செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இளமையின் ரகசியம் - தீராக் கற்றல்






  கற்றல் என்பது தாயின் கருவறையிலிருக்கும் போது இருந்தே ஆரம்பித்து விடுகிறது. வயிற்றில் இருக்கும் போதே குழந்தை  சத்தங்களை உணர்ந்து கொள்கிறது. 
      திருமணம் செய்து குடும்பம் என்று ஆனவுடன் கணவன், குழந்தைகள் என்று அவர்களுக்காக வாழ்ந்த அம்மா, அவர்களுக்கு எல்லாம் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்ட பின்  தன்னைக் கொஞ்சம் பார்க்க ஆரம்பிக்கிறாள்.  குழந்தைகள் எல்லாம் இப்போது பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாத காலச்சூழ்நிலை. முதலில் அதை அம்மா ஏற்றுக் கொள்கிறாள்.  குழந்தைகளை நாம் பார்க்க முடியாதே, நமக்கு உடம்புக்கு ஏதாவது வந்தால் உடனே வந்து பார்க்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்காமல்  அவர்கள் வாழ்க்கையை அவர்கள்  நன்றாக வாழவேண்டும், நம் பாசத்தால் அவர்களைக் கட்டிப் போடக்கூடாது என்பதில் இப்போது உள்ள தாய்மார்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாம்  நன்றாக இருந்தால் தாம் தூரத்தில் இருக்கும் நம் குழந்தைகள் நிம்மதியாக வேலைப்பார்க்கலாம், அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்க தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்கள்  வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் (மாற்றி யோசி) . தங்களை சுறு சுறுப்பாய் வைத்துக் கொள்ள ஏதாவது  படிக்க ஆசைப்படுகிறார்கள். முன்பு  படிக்க முடியாமல் போனதைப் படிக்கிறார்கள்.  எந்த வயதிலும் படிக்கலாம், மனம் இருந்தால் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.

       நம்மிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. கற்கும் ஆசை உள்ள தாய்மார்களுக்கு  குருவாக  குழந்தைகள், பேரன், பேத்திகள் சொல்லித்தரத்தயாராய் இருக்கிறார்கள்.  இவர்களிடம் என்ன படிப்பது என்று எண்ணத்தை தள்ளி வைத்துவிட்டு  மாணாக்கர்களாய் சேர்ந்து  நிறையக் கற்றுக் கொள்கிறார்கள்.முதலில் கணினி இயக்க கற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் மிக அவசியமான தேவைகளில் கணினிப் படிப்பும் ஒன்று என்று ஆகி விட்டது. வெளி நாட்டில், வெளியூரில் வாழும் குழந்தைகளை முதலில் நேரில் பார்த்துப் பேச, அவர்கள் நம்மைப் பார்க்க, கணினி இன்றியமையாத தேவை ஆகிறது.  பிறரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் தாமே கற்றுக்கொண்டு அதை இயக்கி அவர்களுடன் உரையாடுகிறார்கள்.  

       இப்போது யாரும் கடிதம் எழுதுவது இல்லை. ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுத வீட்டு முகவரி வாங்கிக் கொண்ட காலம் மாறி, உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள் என்று கேட்டு வாங்கும் காலம் ஆகி விட்டது.  அதனால் நமக்கு என்று மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொண்டு  வீட்டுப்பண்டிகைகளில் எடுத்த படங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தபோது அவர்களுடன் எடுத்த படங்கள் என்று தங்கள் பிள்ளைகளுடன் பகிரும் போது அவர்களுக்கும் உறவினர்களிடம்  உள்ள நெருக்கம் அதிகமாவதை உணர்கிறார்கள். இதை உண்மை என உணர்த்தும்  அம்பாளடியாள் எழுதிய கவிதை

உறவெல்லாம் வலைத்தளத்தில்
ஒளிந்திருக்கு ஆச்சி இனிமேல்
உனக்கும் தான் இது தேவைப்படும்
ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொள்ளு ஆச்சி !.....

மலருக்கு கலியாணம் அது
நடந்திடுச்சு ஆச்சி இப்போ
மணமக்களின் புகைப்படத்தை
இப்படிப் பார்க்க வேண்டும் ஆச்சி

மருமகனின் பெயரோடு உன்
பேத்தி பெயரைச் சேர்த்து
முகப் புத்தகக் கணக்கினுள்ளே
அந்த முகவரியைத் தேடு
நட்புக்கு அழைப்பொன்று
நீ கொடுத்தால் போதும்
நாங்கள் எல்லாம் அவர்களுடன்
நின்ற படம் தோன்றும் !....

மறக்காமல் லைக்கு மட்டும்
போட்டு விடு ஆச்சி அதையே
மற்ற எங்கள் சொந்தங்களுக்கும்
நீயே கற்றுக் கொடு ஆச்சி...........!!!//

http://rupika-rupika.blogspot.com/  ஆச்சிக்கு பேத்தி கற்றுக் கொடுத்து ஆச்சி தன் சொந்தங்களை  இணையத்தில் பார்த்து மகிழப் பேத்தி சொல்லித் தருகிறாள்.  மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்கிறாள். கருத்து சொல்ல நேரம் இல்லாமல் லைக் மட்டும் போட்டுவிட்டு ஓடும் காலத்தை  அழகாய் தன் கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறார்.



          சமீப காலமாய் பெண்களின் திறமைகளை வெளிக் கொண்டுவவரப் பத்திரிக்கைகள் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பெண்களுக்கு போட்டிகள் எல்லாம் 
நடத்துகிறார்கள்  வயது வித்தியாசம்  இன்றி கலந்துகொண்டு தங்கள் திறமையை  வெளிக்காட்டுகிறார்கள். வயதானவர்கள் கூட ,ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். வினாடி வினாவிற்கு பதில் சொல்கிறார்கள். வெற்றி கீரிடம் அணிந்து கொள்கிறார்கள். எல்லாத் 
துறையிலும் இப்போது முதியவர்களும் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். வயதானவர்களுக்கு எப்போதெல்லாம் சாதிக்கும் கனவு வருகிறதோ அப்போதெல்லாம் முடித்துக் காட்டுகிறார்கள். அதற்கு அவர்களின் முயற்சியே கை கொடுக்கிறது. முதுமையை நினைத்து மூலையில் ஒதுங்காமல் தன்னாலும் முடியும் என்று சாதித்துக் காட்டுகிறார்கள். இணைய வழி நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் .  பத்திரிக்கை, தொலைக்காட்சி முதலியவற்றில் சாதனைப் பெண்களின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. அவர்கள் எப்படி சாதித்தார்கள் என்பதை எல்லாம் அறியும்போது பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுகிறது.

வயதானவர்கள் நிறைய எழுதுகிறார்கள், இணையத்தில். வயது ஆக ஆக  ”மெமரி லாஸ் ” பிரச்சனை வரும் என்கிறார்கள்  மருத்துவர்கள்  அதற்கு நிறைய புத்தகங்கள் படிக்கச் சொல்கிறார்கள்.  நாளைடைவில் இந்த பிரச்சனை சரியாகி விடும் என்கிறார்கள் அதற்கு இணையம் கை கொடுக்கும், அவர்களுடம் பேச ஆள் இல்லை என்றால் அதற்கு இணையம் ஒரு நல்ல துணை. ஏதாவது கதை,கட்டுரை தன்  வாழ்க்கையில் கிடைத்த அனுபவம், தனக்குத் தெரிந்த சமையல் கலை, தையல் கலை, மற்றும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா விமர்சனம் , பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறார்கள். அதைப் படித்து கருத்து சொல்பவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். பாராட்டு ஒரு நல்ல டானிக். அது அவர்களை நாள் முழுவதும்  உற்சாகத்தோடும் மனபலத்தோடும் வாழவைக்கும் மருந்து ஆகிறது.  மெமரி லாஸும் போய் சிறு வயது நினைவுகள் எல்லாம் வருகிறது. பலருடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வாய் இருக்கிறார்கள். நண்பர்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது புதிதாய்க்  கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். தன்  உடல்  குறையையே எப்போதும் கூறிக்  கொண்டு இருக்காமல்  குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள்,  தனக்கு தெரிந்த கைவைத்தியம், உடலோம்பல் முறைகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

இப்போது உடல் ஆரோக்கியத்திலும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது பெண்களிடம். வீட்டில் எல்லாம் இயந்திரமயமாய் போய் விட்டதால் உடல் உழைப்பு அதிகம் இல்லை. பயன்படுத்தபடாதபொருள் துருபிடித்து போவது போல் நம் உடலுக்கு ஏற்ற அசைவுகள் இல்லாத போது அந்த உறுப்புகளில் ஒரு இறுக்கம் ஏற்பட்டு அங்கு இரத்தஓட்டம், வெப்பஓட்டம், காற்றோட்டம்  குறைகிறது. வலி ஏற்படுகிறது அந்த வலி நாளைடைவில் பெரிதாகி வியாதியாக மாறுகிறது மருத்துவரிடம் போனால் எலும்பு தேய்மானம் என்கிறார். உடற்பயிற்சிகள் செய்யுங்கள் என்கிறார். அதனால் இப்போது எளிய முறை  உடல் பயிற்சிகள், உடலுக்கும், மனதை நன்றாக வைத்துக் கொள்ள தியானமும் கற்றுக் கொள்கிறார்கள்.  

