மருமகள் வரைந்த கோலம்
மகன் வீட்டுக் கொலு கொலு முடிந்தவுடன் போடுகிறேன் என்று நினைக்காதீர்கள். பேரனின் குறும்படம் வந்தவுடன் போடலாம் என்று இருந்தேன். இன்றுதான் பேரன் அனுப்பினான்.
மகன் வீட்டுக் கொலு, மகன் செய்த அனுமன், மருமகள் கைவண்ணத்தில் கொலு இவைகள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
பேரன் உறவுகளை நட்புகளை கொலுவுக்கு அழைக்கும் அழைப்பிதழ்.
வீட்டு வாசலில் வரவேற்க எல்லாம் தயார் நிலையில்
பேரனின் நாடகம் பார்க்க அழைப்பு.
கொலு பார்க்க வந்து விட்டீர்களா? பன்னீர் தெளித்து விட்டான் பேரன், சந்தனம், குங்குமம் , கல்கண்டு எடுத்து கொள்ளுங்கள்.
திருவிளக்கில் பெருமாளும், தாயாரும் வந்து விட்டார்கள்.
வீட்டில் பூத்த மல்லிகை சூடி கொண்டு தாயார் அழகாய் கொலுவீற்று இருக்கிறாள்.
சரஸ்வதி
பேரனின் குறும்படம்
குறும்படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்.
இந்த வருடம் பேரனின் ஷோ
பேரனின் நிக்ழச்சியை பார்க்கும் அன்பர்கள்.
மகன் செய்த அனுமன். அனுமன் தன் இதயத்தில் ராமனும், சீதையும் என்று வாழ்ந்து கொண்டு இருப்பதை காட்டுகிறார்.
ராமன் மேல் உள்ள பக்தியை அனைவருக்கும் காட்டுகிறார்.
வந்தவர்களை வரவேற்று அவர்களிடம் உரையாடி 10 நாட்களும் அவர்களுடன் படமும் எடுத்து கொண்டேன். டிவி திரையில் நேரலையில் என்னைப்பார்த்தார்கள் . போன வருடம் அங்கு இருந்ததை நினைவு படுத்தி பேசினார்கள்.
சில நட்புகள் பிரசாதங்கள் எடுத்து வந்து இருந்தார்கள்,
படத்தில் முதலில் நிற்கும் அன்பு நட்பு "ஆன்டி வடை, கேசரி எல்லாம் செய்து கொண்டு வந்தேன்" எடுத்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்து எனக்கு கொடுத்தார்கள்.
மருமகளும், அவள் அம்மாவும் சேர்ந்து தினம் பிரசாதங்கள் செய்து அனைவரையும் சாப்பிட வைத்து தாம்பூலம் கொடுத்து உபசரித்தனர்.
நண்பர்களின் குழந்தைகளும் பாட்டி எப்போது வருவீர்கள் இங்கு ? எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு என்னுடன் படம் எடுத்து கொண்டார்கள் .( அக்காவும், தம்பியும்)
சில குழந்தைகள், பெரியவர்கள், பாடினார்கள், நானும் இங்கிருந்து பாடினேன். மருமகள் நடனம் கற்றுக் கொள்கிறாள், அவளின் குரு, மற்றும் கற்றுக் கொள்ளும் தோழியர் எல்லாம் சேர்ந்து அயிகிரி நந்தினி பாடலுக்கு ஆடினார்கள். விழா இனிதாக நிறைவு அடைந்தது.
ஸ்ரீ மஹிஷாஸூரமர்த்தினி ஸ்தோரத்தில்
அயிகிரி நந்தினி என்று ஆரம்பிக்கும் முதல் பாராவுக்கு தோட்டத்தில் ஆடினார்கள்
தேவி படம் அனுப்ப மறந்து விட்டான், நான் இங்கு இருந்து எடுத்தது அதனால் அம்மன் தெளிவாக தெரியவில்லை, மகன் அனுப்பினால் நான் மீண்டும் அம்மனை அனுப்புகிறேன்.
மூன்று அம்மனும் இடம் பெறுவார்கள், இந்த இரண்டும் கொலூ முன்பே இருக்கும். சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடிக்கி வைத்து அதன் மேல் அம்மன் அலங்காரம் செய்வோம் அது அந்த சரஸ்வதி அம்மன் படம் தான் இல்லை. அதற்கு என்று இடம் விட்டு இருப்பது தெரியும்.
