சிட்டுக்குருவிகள் நான் இருக்கும் மயிலாடுதுறையில் இல்லை. வேறு ஊர்களில் சிட்டுக்குருவிகளை பார்த்துவிட்டால் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்.என் மகன் ஊரில், மகள் ஊரில் எல்லாம் இருக்கிறது. அங்கு போகும் போது எல்லாம்சிட்டுக்குருவிகள் உல்லாசமாய் கீச் கீச் என்று ஒலி எழுப்பி செல்லும்போது ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் மகிழ்ந்து பார்ப்பேன்.
நியூஜெர்சி போனபோது மகன் வீட்டுத்தோட்டத்தில் குருவிகள் வருவதைப்பார்த்து சிட்டுக்குருவிக்கு வீடு (கூடு) வாங்கி வைத்தார்கள் என் கணவர் . குருவி அதன் மேல் வந்து வந்து உட்கார்ந்து பார்க்கும். ஆனால் உள்ளே போகாது. கூட்டிற்கு வாசல் சரியில்லை என்று நினைக்கிறேன். கூட்டின் வாசலில் முதலில் வந்து உட்கார்ந்து அங்கும், இங்கும் பார்த்து பின் தான் உள்ளே போகும் குருவி . இவர்கள் வாங்கிய வீட்டில் அப்படி இல்லை சிறு வட்டம் போல்மட்டும் வாசல் இருக்கிறது. அதில் அது உட்கார்ந்து பார்க்க வசதி இல்லாத காரணத்தால் வரவில்லை போலும்.
சிட்டுக்குருவிகள் தினம் அல்லவா இன்று ! நான் சேமித்து வைத்து இருக்கும் படங்கள் கிடங்கில் தேடித் தேடி சிட்டுக்குருவியை எடுத்துப் பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் இருக்கு குருவி படங்கள் - அடுத்த முறை. இன்னும் தேடினால் சிட்டுக்குருவிகள் தினம் முடிந்துவிடும்.
நான் பகிர்ந்த சிட்டுக்குருவிகளைக் கண்டு மகிழ்ந்தீர்களா!
வாழ்க வளமுடன்!
----------------------------------------------
கூட்டின் மீது உட்கார்ந்து இருக்கும் பறவை சிட்டுக்குருவி இல்லை
ஏங்கிரிபேர்டு (சிவப்பு பறவை)நியூஜெர்சி போனபோது மகன் வீட்டுத்தோட்டத்தில் குருவிகள் வருவதைப்பார்த்து சிட்டுக்குருவிக்கு வீடு (கூடு) வாங்கி வைத்தார்கள் என் கணவர் . குருவி அதன் மேல் வந்து வந்து உட்கார்ந்து பார்க்கும். ஆனால் உள்ளே போகாது. கூட்டிற்கு வாசல் சரியில்லை என்று நினைக்கிறேன். கூட்டின் வாசலில் முதலில் வந்து உட்கார்ந்து அங்கும், இங்கும் பார்த்து பின் தான் உள்ளே போகும் குருவி . இவர்கள் வாங்கிய வீட்டில் அப்படி இல்லை சிறு வட்டம் போல்மட்டும் வாசல் இருக்கிறது. அதில் அது உட்கார்ந்து பார்க்க வசதி இல்லாத காரணத்தால் வரவில்லை போலும்.
சிட்டுக்குருவிகள் தினம் அல்லவா இன்று ! நான் சேமித்து வைத்து இருக்கும் படங்கள் கிடங்கில் தேடித் தேடி சிட்டுக்குருவியை எடுத்துப் பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் இருக்கு குருவி படங்கள் - அடுத்த முறை. இன்னும் தேடினால் சிட்டுக்குருவிகள் தினம் முடிந்துவிடும்.
இரண்டு சிட்டுக்குருவிகள் பேசுவது என்ன?
பேசி முடித்து எங்கு போகிறது?
உறவுகளை அழைத்துவரப்போனதா?
உறவோடு உறவாடி மகிழ்வோம் உணவுகளை பகிர்ந்து உண்போம்.
சிட்டுக்குருவியில் இது ஒரு வகை
இறக்கை விரித்து பறக்க ஆயத்தம்
சிவப்பு கலர் உள்ள சிட்டுக்குருவி
சாம்பல் நிறக்குருவி
’பின் பக்கம் ஒளிந்து இருக்கிறேன் பாருங்கள்.’
’இதோ வந்து விட்டேனே!’
நான் பகிர்ந்த சிட்டுக்குருவிகளைக் கண்டு மகிழ்ந்தீர்களா!
வாழ்க வளமுடன்!
----------------------------------------------
சிட்டுக் குருவிகளைப் பற்றி சிட்டுக்குருவி போல் அழகான பதிவு. அழகான சிட்டுக் குருவிப் படங்கள் அத்தனையையும் பார்க்கையில் இங்கு சென்னையில் இல்லையே என்கிற ஏக்கம் மேலோங்குகிறது.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் மிக அருமையாக வந்திருக்கிறது...
பதிலளிநீக்குஆகா...! படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு...
பதிலளிநீக்குபடத்தில் பார்த்து தான் இனி சந்தோசப்பட வேண்டும் போல... ம்...
உங்களின் அழகிய பதிவைப்படித்ததும் சிட்டுக்குருவி பற்றிய பாடல்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து விட்டது!
பதிலளிநீக்குஅருமையான படங்களுடன்
பதிலளிநீக்குஅழகான பதிவு..
குருவி, குயில், கோழி - என கூடிக் கிடந்த வாழ்க்கை - கிராமங்களில் கூட இப்போது இல்லாமல் போய் விட்டது.
அந்த ஜீவன்கள் மீண்டும் பல்கிப் பெருக வேண்டிக் கொள்வோம்..
அழகான படங்கள் அற்புதமான விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஇனி நாம் இவற்றை இதுபோன்ற படங்களில் மட்டுமே பார்க்க இயலும் போலிருக்கிறது.
அருமை!
பதிலளிநீக்குஇங்கே நம்ம நாட்டிலும் ஏராளமான சிட்டுக்குருவிகள் இருக்கு.
தினமும் காலை ப்ரெட் சாப்பிட வருவாங்க. என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரங்களாச்சே:-)
ஜெய்ப்பூரிலும் சண்டிகரிலும் கூட ஏராளமான சிட்டுகள்.
சென்னையில் இருக்கான்னு கவனிக்கலை:(
ஏன் மாயூரத்தில் குருவிகள் இல்லையாம்?
ரொம்ப அழகு... புகைப்படமும், வர்ணனைகளும்:))))
பதிலளிநீக்குஆஹா ...சிட்டுக் குருவிகள் மீது தாங்கள் வைத்துள்ள காதலை
பதிலளிநீக்குவெளிக்காட்டி நிற்கிறது அருமையான படங்களுடன் இன்றைய
பகிர்வு வாழ்த்துக்கள் தோழி .த .ம .2
சிட்டுக்குருவிகளை படங்களிலாவது பார்க்க முடிகிறதே...!
பதிலளிநீக்குhttp://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_10.html
பதிலளிநீக்குஉங்கள் பார்வைக்கு ஒரு ஜலக்ரீடை:-)
சிட்டுக் குருவி அழிவுக்கு செல்போனை பயன்படுத்தும் நாமும் ஒரு காரணம் என்பதை அறிய வருத்தமாக உள்ளது !
பதிலளிநீக்குத ம +1
வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வரவு என் சிட்டுக்குருவி பதிவுக்கு தான். குருவிதான் உங்கள் நட்பை எனக்கு தேடிதந்தது.
நீங்களும் அப்போது சிட்டுக்குருவி பற்றி பதிவுபோட்டு இருந்தீர்கள்.
அப்போது நானும் உங்க்ள் பதிவை வந்து படித்து பின்னூட்டம் இட்டேன். நம் நட்பை ஏற்படுத்திய குருவிக்கு நன்றி.
எனக்கும் அப்படித்தான் இங்கு குருவி இல்லையே என்ற நினைப்பு இருக்கிறது.
மொட்டைமாடியில் தினம் பலவித பறவைகள் வந்தாலும் சிட்டுக்குருவி இல்லை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் ஊரிலும் இல்லையா குருவி?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் மனோசாமிநாதன், வாழகவளமுடன்.
பதிலளிநீக்குநினைவுக்கு வந்த பாடல்களை பகிர்ந்து இருக்கலாமே!
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகிராமங்களும் இப்போது நகரங்கள் போல் ஆனதால் (அடுக்குமாடி குடியுருப்பாய் மாறி விட்டன) கோழி, குருவி போன்ற பறவைகள் வசிக்க வழி இல்லை போலும்.
உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.
வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅவைகளுக்கு பிடித்த இடத்தில் வாழ்ந்து நமக்கு படமாய் இன்பம் அளிக்கிறது. அதற்கு குருவிக்கு நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் ஊரில் சிட்டுக்குருவிகள் உல்லாசமாய் சுற்றி திரிவது மிகவும் மகிழ்ச்சி.
திருவனந்தபுரத்தில் இந்த சிட்டுகுருவியை அடைக்கலகுருவி என்பார்கள். அவை வீடுகளில் அடைக்கலமாய் வந்து கூடு கட்டி வாழ்வதால் அப்படி சொல்வார்கள்.
பரசுராமர் தன் தாயை கொன்றவுடன் அங்கு அடைக்கலகுருவிகள் இல்லை என்பார்கள்.
மாயவரத்தில் ஏன் இல்லை என்று தெரியவில்லை இங்கு அதை ஊர்குருவி என்கிறார்கள் ஊர்குருஇ இங்கு கிடையாது தவிட்டுக்குருவிதான் இங்கு உண்டு என்று சொல்கிறார்கள்.
உங்கள் பார்வைக்கு ஒரு ஜலக்ரீடை:-)//
படித்தேன்.
குருவிகள் குளியல் அற்புதம்.
இங்கும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் புல் புல் பறவை, மைனா, தவிட்டுக்குருவி எல்லாம் வந்து நாங்கள் வைத்து இருக்கும் தண்ணீர் பாத்திரத்தில் மதியம் மூன்று மணிக்கு குளிக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம், Tanya Desigan, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களை போல் கவிதை எழுதும் திறன் இருந்தால் கவிதை பாடி இருப்பேன் சிட்டுக்குருவிகள் மேல்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசிட்டுகுருவிகளை எப்போதும் பார்ப்போம் படங்களில். உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் பகவான் ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுருவிகள் அழிவுக்கு செல்போன் ஒருகாரணம் என்பது உண்மைதான்.
குருவிகள் மட்டும் இல்லை மற்ற
பறவைகளும் கொஞ்சம் குறைந்து தான் இருக்கிறது இப்போது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சிட்டுகுருவிதினத்தில் சிவப்புகலர் சிட்டுகளை காணகொடுத்தீர்கள் இப்பொழுதுதான் சிவப்புசிட்டு கண்டு கொண்டேன் நன்றி.
பதிலளிநீக்குநிறைய படங்களைக்கொடுத்து எம்மை ஆனந்தப்படுத்திவிட்டீர்கள். மனம்நிறைந்த பகிர்வு.
சிட்டுகுருவிதின வாழ்த்துகள்.
சிட்டுக்குருவிகளை சின்ன வயதில் பார்த்ததுதான்.எங்கள் வீட்டுப் பரணில் கூடு கட்டி, முட்டையிட்டு நாள் முழுக்க .கீச் கீச். சென்று கத்திக் கொண்டே பறக்கும் குருவிகளைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கு. குருவி வெளியே போகும் சமயம் நானும்,என் தம்பிகளும் மேலே ஏறி அந்தக் குஞ்சுகளைத் தொட்டுப் பார்ப்போம்!
பதிலளிநீக்குஇப்பொழுதெல்லாம் அவற்றைப் பார்க்கவே முடிவதில்லை.'காக்கை, குருவி எங்கள் ஜாதி' என்று பாடத்தான் முடியும் போலிருக்கு! பல விஷ யங்களைப் போல சிட்டுக்குருவியும் அந்தநாள் ஞாபகமாகி விட்டது!
படங்களும், பதிவும் அருமை!
அன்புத் தோழியே இந்தக் கவிதை வரிகளைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் பிடித்திருந்தால்
பதிலளிநீக்குமறக்காமல் தயவு செய்து தமிழ் மணத்திலும் ஓர் ஓட்டுப் போட்டு விடுங்கள் .http://rupika-rupika.blogspot.com/2014/03/blog-post_20.html மிக்க நன்றி .
சிறப்புப் பகிர்வு மிக மிகச் சிறப்பு
பதிலளிநீக்குஅருமையான புகைப்படங்களைப் பதிவாக்கி
ரசிக்கத் தந்தமைக்கு அதன் அருமை
புரியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சிறப்புப் பகிர்வு மிக மிகச் சிறப்பு
பதிலளிநீக்குஅருமையான புகைப்படங்களைப் பதிவாக்கி
ரசிக்கத் தந்தமைக்கு அதன் அருமை
புரியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கண்களுக்கு விருந்து. மனதுக்கு நிறைவு. வரிசையாக குருவிகள் அமர்ந்திருப்பது அழகோ அழகு. மீதமிருக்கும் படங்களையும் நேரமிருக்கையில் பகிர்ந்திடுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராதா பாலு, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுருவி அழைத்து வந்து இருக்கும் புது உறவு. மகிழ்ச்சி.
உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
காக்கை, குருவி, எங்கள் ஜாதி என்று சொன்ன முண்டாசு கவிஞர் பாரதி ஊரில் நிறைய இருக்கிறது இந்த சிட்டுக்குருவி. அவர் தந்த அரிசிகளில் அன்பை சொல்லி தந்து விட்டு போனதால் அது தன் கஷடங்களை சகித்துக் கொண்டு அங்கு இருக்கிறது போலும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அம்பாளடியாள் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
உங்கள் கவிதை படித்து தமிழ்மண வாக்கு அளித்து விட்டேன்.
அருமையான படங்கள்....
பதிலளிநீக்குபொருத்தமான பகிர்வு.
வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்குவணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎல்லா பறவைகளுக்கும், அணில்களுக்கும் அந்த படியின் கைபிடி பிடிக்கும். அதில் வந்து அமர்ந்து தான் போகும். குழந்தைகள் மாடிபடி கைப்பிடியில் வழுக்கி விளையாடுவது போல மற்ற ஜீவராசிகளுக்கும் மாடி படி கைப்பிடி பிடிக்கிறது என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமல்க்ஷ்மி.
அன்பு மாதேவி வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇலங்கையில் சிவப்பு சிட்டு கிடையாதா?
உங்கள் அருமையான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி.
உறவோடு உறவாடி மகிழ்வோடு
பதிலளிநீக்குசிறக்கும் சிட்டுக்குருவிகள் அழகு..!
வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குசிட்டுக்குருவியை அடைக்கலக் குருவி (நம்மிடம் அடைக்கலமாக வருவதால்) என்பார்கள். மயிலாடுதுறையில் சிட்டுக்குருவிகள் இல்லை என்பது புதிய செய்தியாக இருக்கிறது. செட்டு செட்டாய் இருக்கும் சிட்டான குருவிகளின் படங்கள்! நன்றி!
பதிலளிநீக்குத.ம.5
இந்தியாவில் சிட்டுக்குருவில் இல்லை என்பதை நிறைய பேர் சொல்கிறார்கள். கேட்க வேதனையாக இருக்கிறது.
பதிலளிநீக்குசென்ற விடுமுறையில், என் ஊரில் என் அம்மா வீட்டில் எதிரில் உள்ள மரத்தில் நிறைய குருவிகள் வந்து சென்றன. ஆனால், நாகர்கோவிலில் மரங்கல் இருந்தபோதும் குருவிகளைக் கண்ட ஞாபகம் இல்லை.
அபுதாபியில் நிறைய குருவிகள் உண்டு. இன்னும் நிறைய பறவைகள் வருகின்றன. மரங்கள், செடிகளைத் தவிர வேறொன்றும் அதற்கென பிரத்யேக முயற்சிகள் யாரும் எடுப்பதில்லை. இத்தனைக்கும் செல்ஃபோன் டவர்கள், அதிக ட்ராஃபிக் உள்ள சாலைகளிலும் ஓரத்தில் செடிகளில் அவற்றைக் காணலாம். மாலை கூடு அடையும் நேரத்தில் அவற்றின் கீச்சுகள் கேட்கக் கேட்க ஆனந்தம் தன்னே வரும்.
வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுருவி அழைத்து வந்து விட்டதே! ஹுஸைனம்மாவை.
நான் மாமியார் வீட்டில் இருந்தேன். பதில் அளிக்க முடியவில்லை தாமதமாய் பப்ளிஸ் செய்து பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
மாலை கூடு அடையும் போதுபறவிகளின் ஒலி மிகவும் இனிமைதான் நீங்கள் சொல்வது போல்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், மிக நன்றி.