சனி, 4 மே, 2024

குருவிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்



 மஞ்சள் குருவி

தலை, முகம் மஞ்சள்  நிறம்

மகன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் எப்போதும் வந்து அமரும் குருவிகளின் படம். இந்த பதிவில் இடம்பெறுகிறது.

இந்த மரம் மேல் பகுதி குச்சி குச்சியாக இருக்கும்  அதில் அமர்வது எல்லா பறவைகளுக்கும் பிடிக்கும்.

ஆண் சிவப்பு குருவிக்கு நிறம் அதன் உணவில் உள்ள நிறமிகளிலிருந்து  கிடைக்கிறதாம்.  ஆரஞ்சு, மஞ்சள் நிற குருவிகளுக்கும் அப்படித்தான் நிறம் வருகிறதாம்.

இந்த ஹவுஸ்ஃ பிஞ்ச்கள் தங்கள் குஞ்சுகளுக்கு தாவர உணவுகளையே கொடுக்குமாம். இது பறவை உலகில் மிகவும் அரிதான நிகழ்வு என்கிறார்கள்.

இந்த ஹவுஸ்ஃ பிஞ்ச் ஸ்பாரோ சிவப்பு தலை, மார்பில் சிவப்பு உள்ள பறவைகள் இசைகுழு வைத்து இருக்கிறதாம் இவை பாடும் நீண்ட இனிய  பாடல்  பெண் குருவிகளுக்கு பிடிக்குமாம். 

பாடும் குருவிகள்  சிவப்புக்குருவி பற்றி முன்பு போட்ட பதிவு நினைவு இருக்கும்.
மேலே உள்ள பகிர்வு இந்த பதிவில்  இருந்து எடுத்து போட்டு இருக்கிறேன். இந்த பதிவில் குருவிகள் பேசுவது  காணொளியில் இருக்கிறது.

ஆண் குருவி சிவப்பு தலை, பெண் குருவி கருப்பு.











கருப்புக்குருவி


இந்தஇரண்டு படங்களும் மாலை எடுத்த படங்கள். காலை முதல் மாலை வரை இந்த மரத்தில் அமர்ந்து பேசும், பாடும்.

 

குருவிகள்  கொடுக்கும் பல்வேறு சத்தங்களை  காலை முதல் மாலை வரை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. குருவிகள் உங்களை பார்க்க வந்திருக்கின்றன போலும்.  வரிசையாய் அமர்ந்து போஸ் கொடுக்கின்றன.  படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //குருவிகள் உங்களை பார்க்க வந்திருக்கின்றன போலும். வரிசையாய் அமர்ந்து போஸ் கொடுக்கின்றன. படங்கள் அருமை.//

      போன வருடமும் மே மாதம் தான் எடுத்தேன், இந்த வருடமும் மே மாதம் தான் எடுத்து இருக்கிறேன்.

      நிறைய வந்து அமருகிறது, நான் காமிர எடுத்து வர உள்ளே போனால் இரண்டு மூன்றுதான் காமிராவில் சிக்குது.

      நீக்கு
  2. குருவிகள் இசைக்குழு வைத்திருக்கின்றன என்னும் தகவல் வியப்பைத் தருகிறது.  பழைய பதிவுக்கு சென்று பார்க்கிறேன், படித்திருக்கிறேனா, படித்துக் கருத்திட்டிருக்கிறேனா என்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குருவிகள் இசைக்குழு வைத்திருக்கின்றன என்னும் தகவல் வியப்பைத் தருகிறது. பழைய பதிவுக்கு சென்று பார்க்கிறேன், படித்திருக்கிறேனா, படித்துக் கருத்திட்டிருக்கிறேனா என்று!//

      ஆமாம், வியப்பை தரும் செய்திதான். அவை தினம் கொடுக்கும் ஒலிகள் கேட்க இனிமையாக இருக்கும்.
      ஒரு பறவை எத்தனை விதமான ஒலிகள் கொடுக்கிறது! அதை காணொளி செய்ய முயன்று கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  3. ஆ...  பதிவைப் படிக்க ஆரம்பித்தபோதே படித்திருக்கிறோம் என்று மனம் சொன்னது.  பார்த்தால் அங்கு முதல் கம்மெண்ட்டே நான்தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆ... பதிவைப் படிக்க ஆரம்பித்தபோதே படித்திருக்கிறோம் என்று மனம் சொன்னது. பார்த்தால் அங்கு முதல் கம்மெண்ட்டே நான்தான்!!//

      ஆமாம், சுட்டி கொடுக்க பார்த்த போது உங்கள் முதல் கருத்தை வாசித்தேன்.

      மீண்டும் பார்த்து படித்து வந்தது, மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நல்லா போஸ் கொடுக்கின்றனவே குருவிகள்

    ஆண் பெண் குருவிகள் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அன்றைய உணவைத் தேட வேண்டுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //நல்லா போஸ் கொடுக்கின்றனவே குருவிகள்//

      தூரத்திலிருந்து எடுக்கிறேன் படம், பக்கத்தில் போனால் பறந்து விடும்.

      //ஆண் பெண் குருவிகள் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அன்றைய உணவைத் தேட வேண்டுமே//

      அவை எப்போதும் உணவை தேடி கொண்டே இருப்பது இல்லை .
      பாதி நேரம் இப்படி பாடி கொண்டும், பேசி கொண்டுதான் இருக்கிறது.
      பசித்தால் உணவு தேடி சாப்பிடும் போல. குஞ்சுகள் பொறித்தால் உணவு தேடி கொண்டே இருக்கும் போல!

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பறவையை நேசிப்பதற்கும் ஓர் மனம் வேண்டும்.

    நிறைய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      //பறவையை நேசிப்பதற்கும் ஓர் மனம் வேண்டும்.//

      பறவையை யாருக்கு தான் பிடிக்காது ஜி?
      அவை நமக்கு மகிழ்ச்சியை , தருகிறது.
      கவலைகளை மறக்க செய்கிறது.
      மன ஆறுதலை தருகிறது.

      //நிறைய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது சகோ.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. பழைய சுட்டிக்கு சென்று வந்தேன் சகோ

    முன்பும் படித்து கருத்துரை போட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //பழைய சுட்டிக்கு சென்று வந்தேன் சகோ

      முன்பும் படித்து கருத்துரை போட்டு இருக்கிறேன்.//

      மீண்டும் பழைய பதிவை பார்த்து வந்து கருத்து சொன்னதற்கு
      நன்றி சகோ.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கலர்கலரான குருவிகள் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. மஞ்சள், கருப்பு, சிகப்பு என நம்மைப்போல் ஆடைகளை தேர்வு செய்து உடுத்த முடியாதென்று இறைவனே அவைகளுக்கு கலர்களை தேர்ந்தெடுத்து தந்து விட்டார் போலும்..!

    குருவிகள் ஒவ்வொரு கலரிலும் மிக அழகாக இருக்கிறது.தாங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்காக ஒய்யாரமாக அமர்ந்து போஸ் தருகின்றன. நீங்கள் பொறுமையாகவும், நன்றாகவும் அவைகளை புகைப்படங்கள் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    குருவிகளைப்பற்றிய நீங்கள் கூறிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நீங்கள் தந்திருக்கும் பழைய பதிவுக்கும் சென்று வந்தேன். அங்கு என் கருத்துரையும் இருக்கிறது. பாடல்களை இசையமைக்கும் குருவிகளை கண்டு வந்தேன்.

