இறைவனை மலர் தூவி வழிபாடு செய்வது மகிழ்ச்சி தரும், அதிலும் நம் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர் கொண்டு பூஜிப்பது மேலும் மகிழ்ச்சியை தரும்.
இந்த பதிவில் மகன் வீட்டுத்தோட்டத்தில்(அரிசோனா) பூத்த மலர்கள் படம் இடம் பெறுகிறது.
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறை கொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டைறையுஞ் செங்காட்டங்குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
- திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
கோடை காலம் ஆனதால் பூக்கள் நிறைய பூக்கவில்லை.
கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போது முடி சாய்ந்துத் தொழ நின்ற முதல்வன
அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே.
=திருநாவுக்கரசர் அருளிய நாலாம் திருமுறை தேவார பாடல்.
மல்லிகை மற்றும் மாதுளை இலைகள்.
மல்லிகை மலர்களும் மல்லிகை இலைகளும்
மல்லிகை மலர்களும் அரளி இலைகளும்
மலர்கள் குறைவாக இருக்கும் போதும் மலர்களே கிடைக்கவில்லை என்றாலும் பத்திரம் என்று சொல்வார்கள் இலைகளை அவைகளை வைத்து வழிபடலாம்.
என் மாமனார் அவர்கள் ஊர்களுக்கு போகும் போது பன்னீர் பத்திரங்களை(இலைகள்) பறித்து எடுத்து செல்வார்கள். மாயவரத்தில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் பன்னீர் மரம் இருந்தது. நானும் உதிரி பூக்கள், மற்றும் தோட்டத்தில் பூத்த மலர்களை சேகரித்து சிவபூஜைக்கு கொடுப்பேன்.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில்
இப்படி சொல்கிறார்.
யாவருக்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை
யாவருக்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவருக்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவருக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!
மலர்களை தூவி வழிபட மல்லிகை
பூவார் மலர் கொண்டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணைவந்தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே
- திருஞானசம்பந்தர் தேவாரம்
திருவருள் படத்தில் இறைவனுக்கு பூமாலைகள், பூக்கள் விற்பவர் பாடும் பாடலாக வரும். எத்தனை விதமான மாலைகளை பற்றி பி.சுசீலா அவர்கள் பாடுகிறார் ! கேட்டு இருப்பீர்கள் மீண்டும் கேட்கலாம் இனிமையான பாடல்.
மல்லிகை பூக்கள் ஒரளவு பூத்தது.
ஓதிமா மலர்கள் தூவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோள்
சுடர் மழுப்படையினானே
ஆதியே அமரர் கோவே
அணியாணா மலையுளானே
நீதியால் நின்னையல்லால்
நினையுமா நினைவிலேனே
ரோஜா செடியில் சிறு ரோஜா மலர்கள் மொட்டு விடுவதிலிருந்து மலர்வதை தினம் தினம் பார்ப்பது மகிழ்ச்சி தரும் எனக்கு வெயில் தாங்காமல் வாடினாலும் மலர்களை தந்து கொண்டு இருந்தது.
மறையின் நாண்மலர் கொண்டாடி வானவர்
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன் எம்பெருமான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே
- திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை
மல்லிகை மொட்டு மலரும்.
விரிந்த மலர் கொண்டு இறைவனை தொழ சொல்லும் தேவார பாடல்
விண்ட மாமலர் கொண்டு விரைந்து நீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர் செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே
- சேக்கிழார் பெரிய புராண பாடல்
-
வாழ்த்த வாயும்,
நினைக்க மட நெஞ்சும் ,
தாழ்த்தச் சென்னியும்,
தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர்
தூவித் துதியாதே
வீத்தா வாவினை
யேன் நெடுங் காலமே!
- திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை
கடையில் மலர் செண்டாக விற்பதை வாங்கி வந்து அதை இறைவனுக்கு வைப்பாள் மருமகள் ஆடி அமாவாசை அன்று இந்த பூக்களை வாங்கி வந்தாள், இறைவனுக்கு வைத்து விட்டு சிலவற்றை இப்படி பூக்கிண்ணத்தில் நீரில் போட்டு இறைவன் முன் வைத்தாள்.
ஒரு வீட்டில் சாய் பஜனைக்கு அழைத்து இருந்தார்கள் அப்போது அவர்கள் வீட்டில் பூத்த மல்லிகை மலரை மாலையாக தொடுத்து சாய்பாபா படத்திற்கு போட்டு இருந்தார்கள். மரும்கள் எங்கள் வீட்டில் பூத்த மல்லிகையை கட்டி எடுத்து சென்று கொடுத்தாள் கீழே இருக்கும் சின்ன சாய்க்கு அணிவித்தார்கள்.
