
திருப்பரங்குன்றம்
இன்று காலை நடந்த பால் அபிஷேக படம் அண்ணன் மகன் அனுப்பினான்.
அருணகிரிநாதர் அருளிய திருப்பரங்குன்றம் திருப்புகழ் .
இந்த காணொளியில் முருகன் கோயில் தெப்ப உற்சவம் தெரிகிறது. சிறிய பாடல்தான் கேளுங்கள்.
இன்று வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் மிக சிறப்பாக இருக்கும். திருப்பரங்குன்ற முருகனுக்கு என் தங்கை வீட்டில் தான் முதன் முதலில் அபிஷேகம் செய்வார்கள். அப்புறம் தான் மற்றவர்கள் அபிஷேகம் நடக்கும் முருகன் அருளால் பல தலைமுறைகளாக நடத்தி வருகிறார்கள்.
என்னை அழைத்தாள் . ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஊரிலிருந்து உறவினர் வருகை, மற்றும் உடல் நிலையும் சரியில்லை அதனால் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து முருகனுக்கு வைத்து வழிபட்டு விட்டேன்.