வியாழன், 16 மே, 2024

தோட்டத்திற்கு வந்த தேனீக்கள்

 


இரண்டு நாள் முன்பு மாலை வேளை மகன் "அம்மா வாங்க, வாங்க, நம்ம தோட்டத்து மரத்தில் தேனீ கூடு கட்டி விட்டது என்றான்" எனக்கு ஆச்சரியம் !  "மாலை நடைபயிற்சி தோட்டத்தில் செய்தேன் அப்போது அந்த மரத்தில் உள்ள குருவிகளை படம் எடுத்தேன் பார்க்கவில்லையே ! என்றேன். "இப்போது தான் நான் மாடி பால்கனியில் நிற்கும் போது பார்த்தேன் கும்பலாக பறந்து வந்து அமர்ந்தது என்றான்."

காமிராவை எடுத்து வாங்க வந்து ஜூம் செய்து பாருங்கள் என்றான்

குருவிகளை காணோம் மரத்தில், தேன் சிட்டு மட்டும் பயமில்லாமல் மரத்தை சுற்றி வந்து பார்த்து கொண்டு இருந்தது தேனீயை.


மதுரை தபால் தந்தி நகர்    வீட்டில் ஜன்னல் அருகே கூடு கட்டி இருந்தது பெரிதாக முன்பு . அப்போது தேனீ கூட்டை அப்புறபடுத்துபவர்களுக்கு போன் செய்த போது அவர்கள் வயலுக்கு மருத்து அடிக்கும் கருவி போல கொண்டு வந்து 

ஒரு மருந்தை அதில் ஊற்றி தேன் கூட்டின் மீது அடித்தார்கள். நான் பதறி போய் "அய்யோ செத்துவிடுமே! " என்று கத்தி விட்டேன், "இல்லையம்மா சாகாது மயக்கம் வந்து கீழே விழுந்து விடும்" . அப்புறம் கூட்டை எடுத்து எறிந்து விடலாம் என்றார்.

அது போல இங்கும் கூப்பிடலாம் என்று பேசி கொண்டு இருந்த போது மருமகள் ஒரு நாள் பார்ப்போம், வெகு தூரத்திலிருந்து பறந்து வரும் போது ஓய்வு எடுக்க தங்குமாம். அப்புறம் மீண்டும் உணவு நிறைய கிடைக்கும் இடம் தேடி செல்லும் என்றாள்.

அது போல ஒரு நாள் காத்து இருந்தது நல்லதாக போய் விட்டது. முதல் நாள் மாலை   வந்த நேரம்  போலவே மறுநாள் மாலை   பறந்து போய் விட்டன அனைத்தும். எனக்கு தான் பறந்து போவதை பார்க்க முடியவில்லையே என்று ஏமாற்றம். மகன் கும்பலாக பறந்து வந்ததை பார்த்தான்.

 நான் மீண்டும் பறப்பதை பார்க்க எட்டி எட்டி சிறிது நேரத்திற்கு ஒரு முறை தோட்டத்தை கவனித்து கொண்டு இருந்தேன், அப்படியும் பார்க்க முடியவில்லை. மாலை இரண்டு மூன்று தேனீக்கள் கூட்டை சுற்றிக் கொண்டு இருந்தது. உள்ளே வந்தவுடன் பறந்து போய் இருக்கிறது.

மிகவும்  வியப்பாக இருந்தது. ராணி தேனீ ஒய்வு எடுக்க சொன்னால் ஓய்வு எடுத்து பறக்க கட்டளையிட்டால் பறப்பதும் எவ்வளவு சரியாக நடக்கிறது என்ற வியப்பு. ராணி தேனீயின் கட்டளைக்கு கீழ் படியும் கட்டுபாடு  வியப்பை தருகிறது. பாடத்தில் படித்தது வேலைக்கார தேனீக்கள்,  ஆண் தேனீக்கள், ராணி தேனீக்கள் என்று நினைவுக்கு வந்தது.


இப்படிதான் தேனீக்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறது
படம் - கூகுள் நன்றி.



//இடம்பெயர முதலில் ஓர் இடத்தை வேவுபார்க்கும் வேலைக்காரத்தேனீ உகந்த இடத்தை நடந்து அளக்கிறது. அதற்கு முன் பலவித இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது. பிறகே அதனை அளக்கிறது. அத்தகவல்களைப் பிற வேலைக்காரத்தேனீக்களின் குழுவிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது. அவை பறந்து சென்று, புதிய இடத்தைக் கண்டுணர்ந்து, கூட்டிலுள்ள பிற தேனிக்களிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது.

இறுதியாகக் கூட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் ஒருசில நிமிடங்களில் புதிய இடத்திற்கு இடம் பெயர்ந்து விடுகிறது. இத்தகைய துல்லியமான இடம் பெயர்ப்பு நிகழ்வு நடனம் மூலமே நிகழ்கிறது.//


விக்கிபீடியாவில் படித்த பின் தெரிந்தது  ஒரு சில நிமிடங்களில் புதிய இடத்தை நோக்கி இடம் பெயர்ந்து விடுவது. அதனால்தான் என்னால் பார்க்க முடியவில்லை.



//தேனீக்கள் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தச்சேர்க்கையில் முக்கியமான பங்களிப்பை வழங்குவதால், மனிதர்களின் உணவுச் சங்கிலி யில் தேனீக்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. எனவே, தேனீக்களின் அழிவு பலவகை பயிர்கள், பழவகைகள் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதனால், இது மிகவும் அவதானத்தில் கொள்ள வேண்டிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.//

இறைவனின் படைப்பில் அற்புதங்கள் . தேனீக்கள் இல்லையென்றால்  இந்த உலகம் இல்லை. நிறைய உயிரினங்கள் நாம் வாழ உதவி கொண்டு இருக்கிறது.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. தேன்கூட்டை நானும் தஞ்சாவூரில்தான் நெருக்கமாக பார்த்திருக்கிறேன்.  அதைப் பற்றி பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.  முடிந்தவரை தூரத்தில் அதைத் தாண்டுவோம்.  ஒன்றிரண்டு இங்குமங்கும் பறந்தால் கூட ஹோ என்று பயத்துடன் ஓடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //தேன்கூட்டை நானும் தஞ்சாவூரில்தான் நெருக்கமாக பார்த்திருக்கிறேன். அதைப் பற்றி பயமுறுத்தி வைத்திருந்தார்கள். முடிந்தவரை தூரத்தில் அதைத் தாண்டுவோம். ஒன்றிரண்டு இங்குமங்கும் பறந்தால் கூட ஹோ என்று பயத்துடன் ஓடுவோம்!//

      இளம் வயது பயம் அறியாது என்று நானும் தேன் கூட்டை சிறு வயதில் நெருக்கமாய் பார்த்து இருக்கிறேன். நிறைய பதிவுகளில் பக்கத்தில் போய் கூட்டை படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.

      இங்கு அப்போது தான் மரத்தில் செட்டில் ஆகி கொண்டு இருந்தது பறந்து கொண்டு இருந்தது பக்கத்தில் போகவில்லை. தூரத்திலிருந்து எடுத்த படங்கள்தான் இவை.

      சில குறும்புக்கார சிறு பையன்கள் தேனீ கூட்டில் கல்எறிந்து பின் சத்தம் போட்டுக் கொண்டு ஓடுவார்கள். நீங்கள் பயத்தோடு சத்தம் போட்டு ஓடியது போல.

      நீக்கு
  2. தேனீக்கள் தங்கள் வீடு மாற்றலில்  ஓய்வெடுப்பதை பற்றி நானும் சமீபத்தில் இணையத்தில் படித்தேன்.  எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கின்றனவோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேனீக்கள் தங்கள் வீடு மாற்றலில் ஓய்வெடுப்பதை பற்றி நானும் சமீபத்தில் இணையத்தில் படித்தேன். எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கின்றனவோ....//

      மகன் மாடி பால்கனியில் கும்பலாக வந்ததை பார்த்த போது மணி 6 இருக்கும் . அது போல மறு நாள் 6 மணிக்கு பறந்து போய் விட்டது.
      சிறு உயிர் அதற்கு அறிவு கிடையாது என்று யாராவது சொல்ல முடியுமா?

      நீக்கு
  3. காணொலி கண்டேன் ரசித்தேன்.  அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த குருவியை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொலி கண்டேன் ரசித்தேன். அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த குருவியை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.//
      குருவிகள் இல்லை ஸ்ரீராம். தேன் சிட்டு மரத்தை சுற்றி வந்து பார்த்து கொண்டு இருந்தது என்று போட்டு இருக்கிறேன், தேன் சிட்டு மரத்தில் அமர வில்லை தனால் பார்க்க முடியாது காணொலியில்.

      உங்கள் கருத்துக்க்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஓ.. அப்படியா? ஓகே ஓகே நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    3. குருவிகளுக்கு தேன் கூட்டை கண்டதும் பயம் போலும், எப்போதும் காலை முதல் மாலை வரை இருக்கும் குருவிகள் மரத்தில் இல்லை. தேன் சிட்டு மட்டும் பயமில்லாமல் மரத்தை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தது. பேரன் "தேன் சிட்டை போகாதே பக்கத்தில் போனால் கொட்டி விடும்" என்று எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தான்.
      தேன் சிட்டு காணொலியில் சிக்கவில்லை.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. ஆமாம் அக்கா தேனீக்கள் முட்டையிடும் சீசனில்தானே கூடு கட்டும். ஆமாம் இப்படி உணவு தேடிப் போறப்ப அங்கங்க ஓய்வு எடுக்கும்.

    கிட்டத்தட்ட 60 ஆயிரம் தேனிக்கள் சேர்ந்து கூடு கட்டுமாம்...அதுல ஆச்சரியம் என்னனா எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே போல அந்த அறுகோண வடிவங்களை தப்பில்லாம வடிவமைக்கும் பாருங்க இயற்கையின் அற்புதம் இல்லையா? நம்ம மக்கள் ஒரு வடிவமைப்பையே ஒருங்கிணைந்து செய்ய முடியலை கூரை பாதில பிச்சுக்குது.

    ஒவ்வொரு அறுகோண பெட்டியையும் இணைக்க மரத்துலருந்து ஒரு பசையை உபயோகிக்கும். என்ன மூளை natural instinct!!

    தேனீ வளர்ப்புப் பயிற்சி எங்க ஊர்ல மார்த்தாண்டத்துல கொடுக்கறாங்க.

    துளசி வீட்டில் தேனீ வளர்ப்பு செய்யறாங்க கூட்டுறவு அமைப்பின் உதவியுடன். வீட்டிலேயே தேன் கிடைக்கிறது. நான் போகும் போது அல்லது அவங்க நம்ம வீட்டுக்குவ் வரப்ப எனக்கும் தேன் தந்துருவாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //ஆமாம் அக்கா தேனீக்கள் முட்டையிடும் சீசனில்தானே கூடு கட்டும். ஆமாம் இப்படி உணவு தேடிப் போறப்ப அங்கங்க ஓய்வு எடுக்கும்.

      கிட்டத்தட்ட 60 ஆயிரம் தேனிக்கள் சேர்ந்து கூடு கட்டுமாம்...அதுல ஆச்சரியம் என்னனா எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே போல அந்த அறுகோண வடிவங்களை தப்பில்லாம வடிவமைக்கும் பாருங்க இயற்கையின் அற்புதம் இல்லையா? நம்ம மக்கள் ஒரு வடிவமைப்பையே ஒருங்கிணைந்து செய்ய முடியலை கூரை பாதில பிச்சுக்குது.

