நேற்று செய்த குங்கும அர்ச்சனை மலர் அர்ச்சனை
அனைவருக்கும் குறைவில்லா நிறை செல்வத்தை தருகிறாள் திருமகள் , சகல நன்மைகளையும் தருவாள். வழிபாடுகள் உடலுக்கும் , உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரும்.
எங்கள் குடியிருப்பு வளாகத்தில் வைத்த கொலுவில் இடம் பெற்றது.
இப்போதும் கால மாற்றத்தால் கிரைண்டர், மிக்சியை பொட்டு வைத்து வழி படுகிறோம்.
தினம் எங்கள் எதிர் வீட்டு பெண் மலர் மாலைகள் அம்மனுக்கு கொண்டு வருவார் சிறு வளையல் மாலை பவளம் போன்ற பாசியும் வெட்டி வேரும் சேர்த்து மாலை என்று கட்டி கொண்டு வருவார். ..ஏலாக்காய் மாலை லட்சுமி அணிந்து இருப்பது அவர் செய்து கொண்டு வந்தது தான்.
முதலில் நிற்பவர் ராதா அவர்தான் மாலை கட்டி கொண்டு வருவார் அம்மனுக்கு. அடுத்து நிற்பவர் ஜெயா
லிப்ட்டில் எடுத்த படம்
முதலில் நிற்பவரும் எதிர் வீடுதான். என் கணவர் மறைந்த போது இவர்களும், இவர்கள் கணவரும் மிகவும் உதவியாக இருந்தவர்கள்.இப்போதும் எனக்கு உதவியாக இருப்பவர்கள். வீட்டில் கொண்டு வந்து விட்ட போது எடுத்தது.
இவர்கள் இருவரும் தான் தினம் என்னை அழைத்து வருவார்கள் கொலு பார்க்க அவர்கள் துணையுடன் தினம் நவராத்திரி விழாவுக்கு போய் வந்து விட்டேன் அம்மன் அருளால்.
மற்றும் நவராத்திரி விழாவுக்கு வந்தவர்கள் தந்த ஊக்கத்தாலும், உற்சாகத்தாலும் தினம் போய் வந்தேன். அனைத்து சகோதரிகளுக்கும் நன்றி.
அம்மனுக்கு நேற்று கட்டிக் கொண்டு வந்த மாலை.
எல்லோருக்கும் மூன்று அன்னையரும் கருணை செய்ய வேண்டும் .
ஓம் முப்பெரும் தேவியார் போற்றி!
சரஸ்வதி, லட்சுமி, பார்வதியாம் முப்பெரும் தேவிக்கே சரணம்.
பிரசாதம் எடுத்து கொள்ளுங்கள்.
மகன் வீட்டு கொலு தனி பதிவாக போடுகிறேன்.
.jpg)


.jpg)



உங்கள் வீட்டு அலங்காரங்கள் மிக அழகு. வீணை பார்க்கவே அருமையா இருக்கு.
பதிலளிநீக்குகத்தி, உபயோகப்படுத்துவதால் வைக்கறீங்களா?
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் வீட்டு அலங்காரங்கள் மிக அழகு. வீணை பார்க்கவே அருமையா இருக்கு.//
நன்றி. வீணை தஞ்சாவூரில் வாங்கியது. பல வருடங்கள் ஆச்சு வாங்கி.
//கத்தி, உபயோகப்படுத்துவதால் வைக்கறீங்களா?//
ஆமாம், உலக்கு, கத்தி இவைகளை உபயோகப்படுத்துவதால் வைப்போம். பேனா , பூ மாதிரி இருப்பது பென்சில் கவின் எனக்கு வாங்கி தந்தான்.
சிறு அம்மி, குழவி, உரல், சுளகு நல்லா இருக்குல்ல?
பதிலளிநீக்குமிக்சி கிரைண்டருக்குப் பொட்டா?
//சிறு அம்மி, குழவி, உரல், சுளகு நல்லா இருக்குல்ல?
நீக்குஆமாம் நன்றாக இருக்கிறது.
//மிக்சி கிரைண்டருக்குப் பொட்டா?//
நாம் பயன்படுத்துக்கிறோம் நமக்காக உழைக்கிறது அதற்கும் பூஜை உண்டு.
பெங்களூர்ல, மார்க்கெட், சாலை முழுவதும் பூசனிக்காய்கள், சிறிய வாழை மரங்கள். ஆயிரக்கணக்கில் இருக்கும்.
பதிலளிநீக்குஇவ்வளவு பூசனிக்காய்களை உடைத்து வீணாக்குகிறார்கள் என்று மனதில் தோன்றும்.
//பெங்களூர்ல, மார்க்கெட், சாலை முழுவதும் பூசனிக்காய்கள், சிறிய வாழை மரங்கள். ஆயிரக்கணக்கில் இருக்கும்.//
நீக்குஆமாம், கடைகளுக்கு இன்று சுற்றி வைப்பார்கள். பூசாணிக்காயை பாதைகளில் போட்டு உடைக்காமல் இருந்தால் போதும்.
வாழை மரங்கள், வாழை கன்றுகள் நேற்று நிறைய விற்பனை ஆகி இருக்கும்.
