Sunday, July 23, 2017

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை அருள்மிகு புனுகீசுவரர் திருக்கோயில்

புனுகுப் பூனை பூஜை செய்கிறது ஈஸ்வரனை
போன ஞாயிறு (16/07/2017) அன்று மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில்
 மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

புனுகீசுவரர்
 சுவாமி விமானம், கீழே சண்டேசுவரர்
சுவாமி விமானத்திற்கு கும்பாபிஷேகம்குருக்கள் குடத்தில்   
இருக்கும் புனித நீரைக் கீழே பார்த்துக்கொண்டு இருப்பவர் மேல் தெளிக்கிறார்.

கோவில் வரலாறு:-

அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரர்சுவாமி திருக்கோயில், புண்ணிய நதியாம் காவிரிக்குத் தென்பால், கூறைநாட்டில் அமைந்து உள்ளது. சிவபெருமானை மதியாமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் சாபம் பெற்று, இத்திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் மகிழும் வண்ணம் புனுகுப் பூனை உருவெடுத்துப் பூஜித்து சாப விமோசனம் அடைந்து , இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றார் என்பது இத்தல வரலாறு .

கோயில் சிறப்பு:-

சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. சனிப்
பெயர்ச்சி விழா, வாராவாரம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கும்.


35 வருடங்களுக்கு மேலாய் மயிலாடுதுறையில்  இருந்தோம். அந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் வாரவழிபாட்டுக்குப் போவோம்., பிரதோஷம் மற்றும் அனைத்து விழாவிற்கு அங்கு போவோம். வாரவழிபாட்டு
ஆண்டுவிழா புரட்டாசி மாதம் நடக்கும். அதற்குக் காலையில்  சிவபூஜை நடைபெறும்.  பின் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று பெரியபுராணம் ஊர்வலமாக வரும். மாலையில் பக்திச் சொற்பொழிவு நடைபெறும் . அதில்   என் கணவரும்  பேசுவார்கள்.

தை மாதம்  கடைசி வெள்ளிக்கிழமை லட்ச தீபவிழா நடைபெறும் , இரவு சொற்பொழிவு நடைபெறும். திருவாடுதுறை ஆதீனம்  கலந்து கொண்டு தொண்டு செய்பவர்களுக்குப் பொன்னாடை போற்றி கெளரவம் செய்வார்கள்.

விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை  என்ற பதிவில் இந்த கோவிலில் நடக்கும் லட்சதீபம் பற்றிப் போட்டு இருக்கிறேன். 2014 ல் நடந்த விழாவைப் போட்டு இருக்கிறேன். இதில் சார் வரைந்த படங்களும் இடம் பெற்று இருக்கும். குருக்கள் செய்த அழகான சந்தனக்காப்பில் சாந்தநாயகி அழகிய படம் இடம்பெற்று இருக்கும். பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம்.  
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உழவாரப் பணி செய்பவர்களால்  பள்ளி அறை பூஜை நடைபெறும்.   

கும்பாபிஷேக முதல் நாள் படம் எடுத்தேன். வேலை நடந்து கொண்டு இருந்தது பள்ளியறையில். புது வெல்வட் ஊஞ்சல்  , சுற்றிவரக் கண்ணாடிகள்.
நடராஜருக்கு வருடத்தில்  ஆறு அபிஷேகங்கள் சிறப்பாய்  நடக்கும்
புனுகீஸ்வரர் சுவாமி சன்னதி

கணவர் வரைந்த ஓவியம்
கும்பாபிஷேகம் ஆகும் முன் காலையில் எடுத்த படம்
சாந்தநாயகிக்கு ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி விழாக்களில் செய்யப்படும் சந்தனக்காப்பு அவ்வளவு அழகாய் இருக்கும்.
கும்பாபிஷேகத்திற்குப் பத்திரிக்கை அனுப்பி அன்புடன் அழைத்தார்கள் கூறைநாடு சாலியர் பெருமக்கள். அவர்களும் மெய்யன்பர்களும்  
யாகசாலையை மிகவும் சிறப்பாய் அமைத்து இருந்தார்கள். ஒரு வாரமாய் சிறப்பாய் நடத்தி இருக்கிறார்கள். நாங்கள் கும்பாபிஷேகத்துக்கு
முதல் நாள் தான் போனோம், ஒரு வாரம் முன்பே வந்து இருக்க வேண்டியது தானே ?  . வீடா இல்லை ,எத்தனை வீடு இருக்கு   தங்கிக் கொள்ள   என்று கடிந்து கொண்டார்கள்-
பல வருட நட்பு !

