திங்கள், 21 நவம்பர், 2022

கருங்குருவிகள் கச்சேரி


இரண்டு நாள் முன்பு எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு கருங்குருவிகள் வந்தன.  (எட்டு பறவைகள் வந்தன, நாலு ஜோடிகள்.)

இரண்டு இரண்டாய் நின்று கொண்டு கத்தி கொண்டு இருந்தன. என்ன பேசி இருக்குமோ! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

பாட்டுக்கு பாட்டு  எதிர் பாட்டு  பாடின. அந்த காணொளிகளும் படங்களும் இந்த பதிவில் இடம் பெறுகிறது.


கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப்பார்த்து ஒரு குருவி கத்தியது. கம்பியில் அமர்ந்து  இரண்டு பேசி கொண்டு இருந்தது.


மழை நேரம் வெட்டுக்கிளி, மற்றும் பறக்கும் சிறு பூச்சிகள்  வரத்து அதிகம் என்பதால் கருங்குருவிகளுக்கு  உணவு தாராளமாக கிடைக்கிறது, அதனால் அவைகளின் வரவு அதிகமாய் இருக்கிறது.



தனித்து அமர்ந்து   யோசித்து கொண்டு இருந்தது.

இரண்டு பறவைகளுக்கு  வித்தியாசம் தெரியும்.

இந்த ஜோடிகளுக்கும்  மின்சார கம்பியில் அமர்ந்த ஜோடிகளுக்கும் பாட்டு போட்டி

பாட்டுக்கு பாட்டு எதிர் பாட்டு பாடவா!


இந்த ஜோடிகளும்  பாடின




என் பாட்டு எப்படி இருக்கு  கேளுங்க



வால் காக்கை  பறவை பறந்து வந்து கருங்குருவிகளின் பாட்டை ரசித்து கேட்டு சென்றது.
நீங்களும் ரசித்தீர்களா?
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. பார்த்தேன் முகநூலிலும். இங்கேயும் இப்போது பறவைகளின் வரத்தும் அதிகம். கூச்சல், கும்மாளங்களும் அதிகம். ஆனால் தொலைவில் உள்ளதால் படமெல்லாம் எடுப்பது கஷ்டம். :( எல்லாப்படங்களும் அருமை. காணொளி உள்பட. கிட்டத்தில் இருக்காப்போல் எடுத்திருக்கீங்க. ஜூம் செய்து எடுத்தீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      //இங்கேயும் இப்போது பறவைகளின் வரத்தும் அதிகம். கூச்சல், கும்மாளங்களும் அதிகம்//

      அங்கும் நிறைய பறவைகள் வருகிறதா! மகிழ்ச்சி.

      //( எல்லாப்படங்களும் அருமை. காணொளி உள்பட. கிட்டத்தில் இருக்காப்போல் எடுத்திருக்கீங்க. ஜூம் செய்து எடுத்தீங்களோ?//

      காமிராவில் ஜூம் செய்து எடுத்த படங்கள்தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  2. கருங்குருவி படங்கள் அருமை. வால் நீண்ட கருங்குருவி வலப்பக்கம் போனால், ஓட்டாண்டியாக இருப்பவனும் அரசனாக ஆகிவிடுவான் என்றொரு நம்பிக்கையைக் கேள்விப்பட்டிருக்கிறேனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      கருங்குருவி படங்கள் அருமை.//
      நன்றி.

      வால் நீண்ட கருங்குருவி வலப்பக்கம் போனால், ஓட்டாண்டியாக இருப்பவனும் அரசனாக ஆகிவிடுவான் என்றொரு நம்பிக்கையைக் கேள்விப்பட்டிருக்கிறேனே//

      கருங்குருவி பலன்கள் நிறைய சொல்வார்கள்.

      நேற்று வலபக்கமும், இடபக்கமும் மாறி மாறி பறந்து பாடி கொண்டு இருந்தது.
      என் மனநிலையை மாற்றியது. அதற்கு அவைகளுக்கு நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. கருங்குருவிகள் படங்கள் அத்தனையும் அருமை...கோமதிக்கா...வழக்கம் போல. வீரமான தைரியமான பறவைகள். தங்கள் கூடுகள் இருக்கும் எல்லைக்குள் பெரிய பறவைகள் வந்தாலும் எதிர்த்து விரட்டும் அளவு தைரியம் உடையவை.

    முதல் படத்தில் - சரி இப்ப எதுக்கு என் பின்னாடியே வந்திட்டிருக்க?" பின்னால் திரும்பிக் கேட்கிறது வலப்பக்கக் குருவி...

    கொஞ்சம் இப்படி வந்து என்னைப் பார்த்து உட்காரேன்....விஷயம் பேசணும்.....நான் சொல்றத கேளேன்...

    அது அதன் அருகில் வருகிறது. (இரண்டாவது படம்) சரி சொல்லு.....

    எல்லாக் குருவிகளும் பாட்டுப் போட்டில கலந்துக்கிறாங்க...பாரு ஜோடி ஜோடியா இருக்காங்க....நாமளும் கலந்துக்கலாமே....

    ம்ம்ம்...யோசிக்கணும்...

    சரி நீ யோசி நான் போய் அதுக்குள்ள என் தொண்டைய சரி பண்ணிட்டு கொஞ்சம் பூச்சி பிடிச்சு சாப்பிட்டு வரேன்.

    போன குருவி வந்தாச்சு. இரண்டும் மற்ற ஜோடி பாடுவதைக் கேட்கின்றன.

    பாரு அவங்க ஆரம்பிச்சாச்சு...அந்தாட்சரி. சீக்கிரம் யோசி...என்ன பாடலாம்னு...

    பாடுகின்றன....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      கருங்குருவிகள் படங்கள் அத்தனையும் அருமை...கோமதிக்கா...வழக்கம் போல.//

      நன்றி கீதா.


      //வீரமான தைரியமான பறவைகள். தங்கள் கூடுகள் இருக்கும் எல்லைக்குள் பெரிய பறவைகள் வந்தாலும் எதிர்த்து விரட்டும் அளவு தைரியம் உடையவை.//

      ஆமாம். பயமே கிடையாது, ஆடு , மாடு மேல் சவாரி செய்யும்.நான் முன்பு அந்த படங்களை பதிவு செய்து இருக்கிறேன்.

      பெரிய பறவைகளை விரட்டும் ஆபத்து வந்தால் அனைவருக்கும் சொல்லும் ஆள் காட்டி பறவை.
      அழகான உரையாடல்.
      அருமையாக இருக்கிறது.
      போட்டி என்று வந்து விட்டால் கேட்கவேண்டுமா!


      நீக்கு
  4. குருவிகளின் பாட்டு செம...முதல் காணொளியில் ஹப்பா எப்படித் தொண்டையைத் திறந்து தலையை ஆட்டி ஆட்டிப் பாடுகின்றன!!!

    இரண்டாவது காணொளியில் குக்குக்கூ சத்தம் தூக்கலாக இருக்கு!!! ஹாஹாஹா....இருந்தாலும் இவை பாடும் விதம் செமையா இருக்கு...அந்த அசைவு, அந்தக் குருவிகளுக்கு பாட்டின் மூலம் ஏதோ சொல்வது போலவும் இருக்கு

    வால்காக்கா அழகு. அதோடு சேர்ந்து நாங்களும் ரசித்தோம் கோமதிக்கா

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குருவிகளின் பாட்டு செம...முதல் காணொளியில் ஹப்பா எப்படித் தொண்டையைத் திறந்து தலையை ஆட்டி ஆட்டிப் பாடுகின்றன!!!//

      இன்னும் ஒரு காணொளி எடுத்தேன் அந்த மின்சார கம்பி மேல் இருக்கும் இரண்டு பறவை பாடியது. அது கொஞ்சம் நீட்டமாக இருப்பதால் வலை ஏற மறுத்து விட்டது. கட் செய்து போட வேண்டும் இன்னொரு நாள்.

      //வால்காக்கா அழகு. அதோடு சேர்ந்து நாங்களும் ரசித்தோம் கோமதிக்கா//

      நல்லது நன்றி கீதா.
      வால்காக்காவை பார்த்தும் கத்தி இருக்கும் அவை.
      வால் காக்கா முட்டைகளை தின்று விடும்.

      நீக்கு
  5. முன்பு இருந்த வீட்டின் அருகில் இருந்த ஏரிகள் இரண்டிலும் பறவைகள் கூட்டம் அதிகம்....சாலையிலிருந்து உள்ளே அமைதியாக இருப்பதாலோ என்னவோ...

    இப்போதைய பகுதியில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது இத்தனைக்கும் உள்ளே என்னென்னவோ இருக்கின்றன அறிவுப்பு பலகைகளுடன். இன்னும் முழுவதும் போய்ப் பார்க்கவில்லை வீட்டில் இருந்து 25 நிமிட நடை. உள்ளே ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் சுற்றி வர....அது தவிர வண்ணத்துப் பூச்சி பார்க் இருக்கு என்பதும் தெரிகிறது. சீதை அசோகவனம் என்று பார்க் முழுவதும் காடு போன்று இருக்கு. ஆனால் சுற்றவில்லை. ஓரிரு படங்கள் எடுத்து வந்தேன். ஆனால் பாருங்க இந்த ஏரியில் பறவைக் கூட்டத்தைக் காணவில்லை இத்தனைக்கும் இந்தப் பறவை அந்தப் பறவை என்று படங்களுடன் பலகை இருக்கிறது. எப்ப வைச்ச பலகையோ.

    பெரிய மெயின் ரோடுகள் இருபக்கமும் ஒட்டி இருப்பதாலோ என்னவோ நடுவில் இருக்கும் ஏரியில் பறவைகளுக்குச் சத்தம் ஆகாதே....அதனால் இப்போது பறவைகள் வருவது இல்லையோ என்று தோன்றியது. எனக்கு ஏமாற்றமாகப் போயிற்று.
    இதில் இப்போது பெரிய சாலையின் நடுவே மெட்ரோ பணிகள் வேறு....எப்படிப் பறவைகள் வரும்?...

    சரி இப்போது நவம்பர் தானே.....டிசம்பர் ஜனுவரி ஃபெப்ருவரி, மார்ச் வரட்டும் இனப்பெருக்கக் காலம் பார்ப்போம் வருகின்றனவா என்று....நினைத்திருக்கிறேன்.

    பழைய இடத்தில் இருந்த ஏரிகளில் நாமக் கோழி பறவைகள் கூடு கட்டுவதை எல்லாம் எடுத்து இருக்கிறேன் கூட்டில் அவை இருப்பதையும் எடுத்திருக்கிறேன் எப்போது போடப் போகிறேனோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரிகள் இருக்கும் பக்கமே வீடு அமைவது மகிழ்ச்சி.
      அசோகவன பார்க் அப்ப அடர்ந்த காடுதான் இல்லையா?
      பறவைகள் வேறு ஊரிலிருந்து வரும் பறவைகள் போலும்
      அப்போது இனபெருக்க காலத்தில் நல்ல குளிர் காலத்தில் அங்க்யு இருக்க முடியாமல் இங்கு வரும். வண்ணத்து பூச்சி பூங்கா நல்லா இருக்குமே!

      //பெரிய மெயின் ரோடுகள் இருபக்கமும் ஒட்டி இருப்பதாலோ என்னவோ நடுவில் இருக்கும் ஏரியில் பறவைகளுக்குச் சத்தம் ஆகாதே....அதனால் இப்போது பறவைகள் வருவது இல்லையோ என்று தோன்றியது. எனக்கு ஏமாற்றமாகப் போயிற்று.
      இதில் இப்போது பெரிய சாலையின் நடுவே மெட்ரோ பணிகள் வேறு....எப்படிப் பறவைகள் வரும்?...//

      ஓ! இத்தனை இடையூறூகள்! இதை தாங்கும் பறவைகள் மட்டுமே வரும்.

      //பழைய இடத்தில் இருந்த ஏரிகளில் நாமக் கோழி பறவைகள் கூடு கட்டுவதை எல்லாம் எடுத்து இருக்கிறேன் கூட்டில் அவை இருப்பதையும் எடுத்திருக்கிறேன் எப்போது போடப் போகிறேனோ...//

      நேரம் கிடைக்கும் போது போடுங்கள் பதிவில் ஒவ்வொன்றாக.
      நீங்கள் நினைத்தபடி பதிவுகள் எழுத உங்களுக்கு பொழுது கிடைக்க வாழ்த்துகள்.

      நிறைய பணிகளுக்கு இடையில் பதிவை பார்த்து ரசித்து பின்னூட்டங்களை விரிவாக கொடுத்து விட்டீர்கள்.

      நன்றி நன்றி கீதா.

      நீக்கு
  6. கரிக்குருவி என்றவுடன் திருவிளையாடற்புராணத்தில் வரும் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் நினைவில் வந்தது.

    பாடுபட்டு படங்கள் எடுத்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்

      //கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் நினைவில் வந்தது.//

      எனக்கும் நினைவு வந்தது. என் கணவர் மாயவரம் மயூர நாதர் கோயிலில் "திருவிளையாடல் புராணம்" தொடர் சொற்பொழிவு செய்தது நினைவுக்கு வந்தது.

      //பாடுபட்டு படங்கள் எடுத்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளன.//

      பால்கனியிலிருந்து எடுத்து விட்டேன், உள்ளே இருந்த என்னை சத்தம் கொடுத்து அழைத்தது காலையில்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. கருங்குருவிகள் படங்கள் அருமை.  அவை என்ன பேசி இருக்கும்?  "இப்படி ஒரு ரவுண்டு அந்தப் பக்கம் போய்வரலாமா?  கோமதி அக்காவுக்கு சில போட்டோக்களை போஸ் கொடுத்து வரலாம்" என்று பேசி இருக்குமோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கருங்குருவிகள் படங்கள் அருமை.//

      நன்றி.

      //அவை என்ன பேசி இருக்கும்? "இப்படி ஒரு ரவுண்டு அந்தப் பக்கம் போய்வரலாமா? கோமதி அக்காவுக்கு சில போட்டோக்களை போஸ் கொடுத்து வரலாம்" என்று பேசி இருக்குமோ...!//

      ஓ அப்படியா! நல்ல கற்பனை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. பறவைகள் பற்றி நிறைய கட்டுரைகளும், கவிதைகளும் எழுதியுள்ளேன். அனைத்தும் அறிவியல் சார்ந்தவை. உங்கள் பதிவுகளுக்கு வாசகர்கள் தரும் வரவேற்பு ஆச்சர்யத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்

      //பறவைகள் பற்றி நிறைய கட்டுரைகளும், கவிதைகளும் எழுதியுள்ளேன். அனைத்தும் அறிவியல் சார்ந்தவை.//

      ஆமாம், நான் படித்து இருக்கிறேன்.

      //உங்கள் பதிவுகளுக்கு வாசகர்கள் தரும் வரவேற்பு ஆச்சர்யத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. இது எப்படி சாத்தியமானது?//

      நட்பு தரும் வரவேற்புதான் சதீஸ். அன்பால் இணைந்த நட்பு வட்டம் அதுதான் சாத்தியமாகிறது.
      இன்னும் பல நண்பர்கள் இப்போது வலைத்தளத்தில் எழுதுவது இல்லை. வந்தால் இன்னும் அதிக பின்னூட்டங்கள் வரும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
    2. உங்கள் கட்டுரைக்கு பின்னூட்டம் போட்டு விட்டேன், அற்புதமான கட்டுரை. வாழ்த்துக்கள் சதீஸ்.

      நீக்கு
  10. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது. காணொளி கண்டேன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.. கருங்குருவிகளின் படங்களும், பாட்டும் கேட்கவே அற்புதமாக இருக்கின்றன. அதை வால்காக்கை வந்து ரசிக்கும் படம் (கடைசி படம்) மிக அழகாக எடுத்துள்ளீர்கள். மற்ற அனைத்துப் படங்களுமே மிக நன்றாக வந்துள்ளது.

    பாட்டுக்கச்சேரி படம் காணொளி நன்றாக உள்ளது. அலகை திறந்து அவை பாடும் அழகே ரசிக்கும்படி உள்ளது. மிகவும் ரசித்தேன்.

    பறவைகளை பொறுமையாக படங்கள் எடுக்கும் உங்களுக்காகவே அவை போட்டி பாட்டுக்கச்சேரிகள் செய்ய முடிவு செய்து விட்டது போலும். "இவர்கள் நம்மை படங்கள் எடுத்து வெளியிடும் நம் படங்களினால் நாம் இன்னமும் அனைவருக்கும் தெரியும்படியாக பிரபலம் ஆகி விடுவோம்" எனவும் அவைகள் பேசி மகிழ்ந்திருக்கும் என நான் நினைக்கிறேன். ஒவ்வொன்றும் ரசிக்கும்படி இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    இரு தினங்கள் என்னால் அவ்வளவாக பதிவுகளுக்கு வர இயலவில்லை. அதனால் இந்தப்பதிவுக்கும் தாமதமாகி விட்டது. பதிவும், அழகான படங்களுமான ரசனையான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை.. கருங்குருவிகளின் படங்களும், பாட்டும் கேட்கவே அற்புதமாக இருக்கின்றன. அதை வால்காக்கை வந்து ரசிக்கும் படம் (கடைசி படம்) மிக அழகாக எடுத்துள்ளீர்கள். மற்ற அனைத்துப் படங்களுமே மிக நன்றாக வந்துள்ளது.//

      நன்றி.


      //பாட்டுக்கச்சேரி படம் காணொளி நன்றாக உள்ளது. அலகை திறந்து அவை பாடும் அழகே ரசிக்கும்படி உள்ளது. மிகவும் ரசித்தேன்.//

      ரசித்தீர்களா? நன்றி. எனக்கும் அவை தலையை ஏற்றி இறக்கி வாயை திறந்து பாடும் அழகு பிடித்து இருந்தது, காணொளி அதிகம் நேரம் எடுத்தேன், அது வலை ஏற மறுத்து விட்டது. சிறிய காணொளிதான் வலை ஏறியது.

      //"இவர்கள் நம்மை படங்கள் எடுத்து வெளியிடும் நம் படங்களினால் நாம் இன்னமும் அனைவருக்கும் தெரியும்படியாக பிரபலம் ஆகி விடுவோம்" எனவும் அவைகள் பேசி மகிழ்ந்திருக்கும் என நான் நினைக்கிறேன். //

      ஆஹா! அவை பேசுவதாக நீங்கள் சொன்னது கேட்டு மகிழ்ச்சி.

      கருங்குருவிகள் இலக்கியத்தில் , புராணங்களில் இடம் பெற்று விட்டது முன்பே. புகழ் வாய்ந்த கருங்குருவி.சிவபெருமானை வேண்டி அதிகபலம் பெற்ற குருவியாக இருப்பாய் வலியன் என அழைக்கப்படுவாய் என்று சொல்லி "திரியம்பக மந்திரத்தை" சிவபெருமானே உபதேசம் செய்ய கேட்கும் பேறு பெற்ற குருவி.
      அதை படம் பிடித்து போடுவது நமக்கு கிடைத்த வாய்ப்பு.

      இருதினமாக உங்களை காணவில்லையே என்று நினைத்தேன். வேறு முக்கிய வேலைகள் இருந்தால் வர முடியாதுதானே!

      இப்போது படித்து அனைத்தையும் ரசித்து அழகான கருத்து சொன்னதற்கு நன்றி சகோதரி.






      நீக்கு
  12. அடடா..

    இந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டு விட்டேனே!..

    பதிலளிநீக்கு
  13. கருங்குருவிகள் படங்கள் அத்தனையும் அருமை.. கழுகையும் அடித்து விரட்டும் அளவுக்கு தைரியம்..

    இதுதான் வலியன் எனப்படும் பறவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருங்குருவிகள் படங்கள் அத்தனையும் அருமை.. //

      ஆமாம்.

      //கழுகையும் அடித்து விரட்டும் அளவுக்கு தைரியம்..//

      ஆமாம்.இறைவனிடம் வரம் வாங்கிய பறவை அல்லவா!

      நீக்கு
  14. வலியன் வலம் செய்து தனக்கு
    வலிமை வேண்டும் என,
    வணங்கிய தலம் தான் வலிவலம்..

    கருங்குருவி எனப்படும் இதற்கு ஈசன் அருள் செய்தது திருவிளையாடல் புராணத்தில் உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலியன் வலம் செய்து தனக்கு
      வலிமை வேண்டும் என,
      வணங்கிய தலம் தான் வலிவலம்..//

      ஆமாம்.

      கருங்குருவி எனப்படும் இதற்கு ஈசன் அருள் செய்தது திருவிளையாடல் புராணத்தில் உள்ளது..//

      ஆமாம்.

      நீக்கு
  15. கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி - என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி - என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு..//

      ஆமாம். புராணங்களில் அதிகம் இடம் பெற்ற பறவை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

      நீக்கு
  16. பறவைகளின் பாட்டுப் போட்டியும் அவற்றின் குதூகலம் கண்டு களித்தோம் அழகிய படங்கள் காணொளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      படங்களை , பறவைகளின் காணொளியை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு