மகன் வீட்டு பிள்ளையார்கள் சதுர்த்தி அன்று.
இந்த பதிவில் எங்கள் வீட்டு சதுர்த்தி விழா படம், மற்றும் நண்பர்கள் வீட்டு விநாயகர் படங்கள், ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் நடந்த பிள்ளையார் சதுர்த்தி விழாநிறைவு படங்கள் இடம் பெறுகிறது.
ஆந்திராவை சேர்ந்த நணபர் வீட்டில் விநாயகர் பூஜை
வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் காட்சி கொடுப்பவர் பெருமாள்.
கண்கள் மலர்ந்து நம்மை பார்த்து சிரிப்பது போல அழகிய கண்கள்.
அன்று புரட்டாசி சனிக்கிழமை புளியோதரையும், கொண்டைக்கடலை சுண்டலும் வைத்து இருந்தார்கள் அவர் முன்.
ஆந்திராவிலிருந்து செய்து கொண்டு வரபட்ட பெருமாள். புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசனம் கிடைத்தது.
வட நாட்டை சேர்ந்த நண்பர் (குஜராத்தி) வீட்டில் பிள்ளையார் பூஜை
மகன் செய்த பலகையில் மருமகள் கோலம் வரைந்து அவர்களுக்கு பரிசாக கொடுத்தார்கள்.அவர்கள் அதில் ஆரத்தி செய்ய விளக்குகளை வைத்தார்கள்.
வந்தவர்களை எல்லாம் பூஜை செய்ய சொன்னார்கள். ஆரத்தி பாடல் முடியும் வரை ஆரத்தி காட்டப்பட்டது.
அவர்கள் வீட்டில் இந்தியில் பாடியது நான் தமிழ் பாடலை பகிர்ந்து இருக்கிறேன்.
மகன் செய்த சிறு பிள்ளையார் பொம்மையை சிறு தட்டில் வைத்து பலகை மேல் வைத்து பூவுடன் கொடுத்தாள் மருமகள். மணிக்கு பின்னால் இருக்கிறது
அவர்கள் வீட்டில் வழங்க பெற்ற பிரசாதம் மாம்பழ ஜூஸ் மூன்று வகை இனிப்புகள் பாவ்பாஜி அப்பளம், வற்றல், பிரியாணி போல ஒரு சாதம் நான் அதை சாப்பிடவில்லை. பன்னில் உருளை , நிலக்கடலை ஓமபொடி வைத்து ஒரு டிஷ்
ஸ்ரீ மகா கணபதி ஆலயம்
ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையார்
மரத்தடியில் இப்போது புதிதாக மூவர் சிலைகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு ,சிவன்
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நான்காம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து சிறப்பாக ஹோமம் , அபிஷேகம், அலங்காரம், உற்சவ விநாயகர் கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து என்று அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.
நிறைவு நாளில் கோயிலில் பெரிய நீச்சல் குளம் போல ஏற்பாடு செய்ய பட்டு இருந்த தொட்டியில் விநாயகர் தீர்த்தவாரி செய்தார். அதை தொடர்ந்து பெண்கள் முளைபாறி கரைத்தார்கள், பின்னர் குழந்தைகள், பெரியவர்கள் விநாயகரை விசர்ஜனம்(கரைத்தார்கள்) செய்தார்கள்.
கொடிமரம்
நாங்கள் போன போது கூட்டம் இல்லாமல் இருந்தது கோவிலை மெதுவாக வலம் வந்து வணங்கி விட்டு கொடிமரத்துக்கு பின் பக்கம் நாற்காலி போட்டார்கள் எனக்கும், சம்பந்திக்கும் அதில் அமர்ந்து பூஜைகளை பார்த்தோம். அதனால் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்தவற்றை நான் எடுத்தேன் படங்கள், பல படங்கள் கோவில் நிர்வாகத்தினர் எடுத்த படங்கள். அவர்கள் மகனுக்கு அனுப்பி வைத்தார்கள். கோவிலை சுற்றி உள்ள சுவாமிகள் மிக அலங்காரமாக இருந்தார்கள் அவர்களை எல்லாம் எடுத்தேன் இன்னொரு நாள் பகிர்கிறேன்.முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
சித்திரை மாத வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி அன்று வழி பாடு சிறப்பாக செய்யபடுவதாக மகன் சொன்னான்.
முதல் நாள் செய்த அலங்காரத்தில் விநாயகர்
கரும்பு சாறு செம்புகளில் ஊற்றப்படுகிறது கட்டளைக்கு கொடுத்து இருக்கும் குடும்பத்தார்கள் எல்லாம் செம்பை தூக்கி கொண்டு பிள்ளையாரை வலம் வந்து அபிஷேகம் செய்யும் குருக்களிடம் கொடுத்தார்கள்.அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார், சிவபெருமான் மற்றும் பிள்ளையாருக்கு கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்தால் எல்லா நலன்களும் கிடைக்குமாம்.
கரும்புச் சாறினால் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தால் நம் உடலில் உள்ள தீரா நோய்நொடிகள் மற்றும் பிணிகள் நீங்கி நல் ஆரோக்கியம் கிடைக்குமாம்.
துன்பங்கள் மற்றும் வறுமை நீங்குமாம். செல்வ வளம் பெருகி மகிழ்ச்சி கிடைக்குமாம்.
நம்மை சுற்றி உள்ள பகைமை, மற்றும் எதிரிகள் தொல்லைகள் , பொறமைகள் நீங்கி அமைதியான வாழ்வு கிட்டுமாம்.
எல்லோருக்கும் எல்லா நலன்களையும் விநாயகர் அருளட்டும்.
பால், பழம் , பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் பல வாசனை திரவியங்கள் அபிஷேகம்
பால் அபிஷேகம்
ஹோம புகை கோயிலில் சுற்றாமல் இருக்க ஹோமகுண்டத்திற்கு மேல் புகை போக்கி
பூர்ணாகுதி
பூஜிக்க பட்ட புனித நீர் உள்ள கடங்கள் கோவிலை வலம் வந்தது, அபிஷேக கடங்களுக்கு பூஜை
கட ம் அபிஷேகம்
பூஜை
கோயிலுக்கு வந்த பக்தர்கள்
மகன் பொன்னாடை பெறுகிறான்
தந்தையை போலவே தனயனும் கோயிலில் பொன்னாடை பெறுகிறான்.
அவன் அப்பா, தாத்தா கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் செய்து பொன்னாடை பெறுவார்கள். மகன் கோயில் பணி செய்து பொன்னாடை பெறுகிறான்.
அலங்காரம் செய்யப்படும் இடைவெளியில் தன்னார்வ தொண்டர்களுக்கு மரியாதை , பிரசாதங்கள் வழங்கப்பட்டது
கோயில் மரியாதைகள் செய்யப்பட்ட தன்னார்வலர்கள்
மகன் விநாயகர் முன் பழக்கங்கள் வைக்க மரத்தில் சின்ன ஸ்டூல் போல செய்து கொடுத்தான் முன்னால் பக்கம் மணிகள் தொங்கும்.
ஊர்வலமாக போக அலங்காரத்தோடு இருக்கும் உற்சவர்
உற்சவர் அமர போகும் பிள்ளையார் வாகனம்

தீர்த்தவாரி
பத்து நாட்கள் யாகசாலையில் இருந்த முளைப்பாரிகளை கரைக்கும் பெண்கள்
பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பிள்ளையாரை கரைக்கிறார்கள்
கரைக்க இருக்கும் பிள்ளையார்கள் பைகளில், கூடைகளில் என்று நிறைய இருக்கிறது.
அலங்காரத் தோற்றத்தில் விநாயகர்
அலங்காரத் தோற்றத்தில் விநாயகர்

பாயாசம், ஊறுகாய், இனிப்பு , தண்ணீர் பாட்டில் இவைகள்
ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அரிசோனா மேலும் இந்த கோயில் விழா படங்கள் எல்லாம் இங்கு பார்க்கலாம். மகன் , பேரன் , மருமகளை கோவிலுக்கு "எப்படி வர வேண்டுமோ அப்படி வந்து இருக்கிறீர்கள்" என்று பாராட்டி படம் எடுத்து கோயில் முக நூல் பக்கம் போட்டு இருக்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னதானத்தோடு விழா இனிதாக நிறைவேறியது.
காசு கொடுத்து வாங்கும் உணவகமும் இருந்தது, லட்டு, அதிரசம், மிச்சர், குளிர் பானங்கள் விற்கபட்டன. நாங்கள் இன்னொரு இடத்திற்கு போக வேண்டி இருந்ததால் கூட்டத்தில் வரிசையில் நின்று உணவு வாங்க முடியாது என்று காசு கொடுத்து வாங்கும் உணவகத்தில் மாங்கோ லச்சி, பூரி, தோசை வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பி விட்டோம் வீட்டுக்கு. பாதை பழுது பார்க்க படுவதால் வேறு வழியில் திருப்பி விட்டார்கள் வாகனங்களை அதனால் நெருக்கடி ஏற்பட்டு மெதுவாக நகர்ந்தன கார்கள். வழ்க்கத்தை விட அதிக நேரம் ஆனது வீடு வந்து சேர.
ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அரிசோனா மேலும் இந்த கோயில் விழா படங்கள் எல்லாம் இங்கு பார்க்கலாம். மகன் , பேரன் , மருமகளை கோவிலுக்கு "எப்படி வர வேண்டுமோ அப்படி வந்து இருக்கிறீர்கள்" என்று பாராட்டி படம் எடுத்து கோயில் முக நூல் பக்கம் போட்டு இருக்கிறார்கள்.
எங்கள் குறை தீர்த்தே வரம் அருள்வாய் கணநாதா!
அனைவர் வாழ்விலும் என்றும் நன்மைகள் திகழ மகா கணபதி அருள் புரிய வேண்டி கொள்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------




















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக