புதன், 19 செப்டம்பர், 2012

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்


அலங்காரத்திற்கு முன்


வெள்எருக்கம்பூவையும் நீலஎருக்கம்பூ மாலையையும், 
மல்லி, சாமந்தியையும் சூடி இருக்கிறார்.





வாசனை திரவியப்பொடி அபிஷேகம்

மஞ்சள் பொடி அபிஷேகம்





பசும்சாணி பொங்கலுக்கு பிடித்தது பலவருடங்கள் ஆனபின் அதில் பிள்ளையார் உருவம் வந்து விட்டது, அந்த பிள்ளையார் , வெள்ளை எருக்கு பிள்ளையார்,  வெள்ளிப் பிள்ளையார்.வெண்கலப் பிள்ளையார்(வலஞ்சுழி), மாக்கல் பிள்ளையார் (சந்தனலங்காரத்தில் இருக்கிறார்.)




பிள்ளையார் கொலுவீற்று இருக்கிறார்

பிள்ளையாருக்கு பிரசாதங்கள்

பிள்ளையார் அணி வகுப்பு








எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காஞ்சி விநாயகர் தேர்




        பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
         ஆற்றம் கரையின் ஓரத்தில்அரசமரத்தின் நிழலிலே 
               வீற்றீருக்கும் பிள்ளையார் வினைகள் களையும் பிள்ளையார்
           அவல் பொரி கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும் 
கவலையின்றித் தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார். 

சிறு வயதில் என் மகள் இந்த பிள்ளையார் பாடலைப் பாடி முதல் பரிசு      வாங்கிவந்தாள்.   இன்று அவளது மகள் (பேத்தி)பாடல்கள் பாடிப் பரிசுகள் வாங்கி  வருகிறாள்.  இன்று அந்தப்பேத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்கு ஸ்கைப் மூலம் "கஜவதனா  கருணாசதனா" பாடினாள். 

பேரன், அம்மா  பாட்டி வீட்டுக்குப் போய் இருக்கிறான். இங்கு இருந்தால் அவனும் பாடுவான். மதுரையிலிருந்து பிள்ளையாரைப் பார்த்தான் ஸ்கைப்பில். 

எப்போதும் பிள்ளையார் ஐந்து நாள் அல்லது மூன்று நாள் இருப்பார். இந்த முறை ஒரு நாள் தான் இருக்கப் போகிறார். சில வருடங்களாய் ஒரே நாளில் எல்லா பிரசாதங்களையும் செய்யாமல் தினம் ஒன்றாய் செய்து வணங்கி வருகிறேன். என் அம்மா  பிள்ளையார் சதுர்த்தி என்றால்  நிறைய பிரசாதங்கள் செய்வார்கள்.  மெதுவடை, ஆமவடை, (பருப்புவடை) இனிப்புப் பிடிகொழுக்கட்டை,  பொரிவிளங்கா, சுண்டல், மோதகம் , எள்ளுருண்டை, அப்பம்,  புட்டு, இட்லி என்று மெனு நீண்டு கொண்டு இருக்கும். இப்போது அவ்வளவு செய்தால் சாப்பிட ஆள் இல்லை. செய்யவும் முடியவில்லை, தனியாக .

போன வருடம்  பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவு திருக்கயிலாயம் புறப்பட்டோம், அப்போது சென்னையில் என் கணவரின் அண்ணன் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினோம்.

இந்த வருடம்  திருசெந்தூர்ப் புட்டுஅமுது,  இனிப்புப் பிடி கொழுக்கட்டை, தேங்காய் பூரணம் வைத்த மோதகம்,  கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல்,  எள்ளு உருண்டை,  அவல் பொரிகடலை , வடை , பழங்கள் வைத்துப் பிள்ளையாரை வணங்கினோம்.

அவருக்கு பிடித்த பழங்கள் என்று இந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை வைப்போம்.  இந்த முறை நாவல் பழம் கிடைக்க வில்லை.   பேரிக்காய் கிடைக்கவில்லை.  

பிள்ளையார் மிகவும் எளிமையானவர்,  பசும் சாணம் பிடித்து வைத்து அல்லது ஒரு அச்சு வெல்லத்தை பிள்ளையார் என்று வைத்து வணங்கலாம். வணங்குவதற்குப் பூக்களும் எளிமையான எருக்கம் பூ போதும்.

பிரசாதங்கள் என்று அவல் பொரி, கடலை  போதும்.  ஏற்றுக் கொள்வார் !

எங்கள் வீட்டுப் பிள்ளையாரைத்  தரிசனம் செய்தீர்களா? பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள்.


பிள்ளையாரை இன்று இரவு வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவோம்.  நீர் நிலைகள் ஓடாமல் குட்டையாய் நிற்கிறது.  நீரும் அசுத்தமாய் இருக்கிறது. பலகாலமாய் இப்படிதான் செய்கிறோம்.


எல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

இந்த படங்களையும் பாருங்கள் என் மகன் வீட்டு பிள்ளையார் சதுர்த்தி விழா.


என் மகன் அவனே  செய்த பிள்ளையார்






மருமகள் செய்த பிரசாதங்கள்


மருமகள் இந்தியா வந்து இருப்பதால் என் மகன்  இந்த முறை  பழங்கள் வைத்து வணங்குவான் . இது போனவருட பிள்ளையார் சதுர்த்தி படங்கள்.




             

68 கருத்துகள்:

  1. விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!

    http://arulgreen.blogspot.com/2012/09/vinayagar-chaturthi.html

    பதிலளிநீக்கு
  2. படங்கள் மிகவும் அருமை... அழகாக உள்ளது...

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சதுர்த்தி தின சிறப்புப் பதிவு
    படங்களுடம் மிக மிக அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனியசதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இனிய சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!

    படங்களில் தரிசித்தோம். பிரசாதமும் எடுத்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  5. இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள் அக்கா.

    அலங்காரம் செய்வித்திருப்பதும், அபிஷேஹம் செய்வதும் செய்வதும் ஒரே பிள்ளையாரா, வெவ்வேறா?

    //பிள்ளையாரை இன்று இரவு வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவோம்//
    பசுஞ்சாணத்தில் பிடித்திருப்பவரையா கரைப்பீர்கள்?

    செடிகளுக்கே ஊற்றுவது முதன்முறை கேள்விப்படுகீறேன். நல்ல விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
  6. பண்டிகைப் படங்களை உடனே தந்ததற்கு நன்றி.நானும் விநாயகர் சதுர்த்தி பதிவு போட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பிள்ளையார் உங்களுக்கு சகல நலன்களையும் அள்ளித் தரட்டும்.

    வணங்கி பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.

    அருமையான படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மகன் செய்த பிள்ளையாரை படிப்படியாகப் படமெடுத்துக் காட்டியிருப்பது அழகு. அவருக்கு வாழ்த்துகள்.

    @ ஹுஸைனம்மா,

    பெங்களூரில் பலரும் விநாயகரை தண்ணீரில் கரைத்து செடிக்கு ஊற்றுவது வழக்கமே. பலவருடங்களாக அந்த முறையையே பின்பற்றுகிறேன்.[இங்கே முதல் படத்தில் இருக்கும் பிள்ளையாரைக் கரைப்பார்கள்.] அதே நேரம் ஏரிகளில் கரைப்பதும் திருவிழா போல் வேட்டுகள் முழங்க ஒருபக்கம் நடக்கவே செய்கிறது.

    பதிலளிநீக்கு
  9. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    subbu rathina
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  10. எல்லோருக்கும் ஒரு புது செய்தி.
    மறுபடியும் சிலபடங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.
    என் மகன் செய்த பிள்ளையார் படம் அவர்கள் வீட்டு பிள்ளையார் சதுர்த்தியை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க அருள் , உங்கள் பதிவைப் படிக்கிறேன். இந்த என் பதிவு எப்படி இருக்கு என்று சொல்லவே இல்லையே நீங்கள்!

    பதிலளிநீக்கு
  12. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் வாழ்த்துககளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ரமணி சார், உங்கள் வரவுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ராமலக்ஷ்மி, மகன் செய்த பிள்ளையார் படங்கள் அனுப்பியதை பார்க்க சொல்லலாம் என்று நினைத்த போது கோவிலுக்கு அழைத்தார்கள் சார் போய் வந்தேன் அதற்குள் நீங்கள் பார்த்து விட்டீர்கள் ஹுஸைனம்மாவுக்கும் பதில் அழகாய் அளித்து விட்டீர்கள்.
    நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்.உங்கள் ஊரில் இப்படி செய்வார்கள் என்பதை.
    இன்று கீதா அவர்களின் பதிவில் அவர்கள் இந்த யோசனையை சொல்லி இருந்தார்கள். நாங்கள் பலவருடமாய் இப்படிதான் செய்கிறோம் என்று பதில் போட்டு இருந்தேன். எங்கள் வீட்டில் . குழந்தைகள் வாளியில் பிள்ளையார் கரைவதை பார்த்துக் கொண்டு நேர்முக வர்ணனை செய்து கொண்டு இருப்பார்கள். எங்கள் மாமியார் வீட்டிலும் அப்படித்தான்.
    உங்கள் வரவுக்கும், பிரசாதம் எடுத்துக் கொண்டதற்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  15. ஐ மிஸ் எள்ளுருண்டை அம்மா..
    ரெண்டு மால்டோவா பாட்டில் நிறைய செய்து வைத்ததை.. தினம் ரெண்டாய் சாப்பிடுவது..

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஹுஸைனம்மா, வாழ்த்துக்கு நன்றி.

    அபிஷேகம் செய்யும் பிள்ளையார்கள் தான் தட்டில் அலங்காரம் செய்து வைத்து இருக்கிறேன். நான் முதலில் இருந்த வீட்டுக்கு அருகில் யாரும் பசு மாடு வைத்து இருக்க வில்லை அதனால் முதலில் கிடைத்த பசுஞ்சாணத்தில் செய்த பிள்ளையாரை அப்படியே வைத்துக் கொண்டேன் அது செய்து பல வருடங்கள் ஆகி விட்டது 20 வருடம் இருக்கும். இரண்டு பிள்ளையார்கள் இருக்கிறது தட்டில். அதில் ஒரு பசுஞ்சாணம் பிள்ளையாரில் தான் பிள்ளையார் உருவம் தெரிகிறது என்றேன். அதை கரைக்க மாட்டேன். அப்படியே வைத்து இருப்பேன்.
    முதல் படத்தில் இருக்கும் களி மண்ணல் செய்ய பட்ட பிள்ளையாரை மட்டும் கரைப்பேன்.

    உங்கள் வரவுக்கும் ஆர்வமாய் கேட்கும் கேள்விக்கும் பாராட்டுக்கும் நன்றி.
    மகளிடம் விசாரித்தாய் சொன்னாள்
    பேரன் மதுரை போய் இருக்கிறான் அந்த இடைவெளியில் பதிவு போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. வாங்க முரளிதரன், உங்கள் வரவுக்கு நன்றி. உங்கள் பதிவை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. மாதேவி வாங்க, உங்கள் இனிய வாழ்த்துக்கு நன்றி. மேலும் சில படங்கள் போட்டு இருக்கிறேன் நேரம் இருந்தால் பாருங்கள்.
    பிரசாதங்கள் பெற்றுக் கொண்டற்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க சூரி சார், உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
    உங்களுக்கு என் வணக்கங்கள்.உங்கள் ஆசீர்வாதம் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  20. அருமையான பிள்ளயார் தரிசனம்..

    இனிய வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  21. வா கயல்விழி, இந்த முறை அந்த கிண்ணத்தில் உள்ள உருணடைதான்.
    இன்றே பிள்ளையார் கரைக்க படுவதால் நிறைய செய்யவில்லை.
    தினம் எள்ளுருண்டை, பொரி கடலை, அவல் பலகாரம் என்று ஐந்து நாள் கிடைப்பது போச்சு பிள்ளையாருக்கு.உன் தம்பிக்கும் இந்தமுறை எள்ளுருண்டை இல்லை சாந்தா இங்கு வந்து விட்டதால்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் இனிய வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஆஹா! எத்தனைப்பிள்ளையார்களை தரிஸிக்க வைத்துள்ளீர்கள்.

    அத்தனையும் அழகோ அழகு தான்.

    இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தவை முதன் முதலாகக் காட்டியுள்ள பிள்ளையாரும், தங்கள் மகன் தன் கைகளால் செய்துள்ள பிள்ளையாரும் தான்.

    தொடரும்.... vgk

    பதிலளிநீக்கு
  24. பிரஸாத வகைகள் அத்தனையும் அழகாகவே காட்டியுள்ளீர்கள்.

    நாக்கில் நீர் சுரக்கச் செய்துள்ளீர்கள்.

    பல்வேறு அபிஷேகங்களைக் காட்டியுள்ளது தனிச் சிறப்பு தான்.

    தொடரும் ..... vgk

    பதிலளிநீக்கு
  25. அலங்காரத்திற்கு முன் - அலங்காரத்திற்கு பின் - ரெண்டு பிள்ளையார்களுமே ரொம்ப அழகாக இருக்கிறார்கள்..

    //இன்று அந்தப்பேத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்கு ஸ்கைப் மூலம் "கஜவதனா கருணாசதனா" பாடினாள்.//

    அற்புதம்! இந்த ஸ்கைப் தான் நடுவே ஒரு ஊடகமாய் இருந்து, எத்தனை புண்ணியம் பண்ணியிருக்கு, பாருங்க!

    எத்தனை நினைவுகள்? வரிசை கட்டிக் கொண்டு ஒவ்வொண்ணாக வர, அற்புதமான பதிவு!

    எல்லோருக்கும் அன்புக் கடவுளாம் விநாயகரின் அருள் மழை பொழியட்டும்! அதில் நாமெல்லாம் நனையட்டும்!

    பதிலளிநீக்கு
  26. வீட்டுக்கு அருகில் இருக்கும் காஞ்சி விநாயகர் தேர் எனக் காட்டியுள்ள

    தேர் .... ஜோர் ;)))))

    //சிறு வயதில் என் மகள் இந்த பிள்ளையார் பாடலைப் பாடி முதல் பரிசு வாங்கிவந்தாள். இன்று அவளது மகள் (பேத்தி)பாடல்கள் பாடிப் பரிசுகள் வாங்கி வருகிறாள். இன்று அந்தப்பேத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்கு ஸ்கைப் மூலம் "கஜவதனா கருணாசதனா" பாடினாள். //

    இதைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்கள் பேத்திக்கு என் அன்பான ஆசிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள். ;)))))

    //மெனு நீண்டு கொண்டு இருக்கும். இப்போது அவ்வளவு செய்தால் சாப்பிட ஆள் இல்லை. செய்யவும் முடியவில்லை, தனியாக .//

    வாஸ்தவம் தான். பாயஸம், பழங்கள், ஏதோ ஒரு ஏடு கொழுக்கட்டை, கொஞ்சம் வடை என நம்மால் முடிந்ததை மட்டும் செய்துவிட்டு, தேங்காயை உடைத்து நைவேத்யம் செய்தாலே போதும்.

    பிள்ளையார் ஒன்றும் கோபிக்க மாட்டார், தான். ;)))))

    பெரும்பாலும் பல வகையறாக்கள் செய்வது, ஸ்வாமி பேரைச் சொல்லி நாம் சாப்பிட மட்டுமே. ;)

    தொடரும்..... vgk

    பதிலளிநீக்கு
  27. //எங்கள் வீட்டுப் பிள்ளையாரைத் தரிசனம் செய்தீர்களா? பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள்.//

    நன்கு தரிஸித்தோம்.

    பிரஸாதம் எடுத்துக்கொண்டோம்.

    சுவையாக இருந்தன
    [கண்களுக்கு மட்டும்]
    மிக்க நன்றி.

    //எல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  28. ரொம்பவே சுரு சுறுப்பு பிள்ளையார் சதுர்த்தி அன்ரே பதிவும் போட்டது.

    பதிலளிநீக்கு
  29. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், முதல் பிள்ளையாருக்கும் துளி அபிஷேகம் செய்து என் கணவர் தன் கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார்.
    மூஞ்சூறு, தந்தம், மோதகம், விபூதி பட்டை, கண்களுக்கு வண்ணம் தீட்டி இருக்கிறார். அதனால் பிள்ளையார் மேலும் அழகுடன் இருக்கிறார்.
    என்மகனுக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  30. தங்கள் பேத்திக்கு என் அன்பான ஆசிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள். ;)))))//

    வை.கோ சார் உங்கள் பாராட்டு வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சார் , பேத்தியிடம் தெரிவித்து விடுகிறேன்


    பெரும்பாலும் பல வகையறாக்கள் செய்வது, ஸ்வாமி பேரைச் சொல்லி நாம் சாப்பிட மட்டுமே. ;)//
    உண்மைதான்.
    பண்டிகைகள் அலுப்பு தட்டும் வாழ்க்கையை மகிழ்ச்சி ஆக்கவும், உடலுக்கும் மனதுக்கும் வேண்டிய சக்தியை கொடுக்கவும் தான் முன்னோர்கள் வகுத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  31. நன்கு தரிஸித்தோம்.

    பிரஸாதம் எடுத்துக்கொண்டோம்.

    சுவையாக இருந்தன
    [கண்களுக்கு மட்டும்]
    மிக்க நன்றி.//

    கண்களால் பிரசாதங்கள் எடுத்துக் கொண்டமைக்கு நன்றி வை.கோ சார்.
    உங்கள் உற்சாகமான பின்னூட்டங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. அற்புதம்! இந்த ஸ்கைப் தான் நடுவே ஒரு ஊடகமாய் இருந்து, எத்தனை புண்ணியம் பண்ணியிருக்கு, பாருங்க!//

    வாங்க ஜீவிசார், நீங்கள் சொல்வது உண்மை.
    ஸ்கைப் மட்டும் இல்லையென்றால் வாழ்வு சோபிக்காது.

    எல்லோருக்கும் அன்புக் கடவுளாம் விநாயகரின் அருள் மழை பொழியட்டும்! அதில் நாமெல்லாம் நனையட்டும்!//

    அவரின் அருள்மழையில் எல்லோரும் நனைந்து ஆனந்தம் அடைய அருள்புரிவார் .நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க லக்ஷ்மி அக்கா, சூட்டோடு சூடாய் போட்டல் தான் ஆச்சு அப்புறம் முடிய மாட்டேன் என்கிறது.
    உங்கள் வராவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வாங்க கோபிநாத், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    உங்களை மலரும் நினைவுகள் மட்டும் அழைத்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  35. ஜீவி சாரே !!
    அந்த கஜ வதனா பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சது
    ஸ்ரீ ரஞ்சனி ராகம் .
    நானும் எங்காத்து பெட்டர் ஹாஃப் பாடி யூ ட்யூபிலே
    போட்டிருக்கேன்.
    நீங்க உங்க பேத்தி பாடி இருக்கிறதா சொல்லியிருக்கீறீர்களே !!
    ஃபைல் இருந்தால் அனுப்புங்களேன்.

    அத கோமதி அரசு மாமியோட அற்புதமான படங்களொட‌
    இணைச்சு ஒரு படமா வெளியடறேன்.

    ( இந்த பாட்டு எனக்கு பிடிச்சதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.
    பொண் பார்க்கப்போயிருக்கும்பொழுது (கரெக்டா ஒரு 45 வருசத்துக்கு முன்னாடி)
    இதுதான் பாடினா.
    டேய் ! யானை மூஞ்சி !!!
    அப்படின்னு சொல்லிப்பூட்டாளே அப்படின்னு தோணல்லையே !! )

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  36. பிள்ளையார் தரிசனம் கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவைத் தந்துள்ளது.அச்சுவெல்லப்பிள்ளையாரும் கொலுவிருக்க இனிமையான விநாயகசதுர்த்தி திருநாள்தான்.பண்டிகை வேலைகளிடையே பதிவு தந்தமைக்கு நன்றி அம்மா.இங்கேயும் நாவல்பழம் கிடைக்கவில்லை.வாளியில் பிள்ளையார் கரைப்பது நல்ல யோசனை நன்றி அம்மா

    பதிலளிநீக்கு
  37. எவ்ளோ தனித்துவம். படம் ரொம்ப நேர்த்தியா இருக்கும்மா.உண்மை வழிபாட்டுக்கு குடுத்து வச்ச பிள்ளையார். வகை வகையா அலங்காரம்... ஆகாரம்.. சந்தோஷமா இருக்கும்மா உங்க பதிவு.

    பதிலளிநீக்கு
  38. பிள்ளையார் தரிசனம் கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவைத் தந்துள்ளது.அச்சுவெல்லப்பிள்ளையாரும் கொலுவிருக்க இனிமையான விநாயகசதுர்த்தி திருநாள்தான்//

    வாங்க இந்திரா, நீங்கள் சொல்வது போல் மனதுக்கு நிறைவுதான் பண்டிகைகள்.
    வேலை பளு இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் அது தெரியமாட்டேன் என்கிறது.
    நன்றிம்மா உங்கள் வரவுக்கும் இனிமையான பின்னூட்டத்திற்கும்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க யாழினி , உங்கள் முதல் வருகைக்கு.
    குழந்தைகள் நலமா?

    குழந்தைகளுடன் பதிவுகள் படிக்க நேரம் இருக்கா!
    கவிதைகள் படைக்கிறீர்களா?
    உங்கள் பாராட்டுக்கு நன்றி யாழினி.

    பதிலளிநீக்கு
  40. சூரி சார், கஜ வதனா பாட்டு என் பேத்தி பாடினாள் டெல்லியிருந்து ஸ்கைப் மூலம்.

    அந்த பாடல் உங்களுக்கு பிடித்தமைக்கு காரணம் மிக நன்றாக இருக்கு.


    அத கோமதி அரசு மாமியோட அற்புதமான படங்களொட‌
    இணைச்சு ஒரு படமா வெளியடறேன். //

    நீங்கள் இப்படி சொன்னதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  41. உங்கள் மகன் செய்த பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறார்...
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  42. வாங்க பாசமலர், என் மகனுக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவித்து விட்டேன்.

    உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. விநாயகர் சதுர்த்தி வாழத்துக்கள்.நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  44. ஆசியா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. முன்பெல்லாம் பிள்ளையார் பொம்மை வாங்கி வந்து பூஜை எல்லாம் முடிந்தபிறகு ஏதாவது நீர்நிலைகளில் கரைப்போம். இப்போது வீட்டில் இருக்கும் அநேகவித பிள்ளையாகளையும் ( சுமார் 50 அல்லது 60 இருக்கும்) வேண்டிக் கொண்டு பிரசாதங்கள் செய்து சாப்பிடுவதோடு சரி. இங்கே பெங்களூர் பக்கம் வினாயகர் வழிபாடு பிரசித்தம் .பத்து நாட்களுக்கும் மேலாக ஊர்வலம் வரும். உங்கள் பிள்ளையார்கள் அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. தரிசனம் செஞ்சு, பிரசாதமும் எடுத்துக்கிட்டேன். பிள்ளையார் ரொம்ப அழகாருக்கார்.

    எங்கூர்ல இன்னிலேர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் புள்ளையாரைக் கரைக்கும் படலம் ஆரம்பிச்சாச்சு. எங்கூட்டுப் வெள்ளிப்பிள்ளையாரை ஒரு பக்கெட் தண்ணீர்ல விசர்ஜனம் செஞ்சுட்டு எடுத்துடறது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  47. வாங்க பாலசுப்பிரமணியம் சார், பெங்களூரு மாதிரி இங்கும் 10 நாள் உற்சவம் நடக்கும். தினம் ஒரு வாகனத்தில் பிள்ளையார் இரண்டு வேளையும் பவனி வருவார். கோவிலில் அபிஷேகங்கள் சிறப்பாய் நடைபெறும்.
    எங்கள் வீட்டிலும் பிள்ளையார் ஐந்து நாள் இருப்பார். அப்புறம் கரைக்க படுவார். இந்த முறை ஒருநாள் தான் இருந்தார்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  48. வாங்க அமைதிச்சாரல், வந்து தரிசனம் செய்து பிரசாதம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி.

    இந்த முறை எங்கள் ஊரில் பிள்ளையார் ஊர்வலமாய் சென்று கரைக்க படும் விழா குறைவாய் இருக்கிறது.

    கலர் பிள்ளையார்கள் குறைவது மகிழ்ச்சி தான் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை.

    மழை பெய்தால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி. மழை இல்லை பயிர், பச்சை இல்லை, மக்களிடமும் பண்டிகை கொண்டாட்டம் இல்லை.
    விலைவாசி உயர்வு, மின் தடை எல்லாம் பண்டிகை களைகட்டுவதை குறைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  49. உங்கள் வீட்டு பிள்ளையார் இரண்டு பேர்
    ராமலக்ஷ்மி அவர்கள் பார்த்த பிள்ளையாருடன்
    ஃப்ரன்ட்ஸ் ஆகி,
    சுப்பு ரத்தினம் வலையில் ஜாலியாகப் பாடுகிறார்கள்.

    கேளுங்கள்.
    மீனாட்சி பாட்டி.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  50. //பசுஞ்சாணத்தில் செய்த பிள்ளையாரை ... செய்து பல வருடங்கள் ஆகி விட்டது 20 வருடம் இருக்கும்.... //

    பசுஞ்சாணம் காய்ந்தபின், தொட்டாலே உதிர்ந்துவிடுமல்லவா? 20 வருடங்கள்... ஆச்சர்யமான விஷயம்.

    //மழை இல்லை பயிர், பச்சை இல்லை,விலைவாசி உயர்வு, மின் தடை எல்லாம் பண்டிகை களைகட்டுவதை குறைத்து விட்டது.//
    உண்மைதான்... இந்த வருடம் எல்லா பண்டிகைகளுமே கொஞ்சம் சுரத்து குறைவுதான்..

    மகன் செய்த பிள்ளையார்.. எவ்வளவு பொறுமையாக செய்திருக்கிறார். நல்ல கலையுணர்வு உள்ளவர் போல. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க சூரி சார், எங்கள் வீட்டு பிள்ளையார் இரண்டு பேர்
    ராமலக்ஷ்மி அவர்கள் பார்த்த பிள்ளையாருடன்
    ஃப்ரன்ட்ஸ் ஆகி,
    சுப்பு ரத்தினம் சார் வலையில் ஜாலியாகப் பாடுவதை கேட்டேன் மகிழ்ந்தேன். நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  52. வாங்க ஹுஸைனம்மா, பசுஞ்சாணத்தில் வட்டமாய், , கொழுக்கட்டை மாதிரி எல்லாம் பிடித்து காயவைத்து விபூதி செய்வார்கள்.
    காயவைத்ததை மூட்டை கட்டி வைத்து இருப்பார்கள் தேவைபடும் போது பயன்படுத்துவார்கள். ராட்டி மாதிரி லேசாக தட்டினால் தான் உதிர்ந்து விடும்.
    இந்த முறை நீங்கள் சொல்வது எல்லா பண்டிகைகளும் சுரத்து குறைவுதான் ஆடி பண்டிகை ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் சரியாக கொண்டாட முடியவில்லை.

    என் மகனுக்கு நீங்கள் சொன்னது போல் கலையுணர்வு அதிகம். அவன் செய்த சாக்பீஸிலில் செய்த கோவில், பனிக்கட்டியில் செய்த பிள்ளையார் எல்லாம் பகிர்ந்து கொண்டேன் பார்த்தீர்களா?
    சிறு வயதில் சப்பாத்தி மாவு பிசைந்தால் அதில் கொஞ்சம் மாவு எடுத்து வித விதமாய் பொம்மைகள் செய்து காட்டி எல்லோரையும் மகிழ்ச்சி படுத்துவான். சைனா களி மண்ணில் வித விதமாய் செய்வான்.
    படங்கள் வரைவான். நவராத்திரி கொலுவில் அவன் படங்கள் இடம்பெறும்.
    நன்றி ஹுஸைனம்மா உங்கள் வரவுக்கும் ,கருத்துக்கும் என் மகனை பாராட்டியதற்கும்.

    பதிலளிநீக்கு
  53. தங்களின் மகன் செய்த பிள்ளையார் வெகு ஜோர்!

    பதிலளிநீக்கு
  54. வாங்க சந்திர வம்சம், உங்கள் வரவுக்கும், என் மகன் செய்த பிள்ளையாரை ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  55. ம்தல் பிள்ளையாரிலிருந்து கடைசிப் பிள்ளையா வரை அத்தனையும் அழகு. உங்கள் சிரத்தையை எண்ணி வியப்பாக இருக்கிறது.அதுவுன்ம் உங்கள் சார் கைவண்ணத்தில் முதல் பிள்ளையார் ஜ்வலிக்கிறார் .மனம் நிறைந்த வாழ்த்துகள் கோமதி.

    பதிலளிநீக்கு
  56. வாங்க வல்லி அக்கா, உங்கள் வருகைக்கும் என் கணவரின் கை வண்ணத்தை பாராட்டியதற்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  57. மகன் செய்த பிள்ளையார் மிகவும் அருமை. வாழ்த்துகள்.

    இணைத்துள்ள படங்கள் பிரசாதங்கள் அனைத்தும் களைகட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  58. வாங்க மாதேவி, மகன் செய்த பிள்ளையரை பார்க்க மறுபடியும் பதிவுக்கு வந்து அழகாய் உங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் சொன்னதற்கு வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  59. //பிள்ளையாரை இன்று இரவு வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவோம்//

    வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கே ஊற்றுவது நல்ல விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
  60. வாங்க வியபதி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  61. படங்கள் அனைத்தும் சிறப்பு

    இந்த பதிவர்கள் எல்லாம் இப்போது எங்கே ? ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் சிறப்பு//

      நன்றி.

      //இந்த பதிவர்கள் எல்லாம் இப்போது எங்கே ? ஆச்சர்யமாக இருக்கிறது.//

      சிலர் முகநூலில் , சிலர் எங்கே என்று தெரியவில்லை.

      இராஜராஜேஸ்வரி அம்மா இறைவனிடம் சென்று விட்டார்கள்.
      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  62. குறையொன்றுமில்லை லட்சுமி அம்மா இப்போதெல்லாம் பதிவு போடுவதில்லை.  ராஜராஜேஸ்வரி அம்மா மறைந்து விட்டார்கள்.  ஹுஸைனம்மாவும் பதிவு போடுவதில்லை.  Face Book ல் ஆக்டிவாக இருக்கிறார்கள்.  சூரி சிவா கூட அப்படித்தான்.  மீனாட்சி பாட்டி சுப்பு தாத்தா என்று முகநூலில் கலக்குகிறார்.  வைகோ ஸார் கூட பதிவிடுவதை எப்போதோ நிறுத்தி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //குறையொன்றுமில்லை லட்சுமி அம்மா இப்போதெல்லாம் பதிவு போடுவதில்லை//

      சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்தீர்களா அவர்களை.
      ஒரு முறை அமைதி சாரலிடம் கேட்டேன் அவர்களை பற்றி மகள் வீட்டிலோ, மகன் வீட்டிலோ இருக்கிறார்கள் உடல் நலக் குறைவு என்றார்கள். அப்புறம் அவர்களை பற்றி தெரியவில்லை.

      ஹுஸைனம்மா முகநூலில் என்னுடன் உரையாடுவார்கள்.
      ராஜராஜேஸ்வரி அவர்களை விழா காலங்களில் நினைத்து கொள்வேன். தெய்வீக பதிவு செய்வார்கள்.

      //சூரி சிவா கூட அப்படித்தான். மீனாட்சி பாட்டி சுப்பு தாத்தா என்று முகநூலில் கலக்குகிறார். //

      ஆமாம். வைகோ ஸார் முகநூலில் இருந்தார் இப்போது அங்கும் எழுதுவது இல்லை போலும்.

      முன்பு இருந்த காலம் போல இப்போது இல்லை. எல்லோரும் வேறு வேறு பாதைகளில் பயணம் செய்கிறார்கள்.

      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.





      நீக்கு
    2. நான் பதிவர் சந்திப்பே சென்றதில்லை.  லட்சுமி அம்மா அப்ற்றி வலைத்தளத்தில் அறிந்து கொண்டதுதான்.  

      நீக்கு
    3. நானும் பதிவர் சந்திப்பு சென்றது இல்லை. சென்னையில் நடந்ததால் நீங்கள் கலந்து கொண்டிர்களா என்று கேட்டேன். லட்சுமி அம்மாவுக்கு பொன்னாடை போற்றி சிறப்பு செய்தார்கள் அவர்களுக்கு. நான் அந்த பகிர்வை பார்த்தேன். மும்பையிலிருந்து பதிவர் சந்திப்புக்கு வந்தார்.

      நீக்கு