Tuesday, March 25, 2014

வால்ட் விட்மன் நினைவில்லம்

நாங்கள் நியூஜெர்சியில் இருந்தபோது கேம்டனில் உள்ள வால்ட் விட்மனின் நினைவில்லத்திற்குச் சென்றிருந்தோம். 

நாளை 26/03/2014 அன்று கவிஞர் வால்ட்விட்மனின் (WALT WHITMAN) நினைவு நாளாகும்.

அதையொட்டி சில நினைவுகளைப் பகிர விரும்புகிறேன்.

மவுண்ட் லாரலில் உள்ள பொது நூலகத்திற்கு நாங்கள் அடிக்கடி செல்வது வழக்கம். 

 இணையத்தில் வேண்டிய பாடக் குறிப்புகளை எடுத்துப்போகும் மாணவர்கள்.
மவுண்ட் லாரல் -பொதுநூலகம்
ஒருமுறை அங்கு சென்றபோது என் கணவர் கவிஞர் வால்ட் விட்மனைப் பற்றி வால்டர் டெல்லர் எழுதிய நூலைப் படித்தார்கள். 
மவுண்ட் லாரல் -பொதுநூலகம் இங்கு இருந்து எவ்வளவு புத்தகம் வேண்டும் என்றாலும் எடுத்து வரலாம் படிக்க ,இரண்டு நாட்களுக்கு ஒருமுறை  புத்தகங்கள் -பேரனுக்கு கார்ட்டூன் சிடிகள், கதைப்புத்தகங்கள் எடுத்து வருவோம்.
வால்ட்விட்மனைப்பற்றி வால்டர்டெல்லெர் எழுதிய புத்தகம்

அருகில் உள்ள கேம்டனில் விட்மனின் நினைவில்லம் அமைந்திருப்பதை அந்நூலின் மூலம் அறியமுடிந்தது. 

மகாகவி பாரதியார் போன்றவர்கள் புதுக்கவிதைகள் எழுதுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26, 1892)என்பார்கள்.

எனவே அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் என் கணவருக்கு ஏற்படவே அதுபற்றி மகனிடம் கூற , அவன் அதற்கு ஏற்பாடு செய்தான். அங்கு செல்ல முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். 28/09/2013 அன்று காலையில்  மகன், மருமகள், பேரனுடன் நாங்கள் எல்லோரும் காரில் சென்றோம். முக்கால் மணி நேரப்பயணம். டெலாவேர் ஆற்றங்கரையில் கேம்டன் நீர் முகப்புக்கு (Camden Water Front) அருகில் உள்ளது.கேம்டனின் போக்குவரத்து அதிகமில்லாத ஓரிடத்தில் கார்பார்க்கிங்க் வசதியோடு கூடியஅமைதியான ஒருசூழலில் இல்லம் அமைந்திருந்தது. 
மிக்கிள் சாலை- விட்மன் வாழ்ந்தபோது
மிக்கிள் சாலை= இப்போது.


எங்கள் வருகைக்காக நினவில்லத்தின் கியூரேட்டர் வாசலில் தயாராகக் காத்திருந்தார்.  ’எங்கிருந்து வருகிறீர்கள்  ஏன்  அவர் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?’  என்றெல்லாம் எங்களின் ஆர்வத்தைக் கேட்டறிந்தார்.  பின் மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.
விட்மனின் இல்லம்-அப்போது


உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்று முதலிலேயே கூறிவிட்டார்.
இல்லத்தில் உள்ளே உள்ளவைகளைப் பற்றிய படங்கள் அங்கு கொடுத்த ’கான்வர்சேஷன்’ பத்திரிகை, டெல்லரின் புத்தகம், ஆகியவற்றிலிருந்து  எடுத்தது.
விட்மனின் இல்லம்-இப்போது
           
இல்லத்தின் முன்புறம்
                                                                 
                                                  
வால்ட் விட்மன் வாழ்ந்த  அந்த    இல்லத்தை பார்க்கப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் நுழைந்தோம்.  இல்லத்தை பார்த்துக் கொள்ளும் கியூரேட்டர் இல்லத்தைச் சுற்றிக்காண்பித்துக்கொண்டே செய்திகளைத் தொகுத்துக்கூறிய வண்ணம் இருந்தார்.
நினைவில்லத்தின் கியூரேட்டர். தன்னை படம் எடுக்க வேண்டாம் என்றார், ஆனால் தோட்ட்டத்தை எடுக்கும் போது அவரும் அதில் வந்து விட்டார்.
விட்மன் அமெரிக்காவில் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் பிறந்தார். அடிமை முறையை எதிர்த்தார். சமத்துவத்தை ஆதரித்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பாசறைகளில் காயமுற்றோருக்குத் தொண்டுகள் புரிந்தார். 

‘புல்லின் இதழ்கள் ’என்னும் இவரது கவிதைத் தொகுப்பு நூல் உலகப்புகழ்பெற்றது. எவரும் இதனைப்பதிப்பிக்க முன்வராத நிலையில் தானே அந்நூலை அச்சிட்டு வெளியிட்டார்.1855-ல் முதலில் அவர் தனது செலவில்  பதிப்பித்த புல்லின் இத்ழ்கள் நூலின் படிகளின் எண்ணிக்கை 795. முதலில் அவற்றில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை

1882-ல் புல்லின் இதழ்களில் மேலும் பல கவிதைகளை இணத்து மறுபதிப்புச் செய்தபோது பெரிய வெற்றி தந்தது

இந்நூலை விற்பனை செய்ததில் கிடைத்த இலாபத்தில் நியூஜெர்சி மாநிலத்தில் கேம்டன் நகரில் மிக்கல் தெருவில் 1884ல் ஒரு வீட்டினை 1750 டாலர் விலைக்கு வாங்கினார். 1892-ல் தமது 72 வயதில் இறக்கும் வரை இங்கு வாழ்ந்தார்.

’பிராங்க்லின் இவான்ஸ்’ என்னும் நாவலையும் இவர்எழுதியுள்ளார்.

ரிச்சர்ட் புக்( Richard buke )என்ற அவரது நண்பர் ’வால்ட்விட்மன்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களான சார்லஸ் டிக்கன்ஸ், வில்லியம் தாக்கரே, ஆஸ்கார் வைல்டு ஆகியோர் இவரைக்காண இங்கு வருகை புரிந்தனர்.

கப்பல் தளபதியாக இருந்த  தன் கணவரை இழந்த மேரி ஓ டேவிஸ் என்பவர் விட்மனின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கேயே வாடகையின்றித் தங்கி அவரது வீட்டின் பாதுகாவலராக இருந்தார். அவரை விட்மன் தனது நண்பர் என்றே குறிப்பிடுவார்.

.*நினைவில்லத்தின் உள்ளே
இல்லத்தின் உட்புறம்

                                   
வெள்ளை வளையத்துள் இருப்பது சர் தாமஸ் மூர் என்ற சமய, தத்துவ, மனிதநேயப் பெரியாரின் படம்.

அவரது இல்லத்தில் விட்மனின் புகைப்படமும் அதன் வலது புறம் தந்தையாரின் படமும் இடது புறம் அவரது தாயாரின் படமும் இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுடன் அவர் எடுத்துக்கொண்ட படமும் உள்ளது.அவர் முதலில் வெளியிட்ட ’புல்லின் இதழ்கள்’ என்ற புத்தகப்பிரதி அங்கு உள்ளது.
அவர் அச்சிட்ட புத்தகப் பிரதி

அவரது கட்டில் படுக்கை விரிப்புடன் அழகாய் காட்சி அளிக்கிறது. கட்டிலுக்கு கீழ் அவர் குளிக்கப் பயன்படுத்திய பித்தளைத் தொட்டி இருக்கிறது.  கட்டிலுக்கு அருகில் உள்ள  மர அலமாரியில் அவர்  உடல் நிலை சரி இல்லாத போது அருந்திய இருமல் மருந்து பாட்டில்கள்  (ரப்பர் கார்க் அடைத்த கண்ணாடி மருந்து குப்பிகள் ) இருந்தன.

வால்ட் விட்மன் எழுதிய கடிதங்கள், 
அவருடைய உடைமைகள்,
அவர் இறக்கும்போது படுத்திருந்த படுக்கை, 
இறுதிக்காலத்தில் அவர் படுத்திருந்த கட்டில்

புகைப்படத் தொகுப்பு, 
ஆடும் மர நாற்காலிகள்-2,
சுவரோடு அமைந்த கணப்பு அடுப்பு,
அவர் பயன்படுத்திய காலணிகள்,
அவர் பயன்படுத்திய வட்ட சின்ன மேஜை, 
அதில் அவர் தொட்டு எழுதிய பேனா, மைகுப்பி, நிறைய நிப்கள்
எழுதிய புத்தகங்கள்

ஹார்ப்பெர்ஸ் வீக்லி மாகசின்
ஸ்க்ரிப்னர் மந்த்லி மாகசின்
அவரது  பயன்படுத்திய பத்திரிகைகளில் ஒன்று ஹார்ப்பர்ஸ் வீக்லி

குட்டி நாற்காலிகள். 
தேவையற்ற  காகிதங்களைப் போடும் பிரம்புக் கூடை. 
அவரின் கைத்தடி, 
முதலியவற்றை அழகாய் வைத்து இருக்கிறார்கள்

பித்தளை கிளிக்கூண்டு ஒன்று அழகாய் இருக்கிறது. குயில் ஒன்று
நிஜக்குயில் போல கண்ணாடி ஜாடியில் இருக்கிறது.

வீட்டைப்பாதுகாத்த அந்த பெண்மணியின் அறை அருகில் உள்ளது.

 மாடியிலுள்ள அறையில் அவரது கடைசிக்காலம் கழிந்தது.
அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது உதவிக்கு கைத்தடியைத் தட்டிக் கீழே இருப்பவர்களை உதவிக்கு அழைப்பாராம். 

வீட்டின் சுவரில் பூவேலைப்பாடு உள்ள  பேப்பர் ஒட்டப்பட்டு அழகாய் இருக்கிறது. 

கீழ்த்தளத்தில் இரண்டு மூன்று மர அலமாரிகள் . ஏசுநாதரின் ’லாஸ்ட் சப்பர்’ என்ற  புகழ் பெற்ற  ஓவியம்  பெரிதாய் மாட்டப்பட்டு இருக்கிறது.
அவர் இறந்த போது அவர் இறந்து விட்டார் என்று அவரை கவனித்துக் கொள்ளும் மருத்துவர் அவர் கைப்பட எழுதிக் கொடுத்த  இறப்புச் சான்றிதழ்க் கடிதம் மரச்சட்டத்திற்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது.

(விட்மனின் கல்லறை கேம்டனில் வேறு பகுதியில் இருக்கிறது.)

*அவரது உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
(நன்றி: வால்டர் டெல்லரின் நூல்)
அறிவுரை கூறுவது பற்றிக் கூறியது:-                     
“ Iam always telling you not to take advice.I mean it – every word of it. But that don’t mean you are to yourself or take your own advice” may 27 1888.

 தனது படைப்புகள் பற்றி  :-                              
’My writngs has been clear from the start- almost from boyhood: not beautiful;but legible”  july 21 1888.
                                       
 இலக்கியவாதிகள் பற்றி
“Literary men learn so little from life – borrow so much from the borrowers” april 24 1888.p.103

* ’புல்லின் இதழ்க’ளில் இருந்து ஒரு புதுக்கவிதை.
(வானசாஸ்திரிகளின் பிரசங்கம் வால்ட் விட்மனிடம் ஏற்படுத்திய விளைவுகளைக் கூறுகிறது:-)

When I heard the learn’d astronomer;
When the proofs, the figures,were ranged in columns before me;
When I was shown the charts and the diagrams,to add,divide,and measure them;
When I, sitting, heard the astronomer,where he lectured with much applause in the lecture-room,
How soon, unaccountable, I became tired and sick;
Till rising and gliding out, I wander’d off by myself,
In the mystical moist night-air, and from time to time,
Look’d up in perfect silence at the stars.

போரினால் ஏற்படும் துயரங்களைத் தனது பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவற்றில் ஒன்று:-

"When lilacs last in the dooryard bloom'd,
And the great star early droop'd in the Western sky 
in the night,
I mourned and yet shall mourn with 
ever returning spring .
Ever -returning spring , trinity  sure to me you bring,
Lilac blooming perennial and drooping  star
in the west,
And thought of him I love..."
                                              --Leaves of Grass

இன்று விட்மனின் இல்லம் தேசிய வரலாற்றுச்சின்னமாக விளங்குகிறது.உலகெங்குமிருந்து மக்கள் அவரது நினைவில்லத்தைக் காண வருகிறார்கள்

வால்ட்விட்மன் அசோசியேஷன்’  நிறுவனத்தினர், கான்வெர்சேஷன்
(conversation) என்னும் இதழை வெளியிட்டுவருகின்றனர்.

கேம்டன் நகரின் அருகில் உள்ள ஆற்றுப்பாலத்திற்கு ’விட்மன் பாலம்’ என்ப்பெயர் இடப்படுள்ளது.


*சில தகவல்கள்:

அமைந்திருக்கும் இடம்:328,மிக்கிள் சாலை கேம்டென், நியூஜெர்சி

திறந்திருக்கும் கிழமை-செவ்வாயிலிருந்து ஞாயிறு வரை.

தனியாகவோ குழுவாகவோ வருவோர் தங்கள் வருகையை தொலைபேசி மூலம் உறுதிசெய்து கொள்வது நல்லது.

தகவல் தொடர்புக்கு: (609)964-5383)

கவிஞரின் வீட்டுக்குள் போகும் போது நமக்கு இந்த கையேட்டைத் தருகிறார்.பத்திரிக்கையில் காணப்படுவது வால்ட் விட்மன் பாலம்.


விட்மன் இல்லத்தின் பின்புறத்தோட்டம்

இப்படி வால்ட்விட்மனின் இல்லத்தை பாதுகாத்து வருபவர்  நமக்கு அவரைப் ப்ற்றிய செய்திகளை அழகாய் சொல்லி  நம்மை  மலர்ந்த முகத்துடன் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.  
வாழ்க வால்ட்விட்மனின் புகழ்!
வளர்க மனிதநேய இலக்கியங்கள்!
----------------------------------------

31 comments:

ஸ்கூல் பையன் said...

வால்ட் விட்மன் பற்றி நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்... நன்றி...

அம்பாளடியாள் வலைத்தளம் said...

அறியாத தகவல் அறியத் தந்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
வாழ்த்துக்கள் தோழி தங்கள் தேடல் மென்மேலும் தொடரட்டும் .த .ம .1

ஸ்ரீராம். said...

தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்களுடன் கூடிய அற்புதமான, அறியாத, பயனுள்ள பல தகவல்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

தருமி said...

இருமுறை இந்த நூலை வாங்கிப் ‘பத்திரமாக’ வைத்திருக்கிறேன்!!

துரை செல்வராஜூ said...

கவிஞர் வால்ட் விட்மன் பற்றி - அறியாத தகவல்களை அறியத் தந்த சிறப்பான பதிவு. அழகான படங்கள்..

வெங்கட் நாகராஜ் said...

தெரியாத பல தகவல்கள்.......

உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...

சே. குமார் said...

அழகான படங்களுடன் வால்ட் விட்மன் பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...
வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான, அருமையான பல படங்கள் மூலம் எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள்... அறியாத பலப்பல தகவல்களுக்கு நன்றி...

ராமலக்ஷ்மி said...

வால்ட் விட்மன் கவிதைகள் கல்லூரி வயதில் பரிச்சயம். கவிஞரின் இல்லத்துக்குச் சென்று பார்த்து, படங்களுடன் விரிவான தகவல்களை அவரது நினைவு தினத்தையொட்டிப் பகிர்ந்திருப்பது சிறப்பு. மிக்க நன்றி.

Sasi Kala said...

எத்தனை அற்புதமான மனிதரின் வாழ்விடம் சென்று அருமையாக காட்சிப்படுத்தி எங்களையும் அவரது நினைவு நாளில் தொகுத்த விதம் வியப்பாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

இராஜராஜேஸ்வரி said...

வளர்க மனிதநேய இலக்கியங்கள்!

அருமையான பயணக்குறிப்புகள்..!

Bagawanjee KA said...

வெளிநாட்டு கவிஞர்களுக்கு அவர்கள் வாழும் போதே அங்கீகாரம் கிடைத்து விடுகிறது .நம் நாட்டில் தாகூருக்கும்இவ்வளவு சிறப்பான நினைவு இல்லம் இருக்கிறதா ?
வால்ட் விட்மனின் புகழ் !

ஜோதிஜி திருப்பூர் said...

பெரும்பாலும் இது போன்ற பதிவுகள் எழுதும் போது சுவராசியம் குறைந்து விடும் என்பதற்காக சிறிதாக எழுதி விட்டு சில படங்களை மாட்டி வைத்து நகர்ந்துவிடுவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட தகவல் குறித்து அனைத்து தரப்பும் சேர்ந்து கொடுத்த விபரங்கள் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்கூல் பையன்,வாழ்க வளமுடன்.
உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளிடியாள், வாழ்க வளமுடன்.
உங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
வேலை அதிகம் என்பது உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது.
நன்றி கருத்துக்கு.

கோமதி அரசு said...

வணக்கம் வி.கோபாலகிருஷ்ணன் சார்,வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வண்க்கம் தருமி சார், வாழ்க வளமுடன்.
இருமுறை வாங்கியும் படிக்கவில்லையா? ஏன்? நேரம் இல்லையோ!
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

சகோதரர் துரை செல்வராஜூ அவர்களுக்கு வணக்கம், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வால்ட்விட்மன் மழை கவிதை அருமை.
படித்தேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

அன்பு சசிகலா வணக்கம், வாழ்க வளமுடன்.
கவிதை அழைத்து வந்து விட்டதா? என் தளத்திற்கு.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். பயணக்குறிப்புகளை தகுந்த நேரத்தில் தரலாம் என்று வைத்து இருந்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பகவான் ஜி வாழ்க வளமுடன்.
ஒரு சிலருக்கே வாழும் போது பெருமைகள் வந்து சேரும் அதில் இவர் ஒருவர்.


அகமதாபாத்தில் அவருக்கு என்று நினைவு இல்லம் கட்டி இருக்கிறார்கள் ஆனால் அது அவர் வாழ்ந்த வீடு அல்ல.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜோதிஜி, வாழ்க வளமுடன்.
பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

தமிழ்மண வாக்கு அளித்த அனைவருக்கும் நன்றி.

ADHI VENKAT said...

நினைவில்லத்துக்கு சென்று வந்து எங்களுக்கும் அவரைப் பற்றிய தகவல்களை சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள் அம்மா.

கோமதி அரசு said...

வணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.