சனி, 22 ஆகஸ்ட், 2020

பிடித்து வைத்தாலும் பிள்ளையார்

இந்த வருடம்  மஞ்சளில் நான் செய்த பிள்ளையார் 

களிமண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல் கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம், போன்ற ரத்தினங்கள் தந்தம்  , வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம் , வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர்  வடிவத்தை அமைக்கலாம். என்று சொல்வார்கள். ஆனால் எளிமையாக மஞ்சள், பசுஞ் சாணத்தில் செய்து வணங்கினாலே மகிழ்ந்து போவார் பிள்ளையார்.


என் கணவர் பழைய பிள்ளையாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்தார்கள்.


மகன் செய்து அனுப்பி வைத்த பிள்ளையார் , இரண்டு யானைகள்
பிள்ளையாருக்குப் பிடித்த பிரசாதங்கள் :- அவல். கடலை பொரி, அதன் மேல் அச்சு வெல்லப்பிள்ளையார், எள் உருண்டை,  மோதகம், பிடி கொழுகட்டை,  கொண்டைக்கடலை சுண்டல். நாவல்பழம், விளாம்பழம், வெள்ளரி, மாதுளை, வாழை .
40 வருடங்களைக் கடந்த  பசுஞ் சாணப்பிள்ளையார்

தைப் பொங்கல் அன்று பசுஞ்சாணத்தில் செய்த பிள்ளையார். அவர் மேல் அருகம்புல் வைத்ததால் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பார்கள். 40 வருடம் கடந்தும் அருள்பாலித்து வருகிறார்.


இந்த முறை பிள்ளையார் வாங்கவில்லை  மஞ்சள் பிள்ளையார் , சந்தனக்காப்புப் பிள்ளையார் செய்து அவரை வணங்கியாச்சு. 


அருண்கிரி நாதர் அருளிய  திருப்புகழ் பாடல்

"யாரை வணங்கிட வேண்டும் ! பிள்ளையாரை  வணங்கிட வேண்டும்!" பாடல் கேட்டு இருப்பீர்கள். மீண்டும் கேட்டுப் பாருங்களேன், நன்றாக இருக்கும். 

எல்லோருக்கும் நலங்களை வேண்டிக் கொண்டோம் . வரும் நாட்கள் அச்சமில்லாமல்  மக்கள் எல்லோரும் ஆரோக்கியமாய் மகிழ்வாய் வாழ வேண்டும் 

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !

 --------------------------------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. பிள்ளையார் படங்கள் சிறப்பாக இருக்கிறது. அனைவருக்கும் நலம் தரட்டும் பிள்ளையார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      ஆமாம், அனைவருக்கும் நலம் தரட்டும் பிள்ளையார்.

      நீக்கு
  2. எப்பொழுதுமே தங்களது பதிவுகளில் பொக்கிஷம் போல ஏதாவதொன்று இருக்கும்.. இந்த முறை 40 வருடங்களைக் கடந்த பசுஞ்சாணப் பிள்ளையார்...

    பழைமையைக் கட்டிக் காத்துப் பேணுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே...

    ஐங்கரனின் திருவருள் அனைவருக்கும் ஆகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
      திருவெண்காட்டில் இருக்கும் போது பக்கத்தில் எல்லோர் வீடுகளிலும் பசுமாடு இருக்கும்
      அதனால் பசுஞ்சாணம் கிடைக்கும் . எந்த ஓரு விசேஷத்திற்கும் மஞ்சள் பிள்ளையாரும்,
      பசுஞ்சாணம் பிள்ளையாரும் வைத்து விடுவோம். மாயவரம் வந்தவுடன் பசுஞ்சாணம் கிடைக்கவில்லை, ஒரு தடவை ஒரு நண்பர் வீட்டுக்கு போனபோது கிடைத்தது அதை பிள்ளையாராக பிடித்து வைத்தேன் தை பொங்கலுக்கு அப்படியே அதை வைத்துக் கொண்டேன் நாள்பட நாள்பட அதில் பிள்ளையார் உருவம் தெரிய ஆரம்பித்து விட்டது என் கண்களுக்கு அதனால் அதை பத்திரமாக வைத்து இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      ஐங்கரனின் திருவருள் அனைவருக்கும் ஆகட்டும்...
      அப்படியே நானும் வேண்டிக் கொண்டேன்.

      நீக்கு
  3. ஆஹா பிள்ளையாரை அழகாக அலங்கரித்துவிட்டீங்கள் கோமதி அக்கா... கொழுக்கட்ட்டை செய்திருக்கிறீங்கள்.. நான் இம்முறை கொழுக்கட்டை செய்யவில்லை.. எல்லோரும் தருவார்கள் என்பதால கற்கண்டுப் பொங்கல் கேட்டார் என்னிடம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //நான் இம்முறை கொழுக்கட்டை செய்யவில்லை.. எல்லோரும் தருவார்கள் என்பதால கற்கண்டுப் பொங்கல் கேட்டார் என்னிடம்:))//

      அப்புறம் என்ன! பக்தையிடம் தனக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டார் மகிழ்ச்சி.
      இன்று ஆவணி ஞாயிறு விஷேசம் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவோம்.இன்று அக்கா சர்க்கரை பொங்கல் வைத்து பிள்ளையாருக்கும் வைத்து விடுவேன்.மூன்று நாள் இருப்பாரே பிள்ளையார் வீட்டில் ஏதாவது செய்து வழி படுவேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  4. பிள்ளையார்கள் எல்லாம் மிக அருமை. பசுஞ்சாணம் பிடித்த. 40 வருடப் பிள்ளையார் அதிசயம். பக்தர்கள் வீட்டில் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டார் இங்கே இப்போதுதான் பூஜை முடிந்தது. கொழுக்கட்டை, பாயசம் ,பழங்கள்.
    உங்கள் சந்நிதியில். நாவல் பழங்களையும் பார்ததேன். பக்தியுடன் படைக்கப்பட்டு விநாயகரும் ஆனந்தமாக இருக்கிறார் வாழ்ததுகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //பக்தர்கள் வீட்டில் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டார்//

      எளிமையானவர் எங்கும் எப்போதும் அவரை காணலாம். மாயவரத்தில் வீட்டுப் பக்கத்தில் நாலு தெரு நடுவிலும் பிள்ளையார் இடம் பிடித்து கொண்டு இருப்பார். அவரை பார்க்காமல் எங்கும் போக முடியாது.

      நாவல் பழம், விளாபழம் கிடைத்தது. விளாபழம் உடைத்தால் சில சமயம் ஏமாற்றும் இந்த முறை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
      தங்கள் வீட்டில் நல்ல படியாக பூஜை ஆனது மகிழ்ச்சி.

      அவர் ஆனந்தமாக இருந்து கொண்டு அனைவருக்கும் ஆனந்தம் அருளட்டும்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  5. சாணிப்பிள்ளையார் அதிசயிக்க வைக்கிறார். மஞ்சளில் நாங்களும் பிள்ளையார் பிடிப்பது உண்டு என்றாலும் இத்தனை பெரிதாகப் பிடித்தது இல்லை. நானும் வெறும் பாயசம் மட்டும் தான் வைத்தேன். தேங்காய் உடைத்து வெற்றிலை, பாக்குப் பழங்களோடு பிள்ளையாருக்குக் காட்டியாயிற்று. பிடி கொழுக்கட்டையாவது பண்ணலாம்னு நினைச்சு முடியலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      கைவிரல் காயம் வலி சரியாகி விட்டதா?
      மஞ்சளில் நானும் சின்னதாகத்தான் பிடிப்பேன், இந்த முறை புது பிள்ளையார் வாங்கவில்லை அதனால்தான் பெரிதாக மஞ்சபிள்ளையார் பிடித்தேன்.

      பிள்ளையாருக்கு நம்மால் முடிந்ததை வைத்து கும்பிட வேண்டியதுதான்.
      அம்மா ஆமைவடை, உளுந்து வடை, வெல்லம் பாகு வைத்து பாசிப்பருப்பு, தேங்காய், எள் வறுத்து போட்டு மாவில் பிடி கொழுகட்டை செய்வார், சுண்டல், மோதகம் , உருண்டைகள் வித விதமாக முந்தின நாளே செய்து வைத்து விடுவார்.(கடலை உருண்டை, பாசிப்புருப்பு நெய் உருண்டை, பொட்டுகடலை உருண்டை, பொரி விளங்காய் உருண்டை, எள் உருண்டை)
      குழந்தைகள் நிறைய சாப்பிட அவர்களுக்கு நிறைய நாள் வரும் பாகு காய்ச்சி ஊற்றிய கொழுக்கட்டை ஒரு வாரம் சாப்பிடலாம், உருண்டைகள் நிறைய

      நீக்கு
  6. உங்கள் படங்கள், பிள்ளை செய்து அனுப்பிய யானைகளோடு கூடிய பிள்ளையார் எல்லாம் வெகு அழகு.படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. ஆவணி ஞாயிறு நாங்க மாவிளக்கும் போடுவோம். இப்போது தான் போக முடியாதே! நினைக்க நினைக்க 40 வருஷங்களாக இருக்கும் சாணிப் பிள்ளையார் அசத்துகிறார். நீங்களும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவிளக்கு அம்மன் கோவில்களில் ஆவணி ஞாயிறு செய்வார்கள்.
      பதிவை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  7. பிள்ளையாரின் அலங்காரம் மிக அழகு! பலகாரங்கள் யாவும் அசத்தல்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //பிள்ளையாரின் அலங்காரம் மிக அழகு! பலகாரங்கள் யாவும் அசத்தல்!!//
      ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. மஞ்சள் பிள்ளையார் விசேஷம் தான். நேர்த்தியான கைவண்ணம்.

    என் தந்தையார் குடும்பம் கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் கணபதி அக்ரஹாரம் என்ற கிராமம். இப்பொழுது ஊர். அந்த ஊரில் பிறந்தவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாரைக் பலகையில் வைத்துக் கொண்டு வந்து கோயிலில் ஒன்று சேர குழுமி, பிள்ளையாரைத் துதித்து வணங்குவது வழி வழி வந்த வழக்கம். அதனால் கொலுவில் வைக்கும் பெரிய பிள்ளையார் உருவை வைத்து பிள்ளையார் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடுவது எங்கள் வழக்கமாயிற்று.

    கணபதி அக்ரஹாரத்தில் பிறந்தவர்கள் இந்த தேசம் பூராவும் விரவியிருக்கிறார்கள். 'அட, நீங்கள் கணபதி அக்ரஹாரமா?.. நான் கூடத் தான்..' என்ற பல அறிமுகங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.


    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

    //மஞ்சள் பிள்ளையார் விசேஷம் தான். நேர்த்தியான கைவண்ணம்.//
    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.


    //அந்த ஊரில் பிறந்தவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாரைக் பலகையில் வைத்துக் கொண்டு வந்து கோயிலில் ஒன்று சேர குழுமி, பிள்ளையாரைத் துதித்து வணங்குவது வழி வழி வந்த வழக்கம்.//

    கூட்டுப்பிரார்த்தனை ஒன்று சேர்ந்து வணங்குவது மகிழ்ச்சியான விஷயம்.
    எங்கள் மாமியார் வீட்டுப்பக்கத்தில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் அவர்கள் சங்கத்தில் பிள்ளையார் சதுர்த்தியை மாலை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவார்கள். எங்களையும் அழைப்பார்கள் மாலை நேரம் என்பதால் கலந்து கொள்வோம், நன்றாக இருக்கும் .

    உங்கள் பிறந்த ஊரின் சிறப்பை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு
  10. யூ ட்யூபில் மஞ்சள் பிள்ளையார் செய்முறை இருந்தது அதில் அழகாக வடிவமைத்து சதுர்த்தி கொண்டாடினார்கள் என் இளையமகன் வீட்டில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்

      //யூ ட்யூபில் மஞ்சள் பிள்ளையார் செய்முறை இருந்தது //
      ஓ அப்படியா , அது மாதிரி செய்து உங்கள் இளையமகன் வீட்டில் சதுர்த்தி கொண்டாடியது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. அருமை அம்மா... சிறப்பித்து விட்டீர்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      இறைவன் அருளால் பண்டிகைகள் நடக்கிறது இப்போது.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  12. படங்கள் அனைத்துமே அழகும்மா.

    விநாயகர் சதுர்த்தி சிறப்பாகச் சென்றது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      விநாயகர் சதுர்த்தி நல்லபடியாக நிறைவு பெற்றது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. சிறப்பான பகிர்வு. மஞ்சள் பிள்ளையார், சந்தனக் காப்பு அழகு. 40 வருடம் பிள்ளையார் ஆச்சரியம்.

    பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      கடைக்கு போய் பிள்ளையார் வாங்கவில்லை இந்த வருடம் அதனால் மஞ்சள் பிள்ளையார், சந்தனக் காப்பு என்று செய்து வழிபட்டோம்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் வீட்டில் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி பூஜை நடைப்பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. தாங்கள் செய்த மஞ்சள் பிள்ளையார் மிக அழகாக இருக்கிறார். தங்கள் கணவர் அலங்கரித்த சந்தன பிள்ளையார். மேலும், தங்கள் மகன் பூஜைக்காக அனுப்பி வைத்த யானைகளும், பிள்ளையாருமாக இந்த வருட தங்கள் வீட்டு சதுர்த்தி விழாவை சிறப்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

    40 வருடங்களாக நீங்கள் பராமரித்து வரும் சாணி பிள்ளையார் உண்மையிலேயே அதிசயமான இறையருள்தான். அவரையும் மனதாற வணங்கிக் கொண்டேன். பதிவும், படங்களும், விநாயகர் மேல் பாடலுமாக மிக ரசனையுடன் இருந்தது.

    எனக்கும், நேற்றும், இன்று வேலைகள் இருந்ததினால் தங்களுக்கு தாமதமாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      இந்த வருடம் பிள்ளையார் வாங்க முடியவில்லை என்றாலும் புதிதாக மகன் அனுப்பி விட்டான் பிள்ளையார் அதுவே மன நிறைவு.
      அனைத்து பிள்ளையார்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
      பதிவையும், பாடல்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி .

      நீக்கு
  16. எவ்வளவு பிள்ளையார் படங்கள்,சிலைகள் இருந்தாலும் வீட்டில் அம்மா மஞ்சளில்தான் பிடித்து முதலில் வைப்பார்கள். அதில்தான் நிறைவு மகிழ்ச்சி இருக்குமென்பார். நீங்கள் மிக அழகாக செய்திருக்கீங்க அக்கா. சூப்பரா இருக்கு.
    சார் செய்த சந்தனகாப்பும் அழகா இருக்கு. மகன் அனுப்பிய பிள்ளையார் உங்களுக்கு மனநிறைந்த மகிழ்ச்சியை தந்திருக்கும்.
    பிரசாதங்கள் நிறைய செய்திருக்கீங்க போல நாவல்பழம் கூடவே. சாப்பிட்டு எத்தனை வருடம்? ஊரில் சீசன் இருக்கும்ப்போது மரத்தின் கீழ்தான் சாப்பிட்டு வாய்,நாக்கு நாவல் நிறத்தில் இருக்கா எனபார்ப்போம்.
    40 வருசமா வைத்திருக்கிறீங்களாஆஆ.. வாவ் சூப்பர் அக்கா. பொக்கிஷங்கள் இவை எல்லாமே. நீங்கதான் பழையதை எல்லாம் பாதுகாப்பாக வைத்திருப்பதில் எக்ஸ்பார்ட் ஆச்சே. சாணிபிள்ளையாரும் அப்படியே இருக்கார். அவரின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் அக்கா.
    திருபுகழ் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஊரில் கோவில்களில் ஒலிபெருக்கியில் கேட்டது. சில பக்திபாடல்கள்,இப்படியான திருப்புகழ்,தேவரங்கள் கேட்கும்போது அவைதான் ஞாபகம் வரும்.
    விநாயகர் சகல நலன்களையும் உங்களுக்கும்,குடும்பத்தினர்களுக்கும் தரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்

      //எவ்வளவு பிள்ளையார் படங்கள்,சிலைகள் இருந்தாலும் வீட்டில் அம்மா மஞ்சளில்தான் பிடித்து முதலில் வைப்பார்கள்.//

      ஆமாம் அம்மு, முதலில் பிள்ளையாரை மஞ்சளில் தான் பிடித்து வைக்க வேண்டும்.
      சின்னதாக மஞ்சளில் பிடித்து வைப்பேன் எந்த ஒரு பண்டிகைக்கும்.

      பலகாரம் செய்யும் போது அந்த பலகார மாவில் முதலில் பிள்ளையார் பிடித்து வைத்து விட்டுதான் பலகாரம் செய்ய ஆரம்பிப்போம்.

      பிள்ளையார் செய்யும் இடத்தில் கூட்டம் அதிகம் காத்து இருக்க வேண்டி இருந்ததால் வாங்கவில்லை புதிதாக. மகன் அனுப்பிய பிள்ளையார் மனதுக்கு நிறைவு தந்தது உண்மை.

      பள்ளி நாளில் பள்ளி வாசலில் விற்கும் நாவாபழம் வாங்கி சாப்பிட்டு நீங்கள் சொல்வது போல் நாக்கை நீட்டிப் பார்த்து நீல நிறத்தில் இருக்கா என்று ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்வோம்.

      வாங்கிய பழத்தில் பாதிதான் தேறியது. பாதி அழுகி விட்டது,
      விளாபழம் இன்னும் உடைத்துப் பார்க்கவில்லை.

      நீங்கள் சொல்வது போல் சாணிபிள்ளையார் அருள்புரியட்டும்.
      பிள்ளையார் சதுர்த்தி என்றால் மாயவரத்தில் நாலு தெருவில் உள்ள கோவில்களிலும் ஒலிபெருக்கியில் பக்தி பாடல்கள் ஒலிக்கும். உங்களுக்கு ஊர் நினைப்பு வந்தது மகிழ்ச்சி.
      எனக்கு பலகாலம் மாயவரத்தில் இருந்து விட்டதால் நினைப்பு வருகிறது.

      //விநாயகர் சகல நலன்களையும் உங்களுக்கும்,குடும்பத்தினர்களுக்கும் தரட்டும்//

      பதிவை படித்து அருமையாக கருத்துச்சொல்லி வாழ்த்துக்களை சொன்னதற்கு நன்றி அம்மு.




      நீக்கு
  17. மஞ்சள் பிள்ளையார், சந்தனகாப்பு பிள்ளையார், மகன் அனுப்பிய பிள்ளையார்+யானைகள் சிறப்பாக இருக்கின்றன. 40 வருட சாணிப்பிள்ளையார் அசத்துகிறார். என் கணவர் இறந்து ஒரு வருட காரியங்கள் பிள்ளையார் சதுர்த்திக்கு முன்தினம் முடிந்து, பிள்ளையார் சதுர்தியிலிருந்து பண்டிகைகள் கொண்டாட துவங்கினோம். பாயசம்,வடை,அப்பம்,கொழுக்கட்டை,சுண்டல் மற்றும் பழங்கள் படைத்தோம்  இங்கே பெங்களூரில் நாவல் பழம் கிடைப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      உங்கள் வீட்டில் பண்டிகைகள் கொண்டாட துவங்கி விட்டது மகிழ்ச்சி.உங்கள் கணவர்
      என்றும் உங்களுடன் இருந்து குடும்பத்திற்கு ஆசி வழங்குவார்.

      அப்பம் செய்வோம் நாங்களும் சாப்பிட ஆள் இல்லையே அதனால் இன்று வடை செய்து பிள்ளையாருக்கு விடை கொடுத்தேன், அடுத்த முறை நல்லபடியாக வீட்டுக்கு வாங்க பிள்ளையார் அப்பா என்று வேண்டிக் கொண்டு.

      பிள்ளையார்களை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    2. @பானுமதி, நானே கேட்க இருந்தேன். அதற்குள்ளாக ஒரு வருடம் ஓடி விட்டதே! நல்லபடிக் காரியங்கள் முடிந்து பண்டிகைகள் ஆரம்பித்ததுக்கும் இறைவனுக்கு நன்றி. உங்கள் பெண்ணின் பிரசவம் ஆகி விட்டதா? உங்களுக்குக் கனடா செல்ல விசா கிடைத்ததா? இங்கே கேட்பதற்கு கோமதி, பானுமதி இருவரும் மன்னிக்கவும்.

      நீக்கு
    3. கீதா, காலம் யாருக்காவும் நிற்காமல் அத வேலையை அது பார்க்கிறது.இறந்தவர்களுக்கு காலம் ஓடி விடும்,

      பெண்ணின் பிரசவத்திற்கு உதவிக்கு போக முடியவில்லையா பானுவிற்கு?

      நீக்கு
    4. அவரோட பதிவிலோ எங்கள் ப்ளாகிலோ போட்டிருந்த நினைவு. கனடா செல்வதற்குள்ளாகக் கொரோனா காலம் முடியணும் என்று சொல்லி இருந்தார். அதான் கேட்டேன்.

      நீக்கு
    5. கீதா, பானு உங்களுக்கு பேசுவார்கள் .
      கொரோனா சரியாகி எல்லோரும் நினைத்த இடங்களுக்கு போக வர இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.

      நீக்கு