப்போது கூட இந்தக் கமென்ட் அடித்து, கணினி முரண்டு பிடித்து ஒரு மணி நேரமாகப் போட முடியாமல் இப்போதுதான் மீண்டும் அடிக்க முடிகிறது...சில சமயம் மீண்டும் வர முடிகிறது...அப்படி அங்குக் கேட்க நினைத்தவைகளுக்கு இங்கு விடை கிடைத்துவிட்டது கோமதிக்கா.....மதினி என்றால் உங்கள் கஸின்? மாமா/அத்தை பெண்?

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ரொம்ப நல்ல கதை அக்கா! அட அதிரா கணித்துவிட்டாரா!!சூப்பர்! அங்கு மீண்டும் வர முடியாததால் அவரது கமெண்டை அங்கு பார்க்க முடியலை இங்குதான் பார்க்க முடிந்தது அதற்கான உங்கள் பதிலும் ...

    அதிரா விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் மிக மிக மெச்சூர்ட்....கலகல பேர்வழியும் கூட!!! அதிரா வந்தால் அதிரும்ல!!! ஹாஹாஹா

    நமக்கு என்ன கிடைக்குமோ அது எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போதுதான் கிடைக்கும். நாம் பிரார்த்தனைகள் செய்தாலும்...கூட..உடனே நடந்து விடுவதில்லை. அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான்...ஆனால்.அந்தப் பிரார்த்தனைகள் நாம் ஏன் செய்கிறோம் என்றால் நம்பிக்கை! மனம் உறுதியாக இருக்க, எந்தக் கமென்டும் நம் மனதை பாதிக்காமல் இருக்க...நம்பிக்கையுடன் பற்றிக் கொள்ள...அந்த நம்பிக்கை இருக்கும் போது மனம் வீணாக அல்லல்படாது...கலங்காது. குழம்பித் தவிக்காது. எல்லாம் அவன் செயல் என்று பக்குவப்பட்டுவிடும். மட்டுமல்ல நேர்மறையாகவே எண்ணச் செய்யும். மனம் அமைதி பெறும். தைரியமாக எதையும் தாங்கும் பக்குவத்தையும் தரும். செல்ஃப் கான்ஃபிடென்ஸையும் தரும்... அது மகிழ்வாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி அதை சமநிலையில் எடுத்துக் கொள்ள எதற்கும் அதீதமாக அதாவது இரு எக்ஸ்ட்ரீம்களுக்குச் செல்லாமல் எதையும் ஒரே போல எதிர்கொண்டு மனதை அமைதியாகக் கடந்து செல்ல உதவும் அந்தப் பிரார்த்தனைகளும் நல்லெண்ணங்களும். நம்பிக்கைதானே வாழ்க்கையே! உங்கள் மனம் கதையில் பளிச்சென்று தெரிகிறது..இதை அங்கும் சொல்லியிருந்த நினைவு...வாழ்க நலம் !!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. 10 மாதம் சுமந்து அந்த குழந்தையை இழப்பது மிகவும் வேதனை.
    என் அம்மாவிற்கு மூன்று குழந்தைகளை ஏழு மாதம், 10 மாதம் வளர்த்து சாக கொடுத்து இருக்கிறார்கள்..
    வளர்த்த குழந்தை (என் அக்கா, என் அண்ணன்) இவர்களை பறி கொடுத்து இருக்கிறார்கள் இதெல்லாம் எவ்வளவு கொடுமை.

    நிறைய சோக கதைகள் இருக்கிறது என்னுள்.

    அந்த காலத்தில் தாயை சாமாதானம் படுத்த சொல்லும் வார்த்தை பிரியமானவர்களை இறைவன் அழைத்துக் கொள்வார் என்று.

    நமக்கு பிரியமானதை எடுத்து கொள்வரோ இறைவன் என்று கேட்க தோன்றும் அதிகபிரசிங்காய் எதும் பேச கூடாது பெரியவர்களிடம் என்று அடக்கி வளர்க்க பட்டதால் சாட்சியாக பார்ப்பது மட்டுமே ஆகி போனது வாழ்க்கை.

    இப்போது நல்ல மருத்துவ வசதிகள் வந்த பின்னும் பிரசவத்தில் தாய், சேய் இறந்து போவது, குழந்தைகளுக்கு நோய் வந்து மறைவது எல்லாம் பார்க்கும் போதும், கேட்கும் போதும்

    அதிரா சொல்வது போல் விதி வலியது என்று எண்ண தோன்றுகிறது.//

    உங்கள் தாயின் சோகம் ஹப்பா என்ன சொல்ல என்று தெரியவில்லை....ஏனென்றால் அது போல் என் அப்பா வழிப்பாட்டியின் சோகம் நினைவு வந்தது.... அக்கா...

    உண்மை அதுதான் விதி வலியது! இதற்குக் கூட ஒன்று சொல்லப்படும் ...அதை நான் இங்குப் பகிரவில்லை...காரணம் விரைவில் தெரியவரும்.....மிச்சத்தை என் முந்தைய கருத்து சொல்லுகிறது என்று நினைகிறேன். அதாவது என்னதான் பிரார்த்தனைகள் செய்தாலும்....

    உங்கள் சோகங்கள் வலி மிகுந்தவை. இப்படி ஒவ்வொருவரது வாழ்விலும் பல சோகங்கள் இருக்கும் இல்லையா அக்கா! வாழ்க்கையே சிக்கல்களும், கேள்வியளும், புதிர்களும் நிறைந்தது தானே...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    பத்மா மதினி என் அம்மாவின் அண்ணன் பெண் (மாமா பெண்)அன்பும் கருணையும் மிக்கவர். அனைவராலும் விரும்பபட்டவர்.
    அவரை இழந்தது எங்கள் துரதிருஷ்டமே!
    அண்ணன் பட்டுபுடவை வாங்கி வருவேண் என்று சொன்னது உண்மையே!
    மதினி குழந்தை போல் அன்புக்கு அடிபணியும் குழந்தை. அன்பாய் யாராவது பேசினால் நாள் முழுவதும் அவர்களைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்.
    அண்ணன் மதினி இறந்த அன்று இதையெல்லாம் சொல்லி அழுதார்கள்.

    //கீதா: கோமதிக்கா கதை முழுவதும் உங்கள் மனம் பிரதிபலிக்கிறது. மென்மையான பாசிட்டிவ் மனம்...சுடு சொற்களற்ற....அழகான குடும்பம்...//

    நீங்கள் சொல்வது போல் அழகான குடும்பமாய் இருந்தது.



    பதிலளிநீக்கு
  31. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    பத்மா மதினி என் அம்மாவின் அண்ணன் பெண் (மாமா பெண்)அன்பும் கருணையும் மிக்கவர். அனைவராலும் விரும்பபட்டவர்.
    அவரை இழந்தது எங்கள் துரதிருஷ்டமே!
    அண்ணன் பட்டுபுடவை வாங்கி வருவேண் என்று சொன்னது உண்மையே!
    மதினி குழந்தை போல் அன்புக்கு அடிபணியும் குழந்தை. அன்பாய் யாராவது பேசினால் நாள் முழுவதும் அவர்களைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்.
    அண்ணன் மதினி இறந்த அன்று இதையெல்லாம் சொல்லி அழுதார்கள்.

    //கீதா: கோமதிக்கா கதை முழுவதும் உங்கள் மனம் பிரதிபலிக்கிறது. மென்மையான பாசிட்டிவ் மனம்...சுடு சொற்களற்ற....அழகான குடும்பம்...//

    நீங்கள் சொல்வது போல் அழகான குடும்பமாய் இருந்தது.



    பதிலளிநீக்கு
  32. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.


    //அதிரா விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் மிக மிக மெச்சூர்ட்....கலகல பேர்வழியும் கூட!!! அதிரா வந்தால் அதிரும்ல!!! ஹாஹாஹா//

    நீங்கள் சொல்வது உண்மைதான். மிக மிக பக்குவபட்டவர்.
    கவலைகளை மறந்து சிரிக்கலாம் சிந்திக்கலாம் அதிராவின் கருத்தால்.

    //நமக்கு என்ன கிடைக்குமோ அது எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போதுதான் கிடைக்கும். நாம் பிரார்த்தனைகள் செய்தாலும்...கூட..உடனே நடந்து விடுவதில்லை. அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான்...ஆனால்.அந்தப் பிரார்த்தனைகள் நாம் ஏன் செய்கிறோம் என்றால் நம்பிக்கை! மனம் உறுதியாக இருக்க, எந்தக் கமென்டும் நம் மனதை பாதிக்காமல் இருக்க...நம்பிக்கையுடன் பற்றிக் கொள்ள...அந்த நம்பிக்கை இருக்கும் போது மனம் வீணாக அல்லல்படாது...கலங்காது. குழம்பித் தவிக்காது. எல்லாம் அவன் செயல் என்று பக்குவப்பட்டுவிடும். மட்டுமல்ல நேர்மறையாகவே எண்ணச் செய்யும். மனம் அமைதி பெறும். தைரியமாக எதையும் தாங்கும் பக்குவத்தையும் தரும். செல்ஃப் கான்ஃபிடென்ஸையும் தரும்... அது மகிழ்வாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி அதை சமநிலையில் எடுத்துக் கொள்ள எதற்கும் அதீதமாக அதாவது இரு எக்ஸ்ட்ரீம்களுக்குச் செல்லாமல் எதையும் ஒரே போல எதிர்கொண்டு மனதை அமைதியாகக் கடந்து செல்ல உதவும் அந்தப் பிரார்த்தனைகளும் நல்லெண்ணங்களும். நம்பிக்கைதானே வாழ்க்கையே! உங்கள் மனம் கதையில் பளிச்சென்று தெரிகிறது..இதை அங்கும் சொல்லியிருந்த நினைவு...வாழ்க நலம் !!//

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
    நானும் இறைவன் மேல் நம்பிக்கையுடன் பிரார்த்தனையுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    நம்பிக்கை வெளிச்சம் வழி நடத்தி செல்லும்.

    வாழ்த்துக்களுக்கும் ,அருமையான கருத்துக்கும் நன்றி கீதா.




    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    //உண்மை அதுதான் விதி வலியது! இதற்குக் கூட ஒன்று சொல்லப்படும் ...அதை நான் இங்குப் பகிரவில்லை...காரணம் விரைவில் தெரியவரும்.....மிச்சத்தை என் முந்தைய கருத்து சொல்லுகிறது என்று நினைகிறேன். அதாவது என்னதான் பிரார்த்தனைகள் செய்தாலும்....

    உங்கள் சோகங்கள் வலி மிகுந்தவை. இப்படி ஒவ்வொருவரது வாழ்விலும் பல சோகங்கள் இருக்கும் இல்லையா அக்கா! வாழ்க்கையே சிக்கல்களும், கேள்வியளும், புதிர்களும் நிறைந்தது தானே...//

    ஆமாம் எல்லோர் வாழ்க்கையிலும் கேள்விகளும், சிக்கல்களும், புதிர்களும் இருக்கும் தான், அதை விடுவிக்க , சிக்கல்களை சரி செய்ய, கேள்விகளுக்கு விடையை கண்டு கொண்டவர் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது.

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
    இறைவன்ப் பார்த்துக் கொள்வார்.

    அன்பான , விரிவான கருத்துக்கு நன்றி நன்றி கீதா.
    கணினி ஒத்துழைக்காத போதும் முயன்று கருத்து அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    பயணத்தில் இருந்தீர்கள் போலும்.

    //விதி வலியது அதன் தீர்ப்பை யாரும் அறிய இயலாது//

    நீங்கள் சொல்வது போல் விதி வலியதுதான்.
    பழைய கிருஷ்ணன் பாட்டு கலங்காதே மனமே ! விதியின் கையில் மாறி மாறி துன்பம் வரும். அவனிற்று ஒரு போது அசையாது உலகம்

    என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.

    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. அந்த பாட்டில் இரவு பகலும் மாறி வருவது போல இன்பமும் துன்பமும் வரும் என்று வரும். ஆரம்பிக்கும் போது விதியின் கையில் எழுத பட்டது என்று வரும்.முன்பு இலங்கை வானெலியில் அடிக்கடி வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  36. s.c கிருஷ்ண்ன் பாடிய பாழைய பாடல்

    பதிலளிநீக்கு