நள்ளிரவில் மாட்டுதொழுவமதில் பிறந்த பாலகனை கொண்டாடும் பண்டிகை
பேரன் கிறிஸ்தும்ஸூக்கு தயார் செய்த அற்புத நகரம்
உலகம் முழுவதும் உள்ள கிறித்துவ மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நல் வாழ்த்துகள்.
ஏழை எளிய மக்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் உற்றார் உறவுகள், நட்புகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சி படுத்தும் நாளாக, சாண்டாகிளாஸ் வருகையை எதிர்பார்க்கும் நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
ஏசு பாலனை வரவேற்க வீடுகளில் வண்ணவிளக்கு ,மற்றும் நட்சத்திரம்
தொங்கவிடுவது , குடில்கள் அமைத்து கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்காரம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகை. மதசார்பற்ற பண்டிகையாக இப்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் மகன், மகள் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ்மரம் மற்றும் பாடல்கள் இடம் பெறுகிறது.
அமைதியான இரவு" (Silent Night) என்பது உலகப் புகழ்பெற்ற ஒரு கிறிஸ்துமஸ் கீதம், இது 1818-ல் ஆஸ்திரியாவில் ஜோசப் மோஹர் (Joseph Mohr) எழுதிய கவிதைக்கு ஃபிரான்ஸ் க்ரூபர் (Franz Xaver Gruber) இசையமைத்தார்; தேவாலய ஆர்கன் பழுதடைந்ததால், guitar வாசித்து முதல்முறை பாடப்பட்டது, இதுவே உலகின் மிகவும் அன்பான கிறிஸ்துமஸ் பாடல்களில் ஒன்றாகும், இதன் தமிழ் வடிவமும் உள்ளது.
கீதத்தின் பின்னணி:
- படைப்பு: 1818-ல், ஆஸ்திரியாவின் ஓபர்ன்டார்ஃப் (Oberndorf) நகரத்தில் உள்ள புனித நிக்கோலஸ் தேவாலயத்தில் (St. Nicholas Church) பணியாற்றிக்கொண்டிருந்த ஜோசப் மோஹர், தேவாலயத்தின் ஆர்கன் பழுதடைந்ததால், அவரது கவிதைக்கு ஃபிரான்ஸ் க்ரூபர் இசையமைத்தார்.
- முதல் இசை நிகழ்ச்சி: அந்த கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, மோஹர் guitar வாசிக்க, க்ரூபர் பாஸ் (bass) குரல் கொடுக்க, இருவரும் சேர்ந்து இந்தப் பாடலைப் பாடினர். மோஹர் பாடல் வரிகளை எழுத, க்ரூபர் இசையமைத்தார், மேலும் இருவரும் சேர்ந்து பாடினர், இதில் மோஹர் guitar வாசித்தார்.
- பரவல்: இந்த எளிய பாடல், மெதுவாக ஐரோப்பா முழுவதும் பரவி, பின்னர் அமெரிக்காவிற்கும் சென்று, உலகெங்கிலும் உள்ள அன்பான கிறிஸ்துமஸ் கீதமாக மாறியது.
நன்றி - கூகுள்

ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பிடித்த கிறிஸ்துவ பாடல்களை பகிர்வேன்.
இந்த முறை அமைதியான இரவு என்ற உலகபுகழ் பெற்ற ஆங்கில பாடலின்
தமிழ் மொழிபெயர்ப்பு பாடல் பகிர்ந்து இருக்கிறேன் கேட்டுப்பாருங்கள்.
பேரன் அமைத்த அற்புத நகரம்அதில் உள்ள பொம்மைகள் கீழே வருகிறது
சின்ன காணொளிதான் பாருங்கள் பேரன் அமைத்த அற்புத நகரம்
எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

மாதா கோயில், கோயில் முன் கிறிஸ்துமஸ் மரம், பாதிரியார்
பண்ணை வீட்டுக்கு கிறிஸ்துமஸ் மரம் வாங்கி போகிறார்கள் காரில்.
சாண்டா கிளாஸ் வருகை
சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி சென்ற ஆண்டு போட்ட பதிவு.
நட்சத்திர அலங்காரம், மரம் முழுவதும் பனித்துளிகள்
தாத்தா பரிசு பொருட்களுடன் வருகிறார்.
வருடா வருடம் கிறிஸ்துமஸ் தாத்தா ஒவ்வொரு இடத்திற்கும் வருவார், அவரை எல்லோரும் போய் பார்ப்பார்கள். இந்த ஆண்டு அவர் தன் மனைவியுடன் வந்து இருக்கிறார், பேரன் அவர்களுடன் படம் எடுத்து கொண்டான்.
தாத்தா வந்த வண்டி அதில் அமர்ந்து இருக்கிறான் பேரன். பெரிய கிறிஸ்துமஸ் மரம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மரம்
உறவினர் வீட்டுக்கு போய் விட்டு வரும் வழியில் பார்த்த ஒளி விளக்கு அலங்காரங்கள் மிகவும் அழகாய் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் அலங்கரித்து இருப்பது பார்க்க பார்க்க அருமையாக இருக்கிறது. சிறந்த அலங்காரங்களுக்கு பரிசுகள் உண்டாம்.
மகன் கார் ஓட்டிக் கொண்டே மெதுவாக போக மருமகள் படம் எடுத்து நான் பார்க்க அனுப்பி வைத்த காணொளி, நீங்களும் பார்க்க பகிர்ந்து விட்டேன் பார்த்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் சிறிய காணொளிதான்.
மகள் அனுப்பிய படம் - பெரிய கிறிஸ்துமஸ் மரம்.
அவள் வீட்டில் வைத்த கிறிஸ்துமஸ் அலங்காரம் பென்குயின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறது
மகள் வீட்டு கிறிஸ்துமஸ் மரம்.
"நட்டநடு ராத்திரியிலே மொட்டு போல பூத்தாரே !" பாடல் எளிமையாக இருக்கிறது. அந்தோணி சாமி பாடியது கேட்டுப்பாருங்களேன்.
அன்பான நட்புகளுக்கும் நம் வலைத்தள நட்புகள் ஏஞ்சல், பிரியசகி, மற்றும் அதிராவுக்கு கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள் .
அன்பு ,அமைதி, ஒற்றுமை எங்கும் நிலவட்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------------------------












.jpg)
மாலை வணக்கம்.
பதிலளிநீக்குபடங்கள், காணொளிகள் என அனைத்தும் சிறப்பு. கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//மாலை வணக்கம்.
படங்கள், காணொளிகள் என அனைத்தும் சிறப்பு. கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்