வியாழன், 5 மார்ச், 2026

வரசித்தி விநாயகர்



எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விநாயகருக்கு  புதிதாக செய்யப்பட்ட  செப்பு கவசம்.  ஜனவரி 25  ஆம் தேதி   சாற்றப்பட்டு  சிறப்பு  பூஜை செய்யப்பட்டது. அந்த படங்கள் இதில் இடம்பெருகிறது இந்த பதிவில்..
நாளை  சங்கடஹர சதுர்த்தி அதனால் இந்த பகிர்வு.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனைகள்.



பூஜை செய்ய எடுத்து கொடுக்கும் போது என்னையும் தொட்டுக் கொடுக்க சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது , நான் விநாயகருக்கு பின் பக்கம் இருக்கிறேன்.



கணபதி களிரே  போற்றி
ஐங்கரத்து அப்பா போற்றி
சிவம் மகிழ் சிறுவா போற்றி
செந்நெறி காட்டுவாய் போற்றி
திருமறை உதவினாய் போற்றி
திங்களணி திருவே போற்றி
அறுகுத்தார் அரசே போற்றி
அல்லல் தீர்க்கும் அமுதே போற்றி
வெண்ணிற உடையாய் போற்றி
விசும்பெலாம் விரிந்தாய் போற்றி
திங்களின் நிறத்தாய் போற்றி
திரண்ட நால் தோளாய் போற்றி
ஆனைமா முகத்தாய் போற்றி
அனைத்திடர் களைவாய் போற்றி
திருவெலாந் தருவாய் போற்றி
திருவடி இணைகள் போற்றி


கவசத்திற்கு அர்ச்சனை மற்றும்  பூஜை செய்யப்பட்டது




போக்கஸ் லைட் பொருத்தபட்டு உள்ளது தெரிகிறதா ?

பாலும் தெளித்தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம்செய் 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே  நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா !

- ஒளவையார்



 உருகும் அடியார் அள்ளூர உள்ளே ஊறும் தேன் வருக

உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக புலன்வழிபோய்த்

திருகும் உள்ளத்தார் நினைவினுக்கும் சேயாய் வருக எமை

ஆண்ட செல்வா வருக உயிர்ப்பைங்கூழ் தழைக்க கருணை

மழை பரப்பும் முகிலே வருக நறும்பாகே வருக வரை கிழித்த

முருகவேட்கு முன் உதித்த முதல்வா வருக வருகவே

மூரிக் கலசைச் செங்கழுநீர் முனிவா வருக வருகவே.






வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி  நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல்  சார்வார் தமக்கு

- ஒளவையார்


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால்  வானோரும் ஆனை முகத்தானைக் 
காதலால் கூப்புவர் தங்கை.

- கபிலர்

அன்று வழங்கப்பெற்ற பிரசாதங்கள் 




2023 ஆம் ஆண்டு போட்ட பதிவு  புதிதாக கட்டப்பட்ட விநாயகர் மண்டலபூஜை நிறைவு நாளில் செய்த சந்தனக்காப்பு அலங்கார படம்.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக நடைபெறுகிறது.  சங்கடஹர சதுர்த்திக்கு  கவசம் சாற்றப்பட்டு சிறப்பாக பூஜை நடைபெறும். இன்று  மாலை 6 மணிக்கு ஆரம்பித்து 8 மணி வரை  பூஜை நடைபெறும்.

தேர்வு நேரம் குழந்தைகள் தங்கள் உற்ற நண்பனாய் கருதும் விநாயகரை வணங்கி தேர்வு எழுத செல்வார்கள். பெற்றோர்களிடம் தாத்தா, பாட்டியிடம் ஆசி பெற்று செல்வார்கள். பள்ளியிலும் ஆசிரியர்கள் நன்றாக எழுதுங்கள் பதட்டம் இல்லாமல் வாழ்த்தி அனுப்புவார்கள்.

அவர்கள் படிக்கும்  பிள்ளையார் பாடல்களை பகிர்ந்து இருக்கிறேன்.
குழந்தைகளுக்கு அவர்கள் படித்த பாடங்களை மறக்காமல் எழுதவும்,  நல்ல உடல் நலத்தோடு தேர்வு காலங்களில் இருக்கவும் 
வரசக்தி விநாயகர் அருள் புரிய வேண்டும்.

இன்று காலை ஹலோ எப். எம்பில்  பிராத்தனை நேரத்தில் குழந்தைகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனை செய்யப்பட்டது. 


பொதுத்தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தெதி வரை நடைபெற உள்ளது.

எல்லா மாணவ மாணவிகளும் நன்கு தேர்வு எழுத வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!


------------------------------------------------------------------------------------------------------------------------

18 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய சங்கடஹர சதுர்த்தியில் என் இஷ்ட தெய்வமாகிய விநாயகர் தரிசனம் கண்டு மிக மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் சொல்வது போல் அனைத்துப் பள்ளி குழந்தைகளின் படிப்பாற்றலுக்கும், இப்போது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் விநாயகபெருமான் துணையாக நின்று அருள் செய்ய வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.

    உங்கள் குடியிருப்பில் உள்ள விநாயருக்கு சாற்ற செப்பு கவசம் செய்து கொண்டு வரும் போது, உங்களையும் தொட்டுக் கொள்ள செய்தது அந்த விநாயகரின் அருள்தான் . அவன் அருள் உங்கள் அனைவருக்கும் என்றும் நிலையாய் நிலைத்திருக்க நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    படங்கள், பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாடல்களைப் பாடி மனதாற "அவனை" வணங்கிக் கொண்டேன். பூஜை படங்களும் அருமை.

    பிரசாதங்களில் கொஞ்சம் பக்தியுடன் எடுத்துக் கொண்டேன்.(அனைவருக்கும் வேண்டுமல்லவா.!!) படம் நன்றாக உள்ளது.

    சந்தன காப்பு விநாயகரையும் தரிசித்துக் கொண்டேன். விநாயகர் தன் அருளினால், அனைவரின் வாழ்விலும் இடர் களைந்து, வளம் சொழிக்க வேண்மென எப்போதும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. காணொளியையும் கண்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      வணக்கம் சகோதரி

      //பதிவு அருமை. //

      நன்றி.

      //இன்றைய சங்கடஹர சதுர்த்தியில் என் இஷ்ட தெய்வமாகிய விநாயகர் தரிசனம் கண்டு மிக மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் சொல்வது போல் அனைத்துப் பள்ளி குழந்தைகளின் படிப்பாற்றலுக்கும், இப்போது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் விநாயகபெருமான் துணையாக நின்று அருள் செய்ய வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.//

      உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. உங்கள் இஷ்ட தெய்வம் உங்களை வேண்டுதலை நிறைவேற்றி தருவார்.

      //உங்கள் குடியிருப்பில் உள்ள விநாயருக்கு சாற்ற செப்பு கவசம் செய்து கொண்டு வரும் போது, உங்களையும் தொட்டுக் கொள்ள செய்தது அந்த விநாயகரின் அருள்தான் . அவன் அருள் உங்கள் அனைவருக்கும் என்றும் நிலையாய் நிலைத்திருக்க நானும் வேண்டிக் கொள்கிறேன்.//

      உங்கள் வேண்டுதலுக்கு நன்றி.


      //படங்கள், பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாடல்களைப் பாடி மனதாற "அவனை" வணங்கிக் கொண்டேன். பூஜை படங்களும் அருமை.

      பிரசாதங்களில் கொஞ்சம் பக்தியுடன் எடுத்துக் கொண்டேன்.(அனைவருக்கும் வேண்டுமல்லவா.!!) படம் நன்றாக உள்ளது.

      சந்தன காப்பு விநாயகரையும் தரிசித்துக் கொண்டேன். விநாயகர் தன் அருளினால், அனைவரின் வாழ்விலும் இடர் களைந்து, வளம் சொழிக்க வேண்மென எப்போதும் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. காணொளியையும் கண்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
      பதிவில் அனைத்தையும் ரசித்து படித்து, பிரசாதங்களை சுவைத்து இடர் களைந்து வளம் செழிக்க பிரார்த்தனை செய்து கொண்டதற்கும் நன்றி கமலா.
      சின்ன காணொளிதான், கடம் அபிஷேகம் மட்டும் தான். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. கவசம் சார்த்தப்பட்ட பிள்ளையார் அழகு.... அதை விட அழகு சந்தனக்காப்பில் இருக்கும் வேழமுகத்தோன்....

    படங்களும் தகவல்களும் நன்று. தேர்வு எழுதப் போகும், எழுதுகின்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //கவசம் சார்த்தப்பட்ட பிள்ளையார் அழகு.... அதை விட அழகு சந்தனக்காப்பில் இருக்கும் வேழமுகத்தோன்....//

      ஆமாம், சந்தனக்காப்பு நன்றாக செய்வார் குருக்கள்.

      //படங்களும் தகவல்களும் நன்று. தேர்வு எழுதப் போகும், எழுதுகின்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும்//

      உங்கள் கருத்துக்கும், பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  3. சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் தரிசனம்...  வணனாகிக் கொள்கிறேன்.  இன்று முதல் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு அவனருள் பூரணமாகக் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் தரிசனம்... வணனாகிக் கொள்கிறேன். இன்று முதல் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு அவனருள் பூரணமாகக் கிடைக்கட்டும்.//

      விநாயகரை வணங்கி கொண்டு , தேர்வு எழுதும் மாணவ , மாணவிகளுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பாஸ் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் கோவில் சென்று வருவார்.  அரைலிட்டர் பால், பூ வாங்கித் தருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாஸ் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் கோவில் சென்று வருவார். அரைலிட்டர் பால், பூ வாங்கித் தருவார்.//

      ஓ, நல்லது.

      நான் மாதா மாதம் பணம் கொடுத்து விடுவேன்.

      நீக்கு
  5. நீங்கள் இன்றைய பதிவில் சொல்லி இருக்காதா ஒன்றை தரவேண்டும் என்று தேடி எடுத்திருக்கிறேன்!!

    எல்லை இல்லா ஆனந் தமளித்து
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
    அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
    நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
    தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லை இல்லா ஆனந் தமளித்து
      அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
      சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
      சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
      அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
      கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
      வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
      கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
      அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
      நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
      தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
      வித்தக விநாயக விரைகழல் சரணே//


      வித்தக விநாயக! விரைகழல் சரணே!


      ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.
      அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  6. செப்புக் கவசத்தில் மிளிர்கிறார் விநாயகர் இதுவும் ஒரு அழகுதான். கவசமில்லாமல் பார்பப்தற்கும் அழகு...

    ஃபோக்கஸ் லைட் பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது கோமதிக்கா இடப்பக்கம் மேலே மூலையில்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //செப்புக் கவசத்தில் மிளிர்கிறார் விநாயகர் இதுவும் ஒரு அழகுதான். கவசமில்லாமல் பார்பப்தற்கும் அழகு...//

      ஆமாம், அழகுதான்.

      //ஃபோக்கஸ் லைட் பொருத்தப்பட்டுள்ளது தெரிகிறது கோமதிக்கா இடப்பக்கம் மேலே மூலையில்..//
      பார்த்து விட்டீர்களா? நல்லது.
      இரவில் அந்த லைட் போட்ட உடன் பார்க்க அவ்வளவு அழகு.

      நீக்கு
  7. செப்புக் கவசத்திலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் பிள்ளையாரின் விரல்கள் முதல் அழகாகச் செய்திருக்காங்க. சில இடங்களில் ஜஸ்ட் கவசம் ப்ளெயினாக இருக்கும் இங்கு அதுவும் அப்படியே கணபதியின் டிசைனுடன் ரொம்ப அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //செப்புக் கவசத்திலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் பிள்ளையாரின் விரல்கள் முதல் அழகாகச் செய்திருக்காங்க. சில இடங்களில் ஜஸ்ட் கவசம் ப்ளெயினாக இருக்கும் இங்கு அதுவும் அப்படியே கணபதியின் டிசைனுடன் ரொம்ப அழகா இருக்கு//

      ஆமாம் நல்ல வேலைப்பாடு. வேஷ்டியின் மடிப்புகள் , மற்றும் நீங்கள் சொல்வது போல பிள்ளையாரின் விரல்கள் அருமையாக இருக்கும்.

      நீக்கு
  8. சந்தனக்காப்பா? மஞ்சள் காப்பா? அழகு!

    காணொளியும் கண்டேன் கோமதிக்கா.

    குழந்தைகள் எல்லோரும் நன்றாகத் தேர்வு எழுதி நல்ல முறையில் பாஸ் செய்ய வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சந்தனக்காப்பா? மஞ்சள் காப்பா? அழகு!//

      சந்தனக்காப்புதான் கீதா

      //காணொளியும் கண்டேன் கோமதிக்கா.

      குழந்தைகள் எல்லோரும் நன்றாகத் தேர்வு எழுதி நல்ல முறையில் பாஸ் செய்ய வேண்டும்.//

      காணொளி பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
      குழந்தைகளை வாழ்த்தியதற்கு நன்றி.

      நீக்கு
  9. படங்களும் விவரணமும் நன்று கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்களும் விவரணமும் நன்று கோமதிக்கா//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா ரெங்கன்.

      நீக்கு