      ஒவ்வொரு அறுகோண பெட்டியையும் இணைக்க மரத்துலருந்து ஒரு பசையை உபயோகிக்கும். என்ன மூளை natural instinct!!//

      தேனீக்களின் வீடு மிக சுத்தமாகவும் ஒவ்வொருவருக்கும் ஒரு அறை என்று மிக அழகாக நேர்த்தியாக கட்டுகிறது. ஆண் தேனீக்களுக்கு, குஞ்சுகளுக்கு, ராணி தேனீக்கு என்று . மலர்களின் வண்ணத்தை எடுத்து வந்து வீட்டிற்கு வண்ணம் அடிக்குமாம். படிக்க படிக்க வியப்பு தான். 40, 000 முதல் 60,000 வரை ஒரு கூட்டில் வசிக்கும்.
      பஞ்ச காலங்களில் ராணிதேனீக்கு மட்டும் உணவு அளித்து மற்றவை இறக்கும் என்று படித்ததும் தியாக வாழ்க்கையை எண்ணி வணங்கத்தான் தோன்றுகிறது. இவைகளுக்கு என்றாவது நாம் சிறிய தோட்டம் வீடுகளில் அமைக்க வேண்டும்.

      //தேனீ வளர்ப்புப் பயிற்சி எங்க ஊர்ல மார்த்தாண்டத்துல கொடுக்கறாங்க.

      துளசி வீட்டில் தேனீ வளர்ப்பு செய்யறாங்க கூட்டுறவு அமைப்பின் உதவியுடன். வீட்டிலேயே தேன் கிடைக்கிறது. நான் போகும் போது அல்லது அவங்க நம்ம வீட்டுக்குவ் வரப்ப எனக்கும் தேன் தந்துருவாங்க.//

      காதியில் மார்த்தாண்டம் தேன் தான் வாங்குவேன் முன்பு.
      தேனீ வளர்ப்பு சகோ துளசி வீட்டில் செய்வது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  5. எனக்கு தான் பறந்து போவதை பார்க்க முடியவில்லையே என்று ஏமாற்றம். மகன் கும்பலாக பறந்து வந்ததை பார்த்தான்./

    அடுத்த முறை பார்ப்பீங்க அக்கா.

    ஆமாம் அக்கா ராணி தேனீ தான் கூட்டத்துக்குத் தலைவி. எறும்புக் கூட்டத்துக்கும்.

    ஆமாம் அக்கா வேலைக்காரத் தேனீ க்களின் பங்களிப்பும் மிக முக்கியம்.

    தேனீக்களைப் பத்தி வாசிக்கறப்ப நிறைய ஆச்சரியங்கள். இயற்கையின் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள்.

    ஆறறிவு இருந்தும் என்ன பயன் நமக்கு!!!? இயற்கை நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது!

    படங்களும் நல்லாருக்கு. பதிவும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்த முறை பார்ப்பீங்க அக்கா.//

      நன்றி.

      //ஆமாம் அக்கா ராணி தேனீ தான் கூட்டத்துக்குத் தலைவி. எறும்புக் கூட்டத்துக்கும்.

      ஆமாம் அக்கா வேலைக்காரத் தேனீ க்களின் பங்களிப்பும் மிக முக்கியம்.//

      ஆமாம். வேலைக்காரத் தேனீக்கள் பங்களிப்பு அதிகம் தான்.


      //தேனீக்களைப் பத்தி வாசிக்கறப்ப நிறைய ஆச்சரியங்கள். இயற்கையின் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள்.

      ஆறறிவு இருந்தும் என்ன பயன் நமக்கு!!!? இயற்கை நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது!//

      இயற்கையின் அற்புதங்களை கண்டு ரசித்து விட்டு அவை கற்றுக் கொடுக்கும் பாடங்களை விட்டு விடுகிறோம்.

      //படங்களும் நல்லாருக்கு. பதிவும்!//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  6. சிறப்பான பதிவு..

    ஒருவரை சிறப்பித்துச் சொல்வதானால் கூட தேனீயை முன் வைத்துத் தான்..

    அருமை..
    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      //சிறப்பான பதிவு..

      ஒருவரை சிறப்பித்துச் சொல்வதானால் கூட தேனீயை முன் வைத்துத் தான்..

      அருமை..
      அருமை..//

      தேனீ போல சுறு சுறுப்பு , உழைப்பு, தியாகம் , இனிமை, வாழ்க்கை முறை அனைத்தும் முன் வைக்கலாம் சிறப்பித்து கூற

      நீக்கு
  7. கொள்ளிடக் கரை கிராமத்தில் என் தந்தை பணி புரிந்த போது அவ்வப்போது வேடர்கள் தேனடைகளைக் கொண்டு வருவார்கள்..

    மரங்களில் ஏறி விளையாடும் போது மிக அருகில் உயிப்புள்ள தேனடையைக் கண்டும் இருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொள்ளிடக் கரை கிராமத்தில் என் தந்தை பணி புரிந்த போது அவ்வப்போது வேடர்கள் தேனடைகளைக் கொண்டு வருவார்கள்..//

      ஓ! தேனடைகளை பிழிந்து தேன் எடுக்க வேண்டும்.

      //மரங்களில் ஏறி விளையாடும் போது மிக அருகில் உயிப்புள்ள தேனடையைக் கண்டும் இருக்கின்றேன்...//
      சிறு வயதில் விளையாடி களிக்கும் போது பயம் இருக்காது.

      கிராமத்தில் மட்டும் அல்ல இப்போது அடுக்குமாடி குடியிருப்பிலும் பக்கத்தில் பார்க்கலாம் தேனீ கூட்டை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. தேனீக்கள் பற்றிய விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.

    முன்பு அபுதாபியில் ஓர் சிறிய மரத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    தினமும் அவ்வழியே செல்லும் போது பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //தேனீக்கள் பற்றிய விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.//

      ஆமாம், தேனீக்களை பற்றி படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.

      //முன்பு அபுதாபியில் ஓர் சிறிய மரத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

      தினமும் அவ்வழியே செல்லும் போது பார்ப்பேன்.//

      நாம் அதை தொந்தரவு செய்யாத வரை அது நம்மை துன்ப படுத்தாது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தேனீக்களைப் பற்றி, விபரமாக சொல்லியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அது அனைத்தும் ஒரு குழுவாக ஓய்வெடுத்து ஒரு நாள் அவசாசத்துடன் அடுத்ததாக எந்த இடத்திற்கு அடுத்துப் பயணம் என்பதை சிந்தித்து செயலாற்றுவதைப் பார்த்தால் ஆறறிவு பெற்ற மனிதர்களை விட அது சிறந்ததாக தோன்றுகிறது. நாம் கூட சில சமயங்களில், அவசர முடிவில் ஆபத்தை உண்டாக்கிக் கொள்வோம்.

    இதன் சிறப்பான குணங்கள், தலைவியை தேர்த்தெடுப்பது முதல், அவர்களின் சொல் பேச்சின்படி நடந்து கொள்வது என்ற ஒழுக்கமான செய்கைகள் குறித்து நானும் படித்துள்ளேன்.

    நல்லவேளை அதைக் கலைக்க ஆட்களை கூப்பிடுவதற்குள் ஒருவருக்கும் தீங்கிழைக்காமல் , அது தானாகவே கிளம்பி சென்று விட்டது நல்ல விஷயம். இப்படி கூட்டமாக பறந்து வருவதை நானும் ஒருதடவை முன்பு இருந்த வீட்டில் பார்த்துள்ளேன். முன்பு எங்கள் வீட்டை கடந்து சென்று விட்டது. வேறு ஒரு இடத்தில் (மரக்கிளையில்) அவைகள் கட்டிய தேன்கூடு படத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு சின்ன கிளை எப்படி இவ்வளவு பாரத்தை சுமக்கிறது என ஆச்சரியமாக இருக்கும். இறைவன் அவைகளுக்கென்று நல்ல செயலாற்றும் ஒரு பக்குவத்தை தந்திருக்கிறான் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. தேனீக்களைப் பற்றி, விபரமாக சொல்லியுள்ளீர்கள். //
      படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. //

      நன்றி.

      //அது அனைத்தும் ஒரு குழுவாக ஓய்வெடுத்து ஒரு நாள் அவசாசத்துடன் அடுத்ததாக எந்த இடத்திற்கு அடுத்துப் பயணம் என்பதை சிந்தித்து செயலாற்றுவதைப் பார்த்தால் ஆறறிவு பெற்ற மனிதர்களை விட அது சிறந்ததாக தோன்றுகிறது. நாம் கூட சில சமயங்களில், அவசர முடிவில் ஆபத்தை உண்டாக்கிக் கொள்வோம்.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. நாம் அவசரபட்டு முடிவுகளை எடுத்து அவதி படுவது உண்டுதான்.

      //இதன் சிறப்பான குணங்கள், தலைவியை தேர்த்தெடுப்பது முதல், அவர்களின் சொல் பேச்சின்படி நடந்து கொள்வது என்ற ஒழுக்கமான செய்கைகள் குறித்து நானும் படித்துள்ளேன்.//

      நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும், கீழ்படியும் குணம் வேண்டும், செய்யும் வேலையை நேர்த்தியாக சிறப்பாக செய்ய வேண்டும் என்று நமக்கு பள்ளியில் பாடமாக வைத்தார்கள்.

      //நல்லவேளை அதைக் கலைக்க ஆட்களை கூப்பிடுவதற்குள் ஒருவருக்கும் தீங்கிழைக்காமல் , அது தானாகவே கிளம்பி சென்று விட்டது நல்ல விஷயம். //

      ஆமாம், நல்லவிஷயம்.

      //இப்படி கூட்டமாக பறந்து வருவதை நானும் ஒருதடவை முன்பு இருந்த வீட்டில் பார்த்துள்ளேன். முன்பு எங்கள் வீட்டை கடந்து சென்று விட்டது. வேறு ஒரு இடத்தில் (மரக்கிளையில்) அவைகள் கட்டிய தேன்கூடு படத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு சின்ன கிளை எப்படி இவ்வளவு பாரத்தை சுமக்கிறது என ஆச்சரியமாக இருக்கும். இறைவன் அவைகளுக்கென்று நல்ல செயலாற்றும் ஒரு பக்குவத்தை தந்திருக்கிறான் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நீங்களும் பார்த்து இருக்கிறீர்களா மகிழ்ச்சி.
      இறைவன் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு அறிவை கொடுத்து இருக்கிறான். நீங்கள் எடுத்து வைத்து இருக்கும் தேன் கூடு படத்தை போடுங்கள் .

      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  10. தேனீக்கள் கூடுகட்டி இருப்பது அழகாக இருக்கிறது. இடம்மாறி தங்குமடம் உங்கள் வீடாகியது . அவற்றின் அறிவே அறிவு ஒற்றுமையை அவற்றிலிருந்து நாம் படிக்க வேண்டும்.

    எங்கள் ஊர் வீட்டில் பலா மரத்தில் சில மாதங்களாகவே கூடு கட்டி இருந்தார்கள். நாங்கள் தீங்கு விளைவிக்க மாட்டோம் எங்களை கொட்டாதே என்று சொல்வேன். அவையும் புரிந்து கொண்டன போல,நாங்கள் அடிக்கடி கீழே சென்று வருவோம் எம்மை ஒன்றும் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //தேனீக்கள் கூடுகட்டி இருப்பது அழகாக இருக்கிறது. இடம்மாறி தங்குமடம் உங்கள் வீடாகியது . அவற்றின் அறிவே அறிவு ஒற்றுமையை அவற்றிலிருந்து நாம் படிக்க வேண்டும்.///

      நீங்கள் சொல்வது போல தேனீக்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

      //எங்கள் ஊர் வீட்டில் பலா மரத்தில் சில மாதங்களாகவே கூடு கட்டி இருந்தார்கள். நாங்கள் தீங்கு விளைவிக்க மாட்டோம் எங்களை கொட்டாதே என்று சொல்வேன். அவையும் புரிந்து கொண்டன போல,நாங்கள் அடிக்கடி கீழே சென்று வருவோம் எம்மை ஒன்றும் செய்வதில்லை.//

      நாம் இயற்கையோடு பேசலாம், உயிர்களுடன் பேசலாம் அவை உணர்ந்து கொள்ளும். தேனீக்களை நாம் தொந்திரவு செய்யவில்லை என்றால் அவை நம்மை ஒன்றும் செய்யாது.

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  11. தேன்கூடுகள் எப்போதுமே சுவாரசியமானவை.

    இங்க கட்டிடங்களில் பெரிய தேனீக்கள் கூடுகளைக் கட்டும். அதில் கிடைக்கும் தேனையும் ஒரு தடவை வாங்கியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //தேன்கூடுகள் எப்போதுமே சுவாரசியமானவை.//

      ஆமாம்.

      //இங்க கட்டிடங்களில் பெரிய தேனீக்கள் கூடுகளைக் கட்டும். அதில் கிடைக்கும் தேனையும் ஒரு தடவை வாங்கியிருக்கிறேன்.//

      தேன் எடுத்து விற்பார்களா பரவாயில்லையே! இங்கு கட்டிடங்களில் தேனீ வந்தால் அப்புறபடுத்தி விடுகிறார்கள்.

      நீக்கு
  12. எனக்கு தேன் சிறு வயதிலிருந்தே பிடிக்கும். இனிப்பு என்பதாலோ எனத் தெரியவில்லை.

    நாகர்கோவிலில் தொட்டிப்பாலம் அருகில் வசித்த தேனி வளர்ப்பாளர்கள் சொன்னது, பூக்கள் இல்லாத காலத்தில், தேன் வருமானத்திற்காக இனிப்புக் கரைசலை தோட்டத்தில் வைப்போம், தேனீ அதனை உண்டு தேனாகச் சேமிக்கும் என்றார்கள்.

    எதில்தான் கலப்படம் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

    இயற்கையான கொல்லிமலைத் தேன் கிலோ 1200 ரூ. கடைகளில் இரண்டு கிலோ தேன் சுமார் 450ரூபாய்க்கு வாங்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு தேன் சிறு வயதிலிருந்தே பிடிக்கும். இனிப்பு என்பதாலோ எனத் தெரியவில்லை//

      வீடுகளில் தேன் எப்போதும் இருக்கும். சுவாமி அபிசேகத்திற்கு, மருந்துக்கு என்று.

      //நாகர்கோவிலில் தொட்டிப்பாலம் அருகில் வசித்த தேனி வளர்ப்பாளர்கள் சொன்னது, பூக்கள் இல்லாத காலத்தில், தேன் வருமானத்திற்காக இனிப்புக் கரைசலை தோட்டத்தில் வைப்போம், தேனீ அதனை உண்டு தேனாகச் சேமிக்கும் என்றார்கள்.//

      பல பூக்களின் தேங்களை அருந்திய தேனீ இப்படி ஏமாந்து போகுமா? அல்லது நம்மை போல அதற்கு பதிலாக இதை என்று உப்யோகிப்பது போல இனிப்புக்கரைசலை அருந்து திருபதி அடைகிறதா?

      //எதில்தான் கலப்படம் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.//

      நம்மையும் சர்க்கரை கரைசலை கொடுத்து சுத்தமான தேன் என்று விற்கிறார்கள் தான்.

      //இயற்கையான கொல்லிமலைத் தேன் கிலோ 1200 ரூ. கடைகளில் இரண்டு கிலோ தேன் சுமார் 450ரூபாய்க்கு வாங்க முடிகிறது.//

      சுத்தமான தேன் கொஞ்சம் கசப்பு தன்மையுடன் இருக்கும் என்கிறார்கள். எது உண்மை என்று இப்போது நம்ம முடியவில்லை.

      நீக்கு
  13. தேனீக்கள் தற்காலிகமாக்க் கூடு கட்டும் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேனீக்கள் தற்காலிகமாக்க் கூடு கட்டும் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.//
      நானும் இங்கௌ வந்த பின் தான் அறிந்து கொண்டேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பழைய பதிவை பார்க்கவில்லையா என்று கேட்டதற்கு படித்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

      நீக்கு