      பயிற்சிகள் உடலை ஆரோக்கியமாய் வைக்கிறது நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. ஒரு செயலை கவனத்துடன் செய்யும் போது அதை நாம் மறப்பது இல்லை மனம் ஒன்றாமல் செய்யும் செயல் நம் நினைவில் நிற்பது இல்லை..உடற்பயிற்சிகள் செய்யும் போதும் தியானம் செய்யும் போதும் கவனத்துடன் செய்கிறோம் மனம் அதில் ஒன்றும் போது நலம்பல விளைகிறது. எந்த வேலை செய்தாலும் அதில் முழுமனசோட இருந்தால் 
அதில் வெற்றியும் மகிழ்ச்சியும் வந்து சேரும் என்பத நன்கு உணர்ந்து வருகிறார்கள்.சிந்தனை ஒருமுகப்படும் போது மன இறுக்கங்கள் மறைந்து எந்தவேலை எடுத்துக் கொண்டாலும்  சிறப்பாக செய்ய முடிகிறது. 

தான் கற்றதை அதனால கிடைத்த நன்மைகளை பிறருக்கு சொல்லும் போது  அவர்களும் பயன் பெறுகிறார்கள். நாம் சொல்லி அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன் தான் பெற்ற இன்பத்தை  மற்றவர்களுக்கு பயிற்றுவைக்கும் ஆசிரியர்களாய் மாறுகிறார்கள்.  தோற்றத்தில் இளமையாக இருக்க வேண்டும் என்பதைவிட மனதில் இளமையாக இருக்கவேண்டும். இளமையாக இருக்க வேண்டும் என்றால் நாள்தோறும் ஏதாவது புதிதாக கற்க வேண்டும், அல்லது கேட்க வேண்டும்.அது வாழ்கையை நல்லபடியாக நடத்தி செல்ல உதவும்.நல்ல மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சி அலைகளை பரப்பிவரும் பெண்களே எல்லோராலும் விரும்பபடுகிறார்கள். இந்தக்கலாத்தில் பொன்நகை அணிந்து போகாமல் புன்னகை அணிந்து போவது மிகவும் நல்லது என்பதையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் பெண்கள். 

கடந்து போனகாலம் இனி மறுபடியும் வாராது இருக்கும் கணங்கள் தான்  நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம். கற்றலும், கேட்டலும் நம் வாழ்வை வளம் பெறச் செய்யும் முதுமைத் துன்பம்,  உடல் துன்பம் எதுவும் இருக்காது. முதுமையிலும்  இன்பம் காணலாம்.


 சித்திரை  முதல் நாளில்  ’ பண்புடன் ’  இணைய இதழுக்காக  நான் எழுதிய  கட்டுரை.
நன்றி  சிறப்பாசிரியர் முத்துலெட்சுமி.

பண்புடன்



64 கருத்துகள்:

  1. எப்போதும் கற்றுக்கொள்ளுதல் வயதானாலும் இளமைக்கு வழி வகுக்கும் என்று அழகாக சொல்லி விட்டீர்கள்
    அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து மேடம் நன்றி

    பதிலளிநீக்கு
  2. கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதையும், வாழ்வை சுவாரஸ்யமாக்கிக் கொள்ள வாழ்நாள் முழுவதும் கற்றல் வேண்டும் என்பதையும், பகிர்வதால் உண்டாகும் பயனும் மகிழ்ச்சியும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

    சிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் பல... நன்றி...

    பதிலளிநீக்கு

  3. ok. ok. படிக்க ஆரம்பிச்சுட்டேன்.

    சுப்பு தாத்தா

    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. தலைப்பும் அதை விளக்கிய விதமும் வெகு அழகு கோமதிம்மா. அம்பாளடிகள் கவிதையும் இரசிக்க வைத்தது. பண்புடன் இதழிலேயே வாசித்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. படிப்பதற்கோ, எதையும் கற்றுக் கொள்வதற்கோ வயது ஒரு தடைஇல்லை என்று உணர்கவைக்கும் பதிவு.அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    வாழ்த்துக்கள். தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  6. படமும் (சுவர்க் கடிகாரம் லேசான அவுட் ஆஃப் ஃபோகஸில் லேசான கோட்டோவியமாக...அழகு), படமுள்ள பதிவும், பதிவிலுள்ள கருத்தும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  7. முதலில் வரையப்பட்டுள்ள படம் மிக அழகாக உள்ளது.

    முதலில் தங்கள் ஓவியக்கணவருக்கு என் பாராட்டுக்கள்.

    உங்களுக்கான பாராட்டு பிறகு சற்று தாமதமாக வந்து தரப்படும்.

    >>>>>>

    பதிலளிநீக்கு
  8. //நம்மிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. கற்கும் ஆசை உள்ள தாய்மார்களுக்கு குருவாக குழந்தைகள், பேரன், பேத்திகள் சொல்லித்தரத்தயாராய் இருக்கிறார்கள்.//

    உண்மை. உண்மை. உண்மை.

    நான் என் 8 வயது பேத்தியுடமும், 4 வயது பேரனிடமும் [5 வருடங்கள் முன்பு] கற்றுக்கொண்டது ஏராளம்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. //அதனால் நமக்கு என்று மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொண்டு வீட்டுப்பண்டிகைகளில் எடுத்த படங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தபோது அவர்களுடன் எடுத்த படங்கள் என்று தங்கள் பிள்ளைகளுடன் பகிரும் போது அவர்களுக்கும் உறவினர்களிடம் உள்ள நெருக்கம் அதிகமாவதை உணர்கிறார்கள்//

    ஆம், இது எவ்வளவு வசதியாக உள்ளது!! மின்ன்ல் வேகத்தில் அனைத்துத்தகவல்களும், படங்களும்
    உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள முடிகிறதே!!!

    இந்தக்காலத்தை நினைத்தாலே இன்பமாக உள்ளது.

    அந்தக்காலம் போதுமே ! லெட்டர் எழுதி அசந்து போகும். போய்ச்சேர பலநாட்கள் ஆகும். சில சமயம் எங்கேயாவது சிக்கி மாதக்கணக்கில் ஆகி பிறகு போய் சேரும்.

    என்னிடம் ஒரு போஸ்ட்கார்டு, முழுவதும் மழையில் நனைந்து வந்துள்ளது. அதில் உள்ள செய்தி என்ன என்றே படிக்க முடியவில்லை.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. //அவர்களுடம் பேச ஆள் இல்லை என்றால் அதற்கு இணையம் ஒரு நல்ல துணை.

    ஏதாவது கதை,கட்டுரை தன் வாழ்க்கையில் கிடைத்த அனுபவம், தனக்குத் தெரிந்த சமையல் கலை, தையல் கலை, மற்றும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா விமர்சனம் , பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறார்கள். அதைப் படித்து கருத்து சொல்பவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். பாராட்டு ஒரு நல்ல டானிக். அது அவர்களை நாள் முழுவதும் உற்சாகத்தோடும் மனபலத்தோடும் வாழவைக்கும் மருந்து ஆகிறது.//

    வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
    மிகச்சரியான டானிக் என்பதில் ஐயம் இல்லை. அது தான் உண்மை.

    // மெமரி லாஸும் போய் சிறு வயது நினைவுகள் எல்லாம் வருகிறது. பலருடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வாய் இருக்கிறார்கள். நண்பர்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது புதிதாய்க் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். தன் உடல் குறையையே எப்போதும் கூறிக் கொண்டு இருக்காமல் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள், தனக்கு தெரிந்த கைவைத்தியம், உடலோம்பல் முறைகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கிறார்கள்.//

    சூப்பர். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  11. //சிந்தனை ஒருமுகப்படும் போது மன இறுக்கங்கள் மறைந்து எந்தவேலை எடுத்துக் கொண்டாலும் சிறப்பாக செய்ய முடிகிறது. //

    ஆம். வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

    //சித்திரை முதல் நாளில் ’ பண்புடன் ’ இணைய இதழுக்காக நான் எழுதிய கட்டுரை.
    நன்றி சிறப்பாசிரியர் முத்துலெட்சுமி.//

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மிகச்சிறந்த அனுபவக்கட்டுரை எழுதி, பதிவிட்டு பகிர்ந்துள்ளதற்கு, என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.

    அன்புடன் VGK


    பதிலளிநீக்கு
  12. பல அற்புதமான விஷயங்களை கூறியுள்ளீர்கள் .
    பாட்டிக்கு ஆசானாய் பேத்தி computer சொல்லித்தரும் படம் அழகாயிருக்கு :))
    நிறைய வீடுகளில் இப்போ நடக்கும் விஷயம் சித்திரமாகியிருக்கு :))

    பதிலளிநீக்கு
  13. எடுத்துக் கொண்ட விஷயத்தை கோர்வையாக ஒரு கட்டுரை போல விளக்கியிருக்கிறீர்கள். இதற்கே மனவளமும், தனி சாமர்த்தியமும் தேவை.அதற்கு என் கைத்தட்டல்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. முதுமையில் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வழிகளுள் ஒன்று புதிதாய் ஏதாவது ஒரு மொழியையோ, கைத்தொழில் போன்ற கலைகளையோ கற்றல். இப்போது இணையப்பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் அடுத்தத் தலைமுறையோடு தொடர்பு கொள்ள கணினி அறிவு சிறிதளவாவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். முதுமையில் பெண்களைப் படுத்தும் உடலியல் மனவியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக இவற்றையும் இன்னும் பல உபயோகமுள்ள தகவல்களையும் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி மேடம். அம்பாளடியாளின் கவிதை ரசிக்கவைத்தது. இன்றைய நிலையை மிக அழகாக கவிதையாக்கியுள்ளார். மிகவும் பயனுள்ள இக்கட்டுரை பண்புடன் இணைய இதழில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் மேடம். அழகிய கோட்டோவியம் ரசிக்கவைத்தது.

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான கட்டுரை. படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை எனச் சொல்லும் உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.....

    கடிதங்கள் எழுதுவது மறந்து போய்விட்ட ஒன்று. மின்னஞ்சல் கூட சுருக்கி எஸ்.எம்.எஸ். காலமாகிவிட்டது....

    சிறப்பான கட்டுரைப் பகிர்வுக்கு நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  16. தங்கள் இந்தப் பதிவின் மூலமும்
    நிறையக் கற்றுக் கொண்டேன்
    பயனுள்ள மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் நன்றாக வாழவேண்டும், நம் பாசத்தால் அவர்களைக் கட்டிப் போடக்கூடாது என்பதில் இப்போது உள்ள தாய்மார்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாம் நன்றாக இருந்தால் தாம் தூரத்தில் இருக்கும் நம் குழந்தைகள் நிம்மதியாக வேலைப்பார்க்கலாம், அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்க தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்

    (மாற்றி யோசி) . பல அரிய நிதர்சனங்களைப் பண்புடன் பட்டியலிட்ட அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  18. அறிவை வளர்த்துக்கொள்ள அத்துணை பேருக்கும் உரிமை உண்டு,

    பதிலளிநீக்கு
  19. //கடந்து போனகாலம் இனி மறுபடியும் வாராது இருக்கும் கணங்கள் தான் நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம். கற்றலும், கேட்டலும் நம் வாழ்வை வளம் பெறச் செய்யும் முதுமைத் துன்பம், உடல் துன்பம் எதுவும் இருக்காது. முதுமையிலும் இன்பம் காணலாம்.//

    ரொம்ப சரியா சொன்னீங்க மிக சிறந்த கட்டுரை சகோதரி மிக அருமையா கவனமுடன் எழுதி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி கட்டுரை பத்திரிகையில் வெளியிட்டத்ற்கு பாராட்டுகள் சகோ அம்பாளடியால் கவிதை மிக அழகு சேர்த்தது கட்டுரைக்கு

    பதிலளிநீக்கு
  20. வாங்க முரளிதரன், உங்கள் முதல்வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க சுப்பு சார், வாழ்கவளமுடன்.நீங்கள் என்றும் இளமையானவர் தான். இதில் சந்தேகம் இல்லை, பாட்டு, கவிதை, கதை, என்று சகலகலாவல்லவர் அல்லவா!
    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி. சாரின் ஓவியம் எப்படி இருக்கிறது சொல்லவில்லையே!
    அம்பாளடியாள் கவிதை அனைவருக்கும் பிடிக்கும் எனபதால்தான் பகிர்ந்து கொண்டேன்.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க ஸ்ரீராம்.வாழ்கவளமுடன்.
    சாரின் ஓவியத்தை ரசித்து பாராட்டியதற்கு நன்றி,பதிவையும், பதிவில் உள்ள கருத்தையும் ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. 1.வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    முதலில் கணவரின் ஓவியத்தை பாராட்டியதற்கு எங்களின் நன்றி.

    2.பேரன், பேத்திகளிடம் கற்றுக் கொள்ள ஏராளாமாய் இருக்கிறது அதில் மகிழ்ச்சிதான் நமக்கு.
    3.//அந்தக்காலம் போதுமே ! லெட்டர் எழுதி அசந்து போகும். போய்ச்சேர பலநாட்கள் ஆகும். சில சமயம் எங்கேயாவது சிக்கி மாதக்கணக்கில் ஆகி பிறகு போய் சேரும்.

    என்னிடம் ஒரு போஸ்ட்கார்டு, முழுவதும் மழையில் நனைந்து வந்துள்ளது. அதில் உள்ள செய்தி என்ன என்றே படிக்க முடியவில்லை.//

    அந்தக் காலத்தில் கடிதம் எதிர்பார்த்து காத்து இருந்தோம். விடுமுறை நாட்களில் கடிதம் வராது. மழையில் நனைந்து செய்திகள் அழிந்து என்று இயற்கை இடையூர்கள் வேறு !
    இப்போது கவலை இல்லை. இணையம் மட்டும் சரியாக இயங்கினால் போதும் எல்லாம் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம்.
    4.//மிகச்சரியான டானிக் என்பதில் ஐயம் இல்லை. அது தான் உண்மை.//

    உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் அல்லவா நாம்,
    //சூப்பர். ஸ்பெஷல் பாராட்டுக்கள்//

    பாராட்டுக்களுக்கு நன்றி சார்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    //அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மிகச்சிறந்த அனுபவக்கட்டுரை எழுதி, பதிவிட்டு பகிர்ந்துள்ளதற்கு, என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.//

    உங்கள் இனிய நல்வாழத்துக்களுக்கும். அனுபவ கட்டுரையை பாராட்டியமைக்கும் நன்றிகள் பல.
    பின்னூட்டங்கள் 5 அளித்து உற்சாக டானிக் அளித்த உங்களுக்கு நன்றிகள்.





    பதிலளிநீக்கு
  27. சிறந்த இடுகை பண்புடனிலும் வாசித்தேன் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஏஞ்சலின், வாழ்கவளமுடன்,
    பதிவையும், என் கணவரின் ஓவியத்தையும் பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கைத்தட்டல்களுக்கும்,
    வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    .

    பதிலளிநீக்கு
  30. வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
    உங்கள் விரிவான பின்னூட்டம் மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது.
    அம்பாளடியாள் கவிதை இன்றைய நிலையை கூறுவதால் தான் அதை பகிர்ந்து கொண்டேன்.
    என் கணவரின் கோட்டோவியம் ரசித்தமைக்கு நன்றி.
    பதிவை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க வெங்கட், வாழகவளமுடன்.
    //கடிதங்கள் எழுதுவது மறந்து போய்விட்ட ஒன்று. மின்னஞ்சல் கூட சுருக்கி எஸ்.எம்.எஸ். காலமாகிவிட்டது....//

    நீங்கள் சொல்வது சரிதான். எஸ்.எம்.எஸ் காலமாகிவிட்டது.
    உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.
    நாம் எல்லாம் வாழக்கை அனுபவ பாடத்தை நாள்தோறும் படித்து வருபவர்கள் தானே!
    பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    //(மாற்றி யோசி) . பல அரிய நிதர்சனங்களைப் பண்புடன் பட்டியலிட்ட அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...//

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வாங்க கவியாழி, கண்ணதாசன்.
    வாழ்கவளமுடன்.

    //அறிவை வளர்த்துக்கொள்ள அத்துணை பேருக்கும் உரிமை உண்டு,//

    நீங்கள் சொல்வது உண்மை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வாங்க பூவிழி, வாழ்கவளமுடன்.

    //ரொம்ப சரியா சொன்னீங்க மிக சிறந்த கட்டுரை சகோதரி மிக அருமையா கவனமுடன் எழுதி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி கட்டுரை பத்திரிகையில் வெளியிட்டத்ற்கு பாராட்டுகள் சகோ அம்பாளடியால் கவிதை மிக அழகு சேர்த்தது கட்டுரைக்கு//
    நீங்கள் சொன்னது சரி அம்பாளடியாள் கவிதை அழகுதான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி பூவிழி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க ஷைலஜா, வாழ்க வளமுடன்.
    //சிறந்த இடுகை பண்புடனிலும் வாசித்தேன் பாராட்டுக்கள்//

    உங்கள் வரவுக்கும் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. இளமையின் ரகசியம் இதுதான் என்றால் பின்பற்றுவதில் என்ன தடை.
    வெகு அழகான் படம். கோட்டோவிய நிபுணருக்கு வாழ்த்துகள். அம்பாளடியாரின் கவிதையும் சூப்பர்.
    உங்கள் கருத்துகளாணித்தரமாகப் பதிந்துவிட்டது மனதில்.''பண்புடன்'' குழுமத்தில் வெளிவந்தது பற்றி வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  38. அருமை!!!!!!

