அரிசோனா மகா கணபதி ஆலயத்தில் உள்ள பெருமாள்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியாேனே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே.
- குலசேகர ஆழ்வார் பாசுரம்
தாயார்
அலர்மேல் மங்கை தாயாரே போற்றி!
அகிலாண்ட கோடி ஈஸ்வரியே போற்றி!
திருச்சானூர் உறையும் தேவியே போற்றி!
திருமால் மார்பில் வாழ்பவளே போற்றி!
அகிலாண்ட கோடி ஈஸ்வரியே போற்றி!
திருச்சானூர் உறையும் தேவியே போற்றி!
திருமால் மார்பில் வாழ்பவளே போற்றி!
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே - சிவ வாக்கியர்
புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும்
திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும்
பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும்
உள்ள நட்பு மிக அழகானது ,ஆழமானது. என் மாமா பெண்ணின் (மதினி)
பக்கத்து வீட்டு இனிய தோழி ,எங்கள்குடும்பத்திற்கும் நட்பானார்கள்.
என் பத்மாமதினி வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போதெல்லாம் அவர்கள்
வீட்டில்தான் பொழுதைக் கழிப்போம் நல்ல கை வேலைகள் செய்வார்கள்.
நானும் என் அக்காவும் நிறைய அவர்களிடம் கற்றுக் கொண்டோம்.
எங்கள் அப்பாவிற்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊருக்கு வருவார்கள்.
அவர்களுடன் அந்த ஊர்க் கோவில்கள் , சினிமா என்று அவர்கள் வந்தால்
பொழுது மகிழ்ச்சியாக போகும். அம்மாவிற்கு பின் எங்கள் சகோதர சகோதரி வீடுகளுக்கும் அவர்களின் வரவு தொடர்ந்தது.
என் கல்யாணம், என் மகள், மகன் கல்யாணம் எங்கள் மணிவிழா என்று
அனைத்துக்கும் வந்தார்கள்.
அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் ’உங்கள் வீட்டுக்குப் புரட்டாசி
மாதம் தான் வரவேண்டும், இல்லையென்றால் கத்திரிக்காய் ,
வாழைக்காய் போடுவீர்கள்.நாக்கு செத்து விடும் என்பார்கள்.
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு
புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருந்து தளிகை படைத்து
அக்கம் பக்கத்தில் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்து
சாப்பிடச் சொல்வார்கள்.
நாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா,
நாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா,
பூரி மசால், புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம் என்று கொண்டு வந்து
கொடுத்து அன்பாய் நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வார்கள்.
குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் இறைவன் அவர்களுக்கு
அருளவில்லை. எப்படி அருள்வான் அவன் வேறு முடிவு
செய்து இருக்கும் போது! நிறைய பக்கத்துவீட்டு குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால்
அவை தங்களின் அம்மா வந்தவுடன் அக்காவை விட்டுப்போய்விடுவார்கள்.
அதனால் அக்கா மனம் சோர்ந்து போய் வேறு முடிவு எடுத்தார்கள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்று எந்த குழந்தை தன்னைப் பார்த்து
மகிழ்ச்சியாக கையை பிடித்துக் கொள்கிறதோ அதை எடுத்துவந்து
வளர்ப்பது என்று முடிவு செய்து அது போல் தன்னைப் பார்த்து சிரித்த பெண் குழந்தையை எடுத்துவந்து வளர்த்தார்கள்.
பேசும் தெய்வம் படத்தில் தான் பெறாத குழந்தையை கொஞ்சி பாடும் பாடல்.
குழந்தையை தொலைத்த தாயின் நிலமையும், வழியில் கிடைத்த குழந்தையை
எடுத்து வந்த தாயின் மகிழ்ச்சியும் இந்த பாடலில் இருக்கும்.
பெண் குழந்தை வேண்டாம் என்று பெற்ற தாய் விட்டுச் சென்ற குழந்தையை
எடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும்! அந்தப் பெண்ணைப்
படிக்க வைத்து ,திருமணம் செய்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
இறைவன் தன் பக்தைக்கு பிடித்த மாதத்திலேயே அவர்களை
அழைத்துக் கொண்டான். போன செப்டம்பரில்,மகிழ்ச்சியாக தன் மகள் வீட்டுக்கு கிளம்பி பஸ்ஸுக்கு காத்து இருக்கும் போது காரில் வந்த எமன் அவர்களை
அடித்துச் சென்று விட்டான். அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது
அவர்களைப் பார்க்க வந்தவர்களில், அவர்கள் வளர்த்த அக்கம் பக்கத்து
குழந்தைகள், நட்பு வட்டம் தான் அதிகம். அவர்கள் இறந்ததற்கு
நான் போனபோது எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
மதுரைப் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கோயமுத்தூர்பிள்ளைகள் வந்து விட்டார்களா? அம்பிகாபுரத்திலிருந்து
எல்லோரும் வந்து விட்டார்களா என்று . மதுரைப் பிள்ளைகள் என்றால் எங்கள் குடும்பம். நாங்கள் அப்போதுதான் கயிலை போய் விட்டு வந்து இருந்தோம்,
கயிலை போய் விட்டு நேரே துக்கத்திற்கு போக கூடாது என்று அக்கம்
பக்கம் சொன்னார்கள், ஆனால் அவர்களை கடைசியில் பார்க்கும் தருணத்தை
இழக்க விரும்பவில்லை . போய் வணக்கம் தெரிவித்து வந்தேன்.
அக்காவிற்கு குழந்தைகள் இல்லையென்றால் என்ன ?அன்பால் பெற்றுக்
கொண்ட குழந்தைகள் எவ்வளவு? அவர்கள் நினைவுகளில் அவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் . போன சனிக்கிழமை அவர்களின்
முதல்வருட நினைவு நாள்.
காது கேட்காத குறை இருந்தாலும் அதைக் குறையாக எண்ணாமல்
பத்து நாட்களுக்கு ஒருமுறை ’கோமு எப்படி இருக்கே? தம்பி நல்லாருக்கா?
என்று போன் போட்டு கேட்டுவிடுவார்கள். நீ சொல்வதை இவளிடம் சொல்
கேட்டுக் கொள்கிறேன் ”என்று யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு
பேசிவிடுவார்கள்.
அவர்கள் நட்பு வட்டத்தில் நமக்கும் இடம் உண்டு. எல்லோரிடமும்
நம்மைப்பற்றி சொல்லி அவர்களைப் பற்றி நம்மிடம் சொல்லி நெடுநாள் பழக்கமானவர்கள் மாதிரி ஆக்கி விடுவார்கள். சின்ன டைரியில் போன் நம்பர் அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு முகவரி வைத்துக் கொண்டு தனியாக எந்த ஊருக்கும் சென்று விடுவார்கள். முன் பின் தெரியதவர்களும் அவர்களின்
அன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.
அன்பே தெய்வம்! அன்பே அனைத்தும்.
அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.
இந்த பேபி அக்காவின் இனிய தோழிதான் என் பத்மா மதினி
அவர்களைப்பற்றி கதையைதான் எங்கள் ப்ளாக்கில்
எழுதியனுப்பினேன்.
தவமாய் தவம் இருந்து தாய்மை பேறு
அடைந்த கதை. மகிழ்ச்சியாக நிறைவு செய்து இருப்பேன்.
முடிவாக எழுதி இருப்பேன்.
அழகு ரதம் பொறக்கும் என் தளத்தில் கதை முடிவு வேறு இருக்கும்
அது உண்மையான முடிவு.
சனி, 29 செப்டம்பர், 2012 ஆம் ஆண்டு போட்ட புரட்டாசி மாதமும் பேபி அக்காவும்
பழைய பதிவு
மீள் பதிவு புராட்டாசி மாதம் என்றால் அக்காவின் நினைவு அதிகம் வரும்.
இன்று படித்தேன் அவர்கள் பதிவை படிக்காதவர்கள் படிக்கலாம் என்று மீள்
பதிவு செய்தேன்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு உறவு, இப்படி ஒரு நட்பு எனக்கில்லையே என்கிற குறை வருகிறது மனதுக்குள். எவ்வளவு உயர்ந்த ஆத்மா...
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்,வாழ்க வளமுடன்
நீக்கு//இப்படி ஒரு உறவு, இப்படி ஒரு நட்பு எனக்கில்லையே என்கிற குறை வருகிறது மனதுக்குள். எவ்வளவு உயர்ந்த ஆத்மா...//
ஆமாம், உயர்ந்த ஆத்மா தான்.
இப்படி ஒரு புண்ணிய ஆத்மாவை பூமிக்கு அனுப்பி எப்படி வாழவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறான் ஆனால் அவர் முடிவு கொடூரமாக அமைந்திருக்கிறது.
பதிலளிநீக்கு//இப்படி ஒரு புண்ணிய ஆத்மாவை பூமிக்கு அனுப்பி எப்படி வாழவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறான் ஆனால் அவர் முடிவு கொடூரமாக அமைந்திருக்கிறது. //
நீக்குபாஸ் வர காத்து இருந்தார்கள் காலை தொங்கபோட்டு கீழே அமர்ந்து இருந்த போது காரை கன்னாபின்னா என்று ஓட்டி வந்து காலில் ஏற்றி விட்டான் .கால்கள் இல்லையென்றால் எப்படி வாழ முடியும் ? மனம் ஒடிந்து இறந்து விட்டார்கள் இறைவன் ஏன் அப்படி ஒரு முடிவை கொடுத்தான் என்ற கேள்வி மனதில் ஓடி கொண்டே இருக்கும்.
செப்டம்பர் மாதம் வந்தால் அக்காவின் நினைவு வந்து விடும் இல்லையா? இதற்கு முன் 2012 ஆம் வருடம் நீங்ககள் இட்ட பதிவை நான் பார்க்கவில்லை. இன்றுதான் படித்தேன்.
பதிலளிநீக்கு//செப்டம்பர் மாதம் வந்தால் அக்காவின் நினைவு வந்து விடும் இல்லையா? இதற்கு முன் 2012 ஆம் வருடம் நீங்ககள் இட்ட பதிவை நான் பார்க்கவில்லை. இன்றுதான் படித்தேன்.//
நீக்குஇன்று பேபி அக்காவின் நினைவு வந்து அந்த பதிவை படித்த போது பின்னூட்டத்தில் நீங்கள் எல்லாம் இல்லை என்பதை பார்த்தேன் அதுதான் நீங்கள் படிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்
அதுதான் இந்த மீள் பதிவு.
இருப்பவருக்கு ஒரு வீடு.. இல்லாதவர்க்கு பல வீடு என்பார்கள். அதுபோல பெற்றால் ஒன்றிரண்டு பிள்ளை. இவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிள்ளைகள்..
பதிலளிநீக்கு//இருப்பவருக்கு ஒரு வீடு.. இல்லாதவர்க்கு பல வீடு என்பார்கள். அதுபோல பெற்றால் ஒன்றிரண்டு பிள்ளை. இவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிள்ளைகள்..//
நீக்குஆமாம், அவர்கள் வளர்த்த குழந்தைகள் அதிகம். அம்மாவின் இன்னொரு தோழி சந்தன அத்தை அவர்களை பற்றியும் பதிவு போட்டு இருக்கிறேன் , அவர்களுக்கும் குழந்தை இல்லை. அவர்களும் நிறைய பிள்ளைகளை வளர்த்தார்கள் பின் அவர்கள் எடுத்த முடிவு வித்தியாசமானது.
'அழகுரதம் பொறக்கும் அது அசஞ்சு அசஞ்சு நடக்கும்'. அப்போது கேட்டபோது மனதில் ரசனை வேறு.. இப்போது கேட்கும்போது மனக்கண்ணில் விரியும் காட்சி வேறு.. ஆசைதான்!
பதிலளிநீக்குபிள்ளைச்செல்வமே பாடலும் மிகவும் பிடிக்கும்.
'//அழகுரதம் பொறக்கும் அது அசஞ்சு அசஞ்சு நடக்கும்'. அப்போது கேட்டபோது மனதில் ரசனை வேறு.. இப்போது கேட்கும்போது மனக்கண்ணில் விரியும் காட்சி வேறு.. ஆசைதான்! //
நீக்குஇப்போது மனக்கண்ணில் விரியும்காட்சி பேரன் , பேத்தியை பற்றி இல்லையா? ஆசை இருக்கும் தானே!
//பிள்ளைச்செல்வமே பாடலும் மிகவும் பிடிக்கும்.//
பாடலும், காட்சியும் அருமையாக இருக்கும்.
பேசும் தெய்வம் படத்திலும் வேலைக்காரிக்கு பெருமாள் நிறைய குழந்தையை கொடுக்கிறான் தனக்கு பிள்ளை இல்லையே என ஏங்கும் தாயாக பத்மினி நடித்து இருப்பார், அது போல செளகாரும் நடித்து இருப்பார் அவருக்கும் குழந்தை இல்லை, அப்புறம் அவருக்கு குழந்தையை இறைவன் கொடுத்து விடுவார். சுபமாக முடியும் கதை.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
மன்னிக்கணும் கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குஅந்திமாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
இந்தப் பாசுரத்தில் ஒரு ராம மிஸ் ஆகியிருக்கிறது. அதனால்தான் சந்தம் வரவில்லை பாடும்போது
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குமன்னிக்கணும் கோமதி அரசு மேடம்.
//அந்திமாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
இந்தப் பாசுரத்தில் ஒரு ராம மிஸ் ஆகியிருக்கிறது. அதனால்தான் சந்தம் வரவில்லை பாடும்போது//
எதற்கு மன்னிப்பு எல்லாம் பிழையை திருத்தியதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். விடுபட்ட ராம நாமத்தை சேர்த்து விட்டேன். நன்றி.
இன்னொரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க நல்ல மனம் வேண்டும்.
பதிலளிநீக்குநான் முதலில் வேலை பார்த்த மேட்டூரில், ஒருவர், யாரோ அந்த ஊரில் காட்டு வேலியில் போட்டுவிட்டுப் போயிருந்த பிறந்த பெண் குழந்தையை, போலீஸ் உதவியுடன் வாங்கிக்கொண்டு வந்து தன் குழந்தையாக வளர்த்தார். என்ன ஒரு பெரிய மனம் இருந்தால் இப்படி உடனே செயல்படத் தோன்றும்.
//இன்னொரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க நல்ல மனம் வேண்டும்.///
நீக்குஆமாம்.
//நான் முதலில் வேலை பார்த்த மேட்டூரில், ஒருவர், யாரோ அந்த ஊரில் காட்டு வேலியில் போட்டுவிட்டுப் போயிருந்த பிறந்த பெண் குழந்தையை, போலீஸ் உதவியுடன் வாங்கிக்கொண்டு வந்து தன் குழந்தையாக வளர்த்தார். என்ன ஒரு பெரிய மனம் இருந்தால் இப்படி உடனே செயல்படத் தோன்றும்.//
ஆமாம், அந்த மனிதருக்கு நல்ல மனம். இப்படி பட்ட நல்லோர்களை வணங்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அரிசோனா ஆலயப் படங்களில் அருள்பாலிக்கும் கடவுளர் காட்சிகள் அருமை.
பதிலளிநீக்குபுரட்டாசி தூண்டிய நினைவுகளில் பதிந்த மீள் பதிவில் மீண்டும் பேபி அக்காவை நாங்களு நினைவு கூர்ந்தோம்.
எங்கள் பிளாக்கில் எழுதிய கதை, மற்றும் தங்கள் பதிவில் அதே கதை வாசித்தேன். உண்மை முடிவு மனதை வருத்தியது.
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//அரிசோனா ஆலயப் படங்களில் அருள்பாலிக்கும் கடவுளர் காட்சிகள் அருமை.//
ஆமாம், அழகாய் அலங்காரம் செய்து இருப்பார்கள்.
//புரட்டாசி தூண்டிய நினைவுகளில் பதிந்த மீள் பதிவில் மீண்டும் பேபி அக்காவை நாங்களு நினைவு கூர்ந்தோம்.//
புராட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போடும் செய்திகள் வர வர அக்காவின் நினைவுகள் அதிகமாக வரும். எந்த ஒரு விஷயம் பேசினாலும் அக்கா இருப்பார்கள்.அவர்கள் அண்ணன் மகன் அன்பு தொடர்பில் இருக்கிறார்
//எங்கள் பிளாக்கில் எழுதிய கதை, மற்றும் தங்கள் பதிவில் அதே கதை வாசித்தேன். உண்மை முடிவு மனதை வருத்தியது.//
கதையை, உண்மையை கதையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
, பேபி அக்காவை நினைக்கும் போது பத்மா மதினியும், பத்மா மதினியை நினைக்கையில் பேபி அக்காவும் வந்து விடுவார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
பேபி அக்காவின் கதை படித்து மனம் கனத்துவிட்டது.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//பேபி அக்காவின் கதை படித்து மனம் கனத்துவிட்டது.//
ஆமாம் , அவர்களின் வாழ்க்கை அவர்களின் அன்பை நினைக்கும் போது இறைவன் ஏன் இப்படி முடிவை கொடுத்தார் என்று நினைக்கும் போது மனம் கனத்து விடும் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.