திங்கள், 14 நவம்பர், 2022

அரிசோனா தமிழ்ச் சங்க ஆண்டு விழா !



 


30 ஆண்டுகளாக அரிசோனா தமிழ்ச் சங்கம் சிறப்பாக  நடந்து வருகிறது. நவம்பர் மாதம் 13 ம் தேதி  30 வது ஆண்டு விழா    ஞாயிறு அன்று  சிறப்பாக  நடைபெற்று இருக்கிறது.


இன்று குழந்தைகள் தினத்தில் பேரன் மற்றும் பல குழந்தைகள் பங்கு பெற்ற பாரத விலாஸ் என்ற சிறப்பு  நிகழச்சி படங்களை மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
குழந்தைகளை வாழ்த்துங்கள்.


சரம் சரமாக நிகழ்ச்சிகளை அழகாய் தொகுத்து சரவெடியாக வருடா வருடம் கொடுக்கிறார்கள். கொரோனா காலத்திலும் ஆண்டுவிழாவை  
இணையம் மூலம் சிறப்பாக  வழங்கினார்கள்.

 
 




இந்தியாவில் உள்ள  28 மாநிலங்களை  குறிப்பிட்டு அந்த அந்த மாநில உடை அணிந்து பிள்ளைகள் நடந்து வந்தனர். பேரன் மாராட்டிய மாநிலத்து உடை அணிந்து நடந்து வந்தான். அவனுக்கு இணையாக ஒரு சிறுமி அழகாய் நடந்து வந்தார்.



மகன் அனுப்பி வைத்த படங்கள், காணொளிகள். காணொளி சின்னதுதான் பாருங்கள்.


நல்ல நிகழச்சிகள் நிறைய நடந்து இருக்கிறது. ஆடல், பாடல்,    நாடகம்  என்று தமிழ்படிக்கும் மாணவ மாணவிகளும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வமாக நிகழ்ச்சிகளை செய்து இருக்கிறார்கள். மற்றும் தன்னார்வலர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுக்கள்.

மகன் செய்த அழைப்பிதழ், புத்தக வாசிப்பு பக்கம் அடையாள அட்டை, வரவேற்பு பலகை .
.


மகன் வடிவமைத்தது


அரிசோனா தமிழ்ச் சங்க பணிகள் மேலும் மேலும்  சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.30வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

ஆர்வமுடன் தமிழ் கற்கும் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!  கற்பிக்கும் ஆசிரியர் அனைவருக்கும்  வாழ்த்துகள் !  வாழ்க வளமுடன்.

குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்!

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

22 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. தங்கள் மகன் இருக்கும் ஊரில், தமிழ் சங்கம் நடத்திய ஆண்டு விழாவில் தங்கள் பேரனும் கலந்து நல்லதொரு வேடமிட்டு அழகாக உள்ளார். பல கலை நிகழ்ச்சிகளில் அவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டிருப்பார். என நினைக்கிறேன். தங்கள் மகன் உருவாக்கிய முப்பதாவது வருடம் என்ற சக்கர வடிவமைப்பு மிக அழகாக உள்ளது.

    காணொளி கண்டேன். தங்கள் பேரன் மராத்திய உடை அலங்காரத்தில் ஜம்மென்று அழகாக நடை பயின்று வருகிறார். அந்த உடையில் நன்றாக உள்ளார். உடையும் அவருக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. உடன் இணையாக வந்த சிறுமியும் அழகாக உள்ளார். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    /ஆர்வமுடன் தமிழ் கற்கும் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! கற்பிக்கும் ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்/

    அனைவரும் வாழ்க வளமுடன்... தமிழை தம் கண்ணெனப் போற்றும் அனைவருக்கும் மனம் நிறைவான வாழ்த்துகள். பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      பதிவு அருமையாக உள்ளது//

      நன்றி.

      //தங்கள் மகன் உருவாக்கிய முப்பதாவது வருடம் என்ற சக்கர வடிவமைப்பு மிக அழகாக உள்ளது.//

      நன்றி.


