இன்று மருதகாசி அவர்களின் நினைவு நாள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் - நீலவண்ண கண்ணா வாடா- பாடல். கிருஷ்ணஜெயந்தி சமயம் வானொலியில்ஒலிக்கும் பாடல். இப்போது தொலைக்காட்சியிலும் கிருஷ்ணஜெயந்திக்கு வைக்கிறார்கள்.
பாலசரஸ்வதி அவர்களின் குரலில் குழைந்து, இழைந்து வரும் அன்புப் பாடல்.
இந்தப் பாடலுக்காகத் திரைப்படத்தைப் பார்த்தேன் அன்பு நிறைந்த கதை.
//÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி.//
//"நீலவண்ண கண்ணா வாடா'' என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.
÷"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி', "ஆனாக்க அந்த மடம்', "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', "காவியமா? நெஞ்சின் ஓவியமா?' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.//


"திரைக்கவித் திலகம் ' மருதகாசி பற்றி
ஆர். கனகராஜ் அவர்கள் எழுதியதை பசுபதிவில் படித்தேன் மருதகாசி அவர்களைப் பற்றி விரிவாக இருக்கிறது. படித்துப் பார்க்கலாம்.
பசுபதிவு அவர்களுக்கு நன்றி.
யூடியூப்பில் பகிர்ந்த அன்பருக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
http://s-pasupathy.blogspot.in/2017/11/921-1.html
பதிலளிநீக்குஇவரின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.
எனக்குப் பிடித்த பதிவர் இவர். இவரிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கும். விருப்பமிருந்தால் இவரது பதிவுகளைப் பின் தொடர பரிந்துரைக்கிறேன். வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் நிறைய இருக்கும்.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்டவரை நானும் குறிப்பிட்டு இருக்கிறேன் சார்.(ஈந்த பதிவில்) சுட்டி கொடுத்து இருக்கிறேன்.
உங்களை போல் பழைய எழுத்தார்களை பற்றி இவர் பதிவில் எழுதுகிறார் என்று முன்பு உங்கள் பதிவில் சொல்லி இருக்கிறேன் சார்.
ஜீவி சார், நீங்கள் சொல்வது போல் இவர் பதிவில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் அவர் பதிவை பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
அதனால் தான் இன்று மருதகாசி அவர்களின் நினைவு தினம் என்று எனக்கு தெரிந்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான குரலும் அழகான வரிகளும் சேர்ந்து அதற்க்கு மகுடம் சேர்ந்தாற்போல் பத்மினி அவர்களும் அருமை அக்கா .
பதிலளிநீக்கு//சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி',
//
எனக்கும் மிகவும் பிடித்த ப்பாடல்கள் முன்பு ஒளியும் ஒலியுமில் போடுவாங்க பார்த்திருக்கேன்
இப்படி பதிவர்கள் பகிர்வதால்தான் எனக்கும் என்னைப்போல பலருக்கும் பழைய பாடல்கள் பாடலாசிரியர்கள் பற்றி மீண்டும் தெரிந்து கொள்ள முடிகிறது
பதிலளிநீக்குமிக்க நன்றிக்கா
நான் உங்களின் இந்தப் பதிவின் கடைசி வரிகளைப் பார்க்கவில்லை. பசுபதி அவர்களின் பதிவுக்குப் போய் விட்டு உங்கள் பதிவுக்கு வந்ததால், மருதகாசி என்ற பெயரைப் பார்த்த உடனேயே ஆற்றுப்படுத்தி விட்டேன். நீங்களும் அவர் பதிவுகளைப் படித்து வருகிறீர்கள் எனக்கும் அது பற்றி முன்பே சொல்லியிருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//அருமையான குரலும் அழகான வரிகளும் சேர்ந்து அதற்க்கு மகுடம் சேர்ந்தாற்போல் பத்மினி அவர்களும் அருமை அக்கா .//
ஆமாம் ஏஞ்சல்,மீண்டும் மீண்டும் கேட்க செய்யும் இனிமையான பாடல்.
பத்மினியின் நடிப்பும் அருமை. படத்தில் எல்லோரும் நன்கு நடித்து இருப்பார்கள்.
பசுபதிவுகளில் பழைய எழுத்தாளர்கள் வாழ்க்கை குறிப்புகள், கதைகள், பாடல்கள் , பழைய பொக்கிஷபதிவுகள் எல்லாம் பார்க்கலாம், படிக்கலாம்.
வலைச்சரம் மூலம் அவரை அறிந்து டேஷ்போர்டில் பின் தொடர வைத்துக் கொண்டேன்.
மருதகாசி பாடல்கள் எல்லாம் மிக அருமையானது.
உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
இவரின் பதிவுகள் எல்லாம் பழைய பொக்கிஷகள் சார்.
அருமையான பாடல் கோமதி அக்கா.
பதிலளிநீக்குவணக்கம் கவிப்புயல் அதிரா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபாடல் பிடித்து இருக்கா அதிரா, மகிழ்ச்சி.
கருத்துக்கு நன்றி.
எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குதிரு.மருதகாசியாரின் நினைவினை போற்றும் பதிவு நன்றி சகோ.
இப்பாடல் பெரும்பாலும் அனைவருக்குமே பிடித்த பாடல்.
பதிலளிநீக்குவணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் அனைவருக்கும் பிடித்த பாடல்தான்.
கருத்துக்கு நன்றி.
குறிப்பிட்டிருக்கும் எல்லாப் பாடல்களும் பிடிக்கும் ஆனால் இவை எல்லாம் மருத காசி இயற்றியதுஎன்பது தகவல் நன்றி
பதிலளிநீக்குஅருமையான பாடல் சகோதரி / கோமதிக்கா..ரொம்பப் பிடிக்கும்..
பதிலளிநீக்குகீதா: கோமதிக்கா நானும் பசுபதி அவர்களின் பதிவுகளை வாசிப்பதுண்டு. நிறைய விஷயங்கள் ஹப்பா பிரமிக்க வைக்கும் தொகுப்புகள்!! ஆனால் அங்கு கருத்துச் சொல்வதில்லை. தொடர்ந்து வாசிக்கிறேன்....இன்று அவரும் பதிவு போட்டிருப்பதைப் பார்த்தேன்...
அருமையான பதிவு..
பதிலளிநீக்குதாங்கள் குறித்துள்ள அனைத்துமே முத்தானவை..
மருதகாசி அவர்களுடைய பாடல்களுள் -
சத்தியம் நீயே .. தர்மத் தாயே..
குழந்தை வடிவே தெய்வ மகளே!.. - எனும் பாடலும் சிறப்பானது..
காலங்கள் பலவற்றைக் கடந்தும் மருதகாசி அவர்களின் பாடல்கள் நிலைத்திருக்கின்றன..
வாழ்க அவருடைய புகழ்!..
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி', "ஆனாக்க அந்த மடம்', "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', "காவியமா? நெஞ்சின் ஓவியமா?' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.//
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் நீலவண்ண கண்ணாவாடா பாட்டு மிகவும் மனதை தொடும்
எல்லா பாடல்களும் பலமுறை கேட்டு இருக்கிறேன் மிகவும் அருமையானப்பாடல்கள் சிஸ் அவரின் நினைவுநாளா சூப்பர் சிஸ் இந்த பதிவு
Ethir neechal padathil nagesh kuzandaiyai samadhanapadithi konde paadam padipar... andha gnapagam vandadu.
பதிலளிநீக்குoriginal paattu ketka vaithathukku thanks. computer problem, tamil fonts gone. sorry
வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.//
//திரைக்கவித் திலகம்' என்னும் பட்டம் பெற்றவர் மருதகாசி. மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.//
மருதகாசி அவர்களைபற்றி படிக்கும் போது வியப்பாய் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் துளசிதரன், கீதா , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்களும் பசுபதிவுகளை படித்து வருவது மகிழ்ச்சி.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம், கதைகள் படிக்கலாம்.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமருதகாசி அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமையானது.
இப்போது தேன்கிண்ணம், தேனும் பாலும், நெஞ்சில் நிறைந்தவை, அன்றும், இன்றும் என்று பழைய பாடல்களை தொலைகாட்சியில் வைக்கிறார்கள். கேட்டு ரசிக்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி பூவிழி.
வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎதிர் நீச்சல் படத்தில் பாட்டு, கதை எல்லாம் சொல்வார் குழந்தைக்கு, நீங்கள் சொன்னதும் எனக்கும் கண்ணில் காட்சி விரிகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
எல்லோருக்கும் பிடித்த பாடலை பகிர்ந்தது எனக்கும் மகிழ்ச்சி.
பாடலை ரசித்தேன். சின்ன வயது பத்மினி - பாடலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நானும் கவிக்னர் மருதகாசி பற்றி ஒரு பதிவினை எழுதி இருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//நானும் கவிக்னர் மருதகாசி பற்றி ஒரு பதிவினை எழுதி இருக்கிறேன்.
//
அந்த பதிவின் சுட்டியை கொடுங்கள் படிக்கிறேன்.
கருத்துக்கு நன்றி.
கவிஞர் மருதகாசியின் நினைவினைப் போற்றுவோம்
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களை ரசிப்பது உண்டு என்றாலும் எழுதியவர் மருதகாசி என்பது இன்றே அறிந்தேன். திரு பசுபதி அவர்களின் பதிவுகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவ்வப்போது கருத்தும் சொல்வது உண்டு. முகநூலிலும் நண்பர்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநலமா?
திரு. பசுபதி அவர்கள் பதிவுகளை வாசித்து வருவது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
இனிய பாடல்.
பதிலளிநீக்குபகிர்ந்திருக்கும் சுட்டிகளுக்கும் தகவல்களுக்கும் நன்றி.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மருதகாசிபற்றிய உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன். அறிந்துகொள்ளவேண்டிய அருமையானதொரு கவிஞர்.
பதிலளிநீக்குரொம்பப்பேர் பாட்டுக்கேட்பார்கள், எந்தப்படம், யார் நடித்தது என்றெல்லாம் மனப்பாடம். யார் எழுதியது என்றால் பேந்தப் பேந்த விழிப்பார்கள். எழுதியவனின்மீது கவனமில்லா மனிதர்களே நிறைய இந்த உலகில்.
முல்லைமலர் மேலே.., சமரசம் உலாவும் இடமே.., வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே.. - யாவும் சிறுவயதிலிருந்தே என் மனதை அள்ளிய பாடல்கள். கவிஞருக்கு நற்கதியை ஆண்டவன் அருள்வானாக.
பகிர்விற்கு நன்றி.