//இவ்வளவு பூசனிக்காய்களை உடைத்து வீணாக்குகிறார்கள் என்று மனதில் தோன்றும்.//
ஆமாம், வீணாகி தான் போகிறது. மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அதை மாற்றி கொள்ள மாட்டார்களே!
உடன் பதில் கொடுக்க முடியவில்லை மடிக் கணினி கொஞ்சம் ஒத்துழைக்க மறுக்கிறது.
விட்டுப்பிடிக்க வேண்டி இருக்கிறது. கொஞ்ச நேரம் டைப் செய்ய முடியும். அப்புறம் அனுமதி மறுப்பு. சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது.
பழுது பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்குகளுக்கு நன்றி
வெறும்ன பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர்வீட்டுக்காரர்கள், குடியிருப்புவாசிகள் என்று இருப்பது வேறு. மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பது வேறு.
பதிலளிநீக்குஉங்களுக்கு உதவும் உதவிய அந்த நல்ல உள்ளங்களுக்கு என் பாராட்டுகள்.
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் உதவும் எண்ணம் எல்லோருக்கும் இருக்காதுதான் . இவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
பதிலளிநீக்குஅம்மா ,ஆன்டி, கோமதி, மாமி, அக்கா என்று அழைத்து நட்பு பாராட்டி உதவும் உள்ளங்களுக்கு உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது மகிழ்ச்சி.
உங்கள் பாரட்டுக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.
எதிர்வீடு நட்புகள் உதவியாக இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம் அக்கா.
பதிலளிநீக்குஉங்கள் படம் செமையா இருக்கு. அழகான கலர் புடவை அழகா கட்டியிருக்கீங்க.
படங்கள் எல்லாம் அருமை.
கீதா
அம்மி உரல் கள் எல்லாம் பார்க்கவே அழகா இருக்கு. மனதைக் கவர்ந்த படம்.
பதிலளிநீக்குஆஹா உங்க காமராவும் தேவிகள் அருகில்! அதானே அதுதானே இத்தனை நல்ல படங்களை எடுக்க உதவுகிறது இல்லையா!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அம்மி உரல் கள் எல்லாம் பார்க்கவே அழகா இருக்கு. மனதைக் கவர்ந்த படம்.//
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால்தான் அந்த படம் போட்டேன்.
//ஆஹா உங்க காமராவும் தேவிகள் அருகில்! அதானே அதுதானே இத்தனை நல்ல படங்களை எடுக்க உதவுகிறது இல்லையா!//
கணினி, அலைபேசி, காமிரா எல்லாம் தான் நமக்கு உதவி கொண்டு இருக்கிறது.
அக்கா, பூசையில் படத்தில் விரித்த துணி மீது இடப்பக்கம் பூ வடிவம் பச்சைக்கலரில் இருக்கே அது துணியோடு தைக்கப்பட்டதா இல்லை நீங்க வடிவமைத்து வைச்சிருக்கீங்களா? அது போல வலப்பக்கமும்....டிசைன் அருமை.
பதிலளிநீக்குகீதா
//அக்கா, பூசையில் படத்தில் விரித்த துணி மீது இடப்பக்கம் பூ வடிவம் பச்சைக்கலரில் இருக்கே அது துணியோடு தைக்கப்பட்டதா இல்லை நீங்க வடிவமைத்து வைச்சிருக்கீங்களா? அது போல வலப்பக்கமும்....டிசைன் அருமை.//
நீக்குபச்சைக்கலரில் இருப்பது கோலடிசைன் அது அப்படியே நாம் எதில் என்றாலும் வைத்து கொள்ளலாம். வலது பக்கம் இருப்பது கோல டிசைன் தான். அதையும் எங்கும் வைத்து கொள்ளலாம்.
சரஸ்வதி முன்னில் இருக்கும் வீணை ரொம்ப அழகா இருக்குக்கா.
பதிலளிநீக்குலேட்டானாலும் பிரசாதம் எடுத்துக் கொண்டேன் நல்லாருக்கு அக்கா. வடை எடுத்துக் கொண்டேன்!!
கீதா
//சரஸ்வதி முன்னில் இருக்கும் வீணை ரொம்ப அழகா இருக்குக்கா.//
நீக்குதஞ்சாவூரில் பலவருடம் முன் வாங்கியது.
//லேட்டானாலும் பிரசாதம் எடுத்துக் கொண்டேன் நல்லாருக்கு அக்கா. வடை எடுத்துக் கொண்டேன்!!//
ஆஹா! கிள்ளுவடையை எடுத்து கொண்டது மகிழ்ச்சி. சரஸ்வதி பூஜை அன்று கொண்டைகடலை சுண்டல், அவல் பாயாசம் வைத்தேன், விஜயதசமி அன்று வடையும் காப்பு அரிசியும், அவல் பொரிகடலையும் வைத்து வழிபட்டேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
உங்கள் வீட்டு அன்னை அலங்காரம், வீணை அழகு.
பதிலளிநீக்குவளாக விழாவும் நன்றாக உள்ளது கண்டுகொண்டோம்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் வீட்டு அன்னை அலங்காரம், வீணை அழகு.
வளாக விழாவும் நன்றாக உள்ளது கண்டுகொண்டோம்.//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.