
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள "வில்லியம்ஸ் " நகரில் சுதந்திர தின விழா பார்க்க போகும் போது போகும் வழியில் அழகிய ஏரியை பார்த்தோம். அதன் பேர் Watson Lake
மக்கள் அந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்கள். மலைகளில் ஏறினார்கள், மீன் பிடித்தார்கள் நல்ல பொழுது போக்கும் இடம்.
இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் விடுமுறை நாளில் நீர்நிலைகள் இருக்கும் இடம் தேடி வருகிறார்கள்.
இதற்கு முன் போட்ட
அமெரிக்காவின் சுதந்திர தின கொண்டாட்டம்
பதிவுக்கு முன் வந்து இருக்கவேண்டிய பதிவு இது.
மலைகளுக்கு நடுவே ஏரி
"நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது வானம்நீல நிறம் ஏரி நீரின் நிறமும் நீலம்.
ஏரியில் அவ்வளவு நீர் இல்லை என்றாலும் மக்கள் அதில் படகு சவாரி செய்கிறார்கள். காரில் அவர்களின் சொந்த படகை கொண்டு வருகிறார்கள். அங்கும் வாடகைக்கு படகு கிடைக்கும்.
மலையும் ஏரியும் சேர்ந்து இருப்பதால் இயற்கை அழகை அள்ளி தருகிறது
மலைகளின் வழியே வரும் மழை நீர் நன்னீர் என்பார்கள்.
சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். ஏரிசில இடங்கள் ஆழமாகவும் சில இடங்களில் நீர் ஓடை போலும் காட்சி அளிக்கிறது
.jpg)
மூன்று வாத்துக்களும் எல்லா படகு பின்னாலும் நீந்தி போய் கொண்டே இருந்தது.
பெரிய மலை மேலே தனி கல் மேலே போய் உருட்டி விளையாட ஆசை வரும்
பெரிய உடம்பு, சிறிய தலை உள்ள பூதம் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது
மலைகளில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பூத்து பார்க்க அழகாய் இருந்தது.

ஒரு பாறைமேல் அமர்ந்து போஸ் கொடுத்தான் பேரன், என்னையும் வந்து அமர சொன்னான்
நான் சின்ன பாறையில் அமர்ந்தேன்
நீர் காற்றில் அலை அலையாக சென்றது பார்க்க அழகு, மீன் பார்த்தேன் என்றான் , நான் பார்க்கவில்லை.
தூரத்தில் ஒருவர் மீன் பிடிக்கிறார் தெரிகிறதா?
இந்த பறவைகள் படகு துறையில் இருக்கும் என்று விளம்பர பலகை வைத்து இருந்தார்கள் அவை இருக்கிறது.
அழகான வாத்துக்கள்

பலரும் தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் படகில் சென்றார்கள், அவைகளை ஏரியில் நீந்தி விளையாட விட்டு அதன் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ந்தார்கள்.
ஏரியில் குளிக்க உற்சாகத் துள்ளலுடன் ஓடும் செல்லங்கள்
குட்டி நாய் அழகாய் நீரில் நீந்துகிறது
லைப் ஜாக்கெட் நாய்க்கு போட்டு இருக்கிறார்.
இவர்களும் சின்ன நாய்குட்டியை முன்னல் வைத்து கொண்டு போகிறார்
படகை தொடர்ந்தும் அருகிலும் நீந்தி சென்றன இந்த மூன்று வாத்துக்களும்.
காவலர் பெரிய இரண்டு நாய்களுடன் கண்காணிப்பு செய்தார்
பிரியமானவர்களின் நினைவாக பெஞ்ச் போட்டு இருந்தார்கள். ஏரிக்கரையில்.
வயதான பெண்மணி படகைதூக்கி கொண்டு வருகிறார்கள்.
காரிலிருந்து யார் உதவியும் இல்லாமல் அவர்களே தூக்கி வந்து படகு சவாரி செய்கிறார்கள்.
மலை அணில்
சுதந்திர தின விழாவுக்கு கொடிவண்ணத்தில் ஆகாயவிமானம்
மதிய உணவு , மற்றும் அமர நாற்காலியை எடுத்து வரும் பேரன்
நிழல் தரும் பைன் மரம் அடியில் அமர்ந்தோம்,
காலை வீட்டிலிருந்து மருமகள் செய்து வந்த பிரியாணி, தயிர் பச்சடி
மகனும், பேரனும் தொப்பியை மரத்தில் தொங்க விட்டு இருக்கிறார்கள்.
பைன் மரக் காய்
ஒரு குட்டி பறவை பைன் மரத்து காய்களை பச்சை காயை கொத்தி கொத்தி போட்டது அதில் நீர் இருக்கும் போல ! வெயிலுக்கு நன்றாக இருக்கும் போலஅந்த பறவைக்கு. பறவை கண்ணுக்கு தட்டுபட மாட்டேன் என்றது (ஓங்கி வளர்ந்த பெரிய பைன் மரம்)காயை மட்டும் கடித்து நம் மேல் போட்டுக் கொண்டே இருந்தது.
இருந்த இடத்திலிருந்தே குழந்தைகள் தூரத்தில் விளையாடியதை எடுத்தேன்.
குழந்தைகள் விளையாட இடம் இருக்கிறது
இரண்டு குழந்தைகள் பட்டம் விட்டார்கள்
தெரிகிறதா? வெள்ளை கலர் பட்டம் வால் சிவப்பு
மலை மேல் ஏறி விளையாடினார்கள்.
மலைமேல் சிலுவை குறி வைத்து இருக்கிறார்கள்.
மலையேற்றம் செய்ய அருமையான இடம்.
குடும்பத்தோடு விடுமுறை நாட்களில் சென்று வர அருமையான இடம்.
நாங்கள் போன போது இதில் உள்ளது போல நீர் நிறைந்து இல்லை. கொஞ்சம் குறைவு.
மகன் எடுத்த வீடியோவும் வர மாட்டேன் என்கிறது என்று இணையத்தில் தேடி போட்டேன், சிறிய காணொளி தான் பாருங்கள், சிலருக்கு வரவில்லை என்றால் சுட்டி கொடுத்து இருக்கிறேன் அது மூலம் பார்க்கலாம். நன்றாக இருக்கிறது.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் . அனைவருக்கும் நன்றி.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்
.jpg)



















.jpg)
இன்றைய பதிவின் படங்கள் மிக அழகு. அதிலும் ஏரி நீர் மற்றும் அதனுடன் பாறைகள், சிறிய மலை போன்று அழகாக வந்திருக்கிறது
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//இன்றைய பதிவின் படங்கள் மிக அழகு. அதிலும் ஏரி நீர் மற்றும் அதனுடன் பாறைகள், சிறிய மலை போன்று அழகாக வந்திருக்கிறது//
நன்றி நெல்லைத் தமிழன்
வெயில் அதிகமோ? படங்கள் பளிச் என்று இருக்க அது ஒரு காரணம் என்றாலும், உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் அளவு வெயில் இருந்ததா?
பதிலளிநீக்கு//வெயில் அதிகமோ? படங்கள் பளிச் என்று இருக்க அது ஒரு காரணம் என்றாலும், உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் அளவு வெயில் இருந்ததா?//
நீக்குநம் ஊர் வெயில் போலதான் இருந்தது நெல்லை.
அங்கு உள்ள மக்களுக்கு அது அதிக வெயில். அரிசோனாவில் வெயில் அதிகம். இந்த இடத்தில் நன்றாக இருந்தது.
படங்கள் பளிச் என்று இருப்பதற்கு வெயிலும் காரணம் தான்.
ஒரு முறை தாய்லாந்து கடல் பகுதியில் இந்த மாதிரி போட்டில் நாங்கள் இருவரும் துடுப்பு போட்டுக்கொண்டே சென்றது நினைவுக்கு வருது.
பதிலளிநீக்குரொம்பவே கஷ்டப்பட்டேன், பழக்கம் இல்லாத்தால். பயமும் அதிகமாக இருந்தது.
பேரன் படகுச் சவாரிக்கு ஆசைப்படவில்லையா?
//ஒரு முறை தாய்லாந்து கடல் பகுதியில் இந்த மாதிரி போட்டில் நாங்கள் இருவரும் துடுப்பு போட்டுக்கொண்டே சென்றது நினைவுக்கு வருது.
நீக்குரொம்பவே கஷ்டப்பட்டேன், பழக்கம் இல்லாத்தால். பயமும் அதிகமாக இருந்தது.
பேரன் படகுச் சவாரிக்கு ஆசைப்படவில்லையா?//
உங்கள் மலரும் நினைவுகளை தந்ததா? மகிழ்ச்சி.பழக்கம் இல்லாத காரணம் மட்டும் இருந்து இருக்காது, மனைவியை பத்திரமாக கூட்டி போய் வர வேண்டும் என்ற பயம் இருந்து இருக்கும். அடுத்த முறை படகு சவாரி பயம் தராது என்று நினைக்கிறேன்.
பேரன் ஆசைபடவில்லை .
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத்தமிழன்.
படங்கள் நன்றாக வந்துள்ளன. அணிலும், வாத்துகளும் போஸ் கொடுக்கும் அழகு தனி. அரிசோனா வெப்பநிலை நம் ஊரு வெப்ப நிலை போன்றது என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், , வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் நன்றாக வந்துள்ளன. அணிலும், வாத்துகளும் போஸ் கொடுக்கும் அழகு தனி. அரிசோனா வெப்பநிலை நம் ஊரு வெப்ப நிலை போன்றது என்று தோன்றுகிறது.//
ஆமாம், நம்ம ஊர் வெயிலை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இன்று மழை பெய்து வெப்பம் குறைந்து இருக்கிறது. இரண்டு நாட்களாக அதிகம் வெயில்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ரம்மியமான இடம். மூவண்ண விமானம், குதூகலமாக குளிக்கும் வளர்ப்புச் செல்லங்கள், நிற்கும் மலை அணில்... படங்களும் உங்களது அனைத்து குறிப்புகளும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//ரம்மியமான இடம். மூவண்ண விமானம், குதூகலமாக குளிக்கும் வளர்ப்புச் செல்லங்கள், நிற்கும் மலை அணில்... படங்களும் உங்களது அனைத்து குறிப்புகளும் சுவாரஸ்யம்.//
ஆமாம், ராமலக்ஷ்மி ரம்மியமான இடம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நீலநிறமாகத் தெரிகிறது நீர்நிலை என்று .நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். மலைகளுக்கு நடுவே ஏரி பார்க்க அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//நீலநிறமாகத் தெரிகிறது நீர்நிலை என்று .நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். மலைகளுக்கு நடுவே ஏரி பார்க்க அழகாக இருக்கிறது.//
ஆமாம், நீல நிறம் தான் அதிகம். சில இடங்களில் மட்டும் வேறு நிறம்.
மலைகளுக்கு நடுவே ஏரி பார்க்க அழகாய் இருந்தது.
ஆழமற்ற நீர்நிலை என்பதால் ஆபத்து இருந்திருக்காது. அதன் அருகே இருப்பவர்கள் அவரவர்கள் சொந்தமாகவே படகு வாங்கி வைத்திருப்பார்கள் போல..!
பதிலளிநீக்கு//ஆழமற்ற நீர்நிலை என்பதால் ஆபத்து இருந்திருக்காது. அதன் அருகே இருப்பவர்கள் அவரவர்கள் சொந்தமாகவே படகு வாங்கி வைத்திருப்பார்கள் போல..!//
நீக்குவெகு தூரத்தில் இருந்தும் படகுகளுடன் வருகிறார்கள் ஸ்ரீராம்.
ஆழமான ஏரிகளுக்கு வேறு பெரிய படகுடன் வருகிறார்கள். முன்பு வேறு ஏரியில் படகு விட்டு போவதை பதிவு செய்து இருக்கிறேன்.
பின்னாலேயே போகும் வாத்துகளுக்கு நல்ல பொழுதுபோக்கு என்றாலும் திடீரென சினம் கொண்டு தாக்காமல் இருந்தனவே... என்ன இரண்டு வாத்துகள் திடீரென துரத்தி இருக்கின்றன!
பதிலளிநீக்கு//பின்னாலேயே போகும் வாத்துகளுக்கு நல்ல பொழுதுபோக்கு என்றாலும் திடீரென சினம் கொண்டு தாக்காமல் இருந்தனவே... என்ன இரண்டு வாத்துகள் திடீரென துரத்தி இருக்கின்றன!//
நீக்குசில கூஸ் வாத்துக்கள் துரத்தும் . இந்த வாத்து துரத்தவில்லை.வாத்துகளை கவனிப்பது நல்ல பொழுது போக்காய் இருந்தது.
நான்கைந்து பேரா சேர்ந்து தள்ளினா அந்த சின்ன குன்று மேல இருக்கற அந்தக் கல்லு உருண்டு விழாது?!!
பதிலளிநீக்கு//நான்கைந்து பேரா சேர்ந்து தள்ளினா அந்த சின்ன குன்று மேல இருக்கற அந்தக் கல்லு உருண்டு விழாது?!!//
நீக்குநான்கைந்து பேரா சேர்ந்து நெம்பு கோல் வைத்து தள்ளினால்தான் விழும் என்று நினைக்கிறேன். நம்மை போல யாரும் நினைத்து பார்க்கவில்லை, அதனால் அந்த கல் அப்படியே இருக்கிறது.
இடம் அந்தக் கால ஆங்கில பேண்டஸி படங்களில் வரும் இடம்போல இருக்கிறது. தந்திரக் காட்சிகள் எடுக்கலாம்..
பதிலளிநீக்கு//இடம் அந்தக் கால ஆங்கில பேண்டஸி படங்களில் வரும் இடம்போல இருக்கிறது. தந்திரக் காட்சிகள் எடுக்கலாம்..//
நீக்குஆமாம், முன்பு அந்த மாதிரி படங்கள் பார்த்து இருக்கிறோம்.
பேரனும் நீங்களும் பாறையில் அமர்ந்திருக்கும் படங்களை ரசித்தேன். தூரத்திலிருந்து மகன் எடுத்த படமும் அழகு. மீன் பிடிபபவர் தெரிகிறார்.
பதிலளிநீக்கு//பேரனும் நீங்களும் பாறையில் அமர்ந்திருக்கும் படங்களை ரசித்தேன். தூரத்திலிருந்து மகன் எடுத்த படமும் அழகு. மீன் பிடிபபவர் தெரிகிறார்.//
நீக்குநன்றி. மீன் பிடிப்பவரை பார்த்து விட்டீர்களா?
அமர நாற்காலி வசதிகளுடன் நீங்களும் சென்றிருக்கிறீர்கள்! பிரியாணி எப்படி இருந்தது? ஆனால் பொதுவாக அந்தப் படங்களை பார்க்கும்போது கொஞ்சம் வெம்மையாக இருந்ததது போல உணர்வு!
பதிலளிநீக்கு//அமர நாற்காலி வசதிகளுடன் நீங்களும் சென்றிருக்கிறீர்கள்! பிரியாணி எப்படி இருந்தது? ஆனால் பொதுவாக அந்தப் படங்களை பார்க்கும்போது கொஞ்சம் வெம்மையாக இருந்ததது போல உணர்வு!//
நீக்குஆமாம், எனக்கு சக்கர நாற்காலி, மருமகள் அம்மாவுக்கு மடக்கு நாற்காலி எல்லாம் எடுத்து போனோம். வெம்மையாக இருந்தது. காலை தானே செய்து கொண்டு வந்தோம், பிரியாணி நன்றாக இருந்தது, காரம் இல்லாமல் நிறைய பிரட் போட்டு செய்து கொண்டு வந்து இருந்தாள்.
காணொளி அனவைலபில் என்கிறது!
பதிலளிநீக்கு//காணொளி அனவைலபில் என்கிறது!//
நீக்குசுட்டி கொடுத்து இருந்தனே! அதை சுட்டினால் வருகிறதே!
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.
கவனிக்கவில்லை. சுட்டியை இப்போதுதான் பார்த்தேன். காணொளி அழகாய் இருக்கிறது. பிரமிப்பாய் இருக்கிறது. அந்தக் குன்றுகள் விதம் விதமாய் காட்சி தருகின்றன. யானையின் முகம் போல, மனிதர்களின் உருவங்கள் போல, பிரம்மாண்டமான கைமுஷ்டி போல...
நீக்கு//கவனிக்கவில்லை. சுட்டியை இப்போதுதான் பார்த்தேன். காணொளி அழகாய் இருக்கிறது. பிரமிப்பாய் இருக்கிறது. அந்தக் குன்றுகள் விதம் விதமாய் காட்சி தருகின்றன. யானையின் முகம் போல, மனிதர்களின் உருவங்கள் போல, பிரம்மாண்டமான கைமுஷ்டி போல...//
நீக்குஆமாம், நீங்கள் சொல்வது போல குன்றுகளில் பலவிதமான உருவங்கள் தெரிவது உண்மை.
காணொளி உங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தேன், அது போலவே ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
மனதுக்கு மகிழ்ச்சி தரும் விதமான இடம் என்பது படங்கள் வழி தெரிகிறது. படங்களும் தகவல்களும் மிகவும் நன்றி. தண்ணீர் வரத்து இருக்கும் நாட்களில் இன்னும் அதிக ரம்மியமாக இருக்கும் என்று தோன்றியது. இடத்தின் சுத்தம் மனதைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்
நீக்கு//மனதுக்கு மகிழ்ச்சி தரும் விதமான இடம் என்பது படங்கள் வழி தெரிகிறது. படங்களும் தகவல்களும் மிகவும் நன்றி. தண்ணீர் வரத்து இருக்கும் நாட்களில் இன்னும் அதிக ரம்மியமாக இருக்கும் என்று தோன்றியது. இடத்தின் சுத்தம் மனதைக் கவர்ந்தது.//
ஆமாம், விடுமுறை நாளில் கண்டு களிக்க , மனதுக்கு மகிழ்ச்சிதரும் இடம் தான். தண்ணீர் கோடை காலம் என்பதால் குறைந்து இருக்கிறது.
இன்னொரு லேக் போனோம், அதை முன்பு பதிவு செய்து இருக்கிறேன், இப்போது போன போது தண்ணீர் மிக குறைந்து இருந்தது.
உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட்.
அன்றே சொல்ல மறந்து விட்டேன். இந்தப் பதிவின் தலைப்பு ஒரு பழைய எல் ஆர் ஈஸ்வரி பாடலை நினைவு படுத்துகிறது.
பதிலளிநீக்கு"நாலு பக்கம் ஏரி.. ஏரியிலே தீவு.. தீவுக்கொரு ராஜா.. ராஜாவுக்கொரு ராணி..."
மீண்டும் வந்து பாடலை நினைவு படுத்தி கருத்து சொன்னதற்கு நன்றி ஶ்ரீராம் .
பதிலளிநீக்குநல்லபாடல் எனக்கு பிடிக்கும் படமும் நன்றாக இருக்கும் திரில்லர் படம் .
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களும், பதிவும் அமர்க்களமாக உள்ளது. படங்களில் மலைகளும், நடுவில் ஏரியும், வானம் மற்றும் நீரின் நிறமாக நீலமும் மனதை கவர்கிறது
மலையில் அந்த கல் உருண்டு விழாதபடிக்கு இயற்கை அதனை அமைத்துள்ளது. இங்கும் சில தூரமான பயணங்களில் இதைப் போன்று மலைகளுடன் ஒட்டி உறவாடும் சிறு உருண்டை கற்களை கண்டுள்ளேன். அந்த நினைவுகள் உங்களின் அந்தப் படத்தை பார்த்ததும் வந்தன.
பேரனும், நீங்களும், பாறைகளில் அமர்ந்துள்ள படங்களும், உங்கள் சம்பந்தியுடன் மர நிழலில் இளைப்பாறும் படங்களும், மிக நன்றாக உள்ளது.
நதி நீரில் அலைந்து விளையாடும் வாத்துகளையும் , நாய் குட்டிகளையும் பார்த்து ரசித்தேன். நல்ல அழகாக எல்லாப் படங்களை எடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
இந்த மாதிரி இடங்களுக்கு நம் பிரியமானவர்களுடன் சென்று வந்தால், மனதுக்கு நல்ல ஒரு திருப்தி கலந்த மகிழ்ச்சி வரும். அதனால்தான் நானும் சற்று உடல்நிலை சரியில்லாத சமயங்களில் கூட மகன்கள் அழைத்தால் அவர்களுடன் சென்று வருவேன்.
உங்களை அன்பாக கவனித்துக் கொள்ளும், உங்கள் மகன் மருமகள், பேரனுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
எனக்கும் இருதினங்களாக வீட்டில் வேலைகள் சரியாக இருந்தன. எங்கும் செல்லவில்லையென்றாலும், குழந்தைகள், பேத்திகள், பேரனுடன் நேரம் போய் விட்டது. அதனால்தான் தங்கள் பதிவுக்கும் வர இயலவில்லை. வழக்கப்படி தினமும் செல்லும் பதிவுகளுக்கும் வர இயலாமல் போனது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களை இரண்டு நாட்கள் எங்கள் ப்ளாகில் காணவில்லை என்றதும் உடம்பு சரியில்லையோ என்று நினைத்தேன். கேட்கலாம் இன்று என்று நினைத்து கொண்டு இருந்தேன், நீங்களே வந்து சொல்லி விட்டீர்கள்.
//பதிவு அருமை. படங்களும், பதிவும் அமர்க்களமாக உள்ளது. படங்களில் மலைகளும், நடுவில் ஏரியும், வானம் மற்றும் நீரின் நிறமாக நீலமும் மனதை கவர்கிறது//
நன்றி கமலா.
//மலையில் அந்த கல் உருண்டு விழாதபடிக்கு இயற்கை அதனை அமைத்துள்ளது. இங்கும் சில தூரமான பயணங்களில் இதைப் போன்று மலைகளுடன் ஒட்டி உறவாடும் சிறு உருண்டை கற்களை கண்டுள்ளேன். அந்த நினைவுகள் உங்களின் அந்தப் படத்தை பார்த்ததும் வந்தன.//
நிறைய இடங்களில் இப்படி உருண்டை கல் தனியாக தள்ளி விளையாடலாம் போல இருக்கும். மகாபலிபுரம், கழுகுமலை, மதுரையில் சமணபள்ளி பதிவுகளில் இது போன்ற கற்களை பார்த்து இருக்கிறேன்.
//பேரனும், நீங்களும், பாறைகளில் அமர்ந்துள்ள படங்களும், உங்கள் சம்பந்தியுடன் மர நிழலில் இளைப்பாறும் படங்களும், மிக நன்றாக உள்ளது.//
நன்றி.
//நதி நீரில் அலைந்து விளையாடும் வாத்துகளையும் , நாய் குட்டிகளையும் பார்த்து ரசித்தேன். நல்ல அழகாக எல்லாப் படங்களை எடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.//
இருந்த இடத்திலிருந்து அமர்ந்தபடி காமிராவில் படங்களை எடுத்தேன்.
பாராட்டுக்களுக்கு நன்றி. சில படங்கள் மகன் எடுத்தான்.
//இந்த மாதிரி இடங்களுக்கு நம் பிரியமானவர்களுடன் சென்று வந்தால், மனதுக்கு நல்ல ஒரு திருப்தி கலந்த மகிழ்ச்சி வரும். அதனால்தான் நானும் சற்று உடல்நிலை சரியில்லாத சமயங்களில் கூட மகன்கள் அழைத்தால் அவர்களுடன் சென்று வருவேன்.
உங்களை அன்பாக கவனித்துக் கொள்ளும், உங்கள் மகன் மருமகள், பேரனுக்கு என் அன்பான வாழ்த்துகள்.//
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். உடல் இறுக்கமும், மன இறுக்கமும் தளர்ந்து மகிழ்ச்சி அடைந்தது உண்மை.
திருப்தி கலந்த மகிழ்ச்சி கிடைத்தது.
//எனக்கும் இருதினங்களாக வீட்டில் வேலைகள் சரியாக இருந்தன. எங்கும் செல்லவில்லையென்றாலும், குழந்தைகள், பேத்திகள், பேரனுடன் நேரம் போய் விட்டது. அதனால்தான் தங்கள் பதிவுக்கும் வர இயலவில்லை. வழக்கப்படி தினமும் செல்லும் பதிவுகளுக்கும் வர இயலாமல் போனது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி//
நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சி.
விடுமுறை நாளில் குழந்தைகள், பேரன், பேத்திகளுடன் நேரம் சரியாக இருக்கும், வேலையும் கூடும். நேரம் கிடைத்த போது வந்து பதில் கொடுத்தமைக்கு நன்றி.