    காலையில் எழுந்ததும் கணினி.

    அதில்தான் படிப்பு:-)

    எழுத ஆரம்பித்தபின் புதிதாய்ப் பிறந்தேன் என்பதே உண்மை!

    பதிலளிநீக்கு
  39. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்களே ஒருமுறை சொன்னீர்கள் நமக்கு எல்லாம் ஒய்வு என்பது கணினி தான் என்று. நமக்கு எல்லாம் மனம் நிறைவு தருவது கணினிதானே!
    அம்பாள்டியாளின் கவிதை பிடித்திருக்கா? மகிழ்ச்சி.என் கணவருக்கு உங்கள் வாழ்த்தை சொல்லிவிட்டேன் மகிழ்ந்தார்கள்.உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க துளசி, வாழ்கவளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பாரதியாரின் கவிதை போல் அழகாய் சொல்லிவிட்டீர்கள் துளசி.

    நீங்கள் சொல்வது போல் காலையில் எழுந்ததும் கணினி, அதில் தான் படிப்பு. எழுத ஆரம்பித்தபின் புதிதாக பிறந்தோம் என்பது உண்மைதான்.
    உங்களை போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது .
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  41. //கடந்து போனகாலம் இனி மறுபடியும் வாராது இருக்கும் கணங்கள் தான் நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம். கற்றலும், கேட்டலும் நம் வாழ்வை வளம் பெறச் செய்யும் முதுமைத் துன்பம், உடல் துன்பம் எதுவும் இருக்காது. முதுமையிலும் இன்பம் காணலாம்.//

    மிக அருமை.நான் நினைத்துப் பார்தததை அப்படியே எழுத்தில் வடித்து இருக்கிறீர்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  42. நாள்தோறும் நம்மை புதுப்பித்துக் கொள்ளுதல் ரொம்பவும் அவசியம்.
    இளமையின் ரகசியம் - தீராக் கற்றல் - மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    பதிவு எழுதி அதைப் பகிர்ந்து அதனால் விளையும் நட்புக்கள் எத்தனை!

    அம்பாளடியாளின் கவிதையை ரொம்பவும் ரசித்தேன்.

    உங்கள் இந்தப் பதிவு வாசிக்கும்போதே உற்சாகம் கொடுக்கிறது. படிப்பதும் படிப்பதை பகிர்ந்துகொள்ளவதும் சுகமோ சுகம்.
    உங்கள் எழுத்து சுவையோ சுவை!

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
    என் வலைத்தளம் இப்போது துள்ளி குதிக்கவில்லை அல்லவா?
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னது போல் சரி செய்யப்பட்டது.
    உங்கள் கருத்தும் இது தான் என்று அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  44. வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.
    உங்களுக்கு அம்பாள்டியாள் அவர்கள் கவிதை பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.
    பதிவு உற்சாகம் அளித்தது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் உற்சாகம் ஊட்டும் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. மிகவும் அருமையான கட்டுரை எழுதிப் பகிர்ந்துள்ளீர்கள்.

    குழுமத்தில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.

    ஓவியம் அருமையாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  46. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    என் பதிவையும், என் கணவர் ஓவியத்தை பாராட்டியமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. http://blogintamil.blogspot.in/2013/04/2013.html

    தங்களின் தளம் இன்று 20/04/13 வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  48. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அம்பாளடியாளின் கவிதை ரசிக்க முடிகிறது. 

    மாற்றம் நிரந்தரம் எனில் நாமும் மாறிக்கொண்டே தானே இருக்க வேண்டும். கற்றல் மாற்றத்தை ஏற்க வைத்தால் நல்லது தானே?
    //இருக்கும் கணங்கள் தான்  நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம்.

    இதை எத்தனை பேரிடம் எத்தனை தடவை சொல்லி முட்டிக்கொள்ள?
    சீரானக் கட்டுரை. ஆண்களுக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  49. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    அம்பாள்டியாளின் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்களும் ரசித்தமை அறிந்து மகிழ்ச்சி.
    மாற்றங்கள் ஒன்று தான் மாறாமல் இருப்பது ஞானிகள் சொல்வார்கள்.
    நாம் மாறிக் கொண்டே இருக்கிறோம்.
    இன்னும் பழைய கதை பேசி நான் அந்தக் காலத்தில் எவ்வளவு வேலை செய்வேன் இப்போது முடியவில்லை என்று கவலைப்படும் மக்கள் இருக்கிறார்கள்.
    வயது ஆக ஆக உடல் பலம் குறைகிறது அதற்கு ஏற்ற மாதிரி நம் பணிகளை வரையறுத்து கொண்டு மகிழ்ச்சியாய் இருப்பதைவிட்டு கவலை பட்டு கொண்டு இருந்தால் உடல் நலம், மனநலம் எல்லாம் குன்றி நோய் வந்து சேரும் இடமாய் மாறி விடுவோம், இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் த்ன்னம்பிக்கை வார்த்தைகள்.

    //இதை எத்தனை பேரிடம் எத்தனை தடவை சொல்லி முட்டிக்கொள்ள?
    சீரானக் கட்டுரை. ஆண்களுக்கும் பொருந்தும்.//

    உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    இருபாலர்களுக்கும் பொருந்தும் என்று நீங்கள் சொல்வது கேட்டு மேலும் மகிழ்ச்சி.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  50. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்! ஒவ்வொரு நிமிடமும் நம்மைப்புதுப்பித்துக்கொள்ளுதல் இன்றைய வாழ்க்கையில் மிகவும் அவ‌சியமாகிறது. இளைஞர்களுக்கு அது முன்னேறுவதற்கு வழி என்றால், முதியோர்களுக்கோ அது தான் என்றும் இளமையுடன் வாழும் மகா சக்தியைக்கொடுக்கிறது!!

    பதிலளிநீக்கு
  51. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.

    //ஒவ்வொரு நிமிடமும் நம்மைப்புதுப்பித்துக்கொள்ளுதல் இன்றைய வாழ்க்கையில் மிகவும் அவ‌சியமாகிறது. இளைஞர்களுக்கு அது முன்னேறுவதற்கு வழி என்றால், முதியோர்களுக்கோ அது தான் என்றும் இளமையுடன் வாழும் மகா சக்தியைக்கொடுக்கிறது!!//

    உண்மைதான் மனோ, இளைஞ்சர்களுக்கு முன்னேறுவதற்கு வழிதான் நாள்தோறும் புதுபித்துக் கொள்ளுதல். முதியோர்களுக்கு இளமையுடன் வாழும் மகாசக்தி யை கொடுக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
    உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.
    என் வலைத்தளம் இப்போது துள்ளி குதிக்கிறதா?
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னது செய்து இருக்கிறேன் அதனால் குதிக்காது என்று நினைக்கிறேன்.
    திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. துள்ளி குதிக்கிறது என்று சொன்ன நீங்கள், ஆசியா எல்லாம் வந்து கருத்து சொல்ல முடிகிறதே இப்போது.

    பதிலளிநீக்கு
  52. இளமையின் ரகசியம்-தீராக்கற்றல் சிறப்பான கட்டுரை.வாழும் கலை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது.திருமதி பக்கங்கள் திரும்பத் திரும்ப நான் வாசிக்கும் பக்கங்கள்.நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  53. வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
    புதுவருடப் பிறப்புக்கு ஊருக்கு போய்விட்டீர்களா?
    உங்கள் வாழ்த்து கிடைத்தது.
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன், வாழகவ்ளமுடன்.

    திருமதி பக்கங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி இந்திரா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  54. சிறப்பான கட்டுரை. படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை எனச் சொல்லும் உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.....

    சிறப்பான வாழ்த்து.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  55. சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  56. வாங்க வேதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  57. வாங்க தியாவின் பேனா, வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  58. வணக்கம்...

    இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  59. மிக அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  60. இன்று வலைச்சரத்தில் இந்தப் பதிவு அறிமுகம் ஆகியிருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மிகச்சிறந்த பதிவு இது.
    உங்களுடன் கூட நான் எழுதிய இரண்டு பதிவுகளும் அறிமுகம் ஆகியிருப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி!
    உங்கள் நட்பு எனக்குக் கிடைத்த பாக்கியம்.

    பதிலளிநீக்கு
  61. வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன். உங்கள் இரண்டு பதிவுகள் வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் நட்பு கிடைத்ததும் என் பாக்கியம் தான்.
    ந்ல்லோர் நட்பு நாளும் நலம் பயக்கும்.

    பதிலளிநீக்கு
  62. வாங்க ஆசியா, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. ஒந்த பதிவை வலைச்சரத்தில் குறிப்பிடமைக்கு நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  63. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு