Monday, July 20, 2015

குறிஞ்சி ஆண்டவர் கோயில்


குறிஞ்சி ஆண்டவர் கோவில்
    கொடைக்கானலில் பூக்கும் அழகிய மலர்களால் ஆன அர்ச்சனைக்கூடைகள் 
வெளிச்சுற்று கோபுர சுவர் அழகுபடுத்தப்படுகிறது
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள்  பூக்கும், இந்த குறிஞ்சி ஆண்டவர் கோவில் கொண்டுள்ள பகுதியில். குறிஞ்சிப் பூ பூக்கும் சமயம் குறிஞ்சி ஆண்டவருக்கு சமர்ப்பிக்கப்படும்.

சிறு வயதில் பள்ளியிலிருந்து சுற்றுலா வந்தோம், குறிஞ்சி பூ பூக்கும் சமயம் .அந்தப் பூக்களைப் பத்திரமாய் அட்டையில் ஒட்டி அதன் மேல் கண்ணாடி கவர் ஒட்டி பள்ளியில்  சுற்றுலா வராதவர்களுக்குக் காட்டி மகிழ்ந்தது  நினைவுக்கு வந்தது.

                                            குறிஞ்சிப் பூ- படம், (நன்றி - கூகுள் )
குறிஞ்சி முருகன் கோவிலை லீலாவதி என்பவர் கட்டி இருக்கிறார், இப்போது பழனி கோவிலின் உப கோவிலாக பராமரிக்கப்படுகிறது.
மிகவும் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் குருக்கள் , பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. 

 கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை , அதனால்  கோவிலிருந்து தூரத்தில் தெரியும் பழனி மலையின் அழகிய காட்சி, கோவில் வாசலில் இருக்கும் கடைகள் , நம் ஊர் பக்கம் பார்க்க முடியாத  சிட்டுக்குருவி, அங்கு மரத்தில் படர்ந்த கொடியில் வித்தியாசமான காய் இவற்றை இங்கு காட்சி ஆக்கி இருக்கிறேன்.
யானை யானை! அம்பாரி யானை!
வெட்டி வேர் யானை முகன்
மரத்தில் செய்த அழகிய   கலைப் பொருட்கள்
பளிங்குச் சிலைகள்
வீட்டில் தொங்க விட  சரவிளக்குகள், ஊதுபத்தி ஸ்டாண்டு, அழகிய வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள்.

சிரிக்கும் புத்தர்
வித்தியாசமான காய்
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவியின் மஞ்சள் மூக்கு தெரியுதா?
தூரத்தில் இருக்கும் இரண்டு  மலைகள் - பழனி மலை, இடும்பன் மலை.
                                             பனி மூட்டத்தில் எடுத்தது.

                                                             வாழ்க வளமுடன்.
                                                              =================

31 comments:

Ramani S said...

படங்களுடன் பதிவு மிக மிக அற்புதம்
நானும் பத்து முறைக்கு மேல சென்றுள்ளேன்
இப்படி அனைவரும் நேரடியாகப் பார்ப்பதுபோல்
படங்களுடன் பதிவிடும் திறன் வாய்க்கப்பெறவில்லை

இன்யெனும் முயற்சிக்கவேணும் எந்த் தங்கள்
பதிவுகளைப் படிக்க உணர்கிறேன்

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அருமை... சிட்டுக்குருவி படம் சூப்பர்...!

Ramani S said...

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அருமை... சிட்டுக்குருவி படம் சூப்பர்...!

துரை செல்வராஜூ said...

சில ஆண்டுகளுக்கு முன் - கொடைக்கானல் சென்றபோது அந்த குருவியைக் கண்டு வியந்திருக்கின்றோம்.. ஆனால் குமரன் திருக்கோயிலுக்குச்செல்ல இயலவில்லை..

மழைத் தூறலால் - சீக்கிரம் பழனிக்குச் செல்ல வேண்டும் என - கொடைக்கானலில் இருந்து இறங்கி விட்டோம்..

அழகிய படங்களுடன் இனிய பதிவு!..

வாழ்க நலம்!..

ரூபன் said...

வணக்கம்
அம்மா

எங்களையும் அழைத்து சென்றது போல ஒரு உணர்வு.நல்ல விளக்கம் கொடுத்து அழகிய படங்களுடன் பதிவு எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி அம்மா த.ம 3

நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

குறிஞ்சிப்பூ நினைவு படுத்துவது ஊமைத்தம்பூவையோ? எந்தவித ஸ்பெஷலும் இல்லாமல் இருக்கிறது குறிஞ்சிப்பூ!

படங்கள் தெளிவு.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்களை போல் நினைத்தவற்றை உடனே கவிதையாக்க என்னால் முடியாது.

உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.
அடுத்தமுறை போய் வாருங்கள். மலைபகுதியில் திடீர் மழை, திடீர்வெயில் என்று மாறி மாறிதான் வரும். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
என் பதிவை காணோம் என்று கேட்டுக் கொண்டு இருந்தீர்கள், இரண்டு பதிவு போட்டு விட்டேன்.
உங்கள் அன்பு அழைப்புக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் எந்தவித ஸ்பெஷலும் இல்லாமல் தான் இருக்கிறது
குறிஞ்சிப்பூ, அதன் மூலம் இறைவன் உணர்த்த விரும்புவது தன் படைப்பில்
எல்லாம் ஒன்றே என்பது தான். அழகில்லா பூவையும் இறைவன் சூடி மகிழ்கிறனே!
உங்கள் கருத்துக்கு நன்றி.

‘தளிர்’ சுரேஷ் said...

அழகான புகைப்படங்களுடன் கோவில் அறிமுகம் சிறப்பு! நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

R.Umayal Gayathri said...

அழகான புகைப்படங்கள் கண்களுக்கு குழுமை சேர்த்தன அம்மா நன்றி

கோமதி அரசு said...

வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

படங்கள் மனதைக் கொள்ளைகொள்கின்றன

Dr B Jambulingam said...

அருமையான கோயில், அழகான புகைப்படங்கள். சென்று வந்த நிறைவு. நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

இந்த மே மாதத்தில் நாங்களும் அங்கே சென்று வந்தோம். நினைவுகளை மீட்ட பதிவு.

நன்றிம்மா...

த.ம. +1

Anuradha Prem said...

ஆகா அழகு....கோவிலும் ... அங்கு உள்ள கலைப் பொருட்கலும் ...

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

பரிவை சே.குமார் said...

அழகான படங்கள் அம்மா...

கே. பி. ஜனா... said...

அழகிய பயனுள்ள பதிவு. அந்த சிட்டுக் குருவியின் படம் அபாரம்!

கோமதி அரசு said...

வணக்கம் கே. பி . ஜனா சார் , வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்கவளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

Geetha Sambasivam said...

ஒவ்வொரு வருஷமும் போகணும்னு பேசிக் கொண்டிருக்கிறேன். போகத் தான் நேரம் வாய்க்கவில்லை. ஒரு தரம் போய்ப் பார்க்கணும்! பார்ப்போம். மதுரையிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே இருந்தும் இன்று வரை கொடைக்கானல் சென்றது இல்லை. :)

ராமலக்ஷ்மி said...

சிறப்பான பகிர்வு. நல்ல படங்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.