Wednesday, October 2, 2013

மலர்த்தோட்டம்


      
 இறைவன் அமைத்த தோட்டத்தில்  மலர்களைக் கண்டுகளிக்கக் கண் அளித்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே  கண்டு மகிழலாம்.மலர்களிலே பல நிறம் . மலர்கள் பலவகை.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அழகு.  இறைவனுக்குப் பாமாலையும், பூமாலையும் கொண்டு அடியவர்கள் வணங்குகிறார்கள்.

நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே! நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றிபோற்றிஎன்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே!
                                                                          --- திருநாவுக்கரசர்.

’முத்தான முத்துக்குமாரா’ என்று தொடங்கும் பாடலில்,
” அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா, அன்பான மனதால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா! ”
என்று இருக்கும்.  மனம் மலர்ந்து , மலர்ந்த மனதால் அர்ச்சிப்பது மிகவும் சிறப்பு.

ஒவ்வொரு கோவில் திருவிழாவிலும் ஒரு நாள் உற்சவம்  பூச்சொரிதல் உண்டு. பலவித மலர்களால் பூச்சொரிதல் செய்து மகிழ்வார்கள்.

புதுச்சேரி அரவிந்தர் ,அன்னை ஆசிரமத்தில் மலர் வழிபாடு மிக முக்கியம்.
ஆசிரமத்தில் அழகான தோட்டம் அமைத்து இருந்தார்கள் அன்னை.

‘மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்’ என்பது ஸ்ரீ 
அன்னையின் கருத்தாகும்.

ஒவ்வொரு பூவையும் பயன்படுத்தும் முறையின் மூலம் பலவித நற்காரிய சித்திகளை பெறும் வழி முறைகளை சித்தர்கள் அருளி உள்ளனர்.

அரவிந்த-அன்னை வழிபாட்டில் மலர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நம் கோரிக்கையை அரவிந்த அன்னையிடம் மலர்கள் கொண்டு சேர்க்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை
பக்தியில் ஆர்வம் பெருக - பவழமல்லி, 
தெளிவான மனதிற்கு மனோரஞ்சிதம்,  
உடல் நலம் பெற பூவரசம்பூ,  
ஆன்மிக சூழல் கிடைக்க வேப்பம்பூ, 
தைரியத்திற்கு எருக்கம்பூ, 
மனத்தூய்மைக்கு மல்லிகை, 
உடல் சக்திக்கு சாமந்தி... 

என்று அரவிந்த அன்னைக்கு சமர்ப்பித்துப் பலன் பெறுகிறார்கள். 

மனம் மலர்வது போல் நம் உள்ளமும் மலர வேண்டும்.

பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்”மலர்த்தோட்டத்தை
அடுத்த பதிவில் பார்க்கலாம் என்றேன் அல்லவா?
வித்தியாசமான மலர்கள் அடங்கிய தோட்டத்தைப்  பார்த்து மகிழலாம் வாருங்கள்.

மலர்களில் ராஜா =ரோஜா

ஊதா இங்க் தெளித்த  மாதிரி சிறு மலர்கள் 
ஆர்கிட் மலர்கள்

அலமண்டா பூ 

வெள்ளை \கேந்தி 
சூரிய காந்திப்பூ போல
நடுவில் ஐந்து வெள்ளை சிறு மலர்- வெளியில் நான்கு ஊதா இதழ்
சாமந்திப்பூ (செண்டுப்பூ)
டிசம்பர் போ போல


வெள்ளி மல்லி போல
அந்தி மந்தாரைப்பூப் போல
குட்டிமலர்
காகிதப் பூப் போல
தண்ணீர் இல்லை- தரையில் வளர்ந்த தாமரை
தண்ணீரின் அளவுக்கு ஏற்ப மேலே வரும் என்பதைப் பொய்யாக்கி மண்ணில் வளர்ந்து பெரிதாகி நிற்கிறது.
வெண்தாடித் தாத்தா   -பூ
வண்ணத்து பூச்சி பூ
குட்டி அகல் விளக்கு போல


முதலை போல
முதலையின் வால் அல்லது பாம்பு
யானைக் காதுச் செடி
இயற்கை அன்னை தந்த அழகிய பச்சைத் தாம்பாளம்பச்சைத் தட்டுக்கள்

மிதக்கும் இலைதட்டுக்கள் 
அல்லி மலரும்   இலைத் தட்டும்
தட்டான் -அழகாய்  மொட்டில்
முகம் எல்லாம் தாடி வைத்த வயதானவர் போல் இல்லே!
கள்ளிகள்  நடுவில் அலங்கார விளக்கு போல ஒரு கள்ளி

போன்சாய்க் காடு
அழகாய் அடுக்கு தீபாராதனைத் தட்டு போல!
வாங்க வாங்க தாத்தா என்னைப் பிடிங்க
புல்வெளி எங்கும் இந்த சிறு மலர்ப் பந்து குதித்து கும்மாளம் இடுவது போல நமக்கும் குதித்து மகிழ ஆசைதான்.

அழகான தோட்டத்தை அமைத்து அனைவரும் விடுமுறை நாளில் வந்து கண்டு களிக்க   அழகாய் பாராமரித்து வருவது போற்றுதலுக்கு உரிய விஷயம் தான். மலர்த் தோட்டத்தையும், பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளிலும்  மக்கள் நிறைந்து காணப்பட்டாலும் தோட்டம் எங்கும் சுத்தமாய் காணப்பட்டது மனது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.  மனதுக்கு மகிழ்ச்சி மட்டும் அல்ல புத்துணர்ச்சி, உற்சாகம் எல்லாம் கிடைக்கிறது.இந்த தோட்டத்தில் காய் கனிகளும் உண்டு.  வேறு சமயத்தில் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                                                                     

தேச பிதா பிறந்த தினத்தில் அவரை  வணங்குவோம்.
மன மகிழ்ச்சி, மனவருத்தம் இதனால் மதுவை நாடுகிறார்கள் சிலர். உண்மையான  மகிழ்ச்சியை அடைய இயற்கையை ரசிக்கலாம்,  காந்தி தாத்தா போல் கள்ளமில்லாமல் சிரிக்கும் மழலையை கண்டும்  மகிழலாம்.

சிரிக்கும் மலர்களைக் கண்டும் மனம் ஆறுதல் அடையலாம்

                                                                                 
வாழ்க வளமுடன்!

49 comments:

ஸ்ரீராம். said...


நிறைய படங்கள் எனக்குத் திறக்கவில்லை. பலநிறம் கொண்ட மலர்களின் அழகை அப்புறம் வந்து மறுபடி திறந்து ரசிக்கணும்.

ஸாதிகா said...

அருமையான படங்கள்.மிகவும் ரசித்தேன்.

Ramani S said...

மலர் வனம் கண்டு
கண்களும் மனதும் குளிர்ந்தது
அற்புதமான புகைப்படங்களுடன் கூடிய
அருமையான பகிர்வைத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 1

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் மலர்வது போல் நம் உள்ளமும் மலர வேண்டும் என்று சொன்னது மிகவும் அருமை... ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல... மலர்கள் அனைத்தும் அற்புதங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான பூப்போன்ற மிருதுவான பதிவு.

நிறைய படங்கள்.

அழகான விளக்கங்கள்.

அனைத்துமே அருமை.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

கண்கொள்ளாக் காட்சி.

தெரிந்த பெயர்களைப் பகிர்ந்து கொள்கிறேன்:

சூரிய காந்தி போல் இருப்பது Black-eyed Susan ( Rudbeckia hirta ).

அகல் விளக்கு என குறிப்பிட்டிருப்பது Anthurium அல்லது Flemingo.

அலங்கார விளக்கு.. Ball Shaped Cactus. அதிலும் பல வகை உண்டும். இந்த வகை Echinocactus_grusonii.

----

தாம்பாள இலைகளும் ஆம்பல் மலர்களும் மிக மிக அழகு:)!

துளசி கோபால் said...

அத்தனையும் அருமை.

பச்சைத் தாம்பாளம் (மட்டும்) நமக்கில்லை சொக்கா, நமக்கில்லை!

கோமதி அரசு said...

வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
சில படங்கள் திறக்க வில்லையா?
படங்கள் நிறைய இருப்பதாலா? அல்லது இணையம் மெதுவாக வேலை செய்கிறதா? தெரியவில்லையே!
படங்கள் நிறைய இருப்பதால் சின்னதாய் போட்டேன் பெரிதாக பார்க்க வேண்டும் என்றால் படத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கலாம். நேரம் கிடைக்கும் போது முழுவதும் பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், படங்களை ரசித்தமைக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன், உங்கள் வரவுக்கும் அருமையான உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Anonymous said...

வணக்கம்

பதிவுக்கு ஞானசம்மந்தரின் பாடல் ஒரு கவசமாக அமைந்துள்ளது பல பூக்கள் பதிவைஅலங்கரிக்கிறது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கீத மஞ்சரி said...

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஒவ்வொன்றும் கண்ணைப் பறிக்கும் அழகுவண்ணம். போன்சாய்க்காடு அழகு.
உண்மையான மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பதை அறிந்துவிட்டால் பின் மன வருத்தத்துக்கு இடமேது? சிறப்பான பகிர்வு. நன்றி மேடம்.

கரந்தை ஜெயக்குமார் said...

பூக்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
அருமை
அருமை

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை பூக்கள்.... பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

பகிர்ந்தமைக்கு நன்றிம்மா....

இராஜராஜேஸ்வரி said...

மலர்போலே மலர்கின்றதே மனம்
மலர்ந்த பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

கோவை2தில்லி said...

பூக்களும், இலைகளும் கண்களைக் கவர்கின்றன.

அனைத்தையும் கண்டு ரசித்தேன்.

பேரனின் ஆட்டமும்...:)

rajalakshmi paramasivam said...

மலர் வனம் கண்டு மன மகிழ்ந்தேன்.
பகிர்விற்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
மலர்கள், கள்ளிசெடிகளின் பெயர்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பெயருடன் செடிகள் இருக்கிறது . பெரிது செய்து பார்த்தால் சிலவற்றில் தெரியும். பெயர்களுடன் படம் எடுப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது.
மகனுடைய காமிராவில் மிக துல்லியமாக இருக்கிறது அந்த பச்சை தாம்பாளங்கள் .ஒருமுறை அவன் எடுத்த படங்களை பதிவில் போடுகிறேன்.
நன்றி.

கோமதி அரசு said...

வாங்க துளசி, வாழ்க வளமுடன்.
பச்சைத் தாம்பாளம் மொரிசியஸில் இதைவிட கொஞ்சம் சின்னதாய் பார்த்து இருப்பதாய் மகன் சொன்னான்.
இது மிகவும் பெரிது தான்.ஒரு சினிமாவில்
விஜயபுரிவீரன் என நினைக்கிறேன், அதில் பெரிய தாமரை பூ, பெரிய தாமரை இலையில் ஒரு குரூப் டான்ஸ் இருக்கும். நீலப்பட்டாடை கட்டி நிலவுஎனும் பொட்டும் வைத்து என்று. பெரிய இலைகளை பார்த்ததும் அந்த பாட்டு தான் நினைவுக்கு வந்தது.
உங்கள் வரவுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
நான் பதிவில் பகிர்ந்து கொண்ட பாடல் திருநாவுக்கரசர் பாடியது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
//உண்மையான மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பதை அறிந்துவிட்டால் பின் மன வருத்தத்துக்கு இடமேது?//

நீங்கள் சொல்வது உண்மைதான்.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று பூரண மது விலக்கு அல்லவா? அதற்காக அதை குறிப்பிட்டேன்.
இன்பம் எங்கே/ இன்பம் எங்கே ?என்று அலையும் சிலருக்காக.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
உங்கள் பின்னூட்டம் கண்டு மலர்போல மகிழ்ந்தேன். நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

மலர்கள் அத்தனையும் அழகு.
அருமையான பதிவு.
அகல்விளக்குப் போல என்றது ஐந்தூரியம் மலர்.
எவ்வளவு நிறங்களிவ் வைத்திருந்தோம் இலங்கையில்.
இனிய வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.

துளசி கோபால் said...

முதல் முறையா பாலித்தீவில் பச்சைத் தாம்பாளம் பார்த்தேன்:-)

Ranjani Narayanan said...

வண்ண வண்ண மலர்களும், பச்சை தாம்பாளங்களும் மனதை கவர்ந்தன. வெண்தாடி தாத்தா பூ தத்ரூபமாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.

கோமதி அரசு said...

வாங்க வேதா, இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
ஐந்தூரியம் மலர்
எவ்வளவு நிறங்களிவ் வைத்திருந்தோம் இலங்கையில்//

இத் தோட்டத்திலும், ரோஸ், வெள்ளை இருந்தது எடுத்தேன்,படங்கள் ஆனால் பகிர்ந்து கொள்ளவில்லை படங்கள் நிறைய ஆகி விட்டதால்.
உங்கள் வரவுக்கும்,இனிய வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க துளசி, வாழ்க வளமுடன்.
பாலித்தீவில் பார்த்து இருக்கிறீர்களா! பச்சைத் தாம்பாளத்தை மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

வங்க ரஞ்சனி நாராயாணன், வாழ்க வளமுடன்.
வெண் தாடி தாத்தா பூ நன்றாக இருக்கிறதா?
மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

எல்லாவற்றையும்விட, அந்த ‘தாம்பாள இலை’தான் கவர்கிறது! எத்தனை வண்ணங்கள்! என்னே அழகு! எந்த மலரின் இலை அது?

கொஞ்ச நாள் முன் ‘பிட்’ போட்டியில் இலைகள் தலைப்பு இருந்தது. அதற்கு அனுப்பப் பொருத்தமாக வித்தியாசமான இலை!!

இலைக்கு ‘தாம்பாள இலை’ என்பது உண்மைப் பெயரா, அல்லது ராமலக்ஷ்மிக்கா வைத்த பெயரா? :-)

தாடி வைத்த முதியவர் -வித்தியாசமான மலர்.

கோமதி அரசு said...

வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
//இலைக்கு ‘தாம்பாள இலை’ என்பது உண்மைப் பெயரா, அல்லது ராமலக்ஷ்மிக்கா வைத்த பெயரா? :-)//
உண்மை பெயர் தெரியவில்லை, நான் தான் அதற்கு ”இயற்கை அன்னை தந்த அழகியபச்சைத் தாம்பாளம்” என்று பெயர் வைத்தேன்.
தாடி வைத்த முதியவர் பூ வித்தியாசமாக இருந்ததால் தான் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

சீராளன் said...

மலர்களின் வண்ணங்கள் அருமை

மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்...!

கோமதி அரசு said...

வாங்க சீராளன், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Asiya Omar said...

படங்களும் பகிர்வும் மிக அருமை.மலர்கள் அனைத்தும் மிக அழகு.

கவியாழி கண்ணதாசன் said...

உண்மைதான்.அதுவும் சொந்த வீட்டுத்தோட்டத்தில் பூக்கும் பூக்களுக்கு மவுசே தனிதான்.மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்

கோமதி அரசு said...

வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், மகிழ்ச்சி, நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மகிழ்ச்சி, நன்றி.

Anonymous said...

ஒரே சமயத்தில் இவ்வளவு பூக்களைப்பார்க்கும்போது மனமும் கவலைகளை மறந்து மலர்கிறது...நன்றி அம்மா....

கோமதி அரசு said...

வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் மலர்கள் மகிழ்ச்சி தரும் உண்மை.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

அ. பாண்டியன் said...

அம்மாடியோவ் தங்கள் பதிவு மனசை லேசாக்கும் மலர்களின் வாசத்தை பகிர்ந்திருக்கிறதே! பகிர்வுக்கு நன்றி அம்மா.

கோமதி அரசு said...

வாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.

ஜீவி said...

பூ வனம்!

புத்துணர்வு பெற்றேன்.

நன்றி, கோமதிம்மா.

கோமதி அரசு said...

வாங்க ஜீவி, சார், வாழ்க வளமுடன்.
பூவனம்!
உங்கள் வலைத்தள பெயர் வந்து விட்டது மகிழ்ச்சி.
புத்துணர்வு தருவது மலர்களின் தன்மை அல்லவா!
உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.
மூன்று பதிவுகளுக்கும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.