      //காணொளி கண்டேன். தங்கள் பேரன் மராத்திய உடை அலங்காரத்தில் ஜம்மென்று அழகாக நடை பயின்று வருகிறார். அந்த உடையில் நன்றாக உள்ளார். உடையும் அவருக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. உடன் இணையாக வந்த சிறுமியும் அழகாக உள்ளார். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்//

      காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //தமிழை தம் கண்ணெனப் போற்றும் அனைவருக்கும் மனம் நிறைவான வாழ்த்துகள். பதிவை ரசித்தேன். //

      எட்டுவரை தமிழ் வகுப்பு உள்ளது. அதில் படித்த முன்னால் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களாக தொண்டு செய்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகள், பாராட்டுக்களுக்கும் நன்றி.


      நீக்கு
  2. பேரனின் மேக்கப் பிரமாதம்.  கேட்வாக் மாதிரி நடந்து வந்து (கோடு கிழித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்) இங்குமங்கும் நடைபழகி திரும்பிச் செல்வது நன்றாய் இருந்தது.
    குழந்தைகள் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //பேரனின் மேக்கப் பிரமாதம். //

      மருமகள் அலங்காரம் செய்து விட்டாள்.
      //கேட்வாக் மாதிரி நடந்து வந்து (கோடு கிழித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்) இங்குமங்கும் நடைபழகி திரும்பிச் செல்வது நன்றாய் இருந்தது.//

      ஆமாம் ஸ்ரீராம்.

      உங்கள் கருத்துக்கும், குழந்தைகள் தின வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  3. தங்களது பெயரன் கவினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    படங்கள் அழகு காணொளியும் கண்டேன்.

    உண்மையில் அயல்தேசங்களில் வாழும் இந்தியர்கள்தான் இந்திய கலாச்சாரத்தை மறக்காமல் நினைவு கூர்ந்து இப்படி நிகழ்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      தங்களது பெயரன் கவினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      நன்றி.

      //படங்கள் அழகு காணொளியும் கண்டேன்.//

      மகிழ்ச்சி.

      //உண்மையில் அயல்தேசங்களில் வாழும் இந்தியர்கள்தான் இந்திய கலாச்சாரத்தை மறக்காமல் நினைவு கூர்ந்து இப்படி நிகழ்ச்சிகள் நடத்துகின்றார்கள்.//
      அயல் தேசங்களில் வாழும் நம் மக்கள் இப்படி நிகழச்சிகள் நடத்துவது நமக்கு மகிழ்ச்சிதான்.
      உங்கள் கருத்துக்கு, வாழ்த்துகளுக்கு நன்றி.


      நீக்கு
  4. அழகான படங்களுடன் சிறப்பான பதிவு.. காணொளி அருமை..

    இப்படியெல்லாம்
    ஒருங்கிணைத்து
    செய்வதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்..

    அரிசோனா தமிழ்ச் சங்க பணிகள் மேலும் சிறப்பாக நடப்பதற்கு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      //இப்படியெல்லாம்
      ஒருங்கிணைத்து
      செய்வதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்..//

      நீங்கள் சொல்வது உண்மைதான்.

      எல்லோரும் அவர்கள் வீட்டு விழா போல ஒற்றுமையாக ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொண்டு சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள்.

      நேரம் ஒதுக்க வேண்டும், வேலைகளை பகிர்ந்து கொண்டு அதை விருப்பமாக செய்ய வேண்டும்.


      உங்கள் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  5. இன்றொரு கதை எனது தளத்தில்..

    அது தங்களால் உருவானது..
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன் காலை வேலைகள் , பிள்ளைகள் காலை பேசுவதால் மதியம் நிதானமாக வருகிறேன் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட.
      கதை மிக அருமையாக இருக்கிறது.
      முருகபெருமான் அந்த மாமா உருவில் வந்து பேராசிரியருக்கு புரிய வைத்தது போல இருந்தது. நல்லதை சொல்வோம்.
      நல்லதே நடக்கும்.
      நன்றி.

      நீக்கு
  6. மிகவும் சிறப்பு. புலம் பெயர்ந்தவர்களின் ஆர்வம், முயற்சி, உழைப்பு, கலாச்சாரத்தையும் மொழியுயும் வாழவைக்கிறது, வளர்க்கிறது.

    படங்கள் அழகு. பேரனுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      மிகவும் சிறப்பு.//
      நன்றி.

      //புலம் பெயர்ந்தவர்களின் ஆர்வம், முயற்சி, உழைப்பு, கலாச்சாரத்தையும் மொழியுயும் வாழவைக்கிறது, வளர்க்கிறது.//

      ஆமாம். அவர்கள், ஆர்வம், முயற்சி, உழைப்பை பாராட்ட வேண்டும்.

      படங்களை ரசித்து பேரனுக்கு பாராட்டுகள் வழங்கியதற்கு நன்றி.

      நீக்கு
  7. ஆடை அலங்காரத்தை முழுமையாக்க் காண்பிக்கும் விதமாக மேடை முழுவதும் ஒரு ஒழுங்குடன் நடந்து செல்லும் காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆடை அலங்காரத்தை முழுமையாக்க் காண்பிக்கும் விதமாக மேடை முழுவதும் ஒரு ஒழுங்குடன் நடந்து செல்லும் காணொளி அருமை.//

      ஆமாம், மேடை முழுவதும் ஒரு ஒழுங்குடன் நடந்தது நன்றாக இருந்தது. இப்படி அனைத்து மாநில உடை உடுத்திய குழந்தைகளும் நடந்து வந்தார்கள். நேரடி காட்சியாக பார்த்தேன். கவின் படம் மட்டும் மகனும், மருமகளும் அனுப்பினார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      நீங்கள் பேரனை வாழ்த்தியது மகிழ்ச்சி.
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம்!

    அரிசோனா மண்ணில் அழகுதமிழ் கற்றுப்
    பெரியோராய் வாழ்க பிணைந்து!

    எல்லா நிலத்தும் இயன்றமிழ் கற்றிட
    வல்லோன் துணையாய் வருக!

    ஆண்டுதோறும் தமிழுக்காய் நிகழ்வுகள் நடத்தும் அனைவருங்கும் தமிழன்னை சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தங்கள் பணி சிறக்கட்டும்

    தங்கள் பெயரனின் ஆற்றல் அழகாக இருக்கிறது ...வளரும் பயிர் வாழட்டும் தலைமுறை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன்
      கவைதை அருமை.
      வல்லோன் துணையாக வரட்டும், மகிழ்ச்சி.

      //ஆண்டுதோறும் தமிழுக்காய் நிகழ்வுகள் நடத்தும் அனைவருங்கும் தமிழன்னை சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தங்கள் பணி சிறக்கட்டும்

      தங்கள் பெயரனின் ஆற்றல் அழகாக இருக்கிறது ...வளரும் பயிர் வாழட்டும் தலைமுறை !//

      அனைவருக்கும் உங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கிடைத்தது மகிழ்ச்சி., நன்றி. பெயரனை வாழ்த்தியதற்கும் நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. தமிழ்சங்க ஆண்டுவிழா சிறப்பு. பேரனின் படம் அழகு வாழ்த்துகள்.

    எனது பேரனும் சென்ற மாதம் மாண்டசரி ஆண்டுவிழாவில் பாடலுக்கு குழுவாக ஆடினார். சென்று பார்த்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆண்டுவிழாவையும் பேரனின் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      தங்கள் பேரனும் ஆண்டுவிழாவில் ஆடியது மகிழ்ச்சி.

      நம்ககு இது தானே அதிக மகிழ்ச்சியை கொடுக்கும்!
      உங்கள் தொடர் கருத்துக்கள் மகிழ்ச்சியை தருகிறது.

      நீக்கு