என்னுடைய தங்கை குடும்பத்தினர் டிசம்பர் மாதம் இங்கு வந்திருந்தபோது தரங்கம்பாடி கடற்கரைக்குப் போய் இருந்தோம். அவள் நிறைய கோவில்களுக்கு போகும் திட்டத்தில் வந்து இருந்தாள் .அவளது விருப்பப்படி கோவில்களுக்குப் போய் வந்தோம். தங்கையின் மகள் கடற்கரைக்குப் போகவேண்டும் என்று விருப்பப்பட்டாள். அதனால் தரங்கம்பாடிக்குப் போனோம்
தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டத்தில் காரைக்காலிலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையிலிருந்து 25 கிலோமிட்டர் தொலைவிலும் தரங்கம்பாடி அமைந்துள்ளது.
கடல் அலைகளின் ஓசை பாடுவதைப்போல இனிமையாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாம்
தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, மியூசியம், மாசிலாமணி கோவில் எல்லாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டத்தில் காரைக்காலிலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையிலிருந்து 25 கிலோமிட்டர் தொலைவிலும் தரங்கம்பாடி அமைந்துள்ளது.
கடல் அலைகளின் ஓசை பாடுவதைப்போல இனிமையாக இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாம்
தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, மியூசியம், மாசிலாமணி கோவில் எல்லாம் பார்க்கலாம்.
தரங்கம்பாடியின் நுழைவாயில்-மெயின்கார்டு கேட் |
தரங்கம்பாடி --டேனிஷ் கோட்டை
-கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கியவணிகத் தலமாக இத்தரங்கம்பாடிக் கிராமம் இருந்தது. இங்கு டேனிஷ்காரர்களின் கோட்டை இருந்துள்ளது. கி.பி 1620-ல் தஞ்சாவூர் மன்னர் ரெகுநாதநாயக்கர் காலத்தில் டென்மார்க் அரசின் கடற்படைத்தளபதியான’ ஓவ்கிட்” என்பவர் இக்கோட்டையைக்கட்டியுள்ளார். 19ஆம் நூற்றாண்டு வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் வணிக மையமாக விளங்கியுள்ளது. 1977 முதல் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை ,பண்டைய சின்னமாக இக்கோட்டையைப் பாதுகாத்து வருகிறது.
1979 ஆம் ஆண்டு இக் கோட்டையில் இந்தியா. டென்மார்க் நாடுகளுக்கிடையே அரசியல், வணிக, பண்பாடு மற்றும் சமூகத் தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துச்செறிவுள்ள டேனிஷ் அகழ்வைப்பகம் அமைக்கப்பட்டது.
கோட்டையின் ஒரு பகுதி |
நாங்கள் அங்கு போனபோது மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தது. கோட்டைக்குள் நுழைந்த போது பெரும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
மழைவிட்ட பிறகு முடிந்தவரை படங்கள் எடுத்தோம். 2009 ஆம் வருடம் ஜூனில் கோட்டைக்கு நன்றாக ரெட் ஆக்ஸைடு அடித்து இருந்தார்கள். புதிதாக அழகாய் இருந்தது. இந்தமுறை போனபோது அது மாறி பழைய தோற்றம் தருகிறது.
கடலை நோக்கிய பீரங்கி |
2009 -- ல் நாங்கள் போனபோது எடுத்த படம் -டேன்ஸ்போர்க் கோட்டை
சிறைச்சாலை ,பண்டக அறைகள்
இந்தக் கோட்டையில் ஒருபக்கத்தில், கைதிகளைத் தூக்கில் இட்ட இடம் உள்ளது. தூக்கு தண்டனை நிறைவேறியவுடன் அந்த உடல் கடலில் சென்று சேர்வது போல் அடியில் நீர்வழி இருந்ததாக கூறுகிறார்கள். அதில் இப்போது நம் ஆட்கள் குப்பைகளைப் போட்டு வைத்து இருக்கிறார்கள்.
கோட்டையின் உட்புறத் தோற்றம் |
சுரங்கப் பாதை
மாசிலாமணி கோவில் பழைமையானது.,அக்கோயில் காலத்தாலும், கடல் சீற்றத்தாலும் சமீப காலத்தில் முற்றிலுமாக அழிந்து விட்டது. அதை இப்போது மீண்டும் புதிதாகக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கடல் அரிப்பைத் தடுக்க நிறைய கற்பாறைகளை கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். அனுமன் இலங்கை செல்வதற்குப் பாலம் கட்டியது போல் -நீண்ட பாதை போல் -கற்பாதைகள் அமைத்து இருக்கிறார்கள்.
மாசிலாமணிநாதர் கோயில்-புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்குக்காகக் காத்திருக்கிறது. |
எப்போது திறக்கும்?
கோவில் கும்பாபிஷேகம் ஆகும் முன்பே துவாரபாலகர் கை உடைக்கப்பட்டு இருக்கிறது.
|
நடைபாதை |
கடற்கரை விடுதி |
முன்பு கோவில் இருந்த இடத்தில் - இடிந்த கோவில் கட்டிடப்பகுதிகள் இருக்கும் இடத்தில் - இயற்கை அற்புதம் செய்துகொண்டு இருக்கிறது. இடிபாடுகளுக்கு இடையில் கடல் அலை மேலே எழுந்து கீழே இறங்கும்போது சொல்லமுடியாத அழகு! பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகு! அந்த இடத்தை விட்டு வரவே மனம் வரவில்லை.
கடற்கரைக்கு வரும் மனிதர்களை நம்பி இருக்கும் உயிரினங்கள்
சுடச்சுட கடலை வியாபாரம்
சீகன்பால்கு
என் தங்கை மகளுடன் நாங்களும் கடற்கரையை ரசித்து வந்தோம்.
---------------
தரங்கம்பாடி பற்றிய ஏராளமான படங்களும், விளக்கங்களும் அருமை.
பதிலளிநீக்குநேரில் போனால் கூட இவ்வளவு இடங்களையும் பார்த்து, இவ்வளவு விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான்.
அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
கோட்டையை சுற்றி அகழி இருந்தாகவும், கோட்டையில் நுழைய தூக்குப்பாலம் இருந்ததாகவும் கூறுகிறார்கள். அது இப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குகண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும் ..
காணொளிக்காட்சியும் அருமை..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
கோமதியக்கா,தரங்கம்பாடி கேள்விபட்டிருக்கேன்,ஆனால் நீங்கள் நேரில் அழைத்துச் சென்று காட்டி வந்து விட்டீர்கள்.அருமையான படங்கள்,அது மட்டுமல்லாது அலையின் ஓசையும் அழகும் உள்ள வீடியோ பகிர்வுக்கு நன்றி.சூப்பர் அக்கா.அழகான,அற்புதமான பகிர்வுகள்.
பதிலளிநீக்குதரங்கம்பாடி பற்றிய முழுத் தகவல்களுக்கு நன்றி...
பதிலளிநீக்குஅருமையான படங்கள் + காணொளி...
சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...
மிகவும் சுவாரஸ்யமான இடங்கள் என்று தெரிகிறது. படங்கள் கண்களையும் கவனத்தையும் கவர்கின்றன. பழைய கோவிலுக்குப் பக்கத்திலேயே புதிய கோவிலா?
பதிலளிநீக்குமறுபடி வந்து பார்த்து சென்றேன்.
நீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குமறுபடி வந்து பார்த்து சென்றதற்கு நன்றி, மகிழ்ச்சி.
சிதிலமடைந்த மாசிலாமணீஸ்வரர் ஆலயம் புதுப் பொலிவுடன் திகழ்வதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு அருமையான பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குதரங்கம் உண்மையாகவே பாடும் ஊர் எனவே இது தரங்கம்பாடி
தரங்கம்பாடி கோட்டை,கோயில் என அருமையாக இருக்கின்றது.
பதிலளிநீக்குகடல் எழுந்துவரும் காணொளி மிகஅழகு.
தரங்கம் பாடி பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது! சுவையான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குஆரம்ப பள்ளிப் படிப்பு காலத்திலிரு ந்தே பாடப்புத்தக வர்ணிப்புகள் பார்த்து தரங்கம்பாடி மீது கற்பனைகள் அதிகம். Tranquebar என்னும் பெயர் அந்த சிறுவயதில் மெஜஸ்டிக்குடன் மனத்தில் ஊர்வலம் போகும்.
பதிலளிநீக்கு70 வயதிலும் இன்னும் பார்க்கவில்லை யே என்கிற ஏக்கம். அழகான புகைப் படங்கள் பார்த்து இன்னும் அந்த ஏக்கம் கூடிற்று என்று தான் சொல்ல வேண்டும்.
அழகான உங்கள் அறிமுகத்திற்கு
மிக்க நன்றிம்மா.
