பகுதி-9
தேவப்பிரயாகை
DEV PRAYAG
19.05.2012
இன்று காலை 6.30 மணிக்கு நக்ராசு என்னும் இடத்தில் இருந்து புறப்பட்டோம். 10.30
மணியளவில் தேவப்பிரயாகை வந்தோம்.
|
தேவப்பிரயாகையில் அலக்நந்தா ஆறு |
|
தேவப்பிரயாகை நகரம் |
ஒருகரையில் இறங்கி கோயிலை வணங்கி பாலம் கடந்து
ஏறி மறுபுறம் வந்தோம். பஸ் அங்கு எங்களை ஏற்றிக் கொண்டது.
கண்டங்கடி நகர்
KANTANKATINAGAR
தேவப்பிரயாகையில் உள்ள கோயிலை ரகுநாத்ஜி மந்திர் என்று அழைக்கிறார்கள். இது பெரியாழ்வாரால் பாடப்பெற்ற கண்டங்கடிநகர் என்னும் திவ்ய தேசமாகும்.
கோயிலுக்கு இறங்கிச்செல்ல நிறைய படிகள் உள்ளன. மூலஸ்தானத்தில் பெரிய
உருவத்தில் பெருமாள் .பெரிய பெரிய கண்கள். சந்நிதி திருமுன்பு
திவ்யபிரபந்தப்பாடல்கள் எழுதப்பட்டுளளன. அந்த பாடலை படம் பிடிக்க கூடாது என்று
சொல்லி விட்டார் பூஜாரி. திருக்கோயிலைச்
சுற்றி வலம் வந்தோம். பிரகாரத்தில் சந்நிதிகள் உள்ளன. அனுமனுக்கு சந்நிதி உள்ளது.
ராமன் அமர்ந்த இடம் என்ற ஓர் இடம் உள்ளது. அங்கு ஒரு இருக்கை உள்ளது. ஒரு பெரிய
மரத்தின் கீழ் இவ்விடம் உள்ளது.
|
கோயிலின் முன்னர் |
|
சந்நிதி நுழைவாயில் |
வடதிசைமதுரை சாளக்கிராமம் வைகுந்தம்துவரை அயோத்தி
இடமுடைவதரி யிடவகையுடைய எம்புருடோத்தமன் இருக்கை
தடவரையதிரத் தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக் கடுத்திழிகங்கைக் கண்டமெனும்கடி நகரே
என்று பெரியாழ்வார் இத்தலத்து இறைவனைப்பாடியுள்ளார்.
|
விமானம் |
|
இராமன் அமர்ந்த இடம் |
|
கோயில் திறந்திருக்கும் நேரம் -குளிர்காலம்:7-12,5 -9 வெயில் காலம்-6 -12,4 -8 |
|
கோயிலுக்குச் செல்லப் படிகள் |
|
நகரின் நடுவே |
அலக்நந்தா ஆற்றுடன், பாகீரதி ஆறு சேரும் இடம் தேவப்பிரயாகை. இந்த இடத்திலிருந்து கங்கையாறு என்ற பெயரைப் பெறுகிறது. சங்கமத்திற்கு சிறிது தூரம் நடந்து
சென்று பிறகு நிறைய படிகள் இறங்கி காணவேண்டும்.
|
சங்கமம் |
அலக்நந்தா பச்சை கலரிலும், பாகீரதி வேறு கலரிலும் நன்கு தெரியும். அங்கு
தட்டில் குங்குமத்தை வைத்துக் கொண்டு நம்மிடம் காசு வாங்குபவர்கள் ஆண்கள், பெண்கள்
என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கு ஒரு கல்லில் அனுமன் பாதம் இருக்கிறது. அதற்கு
சிந்துரம் பூசி வைத்துக் கொண்டு நம்மிடம் காணிக்கை வாங்க ஒரு பூசாரி இருக்கிறார்.
|
மறுகரையிலிருந்து தோற்றம் |
சனி பகவானுக்கு அங்கு தர்மராஜன் என்று பெயர் . எருமை வாகனத்தில் இருக்கும் அவரது
சிலையின் முன்பு, இருப்புச் சட்டியில் எண்ணெய்க்குள்
சில நாணயங்களை போட்டு வைத்துக் கொண்டு கறுப்பு வஸ்திரம் அணிந்து உட்கார்ந்து
கொண்டு காசு வசூல் செய்கிறார்கள்.
பாலம் கடந்து நம் பஸ்ஸை அடையும் இடத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க
நடந்து வருபவரின் களைப்பைப் போக்க சர்பத் ம்ற்றும், குளிர் பானங்கள், வெள்ளரிக்காய்
போன்றவைகளை விற்கிறார்கள். நாங்களும் தாகசாந்தி செய்து கொண்டோம்.
.பின்னர் பஸ் ஏறி மாலை 3 மணியளவில் ரிஷிகேசம் புறப்பட்டோம். வழியில் ஒரு விடுதியில் சாப்பிட்டோம். அந்த விடுதியருகே கண்டகாட்சி! உருண்டு விழுந்திருந்த காரும் லாரியும்!
மாலையில் ரிஷிகேஷ் அடைந்தோம். அங்கு ஒரு இடத்தில்
பஸ்ஸை நிறுத்தி விட்டு சிவானந்தா ஆசிரமம் சென்றோம்.
|
சிவானந்த ஆசிரமத்தைப் பற்றி விளக்குகிறார் அங்குள்ள கைடு(நீலச்சட்டை) |
|
வழிபாட்டு நேரம் |
|
விஸ்வநாதர் சந்நிதி |
|
சுவாமி சிவானந்தரின் சமாதி |
|
சமாதி |
|
சுவாமி சிவானந்தரின் திருவடிகள் |
|
ராம் ஜூலா |
சிவன் கோயில்,
நூலகம், புத்தகவிற்பனை நிலையம், சிவானந்தர் சமாதி ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.
கங்கையின் வடகரையிலிருந்து ராம் ஜுலா வழியாக நடந்து தென்கரை வந்து சேர்ந்தோம்.
|
ராம் ஜூலாவில் போக்குவரத்து நெரிசல் |
|
சூரிய அஸ்தமன வேளையில் கங்கை |
|
படகு சவாரி |
அங்கு கீதாசிரமம், சொர்க்காசிரமம் பார்த்தோம். படகில் ஏறி மீண்டும் வடகரை வந்தோம்.
மாலை 7 மணியளவில் ஹரித்வார் விடுதி அடைந்தோம். அங்கு இரவு தங்கினோம். சார்தம் யாத்திரை முடிவுற்றது
எனலாம்.
20.05.2012
இன்று காலை 7 மணிக்கு ஹரித்துவாரிலிருந்து இரயில் மூலம் டில்லி புறப்பட்டோம். .எங்களுடன் வந்தவர்களிடம் ரயில் ஏறும் முன்பு விடை பெற்றுக் கொண்டோம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பெட்டி. பார்த்துக் கொள்ள முடியவில்லை.
|
ஹரித்வார் ரயில் நிலயத்தில் |
|
இனி ஊருக்குத் திரும்ப வேண்டியது தான் |
திரும்பிவரும் போது போகும்போது இருந்ததை விட மிக கஷ்டமான பயணம். எங்களை அழைத்து
சென்றவர் தனி பஸ் வசதி செய்து ஹ்ரித்வாரிலிருந்து அழைத்து சென்று இருக்கலாம்,
அல்லது எல்லோருக்கும் ஏஸி கோச்சில் வசதியாக அழைத்து சென்று இருக்கலாம். ரயிலில் முன்
பதிவு செய்து அழைத்து போனாலும் முன் பதிவு செய்யாதவர்கள் வந்து அமர்ந்து கொண்டு
நமக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்பது கஷ்டமாய் உள்ளது. நான்கு இளம் வயது பையன்கள்
எங்களுக்கு உதவி செய்து உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
டெல்லியில்
இறங்கும் போது மிகவும் கஷ்டம் . நாம் இறங்குவதற்குள் ஏறுகிறார்கள். ரயில் சிறிது
நேரம் தான் நிற்கும். அந்த பைய்ன்கள் ’நீங்கள் இறங்குங்கள் சாமான்களை எடுத்து
தருகிறோம்’ என்று எடுத்துக் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி சொன்னோம்.
சில கஷ்டங்கள்
இருந்தாலும் சார்தம் யாத்திரை திருவருள் துணையோடு இனிது முடிந்தது.
டில்லியில் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள்
21.05.2012 அன்று காலை 7 மணியளவில் டில்லியிலிருநது விமானம் மூலம்
தமிழ்நாடு திரும்பினோம்.
திருக்கேதாரத் தலப்பயணக்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.
-----------------------
திருக்கேதாரத் தலப்பயணம் பகுதி 9 க்கும் தொடந்து வந்து படித்து கருத்துக்களை கூறி பின்னூட்டம் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
நன்றி., நன்றி.
அருமையான தொடர். மிக மிக வேகமாக பலப் பல புகைப் படங்களுடன் உங்களுடனேயே பயணித்தது போன்ற உணர்வு. நன்றி. சர்வம் சிவ மயம்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் நேரில் சென்று வந்த உணர்வு...
பதிலளிநீக்குதங்களின் பயணத்தின் மூலம் நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி அம்மா...
வாழ்த்துக்கள்... (TM 1)
இனிமையான தொடர். ஒன்பது பகுதிகளையும் ஒரு சேர படித்தது மனதுக்கு மகிழ்ச்சி தந்தது. சென்ற பகுதியில் சொன்னது போல வருகின்ற செப்டம்பர் மாதம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆண்டவன் அருள் கிடைத்தால் செல்வேன்.
பதிலளிநீக்குஉங்களுடன் நானும் பயணித்த ஒரு உணர்வு. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிம்மா.
கேதார் என்றால் சக்திவாய்ந்த என்றும், கேதார்னாத் என்றால் "பரந்த உலகை ஆள்பவன்" எனவும் பொருள்
பதிலளிநீக்குபரந்த உலகை உய்ரத்தில் இருந்து தரிசித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
கேதார்னாத் 12000 அடி உயரத்தில் உள்ளது. இங்கிருந்து கையாலயத்தை தரிசிக்கும் பேற்றினையும் பெற்றிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
உங்களுக்குத்தெரியுமா, "ஆதிசங்கரர் இத்திருக்கோவிலுக்கு பின்னே மறை ந்ததாக" வரலாறு.
பதிலளிநீக்குஉங்கள் மூலமாக ஒரு புனித பயணத்தில் பங்குகொள்ள முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் நேரில் பார்ப்பது போன்ற பிரமையை அளித்தது
பதிலளிநீக்குமிகவும் புண்ணியம் செய்தவர்கள் அம்மா நீங்கள். எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பதுஅரிது .உங்கள் பகிர்வுகளால் நாங்களும் நேரில் சென்றுவந்தது போல்உணர்ந்தோம் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா.
பதிலளிநீக்குபடங்களும் தகவல்களுமாக மிகச் சிறப்பான பகிர்வு. நன்றி. எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்.
பதிலளிநீக்கு/முன் பதிவு செய்யாதவர்கள் வந்து அமர்ந்து கொண்டு/
தெற்கை விட வடக்கே இது அதிகம்தான்!
வாங்க அமரபாரதி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க திண்டுக்கல் தனபாலான், உங்கள் தொடர்வருகைக்கும், வாழ்த்துக்கும், தம்ழ்மண ஓட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க வெங்கட் நாகராஜ், ஊரிலிருந்து வந்துவிட்டீர்களா?
பதிலளிநீக்குதொடர் அனைத்தையும் ஒரே நாளில் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி.
செம்டம்பர் மாதம் போய் வாருங்கள் வாழ்த்துக்கள் ஆண்டவன் அருள் நிச்சியம் உண்டு உங்களுக்கு.
அமுதா கிருஷ்ணா சொன்னார்கள் செம்டம்பர் மாதம் கூட்டம் இருக்காதாம்.
வாங்க சந்திர வம்சம், கேதார்நாத் பெயர் விளக்கம் அருமை.
பதிலளிநீக்குகைலாயத்திற்கும் முன்பு சென்று வந்து விட்டோம்.
நான் ஆதிசங்கரர் சமாதி தரிசித்து அதைப்பற்றி படத்துடன் செய்தியை குறிப்பிட்டு இருக்கிறேன்.(பகுதி- 7)
நீங்களும் என்னுடன் புனித பயணத்தில் கலந்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி. நன்றி.
வாங்க இந்திரா, பத்ரி நாதரைப்பற்றி பகுதி- 8லில் எழுதி இருக்கிறேன் பாருங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கள் அழகாய் இருக்கிறது, நீங்களும் புண்ணியம் செய்தவர்கள் தான். இறைவனைப் பார்ப்பது அவரைப் பற்றிய செய்திகளை கேட்பது, படிப்பது,எல்லாமே புண்ணியம் தான்.
நன்றி இந்திரா.
வாங்க ராமலக்ஷ்மி, நீங்களும் ஆன்மீக பயணத்தில் தொடர்ந்து வந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குடெல்லியில் ஹரித்துவார் ரயில் பயணத்தில் முன் பதிவு செய்யாதவர்கள் வந்து அமர்ந்து கொண்டு முன் பதிவு செய்தவர்களுக்கு இடம் தர மறுப்பதை டிக்கட் பரிசோகதரும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயம் ராமலக்ஷ்மி.
மிகவும் அருமையான படங்களுடன் கூடிய புனிதப்பயணக்கட்டுரை.
பதிலளிநீக்குஅதற்குள் வேகவேகமாக முடித்து விட்டதே என உள்ளது. அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டீர்கள். OK
பாராட்டுக்கள். வாழ்த்துகள். VGK
புனிதப் பயணம் தர்சித்தோம். மிகஆனந்தமாக இருந்தது.
பதிலளிநீக்குஎனக்கும் விரைவில்முடிந்துவிட்டதே என்ற எண்ணம்தான் வந்தது.
உங்கள் தலயாத்திரைகளின் பயனாக நாங்களும் திருக்கைலாய யாத்திரை உட்பட பல புண்ணிய தலங்ளையும் தர்சித்துக் கொண்டோம்.
மிக்க நன்றி.
அன்பு கோமதி, முதலில் படித்ததுதான். பிறகு இங்கே வரவில்லை. அருமையான இடங்கள் படங்கள் நீங்கள் சொல்லி இருக்கும் விதம் எல்லாமெ எனக்கும் புண்ணியம் கிடைத்தது போலிருக்கிறது. அந்தப் படிகளைப் பார்த்தாலே ஏறுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்று தோன்றியது.உங்கள் பயணம் இனிது முடிந்தது கண்டு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநல்ல தொகுப்புகள்..
பதிலளிநீக்குதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
சில கஷ்டங்கள் இருந்தாலும் சார்தம் யாத்திரை திருவருள் துணையோடு இனிது முடிந்தது.
பதிலளிநீக்குபயணத்தின் போதும் பயணம் முடிந்து வந்தபோதும் மிகவும் இன்னலாக இருந்தது..
மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், பேரக் குழந்தையின் வரவால் ஆன்மீக தொடர் விரைவில் முடிக்கப் பட்டது.
பதிலளிநீக்குஆனால் முடிந்தவரை எல்லாவற்றையும் பகிர்ந்து விட்டேன்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
வாங்க வல்லி அக்கா, வீட்டில் பேரன், மருமகள் ஊரிலிருந்து வந்து இருக்கிறார்கள். பேரனுடன் பொழுது போகிறது, உறவினர் வருகை எல்லாம் இருப்பதால் இணையத்தில் இணைய முடியவில்லை. உங்கள் வரவுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க தொழிற்களம் குழு, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க இராஜராஜேஸ்வரி, நீங்கள் சொன்னது போல் இந்த ஆன்மீகப் பயணம் மறக்க முடியாதது தான்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மிகவும் அருமை அம்மா
பதிலளிநீக்குநீங்கள் சென்று வந்த இடங்களை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குதொடர்க!
பிரமாதம். படங்கள் விவரங்கள் எல்லாமே சேர்த்து வைத்துப் படிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குகடைசியில சனிக்கு எருமை வாகனம்னு சொல்லிட்டீங்களே! புதுசு.
வாங்க தமிழ்ச்செல்வி, உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க முரளிதரன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க அப்பாத்துரை சார், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குபதிவுகளை சேர்த்து வைத்து படித்தமைக்கு நன்றி.
வடநாட்டில் எல்லா கோவில்களிலும் சனி பகவானுக்கு எருமை வாகனத்துடன் தான் வைத்து வழி படுகிறார்கள். வடநாட்டில் உள்ள தமிழ் கோவில்களில் உள்ள நவகிரகத்தில் மட்டும் காகம் வாகனமாய் உள்ளது.
தொடரின் சில பகுதிகள்தான் படித்தேன்..அருமையான படங்களுடன் உபயோகமான தகவல்கள்....நன்றி
பதிலளிநீக்குஅழகிய புகைப்படங்களுடன் அருமையாக அமைந்துள்ளது இப்பதிவு. உங்களுடன் ஒரு புனித பயணத்தில் பங்குகொள்ள வாய்ப்பு கிடைத்தது இப்பதிவின் மூலம் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாங்க பாசமலர், பதிவு உபயோகமாய் இருந்தது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி.
வாங்க வியபதி,நீங்களும் எங்களுடன் புனித பயணத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி.
நலம்தானே அம்மா இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா.
பதிலளிநீக்குவாங்க இந்திரா, நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலமா இந்திரா? பேரன், மருமகள் வந்து இருந்தார்கள். மதுரைக்கு அவள் அம்மாவீட்டுக்கு போய் இருக்கிறாள்.பேரன் இந்த பாட்டியை மகிழ்வித்துவிட்டு அந்த பாட்டியை மகிழ்விக்க போய் இருக்கிறான்.
பதிலளிநீக்குநவராத்திரி சமயம் இங்கு வருவார்கள்.மகனும் அப்போது இங்கு வருவான்.
உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
உங்கள் நலம் விசாரிப்புக்கு மிக நன்றி இந்திரா.
அருமையான படங்கள் காணொளி
பதிலளிநீக்குசிறந்ததை சிறப்பாகத் தரவேண்டும் என
தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள்
மலைக்க வைக்கிறது
விடுபட்ட பதிவுகளை தொடர்ந்து
படித்துவருகிறேன்
பகிர்வுக்கு மிக்க நன்றி
வாங்க ரமணி சார், விடுபட்ட பதிவுகளை படித்து வருவது அறிந்து மகிழ்ச்சி. காணொளி பதிவிட வேண்டும் என்பதால் என் கணவர் எடுத்து உதவினார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி.
ஒன்பது பதிவையும் படித்தேன் , மிக அருமை, உங்கலுடனேயெ வந்தது போலவே இருந்தது, எல்லாம் வல்ல இரைவன் உங்கலுக்கு எல்ல நலமும் அருலட்டும்
பதிலளிநீக்குஇன்னும் அதிக விவரங்கள் எதிர்பார்த்தேன். உங்களைக் கூட்டிச் சென்றவர் எப்போதெல்லாம் உணவளித்தார், அது நன்றாக இருந்ததா, தங்குமிடம் ஏன் வசதிக்குறைவு என்று சொன்னீர்கள், ஏன் தேவப்பிரயாகையில் அல்லது மற்ற இடங்களில் தீர்த்தாமாடவில்லை?, பத்ரிநாத்தில் காலை 10 மணிக்குச் சென்று மறுநாள் 11 மணிக்குத்தான் கிளம்பினீர்கள். ஏன் யமுனை ஆறு உற்பத்தி ஸ்தானத்துக்குச் செல்லவில்லை? நிறைய கேள்விகள் இருக்கின்றன....ஆனால் நீங்கள் போய் 11 வருடங்கள் ஆகிவிட்டன. நினைவில் இன்னும் இருக்குமா என்று தெரியவில்லை. வடநாடு யாத்திரை என்றால் (ஆந்திராவைத் தாண்டிவிட்டாலே வடநாடுதான்) ஏசியில்தான் பயணிக்கணும். இல்லையென்றால் நமக்கு இடம் கிடைக்காது, பொருட்களும் பாதுகாப்பாக இருக்காது.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//இன்னும் அதிக விவரங்கள் எதிர்பார்த்தேன். உங்களைக் கூட்டிச் சென்றவர் எப்போதெல்லாம் உணவளித்தார், அது நன்றாக இருந்ததா//
மனோகரா டிரவல்ஸ் மூலம் போனோம், நிறைய யாத்திரைகள் அவருடன் தான் சென்று இருக்கிறோம். மூன்று வேளையும் உணவு அளித்தார்கள், காலை காப்பி, மாலை காப்பி, சிற்றுண்டி என்று .
//தங்குமிடம் ஏன் வசதிக்குறைவு என்று சொன்னீர்கள், ஏன் தேவப்பிரயாகையில் அல்லது மற்ற இடங்களில் தீர்த்தாமாடவில்லை?, பத்ரிநாத்தில் காலை 10 மணிக்குச் சென்று மறுநாள் 11 மணிக்குத்தான் கிளம்பினீர்கள். //
சில இடங்களில் நான்கு பேர் தங்குவது போல கொடுத்தார், சில இடங்களில் மட்டும் இரண்டு பேர் தங்கும் இடம் கொடுத்தார், மனோகார டிரவலஸோடு கலை, இலங்கை, கர்நாடகா தலயாத்திரை சென்று இருக்கிறோம். அங்கு எல்லாம் மனோகர், அவர் மகன்களே உடன் வந்தார்கள்.
சார்தம் யாத்திரை போது ஆனந்த என்ற பொறுப்பாளைரை அனுப்பினார், அவரால் மக்களை சரி வர கைடு செய்ய முடியவில்லை, உடன் வரமாட்டார் போய் வந்து விடுங்கள் இத்தனை மணிக்கு இங்கு வந்து விடுங்கள் என்பார். உடன் வந்தவர்களும் சிலர் சுற்றுலா வந்தது போல வந்தார்கள். அதனால் புனித நதிகளில் தீர்த்தம் தலையில் தெளித்து கொண்டோம். சிலவற்றில் நீராடினோம்.
சார் தான் சில இடங்களை கண்டிப்பாய் காட்ட வேண்டும் என்று போராடி பார்க்க வைத்தார்.
எந்த நோக்கத்திற்கு வந்து இருக்கிறோம் என்று தெரியாமல் வழியில் காணும் இடங்களை பார்த்து கொண்டு இருந்தார்கள் சிலர்.
//வடநாடு யாத்திரை என்றால் (ஆந்திராவைத் தாண்டிவிட்டாலே வடநாடுதான்) ஏசியில்தான் பயணிக்கணும். இல்லையென்றால் நமக்கு இடம் கிடைக்காது, பொருட்களும் பாதுகாப்பாக இருக்காது//
ஏசியில் அலகாபாத் பயணம் செய்த போதும் இப்படி அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. சீட் நம்பர் இரண்டு மூன்று பேருக்கு ஒரே மாதிரி
கொடுத்து குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இறைவனை காணபோவதால் இந்த இடையூறுகளை பெரிது படுத்த வில்லை.
நீங்கள் சொன்னது போல நிறைய மறந்து விட்டது, சார் இருந்தால் சரியாக விவரங்கள் சொல்வார்கள்.
உங்களுடன் யாத்திரை வந்தவர்கள், டோலி சர்வீஸ் இல்லாமல், நடந்து சென்றார்களா, யாத்திரை நடத்தியவர் தன்மையாக நடந்துகொண்டாரா? டோலியில் செல்ல நிறைய பணம் செலவாயிருக்குமே, அதற்கேற்றபடி தரிசனம் நன்றாகக் கிடைத்ததா? பல இடங்களில் ஜரிகண்டி என்று எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு//உங்களுடன் யாத்திரை வந்தவர்கள், டோலி சர்வீஸ் இல்லாமல், நடந்து சென்றார்களா, யாத்திரை நடத்தியவர் தன்மையாக நடந்துகொண்டாரா? டோலியில் செல்ல நிறைய பணம் செலவாயிருக்குமே, அதற்கேற்றபடி தரிசனம் நன்றாகக் கிடைத்ததா? பல இடங்களில் ஜரிகண்டி என்று எழுதியிருக்கிறீர்கள்.//
நீக்குநாங்கள் கேதாருக்கு டோலியில் சென்றோம். எங்களுடன் வந்தவர் இரண்டு பேர் மட்டும் நடந்து வந்தார்கள்,
திருக்கோயில் நிர்வாகம் நல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் .ஒவ்வொருவரின் எடையும் கருவிமூலம் பார்க்கப்படுகிறது. 60கிலோவுக்குக்கு மேல் போனால் 5000ரூபாய் எனவும், அதேபோல் எடை அதிகமாக அதிகமாக ரூபாயும் அதிகமாய்ப் போய்க் கொண்டே இருக்கிறது. எங்களுடன் வந்த ஒரு அம்மா ரொம்ப வெயிட். அவர் ஒருவருக்கே எட்டாயிரம் ரூபாய் வாங்கிவிட்டார்கள். எங்கள் இரண்டு பேருக்கு டோலியில் செல்ல மொத்தம் 8200 ரூபாய் ஆகியது.
திருக்கேதாரம் தல யாத்திரை -7 பதிவில் சொல்லி இருக்கிறேன்.
நிரைய இடங்களில் தரிசனம் நன்கு கிடைத்தது சில இடங்களில் போய் கொண்டே இருங்கள் என்றார்கள். இறையருளால் பயணம் அமைகிறது. நம் கையில் ஒன்றும் இல்லை.
பழைய பதிவுகளை படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நாங்கள் கேதார்நாத் , பத்ரிநாத் ,யமுனோத்திரி , கங்கோத்திரி ஆகிய
நீக்குஇடங்களுக்குச் செல்ல முடிவுசெய்து , ‘மனோகர் டிராவல்ஸ் ’ மூலம்
திருவருள் துணையோடு 03.05.2012 வியாழன் அன்று, சார்தம் தரிசன் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டோம்.//
முதல் பதிவில் சொல்லி இருக்கிறேன் நெல்லை. நான் மீண்டும் படித்து வருகிறேன். உங்களுக்கு நன்றி.
https://mathysblog.blogspot.com/2012/08/1.html உணவு, தங்கும் இடம் எல்லாம் போட்டு இருக்கிறேன்.
நீக்குhttps://mathysblog.blogspot.com/2012/08/2.html டோலி பயணம் அனுபவம்