திங்கள், 16 டிசம்பர், 2024

மலர்ந்தது மார்கழி

இன்று காலை போட்ட கோலம்
 
மார்கழி மாதம் வந்து விட்டால் வீடு தோறும் பக்தி மணம் கமழும். அதிகாலை எழுந்து கொள்ளாதவர்களும் மார்கழி மாதம் எழுந்து விடுவார்கள், அனைத்து கோயில்களிலும் பாடல்கள்   வைத்து விடுவார்கள். மார்கழி குளிரும் இப்போது குறைந்து இருக்கு, முன்பு போல குளிரவில்லை.

தெருவெங்கும் பஜனை செய்து போவோர்   உண்டு. இல்லங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவோர் உண்டு. அதிகாலை கோலம் போட்டு , விளக்கு வைத்து  குளித்து கோயில் போய் வழி படுவது  மகிழ்ச்சியான விஷயம். இந்த பதிவில் திருப்பாவை, திருவெம்பாவை பாடலை பகிர்ந்து இருக்கிறேன்,  சில நினைவுகளை எழுதி இருக்கிறேன், படித்துப்பாருங்கள். 

வெள்ளி, 13 டிசம்பர், 2024

திருக்கார்த்திகை தீபத்திருநாள் ஜோதி வழிபாடு






ஆதியும், அந்தமும் இல்லா பெருஞ்சோதியன்

லிங்கோத்பவர்.

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!

கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி