வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் இப்போது "முத்தையா சுவாமி கோயில் "என்றே அழைக்கப்படுகிறது.
மதுரை கோச்சடையில் இந்த கோயில் இருக்கிறது. மதுரை தேனி சாலையில் போய் வர வசதியாக உள்ளது. மதுரை ரயில்நிலையத்திலிருந்தும் சிம்மக்கல் பேருந்து நிலையத்திலிருந்தும் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இந்த கோயிலுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி மகள் குடும்பத்தோடு சென்று வந்தோம். அய்யனார் கோயில் பார்க்க வேண்டும் என்று பேத்தி, பேரன் ஆசை பட்டதால் போய் வந்தோம்.