எல்லா இறைவன் மேலும் பஜனை பாடல்கள் பாடினார்கள், நாமும் கூட பாடியது மிகவும் நன்றாக இருந்தது, நேரம் போனதே தெரியவில்லை. அப்புறம் பிரசாதங்கள் கொடுத்தார்கள். மனமும் வயிரும் நிறைந்தது.
வியாழன் அன்று மகன் வீட்டில் இருக்கும் சாய்க்கு மல்லிகை மாலை . மருமகளின் அம்மா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாமிக்கு மல்லிகை பூவை கட்டி அணிவித்தார்கள்.
அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள் தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
மாணிக்கவாசகர் - திருவாசகம் போற்றித்திருஅகவல்
மலர்கள் இல்லையென்றாலும் நம் கரங்களை குவித்து மலராக்கி இதய தாமரையில் உள்ள இறைவனை வணங்கி வழிபடலாம் நாளும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------

மலர்களும் அலங்காரங்களும் கண்டோம் அருமை.
பதிலளிநீக்குமலர் தொகுப்புடன் தேவாரப் பாடல்களும் தொகுத்துத் தந்துள்ளீர்கள் . நன்றி. பாடி மகிழ்ந்தோம்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//மலர்களும் அலங்காரங்களும் கண்டோம் அருமை.
மலர் தொகுப்புடன் தேவாரப் பாடல்களும் தொகுத்துத் தந்துள்ளீர்கள் . நன்றி. பாடி மகிழ்ந்தோம்.//
மாதேவி ,தேவார பாடல்களை மகிழ்ந்து கருத்து சொன்னதற்கு நன்றி
மலர் அலங்காரங்கள் அனைத்தும் அருமை. செண்டாக வாங்கி வந்து நானும் வாசலில் வைத்திருக்கும் நீர் உருளியில் போடுவதுண்டு. ரோஜாக்களை அழகாகப் படமாக்கியிருக்கிறீர்கள். மல்லிகைச் சரம் நேர்த்தி. பாடல்களுடன் பகிர்ந்திருப்பது சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்
நீக்குநீங்களும் செண்டாக வாங்கி வருவீர்களா .? உதிரி பூ கிடைக்குமே அங்கு .நாங்கள் பெங்களூர் வந்த போது இரவு நேர குளிரில் அமர்ந்நு உதிரி பூ விற்றுக் கொண்டு இருந்த வயதான அம்மாவிடம் பூ வாங்கினோம் அது நினைவுக்கு வருகிறது.
மலர்களை , பாடல்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.
ஆமாம் நம் தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் கொண்டே பூஜை செய்வது சந்தோஷம் தரும்தான். மலர்களை தட்டில் அழகாக அடுக்கி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவணக்கம், ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆமாம் நம் தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் கொண்டே பூஜை செய்வது சந்தோஷம் தரும்தான். மலர்களை தட்டில் அழகாக அடுக்கி இருக்கிறீர்கள்//
நன்றி ஸ்ரீராம்..
தேவார, திருமுறை பாடல்களைக் கொண்டு தொகுத்துள்ள மலர் பதிவு நன்று. ஒரு பாடலின் முதல் வரியை மட்டும் பொருத்தமாக சொல்லத் தோன்றுகிறது. "மலர்களிலே ஆராதனை..."
பதிலளிநீக்கு//தேவார, திருமுறை பாடல்களைக் கொண்டு தொகுத்துள்ள மலர் பதிவு நன்று. ஒரு பாடலின் முதல் வரியை மட்டும் பொருத்தமாக சொல்லத் தோன்றுகிறது. "மலர்களிலே ஆராதனை..//
நீக்குநீங்கள் சொன்ன பாடல் நன்றாக இருக்கிறது.முன்பு நிறைய சினிமா பாடல்களை வைத்து பதிவு போட்டு இருக்கிறேன். நீங்களும் நிறைய பாடல்களை சொல்லி இருக்கிறீர்கள்.
இந்த தடவை திருமுறைகளை பகிர எண்ணம் வந்தது.
மலர்களின் பல படங்களைக் காணும்போது மலர்களிலே பல நிறம் கண்டேன் பாடலும் மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே பாடலும் நினைவுக்கு வருகின்றன.
பதிலளிநீக்கு//மலர்களின் பல படங்களைக் காணும்போது மலர்களிலே பல நிறம் கண்டேன் பாடலும் மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே பாடலும் நினைவுக்கு வருகின்றன.//
நீக்குமுன்பு இந்த பாடல்களை பகிர்ந்து இருக்கிறேன்.
சூடி கொடுத்த சுடர் கொடி நினவும் வந்தது.
எனக்கு மலரே..மௌனமா.. என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. மலர்கள் மௌனமாக இருந்தாலும் பளிச் என்று சிரிப்பது போல இருக்கின்றன அல்லவா?
நீக்கு//எனக்கு மலரே..மௌனமா.. என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது. மலர்கள் மௌனமாக இருந்தாலும் பளிச் என்று சிரிப்பது போல இருக்கின்றன அல்லவா?//
நீக்குஆமாம், நல்லபாடல் உங்கள் நினைவுக்கு வந்து இருக்கிறது.
திருவருள் பாடல் கேட்டிருக்கிறேன். பாடத்தில் ஜெயா! நல்ல பாடல். பாடலில் வருவது போல நீங்களும் மலர்களைக் கொண்டே ஒரு பதிவு மாலை தொடுத்து வழங்கி விட்டீர்கள்!
பதிலளிநீக்கு//திருவருள் பாடல் கேட்டிருக்கிறேன். பாடத்தில் ஜெயா! நல்ல பாடல். பாடலில் வருவது போல நீங்களும் மலர்களைக் கொண்டே ஒரு பதிவு மாலை தொடுத்து வழங்கி விட்டீர்கள்!//
பதிலளிநீக்குகருத்தை படித்தவுடன் பூ மாலையோடு பாமாலையும் தொடுத்தேன் என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது.
உங்கள் அத்தனைக் கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.
மலர்களை ரொம்ப அழகாக அடுக்கிவைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு தட்டு அலங்காரமும் மிக அழகாக இருக்கின்றது.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//மலர்களை ரொம்ப அழகாக அடுக்கிவைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு தட்டு அலங்காரமும் மிக அழகாக இருக்கின்றது.//
நன்றி நெல்லை.
ரோஜா மலர்களுடன் கூடிய படங்கள் அருமை. சிறிய வயதில் பார்த்த ரோஸ் நிற பெரிய ரோஜா மலர்களை இப்போது காணக் கிடைப்பதில்லை. படத்தில் சிறிய ரோஜாக்களாகத் தெரிகின்றன
பதிலளிநீக்கு//ரோஜா மலர்களுடன் கூடிய படங்கள் அருமை. //
நீக்குநன்றி.
//சிறிய வயதில் பார்த்த ரோஸ் நிற பெரிய ரோஜா மலர்களை இப்போது காணக் கிடைப்பதில்லை. படத்தில் சிறிய ரோஜாக்களாகத் தெரிகின்றன//
இந்த ரோஸ் சிறிய வகைதான். வெயில் காரணத்தால் இன்னும் சிறிதாக இருக்கிறது. இங்கும் பெரிய வகை ரோஸ் உண்டு.
சாய் பஜன் படங்கள் நல்லா இருந்தது. வயிற்றுக்கு என்ன பிரசாதம் என்று குறிப்பிடவில்லையே. நீங்களும் பிரசாதம் கொண்டு போயிருந்தீங்களா?
பதிலளிநீக்கு//சாய் பஜன் படங்கள் நல்லா இருந்தது. வயிற்றுக்கு என்ன பிரசாதம் என்று குறிப்பிடவில்லையே. நீங்களும் பிரசாதம் கொண்டு போயிருந்தீங்களா?//
நீக்குவேலை நாள் என்பதால் யாரும் பிரசாதம் கொண்டு வர சொல்லவில்லை. வியாழன் மாலை வைத்து இருந்தார்கள் . அவர்கள் சாப்பாடு வெளியில் ஆர்டர் செய்து வாங்கி இருந்தார்கள், சொந்த பந்தம் அக்கம் பக்கத்து வீட்டார் அப்பம், வெண்பொங்கல், அவல் புட்டு, செய்து கொண்டு வந்து இருந்தார்கள். அவர்கள் சப்பாத்தி குருமா, தயிர்சாதம் , உப்புமா ஜூஸ் வகைகள் வாங்கி வைத்து இருந்தார்கள். அவர் அவர்களுக்கு வேண்டியதை எடுத்து கொண்டார்கள்.
மருமகள் பூ, பழம், பரிசு பொருள் விளக்கு வைக்கும் பலகை கொடுத்தாள் அவள் கைப்பட கோலம் வரைந்த பலகை. மகன் பலகை செய்து இருந்தான்.
தேவார , திருவாசக , திருமந்திரம் பாடல்களை பற்றி சொல்லவில்லையே!
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மலர்களின் படங்களும், படங்களின் இடையே தேவார, திருவாசக பாடல்களுமாக பதிவு மனதை குளிர்வித்து, மென்மையாக்கி நிறைவு கொள்ளச் செய்கிறது.
உங்கள் மகன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்கள் அனைத்தும் அழகாக உள்ளது. அவற்றை நீங்கள் வரிசைப்படுத்தி அதன் இலைகளுடன் அழகாக்கி தந்த மலர் கோலங்களும் மிக அருமை. மலர்களின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகு. எதை விமர்சிப்பது எனத் தெரியவில்லை.பதிவு மலர்களைப் போல மென்மையாகவும், அதன் இயல்பான மணம் வீசும் குணங்களையும் தந்தபடி உள்ளன. மிகவும் ரசித்துப் படித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. மலர்களின் படங்களும், படங்களின் இடையே தேவார, திருவாசக பாடல்களுமாக பதிவு மனதை குளிர்வித்து, மென்மையாக்கி நிறைவு கொள்ளச் செய்கிறது.//
நன்றி கமலா, நீங்கள் சொல்வது சரிதான் மனதை மென்மையாக்கி ஒரு அமைதியை, நிம்மதியை கொடுக்கும்.
//உங்கள் மகன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்கள் அனைத்தும் அழகாக உள்ளது. அவற்றை நீங்கள் வரிசைப்படுத்தி அதன் இலைகளுடன் அழகாக்கி தந்த மலர் கோலங்களும் மிக அருமை. மலர்களின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகு. எதை விமர்சிப்பது எனத் தெரியவில்லை.பதிவு மலர்களைப் போல மென்மையாகவும், அதன் இயல்பான மணம் வீசும் குணங்களையும் தந்தபடி உள்ளன. மிகவும் ரசித்துப் படித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//
கோடை காலம் என்பதால் மாலை நேரம் வெயில் கடுமையாக அனல் காற்று வீசுவதால் நடைபயிற்சி செய்ய முடியாது. வீட்டுத் தோட்டம் பக்கமும் காலை 6.30 வரை தான் நடைபயிற்சி செய்ய முடியும். வீட்டில் இருக்கும் கொஞ்ச மலர்களை பார்த்து நிறைவடைகிறேன்.
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமலர்கள் பதிவு மனதை மிகவும் கவர்கிறது. நான்கு நாட்களாக வலைத்தளம் வர இயலாதபடிக்கு பல வேலைகள், வீட்டில் விஷேடங்கள் என வரிசையாக வந்து விட்டது. அதனால் உடனடியாக உங்களின் பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும்.
/வாழ்த்த வாயும்,
நினைக்க மட நெஞ்சும் ,
தாழ்த்தச் சென்னியும்,
தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர்
தூவித் துதியாதே
வீத்தா வாவினை
யேன் நெடுங் காலமே/
உண்மைதான் இந்தப்பாடலின் கருத்தின்படி எத்தனை காலங்களை "கடமை" என்ற போர்வையை போர்த்தியபடி வீணாக்கி விட்டோம் என நானும் நினைத்துக் கொள்வேன்.
அத்தனைப் பாடல்களும் மலர்களுக்கு துணையாக இருக்கும்படி பதிவை அழகாக
அமைத்து தந்த தங்களின் மனமும் மலரைப் போன்ற நறுமணமானதே. உங்களின் !அந்த நல்ல மனதிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்
பூத்த மலர்களை கட டி மாலையாக்கி, இறைவனுக்கு சமர்ப்பித்த தங்கள் சம்பந்திக்கும், மருமகள் மகன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
மல்லிகை மலர்களும், ரோஜா, அரளிமற்ற மலர்களும் பார்க்கவே அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு படங்களையும் பார்க்கையிலேயே அதன் மணமும் மனதில் வீசுகிறது.
நீங்கே பகிர்ந்த பாடலும் முன்பு கேட்டுள்ளேன். பிறகு அதனை மீண்டும் கேட்கிறேன். எனக்கு "மலர்களிலே பல நிறம் கண்டேன்" என்ற பாடல் இந்த கருத்தை தெரிவிக்கும் நேரத்தில் மனதுக்குள் ஓடியபடி உள்ளது.
சாய்பாபாவை தரிசித்துக் கொண்டேன். எங்கள் மருமகன் சாய்பாபாவின் தீவிர பக்தர். அவர் நினைவு மனதுக்குள் வந்து அழுத்துகிறது. 😢 என்ன செய்வது.? கொடுப்பினைகள் என்பது அவரவர் வாங்கி வருவதுதானே.! நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//மலர்கள் பதிவு மனதை மிகவும் கவர்கிறது. //
நீக்குநன்றி.
//நான்கு நாட்களாக வலைத்தளம் வர இயலாதபடிக்கு பல வேலைகள், வீட்டில் விஷேடங்கள் என வரிசையாக வந்து விட்டது. அதனால் உடனடியாக உங்களின் பதிவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும்.//
அதுதான் உங்களை காணவில்லையே என்று ஸ்ரீராமிடம் கேட்டேன்.
வீட்டில் விஷேடங்கள் நடந்தால் வேலை நிறைய இருக்குமே!
குழந்தைகள் சுதந்திரதின விழாவில் நடனம் ஆடினார்கள் என்று சொல்லி இருந்தீர்கள் அது மகிழ்ச்சியான விஷயம். மீண்டும் சொல்கிறேன், மன்னிப்பு எல்லாம் வேண்டாம். நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லாம்.
//உண்மைதான் இந்தப்பாடலின் கருத்தின்படி எத்தனை காலங்களை "கடமை" என்ற போர்வையை போர்த்தியபடி வீணாக்கி விட்டோம் என நானும் நினைத்துக் கொள்வேன்.//
இந்த பாடல் நமக்கு கடமைகளை மேலும் நல்லவிதமாக செய்யதான் கமலா.
கடமையே ஒரு தெய்வவழிபாடுதான். அதில் ஏற்படும் அலுப்பு, சலிப்பை , மனகவலையை இறைவன் போக்குவார்.
நமக்காக நாம் நேரம் ஒதுக்கி இறைவழிபாடு, தியானம், உடற்பயிற்சி செய்வது மேலும் உற்சாகமாக குடும்பத்து உழைக்க முடியும். நாம் எல்லாம் வேலை செய்யும் போதே இறைவனை நினைப்பவர்கள் தான்.
//அத்தனைப் பாடல்களும் மலர்களுக்கு துணையாக இருக்கும்படி பதிவை அழகாக
அமைத்து தந்த தங்களின் மனமும் மலரைப் போன்ற நறுமணமானதே. உங்களின் !அந்த நல்ல மனதிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்
பூத்த மலர்களை கட டி மாலையாக்கி, இறைவனுக்கு சமர்ப்பித்த தங்கள் சம்பந்திக்கும், மருமகள் மகன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//
அனைவருக்கும்நல்வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி.
//மல்லிகை மலர்களும், ரோஜா, அரளிமற்ற மலர்களும் பார்க்கவே அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு படங்களையும் பார்க்கையிலேயே அதன் மணமும் மனதில் வீசுகிறது.//
மகரிஷி இப்படி மலரை பார்க்கும் போது மனதில் தோன்றும் எண்ணமே வழிபாடுதான் என்கிறார். நீங்களும் மலர் வழிபாடு செய்து விட்டீர்கள்.
//நீங்கே பகிர்ந்த பாடலும் முன்பு கேட்டுள்ளேன். பிறகு அதனை மீண்டும் கேட்கிறேன். எனக்கு "மலர்களிலே பல நிறம் கண்டேன்" என்ற பாடல் இந்த கருத்தை தெரிவிக்கும் நேரத்தில் மனதுக்குள் ஓடியபடி உள்ளது.//
அந்த பாடலும் காட்சியும் கண் முன்னே வரும். சிவாஜி கணேசன் நடிப்பு,. இசையும் டி.எம்.எஸ் அவர்கள் குரல் இனிமையும் காட்சி அமைப்பும் அப்படி இருக்கும்.
//சாய்பாபாவை தரிசித்துக் கொண்டேன். எங்கள் மருமகன் சாய்பாபாவின் தீவிர பக்தர். அவர் நினைவு மனதுக்குள் வந்து அழுத்துகிறது. 😢 என்ன செய்வது.? கொடுப்பினைகள் என்பது அவரவர் வாங்கி வருவதுதானே.! நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி//
உங்கள் மருமகன் அவர்களை இறைவன் விரைவில் அழைத்து கொண்டது வருத்தமே! என்ன செய்வது இறைவன் விருப்படி எல்லாம் நடக்கிறது. நம் கையில் ஒன்றும் இல்லை. அதை உணர்ந்த தருணங்கள் நிறைய உண்டு என் வாழ்க்கையில்.
எனக்கும் நிறைய வருத்தங்கள் இருக்கிறது கமலா அதை எல்லாம் இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன் அவன் தான் என்னை வழி நடத்துகிறார்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.