நெல்லைத்தமிழன் உங்கள் மகன் வீட்டு கொலு வருமா? என்று கேட்டு இருந்தார் கொலுவை பகிர்ந்து விட்டேன்.
அன்பு சூழ் உலகு என்றும் வாழ்க!
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------




.jpg)
.jpg)
.jpg)






அக்கா அழைப்பிதழ் சூப்பர். கவினின் திறமைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அக்கா அழைப்பிதழ் சூப்பர். கவினின் திறமைக்கு வாழ்த்துகள்.//
நன்றி கீதா, கவினுக்கு உங்கள் வாழ்த்தை சொல்லி விடுகிறேன்.
நல்வரவு போர்டு, மருமகளின் கோலம் எல்லாம் நல்ல திட்டமிட்டு செய்யறாங்க எல்லாரும்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம், முன்பே ஒவ்வொன்றையும் திட்டமிட்டுதான் செய்வாள் மருமகள்,
நீக்குஅக்கா உங்க ப்ளாகர் வடிவமே வித்தியாசமாக இருக்கு, கீழே கருத்துப் பெட்டி பெரியதாக இல்லாமல் குட்டியாக வருது
பதிலளிநீக்குகீதா
ஏன் ப்ளாகர் வடிவம் மாறி இருக்கு தெரியவில்லை , இப்போது கணினியிலிருந்து பதில் கொடுக்க முடியாம் ஜபேட் மூலம் கொடுக்கிறேன் . மடி கணினி ஜபேட் என்று மாற்றி மாற்றி பதிவை எழுதி கொண்டு இருக்கிறேன் .எதனால் குட்டியாக வருது என்று தெரியவில்லை.
நீக்குகொலு பார்க்க வந்து விட்டீர்களா? பன்னீர் தெளித்து விட்டான் பேரன், சந்தனம், குங்குமம் , கல்கண்டு எடுத்து கொள்ளுங்கள்.//
பதிலளிநீக்குகொலு பார்க்கவும், வீர ஹனுமான் படம் பார்க்கவும் வந்துவிட்டோம். ஆமாம் குங்குமம் எடுத்துக் கொண்டேன். கல்கண்டு எடுத்து உங்க பேரனுக்கே கொடுத்தாச்சு!!!!!!
கீதா
கொலு பார்க்கவும் வீர அனுமான் படம் பார்க்கவும் வந்தது மகிழ்ச்சி, பேரனுக்கு கல்கண்டை கொடுத்து விட்டீர்களா? இரண்டு கல்கண்டு சாப்பிட்டால் என்ன கீதா?
நீக்குதிருவிளக்கில் பெருமாள் தாயார் அலங்காரம் வடிவமைப்பு அட்டகாசம் என்றால் வீட்டில் பூத்த மல்லிப்பூ தொடுத்த விதம் மதுரை மல்லியைத் தோற்கடித்துவிட்டது. பூவும் நம்ம ஊர் பூ போலவே அழகா இருக்கு அங்கு வேற்று நிலத்தில் வளர்ந்து பூத்தாலும்.
பதிலளிநீக்குகீதா
திருவிளக்கில் பெருமாள் தாயார் அலங்காரம் வடிவமைப்பு அட்டகாசம் என்றால் வீட்டில் பூத்த மல்லிப்பூ தொடுத்த விதம் மதுரை மல்லியைத் தோற்கடித்துவிட்டது. பூவும் நம்ம ஊர் பூ போலவே அழகா இருக்கு அங்கு வேற்று நிலத்தில் வளர்ந்து பூத்தாலும்.//
நீக்குமல்லிகை பூ அரிசோனாவில் நன்றாக இருக்கும் மல்லிகைப்பூ சீஸனில் எல்லோர் வீட்டிலும் நன்கு பூக்கும்.
மதுரை மல்லிகைப் பூ போல்
கவினின் குறும்படம் சூப்பர் சூப்பர், கோமதிக்கா பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க. யுட்யூபிலும் கருத்து கொடுத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஹனுமான் குரம் கவினா?