தகவல்களுடன் அழகழகான படங்கள். கைதிகளின் தண்டனைக் குழி அச்சுறுத்துகிறது. காணொளியில் பொங்கும் அலையும் அதன் ஓசையும் அருமை. மிக நல்ல பகிர்வு கோமதிம்மா.
பதிலளிநீக்குஅருமையான படங்களுடன்கூடிய நல்லப் பதிவு
பதிலளிநீக்குகாரைக்காலில் இருந்த போது நிறைய முறை போயிருக்கிறேன்.
பதிலளிநீக்குபதிவை ரசித்துப் படித்தேன். தரங்கம்பாடியின் பின்புலம் ரொமப சுவாரசியமானது. டேனிஷ், பிர்ஞ்ச், ஆங்கில அரசுகள் இந்தியாவில் மையம் கொள்வதற்கும், கிழக்கு வங்காளம் மற்றும் அன்றைய இலங்கை (கண்டி மன்னர்) அரசில் டேனிஷ் காலனி அமைப்பதற்கும் தரங்கம்பாடி ஏதுவானது. சீகன்பால்கும் சுவாரசியமானவர். கால்நடை மற்றும் குதிரைப்பயணத்தில் தமிழகமெங்கும் பயணம் செய்து இந்து மதவாதிகளோடு தர்க்கம் புரிவாராம். கொஞ்சம் நிழலான செயல்களும் புரிந்திருக்கிறார்.
பாதியில் விட்ட சரித்திரத் தொடரை என்றைக்காவது எழுதிமுடிக்க வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பிட்ட பதிவு.
தரங்கம் பாடிக்கு அழைத்து சென்றதற்கு நன்றி படங்கல்மூலம் விளக்கம் மூலம்
பதிலளிநீக்குதரங்கம் பாடி பற்றிய பல தகவல்களை அறியத்தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபடங்கள் கண்களையும் மனதையும் ஈர்கின்றன.
காணொளிப்பதிவும் அருமை.
நல்லபதிவு. பகிர்வுக்கு மிக்கநன்றி சகோதரி!
வாங்க வை,கோபாலகிருஷ்ணன் சார்,வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமுதலில் வந்து உற்சாகம் தரும் பின்னூட்டம் அளித்தமைக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொன்னதற்கும் நன்றி சார்.
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு நன்றி.
வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குதரங்கம்பாடியை ரசித்தமைக்கு மகிழ்ச்சி.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள் கணொளியை ரசித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்கு//பழைய கோவிலுக்குப் பக்கத்திலேயே புதிய கோவிலா?//
பழைய கோவில் முற்றிலும் அழிந்து விட்டது.கடலுக்குள் இடிபாடுகள் தெரிகிறது அல்லவா? அங்குதான் முன்பு கோவில் இருந்தது. இப்போது சுற்றுலா விடுதிபக்கம் கட்டி இருக்கிறார்கள். வர வர நிலப்பகுதி குறைந்து கடல் பகுதி அதிகமாய் ஆகிறது. அதனால் இந்த கோவிலும் எவ்வளவு வருடங்கள் இருக்கும் என்று தெரியவில்லை.
கற்களால் அரண் அமைத்து இருக்கிறார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களுக்கு தரங்கம்பாடி மிகவும் தெரிந்த ஊர் என்று உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் தெரிகிறது.
//சிதிலமடைந்த மாசிலாமணீஸ்வரர் ஆலயம் புதுப் பொலிவுடன் திகழ்வதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.//
நீங்கள் முன்பு தரிசித்தமையால் தான் மாசிலாமணீஸ்வரர் ஆலயம் மறுபடியும் புதுப்பொலிவுடன் திகழவதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களுக்கு தரங்கம்பாடி மிகவும் தெரிந்த ஊர் என்று உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் தெரிகிறது.
//சிதிலமடைந்த மாசிலாமணீஸ்வரர் ஆலயம் புதுப் பொலிவுடன் திகழ்வதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.//
நீங்கள் முன்பு தரிசித்தமையால் தான் மாசிலாமணீஸ்வரர் ஆலயம் மறுபடியும் புதுப்பொலிவுடன் திகழவதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்கு//கடல் எழுந்துவரும் காணொளி மிகஅழகு.//
கோயில், கோட்டை, காணொளியை ரசித்தமைக்கு நன்றி.
வாங்க சுரேஷ், வாழ்கவ்ளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்கு//கடல் எழுந்துவரும் காணொளி மிகஅழகு.//
கோயில், கோட்டை, காணொளியை ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குதரங்கம்பாடி பார்க்க வாருங்கள். பார்த்து விட்டால் ஏக்கம் தீர்ந்துவிடும், பார்க்க வேண்டிய இடம் தான்.உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபடங்களையும், காணொளியை ரசித்தமைக்கு நன்றி.
//தண்டனைக் குழி அச்சுறுத்துகிறது.//
ஆம் ராமலக்ஷ்மி அந்தக்கால தண்டனைகள் மனதை கலங்கவைப்பது உண்மை.
வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்களுக்கு பதிவு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.
வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன். காரைக்காலிருந்து பக்கம் தரங்கம்பாடி இல்லையா! அதுதான் அடிக்கடி வந்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநாங்களும் உறவினர்களுக்காக அடிக்கடி போவோம்.
தரங்கம்பாடி பற்றிய மேலும் செய்திகள் சொன்னதற்கு நன்றி.
//பாதியில் விட்ட சரித்திரத் தொடரை என்றைக்காவது எழுதிமுடிக்க வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பிட்ட பதிவு. //
சரித்திர தொடர் படிக்க ஆவல்.
என் பதிவு உங்களுக்கு எழுதிமுடிக்க ஆசையை கிளப்பிவிட்டது என்று கேட்கும் போது மகிழ்ச்சி ,ஏற்படுகிறது.
விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் சரித்திர தொடரை.
நன்றி.
வாங்க பூவிழி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநீங்களும் தரங்கம்பாடி பார்த்துவிட்டீர்களா!
மகிழ்ச்சி, நன்றி.
வாங்க இளமதி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபதிவையும், காணொளியையும் ரசித்தமைக்கு நன்றி.
அருமையான பதிவு. சித்திரை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான காணொளி..தரங்கம்பாடி சென்றதில்லை. படங்களும் காணொளியும் தரங்கம்பாடிக்கு சென்று வந்த அனுபவம் தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா.
பதிலளிநீக்குகாரைக்காலுக்குப் பலமுறை சென்றிருந்தபோதும் தரங்கம்பாடிக் கோட்டையைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது இல்லை. இன்று தங்கள் மூலம் கோட்டையை பல கோணங்களிலும் கண்டுகளித்ததோடு ஏராளமான தகவல்களும் அறிந்துகொண்டேன். ஒரு மினி சுற்றுலாவே அழைத்துச் சென்றுவந்துவிட்டீர்கள். நன்றி மேடம்.
பதிலளிநீக்குதரங்கம்பாடிக்கு போயிருந்தால் கூட
பதிலளிநீக்குஇவ்வளவு நன்றாக பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!
அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்
அருமையான பகிர்வு. அழகாக சுற்றிக் காட்டி விட்டீர்கள். முடிந்த போது சென்று பார்க்க வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது.
பதிலளிநீக்குநான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி சுற்றுலாவில் இங்கே வந்திருக்கேன் ..மிக அழகான இடம்
பதிலளிநீக்கு.படங்கள் எல்லாம் அருமை ..
பள்ளி டூரில் செல்லும்போது புகைபடகாமராவேல்லாம் எடுத்து செல்லவில்லை ..அந்த குறை உங்க படங்களை பார்க்கும்போது நீங்கி விட்டது
மாமல்லபுரத்தை நினைவு படுத்துகிறது தரங்கம்பாடி. கடற்கரைகரை கோவிலும், அலைகளும் திகட்டாத அழகு.இடிபாடுகளின் மேல் அலைகளின் மோதல், அந்த ஓசை அற்புதம்!
பதிலளிநீக்குகும்பாபிஷேகம் ஆவதற்கு முன்பே சிலைகளின் கையை ஒடித்திருக்கிறார்கள் - கேட்கவே வருத்தமாக இருக்கிறது.
அருமையாக புகைப்படங்களுடன் தரங்கம்பாடியை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு.
அருமை அருமை.கடலே அழகு . அதைச் சுற்றி கரையையும் அழகு. கோட்டை அழகு. கோவில் வேறு. எல்லாம் அடங்கிய இவ்வளவு அற்புதமான இடத்தை நான் இத்தனை நாட்களாகப் பார்த்ததும் இல்லை. நீங்கள் கொடுத்திருக்கும் அழகு சுற்றுலா இலாக்காவில் கூட கிடைக்குமா தெரியாது. இப்பொழுதே போய்ப் பார்க்க ஆசையாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அழியாமல் இருக்கவேண்டும் என்றால் எவ்வளவு உறுதியாகக் கட்டி இருக்கவேண்டும். அதுவும் உப்புக் காற்று பட்டால் அரிப்பு இருந்திருக்கும். இந்தக் கோட்டையில் அதையும் காணோமே!! அதிசயக் கோட்டை. அழகான பெயர் தரங்கம்பாடி. சரித்திர நாட்களுக்கு அழைத்டுப் போய்விட்டீர்கள் கோமதி. பகிர்வுக்கு மிக மிக நன்றி.
பதிலளிநீக்குவாங்க ராதாராணி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சித்திரை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான காணொளி..//
சித்திரை வெயிலுக்கு குளிர்ச்சியாக இருந்ததா? மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குரோஷ்ணி பள்ளி விடுமுறைக்கு வாருங்கள் தரங்கம்பாடி பார்க்கலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குதரங்கம்பாடிகோட்டை, கடல், கோவில் எல்லாம் ரசித்தமைக்கு மகிழ்ச்சி. முன்பு கோட்டைக்குள் அனுமதி இல்லை. பராமரிக்கபடாமல் இருந்தது.கடலைமட்டும் பார்த்துவிட்டு வருவோம். இப்போது சிலவருடங்களுக்கு முன்புதான் நல்லகவனிப்பு கோட்டைக்குள் மக்கள் அனுமதிப்பு.
வாருங்கள் ஒருமுறை தரங்கம்பாடியை கண்டுகளிக்க.
உங்கள் வரவுக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி அக்கா.
தரங்கம்பாடி போகும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள் கோமதிம்மா......
பதிலளிநீக்குசுவையான பகிர்வு.
நாங்கள் சில வருடங்களுக்குமுன் சென்ற போது அனுமதி இல்லை.அந்தக் குறை நீங்கியது.காணொளிக்காட்சியும் படங்களும் பதிவும் அருமை.நன்றி அம்மா.
பதிலளிநீக்குதரங்கம்பாடி பற்றிய ஏராளமான படங்களும், விளக்கங்களும் அருமை.
பதிலளிநீக்குநேரில் போனால் கூட இவ்வளவு இடங்களையும் பார்த்து, இவ்வளவு விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான்.
அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்தும் நன்றியும்.
யும் etha.Elangathilakam
பதிலளிநீக்குகடல் அலையின் ஓசை கேட்டேன் மிக இனிமையாக இருந்தது அம்மா... தரங்கம்பாடி பற்றிய விளக்கம் அருமை அம்மா...
தரங்கம்பாடியை பற்றி அருமையாக விளக்கி உள்ளீர்கள் அம்மா.. படங்கள் அனைத்தையும் பார்த்தவுடன் நானும் தரங்கம்பாடிக்கு வந்து கடல் அலை ,
பதிலளிநீக்குமியூசியத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கண்டுகளித்தது போல் இருக்கிறது அம்மா... நல்ல அருமையான பதிவு...
வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குதரங்கம்பாடியை ரசித்து, கடல் அலை சத்தம் செய்வதை கேட்டு ரசித்து அருமையான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி ரஞ்சனி.
எவ்வளவோ காலத்துக்கு முன்பு கட்டிய கோவில்கள் எல்லாம் நாம் இன்னும் ரசித்து வருகிறோம்,ஆனால் இப்போது கட்டிய கோவில்கள் அதற்குள் இடிக்கப்படுகிறது, கட்டுமான பணிகள் தரமும் , நம் மக்களின் தரமும் குறைந்துவருவதை காட்டுகிறது. இதை எல்லாம் பார்க்கும் போது மனது வருத்தபடுவது உண்மை.
வாங்கவெங்கட், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குவாருங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு தரங்கம்பாடியின் அழகை ரசித்து செல்லலாம்.
வாங்க இந்திரா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமுன்பு வந்து இருக்கிறீர்களா?
இப்போது முன்பைவிட நன்கு இருக்கிறது .
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி இந்திரா.
வாங்க விஜிபார்த்திபன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குதரங்கம்பாடியை ரசித்து இரண்டு பின்னூட்டங்கள் அளித்தமைக்கு நன்றி விஜி.
இன்று தான் கமெண்ட் போட் முடிந்தது,
பதிலளிநீக்குஅழகாக சூப்பரான இடங்களுக்கு அழைத்து சென்று சுட சுட கடலையும் வாங்கி கொடுத்துட்டீங்க , மிக அருமையான பகிர்வு
தரங்கம்பாடி வரலாற்று சிறப்பு மிக்க ஊராச்சே.அனுபவ்வபகிர்வும் படங்களும் பிரமாதம்.
