Sunday, July 9, 2017

பயணத்தின்போது கண்ட காட்சிகள்

மாறுதலாக ஒரு பதிவு. ஸ்ரீராம், வெங்கட்.  இருவரும் இன்று போட்ட பதிவைப்பார்த்தவுடன் நான் எடுத்த படங்களை மட்டும் போட்டால் என்ன என்ற ஆசை வந்து விட்டது. பயணங்கள் போது எடுத்த படங்கள்.
இந்த படங்களில் கடைசியில் நான் எடுத்த படங்கள்தான்  என்பதை உறுதிப்படுத்துவது போல் ஒரு குறிப்பு  இருக்கிறது. சொல்லுங்கள் பார்க்கலாம் பார்த்து.


மரத்தின் நிழல்  தெரிகிறதா ? மதில் மேல்

  கோவில் மதில்  மேல்   வயதான குரங்காரார் அமர்ந்து   மனிதர்களை வேடிக்கை பார்க்கிறார். 
திருப்பரங்குன்றம்  மதில் மேல் அமர்ந்து இருக்கும் குரங்காரார்

அணிலே! அணிலே ! அழகு அணிலே என்ன வேலை செய்கிறாய்?


பறித்துப் பறித்துக்காய்களைக் கொறித்துக் கொறித்துக் தின்கிறேன்
(பரங்குன்றம் மலை)


ஏதாவது தரமாட்டாயா? என்ற பார்வை. 


அம்மி, ஆட்டுக்கல்லில் அமர்ந்து அரைக்க  மரப்பலகை 
பாரதியாரைப் போலீஸ்காரர் படம் எடுக்கும் போது தலையைக் குனிந்து தலைப்பாகையை  மட்டும் காட்டுவார். அது போல் வாத்து தலையை தன் முதுகில் மறைத்துக் கொண்டது.
முகம் காட்டி விட்டேன் இப்போது திருப்தியா?

பூவும் எறும்பும்


உச்சிக் கொம்பில் அமர்ந்து பார்க்கும் புல் புல் (பரங்குன்றம்)


பெளர்ணமி பால்குடம், காவடி பரங்குன்றம் முருகனுக்கு

மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் 

'ஊரெங்கும்  என் தயவு வேண்டி இருக்கிறது வருணபகவான் வரவில்லாமல்' என்கிறதோ தண்ணீர் லாரி.
இதன் வரவு குறைய  வருணபகவான் மழையைக் கொடுக்க வேண்டும் உயிர்கள் தழைக்க!


வாழ்க வளமுடன்.


43 comments:

KILLERGEE Devakottai said...

முதல் படமே அருமை, அணிவ் தாவுவது போன்று உள்ளது

எல்லா புகைப்படங்களிலும் நிழலும், வெயிலும் இருப்பது சிறப்பு ஆகவே அதனை குறிப்பாக சரி செய்து நீங்கள் எடுத்து இருக்கின்றீர்கள்
த.ம.1

KILLERGEE Devakottai said...

மன்னிக்கவும் அணில் என்று படிக்க...

Bagawanjee KA said...

கடைசி படத்தில் ,காரிலிருந்து நீங்கள் படம் எடுப்பது... சைடு கண்ணாடியில் தெரிகின்றதே :)

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
அணில் தாவும் போதுதான் எடுத்தேன்.
அணில் என்று படித்து விட்டேன்.
புகைப்படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
குறிப்பை கண்டு பிடித்து சொன்ன நீங்கள் புகைப்படங்கள்
எப்படி இருக்கிறது என்று சொல்லவில்லையே!
குறிப்பை கண்டு பிடித்து சொன்னதற்கு நன்றி.

Bagawanjee KA said...

எரும்பூறும் பூசணிப் பூவை அதிகம் ரசித்தேன் :)

வெங்கட் நாகராஜ் said...

பயணித்துக் கொண்டே படம் எடுப்பது எனக்கும் பிடித்தமானது!

இந்த ஞாயிறில் நீங்கள் எடுத்த சில படங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றாக இருக்கின்றன.

நெல்லைத் தமிழன் said...

எல்லார் படங்களையும் பார்த்தோம். நீங்க எடுத்ததையும் பார்த்தேன். திருப்பரங்குன்றத்தைப் பற்றி சமீபத்தில்தானே எழுதியிருந்தீர்கள். ஆமாம், ஊரெங்கும் தண்ணீர் இருந்துவிட்டால், இதை நம்பி தண்ணீர் லாரி வாங்கினவர்களும், இந்தத் தொழிலை நம்பியுள்ள டிரைவர், கிளீனர் போன்ற பலரும் என்ன செய்வார்கள்? ஒருவேளை அவர்கள், 'மழை பெய்யக்கூடாது' என்று வேண்டிக்கொண்டிருப்பார்களோ?

கோமதி அரசு said...

வணக்கம் பகவான்ஜி, வாழ்க வளமுடன்.
பூசணிப் பூவை ரசித்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட் வாழ்க வளமுடன்.
உங்கள் விருப்பத்தையும், கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

துரை செல்வராஜூ said...

எல்லாப் படங்களும் அழகென்றால்
அணில் மட்டும் அழகுக்கு அழகு!..

வாழ்க நலம்..

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
பெளர்ணமி காலை போனோம் திருப்பரங்குன்றம். (நேற்று)
சித்தர்களை தரிசிக்க அப்போது எடுத்த படங்கள்.
கிரிவலம் காரிலே வலம் வந்தோம்.
ஓரு மாறுதலுக்கு படங்கள் மட்டும்.


ஊரெங்க்கும் தண்ணீர் இருந்தாலும் இவர்களுக்கு தொழில் உண்டு மக்கள் சுத்திகரிக்கப்பட்ட த்ண்ணீரை குடித்துப் பழகி விட்டார்கள்.

தண்ணீர் கொண்டு வருபவர்களுக்கும் மழை இல்லையென்றால் எங்கிருந்து தண்ணீர் கொண்டு வர முடியும்?

ஏழைகள் பாடு கஷ்டம்.
குடம் 10 ரூபாய் என்று வாங்கி கட்டுபடி ஆகாது.
அதற்காகவாது மழை வேண்டும் .
இன்று மழை 20 நிமிடம் பெய்து மகிழ வைத்து விட்டது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
படங்க்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வாழ்த்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... ரசித்தேன்...

ஸ்ரீராம். said...

மதிலின் மேல் மரத்தின் நிழல் ஒரு ஆர்ட் போல இருக்கிறது.

அணில் செடியை ஆதாரமாகப் பற்றிக்கொண்டு அடுத்த பகுதிக்குச் செல்கிறது!!!

அடடே.. நம்ம நாலுகால்!

பாரதியார் பற்றிய செய்தி புதுசு!

'புல்புல்... உன் கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்! இன்னும் மேலே போகலாம்!'

ஸ்ரீராம். said...

சாட்சிக்காக கடைசிப் படமா! எல்லாப் படங்களையும் ரசித்தேன். நான் புகைப்படங்கள் எடுக்கும்போது எடுக்கப்படுபவர்கள் அறியாமல் இயல்பாக எடுப்பதில்தான் ஆர்வம் அதிகம் எனக்கு. இப்போது வரும் ஞாயிறு படங்கள் நான் எடுத்தவை அல்ல என்றும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

ஸ்ரீராம். said...

அப்புறம் ஒவ்வொருமுறையும் நான் கவனிக்கும் ஒரு விஷயம். உங்கள் தளம் திறந்ததும் தமிழ்மணம் சப்மிட் செய்யப் படாதது போலவே தோற்றமளிக்கும். படித்துக் கொண்டே கடைசிக்கு வரும்போது தளம் ஒரு அதிர்வுடன் மீண்டும் மேல்நோக்கி நகரும். தமிழ்மணக் கருவிப்பட்டை தெரியும்! அப்புறம் வோட்டு போட்டு விடுவேன்!

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
அணில் மலை மீது இருந்து இந்த குட்டி செடிக்கு பாய்ந்து அதன் காய்களை
பறித்து கீழே அமர்ந்து சாப்பிட்டது.

சித்தர் கோவில் வாசலில் நம் கையை எதிர்ப்பார்த்து நின்றது நாலுகால்

புல் புல் இன்னும் மேலே போகும் கொஞ்சம் அமர்ந்து இளைப்பாறி விட்டு.

பாராதியார் படம் பார்க்கவில்லையா? அதில் அவர் புதுச்சேரியில் இருக்கும் போது போலீஸ் தேடும், அப்படி போலீஸ் மாற்று உடையில் அவரை படம் எடுக்க வந்ததை தெரிந்து கொண்ட பாரதி அவர்கள் படம் எடுக்கும் போது தீடிரென்று தலையை கவிழ்த்துக் கொள்வார் படத்தில் தலைப்பாகை மட்டும் தெரியும். காவலர்கள் அசடு வழிவார்கள். நல்ல சிரிப்பாய் இருக்கும்.


காடைசி படம் இயல்பாய் எனக்கு தெரியாமல் வந்த படம்.
படத்தை கணினியில் ஏற்றிய பின் பார்த்தேன் எடிட் செய்யாமல் சும்மா மாறுதலுக்கு அதை போட்டு கேள்வி கேட்டேன்.

நீங்கள் எடுத்த படம் இல்லையேன்று முன்பே சொல்லி விட்டீர்கள், உங்கள் தளத்தில் வந்ததால் ஸ்ரீராம் படம் என்றேன்.

தமிழ்மணம் ஓட்டு போடுவதில் இவ்வளவு கஷ்டம் இருக்கா?
படங்களை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.KILLERGEE Devakottai said...

உண்மை ஸ்ரீராம் ஜி எனக்கும் இதே நிலைதான் ஆனால் முன்பு திறக்கவே முடியாது அதற்கு இது எவ்வளவோ மேல்.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும் இதே நிலைதானா?
அதிராவும் அப்படித்தான் சொல்கிறார்.
திண்டுக்கல் தனபாலன் அவர்களை கேட்க வேண்டும்.

Ramani S said...

படங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாய்
இயற்கையாய் .....
மிகவும் இரசித்தேன்
(கடைசிப் படம் உங்கள் தெரு என
நினைக்கிறேன் )

காமாட்சி said...

பறங்கிப் பூவிலும் தேன் இருந்திருக்கும். கட்டெறும்பு ஊறுகிறது. மார்கழிப்பூவே.வாத்து,அணில்,நாய்,புல்புல் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்ச்சிகளில். எல்லாமே அழகுதான். அன்புடன்

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்து பார்த்தமைக்கு நன்றி.
கடைசி படம் திருபரங்குன்றத்தில் எடுத்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
மார்கழிப்பூ, மற்றும் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான படங்கள்
சிறந்த விளக்கம்

கோமதி அரசு said...

வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

middleclassmadhavi said...

உங்களுக்கு நல்ல ரசனை! ஒவ்வொரு புகைப்படமும் அதன் கமெண்டும் கவிதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துப் படங்களும் கீழே எழுதியுள்ள கருத்துக்களும் அருமையோ அருமை.

தாவிடும் அணிலார் மிகவும் பிடித்துள்ளது.

என் கணினியில் ஏராளமான பிரச்சனைகள். ப்ளாக்கர் பக்கமும் டேஷ்போர்டு பக்கமும் என்னால் போக இயலவில்லை. வைரஸ் நிறைய புகுந்துள்ளன. அதனால் தாங்கள் வெளியிட்டுள்ள இந்த பதிவுப்பற்றி எனக்குத் தெரியவே இல்லை. மேலும் நான் வலையுலகிலிருந்து விலகி ஒருசில புண்ணிய கார்யங்கள் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

மெயில் மூலம் தனியாக லிங்க் அனுப்பினால் மட்டுமே இதுபோல, ஒருசிலரின் பதிவுகளுக்கு மட்டும் என்னால் வருகை தந்து பின்னூட்டம் தர முடிகிறது. இவை தங்களின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.

கோமதி அரசு said...

வணக்கம் மாதவி , வாழ்க வளமுடன். உங்கள் ரசனையும் அருமை. உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். புண்ணிய காரியம் செய்வது அறிந்து மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது வாருங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி.

Anuradha Premkumar said...

அனைத்து படங்களும் அழகு...

அதிலும் அணிலார் படம் சூப்பர்...

நான் 7 வது படிக்கும் போது எங்கள் வீட்டில் கேமரா வாங்கினார்கள்...பார்த்து பார்த்து படம் எடுப்போம்...அப்பொழுது அணிலாரரை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை ...பிலிம்மும் வீணாக கூடாது ..படமும் வேண்டும்...அணிலார் வரும் போது பல முயற்சிகள் செய்வேன்..ஆன அவர் ஓடிவிடுவார்...
அப்படியே எடுத்த 2, 3 படங்களும் சரியில்லை...

அதனால் இப்பொழுதும் அணிலாருடன் படம் எடுக்க முயற்சித்து கொண்டே இருக்கிறேன்...

இன்னும் ஒன்றும் நன்றாக வரவில்லை...

உங்க படத்தை பார்த்ததும் மனதில் தோன்றியது...

G.M Balasubramaniam said...

எங்கள் வீட்டு மாமரத்தில் அணில்கள் மாம்பழம்கொறிப்பதைப்படம் எடுக்க ஆசை ஆனால் நான்
தயாராவதற்குள் அவைஇடம் பெயர்ந்துஓடிவிடும்

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா பிரேம்குமார்
, வாழ்க வளமுடன் .
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. அணிலுக்கு தெரியாமல் எடுத்தேன். உங்கள் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். மாமரத்தில் மாம்பழம் கொறிப்பதை தூரத்திலிருந்துஜூம்செய்து எடுங்கள் சார் நாம் பார்ப்பதை அறிந்தால் ஓடி விடும்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை! அணிலும் பூக்களும் அழகு. உங்கள் வினாவுக்குக் கடைசிப் படத்தில் பதில் இருக்கிறது:). அம்மிக்கு இது போன்ற பலகை சிறுவயதில் எங்கள் வீட்டிலும் இருந்தது.

பறவைகள் சத்தத்தில் பறந்து விடும் என்றால் அணில்கள் சன்னல் அருகே நம் சிறு அசைவைக் கண்டாலே ஓடி விடுகின்றன.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
விடையை கண்டு பிடித்து விட்டீர்களா?
எனக்கே தெரியாமல் நேர்ந்த விஷ்யம்.
எடிட் செய்யாமல் படத்தைப் போட்டு மாறுதலுக்கு கேள்வி கேட்டேன்.
அம்மியும், ஆட்டுக்கல்லும் உபயோகத்தில் இருக்கிறது பலகை அதற்கு சாட்சி.

பற்வை, அணிலுக்கு தெரியாமல்தான் எடுக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி .

Geetha Sambasivam said...

கடைசிப் படத்தில் நானும் கண்டு பிடிச்சுட்டேன்! :) படங்கள் எல்லாமும் அருமை!

கோமதி அரசு said...

வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
கண்டு பிடித்து விட்டீர்களா? மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.

மாதேவி said...

படங்கள் அழகு.

கோமதி அரசு said...

வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

கோமதிக்கா படங்கள் அத்தனையும் சிறப்பு. மதிலின் மேல் அந்த நிழழ் அருமை...வரைபடம் போல அழகு!!! அணில் அழகு...புல்புல் வாத்து பைரவர், நம்மாளு எல்லாமே அழகு என்றால் ஆட்டுக்கல்லும் அம்மியும் ரொம்ப அழகு!! காரின் சைட் வ்யூ மிரரில் உங்கள் கை தெரிகிறது ஸோ நீங்கள் தான் எடுத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறதே!!!!!

கீதா

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.