  அவர்கள் வீடுகளில்  நடைபெறும்  நல்லது கெட்டதுகளில்  கலந்து கொள்வோம்.

அவர்கள் குடியமர்ந்த நான்கு தெருவிலும் பிள்ளையார்கள் உண்டு. பெரிய சாலிய தெருவில் உள்ள  காஞ்சி விநாயகர் பற்றியும் அவருக்கு நடந்த கும்பாபிஷேகம் பற்றியும் முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

வடக்கு சாலிய தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு (அவர் பெயர் "செல்வ விநாயகர்") செவ்வாய் வார வழிபாட்டுக்குப்போவேன் (துர்க்கை வழிபாடு) ஆடிசெவ்வாய்  ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் 
ஒவ்வொரு அலங்காரம்.  ஆடிமாதம் அல்லவா? நினைவு அங்கேதான்.

தெற்கு சாலிய தெரு விநாயகர், "வெற்றி விநாயகர்". அவரை வணங்கித்தான்
 எங்கும் போவோம். தெருவின் நடுவில்  டிராபிக் போலீஸ் போல் இருந்தார். மக்களைச் சரியாக வழி நடத்திக் கொண்டு. அவரை சாலையை அகலப்படுத்த மக்கள் தடுத்தும் கேட்காமல் ஓரம் கட்டி விட்டார்கள். ஆனால் முன்பை விட தாராளமான - அவருக்கு சொந்தமான இடத்தில் இப்போது
அழகாய் அமர்ந்து  அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். 

சாலியர்களுக்கு சொந்தமான கோவில்கள்: 

1.முதன்மையான் கோவில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த விநாயகர் கோவில் ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம்
2.கீழஒத்தசரகு சித்தி புத்தி விநாயகர்
3.வடக்கு சாலிய தெரு ஸ்ரீ செல்வவிநாயகர்
4செங்கழுநீர் விநாயகர் ஆலயம்
5.ஸ்ரீ வெள்ளந்தாங்கி  ஐயனார் ஆலயம்
6.கல்லக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
7.காவிரிக்கரை காசி விஸ்வநாதர் ஆலயம் (கூறைநாடு)
8.குருக்கள் பண்டாரத்தெரு, ஸ்ரீ கனக மாரியம்மன் ஆலயம்
9. தனியூர் சாலியதெரு தாமோதர விநாயகர் ஆலயம்
10. தெற்கு சாலியதெரு ஸ்ரீ வெற்றி விநாயகர்.

ஆண்டு தோறும் எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடக்கும்.

எல்லா விழாக்களுக்கும் அழைப்பு உண்டு.   

புனுகீஸ்வரர் கும்பாபிஷேகம் மட்டும் அல்லாமல்  நட்புகளைப் பார்த்து வந்ததும் ஆனந்தம். மயிலாடுதுறையை விட்டு வந்து  ஒரு வருடம் தான் ஆச்சு ஆனால் பல வருடங்கள் கழித்துப் பார்ப்பது போல  ஒரு நினைவு.  அவர்களின் அன்பின் மழையில் நனைந்து இறைவனை வணங்கி வந்தோம்.அறுபத்துமூவர் உற்சவம் நடைபெறும்.  உழவாரத் திருப்பணி அன்பர்களால் புதிது போல் ஜொலிக்கும்   பஞ்சலோக சிலைகள்
கல்லில் வடித்த அறுபத்து மூவர் சிலைகள்
உற்சவ  சுவாமிகள்.
இங்குள்ள உற்சவ முருகன் கையில் வில் வைத்து இருப்பார்.
மூலவர் முருகன்
ஒரு காலத்தில் தண்ணீர் இருந்த தெப்பக்குளம் - இப்போது  நீர் வற்றி உள்ளது.
புறாக்கள் தங்கிக் கொள்ள அதற்கு வீடு மதில் மேல் அமைத்து உள்ளார்கள்.

ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்குச்  சிறப்பாகக் 
குருபூஜை செய்வார்கள்.

துர்க்கைக்கு ராகுகால வழிபாடு,

ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பாய்  நடைபெறுகிறது..

தட்சிணா மூர்த்திக்கு வியாழன் வழிபாடு சிறப்பாய் நடைபெறும்


நவகிரகங்களுக்கு
  புதிதாகக் கூண்டு அமைத்து உள்ளார்கள் , 
மக்கள் விளக்கேற்றுகிறார்கள் சுவாமி பக்கத்தில் -அதைத் தடுக்க 
சுவாமி விமானம், சண்டேசுவரர் விமானம்,
  ராஜ கோபுரம்,  நடராஜர் விமானம் , தலவிருட்சம் -பவளமல்லி.

சகஸ்ரலிங்கம்,  நர்த்தன விநாயகர் , பைரவர், சூரியன், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி,  இருக்கிறார்கள். ஐயப்பன், அனுமன் பஞ்சலோகத்தில் இருக்கிறார்கள். ஐயப்பனுக்கு மாதா மாதம் உத்திரத்தில் பூஜை 
நடைபெறும்.
அனுமனுக்கு அமாவாசை விஷேட அபிஷேகம் உண்டு. புரட்டாசி மாதம் அனுமன் விக்கிரகத்தைத்திருப்பதிக்கு எடுத்துப் போய் வந்து பெருமாளுக்குச் சனிக்கிழமை தளிகை போடுவார்கள் சிறப்பாய்.

இப்படி எல்லா விழாகளும் சிறப்பாய் நடக்கும் கோயில்  

                                                                 வாழ்க வளமுடன்.

23 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அழகு

வெங்கட் நாகராஜ் said...

பல வருடங்கள் வாழ்ந்த ஊருக்குச் சென்ற வந்தால் மகிழ்ச்சி தான். படங்கள் அழகு.

KILLERGEE Devakottai said...

நிறைய விடயங்களுடன் பிரமாண்டமான பதிவு ஓவியப்படம் அருமை வாழ்த்துகள்.

த.ம.பிறகு

ஸ்ரீராம். said...

கும்பாபிஷேகக்காட்சிகள் அருமை. அதற்காகததான் மயிலை சென்றீர்களா? பழைய நட்புகளை பார்ப்பதும், அவ்வ்வளவு வருடங்கள் இருந்த ஊருக்கு மறுபடி செல்வதும் மகிழ்ச்சியை அளித்திருக்கும். படங்கள் அருமை. பழைய பதிவில் திறமையான அந்தக் கைகள் வரைந்த படத்தையும் என் கமெண்ட்டையும் மறுபடி பார்த்து வந்தேன்!

இன்று அதிசயமாக பதிவு திறக்கும்போதே தமிழ்மணம் தயாராக இருக்க, ஒட்டு போட்டு விட்டேன்!!

துரை செல்வராஜூ said...

Fb ல் சில படங்கள் எனக்கு வந்திருந்தன..

ஆனாலும் விரிவான செய்திகளுடன் இனிய பதிவு..
கும்பாபிஷேக நிகழ்வும் ஆலயத்தின் அழகும் கண்களில் நிறைகின்றன..

சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் எல்லாருக்கும் எல்லா நன்மைகளையும் அருள்வாராக!..

வாழ்க நலம்..

G.M Balasubramaniam said...

நாங்கள் வந்திருந்தபோது இக்கோவிலுக்குப் போன நினைவில்லையே

கோமதி அரசு said...

வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
பல வருட நட்புகளை பிரிந்து வரவே மிகவும் கஷ்டமாய் இருந்தது.
இப்போது விழாவை முன்னிட்டு பார்த்து வந்தது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
சாரின் படத்துக்கு கருத்து சொன்னது மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நாங்கள் மாயவரத்தில் இருக்கும் போதே கும்பாபிஷேக வேலைகள் நடந்து கொண்டு இருந்தது, ஊரை விட்டு வரும் போது எல்லோரும் இப்படி கோயில் கும்பாபிஷேக பார்க்காமல் போகிறீர்கள்! கண்டிப்பாய் கும்பாபிஷேகத்திற்கு வரவேண்டும் அழைப்பிதழ் அனுப்புவோம் என்று அன்பாய் சொன்னார்கள். அது போல் போனில் ஒவ்வொரும் அழைத்தார்கள். பத்திரிக்கை அனுப்பி வைத்தார்கள்.
போய் இறைவனையும், பழைய ந்டபுகளையும் பார்த்து வந்தது மனதுக்கு புதிய தெம்பு கிடைத்து இருக்கிறது.

பழைய பதிவைப்பார்த்து உங்கள் பின்னூட்டத்தை படித்தது மகிழ்ச்சி.
உங்கள் விருப்படி சார் வரைந்த ஓவியத்தை பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

தமிழ்மண வாக்கிற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

//சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் எல்லாருக்கும் எல்லா நன்மைகளையும் அருள்வாராக!..//

அதுதான் வேண்டும் ! வேறு என்ன வேண்டும்.!

உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
உங்களை அழைத்து சென்ற கோவில் பாடல் பெற்ற தலம், திவ்ய தேசம் கோவில்கள்.
இந்த கோவில் தனியார் கோவில் . வெளியூரிலிருந்து வந்தவர்கள் பாடல் பெற்ற தலங்கள், திவ்ய தேசங்கள் பார்க்க வேண்டும் என்று தான் சொல்வார்கள், அதனால் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இக்கோயிலுக்குச் சென்றேன். குடமுழுக்கில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன், முடியவில்லை. அக்குறையை உங்கள் பதிவு நிறைவு செய்துவிட்டது. சப்தஸ்தான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். பிற கோயில்கள் : அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்,
மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்,
மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்,
சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்,
துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்,
சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்.
இக்கோயிலைப் பற்றி கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் பதிவு ஆரம்பித்தேன். வாய்ப்பிருப்பின் அப்பதிவினை அங்கு சென்று பார்க்கலாம்.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் பழைய பதிவில் (அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்,)
புனுகீஸ்வரர் கோயில் திருப்பணி நடப்பதை படத்துடன் பகிர்ந்து கொண்டதை படித்தேன்.
விக்கிபீடியாவில் சென்று படிக்கிறேன்.
உங்கள் கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி.
நீங்கள் குறிப்பிட்ட கோயிலுக்கு அடிக்கடி போய் வருவோம்.
மார்க்கசகாய் கோவில்லௌ தாண்டி தான் ஊருக்கு போக வேண்டும், வரவேண்டும் நல்ல மார்க்கத்தை தர வேண்டிக் கொள்வேன்.

Anuradha Premkumar said...

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை அருள்மிகு புனுகீசுவரர் திருக்கோயில்,,,,..

படங்களும், செய்திகளும் மிகவும் அருமை..

பகிர்வுக்கு நன்றிகள்...


வில் வைத்துள்ள முருகன் ..ஆஹா அழகு..

மாதேவி said...

மனதுக்கு நிறைந்த படங்களுடன் அருமையான தரிசனம்.

ராமலக்ஷ்மி said...

புனுகீசுவரர் கோவில் பற்றி இப்போதே அறிய வருகிறேன். முதல் படமும் மற்ற படங்களும் பகிர்வும் அருமை. நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா பிரேமகுமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மாதேவி வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பழமையான கோவில் எங்கள் வாழ்வில் பாதி பொழுதுகள் அந்த
கோயிலில் இருந்தது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

புனுகீஸ்வரர் கோயில் பற்றி இப்போதுதான் அறிகிறோம். அருமையான படங்களுடன் தகவல்களும். தாங்கள் தங்களின் நட்புகளைச் சந்தித்ததும் மகிழ்ச்சிதான் இல்லையா...

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தங்களின் கணவர் வரைந்த ஓவியம் வெகு அழகு!

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
பலவருட நட்பு மீண்டும் சந்திக்க வாய்ப்பு இறைவன் அருளால் கிடைத்தது, மகிழ்ச்சிதான்.
ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.
உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.