கீதா
//கவினின் குறும்படம் சூப்பர் சூப்பர், கோமதிக்கா பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க. யுட்யூபிலும் கருத்து கொடுத்திருக்கிறேன்.//
நீக்குநன்றி கீதா. உங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சொல்லி விடுகிறேன்.
அனுமன் குரலும் கவின்தான். முதல் குரலும், கடைசியில் உள்ள குரலும் வேறு ஒருவர். மற்ற குரல் எல்லாம் கவின் தான்.
சீதாவிற்கும் குரல் மாற்றி சொல்லியிருக்கிறாரோ கவின்?
பதிலளிநீக்குகீதா
//சீதாவிற்கும் குரல் மாற்றி சொல்லியிருக்கிறாரோ கவின்?//
நீக்குசீதாவுக்கும் கவின் தான் குரல் கொடுத்து இருக்கிறேன்.
படத்தில் கடைசில சொல்லும் மெசேஜ் சூப்பர்.
பதிலளிநீக்குகீதா
//படத்தில் கடைசில சொல்லும் மெசேஜ் சூப்பர்.//
நீக்குநன்றி கீதா
அனுமன் இதயம் திறந்து காட்டும் வடிவமைப்பு சூப்பர். மகனும் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார் அதான் கவினும் 16 அடிக்கும் மேலே பாய்கிறார் ஹனுமனைப் போல!
பதிலளிநீக்குகீதா
//அனுமன் இதயம் திறந்து காட்டும் வடிவமைப்பு சூப்பர். மகனும் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார்//
நீக்குநன்றி
//அதான் கவினும் 16 அடிக்கும் மேலே பாய்கிறார் ஹனுமனைப் போல!//
மகிழ்ச்சி.
வந்தவர்களை வரவேற்று அவர்களிடம் உரையாடி 10 நாட்களும் அவர்களுடன் படமும் எடுத்து கொண்டேன். டிவி திரையில் நேரலையில் என்னைப்பார்த்தார்கள் . //
பதிலளிநீக்குசூப்பர் கோமதிக்கா. நட்பும் சுற்றமும் இப்படி இருந்தால் இனிய மகிழ்ச்சிதான்.
நண்பர்களின் குழந்தைகளும் பாட்டி எப்போது வருவீர்கள் இங்கு ? எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு என்னுடன் படம் எடுத்து கொண்டார்கள் .( அக்காவும், தம்பியும்)//
வாவ் வாவ்!!! அக்கா கலக்கல் போங்க.
இப்படி நான் அன்பை வழங்க வழங்க அது தானாகவே பெருகும்.
அன்பே சிவம் !!
கீதா
10 நாட்களும் அன்பு மழையில் குளிந்தேன்.
நீக்கு//இப்படி நான் அன்பை வழங்க வழங்க அது தானாகவே பெருகும்.
அன்பே சிவம் !!//
ஆமாம், அன்பை வழங்க வழங்க பெருகி கொண்டுதான் இருக்கும்
அன்பே சிவம்.
மருமகள் நடனம் கற்றுக் கொள்வது நல்ல விஷயம் கோமதிக்கா. உடலுக்கும் மனதிற்குமே மிக மிக நல்லது.
பதிலளிநீக்குஅவங்க எல்லாரும் அபிநயம் பிடித்ததும் சூப்பர். அவங்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க
கீதா
//மருமகள் நடனம் கற்றுக் கொள்வது நல்ல விஷயம் கோமதிக்கா. உடலுக்கும் மனதிற்குமே மிக மிக நல்லது.//
நீக்குஆமாம் கீதா. உடலுக்கும், மனதுக்கும் நல்லதுதான்.
//அவங்க எல்லாரும் அபிநயம் பிடித்ததும் சூப்பர். அவங்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் சொல்லிடுங்க//
சொல்லிவிடுகிறேன் கீதா
உங்கள் மகன் வீட்டுக் கொலு சூப்பர்.
பதிலளிநீக்குநீங்க கண்டிப்பாகப் போடுவீங்கன்னு தெரியும் கோமதிக்கா.
ரசித்துப் பார்த்தேன் எல்லாமும்
கீதா
//உங்கள் மகன் வீட்டுக் கொலு சூப்பர்.
நீக்குநீங்க கண்டிப்பாகப் போடுவீங்கன்னு தெரியும் கோமதிக்கா.
ரசித்துப் பார்த்தேன் எல்லாமும்//
அனைத்தையும் ரசித்துப்பார்த்து ஒவ்வொன்றுக்கும் அருமையான கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபுதுப் பதிவு அருமை. நான் பழைய பதிவுகளுக்கு வரும் முன்பே நீங்கள் புதுப்பதிவு, அதிலும் உங்கள் மகன் வீட்டு கொலு பதிவு போட்டு ஆனந்தமடைய வைத்து விட்டீர்கள்.
நீங்கள் பதிலில் சொன்னவுடன் உங்களது மகன் வீட்டு கொலு வுக்கும், சந்தனம் குங்கும பன்னீர் வரவேற்புடன் வந்து விட்டேன். உங்கள் மகன், மருமகள், பேரன் கவின் அனைவருமே நல்ல ஆர்வமுடன், கலை நயத்துடன், சிறப்பாக கொலு வைத்துள்ளனர். அவர்களின் தெய்வீக பங்களிப்புக்கு என் வந்தனங்கள்.
முதல் பாடல் அருமை. திருவிளக்கில், பெருமாள், மகாலட்சுமி அலங்காரங்கள், இருபக்கமும் பொம்மைகள் அலங்காரம், ராமருக்கு முக்கியத்துவம் தந்து நடுநாயகமாக கொலுவிருக்கச் செய்து என கொலு மிக சிறப்பாக உள்ளது. உங்கள் மகன், மருமகள், கவின் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளைக் கூறி விடுங்கள்.
அங்குள்ள நட்புகள் உங்கள் வரவை எதிர்பார்த்து, நலம் விசாரித்து என எவ்வளவு பாசமுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் பத்து நாட்களும் அன்பாக பேசி, மகன் வீட்டு கொலுவில் கலந்து கொண்டது மிகச் சிறப்பு. நீங்கள் சொல்லி கேட்கும் போதே, உங்கள் பதிவை படிக்கும் போதே என் மனமும் சந்தோஷமடைகிறது.
கவினின் வீர அனுமன் குறும்படம் மிக அருமையாக உள்ளது. அந்த ராமன், சீதையோடு அனுமன் இருதயத்தில் இருப்பது போன்ற செட்டிங்ஸ் எல்லாமே மிக அருமை. எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
நாங்களும் அருகிலிருந்து பார்த்தது போன்ற பதிவை தந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//புதுப் பதிவு அருமை. நான் பழைய பதிவுகளுக்கு வரும் முன்பே நீங்கள் புதுப்பதிவு, அதிலும் உங்கள் மகன் வீட்டு கொலு பதிவு போட்டு ஆனந்தமடைய வைத்து விட்டீர்கள்.//
மகன் வீட்டு கொலு படம் கொலு முடிந்தபின்னும் போடாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று இன்று போட்டு விட்டேன்.
இன்னும் கொலு பகிர்வுகள் இருக்கிறது வேறு வீட்டு கொலுக்கள், அவைகள் அடுத்த ஆண்டுதான்.
//உங்கள் பதிலில் சொன்னவுடன் உங்களது மகன் வீட்டு கொலு வுக்கும், சந்தனம் குங்கும பன்னீர் வரவேற்புடன் வந்து விட்டேன். உங்கள் மகன், மருமகள், பேரன் கவின் அனைவருமே நல்ல ஆர்வமுடன், கலை நயத்துடன், சிறப்பாக கொலு வைத்துள்ளனர். அவர்களின் தெய்வீக பங்களிப்புக்கு என் வந்தனங்கள்.//
கொலுவுக்கு உடனே வந்து அனைவரையும் பாராட்டியது மகிழ்ச்சி.
//முதல் பாடல் அருமை. திருவிளக்கில், பெருமாள், மகாலட்சுமி அலங்காரங்கள், இருபக்கமும் பொம்மைகள் அலங்காரம், ராமருக்கு முக்கியத்துவம் தந்து நடுநாயகமாக கொலுவிருக்கச் செய்து என கொலு மிக சிறப்பாக உள்ளது. உங்கள் மகன், மருமகள், கவின் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளைக் கூறி விடுங்கள்.//
உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.
//அங்குள்ள நட்புகள் உங்கள் வரவை எதிர்பார்த்து, நலம் விசாரித்து என எவ்வளவு பாசமுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் பத்து நாட்களும் அன்பாக பேசி, மகன் வீட்டு கொலுவில் கலந்து கொண்டது மிகச் சிறப்பு. நீங்கள் சொல்லி கேட்கும் போதே, உங்கள் பதிவை படிக்கும் போதே என் மனமும் சந்தோஷமடைகிறது.//
அங்கு உள்ளவர்களின் அம்மா, அப்பாக்களும் விடுமுறைக்கு மகன், மகள் வீட்டுக்கு வந்தவர்களும் கொலுவுக்கு வந்தார்கள். அவர்களும் வாழ்த்தி சென்றார்கள், இவர்களும் அவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்கள்.
தங்கள் அப்பா, அம்மாவை கண்டது போல பாசமாக இருப்பார்கள் நம்மிடம்.
//கவினின் வீர அனுமன் குறும்படம் மிக அருமையாக உள்ளது. அந்த ராமன், சீதையோடு அனுமன் இருதயத்தில் இருப்பது போன்ற செட்டிங்ஸ் எல்லாமே மிக அருமை. எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.//
மகன், பேரன் இருவருக்கும் உங்கள் வாழ்த்துகள், பாராட்டுகள் மேலும் ஊக்கமோடு மேலும் செயல்களை செய்ய உற்சாகம் பிறக்கும்.
//நாங்களும் அருகிலிருந்து பார்த்தது போன்ற பதிவை தந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
அத்தனை வீட்டு வேலைகளுக்கு இடையே வந்து பதிவை படித்து, பார்த்து ரசித்து மனதார பாராட்டி, வாழ்த்தி கருத்துக்கள் சொன்னதற்கு மகன், மருமகள், பேரன் சார்பில் நன்றி, நன்றி.
இன்றுதான் பதிவு, படங்கள் மற்றும் காணொளிகள் கண்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.
பதிலளிநீக்குமகன் மருமகள் வீட்டு கொலு மிக அருமை. ஆனால் என் மனம் கவர்ந்தது கவினின் அழைப்பிதழ், அனுமான் குறும் படம்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//இன்றுதான் பதிவு, படங்கள் மற்றும் காணொளிகள் கண்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.//
உறவுகள் வந்து இருக்கும் போது பதிவை பார்த்து கருத்து சொல்ல வந்தமைக்கு மிக்க நன்றி.
//மகன் மருமகள் வீட்டு கொலு மிக அருமை. ஆனால் என் மனம் கவர்ந்தது கவினின் அழைப்பிதழ், அனுமான் குறும் படம்.//
கவினின் அழைப்பிதழையும், குறும்படத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு கவின் சார்பில் நன்றி.
எனக்கு சிறு வயதிலிருந்தே, அமெரிக்கா சென்றால் நம் கலாச்சாரம் இந்தத் தலைமுறை இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் பாதிக்கப்படும் என்று தீவிரமாக நம்பினேன்.
பதிலளிநீக்குஎன் நம்பிக்கை சரியானதுதானா என யோசிக்க வைக்கிறது, கவின் மற்றும் அவன் வயதையொத்த நண்பர்கள் கூடுவதும் இவற்றில் பங்கு கொள்வதும், ரசிப்பதும்.
கவின் மற்றும் அவன் நண்பர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தங்கள் பெற்றோர்கள் தங்களுக்குக் கொடுத்ததை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கட்டும். வாழ்க வளமுடன்.
//எனக்கு சிறு வயதிலிருந்தே, அமெரிக்கா சென்றால் நம் கலாச்சாரம் இந்தத் தலைமுறை இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் பாதிக்கப்படும் என்று தீவிரமாக நம்பினேன்.//
நீக்குநீங்கள் நினைத்த மாதிரி முன்பு கதைகளும் , கட்டுரைகளும் அப்படித்தான் வந்தன. அங்கு போய் பார்த்த பின் தான் கலாச்சாரம் அதிகமாக கடைபிடிக்கப்படுவது தெரியவரும்.
அங்குள்ள இளைய தலைமுறையினர் உபசரிப்பு, விருந்தோம்பல், பெரியவர்களை மதிக்கும் பண்பு அனைத்தும் தாங்களும் கடைபிடித்து தங்கள் குழந்தைகளுக்கும் கடைபிடிக்க வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.
//என் நம்பிக்கை சரியானதுதானா என யோசிக்க வைக்கிறது, கவின் மற்றும் அவன் வயதையொத்த நண்பர்கள் கூடுவதும் இவற்றில் பங்கு கொள்வதும், ரசிப்பதும்.//
அவன் வயதை ஒத்த நண்பர்கள் வீட்டில் கொலு வைக்கும் போது வருபவர்களை முகமலர வரவேற்று பேசி மகிழ்கிறார்கள்.
கவின் குறும்படத்தை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள் அதை பற்றி அவனுடன் கலந்து உரையாடுகிறார்கள்.
பிள்ளைகளின் தாய்மார்கள் கவின் வீட்டுக்கு வந்தால் வரவே மனம் வர மாட்டேன் என்கிறது இவர்களுக்கு என்று என்னிடம் செல்லமாக அலுத்து கொண்டார்கள்.
//கவின் மற்றும் அவன் நண்பர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தங்கள் பெற்றோர்கள் தங்களுக்குக் கொடுத்ததை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கட்டும். வாழ்க வளமுடன்.//
உங்கள் ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துகள் பிள்ளைகளை வழி நடத்தும் நன்றி.
வீர அனுமான் குறும்ப பின்னணிக் குரல் யாருடையது? அருமையான கம்பீரமான குரல்.
பதிலளிநீக்குகோலங்கள் அழகு.
வீர அனுமன் குரல் ஏ.ஜ யிடம் வசனத்தை கொடுத்து வாங்கிய கம்பீர குரல்
பதிலளிநீக்குகோலங்களை பாராட்டியதற்கு நன்றி . உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நெல்லை
நவராத்திரி கொண்டாட்டம் அமர்க்களம். உண்மையில் வெளிநாடு வாழும் நம்மவர்கள் காண்பிக்கும் கலாசார பற்று, மற்றும் உட்சாகம் இங்கு இருப்பதைக்காட்டிலும் கூடுதல். இதுவே சில மா கா வினருக்கு எரிச்சல் உண்டாக்குவதும் உண்மை.
பதிலளிநீக்குகாணொளி, மற்றும் படங்கள், நன்றாக உள்ளன. கோலமும் நடனமும் அருமை.
Jayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குஅனைத்தையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கவினின் விடியோ எனது பேரனுக்கு போட்டுக் காட்டினேன். அவருக்கு வயது ஏழு. எப்படி எல்லாம் செய்துள்ளார் கவின் என அசந்துவிட்டார்.நன்றாக பிடித்தது விடியோ.தனது பாராட்டை கவினுக்கு தெரிவிக்கும்படி கூறினார்.
பதிலளிநீக்குஎனது பேரனுக்குஹனுமான் ரொம்பவே பிடித்தமானவர்.
மகன் வீட்டு நவராத்திரி அலங்காரங்கள் சிறப்பு. கவினின் புது புது நிகழ்ச்சிகள், திறமைகள், என்றும் வளர்ந்து சிறக்க எமது ஆசீர்வாதங்கள்.
வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் பேரனுக்கு கவின் வீடியோவை போட்டு காட்டியது மகிழ்ச்சி.
உங்கள் பேரன் ரசித்துப்பார்த்து கவினை பாராட்டி சொன்னது மகிழ்ச்சி பேரனுடம் சொல்கிறேன் அவனும் மகிழ்வான். உங்கள் பேரனுக்கு நன்றி.
பேரனுக்கு அனுமன் பிடிக்குமா , குழந்தைகள் எல்லோருக்கும் பிடித்தவர்கள் அனுமனும் , பிள்ளையாரும் இல்லையா?
உங்கள் அன்பான் கருத்துக்கு நன்றி.
உங்கள் ஆசீர்வாதம் பேரனை மேன்மேலும் உற்சாகமாக இது போல படங்கள் எடுக்க உத்வேகமாக இருக்கும் நன்றி , நன்றி.
ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன். மிக அழகான கொலு. விளக்கில் பெருமாளும் தாயாரும் அற்புதம். பேரனின் குறும்படம் மிக நேர்த்தி. மகன் செய்த அனுமார் அருமை. குடும்பத்தினர் அனைவருக்கும் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு