முதலில் நிற்பது எங்கள் கார்
கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழா
முன்பு எழுதிய பதிவு இனிய நினைவுகளை திரும்பி பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை
உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி
வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய
நீர்நிலைகளையும் வணங்கினர். இப்போது நீர்வளங்களைத்
தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன.
அதனால் ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில்
பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா
ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு
விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப்
பார்த்து வந்து எழுதிய பதிவு இது.