பதிலளிநீக்குவாங்க ஜலீலா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇனி துள்ளி குதிக்காது என் வலைத்தளம் சரி செய்து விட்டேன்.
நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் வரலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஜலீலா.
வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபதிவையும், படங்களையும் பாராட்டியதற்கு நன்றி.
அலை வந்து அழைக்கும் கடலை அழகான படங்களாலும் வர்ணனைகளுடனும் தந்தீர்கள். வெகுவாக கவர்ந்தது படங்கள். அருமைங்க.
பதிலளிநீக்குவாங்க சசிகலா, வாழகவளமுடன்.பதிவை பாராட்டியதற்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கு நன்றி..
வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.உங்கள் பின்னூட்டத்தை சரியாக மெயிலில் காட்டவில்லை. நீங்கள் சொன்னதால் கண்டுபிடித்து போட்டு விட்டேன். தாமதமாய் பின்னூட்டம் பப்ளிஷ் செய்ததற்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஅருமையான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.
வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகீதமஞ்சரியால் உங்கள் பின்னூட்டமும் கிடைத்தது ராஜி பின்னூட்டம் போடாமல் இருக்க மாட்டார்களே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், இப்போது தான் பப்ளிஷ் செய்தேன்.
அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.
வாங்க வேதா, இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க ஏஞ்சலின், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்கு//பள்ளி டூரில் செல்லும்போது புகைபடகாமராவேல்லாம் எடுத்து செல்லவில்லை ..அந்த குறை உங்க படங்களை பார்க்கும்போது நீங்கி விட்டது//
பள்ளி டூரில் தரங்கம் பாடி பார்த்தீர்களா? அப்போது பார்த்த தரங்கம் பாடிக்கும் இப்போது உள்ளதுதற்கும் மாற்றங்கள் எப்படி?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
இப்போத்ய் தான் பார்த்தேன். மிக நன்றாக இட்டுள்ளீர்கள். சரித்திர நூல்களின் ஆசிரியர் என்ற முறையிலும் ஆய்வாளன் என்ற முறையிலும் வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குநரச்ய்யா
வணக்கம் நரசய்யா சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநான் ஊருக்கு போய் இருந்தேன் உங்கள் பின்னூட்டத்தை பார்க்க வில்லை.
உடன் பதில் தர முடியவில்லை மன்னிக்கவும்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கோமதிக்கா முனைவர் ஐயா தளத்திலிருந்து இங்கு வருகை.
பதிலளிநீக்குஹையோ செமையா இருக்கு படங்கள்....அதுவும் அந்த இடிபாடுகளைத் தாண்டி அலை எழும்பி வழிவது அழகோ அழகு. காக்கைகள் கல்லில் அமர்ந்திருக்கும் படம் பைரவர் மாடு செல்லம் எல்லாம் அழகு. நானும் விசாகப்பட்டினக் கடற்கரையில் அலை பாறையில் நிற்கும் ஒருவரைச்சூழ்ந்து தெரிப்பது எடுத்திருக்கிறேன்....குறிப்பு எழுதும் போது பகிர்கிறேன்...எப்போது எழுதப் போகிறேனோ...
கோட்டை பற்றிய விவரணங்கள் எல்லாமே வெகு வெகு சிறப்பு. கோட்டை உள் பக்கம் எல்லாம் எடுத்த புகைப்படங்கள் ரொம்ப அழகாக இருக்கிறது.
நிஜமாவே உங்கள் பதிவு தரங்கம்பாடி சென்று வரும் ஆசையைத் தூண்டிவிட்டது.
பதிவு செம
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குமுனைவர் ஐயா தளத்தில் சுட்டி மூலம் இங்கு வந்து விட்டீர்களா! மகிழ்ச்சி.
பூம்புகார் கடற்கரையில் பாறைகளால் அரண் கட்டியவுடன் கடல் மண் நன்றாக இல்லை. அதனால் குழந்தைகள் (பேரன் , பேத்தி) வந்தால் கடற்கரை
பார்க்க தரங்கம்பாடி வர ஆரம்பித்து விட்டோம். கோட்டை வரை தண்ணீர் வந்து விட்டது. அடுத்த முறை போகும் போது எப்படி இருக்குமோ தெரியாது.
படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.