    எனக்கும் இவை பாடும் பாட்டுக்கள் முன்பு கேட்கும். இப்போது பல ஆண்டுகளாக செவித்திறன் கம்மியாகி விட்டதால் அதன் சத்தங்களை கேட்டு களிக்க இயலவில்லை. பத்து, பதினைந்து நாட்களுக்கு முன் எங்கள் வீட்டின் பால்கனி ஜன்னலில் ஒரு ஜோடி பறவைகள் வந்தன. (அவை குருவி இனமென்றுதான் நினைக்கிறேன்.) உங்களைப் போல அதன் வரலாறு சொல்ல எனக்கு தெரியவில்லை. அது நல்ல சத்தம் கொடுத்துக் கொண்டே (எனக்காக) வாலை ஆட்டியவாறு அமர்ந்திருந்தது. போட்டோ கூட எடுத்துள்ளேன். பிறகு ஒருநாள் அதை பகிர்கிறேன். பார்த்தவுடன் நீங்களே அதன் பெயரைச் சொல்லி விடுவீர்கள் .

    உங்கள் ரசனைக்கேற்ப பறவைகள் அங்கும் உங்களைக்காண வந்து விடுகின்றன. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கும் நல்ல மன மகிழ்வை தரும். உங்கள் மூலமாக பல பறவைகளைப் பற்றி அறிகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //கலர்கலரான குருவிகள் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. மஞ்சள், கருப்பு, சிகப்பு என நம்மைப்போல் ஆடைகளை தேர்வு செய்து உடுத்த முடியாதென்று இறைவனே அவைகளுக்கு கலர்களை தேர்ந்தெடுத்து தந்து விட்டார் போலும்..!//

      அருமையாக சொன்னீர்கள்.

      //குருவிகள் ஒவ்வொரு கலரிலும் மிக அழகாக இருக்கிறது.தாங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்காக ஒய்யாரமாக அமர்ந்து போஸ் தருகின்றன. நீங்கள் பொறுமையாகவும், நன்றாகவும் அவைகளை புகைப்படங்கள் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.//

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. பறவைகள் உச்சி கிளைகளில் நிற்கவே ஆசைபடுகிறது எப்போதும்.


      //குருவிகளைப்பற்றிய நீங்கள் கூறிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நீங்கள் தந்திருக்கும் பழைய பதிவுக்கும் சென்று வந்தேன். அங்கு என் கருத்துரையும் இருக்கிறது. பாடல்களை இசையமைக்கும் குருவிகளை கண்டு வந்தேன்.//

      பழைய பதிவை பார்த்து வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //பத்து, பதினைந்து நாட்களுக்கு முன் எங்கள் வீட்டின் பால்கனி ஜன்னலில் ஒரு ஜோடி பறவைகள் வந்தன. (அவை குருவி இனமென்றுதான் நினைக்கிறேன்.) உங்களைப் போல அதன் வரலாறு சொல்ல எனக்கு தெரியவில்லை. அது நல்ல சத்தம் கொடுத்துக் கொண்டே (எனக்காக) வாலை ஆட்டியவாறு அமர்ந்திருந்தது. போட்டோ கூட எடுத்துள்ளேன். பிறகு ஒருநாள் அதை பகிர்கிறேன். பார்த்தவுடன் நீங்களே அதன் பெயரைச் சொல்லி விடுவீர்கள் .//

      ஒரு நாள் பதிவில் பகிருங்கள். பார்ப்போம். பறவைகளை பார்த்தல் மனதுக்கு உற்சாகம் தரும். வாலாட்டி குருவி இருக்கிறது, அது அருமையாக பாடும். அதுதானோ என்னவோ ! நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்கள்.

      //உங்கள் ரசனைக்கேற்ப பறவைகள் அங்கும் உங்களைக்காண வந்து விடுகின்றன. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கும் நல்ல மன மகிழ்வை தரும். உங்கள் மூலமாக பல பறவைகளைப் பற்றி அறிகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      இப்போது தோட்டத்திற்கு பறவைகள் வரத்து குறைவுதான், உணவு வைப்பது இல்லை. மணிப்புறா, குருவி, காடை பறவை வருகிரது தினம், மற்ற பறவைகள் எப்போதாவது வருகிறது.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பாடும் பறவைகள் படங்களுடன் அவற்றின் விபரங்களும் தந்துள்ளீர்கள்.

    பறவைகளை ரசிப்பதம் அவற்றின் குரலைக் கேட்பதும் நல்ல பொழுது போக்குடன் மனதுக்கும் உற்சாகம் தரக்கூடியது. மகிழ்ந்திருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      //பாடும் பறவைகள் படங்களுடன் அவற்றின் விபரங்களும் தந்துள்ளீர்கள்.//

      பாடும் பறவைகள் விவரங்கள் இனையத்தில் சேகரித்தவை தான்.


      //பறவைகளை ரசிப்பதம் அவற்றின் குரலைக் கேட்பதும் நல்ல பொழுது போக்குடன் மனதுக்கும் உற்சாகம் தரக்கூடியது. மகிழ்ந்திருங்கள்.//

      ஆமாம், பறவைகளை ரசிப்பதும், குரலை கேட்பதும் மனதுக்கு உற்சாகம் தர கூடியது தான்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  9. கோமதிக்கா இந்தக் குருவிகள் பத்தி முன்னாடி சொல்லியிருந்தீங்களோ? வாசித்த நினைவு. இவை இசைக்குழு வைச்சிருக்கு....நிறைய நேரம் பாடும் என்றெல்லாம் ; இவற்றின் பெயர் ஹவுஸ்பிஞ்ச் ஆ? ஓ ஒகே...

    முழுவதும் வாசித்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா இந்தக் குருவிகள் பத்தி முன்னாடி சொல்லியிருந்தீங்களோ? வாசித்த நினைவு. இவை இசைக்குழு வைச்சிருக்கு....நிறைய நேரம் பாடும் என்றெல்லாம் ; இவற்றின் பெயர் ஹவுஸ்பிஞ்ச் ஆ? ஓ ஒகே...

      முழுவதும் வாசித்து வருகிறேன்//

      உங்கள் நினைவுகளில் இருக்கும் கீதா
      படித்து வாருங்கல்.

      நீக்கு
  10. குச்சிகளில் அமர்வது பிடிக்கும், நிறமி சாப்பிடும் உணவிலிருந்து வரும் என்பதெல்லாமும் நினைவிருக்கு. அப்பவும் வியந்தேன் இப்பவும் இதெல்லாம் வியப்புதான்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குச்சிகளில் அமர்வது பிடிக்கும், நிறமி சாப்பிடும் உணவிலிருந்து வரும் என்பதெல்லாமும் நினைவிருக்கு. அப்பவும் வியந்தேன் இப்பவும் இதெல்லாம் வியப்புதான்!//

      ஆமாம். எப்போதும் வியப்புதான் இந்த பறவைகளை பார்க்கும் போது.
      நேற்று நண்பர் வீட்டுக்கு போய் இருந்தோம். காமிரா கொண்டு போகவில்லை. பல்வேறு பறவைகள் அவர் தோட்டத்திற்கு வந்தன.
      அவற்றை படம் எடுக்கமுடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.
      செல்லில் எடுத்தேன் கொஞ்சம்.

      நீக்கு
  11. பாடும் குருவிகள் சிவப்புக்குருவி பற்றி முன்பு போட்ட பதிவு நினைவு இருக்கும்.
    மேலே உள்ள பகிர்வு இந்த பதிவில் இருந்து எடுத்து போட்டு இருக்கிறேன்//

    ஆ! பாத்தீங்களா கோமதிக்கா....பரவால்ல எனக்கு நல்லா நினைவிருக்கிறதே!!! சூப்பர். இதெல்லாம் நினைவில் இருக்கும் ஆனா வீட்டில் சில விஷயங்கள் மறந்தே போய்டும்!!! இப்ப புதுசா என்ன பேசின என்பதைப் பார்த்து கேட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆ! பாத்தீங்களா கோமதிக்கா....பரவால்ல எனக்கு நல்லா நினைவிருக்கிறதே!!! சூப்பர். இதெல்லாம் நினைவில் இருக்கும் ஆனா வீட்டில் சில விஷயங்கள் மறந்தே போய்டும்!!! இப்ப புதுசா என்ன பேசின என்பதைப் பார்த்து கேட்டு வருகிறேன்//

      கேட்டு இருப்பீர்கள் , பார்த்து இருப்பீர்கள்.
      நினைவுகளில் வேறு எண்ணங்கள் ஆக்கரமித்து இருந்தால் சில நினைவுகள் மறந்து விடும் அது இயல்புதானே! நினைத்து பார்த்தால் நினைவுக்கு வந்து விடும் கீதா.

      நீக்கு
  12. இந்தக் குருவிகள் படமும் நினைவிருக்கு

    கோமதிக்கா அவற்றின் பேச்சு வீடியோ எடுத்திருப்பீங்கன்னு நினைச்சேன்

    முடிந்தால் குரலைப் பதிவு செய்யுங்களேன். கேட்க ஆசையா இருக்கு

    படங்கள் எல்லாஅம் மிக அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தக் குருவிகள் படமும் நினைவிருக்கு

      கோமதிக்கா அவற்றின் பேச்சு வீடியோ எடுத்திருப்பீங்கன்னு நினைச்சேன்

      முடிந்தால் குரலைப் பதிவு செய்யுங்களேன். கேட்க ஆசையா இருக்கு

      படங்கள் எல்லாஅம் மிக அழகு//

      இன்னொரு முறை குருவிகளின் குரலை பதிவு செய்கிறேன், முன்பு பதிவு செய்து காணொளி போட்டு இருக்கிறேன் கீதா.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  13. படங்களும் தகவல்களும் அருமை. சிகப்புக் குருவி பதிவு பார்த்த நினைவிருக்கிறது. இசைக்குழு தகவல் வியப்பூட்டுகிறது.

    /குருவிகள் கொடுக்கும் பல்வேறு சத்தங்களை காலை முதல் மாலை வரை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன்./

    இனிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      /படங்களும் தகவல்களும் அருமை. சிகப்புக் குருவி பதிவு பார்த்த நினைவிருக்கிறது. இசைக்குழு தகவல் வியப்பூட்டுகிறது.//
      ஆமாம், இசை குழு செய்தி வியப்பை தருவது உண்மை.

      /குருவிகள் கொடுக்கும் பல்வேறு சத்தங்களை காலை முதல் மாலை வரை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன்./

      இனிது.//

      இனிது, இனிது , ஏகந்தம் இனிது என்பது போல மிகவும் அமைதியாக இருக்கிறது. எல்லோருக்கும் வேலைக்கு , பள்ளிக்கு போன பின்.

      அந்த மாதிரி சமயம் இந்த பறவைகளின் ஒலி கேட்க இன்பம். அவற்றை பார்க்க இன்பம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. /// குருவிகள் கொடுக்கும் பல்வேறு சத்தங்களை காலை முதல் மாலை வரை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன்... ///

    இனிமையான சூழ்நிலை..

    என்றென்றும் நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      // குருவிகள் கொடுக்கும் பல்வேறு சத்தங்களை காலை முதல் மாலை வரை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறேன்... ///

      இனிமையான சூழ்நிலை..

      என்றென்றும் நலம் வாழ்க..//

      ஆமாம். பறவிகளின் இனிமையான சத்தம் மட்டுமே கேட்கும் இனிமையான சூழ்நிலைதான்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. குருவிகளைப் படம் எடுப்பது எளிதல்ல...

    தங்களுக்குக் கை கூடி வருகின்றது..

    அழகான படங்கள்..
    சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குருவிகளைப் படம் எடுப்பது எளிதல்ல...//

      ஆமாம், ஒரு நிமிடம் நிற்காது பறந்து கொண்டே இருக்கும்.

      //தங்களுக்குக் கை கூடி வருகின்றது..//
      சிறப்பு..
      அழகான படங்கள்..
      //

      அவை அசந்து உட்கார்ந்து இருக்கும் போது தூரத்திலிருந்து எடுக்கும் படங்கள் இது. எடுக்கும் போது பறக்கும் படமும் இருக்கே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு